C2 சுய ஆலோசனை நுட்பம் — ஆளுமை முன்னேற்றத்திற்கான தண்டிக்கும் முறை

C2 சுய ஆலோசனை நுட்பம் -- ஆளுமை முன்னேற்றத்திற்கான தண்டிக்கும் முறை

அட்டவணை

1. C2 வகை சுய ஆலோசனை நுட்பத்தின் அறிமுகம்

நமது ஆளுமையின் அடிப்படை இயல்பை மாற்ற இயலுமா?

மக்கள் தமது அடிப்படை ஆளுமைகள், பழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட இயல்பை மாற்ற இயலாதபோது, அவர்களைப் பார்த்து பழங்கால வாக்கியமான ‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ என்று கூறுவதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டு இருக்கலாம். இருப்பினும் நமது குணாதிசயத்தில் உள்ள ளுமை குறைகளை களைவது ஆன்மீக வளர்ச்சியை எளிதாக்க உதவும் ஒரு முக்கிய தேவையாகும். ஆனால் நமது அடிப்படை ளுமைகள் கல்லில் செதுக்கப்பட்டது போல் அமைக்கப்பட்டு இருந்தால் அதை களைய என்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்?

சிலசமயம் மக்கள் சுய உதவி நூல்கள் மற்றும் நிபுணர்களுடன் தனிநபர்/ குழு சிகிச்சை அமர்வுகளை நாடுவார்கள். சில நேரங்களில் இது செயல்படுகிறது மற்றும் சில சமயங்களில் செயல்படுவது இல்லை, இது ஏன்? நமது ஆளுமைகள் வெறும் உளவியல் ரீதியாக மட்டுமின்றி முந்தைய பல பிறவிகளில் செதுக்கப்பட்டுள்ளன என்பது பெரும்பாலான உளவியல் – மனோநல நிபுணர்களுக்குத் தெரியாத ஒரு அடிப்படை அம்சம் ஆகும். ஆன்மீக ஆராய்ச்சி வழியாக ஆழ்மனதில் உள்ள எண்ணப்பதிவுகள் மூலம் ஆளுமைகள் உருவாகிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். வேரூன்றிய இந்த எண்ணப்பதிவுகளை களைய மனோரீதியான முயற்சிகளுடன் ஆன்மீக சக்தியும் தேவைப்படுகிறது. ஆளுமை குறைகளை களைதல்(PDR) செயல்முறை பற்றிய எங்கள் கட்டுரைத் தொடரில் A, B, C1 போன்ற சுய-ஆலோசனை முறை வழியாக ஆளுமை குறைகளை எவ்வாறு குறைப்பது மற்றும் இறுதியில் களைவது என்பதைப் பற்றி நாங்கள் விவரித்துள்ளோம். இந்த சுய மனோவசிய முறை ஒரு மனோ ஆன்மீக செயல்முறையின் வழியாக ஆழ்மனதின் மாற்றத்தை இலக்காகக் கொண்டு அதை எளிதாக்க உதவுகிறது.

நடைமுறையில் கோபம், பாதுகாப்பின்மை, உணர்ச்சி மற்றும் போதைக்கு அடிமை போன்ற சில ஆளுமை பண்புகளை கடுமையாக உழைத்தும் வெல்ல முடியாது என்று மக்கள் உணர்ந்திருக்கலாம். மருத்துவத்துறையில் ஒரு நோயாளிக்கு தான் பரிந்துரைத்த மருந்து வேலை செய்யவில்லை என்று அந்த மருத்துவர் கண்டறிந்தால் அவர் வழக்கமாக மாற்றுமருந்து வழங்குவார், அது போல நாம் வெவ்வேறு சுய ஆலோசனை எடுக்க முயற்சி செய்தும், எதிர்மறையான பண்பை மற்றும் சில பிடிவாதமான ஆளுமை குறைகளை மாற்ற இயலாத கடினமான சந்தர்ப்பங்களில் C2 சுய ஆலோசனை நுட்பத்தை மேற்கொள்ள கருத்தில் கொள்ளலாம்.

இந்த கட்டுரையைப் படிக்கத்துவங்கும் முன், உங்கள் புரிதலை மேம்படுத்த ஆளுமை குறைகளை களைதல் (PDR) செயல்முறை குறித்த பின்வரும் அறிமுகக் கட்டுரைகளைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்;

2. C2 சுய ஆலோசனை நுட்பம் பற்றிய ஒரு கண்ணோட்டம்

மற்ற சுய ஆலோசனை வகைகள் (A மற்றும் B) பலன் தராதபோது ‘கடைசி முயற்சியாக’ C2 சுய ஆலோசனை முறையை (தண்டனை அல்லது தவிர்ப்பு நுட்பம்) உபயோகிக்கவேண்டும். இதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு சுய ஆலோசனையை எடுத்துக்கொள்வதோடு மனதை வெறுக்கச்செய்யவும், இறுதியில் விரும்பத்தகாத அல்லது ஏற்கமுடியாத செயல்கள் அல்லது நடத்தையைத் தவிர்க்கவும் உடல் அல்லது உளவியல் நிலையில் தண்டனை வழங்குவதையும் உள்ளடக்கியுள்ள முறையாகும்.

எந்தவொரு தண்டனையும் தவறான நடத்தைக்கு எதிர்வினையாக, ஒரு அதிகாரம் உள்ளவராலோ அல்லது தானாகவோ தனிநபர் அல்லது குழுவிற்கு வழங்கப்படும், விரும்பத்தகாத அல்லது மனதுக்கு உகந்ததல்லாத ஒரு விளைவாகும். ஒரு குறிப்பிட்ட விரும்பத்தகாத அல்லது ஏற்கமுடியாத செயல் அல்லது நடத்தையைத் தடுக்கும் ஒரு வழியாக தண்டனைகள் செயல்படுகின்றன. இது இவ்வாறு உதவுகிறது :

  • சீர்திருத்தம் – ஒரு தனிநபரை சீர்திருத்துதல்
  • தடுப்பு – ஒரு விரும்பத்தகாத நடத்தை தொடராமல் இருக்க

ஒரு குறிப்பிட்ட தவறான எண்ணம், உணர்ச்சி அல்லது செயலை தொடர்ந்து செய்வதனால் மகிழ்ச்சியூட்டாமல் மாறாக வலியையோ துன்பத்தையோ ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்க தண்டனை முறை பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு தவறு செய்யும் போது வலிமிகுந்த தண்டனையைப் பெறுவதால், மனமானது மீண்டும் அதை செய்வதைத் தவிர்க்கிறது.

3. C2 சுய ஆலோசனை நுட்பத்தை எந்த ஆளுமை குறைபாடுகளுக்குப் பயன்படுத்தலாம்?

புகைபிடித்தல் அல்லது குடிப்பழக்கத்திற்கு அடிமையாதல், நகம் கடித்தல், திக்குவாய், பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (O.C.D), முடிவெடுப்பதில் தயக்கம், தாழ்வு மனப்பான்மை, கவலை, சந்தேக குணம் மற்றும் மனச்சோர்வு எண்ணங்கள் போன்ற பல்வேறு பிடிவாதமான ஆளுமை குறைபாடுகளை நீக்க C2 சுய ஆலோசனை நுட்பத்தைப் பயன்படுத்தலாம். மாயத்தோற்றங்கள் (விசித்திரமான குரல்களைக் கேட்பது, யாரும் இல்லாதபோது யாரோ ஒருவர் இருப்பது போல் உணருவது), பிரமை மற்றும் தற்கொலை எண்ணங்களைச் சமாளிப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். 8 வயதிற்கு பிறகும் நகம் கடித்தல், திக்குவாய், படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்ற பழக்கங்கள் மற்றும் புகைப் பிடித்தல், குடிப்பழக்கம் போன்றவற்றிற்கு அடிமையாதலில் எந்த மாற்றமும் இல்லாதபோது C2 சுய ஆலோசனை நுட்பத்தை உபயோகிக்கலாம்.

மனம் இன்பமான அல்லது ஆழ்ந்த அனுபவத்தில் ஈடுபடும் போதை பழக்கம் போன்ற ஆளுமை குறைபாடுகளை வெல்வதற்கு C2 முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, மனம் தண்டிக்கப்பட்டால் அது வெறித்தனமான தீங்கு விளைவிக்கும் இன்பத்தைத் தேடும் போக்கிலிருந்து விடுபட உதவுகிறது. உதாரணமாக, ஒருவரின் மனம் பகல் கனவு காண்பதில் இன்பத்தைத் தேடினால், பல மணிநேரங்கள் வீணாகிவிடும். ஆனால் கிள்ளுதல் முறை அல்லது C2 சுய ஆலோசனை பகல் கனவு காண்பதிலிருந்து ஒருவரை விடுவிப்பதற்கு உதவுகிறது.

மேலும் அதிக தகவலுக்கு, பின்வரும் எங்கள் கட்டுரையைப் படியுங்கள் – சுய ஆலோசனை ஒன்றைக் கொடுப்பது எப்படி 

4. C2 சுய ஆலோசனை நுட்பம் ஏன் தண்டனையுடன் கூடிய ஒரு சுய ஆலோசனையையும் பரிந்துரைக்கிறது?


C2 சுய ஆலோசனை நுட்பத்திற்கு தண்டனை ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள, தவறாக நடந்து கொள்ளும் குழந்தையின் உதாரணத்தை கருத்தில் கொள்ளலாம். ஒரு குழந்தை மோசமாகச் செயல்படும் போது, ஆரம்பத்தில் பெற்றோர் அவர்களது தவறான நடத்தையை ஏன் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை மென்மையாக வழங்குவதன் மூலம் சரி செய்ய முயற்சி செய்யலாம். இருப்பினும், எதிர்மறையான நடத்தை தொடர்ந்தால், பெற்றோர் பொதுவாக ஏதேனும் ஒரு வகையான தண்டனை முறையை நாடுவார்கள். ஏனென்றால், தண்டனையானது தவறான நடத்தையை மீண்டும் செய்வதால், வலியையோ அல்லது விரும்பத்தகாத விளைவையோ தாங்க வேண்டியிருக்கும் என்ற செய்தியை குழந்தையின் மனதிற்கு அளிக்கிறது. இயல்பாகவே குழந்தைகளின் மனம் வலி அல்லது விரும்பத்தகாத விளைவை விட இன்பத்தைத் தேடுவதில் கவனம் செலுத்தும். எனவே தண்டனையானது குழந்தையின் மனதை தவறான நடத்தையை மீண்டும் செய்வதிலிருந்து மிகவும் திறம்படத் தடுக்கும்.

தண்டனைகள் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நாம் நம்பினாலும், பெரியவர்களுக்கும் இது பொருந்துவதோடு பயனுள்ளதாகவும் இருக்கும். அன்றாட வாழ்க்கையில் பெரியவர்களுக்கான தண்டனைகளுக்கு பல உதாரணங்கள் உள்ளன, வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் மற்றும் வேலைக்கு தாமதமாக வருவதால் அபராதம் போன்றவை. பெரும்பாலும் தண்டனை பயம், மனதை கட்டுப்படுத்தி, தவறான நடத்தையைத் தடுக்கிறது, ஏனெனில் யாரும் தண்டிக்கப்படுவதை விரும்புவதில்லை. மேலும் மனம் தண்டனையை நிராகரிக்க முனைகிறது அல்லது அதற்கு பயப்படுகிறது. சில நேரங்களில் மக்கள் தங்கள் மன உறுதியைப் பயன்படுத்தி தவறான நடத்தைக்காக தன்னையே தண்டிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், உண்மையில் நேரம் வரும்போது, ​​”இன்பத்தைத் தேடும்” மனம் தண்டனையிலிருந்து தப்பிக்க பல சாக்குபோக்குகளை எப்போதும் கொடுக்கும். மேலும், ஒருவரின் மனதைத் தண்டிப்பது விரும்பிய விளைவை ஏற்படுத்தாமல் போகலாம், ஏனெனில் தண்டிப்பதற்கான காரணத்தை பற்றிய தெளிவு மனதிற்கு இல்லை. ஆனால் ஆளுமை குறைகளை களையும் நுட்பம், எந்த தவறான நடத்தைக்காக மனம் தண்டிக்கப்படுகிறது என்பது குறித்த தெளிவை ஏற்படுத்த சில தண்டனைகளுடன் கூடிய சுய ஆலோசனையை எடுக்க பரிந்துரைக்கிறது, எனவே அந்த நடத்தை தவிர்க்கப்படுகிறது. C2 சுய ஆலோசனை ஒருவரின் நடத்தையை சரிசெய்வதற்கும், தண்டனையை ஏற்றுக்கொள்வதற்கும் மனதை பக்குவப்படுத்துகின்றன.

5. C2 சுய ஆலோசனை நுட்பத்தை எப்போது தேர்ந்தெடுப்பது என்பதை எப்படி அறிவது?

ஆளுமை குறைகளை களையும் செயல்பாட்டில், நமது ஆழ் மனதில் இருந்து வரும் தவறான தூண்டுதல்களை நடுநிலையாக்க, நேர்மறையான சுய ஆலோசனைகளை (A, B, மற்றும் C1 வகைகள்) தனக்கே வழங்குகிறோம். பெரும்பாலும் ஒருவரது மனம் தவறான நடத்தையை ஏற்றுக்கொண்டு மாற்ற A, B மற்றும் C1 வகையான சுய ஆலோசனைகள் போதுமானது. இருப்பினும், ஒரு மாதத்திற்கு விடாமுயற்சியுடன் சுய ஆலோசனைளை எடுத்துக் கொண்ட பிறகும் தவறான சிந்தனை, செயல் அல்லது எதிர்வினையில் எந்த மாற்றத்தையும் நாம் காணவில்லை என்றால், C2 நுட்பத்தை அல்லது தண்டனை முறையைப் பயன்படுத்தலாம்.

C2 சுய ஆலோசனை நுட்பத்தை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான உதாரணத்தை நாங்கள் கீழே வழங்கியுள்ளோம் :

ராபர்ட்டோ எப்போதும் தனது சக ஊழியர் பீட்டரை அதிகமாக குறை கூறுவார். அவரின் இந்த ஆளுமை குறைபாட்டை அறிந்ததோடு இரண்டு மாதங்களாக A மற்றும் B வகை சுய ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு அதைக் குறைக்க முயற்சித்து தோல்வியடைந்தார். ராபர்ட்டோ விரும்பிய அளவிற்கு அந்த குறைபாடு குறையவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளானதோடு உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அவரை பற்றி மோசமான பார்வை எழுந்ததால் வேலையிலும் சிக்கல்கள் ஏற்பட்டது.

ராபர்ட்டோ ஏற்கனவே 3-4 வாரங்களுக்கும் மேலாக A மற்றும் B வகை சுய ஆலோசனைகளை எடுத்து வருவதால், இந்த ஆளுமை குறைபாட்டிற்கு விரைந்து தீர்வு காண தண்டனையின் உதவியுடன் C2 சுய ஆலோசனை நுட்பத்தை பயன்படுத்தலாம்.

6. C2 சுய ஆலோசனைகளை எவ்வாறு வடிவமைப்பது?

C2 சுய ஆலோசனையை உருவாக்குவதற்கான வடிவம் பின்வருமாறு :

வடிவம் 1 : [தவறான செயல், சிந்தனை, உணர்ச்சி அல்லது எதிர்வினை] + [விழிப்புணர்வை உருவாக்குதல்]  [தண்டனை]  [சரியான கண்ணோட்டம் ]

அல்லது

வடிவம் 2 : [தவறான சிந்தனை, உணர்ச்சி, செயல் அல்லது எதிர்வினை] + [சரியான கண்ணோட்டம்]  [தண்டனை]

ஆளுமை குறைகளை களையும் செயல்பாட்டில், ஒருவர் வெவ்வேறு / பல ஆளுமை குறைபாடுகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு A, B அல்லது C வகையான சுய ஆலோசனைகளை எடுக்க முடியும். அவ்வாறு சுய ஆலோசனைகளை தேர்ந்தெடுக்கும்போது ஒரு நேரத்தில் ஒரு C2 சுய ஆலோசனையை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறைபாட்டிற்கு மட்டுமே C2 சுய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறைபாடுகளுக்கு, A அல்லது B வகையான சுய ஆலோசனைகள் வழங்கப்படலாம். ஏனெனில் பொதுவாக மனம் தண்டனையை விரும்புவதில்லை மற்றும் அதற்கு எதிராக இயங்கக்கூடும். இதனால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட C2 சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வது தேர்ந்தெடுக்கப்பட்ட குறைபாடுகளை சமாளிக்க நமக்கு உதவுவதில் பயனுள்ளதாக இருக்காது.

6.1 பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD) தொடர்பான C2 சுய ஆலோசனைகளுக்கு எடுத்துக்காட்டுகள்

பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுக்காண (OCD) C2 சுய ஆலோசனை உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

அ. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்ற பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD)

அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்ற பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD)

  • எப்பொழுதெல்லாம் எனக்கு தொடர்ச்சியாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் அதை உணர்ந்து என்னை அழுத்தமாகக் கிள்ளிக்கொள்வேன்.
  • எப்பொழுதெல்லாம் எனக்கு தொடர்ச்சியாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்று தோன்றுகிறதோ, எப்பொழுதெல்லாம் நான் அதை உணர்ந்து என்னை அழுத்தமாகக் கிள்ளிக் கொண்டு, நான் ஏற்கனவே கைகளைக் கவனமாகக் கழுவிவிட்டேன் என்பதை உணர்வேன்.

ஆ. அறையைப் பூட்ட மறந்துவிடுவோமோ என கவலைப்படும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD)

அறையைப் பூட்ட மறந்துவிடுவோமோ என கவலைப்படும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD)

  • எப்பொழுதெல்லாம் எனக்கு என் அறையைப் பூட்டவில்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் அதை உணர்ந்து என்னை அழுத்தமாகக் கிள்ளிக்கொள்வேன்.
  • எப்பொழுதெல்லாம் எனக்கு என் அறையைப் பூட்டவில்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் அதை உணர்ந்து என்னை அழுத்தமாகக் கிள்ளிக்கொண்டு, இது என் மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு சந்தேகம் என்பதை உணர்வேன்.

இ. தன்னுடைய கோப்புகளை கணினியில் சேமிப்பது பற்றி கவலைப்படுவதால் ஏற்படும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு(OCD)

தன்னுடைய கோப்புகளை கணினியில் சேமிப்பது பற்றி கவலைப்படுவதால் ஏற்படும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு(OCD)

  • எப்பொழுதெல்லாம் என் கோப்புகளை நான் சேமிக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி வருகிறதோ அப்பொழுதெல்லாம், அதை அறிந்துகொண்டு என்னைஅழுத்தமாகக் கிள்ளிக்கொள்வேன்.
  • எப்பொழுதெல்லாம் என் கோப்புகளை நான் சரியாக சேமிக்கவில்லை என்ற எண்ணம் வருகிறதோ அப்பொழுதெல்லாம், நான் அதை அறிந்துகொண்டு என்னையே அழுத்தமாக கிள்ளிக்கொண்டு, நான் அவ்வாறு செய்ததை தெளிவாக நினைவில் வைத்திருப்பதை உணர்வேன்.

ஈ. ஒருவரின் பாசத்தை விரும்பும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு(OCD)

ஒருவரின் பாசத்தை விரும்பும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு(OCD)

 

  • எப்பொழுதெல்லாம் செபாஸ்டியன் என்னை நேசிக்கிறான் என்று நான் நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம், இது உண்மையல்ல என்று அவனே பலமுறை சொன்னதை உணர்ந்து என்னையே அழுத்தமாகக் கிள்ளிக்கொள்வேன்.
  •  எப்பொழுதெல்லாம் செபாஸ்டியன் என்னை நேசிக்கிறார் என்று நான் நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம், இது உண்மையல்ல என்று அவரே பலமுறை சொன்னதை உணர்ந்து என்னையே அழுத்தமாகக் கிள்ளி கொண்டு, இந்த மாயையை மனதில் வைத்திருப்பது என் வாழ்க்கையில் தடைகளை உருவாக்கும் என்பதை உணர்வேன்.

6.2 C2 சுய ஆலோசனைகளுக்கான வேறு சில உதாரணங்கள்

பல்வேறு ஆளுமை குறைபாடுகளுக்கான C2 சுய ஆலோசனைகளின் சில உதாரணங்கள் பின்வருமாறு.

அ. அதிகமாக விமர்சித்தல்

அதிகமாக விமர்சித்தல்

 

தவறு / குறைபாடு ராபர்டோ தனது சக ஊழியர் பீட்டரை வாராந்திர ஊழியர்கள் கூட்டங்களில் அதிகமாக விமர்சிப்பார். அவர் தன்னுடைய இந்த ஆளுமை குறைபாட்டை அறிந்திருக்கிறார். மேலும் 2 மாதங்களுக்கு A வகை சுய ஆலோசனைகளை எடுத்து அதை குறைக்க முயற்சித்துள்ளார். இருப்பினும், அந்த குறைபாடு ராபர்டோ விரும்பும் அளவுக்கு கணிசமாகக் குறையவில்லை.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை எப்பொழுதெல்லாம் நான் பீட்டரை வாராந்திர ஊழியர்கள் கூட்டத்தில் விமர்சிக்கப் போகிறேனோ அப்பொழுதெல்லாம், என்னை நானே கிள்ளிக் கொண்டு அந்த எண்ணத்தை உடனடியாக நிறுத்திவிடுவேன் / அடுத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன் / அன்றைய இனிமையான அனுபவத்தில் கவனம் செலுத்துவேன்.

ஆ. பொறாமை

பொறாமை

 

தவறு / குறைபாடு தனது தோழி மேரியின் விலையுயர்ந்த உடைகள் மற்றும் நகைகளைப் பார்த்து ஜெனிஃபர் பொறாமைப்படுகிறாள். A2 சுய ஆலோசனைகளை எடுத்து மேரி மீதான தனது பொறாமை உணர்வைக் குறைக்க முயன்றாள். இருப்பினும், தனது தோழியின் மீது தொடர்ந்து பொறாமைப்படுகிறாள்.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை எப்பொழுதெல்லாம் நான் வைர நகைகளுடனுடைய அழகான கவுனை மேரி அணிந்திருப்பதைப் பார்த்து பொறாமைப்படுகிறேனோ, அப்பொழுதெல்லாம் எனது டிரஸ் பெல்ட்டை இறுக்கி, அந்த எண்ணத்தை தடுத்துவிடுவேன்/நிறுத்திவிடுவேன். கடவுள் எனக்குக் கொடுத்த அனைத்து பரிசுகளுக்கும் நன்றி கூறி, அவளுடைய அழகை மனதார பாராட்டுவேன்

இ. எதிர்மறை சிந்தனை மற்றும் அவநம்பிக்கை

எதிர்மறை சிந்தனை மற்றும் அவநம்பிக்கை

 

தவறு / குறைபாடு லூகாஸ் தனது இளம்வயதிலிருந்தே ஒரு வித அவநம்பிக்கையாளராக இருந்து வருகிறார். அவருக்கு, ‘இது எனக்கு மிகவும் கடினம்’ என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால், அடிக்கடி வருத்தத்தோடும் மன அழுத்தத்தோடும் இருப்பார்.. இரண்டு மாதங்களாக A1 சுய ஆலோசனையை எடுத்தும், அவருக்குள் அவநம்பிக்கையின் குறைபாடு ஆழமாக வேரூன்றியிருப்பதால் அவரது சிந்தனை முறையில் எவ்வித மாற்றத்தையும் அவரால் காண இயலவில்லை.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை எப்பொழுதெல்லாம் இது எனக்கு மிகவும் கடினம் என்ற அவநம்பிக்கையான எண்ணம் வர ஆரம்பிக்கிறதோ அப்பொழுதெல்லாம், உடனடியாக என் மணிக்கட்டில் கட்டிக்கொண்ட ரப்பர் பேண்ட்-ஐ இழுத்து விட்டு , அந்த எண்ணத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, இது புதியது, நான் கற்று வருகிறேன், என்னால் காலப்போக்கில் அதை நன்றாகச் செய்ய முடியும் என்ற நேர்மறையான எண்ணத்தால் அதை மாற்றுவேன்

எப்பொழுதெல்லாம் இது எனக்கு மிகவும் கடினம் என்ற அவநம்பிக்கையான எண்ணம் வரத் துவங்குகிறதோ அப்பொழுதெல்லாம், உடனடியாக என் மணிக்கட்டில் கட்டிக்கொண்ட ரப்பர் பேண்ட்-ஐ இழுத்து விட்டு, என் அவநம்பிக்கையின் மூல காரணத்தை புரிந்துகொள்ள உதவியை நாடுவேன்.

ஈ. மறதி

மறதி

 

தவறு / குறைபாடு மெல்லிசா அலுவலகத்திற்குச் செல்லும்போது தனது வீட்டுச் சாவியை எடுத்துச் செல்ல மறந்துவிடுகிறாள். இதனால், மீண்டும் வீட்டிற்குச் சென்று சாவியை எடுக்க நிறைய நேரத்தை வீணாக்குகிறாள். சில வாரங்களாக மறதிக்கான A1 சுய ஆலோசனையை எடுத்தும், தவறு இன்னும் அடிக்கடி நிகழ்கிறது.
சுயஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுயஆலோசனை எப்பொழுதெல்லாம் நான் வீட்டை விட்டு வெளியேறியபின் என் வீட்டு சாவியை மறந்துவிட்டதைப் போல் உணர்ந்தால், மறுநாள் காலையில் அந்த சாவியை என் கைப்பையில் வைக்கும் வரை காலை தேநீரை குடிக்க மாட்டேன்.
எப்பொழுதெல்லாம் நான் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சாவியை அடிக்கடி மறந்து விடுகிறேனோ, மனம் இன்பமடையும் ஏதாவது ஒன்றை இழக்க வேண்டும் என்பதை நான் அறிந்துகொண்டு, வழக்கமாக சாவியை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளும் வரை காலை தேநீர் அருந்துவதை விட்டுவிடுவேன்.

உ. சோம்பல்

சோம்பல்

தவறு / குறைபாடு ஜார்ஜியோ இரவு உணவு சமைக்க தொடர்ந்து சோம்பேறித்தனப்பட்டு ஆரோக்கியமற்ற துரித உணவை வெளியில் இருந்து வாங்கி உண்டு பணத்தை வீணாக்குகிறார். சோம்பலுக்குரிய A1 சுய ஆலோசனையை சில வாரங்களாக எடுத்தபோதும் இன்னும் எப்போதும் போல சோம்பேறியாகவே இருக்கிறார்.
சுயஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுயஆலோசனை எப்பொழுதெல்லாம் சோம்பல் காரணமாக இரவு உணவை சமைக்கவில்லை என்று உணர்கிறேனோ, அப்பொழுதெல்லாம் நான் எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பதிலாக உணவை சமைப்பேன்.
எப்பொழுதெல்லாம் நான் இரவு உணவு சமைக்க சோம்பேறித்தனப்பட்டு, அடிக்கடி உணவை வெளியில் இருந்து வாங்குவேனோ அப்பொழுதெல்லாம், இரவு உணவு சமைக்கும் வரை எனக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.

ஊ. முடிவெடுக்க இயலாமை

முடிவெடுக்க இயலாமை

தவறு / குறைபாடு எட்கர் முடிவெடுக்க முடியாதவர். ஒரு எளிய முடிவை எடுக்க கூட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார். இது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக 5 வாரங்களாக A1 சுய ஆலோசனையை எடுத்தும், அவரது இந்த குறைபாடு இன்னும் வலுவாக வெளிப்படுகிறது.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை எப்பொழுதெல்லாம் என்னால் முடிவெடுக்க முடியவில்லை என என் மனைவி என்னிடம் கூறுகிறாரோ, அப்பொழுது அதை ஏற்றுக்கொண்டு, முடிவுகளை உடனே எடுக்கும் வரை சாக்லேட் சாப்பிட மாட்டேன்.

or

எப்பொழுதெல்லாம் எனது முடிவெடுக்க இயலாமையின் விளைவாக மீண்டும் என் குடும்பத்தினர் துயரமடைய வேண்டும் என்று உணருகிறேனோ, அப்பொழுதெல்லாம், ஒரு வாரத்திற்கு சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்த்து, அத்தன்மையின் மூல காரணத்தை புரிந்துகொள்ள உதவி கேட்பேன்.

6.3 அடிமையாதலில் இருந்து மீண்டு வருவதற்கான C2 சுய ஆலோசனையின் சில உதாரணங்கள்

அடிமையாதலுக்கானC2 சுய ஆலோசனைகளின் சில உதாரணங்கள் பின்வருமாறு :

அ. புகையிலை அல்லது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாதல்

புகையிலை அல்லது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாதல்

தவறு / குறைபாடு லூயிசா 20 ஆண்டுகளுக்கும் மேலாக புகைபிடித்து வருகிறார். ஒரு மாத காலமாக A1 சுய ஆலோசனை எடுத்து புகைபிடிப்பதை நிறுத்த முயற்சித்தும் அவரது புகைபிடிக்கும் பழக்கம் சிறிதளவே குறைந்துள்ளது.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை ஒவ்வொரு முறையும் எனக்கு புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம், புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும் என்பதை நினைவூட்டிக்கொண்டு ,என்னையே அழுத்தமாக கிள்ளிக் கொள்வேன்.

ஆ. மது பழக்கத்திற்கு அடிமையாதல்

மது பழக்கத்திற்கு அடிமையாதல்

தவறு / குறைபாடு ஃபிராங்கிற்கு மதுப்பழக்கம் உள்ளது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) வலைத்தளத்தைப் படித்த பிறகு, தனது போதை பழக்கத்திலிருந்து விடுபட ஸ்ரீ குருதேவ் தத்தாவின் பாதுகாப்பு நாம ஜபத்தை சொல்ல துவங்கினார். மேலும் 2 மாதங்களுக்கு A1 சுய ஆலோசனையும் எடுத்துக் கொண்டார். இந்த இரண்டு முயற்சிகளும் அவரது மதுப்பழக்கத்தை ஓரளவு குறைக்க உதவியது. ஆனாலும் தனது போதை பழக்கத்தை முற்றிலுமாக வெல்ல, C2 சுய ஆலோசனை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும் என்று ஃபிராங்க் உணர்ந்தார், ஏனெனில் அவரது ஆழ் மனதில், மது மீதான விருப்பம் ஆழமாக வேரூன்றியுள்ளது.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை எப்பொழுதெல்லாம், எனக்கு மது அருந்த வேண்டும் என்ற ஆசைவருகிறதோ அப்பொழுதெல்லாம், அது என் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் முற்றிலுமாக அழித்துவிடும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு, கடுமையாகக் கிள்ளிக் கொள்வேன்.

இ. சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல்

சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல்

தவறு / குறைபாடு மெலடி ஒரு நாளைக்கு பல மணிநேரங்களை சமூக ஊடகங்களில் செலவிடுகிறாள். அது அவளது நேரத்தை வீணடித்து, மனதைத் தொந்தரவு செய்து, அமைதியற்றதாக்குகிறது என்று அறிந்திருந்தாலும், அவளால் அதைச் செய்வதை நிறுத்த முடியவில்லை. ஒரு மாத காலமாக சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருக்க A1 சுய ஆலோசனை எடுத்துள்ளார். இருப்பினும், அந்த குறைபாட்டைக் குறைப்பதில் அவளுக்கு சிறிய அளவு மட்டுமே முன்னெற்றம் ஏற்பட்டுள்ளது.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை எப்பொழுதெல்லாம் நான் சமூக ஊடகங்களில் நேரத்தை வீணடிக்க தொடங்குவேனோ அப்பொழுதெல்லாம், என் நேரத்தை வீணடிக்கும் இச்செயலை செய்யக்கூடாது என்பதை நினைவூட்டுவதற்காக என் மணிக்கட்டில் உள்ள ரப்பர் பேண்டை கடினமாக இறுக்குவேன்.
எப்பொழுதெல்லாம் நான் சமூக ஊடகங்களை பார்வையிடத் தொடங்குவேனோ, அப்பொழுதெல்லாம், இது என்னை மனரீதியாக தொந்தரவு செய்து, நேரத்தை வீணடிக்கிறது என்பதை நினைவூட்டுவதற்காக என் மணிக்கட்டில் உள்ள ரப்பர் பேண்டை கடினமாக இறுக்குவேன்.

ஈ. சூதாட்டத்திற்கு அடிமையாதல்

சூதாட்டத்திற்கு அடிமையாதல்

தவறு / குறைபாடு ரஃபேலுக்கு சூதாட்டத்திற்கு மிகவும் அடிமையாகியுள்ளார். அதற்காக அவர் வெட்கப்படுகிறார். பல வாரங்களாக A1 சுய ஆலோசனை எடுத்தும், இன்னும் மகிழ்ச்சியுடன் சூதாட்டத்திலேயே திளைத்துள்ளார்.
சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு தவறான செயல், எண்ணம், உணர்ச்சி அல்லது எதிர்வினை + விழிப்புணர்வை ஏற்படுத்துதல் + தண்டனை + சரியான கண்ணோட்டம்
சுய ஆலோசனை எப்பொழுதெல்லாம் நான் ஆன்லைனில் சூதாட்டம் விளையாட நினைக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் தவறான இச்செயல் எனக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொண்டு என்னையே கடுமையாகக் கிள்ளிக்கொள்வேன்.

7. C2 சுய ஆலோசனை நுட்பத்திற்கான மேலும் சில உதாரணங்கள்

  • பகற்கனவு காணுதல் : எப்பொழுதெல்லாம், நான் வீட்டிற்குச் சென்ற பிறகு, மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றி பகற்கனவு காண்கிறேனோ, அப்பொழுதெல்லாம் என்னையே கடுமையாகக் கிள்ளுவேன்.
  • தேவையற்ற சிந்தனை : எப்பொழுதெல்லாம் நான் அலுவலகக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, அது முடிந்து பின்பு வாங்க வேண்டிய மளிகைப் பொருட்களைப் பற்றி யோசிக்கத் தொடங்குகிறேனோ, அப்பொழுதெல்லாம் என்னையே கடுமையாக கிள்ளுவேன்.
  • தேவையற்ற செயல்கள் : எப்பொழுதெல்லாம் நான் அலுவலகக் கூட்டத்தில் அமர்ந்தபோது கால்களை ஆட்டிக்கொண்டு பேசுகிறேனோ அப்பொழுதெல்லாம், என்னையே கடுமையாக கிள்ளுவேன்.
  • சந்தேகம் : எப்பொழுதெல்லாம், இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், என்னையே கடுமையாக கிள்ளுவேன்.
  • மாயத்தோற்றம் : எப்பொழுதெல்லாம் நான் அறையில் தனியாக இருக்கும்போது, யாரோ ஒருவர் என்னருகில் இருப்பது போல் உணருகிறேனோ அப்பொழுதெல்லாம் என்னையே கடுமையாக கிள்ளுவேன்.
  • பிறருடன் ஒப்பிடுவதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை : எப்பொழுதெல்லாம் எனது சக ஊழியருக்கு என்னைவிட அதிகமான குணங்கள் உள்ளன என்ற எண்ணம் எனக்கு வருமோ, அப்பொழுதெல்லாம் என்னையே கிள்ளுவேன்.
  • தோல்வி மனப்பான்மை : எப்பொழுதெல்லாம் எனக்கு, இவ்வுலகில் எனக்கென்று யாரும் இல்லை, என்னை யாரும் விரும்பவில்லை, எங்காவது ஓடிவிடலாம் என்ற எண்ணங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம், என்னையே கடுமையாக கிள்ளுவேன்.
  • தற்கொலை எண்ணங்கள் வருதல் : எப்பொழுதெல்லாம் என்னால் வாழ்க்கையில் எதுவும் செய்ய முடியவில்லை என்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம், என்னையே கடுமையாக கிள்ளுவேன்.
  • பாலியல் எண்ணங்கள் வருதல் : எப்பொழுதெல்லாம் எனக்கு தொடர்ந்து பாலியல் எண்ணங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம், என்னையே கடுமையாக கிள்ளுவேன்.

8. C2 சுய ஆலோசனைகளை எடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

  • நீங்கள் எடுத்துக் கொள்ளும் C2 சுய ஆலோசனை பயனுள்ளதாக இருக்க ஒரு நாளுக்கு குறைந்தது ஐந்து முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தியான நிலைக்கு சென்றோ அல்லது நாமஜபம் மற்றும் பிரார்த்தனை செய்து தளர்வு நிலையை அடைந்த பிறகு இது கொடுக்கப்படலாம். (விரிவான வழிமுறைகளுக்கு சுய ஆலோசனையை எவ்வாறு வழங்குவது என்ற கட்டுரையைப் பார்க்கவும்).
  • C2 வகை சுய ஆலோசனையை வடிவமைக்கும்போது, ​​எதிர்மறை நடத்தையை மீண்டும் செய்வதை உங்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் தண்டனையை தேர்வு செய்யலாம்.
  • சாத்தியமான தண்டனைகளுக்கான உதாரணங்கள் பின்வருமாறு :
    • அஹம்பாவம் அல்லது குறைபாடு வெளிப்படும் போது 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை தன்னையே கிள்ளுதல்
    • அஹம்பாவம் அல்லது குறைபாடு வெளிப்படும் போது மணிக்கட்டில் ரப்பர் பேண்டைக் கட்டி வலியை ஏற்படுத்தும் வகையில் அதை விரலால் இழுத்து விடுதல்
    • சாப்பாடு, இனிப்பு அல்லது விருப்பமான உணவை தவிர்ப்பது
    • மற்றவர்களுக்காக வேலைகளைச் செய்வது
    • தோப்பு கரணம், புஷ்-அப் அல்லது பிற உடல் பயிற்சிகள் செய்தல்
    • மகிழ்வூட்டும் ஒரு செயலைத் தவிர்ப்பது (டிவி பார்ப்பது, சமூக ஊடகத்தைப் முதலியவை)

  • சுய ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையை, குறிப்பிட்ட தவறான நடத்தை நிகழும் ஒவ்வொரு முறையும், விரைவாக எடுக்க வேண்டும்.

9. தவறான சிந்தனை முறை அல்லது செயலை குறுகிய காலத்தில் C2 நுட்பம் எவ்வாறு மாற்ற உதவுகிறது?

இந்தச் செயல்முறையில், ஒவ்வொரு தடவையும் தவறான சிந்தனை ஓட்டம் அல்லது நடத்தை ஏற்படும் போதும், உடனடியாக கிள்ளுவதன் மூலம் வலி ஏற்படுகிறது. அந்த வலியைத் தவிர்க்க, மனம் தகாதச் செயல்களையோ அல்லது தவறான சிந்தனை ஓட்டத்தையோ தவிர்க்கத் தொடங்குகிறது. மேலும் தவறான நடத்தை அல்லது தவறான சிந்தனை ஓட்டம் வலிக்குச் சமம் என்ற எண்ணம் மனதில் உருவாகும்போது, சரியான செயல் அல்லது சரியான சிந்தனை ஓட்டம் நடைபெறத் தொடங்குகிறது. அதன்படி, ஒருவரின் ஆளுமை மாறத் தொடங்குகிறது. இது உளவியலில் இணைப்பு விதி என்று அழைக்கப்படுகிறது.

10. என்னுடைய ஆளுமை குறைபாட்டிற்கு பிராயச்சித்தம் செய்வது தண்டனை பெறுவதற்கு சமமா?

பிராயச்சித்தங்களும் தண்டனைகளும் ஒன்றே என தோன்றலாம். இவ்விரண்டிற்கும் செய்யப்படும் செயல் கூட ஒரே மாதிரியாக இருந்தாலும் இவைகளை எடுத்துக்கொள்வதன் பின்னணியில் உள்ள சிந்தனை மற்றும் நோக்கத்தில் சில வேறுபாடு உண்டு.

ஒரு குறிப்பிட்ட தவறு நடந்திருக்கக் கூடாது என்பதை வலுப்படுத்த மனதிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளே தண்டனைகள் ஆகும். நமது எந்தவொரு ஆளுமை குறைபாடு அல்லது அஹம்பாவத்தின் வெளிப்பாட்டை குறைக்க முயற்சிக்கும் வ்யஷ்டி ஸாதனையான ஆன்மீக பயிற்சியின் (ஒருவரின் சொந்த வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் ஆன்மீக பயிற்சி) ஒரு பகுதியாக அவற்றை எடுத்துக்கொள்வது சிறந்தது.

உதாரணமாக: ஜான் கோபம் என்ற ஆளுமைக் குறைபாட்டை போக்குவதற்காக, ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி மிகவும் கோபப்பட்டால், அதற்கு தண்டனையாக ஒரு வேளை உணவைத் தவிர்க்கலாம். மிதமான கோபம் மட்டுமே அடைந்தால், அடுத்த வேளைக்கு குறைவான உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் தன்னையே தண்டித்துக்கொள்ளலாம்.

நமது ஆன்மீக பயிற்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தவறை சரிசெய்ய நாம் எடுக்கும் நடவடிக்கைகளே பிராயச்சித்தங்கள் ஆகும். அவை பெரும்பாலும் சமஷ்டி தவறுகள் (ஆன்மீகத்தைப் பரப்புவதற்காக சேவை செய்யும் போது செய்யப்படும் தவறுகள் மற்றும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்தல்) விஷயத்தில் எடுக்கப்படுகின்றன.

தண்டனைகள் உளவியல் நிலையில் செயல்பட்டு, தவறான செயலையோ அல்லது எதிர்வினையையோ செய்யாதபடி மனதை நிலைநிறுத்தினாலும், பிராயச்சித்தங்கள் என்பது மிகவும் ஆழமான ஆன்மீக பயிற்சியின் ஒரு வடிவமாகும். நமது தவறான எண்ணங்கள், செயல்கள் அல்லது எதிர்வினைகளுக்கு உண்மையாக வருத்தப்பட்டு பிராயச்சித்தங்களை செய்வதன் மூலம், நமது தவறான நடத்தைக்கு நாம் ஏற்படுத்திய தீமைகளை ஓரளவு ரத்து செய்கிறோம். பிராயச்சித்தங்களை செய்வதால் நமது ஆளுமை குறைபாடுகள் மற்றும் அஹம்பாவத்தின் வெளிப்பாடுகள் பற்றிய நமது விழிப்புணர்வு அதிகரித்து, அதன் மூலம் நற்குணங்களை மனதில் நிலைநிறுத்தி கொள்கிறோம். கடவுளின் அருள் உண்மையான பிராயச்சித்தத்தாலும், அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற விருப்பத்தாலும் செயல்படுத்தப்படுகிறது, இது மூல காரணத்திற்குச் சென்று தவறான நடத்தைக்கு காரணமான ஆளுமை குறைபாட்டை முதலில் நீக்க உதவுகிறது.

பிராயச்சித்தங்களுக்கான சில உதாரணங்கள் பின்வருமாறு :

  • ஆன்ட்ரூ சக ஸாதகரிடம் கோபமாகப் பேசினால், அவர் தனது தவறின் தாக்கத்தை ஈடுசெய்ய ஆசிரம வளாகத்தை சுத்தம் செய்யும் ஸாதகரின் ஸத்சேவையை (பரிபூரண சத்தியத்திற்கான சேவை) மேற்கொள்ளலாம். அவர்கள் ஒத்துக்கொண்டால் அவர்களுக்காக மற்றொரு சேவையையோ அல்லது அவர்களின் சொந்த பணியையோ செய்யலாம்.
  • கேரோல் ஆன்மீக வெளியீட்டில் தவறு செய்திருந்தார், அது செய்திமடலாக வெளியானது. அதற்கு பிராயச்சித்தமாக தனது தனிப்பட்ட நேரத்தை தியாகம் செய்து அந்த நேரத்தை கூடுதல் சமஷ்டி சேவைக்கு பயன்படுத்தலாம்.

பிற சாத்தியமான பிராயச்சித்தங்களில் பின்வருவன அடங்கும் :

  • உங்களுக்குப் பிடித்த உணவை சிறிது காலம் சாப்பிடாமல் இருத்தல்
  • ஒரு வாரத்திற்கு உங்களுக்குப் பிடிக்காத உணவு ஒன்றை சாப்பிடுதல்
  • ஒரு உணவையோ அல்லது உங்களுக்குப் பிடித்த உணவையோ சில நாட்களுக்குத் தவிர்ப்பது
  • பாதி உணவை உண்பது (எ.கா., நீங்கள் வழக்கமாக 4 இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால், அதற்குப் பதிலாக 2 சாப்பிடுங்கள்)
  • உங்களுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தல் (எ.கா., இஸ்திரி செய்தல், பாத்திரங்கள் கழுவுதல், கழிப்பறை சுத்தம் செய்தல், அலமாரிகளை ஒழுங்கமைத்தல்)
  • அவசரமாகவோ அல்லது அவசியமாகவோ இல்லாவிட்டால் பேசுவதைத் தவிர்க்கவும். (தேவையில்லாமல் பேசுவது, மற்றவர்களை விமர்சிப்பது, மற்றவர்களை கேலி செய்வது, பெருமிதமான அஹம்பாவம் போன்ற குறைபாடுகளுக்கு இவற்றை எடுக்கலாம்)
  • அதிகாலையில் விழித்திட விருப்பம் இல்லாதபோது விழித்திடல்
  • உங்கள் தவறின் விளைவாக ஏற்பட்ட எந்தவொரு நிதி இழப்பிற்கும் பணம் செலுத்துதல்
  • உங்களிடம் தற்போது உள்ள பொறுப்புகளோடு புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுதல்

ஒருவர் எடுக்கும் பிராயச்சித்தம், அவர்கள் செய்த தவறினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு ஈடானதாக இருக்க வேண்டும். பிராயச்சித்தத்தின் தீவிரம், தவறின் தீவிரத்தைப் பொறுத்து இருக்கவேண்டும். (அதாவது, இலேசான, மிதமான அல்லது தீவிரமான அளவு). பிராயச்சித்தங்கள் கர்மக் கண்ணோட்டத்திலும் உதவுகின்றன. கர்ம விதிப்படி, செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யப்படவில்லை என்றால், ஒருவர் அதன் விளைவுகளை இப்பிறவியிலோ அல்லது வரும் பிறவிகளிலோ அனுபவிக்க வேண்டியிருக்கும்.

குறிப்புகள்

  • கோபப்படுவது போன்ற வ்யஷ்டி (தனிப்பட்ட) தவறுகளுக்கும் நாம் பிராயச்சித்தம் செய்யலாம்.
  • ஒரு குறிப்பிட்ட ஆளுமை குறைபாடு அல்லது அஹம்பாவம் வெளிப்படும் போது நாம் அதே வகையான பிராயச்சித்தம் அல்லது தண்டனையைப் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக: கோபத்திற்கான தண்டனையாக ரிபேக்கா உணவைத் தவிர்க்கிறார் என்றால், மனம் குழம்பாமல் இருக்க வேறு எந்த குறைபாடு அல்லது அஹம்பாவத்திற்கு தண்டனையாக அல்லது பிராயச்சித்தமாக அவள் உணவைத் தவிர்க்கக்கூடாது.

11. முடிவுரை

C2 சுய ஆலோசனை வழிமுறை என்பது, மற்ற முயற்சிகள் போதுமான பலனைத் தராத சந்தர்ப்பங்களில், பிடிவாதமான ஆளுமை குறைபாடுகள் மற்றும் அஹம்பாவத்தின் வெளிப்பாடுகளை அகற்ற உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். C2 மற்றும் பிற சுய ஆலோசனை வழிமுறைகளைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் வழிகாட்டுதலுக்கு, எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) -இன் இலவச வாராந்திர ஆன்லைன் ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். அந்த கூட்டங்களில், ஆளுமை குறைகளை களையும் செயல்முறையை நன்கு புரிந்துகொள்ளவும், உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனிப்பட்ட சுய ஆலோசனையை சரியாக உருவாக்கவும் உங்களுக்கு நாங்கள் உதவுவோம்.