தனியுரிமைக் கொள்கை

1. அறிமுகம்

ஆன்மிக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையில் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) நாங்கள் உங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கொள்கைக்கு இணங்க கடமைப்பட்டுள்ளோம். இனிமேல் இது தனியுரிமைக் கொள்கை என்றும் குறிப்பிடப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் இணையதளத்தை [டெஸ்க்டாப் (Desktop) அல்லது மொபைல் (Mobile)] பயன்படுத்துவதன் மூலம், இனி இது “தளம்” அல்லது “இணையதளம்” அல்லது “எங்கள் இணையதளம்” என்றும் குறிப்பிடப்படும், இந்த தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.

எங்கள் இணையதளம், லைவ்சாட் வசதிகள், உங்கள் கருத்தை இடுதல், எங்கள் ஆன்லைன் கடையில் வாங்குதல், நன்கொடை வழங்குதல் அல்லது நீங்கள் பதிவுசெய்தல் மற்றும்/அல்லது எங்கள் ஆன்லைன் நிகழ்வுகளில் (பட்டறைகள் நேரடி ஒளிபரப்புகள், கூட்டங்கள், விரிவுரைகள் போன்றவை) கலந்துகொள்ளும்போது நாங்கள் சேகரிக்கும் தகவல் மற்றும் தரவின் வகையை இந்தக் கொள்கை கோடிட்டுக் காட்டுகிறது.

சேகரிக்கப்படும் தரவு தொடர்பாக எங்களிடம் உள்ள சேகரிப்பு, பயன்பாடு, சேமிப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வெளிப்படுத்தல் நடைமுறைகளையும் இந்தக் கொள்கை விளக்குகிறது.

நாங்கள் சேகரிக்கும் தரவுகளில் பெரும்பாலானவை நேரடியாக உங்களால் வழங்கப்படுகின்றன, குறிப்பாக தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் தொடர்பானவை. சில தரவு உங்கள் அனுமதியின்றியும்  சேகரிக்கப்படுகிறது, ஏனெனில் வலைத்தளத்தை  உள்ளுணர்வுடனும் மற்றும் பயன்படுத்த எளிதாகவும் உருவாக்குவது அவசியம்.

எங்களின் சில கட்டுரைகளில்  இணைக்கப்பட்டுள்ள எந்த வெளிப்புற இணையதளங்களும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் தனியுரிமைக் கொள்கையின் கீழ் வராது – நீங்கள் அந்த இணையதளங்களைப் பார்வையிடும் பட்சத்தில், அவற்றின் தனியுரிமைக் கொள்கைகளைப் படிக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம், ஏனெனில் நீங்கள் வெளிப்புற இணையதளத்திற்கு செல்லும்போது அவற்றின் கொள்கைகளே அங்கு  பொருந்தும்.

எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கிறோம், மேலும் அனைத்து மாற்றங்களும் இந்த வலைப்பக்கத்தில் பிரதிபலிக்கும். இந்தக் கொள்கை கடைசியாக ஏப்ரல் 6, 2022 அன்று புதுப்பிக்கப்பட்டது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விஷயங்களைப் பற்றிய விசாரணைகளை நீங்கள் சமர்ப்பிக்கலாம், அத்துடன் [email protected] இல் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் முன்னர் வழங்கப்பட்ட ஒப்புதலை திரும்பப் பெறலாம்.

2. எங்களைப் பற்றி: 

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை(எஸ். எஸ். ஆர்.எஃப்) ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது;

  • ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்துடன் (ASIC) ABN 49 119 742 291
  • ஐக்கிய அமெரிக்காவில், நியூஜெர்சி மாநிலத்தில் எண்: 0400176958
  • ஜெர்மனியில் உள்ளூர்நீதிமன்றத்துடன், சீக்பர்க்சங்கங்களின் பதிவு எண். VR 6298
  • குரோஷியாவில், குரோஷியா குடியரசின் சங்கங்களின் பதிவேட்டுடன், பதிவு எண் கீழ் 21012023

3. நாங்கள் என்ன தரவு சேகரிக்கிறோம்?

நீங்கள் வழங்கும்  தகவல்:

  • உங்களால் வெளிப்படுத்தப்படும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய பின்வரும் தகவல்கள் (உதாரணத்திற்கு; ஒரு கணக்கிற்கு தானாக முன்வந்து பதிவு செய்யும் போது, ​​நிகழ்வுகளுக்கு பதிவு செய்யும்போது, வாட்ஸாப் விழிப்பூட்டல்கள், பொருட்களை வாங்கும் போது, லைவ் சாட் அல்லது லாகின் (உள்நுழைவு) மூலம் கேள்விகளைச் சமர்ப்பித்தல், எஸ்.எஸ்.ஆர்.எஃப். லிருந்து இணையதள தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல் போன்றவை) அடங்கும் (ஆனால் இவை மட்டும் அல்ல)  :
    • பெயர்
    • பிறந்த வருடம்
    • சேரும் முகவரி
    • பில்லிங் முகவரி
    • மின்னஞ்சல் முகவரி
    • எஸ்.எஸ்.ஆர்.எஃப். கணக்கு கடவுச்சொல் (password)
    • தொலைபேசி எண்
    • கிரெடிட் கார்டு தகவல்
    • நன்கொடை விருப்பத்தேர்வுகள் மற்றும் கேள்விகள் போன்ற எங்கள் இணையதளத்தில், உங்களுக்கு விருப்பமான பகுதிகள் தொடர்பான பிற பொதுவான தகவல்கள்.
  • பின் வருவது போன்ற இரகசிய மில்லாத தகவல்கள்:
    • எங்களின் கருத்துகள் தெரிவிக்கும் வசதி மூலம் நீங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் எந்த தகவலும்
  • தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத பிற தகவல்கள்:
    • ISPயின் IP முகவரிகள்.
    • நீங்கள் பயன்படுத்தும் உலாவியின் (browser) வகை மற்றும் பதிப்பு
    • புவியியல் இருப்பிடம், நகரம், மாநிலம் அல்லது நாடு
    • செலவழித்த நேரம் மற்றும் பார்வையிட்ட பக்கங்கள் போன்ற எங்கள் இணையதளத்தில் உங்களின் பயன்பாட்டு நடத்தை
    • தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலாகக் கருதப்படாத இணையதளத்தின் பயன்பாடு தொடர்பான பிற தகவல்கள்
  • நீங்கள் எஸ்.எஸ்.ஆர்.எஃப். இன் இணையதளத்தைப் பார்வையிடும்போது உள்நுழைந்துள்ள பிற தகவல்கள்:
    • எஸ்.எஸ்.ஆர்.எஃப். இன் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் முன்பே ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றிய தகவல்.

உங்கள் கருத்துகளை பதிவிடும்  செயல்பாடு போன்ற எங்கள் சேவைகள் மூலம் பொதுமக்கள்  தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை நீங்கள் வெளியிட வேண்டாம் அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

3.1 உங்கள் தரவைச் சேகரித்தல்

சில சமயங்களில், உங்கள் தரவை (தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்) நீங்கள் ஒப்புதல் அளித்திருந்தால் (உதாரணத்திற்கு; செய்தி மடலுக்கு மற்றும் உங்கள் கணக்கிற்கு  பதிவு செய்யும் போது, நன்கொடை அளிக்கும் போது  அல்லது பொருட்களை வாங்கும் போது)  நாங்கள் செயலாக்குவோம். நீங்கள் ஒப்புதலைத் தடுத்து நிறுத்தத் தேர்வுசெய்தால், உங்கள் தரவு சேவையின் செயல்திறனுக்கு முற்றிலும் அவசியமாக உள்ள சேவைகளில் சில, உங்களுக்கு முழுமையாகச் செயல்படாமல் போகலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதுமட்டுமல்லாமல், எஸ்.எஸ்.ஆர்.எஃப்.  இணையதளத்தில் பயன்படுத்தப்படும் சில குக்கீஸ்  மற்றும் தரவு செயலாக்கக் கருவிகள், சரியான இணையதளச் செயல்பாட்டை உறுதிசெய்யவும்  (உதாரணத்திற்கு, லைவ்சாட்), உங்கள் தரவைப் பாதுகாக்கவும், சந்தேகத்திற்குரிய மோசடி மற்றும்/அல்லது தரவு மீறல்களைக் கண்டறிந்து புகாரளிக்கவும் அவசியமானவை. இவை உங்கள் சம்மதம் இல்லாமலும் சில  தரவை  சேகரிக்கலாம். இந்தத் தரவு தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத வகையைச் சேர்ந்தது மற்றும் சேகரிக்கப்படும் கட்டத்தில் அநாமதேயமாக அதாவது  தொடக்கத்திலிருந்து இறுதி வரை உங்கள்  தடத்தை மீண்டும் அடையாளம் காணாத வகையில்  ஒரு குறியாக்கத்துடன் பாதுகாக்கப்படுகிறது.

சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பொறுத்து, சில உங்களால் நேரடியாக வழங்கப்படுகின்றன, சில குக்கீஸ்  மூலமும், மேலும் சில தரவு மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படுகிறது. விவரங்கள் அறிய கீழே உள்ள தகவல் பகிர்தல் பக்கத்தையும், குக்கீ கொள்கையையும் படிக்கவும்.

3.2 உங்கள் தரவைப் பயன்படுத்துதல்

நாங்கள் சேகரிக்கும் அல்லது பெறும் தகவலை பின்வரும் வழிகளில் நாங்கள் பயன்படுத்தலாம்:

  • எஸ்.எஸ்.ஆர்.எஃப்.  மற்றும் எங்கள் துணை நிறுவனங்களின் நிகழ்வுகள், புதிய கட்டுரைகள் மற்றும்/அல்லது செய்திமடலைப் பற்றிய எங்கள் மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் விழிப்பூட்டல்களை உங்களுக்கு அனுப்ப, நீங்கள் அவற்றின் குழுவில் சேர்ந்திருந்தால் (தேர்வு செய்திருந்தால்). தளத்துடன் தொடர்புடைய புதிய செயல்பாடுகள் அல்லது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அறிமுகம்/நினைவூட்டல்களை அனுப்ப .
  • தனிப்பட்ட கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கு பதில் அளிக்கும் போது.
  • எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஆன்லைன் கடை  (SSRF online shop) மூலம் பெறப்பட்ட பொருட்கள்   மற்றும் சேவைகளுக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும் மற்றும் அவற்றை நிறைவேற்றவும். எங்கள் சார்பாக பணம் வசூலிக்க ஆர்டர் விவரங்களை ஆன்லைன்  கட்டண நுழைவாயில்களுக்கு (payment gateways) அனுப்புவோம்.
  • உங்கள் ஆர்டர்கள், நன்கொடைகள் மற்றும் நிகழ்வுப் பதிவுகளின் நிலை பற்றி, அவற்றின் நிறைவு உட்பட உள்ள தகவல்களுக்கு உங்களைத் தொடர்புகொள்வதற்கும், ஆனால் அதற்கு மட்டுமல்லாமலும்.
  • நீங்கள் பதிவுசெய்யப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப். உறுப்பினராக இருந்தால் கணக்கெடுப்பு நிறைவு செய்யவும். பங்கேற்பதோ  கருத்துக்களை வழங்குவதோ  உங்கள் விருப்பத்தை பொறுத்தது.
  • ஏதேனும் தரவு மீறல்கள், உங்கள் கணக்குகளில் உள்ள சிக்கல்கள், மோசடிச் செயல்பாட்டைக் குறியிடுவதற்கும்.
  • பயன்படுத்துபவரின் அனுபவத்தை மேம்படுத்த.
  • எஸ்.எஸ்.ஆர்.எஃப். இல் அல்லது  எஸ்.எஸ்.ஆர்.எஃப். பற்றியோ எந்த இடத்திலும் புண்படுத்தும், பொருத்தமற்ற அல்லது ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், அல்லது தளத்தில் ஏதேனும் இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதற்கு பதிலளிக்கும் வகையில்.
  • சட்டக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், நாங்கள் சப்போனா அல்லது பிற சட்டக் கோரிக்கையைப் பெற்றால் அதைத் தடுப்பதற்கும், எவ்வாறு பதிலளிப்பது என்பதைத் தீர்மானிக்க நாங்கள் வைத்திருக்கும் தரவைச் சரிபார்க்க வேண்டியிருக்கும்.

பின்வரும் சில சிறப்பு சூழ்நிலைகளில், உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் வெளியிட வேண்டியிருக்கலாம்:

  • சட்ட அதிகாரிகளுக்கு இணங்க (உதாரணத்திற்கு  நீதிமன்ற உத்தரவுகள், அரசாங்க கோரிக்கைகள், ஒழுங்குமுறை நோக்கங்கள்)
  • எஸ்.எஸ்.ஆர்.எஃப், அதனை பயன்படுத்துவோர் அல்லது பிறரின் நலன்கள், சொத்து மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க அல்லது இணையதளக் கொள்கைகளைச் செயல்படுத்த.

கட்டண நுழைவாயில்கள் மற்றும் எங்கள் சேவைகளுக்கு உதவும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்குத் தேவையானதைத் தவிர, உங்கள் தரவை எந்த மூன்றாம் தரப்பினருக்கும் விற்கவோ அல்லது பகிரவோ மாட்டோம்.

3.3 உங்கள் தரவைச் சேமித்தல்

இணையம் 100% பாதுகாப்பாக இல்லை என்றாலும், நாங்கள் செயலாக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பையும் குறித்து  வடிவமைக்கப்பட்ட பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.

எங்கள் வலைத்தளத்திற்கும்  மற்றும் அதிலிருந்தும்  தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் செய்வது உங்கள் சொந்த ஆபத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். பாதுகாப்பான சூழலில் மட்டுமே நீங்கள் எந்த இணையதளத்தையும் அணுக வேண்டும்.

ஃபயர்வால்கள் (Firewalls), கடவுச்சொல் அணுகல் மற்றும் பாதுகாப்பான சேவையகங்கள் மற்றும் தரவு குறியாக்கத்தின் குறியாக்கம் உட்பட, தவறான பயன்பாடு, இழப்பு அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் ஆகியவற்றிலிருந்து உங்கள் PII ஐ ஸ்தூல , மின்னணு மற்றும் நிர்வாக மட்டத்தில் பாதுகாப்பதற்காக எங்களிடம் நடவடிக்கைகள் உள்ளன:

  • ஸ்தூல பாதுகாப்பு: எஸ்.எஸ்.ஆர்.எஃப் இணையதளம், ஃபயர்வால் வசதிகளை உள்ளடக்கிய மிகவும் பாதுகாப்பான தரவு மையத்தில் உள்ள சர்வர்களில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
  • ஏதேனும் மாற்றங்களைச் செய்ய ஹோஸ்டிங் வழங்குநரால் வழங்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பலகத்தைப் பயன்படுத்துகிறோம். சர்வரிலேயே கையால் மாற்றங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை.
  • வெப் அப்ளிகேஷன் பையர்வாலைப் பயன்படுத்துகிறோம். இணையதளத்தில் உள்ள அனைத்து கோரிக்கைகளும் இந்த ஃபயர்வால் வழியாக செல்கின்றன. இது உங்கள் தரவின் கூடுதல் பாதுகாப்பு அடுக்காகச் செயல்படுகிறது.
  • எஸ்.எஸ்.ஆர்.எஃ ஆனது லாகின், பதிவு, கடை, நிகழ்வுகள் போன்ற முழு இணையதளத்திலும் TLS சான்றிதழ்களுடன் HTTPS பாதுகாப்பான நெறிமுறையைப் பயன்படுத்துகிறது.
  • எங்கள் தரவுத்தளங்களைப் பார்க்க, நீக்க அல்லது மாற்ற, வலுவான கடவுச்சொற்களைக் கொண்ட உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்துகிறோம்
  • இணையதளத்துடன் தொடர்பு கொள்ள உதவும் அனைத்து கடவுச்சொற்களையும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் குறியாக்குகிறது. கடவுச்சொற்களின் பரிமாற்றம், அங்கீகாரம் மற்றும் சேமிப்பு  ஆகியவை இதில் அடங்கும். இதன் பொருள் எங்கள் ஊழியர்கள் யாரும் உங்கள் கடவுச்சொற்களைப் பார்க்க முடியாது.
  • உங்கள் கடவுச்சொற்களை நாங்கள் குறியாக்கம் செய்கிறோம், இதனால் தகவல் இணையத்தில் பயணிக்கும் போது அல்லது எங்கள் சேவையகங்களில் இருக்கும் போது அதைப் படிக்க முடியாது.
  • எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் தரவுத்தளமானது தொடர்ச்சியான அதிநவீன மென்பொருள் பாதுகாப்பு நிரல்களால் அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
  • கிரெடிட் கார்டு தகவல்
    • எந்த கிரெடிட் கார்டு விவரங்களையும் எங்கள் இணையதளத்திலோ அல்லது எங்கள் சர்வரிலோ சேமித்து வைக்கக் கூடாது என்பதை நாங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளோம்.
    • நாங்கள் ஆன்லைன் பேமெண்ட் கேட்வே முறையைப் பயன்படுத்துகிறோம், மேலும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனையின் போது நீங்கள் வழங்கும் உங்களின் நிதித் தகவல் அந்த வழங்குநர்களுக்கு மட்டுமே தெரியும்.
    • ஏதேனும் தன்னியக்க நிரப்புதல் விருப்பங்கள் உங்கள் உலாவியில் அல்லது நிதி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் நிறுவனத்தின் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும்
  • உங்கள் தரவுக்கான அணுகல்
    • எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆனது, உங்கள் சேவைகள் அல்லது பொருட்களுக்கான  கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய எஸ்.எஸ்.ஆர்.எஃப் பிரதிநிதிகளுக்கு உங்கள் தனிப்பட்ட தகவலுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
    • இந்தப் பணிகளைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கும் மட்டுமே கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகல் வழங்கப்படும்.
  • வழக்கமான மதிப்பாய்வு:
    • அவ்வப்போது, ​​எங்கள் செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தின் நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்காக மதிப்பாய்வு செய்யப்படுகின்றது
    • இந்தக் கொள்கை அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம், எனவே இந்த அறிக்கையை அவ்வப்போது சரிபார்க்கவும், ஏனெனில் எங்கள் சமீபத்திய கொள்கைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்வது உங்கள் பொறுப்பாகும்.
  • எங்களிடமிருந்து உங்களைத் துண்டிக்குமாறும், இனி எங்கள் தரவுத்தளத்தில் இருக்க வேண்டாம் என்றும் நீங்கள் எங்களிடம் குறிப்பாகக் கேட்டால் அன்றி, உங்கள் தகவலை அகற்றுவது அவசியம் என்பதை நாங்கள் தீர்மானிக்கும் வரை உங்கள் தகவலை எங்கள் கணினிகளில் வைத்திருப்போம்.
  • வரி மற்றும் சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக எஸ்.எஸ்.ஆர்.எஃப் கடையின் மூலம் செயலாக்கப்பட்ட தரவை 7 ஆண்டுகளுக்கு நாங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் கடையில் உள்ள உங்கள் தரவைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கவலை இருந்தால், நீங்கள் எங்களை [email protected] இல் தொடர்பு கொள்ளலாம், குறிப்பாக கோரிக்கை எஸ்.எஸ்.ஆர்.எஃப் கடை பற்றியது என்பதைக் குறிப்பிடலாம்.

சர்வர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சர்வர்களில் சேமிக்கப்படும். இரண்டாவது சேவையகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அமைந்துள்ள சந்தர்ப்பங்களில், அது தனியுரிமைக் கவசக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து எங்கள் சேவைகளை அணுகினால், உங்கள் தகவல் எங்களால் மற்றும் தரவு பகிர்வு பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மூன்றாம் தரப்பினரால் மாற்றப்படலாம், சேமிக்கப்பட்டு மற்றும் செயலாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

3.4 உங்கள் தரவைப் பாதுகாத்தல்

இந்தத் தனியுரிமைக் கொள்கை மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

மூன்றாம் தரப்பு செயலிகளிலும் நாங்கள் தரவைச் சேமிக்கிறோம். விவரங்களுக்கு கீழே உள்ள தரவு பகிர்வு பகுதியை பார்க்கவும்

3.5 மூன்றாம் தரப்பினருடன் தரவைப் பகிர்தல்

உங்கள் தகவலை பின்வரும் வகையான  மூன்றாம் தரப்பினருடன் மட்டுமே நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களைப் பற்றிய மேலும் குறிப்பிட்ட விவரங்களைக் கீழே படிக்கலாம்

மூன்றாம் தரப்பு செயலிகள்

செயலி எப்படி சேகரிக்கப்பட்டது/சேமிக்கப்பட்டுள்ளது எவ்வளவு காலம் ? தனியுரிமைக் கொள்கையின்  இணைப்பு
கூகுள் அனாலிட்டிக்ஸ் நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும் போதெல்லாம், கூகுள்  பகுப்பாய்வுக்கான குக்கீஸை  நீங்கள் ஏற்றுக்கொண்டால், தரவு சேகரிக்கப்பட்டு உலகில் எங்கிருந்தும் தொலைநிலை கூகுள்  சேவையகங்களில் சேமிக்கப்படும். 38 மாதங்கள் Google Analytics Privacy Policy
கூகுள் அட்ஸ் (கூகுள் விளம்பரங்கள்) நீங்கள் கூகுள் விளம்பரங்கள் மூலம் எங்கள் இணையதளத்திற்கு வந்திருந்தால், எங்கள் இணையதளத்தில் குக்கீயை நீங்கள் ஏற்றுக்கொண்டால், தரவு சேகரிக்கப்படும். இது உலகில் எங்கும் Google சேவையகங்களில் சேமிக்கப்படுகிறது. தரவு 18 மாதங்களுக்குப் பிறகு அநாமதேயமாக ஆக்கப்படும்  அல்லது நீக்கப்படும் Google Ads Privacy Policy
ஐ ட்யூன்ஸ் / ஐ கிளவுட் எங்கள் வாட்ஸாப்  அறிவிப்புகளுக்கான் குழுவில்  நீங்கள் சேர்ந்திருந்தால், உங்கள் வாட்ஸாப்  தொலைபேசி எண் தரவை ஐ ட்யூனில்  சேமித்து வைக்கிறோம். 36 மாதங்கள் Apple Privacy Policy
கூகுள் டிரைவ் நீங்கள் உள்நுழைவில்  பதிவு செய்திருந்தால் அல்லது எங்கள் நிகழ்வு விழிப்பூட்டல்கள் அல்லது செய்திமடல்களுக்கு குழுசேர்ந்திருந்தால் அல்லது நாங்கள் உருவாக்கிய கூகுள் படிவத்தை நிரப்பினால், நாங்கள் கூகுள் ட்ரைவில் தரவைச் சேமிக்கலாம் 36 மாதங்கள் Google Privacy Policy
வாட்ஸாப் நிகழ்வு பதிவு மூலம்.

சாதனத்தில் சேமிக்கப்பட்ட படிவுகள் மற்றும் செய்திகள்; இருப்பினும் வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையின்படி தரவுகளை உலகளவில் எங்கும் செயலாக்க முடியும்.

36 மாதங்கள் WhatsApp Help Center – General
லைவ்சாட் பயன்படுத்தும் ஒருவர் சாட்டின் மூலம் செய்திகளை பரிமாறிக் கொண்டிருக்கும் போதெல்லாம்.

லைவ்சாட் மூலம் நீங்கள் எங்களுடன் வைத்திருக்கும் அனைத்து தகவல்தொடர்புகளும், நீங்கள் லைவ்சாட் இல் உள்ளிடும் மின்னஞ்சல் முகவரியும் அமெரிக்கா அல்லது ஜெர்மனியில் உள்ளலைவ்சாட் சேவையகங்களில் சேமிக்கப்படும். இயல்புநிலை (Default setting) அமைப்பு அமெரிக்கா

சேமிக்கப்பட்ட தரவுகளுக்கு  காலாவதி தேதி எதுவும் இல்லை, ஆனால் கோரிக்கையின் பேரில் அதை அகற்றலாம் Privacy Policy (livechat.com)
சென்ட்க்ரிட் எங்களிடமிருந்து செய்திமடல்கள் அல்லது நிகழ்வு விழிப்பூட்டல்களை மின்னஞ்சல் மூலம் பெற நீங்கள் கோரினால், மின்னஞ்சல்களை அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியை சென்ட்க்ரிட் உடன் பகிர்ந்து கொள்கிறோம். சென்ட்க்ரிட் சேவையகங்களில் தரவு சேமிக்கப்படுகிறது

பயன்படுத்துபவர்  அழுத்தும் போது, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும்போது , செய்திகள் அனுப்பும் போது, SendGrid.Data வழியாக அனுப்பப்படும் தகவல் தொடர்புகள் சென்ட்க்ரிட் தரவு மையங்களின் இருப்பிடங்களில் சேமிக்கப்படும்.

30 நாட்களுக்கு மின்னஞ்சல் செய்தி செயல்பாடு/மெட்டா டேட்டாவை (திறந்தவை மற்றும் கிளிக்குகள் போன்றவை) வைத்திருக்கும்.

வாடிக்கையாளரின் ஒருங்கிணைக்கப்பட்ட அனுப்பும் புள்ளிவிவரங்கள் மற்றும் மறைக்கப்பட்ட பட்டியல்கள் (பவுன்ஸ்கள், குழுவிலகுதல்) மற்றும் ஸ்பேம் அறிக்கைகள் (உள்ளடக்கம் இருக்கலாம்) காலவரையின்றி சேமிக்கிறது, மேலும் குறைந்தபட்ச சீரற்ற உள்ளடக்க மாதிரிகளை 61 நாட்களுக்கு சேமிக்கிறது. தனிப்பட்ட தரவு 30 நாட்களுக்கும்  மற்றும் பாதுகாப்பு நிகழ்வு பதிவுகள் 365 நாட்களுக்கு. விவரங்கள்

Sendgrid Privacy Policy
குக்கீ ப்ரோ ஒரு தனித்துவமான தள பார்வையாளர் ஐடி பயன்படுத்தும் நபரை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தத் தகவலையும் குக்கீ ப்ரோ  கண்காணிக்காது. ஒரு தனிப்பட்ட தள பார்வையாளர் ஐடி ஒரு வருடத்திற்கு கண்டிப்பாக புள்ளிவிவர நோக்கங்களுக்காக மட்டுமே குறிக்கப்படுகிறது . Privacy Notice | OneTrust
கிளவுட்எஃப்லேர் IP முகவரி 30 நாட்கள் Cloudflare’s Privacy Policy | Cloudflare
வூகாமர்ஸ் அனைத்து பொருள் வாங்குதல் கோரிக்கைகள் 3 ஆண்டுகள் WooCommerce Privacy Policy

https://woocommerce.com/document/marketplace-privacy/#section-4

https://automattic.com/privacy/

பே-பால் பணம் செலுத்தும் செயலாக்கம் 7 ஆண்டுகள் https://www.paypal.com/webapps/mpp/ua/privacy-full
ஸ்ட்ரைப் பணம் செலுத்தும் செயலாக்கம் 5 அல்லது அதிக ஆண்டுகள் https://stripe.com/en-au/privacy
டபுள்யூ எஸ் டெஸ்க் – எலெக்ஸ் வர்ட் பிரெஸ் உதவி மையம் மற்றும் வாடிக்கையாளர் சேவை டிக்கெட் அமைப்பு செருகுநிரல் https://elextensions.com/policy/

4. ஒரு வேளை தரவு மீறல் நடந்தால் நாங்கள் என்ன செய்வோம்?

தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல் , பயன்படுத்துதல், வெளிப்படுத்துதல் அல்லது அகற்றுதல் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்படாத அணுகல் இருக்கும்போது தனியுரிமை மீறல் ஏற்படுகிறது.

சாத்தியமில்லை எனினும் அவ்வாறு  தரவு மீறல் ஏற்பட்டால், எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் தனியுரிமைக் கொள்கை பின்வருமாறு:

  • நீங்கள் ஆபத்தில் உள்ளதாகவோ அல்லது தீவிரமான பாதிப்பில் உள்ளதாகவோ எஸ்.எஸ்.ஆர்.எஃப் நம்பினால், உங்கள் தொடர்புத் தகவலை எங்களுக்கு வழங்கியிருந்தால், மின்னஞ்சல் அல்லத வாட்ஸாப் மூலம் உங்களைத் தொடர்புகொள்ள எங்களுக்கு அனுமதி அளித்திருந்தால், தேவையற்ற தாமதமின்றி தரவு மீறல்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உதாரணத்திற்கு , உங்கள் மன அல்லது உடல் நலனுக்கு கடுமையான நிதிப் பாதிப்பு அல்லது தீங்கு விளைவிக்கும் தரவு மீறல். எங்கள் வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் கூடல் தரவு மீறல்கள் குறித்து பார்வையாளர்களுக்கு நாங்கள் தெரிவிப்போம் .
  • தனிப்பட்ட தகவல்களை, அங்கீகரிக்கப்படாத அணுகல், பயன்பாடு அல்லது வெளிப்படுத்துதல் போன்றவற்றால் விளைந்த பாதுகாப்பு மீறல் குறித்து எஸ்.எஸ்.ஆர்.எஃப்  அறிந்தால், எஸ்.எஸ்.ஆர்.எஃப் உடனடியாக அந்த விஷயத்தை ஆராய்ந்து, 72 மணிநேரத்திற்குள்  பொருத்தமான மேற்பார்வை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும். தனிப்பட்ட தரவு மீறல்  அந் நபர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்பில்லை எனில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் அத்தகைய மீறல் குறித்தது தெரிவிக்காது.

5. சிறார்களின் தரவு தனியுரிமை

எங்கள் இணையதளத்தில் உள்ள அனைத்து சேவைகளும் (லாகின், அரட்டை, கருத்துகள், கடை, நன்கொடைகள், நிகழ்வு பதிவுகள், சந்தாக்கள் போன்றவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல) 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களுக்காகவே அல்லது  சிறார்களுக்கான  சட்டப்பூர்வ பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன்.

18 வயதுக்குட்பட்ட எவரிடமிருந்தும் நாங்கள் தெரிந்து தரவுகளை சேகரிப்பதில்லை.

18 வயதிற்குட்பட்ட பயன்படுதோவோரின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களின் சட்டப்பூர்வ பாதுகாவலரின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் சேகரிக்கப்பட்டதாக அறிந்தால், கணக்கை செயலிழக்கச் செய்வோம் மற்றும் எங்கள் பதிவுகளில் இருந்து அத்தகைய தரவை உடனடியாக நீக்குவதற்கு நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம்..

18 வயதுக்குட்பட்ட சிறார்களிடமிருந்து நாங்கள் சேகரித்த தரவுகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களை [email protected] இல் தொடர்பு கொள்ளவும்

6. கணக்கு முடக்கம் மற்றும் சந்தா ரத்து

உங்கள் கணக்கை நிறுத்துவதற்கான உங்கள் கோரிக்கையின் பேரில், உங்கள் கணக்கு மற்றும் தகவலை எங்கள் செயலில் உள்ள தரவுத்தளங்களில் இருந்து செயலிழக்கச் செய்வோம் அல்லது நீக்குவோம்.

எவ்வாறாயினும், மோசடியைத் தடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், எந்தவொரு விசாரணையிலும் உதவவும், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தவும் மற்றும்/அல்லது சட்டத் தேவைகளுக்கு இணங்கவும் சில தகவல்களை எங்கள் கோப்புகளில் வைத்திருக்க வேண்டியிருக்கும்.

எங்கள் செய்திமடல் மின்னஞ்சல் பட்டியல் மற்றும்/அல்லது வாட்ஸாப் சந்தாவிலிருந்து நீங்கள் குழுவிலகினால், மின்னஞ்சல் பட்டியலிலிருந்து நீக்கப்படுவீர்கள் – இருப்பினும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக உங்கள் தகவலை 3 ஆண்டுகளுக்கு நாங்கள் வைத்திருப்போம்.

எங்கள் அஞ்சல் பட்டியலில் இருந்து நீங்கள் குழுவிலக விரும்பினால், எங்களிடமிருந்து பெறப்பட்ட எந்த மின்னஞ்சலின் கீழும் குழுவிலக அளிக்கப்பட்டுள்ள தெரிவை  அழுத்துவதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம். எங்கள் வாட்ஸாப் தொடர்பு பட்டியலிலிருந்து நீங்கள் குழுவிலக விரும்பினால், “குழுவிலகு” என்ற செய்தியுடன்  வாட்ஸாப் இல் எங்களுக்குப் பதிலளிக்கலாம்.

உங்கள் கணக்கை முடக்கி, உங்கள் எல்லா தரவையும் நீக்க விரும்பினால், அதை [email protected] இல் கோரலாம்

7. கூடுதல் உரிமைகள் மற்றும் விதிகள்

புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்ட மாநிலங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் விளைவாக, உங்களுக்கு பின்வரும் உரிமைகளும் உள்ளன:

  • சில நிபந்தனைகளின் கீழ் உங்களுக்கோ அல்லது வேறு நிறுவனத்திற்கோ அனுப்பப்பட்ட நீங்கள் சேகரித்த தரவின் நகல்களுக்கான உரிமை
  • மறக்கப்படுவதற்கும் /அழிப்பதற்கான உரிமை
  • தனிப்பட்ட தரவுகளை திருத்துவதற்கான உரிமை
  • உங்கள் தரவைச் சேகரிக்க அல்லது செயலாக்க மறுப்பதற்கான உரிமை
  • தரவு சேகரிப்பு மற்றும் செயலாக்கத்தை கட்டுப்படுத்தும் உரிமை
  • நேரடி விற்பனை நோக்கங்களுக்காக தனிப்பட்ட தரவை செயலாக்குவதை எதிர்க்கும் உரிமை
  • உங்கள் தரவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து பிராந்திய தனியுரிமை அதிகாரிகளிடம் புகார்களை பதிவு செய்வதற்கான உரிமை

மேலே கூறப்பட்ட உரிமைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] இல் மின்னஞ்சல் அனுப்புங்கள், நாங்கள் ஒரு மாதத்திற்குள் பதிலளிப்போம்; கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் சிக்கலான தன்மையைப் பொறுத்து, ஏதேனும் நீட்டிப்புகள் தேவைப்பட்டால் (கூடுதல் இரண்டு மாதங்கள் வரை) மற்றும் தாமதங்களுக்கான காரணங்களை நாங்கள் தெரிவிப்போம்.

இந்த தனியுரிமைக் கொள்கையை எங்கள் விருப்பப்படி மாற்றுவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. ஏதேனும் மாற்றங்கள் அல்லது  திருத்தங்கள் இங்கே இடுகையிடப்படும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட “திருத்தப்பட்ட” தேதியால் குறிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அணுகப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும்.

இந்த தனியுரிமைக் கொள்கையில் ஏதேனும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டால், அத்தகைய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை எங்கள் முகப்புப்பக்கத்தில் வெளியிடுவதன் மூலமோ அல்லது நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள அனுமதியளித்தால் மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் மூலமாக நேரடியாக உங்களுக்கு அறிவிப்பை அனுப்புவதன் மூலமோ நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம்.

உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைத் தெரிவிக்க, இந்தத் தனியுரிமைக் கொள்கையை அடிக்கடி மதிப்பாய்வு செய்யுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.

இந்த தனியுரிமைக் கொள்கை பற்றிய கேள்விகள் அல்லது கருத்துகளை இங்கு அனுப்பலாம்: [email protected]

தற்போதைய கொள்கை திருத்தம் தேதி: ஏப்ரல் 6, 2022.