நம் ஆளுமையின் மீது முற்பிறவிகளின் பாதிப்பு

1. மனதின் ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்

ஒரே மாதிரியான சந்தர்ப்ப சூழ்நிலையில் வேறு வேறு நபர்கள் வேறு வேறு விதமாக நடந்து கொள்கிறார்கள். இதற்கு காரணமான மனதின் ஆன்மீக பரிமாணத்தைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சில சமயங்களில் சிலர் நடந்து கொள்வது அவர்களது இயல்பான தன்மைக்கு மாறாக இருக்கும். நவீன மனோதத்துவ சிகிச்சை முறைக்கு அப்பாற்பட்ட விஷயம் இது. மனோதத்துவ முறை மூலமாக பூரண குணம் பெற முடியாது.

2. முற்பிறவிகள் நம் ஆழ்மனம் மற்றும் ஆளுமையை பாதிக்கின்றன

ஆன்மீக பரிமாணத்தால் மனம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது?

நம் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய விரிவான விளக்கங்கள் நமது மற்ற விளக்க உரைகளில் உள்ளன. மனம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட விளக்க உரைகளைப் பார்க்கவும் :

நம் ஆளுமையின் மீது முற்பிறவிகளின் பாதிப்புமனத்தின் செயல்படும் தன்மை

நம் ஆளுமையின் மீது முற்பிறவிகளின் பாதிப்புவிதி

நம் ஆளுமையின் மீது முற்பிறவிகளின் பாதிப்புநாம் என் இவ்வாறு நடந்து கொள்கிறோம்?

 

 

 

 

 

 

ஒருவர் பல கூறுகளை உள்ளடக்கியவராக உள்ளார். அவை, ஸ்தூல தேஹமான உடல், பிராண தேஹம், மனம், புத்தி, சூட்சும தேஹம் மற்றும் ஆத்மா. ஆத்மாவே ஒவ்வொருவருள்ளும் நிறைந்திருக்கும் பரமாத்மா தத்துவம். மனம் என்பது நம் உணர்வுகள், விருப்பு வெறுப்புகளின் இருப்பிடமாக உள்ளது. அதுவே நம் ஆளுமையை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகும். ஒருவரின் மனம் இரு பகுதிகளை உள்ளடக்கியது:

வெளி மனம் : இது நம்மால் உணரப்படும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை உள்ளடக்கியது. ஆனால் இது 10% மனதை மட்டுமே ஆக்கிரமிக்கிறது. வெளி மனம் முழுவதும் ஆழ் மனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆழ் மனதிற்கு, கடையின் முகப்பு போல் விளங்குவது வெளி மனம்.

ஆழ் மனம் : ஆழ் மனதில் இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் உருவாக்கப்பட்ட அல்லது சம்பவங்கள் மூலம் மாற்றப்பட்ட எண்ணிலடங்கா எண்ணப் பதிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு ஆழ் மனதில் பதிந்துள்ள பழி வாங்கும் எண்ணத்தால் பழி வாங்கும் இயல்பு உடையவனாக ஒருவன் இருக்கலாம். இந்த எண்ணப்பதிவு இப்பிறவியில் அல்லது முற்பிறவியில் உருவாகி முக்கிய சம்பவங்களால் வலுப் பெற்றிருக்கலாம்.

நம்மை அறியாமலேயே நாம் இந்த பூமியில் பல பிறவிகள் எடுத்துள்ளோம். கொடுக்கல்-வாங்கல் கணக்கை சரி செய்ய மறுபடியும் மறுபடியும் பிறக்கிறோம். நாம் முற்பிறவிகளை எவ்வாறு வாழ்ந்துள்ளோம் மற்றும் நம் க்ரியமாண் கர்மாவை (நம் இச்சைப்படி காரியங்களை செய்வது) எவ்வாறு உபயோகித்துள்ளோம் என்பதை பொறுத்தே நம் ஆளுமை அமைகிறது. ஒருவரின் வாழ்க்கை காலத்தில் அவரின் ஆழ்மனதில் பதிந்துள்ள ஸன்ஸ்காரங்கள் (எண்ணப்பதிவுகள்), அவருடைய செயல்களாலும் எண்ணங்களாலும் உருமாறுகின்றன. ஒரு சராசரி மனிதனின் முற்பிறவிகளைப் பார்த்தோமானால் அவற்றின் பாதிப்பு அவனிடம் உள்ள குறைபாடுகளில் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கீழ்க்கண்ட விகிதாசாரம் விளக்குகிறது.

முற்பிறவிகள் ஒருவரின் ஆளுமையின் மீது உண்டாக்கும் பரிணாமம் பரிணாமத்தின் விகிதாசாரம்
கடந்த 1000 பிறவிகள் 30%
கடந்த 7 பிறவிகள் 61%
தற்போதுள்ள பிறவி 9%
மொத்தம் 100%

இந்தப் பிறவியில் கோபத்தை ஸ்வபாவ தோஷமாக கொண்ட ஒருவரை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். குழந்தையாக இருக்கும்போதே அவர் அடிக்கடி கத்தி அழுது தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் கோபம் என்னும் குறைபாடு இந்தப் பிறவியில் திடீரென்று ஆரம்பித்தது அல்ல. பல பிறவிகளில் உருவெடுத்து வலுவடைந்து உருவான ஸன்ஸ்காரம் இது.

  • கடந்த ஆயிரம் பிறவிகளாக ஒருவர் கோப குணத்தை எவ்வாறு பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலையில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பொறுத்தே அவரின் கோப குணத்தின் 30% அமைகிறது. கோபத்தை குறைக்க தீவிர முயற்சி செய்யவில்லை என்றால் பல பிறவிகளில் அது பல மடங்கு அதிகரித்துவிடும்.
  • கடந்த 7 பிறவிகளில் அவரிடம் உள்ள கோபப்படும் தன்மை ஆழ்மனத்தில் இன்னுமொரு 61% பகுதியை ஆக்கிரமிக்கிறது.
  • அதனால், இப்போதுள்ள பிறவியில் அவரின் கோபப்படும் தன்மை ஆழ்மனதில் ஏற்கனவே வேர் விட்டுள்ளது தெரிகிறது. இந்தப் பிறவியில் அவர் எதிர்கொள்ளும் பலவித சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரின் கோபத்தை தூண்டி வலுவடைய செய்கின்றன. இருந்தாலும் கோபம் சம்பந்தமாக இப்பிறவியில் 9% எண்ணப்பதிவுகளே  உருவாகின்றன. சராசரியாக ஒருவரின் 91% கோபப்படும் தன்மைக்கு முற்பிறவிகளே காரணமாகின்றன.

வெளிப்புறத் தூண்டுதலாலோ அல்லது அது இல்லாமலேயோ ஆழ் மனதிலுள்ள எண்ணப்பதிவுகள் வெளி மனதை தாக்குகின்றன. எந்த அளவு ஒருவரின் கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற எதிர்மறை எண்ணப்பதிவுகள் வலுவாக உள்ளனவோ அந்த அளவு எதிர்மறை எண்ணங்கள் வெளி மனதை தாக்குகின்றன. அதனால் அவர் எப்பொழுதும் எதிர்மறை தன்மையால், துக்கத்தால் பீடிக்கப்படுகிறார்.

தற்போதைய பிறவியில் உள்ள விதிக் கணக்கை தீர்க்கத் தேவையான எண்ணப்பதிவுகள், ஆழ்மனதில் உள்ளன. இந்த எண்ணப்பதிவுகள், கொடுக்கல்-வாங்கல் மையத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் முற்பிறவிகளின் எல்லா விதிப்படியான நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஒருவரின் கொடுக்கல்-வாங்கல் கணக்குப்படி அல்லது விதிப்படி அவரின் கொடுக்கல்-வாங்கல் மையம், அவர் வாழ்வின் பல்வேறு சம்பவங்களையும் சந்தர்ப்பங்களையும் எவ்வாறு எதிர் கொள்கிறார் என்பதை நிர்ணயிக்கிறது. விதி என்பது ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லாத வாழ்வின் பகுதி ஆகும். இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் நாம் செய்த ஒட்டுமொத்த புண்ணிய, பாவ பலனுக்கு ஏற்ப விதி, நாம் அனுபவிக்கும் சுக துக்கத்தை நிர்ணயிக்கிறது. ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக, இப்போது நடக்கும் இந்த யுகத்தில் நம்முடைய வாழ்வின் நிகழ்வுகளில் 65% ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அதனால் நமக்கு விதிக்கப்பட்டுள்ள விதியே நம் வாழ்வின் சுக துக்கங்களை பெரும்பாலும் நிர்ணயிக்கிறது. நம் வாழ்வில் ஏற்படும் மனோரீதியான துக்கத்திற்கு (எதிர்மறையான விதியின் விளையாட்டு) நம்மிடமுள்ள ஸ்வபாவ தோஷங்களே அதாவது குறைகளே காரணம்.

ஒருவரிடம் நமக்கு கொடுக்கல்-வாங்கல் கணக்கு இல்லையென்றாலும் நம்மிடமுள்ள ஸ்வபாவ தோஷத்தால் தவறான செயல்கள் செய்து அவருக்கு துக்கத்தை அளிக்கிறோம். இதனால் புது எதிர்மறையான கர்மா அல்லது எதிர்மறையான கொடுக்கல்-வாங்கல் கணக்கு ஏற்படுகிறது. நாம் ஒருவருக்கு துக்கத்தை அளித்தால் கர்ம விதிப்படி நாமும் அதே அளவு துக்கத்தை இப்பிறவியிலோ அல்லது வருங்கால பிறவிகளிலோ அனுபவிக்க வேண்டும்.

3. முற்பிறவிகள் மூலம் நம்மிடமே தங்கியுள்ள ஸ்வபாவ தோஷங்களை தீய சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன

ஆன்மீக பரிமாணத்திலுள்ள தீய சக்திகள் நம்மிடமுள்ள ஸ்வபாவ தோஷங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன. இது முக்கியமாக தீய சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் நடக்கிறது. உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒருவரின் கோபத்தின் அளவு 5 யூனிட்டுகளாக இருந்தால் அவரை பீடித்துள்ள தீய சக்தி அதை 9 அல்லது 10 யூனிட்டுகளாக அதிகப்படுத்தும். அதனால் தேவைக்கு அதிகமான கோபம் ஏற்பட்டு நிலைமை மோசமாகும். உதாரணத்திற்கு கணவன் மனைவியிடையே சூடான வாக்குவாதம் ஏற்படும்போது தீய சக்திகள் அவர்களின் ஸ்வபாவ தோஷங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர்களை அனாவசிய பேச்சுக்கள் பேச வைக்கும். அதனால் அவர்களின் உறவு நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. ஸ்வபாவ தோஷங்கள் என்பவை மனத்தின் பலவீனங்கள் (பல பிறவிகளாக உருவானது). தீய சக்திகள் இவற்றைக் கைக்கொண்டு நம் வாழ்வை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றன.

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நம் ஸ்வபாவ தோஷங்களான கோபம், எதிர்பார்ப்பு போன்றவற்றால் நமக்கு விதிக்கப்பட்டுள்ள துக்கத்தை முழுமையாக அனுபவிக்கிறோம். காரணம், நாம் இப்பிறவி அல்லது முற்பிறவிகளில் செய்த பாவங்களே ஆகும். அதோடு நம் ஸ்வபாவ தோஷங்களால் புது எதிர்மறையான கணக்குகளையும் ஏற்படுத்துகிறோம்.