அடிப்படை இயல்பு – நம் ஆழ்மன பதிவுகளை சார்ந்தது

அடிப்படை இயல்பு – நம் ஆழ்மன பதிவுகளை சார்ந்தது

மேலே உள்ள வரைபடம் நம் மனதை பிரதிபலிக்கிறது. வெளிமனம் நம் மனதில் 1/10 பகுதியையும் ஆழ்மனம் 9/10 பகுதியையும் பிரதிபலிக்கிறது.

டைட்டானிக் கப்பலை மூழ்கச் செய்த பனிப்பாறையின் மேல் பரப்பு அவ்வளவு பயத்தைக் கொடுப்பதாக இல்லை. ஆனால் கடலின் அடியில் மறைந்திருக்கும் பெரும் பகுதியே மிகவும் அபாயகரமானது. இதைப் போன்றுதான் நமது மன நிலையும் உள்ளது. ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் எண்ணப்பதிவுகளும் மையங்களுமே நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்ச்சிகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. சில உதாரணங்கள் :

நமது வெளிமனதினால் உணர முடியாதபடி நமது ஆழ் மனதில் பதிந்திருக்கும் இந்த எண்ணப்பதிவுகளும் மையங்களுமே நமது செயல்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்து நமது ஆளுமைக்கும் அடிப்படையாக இருக்கிறது. உண்மையில் நமது ஆளுமை இந்த ஆழ்மனதின் எண்ணப்பதிவுகளுக்கு அடிமையாக செயல்படுகிறது. இந்த பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு உள்ளதா? இதற்கான தீர்வு நாம் கற்பனை செய்ய முடியாத அளவு வெகு எளிமையாக உள்ளது. ஆன்மீக பயிற்சி என்ற பிரிவில் இது பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

மனம் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு அதில் எண்ணப்பதிவுகள் ஏற்படுகின்றன என்பது பற்றி விரிவாக அறிவதற்கு, மனதின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் என்னும் கட்டுரையைப் படிக்கவும்.