ஆன்மீக பயிற்சியினை (ஸாதனை) தொடர்ச்சியாக செய்வதன் முக்கியத்துவம் பற்றி SSRF இந்த இணையதளம் முழுவதும் வலியுறுத்துகிறது.

நீங்கள் உங்கள் ஆன்மீக பயணத்தை (ஆன்மீக பயிற்சி) இன்றே துவங்க என்ன செய்யலாம் என்ற புரிதலை கொடுப்பதே இப்பகுதியின் நோக்கமாகும்.

SSRF பரிந்துரைப்பது யாதெனில் நீங்கள் எந்த மதத்தினை சார்ந்தவராக இருப்பினும் பின்வரும் 3 விஷயங்களை உடனே கடைப்பிடிப்பதன் மூலம் உங்களது ஆன்மீக பயணத்தினை துவங்கமுடியும் அல்லது பூரணப்படுத்த முடியும்.

1. நீங்கள் பிறந்த மதத்திற்குரிய இறைவனின் நாமத்தை ஜபித்தல்

நமது ஆன்மீக பயணத்தை துவங்குவதற்கு நாம் பிறந்திருக்கும் மதமே தகுந்த சூழலை அளிக்கிறது. அவ்வாறே நமது மதத்தின் வழிபாட்டு தெய்வமே நம்முடைய ஆன்மிக வளர்ச்சிக்கு அக்கட்டத்தில் உறுதுணை புரிகிறது. ஒவ்வொரு மதத்தின் பல்வேறு இறை நாமங்கள் ஒரே பரமாத்மாவின் பல்வேறு தத்துவங்களின் பிரதிநிதிகளாக உள்ளன. நாம் பிறந்துள்ள மதத்திற்குரிய தெய்வத்தின் நாமத்தை திரும்பத்திரும்ப உச்சரிக்கும்பொழுது அத்தெய்வ தத்துவமானது அழைக்கப்பட்டு அதனுடைய தெய்வ சக்தியை ஈர்க்க முடிகிறது. இது நம் எல்லோருக்கும் அவசியமான பொதுவான ஆன்மீக மருந்தொன்றை உட்கொள்ளுவதற்கு சமமாகும்.

நாம் பிறந்துள்ள மதத்திற்கேற்ப உச்சரிக்க வேண்டிய இறைநாமங்களின் சில உதாரணங்களை பார்ப்போம்.

எந்த இறைநாமத்தை ஒருவர் ஜபிக்க வேண்டும்?

பிறந்த மதம் ஜபிக்க வேண்டிய இறை நாமம்
பெளத்தம் ஓம் மணி பத்மே ஹம், நமோ புத்தாய
கிறிஸ்தவம் ரோமன் கத்தோலிக்கம் – அருள் நிறைந்த மரியே வாழ்க மற்றும் வேறு கிறிஸ்துவ பிரிவினர்கள் – கர்த்தராகிய யேசு
ஹிந்து

குல தெய்வத்தின் நாமம். குல தெய்வம் பற்றி தெரியாவிடில் ஸ்ரீ குல தேவதாயை நமஹ எனும் நாமத்தை உச்சரிக்க வேண்டும்

குலதெய்வத்தின் நாமத்தை ஜபிக்கும் முறை : குலதெய்வ நாமத்தின் முன் ஸ்ரீ சேர்த்து நான்காம் வேற்றுமையில் நாமத்தை உச்சரித்து இறுதியில் நமஹ என்று முடிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு : குலதெய்வம் கணபதியாக இருந்தால், ‘ஸ்ரீ கணேஷாய நமஹ’; பவானியாக இருந்தால் ‘ஸ்ரீ பவானி மாதாயை நமஹ’ அல்லது ‘ஸ்ரீ பவானி தேவ்யை நமஹ’ என்று ஜபிக்க வேண்டும்.

இஸ்லாம் யா அல்லாஹ், அல்லாஹு அக்பர், ரஹீம் முதலியன.
ஜைன் நவகார் மந்திரம் (ஓம் நமோ அரிஹந்தானம்)
யூதர் ஜெஹோவா, யாவே, அடோனை அல்லது யூத மதத்தைச் சார்ந்த பல நாமங்களில் ஏதேனுமொன்று
சீக்கியர் வாஹே குரு, ஸ்ரீ வாஹே குரு, சுக்மணி சாஹேப், ஜபஜி சாஹேப்
ஜோராஸ்ட்ரியன் 101 நாமங்கள் உள்ளன. ஸாதகர் தியானத்தின் மூலம் கிடைக்கும் எண்ணிற்குரிய நாமத்தை ஜபிக்க வேண்டும்.

நாமஜபம் செய்வதற்கான சில குறிப்புகள் :

1. உங்களுடைய வசதிப்படி நாமஜபம் செய்யுங்கள்: நீங்கள் மனதிற்குள்ளோ, வாய்மொழியாகவோ அல்லது ஜபமாலையின் துணையுடனோ நாமஜபம் செய்யலாம். உங்களுக்கு வசதியான முறை எதுவோ அதை தேர்ந்தெடுக்கலாம்.
2. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்: நீங்கள் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு இடத்திலும் நாமஜபம் செய்யலாம். உதாரணத்திற்கு, வேலைக்கு செல்லும்பொழுது, சமைக்கும்பொழுது அல்லது செல்லப்பிராணியை நடப்பதற்கு  கூட்டிச்செல்லும் பொழுதுகூட நாமஜபம் செய்யலாம்.
3. நாமஜபத்தின் அளவு: எவ்வளவு அதிக அளவு நாமஜபம் செய்கின்றீர்களோ அவ்வளவு அதிக அளவு ஆன்மீக அனுகூலம் கிடைக்கின்றது. தினமும் ஐந்து நிமிடம் துவங்கி படிப்படியாக இரு மாதங்களுக்குள் சில மணிநேரம் வரை அதிகரியுங்கள். சமையல் போன்ற மற்ற வேலைகளை செய்யும்போதும் நாமஜபத்தை மேற்கூறியவாறு பல பகுதிகளாக செய்யலாம்.
4. நாமஜபத்தில் ஒழுங்குமுறையினை கடைப்பிடியுங்கள்: உண்மையான முயற்சியுடன் தினந்தோறும் செய்யப்படும் நாமஜபத்தால் உங்கள் வாழ்வில் நீண்ட காலமாக உணர்ந்திராத அமைதியுணர்வு அல்லது உலக வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற நன்மைகளை அடையமுடியும்.

இறுதியாக : இந்த ஆன்மீக பயிற்சியில் உங்களாலான மிகச்சிறந்த முயற்சியை குறைந்தது ஆறு மாதங்களாவது மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை நீங்களே உணர்வீர்கள்.

2. மூதாதையர் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் நாமஜபம்

இன்றைய உலகில் நம்மில் பெரும்பான்மையினர் ‘மூதாதையர் பிரச்சினை’ எனும் விஷயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூதாதையர் பிரச்சினை எனும் பகுதியில் இது பற்றிய ஆழ்ந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

தத்தாத்ரேயரின் நாமத்தை (அதாவது மூதாதையர்களின் பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும் இறை தத்துவம்) உச்சரிப்பதால்  இப்பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பினை பெறமுடியும்.

‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்பதே இதற்குரிய மிகச்சரியான நாமஜபமாகும். இந்த பாதுகாப்பளிக்கின்ற நாமஜபத்தை கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்தவும்.

‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபம் செய்வதற்கான சில குறிப்புகள்:

  • அளவு : மூதாதையர் பிரச்சனைகளால் ஏற்படும் துயரத்தின் தீவிரத்திற்கீடான அளவு ஸ்ரீ குருதேவ தத்த நாமஜபம் செய்வதற்கு நாம் பரிந்துரைக்கிறோம். மூதாதையரினால் ஏற்படும் துன்பம்/பிரச்சனைகள் பற்றி அறிந்துக்கொள்ள ‘மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் என்ன‘ என்கின்ற கட்டுரையை வாசியுங்கள்.
    1. துன்பமேதும் இல்லாவிடில் அல்லது குறைவான துன்பத்தினை எதிர்கொண்டால், வருங்காலத்தில் இவ்வகையான தொந்தரவுகளை தவிர்க்க 1-2 மணிநேரம் வரை தினமும் இந்நாமத்தை ஜபிக்கவேண்டும்.
    2. நடுத்தர அளவிளான துன்பமாக இருந்தால், 2-4 மணிநேரம் வரை தினமும் ஜபம் செய்யவேண்டும்.
    3. தீவிரமான துன்பத்தை எதிர்நோக்கினால் 4-6 மணிநேரம் வரை தினமும் தத்த நாமஜபம் செய்யவேண்டும்.

    குறிப்பு : சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட நாமஜபத்தின் அளவு மேற்குறிப்பிட்டவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் வருங்காலத்தில் மூதாதையர் மற்றும் தீய சக்திகளால் அதிகரிக்கக்கூடிய துன்பத்தினை கருத்தில்கொண்டு நாமஜபத்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  • உங்கள் வசதிக்கேற்றவாறு : ஒரு அமர்விலோ அல்லது பல அமர்வுகளிலோ இதனைச்செய்யலாம்.

3. ஆன்மீக ஞானத்தை வளர்த்துக்கொள்ளுதல்

படித்தல் : தினமும் ஆன்மீக பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி உணர்ந்துகொள்ள மற்றும் உங்களுடைய ஆன்மீக பாதையில் ஏற்படக்கூடிய ஐயங்களை தெளிவுபடுத்துவதற்கு ஆன்மீக விஞ்ஞானத்தின் பல்வேறு அம்சங்களை முறையாக படித்தல் உதவுகின்றது. பின்வரும் பகுதிகள் அல்லது கட்டுரைகளை நீங்கள் வாசிப்பதற்கு பரிந்துரை செய்கின்றோம்.

குறிப்பு : ஆன்மீக பயிற்சியினை துவங்கியபின் உங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் ஐயங்களை தயைகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.