சுய ஆலோசனை நுட்பங்களின் வகைகள்
அட்டவணை
1. அறிமுகம்
ஆளுமை குறைபாடுகளை களையும் செயல்முறையின் மிக முக்கியமான பாகமாக சுய ஆலோசனைகள் உள்ளன. ஏனெனில் அவை நம் மனதின் எதிர்மறை எண்ணங்கள் அல்லது எதிர்வினைகளுக்கு தீர்வுகளை வழங்குகின்றன. நம் மனம் நம்மை எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களின் சுழற்சியில் வைத்திருக்க முனைகிறது. சுய ஆலோசனைகள் நம் மனதின் எதிர்மறையான போக்குகளை அழிக்க உதவுகின்றன, இதனால் ஆளுமை குறைபாடுகள் காரணமாக எழும் தவறான எதிர் வினைகள் மீண்டும் மீண்டும் நிகழாமல் நாம் சரியான முறையில் நடந்து கொள்கிறோம். அவை எதிர்மறை பதிவுகளின் வேர் வரை சென்று அவற்றை நேர்மறையாக மாற்றுகின்றன. இந்த வழியில், நம் நடத்தை தானாகவே சிறப்பாக மாறும். இது நமது ஆளுமை குறைபாடுகளைக் குறைக்க விஞ்ஞானம் மற்றும் காலத்தால் சோதனை செய்யப்பட்ட ஒரு சிகிச்சை முறையாகும்.
ஆளுமை குறைபாடு நீக்கும் செயல்முறையை நாம் தொடங்கும்போது, முதலில் நம்மைப் பற்றிய தரவுகளை, அதாவது சிந்தனை, செயல் அல்லது உணர்ச்சி மட்டங்களில் நாம் செய்யும்தவறுகள் பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்குகிறோம். ஒரு நாட்குறிப்பை பராமரிப்பது நமது ஆளுமை பண்புகளை- நேர்மறை (குணங்கள்) மற்றும் எதிர்மறை பண்புகள் (ஆளுமை குறைபாடுகள்) பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது. சுமார் 10-15 நாட்களுக்கு நம்மைப் பற்றிய தவறுகள் அல்லது அவதானிப்புகளை எழுதி, நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற மற்றவர்களிடமிருந்து உள்ளீடு அல்லது கருத்துக்களை எடுத்துக் கொண்ட பிறகு, எந்த குறைபாடுகள் அடிக்கடி தோன்றுகின்றன என்பதையும், எந்த குறைகள் முதன்மையாக உள்ளன என்பதையும், எந்த குறைபாடுகள் நம்மையும் பிறரையும் அதிகம் பாதிக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது. இந்த புரிதலின் அடிப்படையில் ஒரு நேரத்தில் 1 முதல் அதிகபட்சம் 3 ஆளுமை குறைபாடுகளை தேர்வு செய்து, அவற்றை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆளுமைக் குறைபாடுகளை நீக்குவதில் நாம் 2-3 மாதங்கள் வரை முயற்சி செய்யலாம். 1-3 ஆளுமை குறைபாடுகளை முன்னுரிமையின்படி தேர்ந்தெடுத்த பிறகு, ஒவ்வொரு குறைபாட்டிற்கும் பொருத்தமான சுய ஆலோசனைகளை உருவாக்குவது அவசியம். சுய ஆலோசனைகளை உருவாக்க நாம் பயன்படுத்தக்கூடிய முறைகள் அல்லது நுட்பங்கள் பின்வருமாறு.
எடுத்துக்காட்டாக, நாம் களைய விரும்பும் 3 ஆளுமை குறைபாடுகளை அதாவது பயம், கவலை மற்றும் ஒழுங்கற்ற செயல்பாடு என்பவற்றை தேர்ந்தெடுப்போமாயின், நமது ஆளுமை குறைகளை களையும் அட்டவணையில் இருந்து இந்த 3 குறைபாடுகள் வெளிப்பட்ட ஒவ்வொரு தவறையும் தேர்ந்தெடுக்கிறோம்.
உதாரணங்கள்
- தவறு/குறைபாடு – பயம் : எனது சகோதரர் முத்துவின் பிறந்தநாள் விழாவில் எனது நண்பர்களை சந்திக்க நான் பயந்தேன். ஏனெனில் என்னால் ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியாததால் அவர்கள் என்னை குறைவாக நினைப்பார்கள் என நான் நினைத்தேன். அவர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்கு நான் சாக்குகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
- தவறு/குறைபாடு – கவலை : சன்தீப் (எனது வணிக பங்குதாரர்) என்னை ஏமாற்றியபோது, நான் நிலைகுலைந்து போனேன். எதிர்காலத்தில் எனக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டேன்.
- தவறு/குறைபாடு – ஒழுங்கற்றசெயல்பாடு : எனது கடவுச்சீட்டை வீட்டிலேயே விட்டுவிட்டு, விமான நிலையத்திற்கு செல்லும்போது பாதி வழியில் அதை உணர்ந்தேன். இதன் காரணமாக எனது சர்வதேச விமானத்தை தவறவிட்டுருப்பேன்.
2. சுய ஆலோசனை முறையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது
சம்பவத்தைப் பொறுத்து பல்வேறு வகையான சுய ஆலோசனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நம் தவறான எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள், அல்லது எதிர்வினைகளை மாற்ற எந்த சுய ஆலோசனை முறையை பயன்படுத்துவது என்பதை கீழே உள்ள ஓட்ட விளக்கப்படம் காட்டுகிறது.
ஒரு குறைபாட்டைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாம் களைய விரும்பும் இக்குறைபாடு வெளிப்படும் இடங்களில் எந்த சுய ஆலோசனை நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என தீர்மானிக்க, நாம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் –
‘தவறுக்கு யார் காரணம் அல்லது யாருடைய ஆளுமை குறைபாடுகள் ஒரு தவறு அல்லது ஒரு சூழ்நிலையில் ஏற்படும் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம். நான் (சுய) பொறுப்பா அல்லது மற்றவர்களா?’
முக்கியமாக நம்முடைய சொந்த ஆளுமை குறைபாடுகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படும்போது, ‘அ’ வகை சுய ஆலோசனைகள் பயன்படுத்தப்படுகின்றன. மறுபுறம், ஒரு தவறு மற்றவர்களால் செய்யப்படும்போது அல்லது அவர்களின் ஆளுமை குறைபாடுகள், தவறு அல்லது சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கும்போது, ‘ஆ’ வகை சுய ஆலோசனைகளை பயன்படுத்த வேண்டும்.
உதாரணங்கள்
தவறு/குறைபாடு – பயம் : எனது சகோதரர் முத்துவின் பிறந்தநாள் விழாவில் எனது நண்பர்களை சந்திக்க நான் பயந்தேன். ஏனெனில் என்னால் ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியாததால் அவர்கள் என்னை குறைவாக நினைப்பார்கள் என நான் நினைத்தேன். அவர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்கு நான் சாக்குகளை தேடிக்கொண்டிருந்தேன்.
தவறின் பகுப்பாய்வு – ‘A’ வகை
எனது ஆளுமை வகையைப் பொறுத்து தவறான சிந்தனை அல்லது உணர்ச்சி காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். தவறுகளை பகுப்பாய்வு செய்யும் போது, சுய ஆலோசனை வகையை தீர்மானிக்கும் முக்கிய கேள்வி என்னவென்றால் – இந்த தவறுக்கு யாருடைய ஆளுமை குறைபாடுகள் முக்கிய காரணம்? இங்கே பயம் என் மனதில் இருக்கிறது. இந்த எண்ணங்கள் எனக்குள் இருக்கின்றன என்று என் நண்பர்களுக்கு கூட தெரியாது, எனவே தவறு முக்கியமாக எனது ஆளுமை குறைபாடுகளால் ஏற்படுகிறது. இதனால்தான் இந்த தவறுக்கு ‘A’ வகை சுய ஆலோசனை நுட்பத்தை பயன்படுத்தலாம்.
தவறு/குறைபாடு – கவலை: சன்தீப் (எனது வணிக பங்குதாரர்) என்னை ஏமாற்றியபோது, நான் நிலைகுலைந்து போனேன். எதிர்காலத்தில் எனக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டேன்.
தவறின் பகுப்பாய்வு – ‘ B’ வகை
இந்த தவறு ஒரு எதிர்வினை. தவறுகளை பகுப்பாய்வு செய்யும் போது, சுய ஆலோசனை வகையை தீர்மானிக்கும் முக்கிய கேள்வி என்னவென்றால் – இந்த தவறுக்கு யாருடைய ஆளுமை குறைபாடுகள் முக்கிய காரணம்? இங்கே என் நண்பர் என்னை ஏமாற்றியதிலிருந்து, அவருடைய ஆளுமை குறைபாடுகள் தான் இந்த சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இங்கே நாம் ஒரு ‘B’ வகை சுய ஆலோசனை முறையை பயன்படுத்தலாம்.
தவறு/குறைபாடு – ஒழுங்கற்ற செயல்பாடு : எனது கடவுச்சீட்டை வீட்டிலேயே விட்டுவிட்டு, விமான நிலையத்திற்கு செல்லும்போது பாதி வழியில் அதை உணர்ந்தேன். இதன் காரணமாக எனது சர்வதேச விமானத்தை நான் தவறவிட்டிருப்பேன்.
தவறின் பகுப்பாய்வு – ‘A’ வகை
இது தவறான செயல். இங்கே, எனது சொந்த ஒழுங்கற்ற செயல்பாடே தவறுக்கு காரணம். எனது கடவுச்சீட்டை மறந்ததிற்கு நானே முக்கியமாக பொறுப்பு என்பதால், ‘A1’ வகை சுய ஆலோசனை நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு குறிப்பிட்ட சுய ஆலோசனை நுட்பத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
3. பல்வேறு வகையான சுய ஆலோசனை நுட்பங்கள்
3.1 ‘A’ வகை சுய ஆலோசனைகள்
A1 உளவியல் பின்னூட்ட நுட்பம்: இந்த சுய ஆலோசனை முறை அனைத்து தவறான எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்த ஒருவருக்கு உதவுகிறது. A1 வகை சுய ஆலோசனைகள் எவ்வாறு சிந்திக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் மற்றும் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றிய உளவியல் கருத்துக்களை மனதிற்கு அளிக்கிறது. ஆளுமை குறைபாடுகளின் பதிவுகள் காரணமாக, நம் மனதில் தவறான எண்ணங்களும் உணர்ச்சிகளும் உள்ளன அல்லது தவறான செயல்களைத் தூண்டுகின்றன. நமது சொந்த ஆளுமை குறைபாடுகள் காரணமாக மன அழுத்தத்தை உருவாக்கும் தவறான எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களுடன் தொடர்புடைய அனைத்து தவறுகளுக்கும் A1 சுய ஆலோசனை நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
A1 வகை சுய ஆலோசனைகளை பற்றி மேலும் வாசிக்கவும்
A2 – மறுமொழி மாற்று நுட்பம் : குறுகிய கால சம்பவத்தால், அதாவது 1 முதல் 2 நிமிடங்கள் அல்லது சில நிமிடங்களுக்கு குறைவாக நீடிக்கும் ஒரு சம்பவத்தால் ஏற்படும் தவறான எதிர்வினையை சமாளிக்க இந்த நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். எதிர்வினை எவ்வளவு காலம் இருந்தது என்பது முக்கியமல்ல. இங்கு சம்பவத்தின் காலமே கருத்தில் கொள்ளப்படுகிறது. நமது சொந்த குறைபாடுகள் எதிர்வினைக்கு முதன்மையான காரணமாக அமையும் போது அந்த எதிர்வினைகளை மாற்ற இச்சுய ஆலோசனை நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சுய ஆலோசனை முறையின் மூலம், ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு அல்லது ஒரு நபரை குறித்து எதிர்வினைகள் இருக்கும்போது தவறான மறுமொழியை சரியான மறுமொழியை கொண்டு மாற்றுமாறு மனதிற்கு நாம் சொல்கிறோம்.
ஒவ்வொரு சம்பவத்திலும், நேர்மறை அல்லது எதிர்மறை எதிர்வினைகள் மனதில் வருகின்றன, அல்லது ஒரு நபரால் வெளிப்படுத்தப்படுகின்றன. தவறான மறுமொழி ஆளுமை குறைபாடுகள் காரணமாகவும், சரியானவை நல்லொழுக்கங்கள் காரணமாகவும் வெளிப்படுகின்றன. தவறான எதிர்வினைகளுக்கு தொடர்ச்சியாக சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், நம் மனதில் உள்ள குறைபாடுகள் நல்லொழுக்கங்களின் பதிவுகள் மூலம் மாற்றப்படுகின்றன. இது நமது ஆளுமையை மிகவும் நேர்மறையாக மாற்றுகிறது.
A2 வகைசுயஆலோசனைகள்பற்றிமேலும்வாசிக்கவும்
A3 – மனோவசியத்தின் மூலம் உணர்திறனை சமன் செய்யும் உத்தி : நீண்டகால சம்பவத்தால் அதாவது 1 முதல் 2 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் ஒரு சம்பவத்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் தவறான எதிர்வினையை சமாளிக்க இந்த நுட்பம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நுட்பத்தில், ஒரு கடினமான நிலைமையை நாமஜபம் செய்து கொண்டு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிகிறது என்று நாம் காட்சிப் படுத்துகிறோம். சம்பவத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மனம் ஒத்திகை பார்ப்பதால், சம்பவம் உண்மையில் நடக்கும்போது நாம் மன அழுத்தத்தை உணர்வதில்லை.
A3 வகைதன்னியக்கபரிந்துரைகள்பற்றிமேலும்வாசிக்கவும்
3.2 B வகை சுய ஆலோசனைகள்
மற்றவர்களின் ஆளுமை குறைபாடுகள் மூலம் உண்டாகும் மன அழுத்தத்தையும், நாம் கடந்து செல்லும் வெவ்வேறு வாழ்க்கை சூழ்நிலைகள் அல்லது சில சோகமான அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க ஆ வகை சுய ஆலோசனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
B1 சுய ஆலோசனை முறை : மற்றவர்கள் செய்த தவறுகளால் மன அழுத்தத்தையோ மகிழ்ச்சியின்மையையோ அனுபவிக்கும் போதும் மற்றவர்களுடைய ஆளுமை குறைபாடுகளை சரி செய்ய முடியும் அல்லது நிலைமையை மாற்ற ஏதாவது செய்ய முடியும் எனும் பொழுது இந்த சுய ஆலோசனை நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் அல்லது நமக்கு கீழே பணிபுரியம் உத்தியோகஸ்தர்கள் செய்த தவறுகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இந்த சுய ஆலோசனை முறையை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் பிள்ளைகளை அல்லது உத்தியோகஸ்தர்கள்களை சரியான முறையில் செயல்பட அமைதியாக வழிநடத்த முடியும். நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், மற்றவர்களே தவறுக்கு முக்கியமான காரணமாக இருக்கும் சம்பவங்களில் இந்த சுய ஆலோசனை முறை பயன்படுத்தப்பட்டாலும், நம்மை மாற்றி கொள்வதிலேயே நமது கவனம் இருக்க வேண்டும். மற்றவர்களைத் திருத்தும் போது நாம் அமைதியாக இருக்க இது நமக்கு உதவுவதால், நம் குழந்தைகளுக்கு அல்லதுநமக்கு கீழே பணிபுரியம் உத்தியோகஸ்தர்களுக்கு நம்மால் சிறப்பாக உதவ முடியும்.
B1 வகைதன்னியக்கபரிந்துரைகள்பற்றிமேலும்வாசிக்க
B2 சுய ஆலோசனை முறை : மற்றவர்களில் உள்ள குறைபாடுகளை களைய அல்லது சூழ்நிலையை சரி செய்ய எதுவும் செய்ய முடியாதபோது, ஆ 2 சுய ஆலோசனை முறை பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நம் பெரியவர்கள் அல்லது பணியில் இருக்கும் நமது மேலதிகாரிகளின் நடத்தையையோ அல்லது ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும், திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு மாற முயற்சிக்காமல் இருப்பவர்களின் நடத்தையையோ நம்மால் சரி செய்ய இயலாது. மேலும், தீவிர வறுமை, மிகவும் வேதனையான அல்லது அரிதான நோய், விபத்து, பஞ்சம் போன்ற துன்பகரமான நிலைமைகளை மாற்றுவதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு தத்துவ மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதே நேர்மறையாக இருக்க ஒரே வழி.
B2 வகைசுயஆலோசனைகள்பற்றிமேலும்வாசிக்க
3.3 C வகை சுய ஆலோசனைகள்
வேறு சில வகையான சுய ஆலோசனைகளும் உள்ளன.
C1 – நாமஜப சுய ஆலோசனை முறை : இது நாமஜப வழிமுறை என்று அழைக்கப்படுகிறது. இது எதிர்மறை எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகளை நம் மனதில் நுழைவதைத் தடுக்க உதவும் ஒரு தடுப்பு முறையாகும். ஆளுமை குறைபாடுகளின் வெவ்வேரு மாறுபட்ட பதிவுகள் நம் மனதில் ஆழமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை நாள் முழுவதும் வெவ்வேறு எண்ணங்களின் வடிவத்தில் வெளிமனதிற்கு தூண்டுதல்களை அனுப்புகின்றன. இதன் விளைவாக, மனதின் ஆற்றல் அந்த எண்ணங்களில் தேவையின்றி செலவிடப்படுகிறது. இ1 சுய ஆலோசனை முறை, கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதில் மனதை அமிழ செய்து, அதன் சக்தியைப் பாதுகாக்க உதவுகிறது.
C1 வகை சுய ஆலோசனைகள் பற்றி மேலும் வாசிக்க
C2 – தண்டனை சுய ஆலோசனை முறை : மற்ற முறைகள் பயனுள்ளதாக இல்லாவிட்டால், ஒருவர் இந்த சுய ஆலோசனை முறையை நாடலாம். முதலாவதாக, அ மற்றும் ஆ வகை சுய ஆலோசனை முறைகள் மூலம் நம் ஆளுமை குறைபாடுகளை களைய முயற்சிக்கிறோம். ஆனால் சுமார் 3-4 வாரங்களுக்கு சுய ஆலோசனைகளை விடாமுயற்சியுடன் எடுத்துக் கொண்ட பிறகும், தவறான செயல் அல்லது எதிர்வினைகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்றால், நாம் இ2 முறையை அல்லது தண்டனை முறையை பயன்படுத்தலாம்.
C2 வகை சுய ஆலோசனைகள் பற்றி மேலும் வாசிக்க (விரைவில் வருகிறது)
4. முடிவுரை
வாழ்க்கையில், நாம் சந்திக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு மனமும் புத்தியுமே காரணமாகின்றன. ஏனென்றால், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் காரணமாக, நம்முடைய உரையாடல்களையும், நாம் அனுபவிக்கும் சூழ்நிலைகளையும் பாதிக்கும் வகையான தெரிவுகளை நாம் செய்கிறோம். எனவே, நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் நம் விதியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள, நம்முடைய தவறான சிந்தனை செயல்முறைகளை ஆராய்ந்து அறிந்து கொண்டு, அவற்றுக்கேற்ற சுய ஆலோசனைகளை எடுத்து கொண்டு அவற்றை சரிசெய்ய வேண்டும். ஒரு தொகுப்பு சுய ஆலோசனைகளை எடுத்து கொள்ள 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே ஆகும். சுய ஆலோசனைகளை எடுக்கும் இந்த சிறிய முயற்சியால் உங்கள் ஆளுமையில், உங்கள் அன்றாட உரையாடல்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லி மாளாது. சுய ஆலோசனைகளை ஆர்வத்துடன் எடுக்கத் தொடங்க இந்த கட்டுரை உங்களைத் தூண்ட வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம்.