சுய ஆலோசனை ஒன்றைக் கொடுப்பது எப்படி?


அட்டவணை

1. சுய ஆலோசனை ஒன்றைக் கொடுப்பதைப் பற்றி அறிமுகம்

ஆளுமை குறைகளை களைதல் என்ற கட்டுரையில், சுய ஆலோசனை என்ற வலிமையான கருவி ஒருவரின் ஆளுமையில் நல்ல மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருகிறது என்று விளக்கியுள்ளோம். ஒருவரின் ஆளுமை மற்றும் அவருக்கு மன அழுத்தத்தைத் தரும்  சூழ்நிலைக்கு ஏற்ப பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 7 வகையான சுய ஆலோசனைகள் கொடுத்துள்ளோம். அவைகள் A1, A2, A3, B1, B2, C1 மற்றும் C2 ஆகும்.

ஒருவர் சரிசெய்ய நினைக்கும் தன் ஆளுமையின் குறையை அறிந்து தேர்ந்தெடுத்த பின், அடுத்த படி – ஆழ்மனதிற்கு சுய ஆலோசனை கொடுத்து சரியான முறையில் நடந்துகொள்ள மனதை பயிற்றுவிப்பதே ஆகும்.

இக்கட்டுரையில் ஆளுமை குறை களைதலின் முக்கிய படி, அதாவது – சுய ஆலோசனை ஒன்றைக் கொடுப்பது எப்படி என்பதற்கு 2 வழிமுறைகளை கொடுத்துள்ளோம். இந்நுட்பத்தால் அதிகபட்ச பயனை அடைந்து தரமான வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கலாம்.


தவறாமல் சுய ஆலோசனை கொடுத்தால், குறைபாடுகளின் தீவிரம் குறைந்து, சந்தோஷமும் ஸ்திரத்தன்மையும்  அனுபவிக்கலாம்.

 


2. சுய ஆலோசனை ஒன்றைக் கொடுப்பது எப்படி

2.1 முறை 1 – நாமஜபம் மற்றும் பிரார்த்தனையின் மூலம் ஓய்வு நிலை அடைதல்

 

படி செயலின் விளக்கம் நேரம் (நிமிடம் : நொடி)
1 இவ்வாறு பிரார்த்திக்கவும்: “இறைவா, இந்த சுய ஆலோசனையை என் ஆழ்மனம் அடையச்செய்து, இது சம்பந்தப்பட்ட எல்லா தடங்கல்களையும் அகற்றி, இந்த சுய ஆலோசனை மூலம் என்னிடம் நற்குணங்கள் உருவாகட்டும்.”. 0:30
2 கடவுளின் நாமத்தை ஜபிக்கவும்1 2:00
3A தேர்ந்தெடுத்த முதல் குறைக்கு சுய ஆலோசனை அளிக்கவும் (5 முறை சொல்லவும்) 1:30
3B தேர்ந்தெடுத்த இரண்டாவது குறைக்கு சுய ஆலோசனை அளிக்கவும் (5 முறை சொல்லவும்) 1:30
4 நன்றி செலுத்தவும் – “கடவுளே, என் மூலம் இந்த சுய ஆலோசனை நடத்தியதற்கு உங்களுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். தயைகூர்ந்து என்னை  தினமும் சுய ஆலோசனை செய்ய வைக்கவும்”. 1:00
சுய ஆலோசனை கொடுக்க மொத்த நேரம் 6:30

குறிப்பு 1 : நீங்கள் பிறந்த மதத்திற்குரிய இறைவனின் நாமத்தை ஜபிக்கவும். எந்த நாமத்தை ஜபிப்பது என்றறிய ‘உங்கள் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்’ எனும் கட்டுரையை பார்க்கவும்.

படி 1 : எளிய பிரார்த்தனையுடன் சுய ஆலோசனையை தொடங்கவும்: மேலே கொடுக்கப்பட்டபடி பிரார்த்திப்பது, சுய ஆலோசனை எடுக்க கடவுளின் ஆசீர்வாதம் பெறவும், செயல்திறன் மிக்கதாக இருக்கவும் மிக முக்கியமானது ஆகும்.

படி 2 : இறைநாமத்தை ஜபித்தல்: இறைநாமத்தை 2 நிமிடங்கள் ஜபிப்பது நல்லது. நாமஜபம் மன ஒருமைப்பாட்டை தரும். பொதுவாக மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள் இருக்கும், அதனால் சுய ஆலோசனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்காது. இறைநாமத்தை ஜபித்தால் தெய்வீக சக்தியை ஈர்த்து உருவாக்கி, மனதில் நேர்மறை விளைவை ஏற்படுத்தும். நாமஜபம் செய்யும்போது  ஆழ்மனதில் இருந்து வெளிமனத்திற்கு வரும் தூண்டுதல்கள் குறைந்து மன ஒருமைப்பாடு அதிகரிக்கும். ஆகையால் சுய ஆலோசனை எடுக்க மனம் தயாராக இருக்கும்.

படி 3 : சுய ஆலோசனையை 5 முறை படிப்பது: ஆரம்ப கட்டத்தில் ஒருவர் அதிக பட்சம் 2 ஆளுமை குறைகளை தேர்வு செய்ய பரிந்துரைக்கிறோம். உதாரணத்திற்கு, பொறாமை மற்றும் மறதி என்னும் ஆளுமை குறைகளை தேர்வு செய்யலாம். எனவே, ஒவ்வொரு குறைக்கும் ஒரு சுய ஆலோசனையை அமைக்கலாம். இப்படியில் சுய ஆலோசனையை 5 முறை சொல்லலாம், முதலில் பொறாமைக்கும் அடுத்து மறதிக்கும்.

கவனிக்க வேண்டியது என்னவென்றால் A3 சுய ஆலோசனையை தவிர்த்து மற்றவை அனைத்தையும் (A1, A2, B1, B2, C1  மற்றும் C2) 5 முறை சொல்ல வேண்டும். நீளமானதாக இருப்பதால், A3 சுய ஆலோசனை ஒருமுறை மட்டுமே சொல்ல வேண்டும்.

சுய ஆலோசனை வகைகள் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

படி 4 : நன்றி செலுத்துதல்: நம் மூலம் சுய ஆலோசனை செய்ய வைத்ததற்கு கடவுளுக்கு ஒரு எளிய நன்றி சொல்வதுடன் இவ்வமர்வு முடியும்.

2.2 முறை 2 – ஓய்வு நிலையை அடைய தன் நினைவிழந்த நிலைக்குச் செல்லுதல்

ஆளுமை குறைகளை களைதல் முறையில், ஆழ்மனதிற்கு தன் நினைவிழந்த நிலையில் இருக்கும்போதும் ஆலோசனைகள் கொடுக்கலாம். தன் நினைவிழந்த நிலை என்பதன் பொருள் உடல் மற்றும் மனம் ஓய்வு அடையும் நிலையாகும். இந்நிலையில், வெளிமனம் மற்றும் ஆழ்மனதிற்கு நடுவில் இருக்கும் தடுப்பு திறக்கப்படுவதுடன், இவ்வாலோசனை ஆழ்மனதை நேர்மறையாக மாற்ற வல்லது. இக்கட்டுரையின் பின்னிணைப்பில் தன் நினைவிழந்த நிலைக்குச் செல்ல வழிமுறைகள் கொடுத்துள்ளோம். அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் 5-10% முக்கியத்துவம் மட்டுமே ஓய்வு நிலைக்குச் செல்வதில் உண்டு, ஆனால் சிகிச்சை (அதாவது ஆலோசனை) கொடுப்பதற்கு 90-95% முக்கியத்துவம் உண்டு. ஆகையால், ஆழ்ந்த ஓய்வு நிலை அடைவதை பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டாம்.

ஒவ்வொரு சுய ஆலோசனை அமர்வும் ஆறிலிருந்து ஏழு நிமிடங்கள் வரை நீடிக்கும். நேரத்தின் கூறுகள் கீழ்க்கண்டவாறு :

படி சுய ஆலோசனை எடுப்பதற்கான படிகள் நேரம் (நிமிடம் : நொடி)
1 தன் நினைவிழந்த நிலைக்குச் செல்லுதல் (பின்னிணைப்பை பார்க்கவும்) 0:30
2 முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்தல் (நடைபெறும்போது) 0:15
3A A1, A2, B1 மற்றும் B2 நுட்பங்களில், ஏதேனும் இரு சிகிச்சை ஆலோசனைகள் (ஒவ்வொரு ஆலோசனையும் 5 முறை சொல்ல வேண்டும்) 1:30
3B A3 நுட்ப சிகிச்சை ஆலோசனை 3:30
4 தன் நினைவிழந்த நிலையில் இருந்து வெளியேறுதல் (பின்னிணைப்பை பார்க்கவும்) 0:15
சுய ஆலோசனை கொடுக்க மொத்த நேரம் 6:00

தயைகூர்ந்து கவனிக்கவும் :

  1. ஒரு அமர்வில், A1, A2, B1 மற்றும்  B2 நுட்பங்களை உபயோகிக்க வேண்டிய, ஆளுமை குறைகளின் இரண்டு அல்லது மூன்று வெளிப்பாடுகளை சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சுய ஆலோசனையும் 5 முறை சொல்ல வேண்டும்.
  2. A3 சுய ஆலோசனை கொடுக்க வெகு நேரம் ஆவதால், (3-4 நிமிடங்கள்) ஒவ்வொரு அமர்விலும் ஒரு A3 சுய ஆலோசனை மட்டுமே கொடுக்க வேண்டும். 5 முறை சொல்லப்படும் மற்றைய சுய ஆலோசனை நுட்பங்கள் போலல்லாது, A3 நுட்ப சுய ஆலோசனையை ஒரு அமர்வுக்கு ஒரு முறை மட்டுமே சொல்ல வேண்டும்.
  3. நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது 3-5 அமர்வுகள் செய்யலாம் – விடியற்காலை, காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவு. எவ்வளவுகெவ்வளவு அமர்வுகள் அதிகமோ, அவ்வளவுக்கவ்வளவு வேகமாக குணமாகும்.
  4. குழந்தைகளுக்கும் அவர்கள் உறங்குவதற்கு முன் 4-5 நிமிடங்கள் ஆலோசனைகள் கொடுக்கலாம், ஏனென்றால் இந்நிலை மனோவசிய தன் நினைவிழந்த நிலையாகும்.

3. நாளொன்றில் சுய ஆலோசனைகளின் கால இடைவெளி

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதி 3 -இன் படிகள், ஒரு சுய ஆலோசனை அமர்வுக்கு உரியதாகும்.
  • சுய ஆலோசனைகள் அளிக்கும் ஒரு அமர்வு, தேர்வு செய்த 1 அல்லது 2 குறைபாடுகளை  பொறுத்து கிட்டத்தட்ட 5-7 நிமிடங்கள் ஆகலாம்.
  • ஆளுமை குறைகளை களைதல் முறையை ஒருவர் தொடங்கும்போது, நாளொன்றில் அவ்வாறு 3-5 அமர்வுகள் அளிக்கலாம் என பரிந்துரைக்கிறோம். வசதிக்காகவும் அமர்வு செய்ய மறக்காமல் இருக்கவும், உணவிற்கு பின்பு அமர்வைச் செய்யலாம்.
  • ஓரிரண்டு ஆண்டுகளாக ஒரு ஸாதகர் ஆளுமை குறைகளை களைதல் முறையை பயிற்சித்து வந்தால், நாளொன்றில் 8-10 அமர்வுகள் வரை உயர்த்தலாம்.
  • அமர்வுகளின் எண்ணிக்கை அதிகமாக, ஆளுமை குறைபாடுகளை சமாளிக்கும் செயல்திறனும் அதிகமாகிறது.
  • நினைவில் கொள்ள ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆரம்ப கட்டத்தில் 2 சுய ஆலோசனை அமர்வுகளுக்கு நடுவில், குறைந்தது 2 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். ஏனென்றால், மனம் நிறைவுறாமல் இருப்பதற்கும், கொடுக்கப்பட்ட சுய ஆலோசனையை கிரகிக்கக் கூடியதாக இருப்பதற்கும் ஆகும். நீங்கள் 8-10 சுய ஆலோசனைகள் அளிக்க திட்டமிட்டால், ஒவ்வொரு அமர்வுக்கு உள்ள இடைவெளியை 1 மணி நேரமாக குறைக்கலாம் என்பதை தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும்.
  • நாளொன்றில், இத்தகைய பல 5-7 நிமிட அமர்வுகள், நமது ஆளுமையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். மன அழுத்தம் மற்றும் துக்கத்தில் இருந்து விடுபட வைக்கும்.

4. சுய ஆலோசனை அளிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  1. ஒருவரின் தாய்மொழியில் அல்லது விரும்பும் மொழியில் சுய ஆலோசனைகள் அளிக்கலாம். இதனால் மனம் சுய ஆலோசனையை எளிதில் ஏற்றுக்கொள்ளும்.
  2. அமர்வுகளை தொடங்கும் முன்பு சுய ஆலோசனைகளை யாரிடமாவது திருத்திக் கொள்வது நல்லது. சுய ஆலோசனை எழுதுவது உட்பட ஆளுமை குறைகளை களைதல் முறையின் அனைத்து படிகளிலும் தேவையான உதவியினை எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸத்சங்கங்கள் இலவசமாக வழங்குகிறது. ஏனென்றால் ஏனென்றால், ஒருவரின் சொந்த மனம் என்று வரும்போது, சில சமயங்களில் நடுநிலையாக இருக்க முடியாது.

5. ஒரு தொகுப்பு சுய ஆலோசனைகள் எடுப்பதற்கான கால வரையறை

  • 1-2 ஆளுமை குறைகளுக்கு ஒரு தொகுப்பு சுய ஆலோசனைகள் எழுதலாம் (உதாரணத்திற்கு, பொறாமை மற்றும் மறதியை மாற்ற நினைக்கிறோம் என்றால் ஒவ்வொரு குறைபாட்டிற்கும் ஒரு சுய ஆலோசனை என, ஒரு தொகுப்பு சுய ஆலோசனைகள் எழுதலாம்). இவ்விரண்டு குறைகளுக்கும் எழுதப்பட்ட சுய ஆலோசனைகளை 1-1.5 மாதங்கள் தொடரலாம்.
  • ஒரு குறிப்பிட்ட சுய ஆலோசனைகளின் தொகுப்பை தொடங்கும்பொழுது, 1-2 அமர்வுகள் கொடுத்த பின் ஒருவர் எப்படி உணர்கிறார் என்றும், சுய ஆலோசனையில் வழங்கப்பட்டுள்ள   கண்ணோட்டத்தை மனம் ஏற்கிறதா இல்லையா என்றும் ஆராய வேண்டும்.
    • மனம் ஏற்றுக் கொள்கிறது என்றால் அதே தொகுப்பை 1-1.5 மாதங்கள் வரை தொடரலாம்.
    • இல்லையெனில், மனம் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கவோ அல்லது சில வார்த்தைகளை மாற்றியமைக்கவோ உதவி கேட்கலாம்.
  • 15 -20 நாட்களுக்குப் பிறகு ஒரே மாதிரியான சுய ஆலோசனைகளால் மனம் நிறைவுற்றதாக உணரத் தொடங்கினால், பிற சம்பவங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதே ஆளுமைக் குறைபாடுகளுக்கு ஒரு புதிய தொகுப்பு சுய ஆலோசனைகளை வடிவமைக்க முடியும்.

6. ஒரு அமர்வில் முன்னேற்றம் மற்றும் அவசர சுய ஆலோசனையை இணைத்தல்

6.1 முன்னேற்ற சுய ஆலோசனை

ஆளுமை குறைகளை களைதல் முறையை ஒருவர் பயிற்சிக்க ஆரம்பித்து சுய ஆலோசனை அளிக்கும்போது, தனது ஆளுமையில் நேர்மறையான மாற்றத்தை காணலாம். ஒருவர் மாற்ற முயற்சிக்கும் குறைபாடுகள் குறைய தொடங்கும். மேலும், மற்றவர்களுடன் உரையாடும்பொழுது, அவர்களும் நம்மில் நேர்மறையான மாற்றத்தை காண்பார்கள். இவ்வனைத்து நேர்மறை முன்னேற்றங்களையும் முன்னேற்ற சுய ஆலோசனை என ஒன்றில் சேர்க்கலாம். முன்னேற்ற சுய ஆலோசனைகளை பற்றி மேலும் இங்கே படிக்கலாம் – முன்னேற்ற சுய ஆலோசனை – விரைவில்.

ஒரு அமர்வில் அதன் வரிசை: ஒரு அமர்வில், பிரார்த்தனை மற்றும் நாமஜபத்திற்கு பிறகும், வேறு சுய ஆலோசனைகளுக்கு முன்பும் முன்னேற்ற சுய ஆலோசனையை அளிக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே சொல்ல வேண்டும், பிறகு 5 முறை சொல்ல வேண்டிய மற்ற சுய ஆலோசனைகளை அளிக்கலாம்.

6.2 அவசர சுய ஆலோசனை

அவசர சுய ஆலோசனை என்பது சூழ்நிலை அல்லது நிகழ்வு குறித்த மனதின் எதிரெண்ணத்தை சமாளிக்க அவசரகால சூழ்நிலைகளில் வழங்கப்படுவதாகும். உணர்ச்சி ரீதியான இடையூறுகளை சமாளிக்கவும், ஒருவரின் அமைதியை மீண்டும் பெறவும் அல்லது அவசரநிலைகளுக்கு மனதைத் தயார்படுத்தவும் இவை கொடுக்கப்படும்.

உங்களது தற்போதைய சுய ஆலோசனைகளின் தொகுப்பில், அவசர சுய ஆலோசனைகளின் தயாரிப்பு வகைகளை உங்கள் வழக்கமான சுய ஆலோசனைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். வரிசை பின்வருமாறு :

  1. பிரார்த்தனை
  2. நாமஜபம்
  3. சுய ஆலோசனை அளித்தல்
    1. முன்னேற்ற சுய ஆலோசனை (ஒருமுறை மட்டுமே)
    2. அவசர சுய ஆலோசனை (5 முறை)
    3. முதல் குறைபாட்டிற்கு வழக்கமான சுய ஆலோசனை (5 முறை)
    4. இரண்டாம் குறைபாட்டிற்கு வழக்கமான சுய ஆலோசனை (5 முறை)
  4. நன்றிக்கான பிரார்த்தனை

பிற வகையான அவசர சுய ஆலோசனைகள், நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது அல்லது உடனடி அவசரநிலையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போதே எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், நீங்கள் தற்காலிகமாக மற்ற சுய ஆலோசனைகளை நிறுத்தி அவசர சுய ஆலோசனையை அளிக்க வேண்டும். இங்கு அவசர சுய ஆலோசனையை ஒரு அமர்வுக்கு 3-5 முறை படிக்க வேண்டும். அவசர நிலையை கடந்து வரும்வரை, அடிக்கடி 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கூட அவசர சுய ஆலோசனை அளிக்கலாம். அதன் பிறகு, முன்பு அளித்த சுய ஆலோசனைகளை அளிக்கலாம்.

அவசர சுய ஆலோசனையை பற்றி மேலும் தகவல் இங்கு படிக்கவும் – அவசர சுய ஆலோசனை – விரைவில்.

7. முடிவுரை

தொடர்ந்து மனதிற்கு சுய ஆலோசனை அளித்தால் ஆளுமை குறைகளின் எண்ணப்பதிவுகளின் தாக்கம் குறையும். குறைகளில் இருந்து எழும் தூண்டுதல்கள் ஆணைப்படி போகாமல், மனம் நேர்மறை ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும். நேர்மறை ஆளுமை பண்புகளை உட்செலுத்தி, உங்களது மட்டுமின்றி உங்களுடன் உரையாடும் மற்றவரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த, எளியதானாலும் வலிமையான கருவி இது.

8. பின்னிணைப்பு

தன் நினைவிழந்த நிலைக்குச் செல்லும் இரு வடிவங்களைப் பற்றி இப்பகுதி விளக்குகிறது – சுய மனோவசியம் மற்றும் வெளி மனோவசியம்.

8.1 பின்னிணைப்பு 1 – சுய மனோவசிய பயிற்சி

சுய மனோவசிய நிலை: தானாகவே தூண்டப்பட்ட மனோவசிய நிலை, சுய மனோவசியம் எனப்படும்

பயிற்சி 1 : உடல் மற்றும் மனம் ஓய்வடைதல் – லேசான தன் நினைவிழந்த நிலை நிலை

தன் நினைவிழந்த நிலை ஒன்றிற்கு தூண்டும் விருத்தியடையும் ஓய்வு நுட்பம் : ‘நான் ஒரு புள்ளியை பார்த்துக்கொண்டு எனது எண்ணங்களை பற்றி யோசிக்கிறேன். நான் மேலும் பார்த்து யோசிக்க என் உடல் முழுதும் ஓய்வடைந்து அதன் காரணமாக மனமும் ஓய்வடையும். மிக இனிமையான உணர்வு இது’.

மெதுவாக சுவாசிக்கவும் ……… மூச்சை பிடித்துக்கொள்ளவும் …………. மெதுவாக மூச்சை விடவும் (3 முறை செய்யவும்).
புள்ளியை பார்த்தவாறு, கால்களின் உணர்ச்சியை கவனிக்கிறேன். அவைகள் தளர்வாகிறது. இவ்வுணர்ச்சி மெதுவாக மேலே பரவுகிறது.
என் கணுக்கால் தளர்வாகிறது.
என் முட்டிகள் தளர்வாகிறது.
என் தொடைகள் தளர்வாகிறது.
உடல் முழுவதும் இந்த தளர்வு பரவுகிறது.
என் வயிறு தளர்வாகிறது.
என் முதுகு தளர்வாகிறது.
என் மார்பு தளர்வாகிறது.
தோளில் இருந்து விறல் நுனிகள் வரை கைகள் தளர்வாகிறது.
என் கழுத்து தளர்வாகிறது.
என் தலை தளர்வாகிறது.
என் கண்கள் களைப்படைகிறது. நான் 1, 2, 3 என்று எண்ணப்போகிறேன். 3 எண்ணியவுடன் கண்களை மூடி தளர்வு அடைவேன். எனக்கு நானே ஆலோசனைகள் கொடுத்து முடிய, எனது இச்சைப்படி விழித்திட முடியும். 1…..2…..3 (கண்களை மூடவும்).’

சிகிச்சை பரிந்துரைகள்: பிரச்சனை அல்லது இலக்கை பொறுத்தது.

தன் நினைவிழந்த நிலையிலிருந்து வெளியேறுதல்: ‘நான் இப்போது 1, 2, 3 என்று எண்ணுவேன். 3 எண்ணி முடித்து என் கண்களை திறக்கிறேன். நான் குதூகலமாகவும் ஓய்வாகவும் இருப்பேன். (நீங்கள் ஏக்கத்துடனும் மனச்சோர்வுடனும் இருந்தால், ‘நான் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பேன்’ என்று சொல்வதற்கு பதில் ‘நான் குறைந்த ஏக்கம் மற்றும் மனச்சோர்வுடன் இருப்பேன்’ என்று சொல்லவும்.) நான் அனைத்தையும் நினைவில் கொண்டு அளிக்கப்பட ஆலோசனைகளை நடைமுறை படுத்துவேன். அடுத்த முறை அதிக ஆழமான தன் நினைவிழந்த நிலைக்கு என்னால் செல்ல முடியும். 1 …… 2 …… 3 (கண்களை திறக்கவும்).’

பயிற்சி 2: ஆழ்ந்த தன் நினைவிழந்த நிலை

நிபந்தனையுடன் எண்ணும் நுட்பம் இங்கு ஒருவர் சுவற்றில் உள்ள புள்ளியை பார்த்தவாறு வசதியாக அமர்ந்து கீழ்கண்ட வாக்கியங்களை சிந்திக்க வேண்டும் :

தன் நினைவிழந்த நிலை தூண்டுதல் மற்றும் ஆழப்படுத்துதல்: ‘இப்போது நான் 1- இல் இருந்து 10 வரை எண்ணுவேன். 3 எண்ணியவுடன் கண்களை மூடி தளர்வடைவேன். அடுத்தடுத்து வரும் எண்ணிக்கையில் மேலும் தளர்வு அடைவேன். 10 எண்ணிய பின்பு மிக ஆழமான இயன்ற தளர்வு நிலைக்கு சென்று நான் யோசிப்பதை முழுமையாக கவனிக்க முடியும். 1…..2……3…..(கண்களை மூடவும்) 4….. 5….. 6……7……8….. 9……10’.

சிகிச்சை பரிந்துரைகள்: பயிற்சி 1- ஐ போல.

தன் நினைவிழந்த நிலையிலிருந்து வெளியேறுதல்: பயிற்சி 1- ஐ போல.

நிபந்தனையுடன் எண்ணும் நுட்பத்தின் நன்மைகள்

  1. இவ்வமர்வுகளை ஒருவர் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் – பேருந்து, இரயில், அலுவலகம் போன்று, ஏனென்றால் கைகளை சுற்றுவது, விரல்களை இறுக்கி மூடுவது போன்ற இயக்கங்கள் இல்லை. ஆகையால் நாளொன்றுக்கு அமர்வுகளை உயர்த்தலாம். அதிக அமர்வுகள் செய்தால் இலக்கை விரைவில் அடையலாம்..
  2. ஒருவருக்கு பயிற்சி 1- ஐ செய்ய 3 நிமிடங்கள் எடுக்கும். மறுபுறம் இந்நுட்பம் தன் நினைவிழந்த நிலையை தூண்ட 20 நொடிகள் மட்டுமே எடுக்கும். தூண்டுதலின் நேரக்குறைவு 2 வழிகளில் உதவும்.
    1. அவசரகாலத்தில், உதாரணத்திற்கு தேர்வு அல்லது நேர்முகத்தேர்விற்கு முன்பு பதட்டம் அடையும்போது பயிற்சி 1 செய்வதைவிட 1- இல் இருந்து 10 எண்ணுவது மிக சுலபம்.
    2. பொதுவாக சிகிச்சை அமர்வுகள் 5-6 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஏனென்றால் பல நோயாளிகளுக்கு ஆலோசனையில் கவனம் செலுத்த கடினமாகிவிடும். தன் நினைவிழந்த நிலை தூண்டுதல் மற்றும் ஆழப்படுத்துதலுக்கே 3 நிமிடங்கள் செலவழித்தால் சிகிச்சை பரிந்துரைக்கு 2-3 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். மறுபுறம், நிபந்தையுடன் எண்ணும்  நுட்பத்தை ஒருவர் உபயோகித்தால் அனைத்து 5-6 நிமிடங்களும் சிகிச்சை பரிந்துரைக்கு அளிக்கலாம்.

8.2 பின்னிணைப்பு 2 – வெளி மனோவசிய பயிற்சி

வெளி மனோவசியம் : இது மற்றவரால், பதிவு செய்யப்பட குறுவட்டு, ஒலிநாடா, காணொலி அல்லது ஈடான தொழில்நுட்பங்களால் தூண்டப்பட்ட மனோவசியம் ஆகும். ஒரு நபருக்கு உளவியலாளரால் தன் நினைவிழந்த நிலை அடைய உதவும் வகையில் வழிகாட்டப்பட்ட சுய மனோவசியம் ஆகும்.

பயிற்சி 1 : உடல் மற்றும் மனம் தளர்வு –  மென் தன் நினைவிழந்த நிலை

முன்னேறும் ஓய்வடைதல்  நுட்பம்

தன் நினைவிழந்த நிலையை தூண்டுதல் : ‘நீங்கள் புள்ளியை பார்த்தவாறு என் குரலையும் கேட்கிறீர்கள். நீங்கள் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கையில் உடல் முழுதும் ஓய்வடையும், அதனால் மனமும் ஓய்வடையும். இது சுகமான அனுபவம்’.

மெதுவாக சுவாசிக்கவும் ……… மூச்சை பிடித்துக்கொள்ளவும் ……… மெதுவாக மூச்சை விடவும் (3 முறை செய்யவும்).
புள்ளியை பார்த்தவாறு கால்களின் உணர்ச்சியை கவனியுங்கள். அவைகள் தளர்வாகிறது. இவ்வுணர்ச்சி மெதுவாக மேலே பரவுகிறது.
உங்கள் கணுக்கால் தளர்வாகிறது.
உங்கள் முட்டிகள் தளர்வாகிறது.
உங்கள் தொடைகள் தளர்வாகிறது.
உடல் முழுவதும் இந்த தளர்வு பரவுகிறது.
உங்கள் அடிவயிறு தளர்வாகிறது.
உங்கள் முதுகு தளர்வாகிறது.
உங்கள் மார்பு தளர்வாகிறது.
தோளில் இருந்து விறல் நுனிகள் வரை கைகள் தளர்வாகிறது.
உங்கள் கழுத்து தளர்வாகிறது.
உங்கள் தலை தளர்வாகிறது.
உங்கள் கண்கள் களைப்பாகிறது. நான் 1, 2, 3 என்று எண்ணப்போகிறேன். 3 எண்ணியவுடன் கண்களை மூடி நான் சொல்வதை தொடர்ந்து கேட்கவும். 1…..2…..3 (கண்களை மூடவும்).’

சிகிச்சை பரிந்துரைகள் : பிரச்சனை அல்லது இலக்கை பொறுத்தது.

தன் நினைவிழந்த நிலையிலிருந்து வெளியேறுதல் : ‘நான் இப்போது 1, 2, 3 என்று எண்ணுவேன். 3 எண்ணி முடித்து உங்கள் கண்களை திறக்கவும். நீங்கள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். (நோயாளி ஏக்கத்துடனும் மனச்சோர்வுடனும் இருந்தால், ‘நீங்கள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்’ என்று சொல்வதற்கு பதில் ‘நீங்கள் குறைந்த ஏக்கம் மற்றும் மனச்சோர்வுடன் இருப்பீர்கள்’ என்று சொல்லவும்.) நீங்கள் அனைத்தையும் நினைவில் கொண்டு அளிக்கப்பட ஆலோசனைகளை நடைமுறை படுத்துவீர்கள். அடுத்த முறை அமர்வு நடத்தும்போது அதிக ஆழமான தன் நினைவிழந்த நிலைக்கு நீங்கள் செல்வீர்கள். 1……2……3 (கண்களை திறக்கவும்)’.

பயிற்சி 2 : ஆழ்ந்த தன் நினைவிழந்த நிலை

நிபந்தனையுடன் எண்ணும் நுட்பம் நோயாளிக்கு கீழ்கண்ட வாக்கியங்களை சொல்லும்போது அவரை வசதியாக அமரச்சொல்லி புள்ளியை பார்க்கச் சொல்லவும்.

தன் நினைவிழந்த நிலை தூண்டுதல் மற்றும் ஆழப்படுத்துதல் : ‘இப்போது நான் 1- இல் இருந்து 10 வரை எண்ணுவேன். 3 எண்ணியவுடன் கண்களை மூடி தளர்வடைவீர்கள். அடுத்தடுத்து வரும் எண்ணிக்கையில் மேலும் தளர்வு அடைவீர்கள். 10 எண்ணிய பின்பு நீங்கள் மிக ஆழமான இயன்ற தளர்வு நிலைக்கு சென்று நான் சொல்வதை முழுமையாக கவனிக்க முடியும். 1……2……3 (கண்களை மூடவும்)…..4……5……6……7 ……8……9 ……10’.

சிகிச்சை பரிந்துரைகள் : பயிற்சி 1- ஐ போல