அட்டவணை
1. அறிமுகம்
2000 ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆன்மீக சக்தியால் பொருட்களில் ஏற்படும் தன்னிச்சையான மாற்றம் அல்லது நிகழ்வுகள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றங்களுக்கான காரணத்தை எந்த வழக்கமான வழிமுறைகளாலும் விளக்க இயலாது. எங்கள் ஆன்மீக ஆராய்ச்சி, பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் தீய அல்லது நல்ல ஆன்மீக சக்தியின் வெளிப்பாட்டின் காரணமாக என்பதை காட்டுகிறது.
சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர்.ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களால். பயன்படுத்தப்பட்ட மூன்று பொருட்களில் நேர்மறை சக்தியால் ஏற்பட்ட மாற்றங்கள் கவனிக்கப்பட்டன. அந்த பொருட்களை ஒரு குறிப்பிட்ட காலஅளவு வரை கவனித்தபோது அதில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை பார்க்கமுடிந்தது.
நேர்மறை ஆன்மீக சக்தியால் ஏற்படும் தன்னிச்சையான மாற்றத்திற்கான விளக்கத்தை நாங்கள் இந்தக் கட்டுரையில் வழங்குகிறோம். இந்த பொருட்களின் புகைப்படங்களை புகைப்படத்தொகுப்பில்(கேலரி) வெளியிட்டுள்ளோம்.
2. இந்த ஆய்வின் முக்கியத்துவம்
முந்தைய கட்டுரையில், தன்னிச்சையான மாற்றம் அல்லது தெய்வீக வெளிப்பாடு பற்றி அறிவதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளோம்.
மாற்றத்தின் செயல்முறை ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு தொடரும்போது, உதாரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக தொடரும்போது அது மிகவும் சுவாரசியமாகிறது. இத்தகைய நிகழ்வுகளை கற்பதன் மூலம் பொருட்களின் தெய்வீகத்தன்மையையும் மாற்றத்திற்கான காரணத்தையும் மட்டுமல்லாமல், தொடர் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணத்தின் செயல்முறையையும் நாம் புரிந்து கொள்ள முடியும்..
நேர்மறை ஆற்றல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மஹானின் ஸாத்வீகத்தன்மையால் ஏற்படும் நேர்மறையான மாற்றம், குறிப்பிடத்தக்க கால அளவு வரை தொடர்கிறது என்பதையும் இந்தப் பொருட்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. ஆன்மீகக் கண்ணோட்டத்தின் வழி மஹான்கள் பயன்படுத்திய பொருட்களின் முக்கியத்துவத்தை இது விளக்குகிறது.
3. நேர்மறை ஆற்றலின் வெளிப்பாடு ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது?
ஆன்மீகரீதியில் தூய்மையான ஒருவரை நாம் மஹான் என்கிறோம். அவர்களின் ஸ்தூலதேஹமானது நேர்மறை ஆற்றல் வெளிப்படுவதற்கான ஒரு ஊடகமாகும். மஹான்கள் பயன்படுத்தும் பொருட்கள் சத்வ குணத்தால் நிறைந்துள்ளன எனவே அவர்களின் நேர்மறை சக்தி அந்த பொருளுக்கும் பரிமாறப்படுகிறது. மஹான்கள் ஒரு பொருளை உபயோகித்த காலத்திற்கு ஏற்ப அந்த பொருளில் சைதன்யம், தெய்வீக தத்துவம் மற்றும் நேர்மறை சக்தி அதிகரிக்கின்றன.
நேர்மறை சக்தியின் வெளிப்பாடு தொடரும் நிலையானது அந்த மாற்றத்தின் விளைவைப் பொறுத்தே அமையும். சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே போன்ற உயர் நிலையிலுள்ள மஹான்கள் நிர்குண நிலையிலிருந்து(பொருள்சாரா) செயல்படுகிறார்கள், ஒரு பொருளை அவர்கள் பயன்படுத்தும்போது, அந்த கடவுளின் கொள்கை அவர்களின் வழியாகச் செயல்பட்டு அந்த பொருட்களின் மீதும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல, அத்தகைய மஹான்கள் நிர்குண நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். சுவாரசியமாக அவர்கள் தொடர்பின் மூலம் ஒரு பொருளில் ஏற்படும் நேர்மறை ஆற்றலின் வெளிப்பாடானது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நிர்குண நிலையை நோக்கி முன்னேறும் பாதையைப் பின்பற்றுகிறது.
4. நேர்மறை ஆன்மீக சக்தியால் படிப்படியாக மாற்றப்படுகின்ற பொருட்களின் பலன்கள்
நீண்ட காலமாக தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்பட்ட இந்தப் பொருட்கள் (அல்லது அவற்றின் புகைப்படங்கள் கூட) நேர்மறை ஆன்மீக ஆற்றலின் சிறந்த ஆதாரமாகச் செயல்படுகின்றன. சராசரி மனிதனுக்கு, சூட்சும நிலையில் நேர்மறை ஆன்மீக ஆற்றலின் மூலம் பயனடைவது கடினம். ஒப்பிடும்போது சூட்சும நேர்மறை ஆற்றலின் பயனை ஸ்தூலமான பொருட்களில் இருந்து பெறுவது மிகவும் எளிதானது.
ஒரு வளாகம் அல்லது சுற்றுச்சூழலில் இந்த பொருட்கள் நேர்மறை சக்தியை தொடர்ந்து வெளியிட்டு நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழலில் உள்ள சூழலில் உள்ள ரஜ மற்றும் தம (சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்) கூறுகளால் நம்மைச் சுற்றி ஒரு கஷ்டம் தரும் படலம் தொடர்ந்து உருவாகிறது. ரஜ மற்றும் தம கூறுகள் அதிகரிக்கும் போது, செயலற்ற நிலை அதிகரித்து, கஷ்டங்கள் ஏற்பட்டு ஆன்மீக பயிற்சியில் தடைகள் உருவாகின்றன இதுபோன்ற நேர்மறையான பொருட்களுடன் நாம் தொடர்பு கொள்ளும்போது, அவற்றிலிருந்து வெளிப்படும் சத்வ அதிர்வுகளால், ரஜ மற்றும் தம சக்திகள் மறைந்து, கஷ்டம் தரும் படலம் விலகி, நமது ஆன்மீக பயிற்சிக்கு வழிகாட்டுகிறது. இந்தப் பொருட்கள் மூலம் ஆன்மீக நிவாரணம் நடைபெறுகிறது என்பதை நாங்கள் அறிந்தோம்.
அதி நுட்பமான ஆறாவது அறிவை கொண்டு மட்டுமே நமது அனுபவத்தை, நேர்மறையா அல்லது எதிர்மறையா என்பதை தீர்மானிக்க முடியும் என்றாலும், நமது அனுபவம் நேர்மறையானது என்பதைப் புரிந்துகொள்வதற்கான சில அறிகுறிகள் உள்ளன. அவை, பொருளை பார்த்த பிறகு ஏற்படும் உற்சாக உணர்வு, எண்ணங்கள் அற்ற மனநிலையை உணர்வது, ஆனந்தத்தை, உணர்வது, எந்தவொரு வெளிப்புற காரணமில்லாமல் நறுமணத்தை அனுபவிப்பது, அமைதியை உணர்வது போன்றவையாகும். தீய சக்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் அத்தகைய பொருட்களைத் தொடுகையில் ஏற்படும் சில அறிகுறிகள் – தொடர்ச்சியாக ஏப்பம்விடுதல், கொட்டாவி, குறைந்த பிராண சக்தி, மற்றும் தீய சக்தியால் பீடிக்கப்பட் பொருட்களால் அதில் உள்ள ஆன்மீக தூய்மையைத் தாங்க முடியாமல் போகுவது போன்றதாகும்.
நேர்மறைசக்தியால் பொருட்களில் உண்டாகும் தாக்கம்(விளைவு) குறிப்பாக தீய சக்திகளால் கஷ்டம் அனுபவிப்போரிடம் அதிகமாக வெளிப்பட்டன. இந்த பொருட்களுடன் தொடர்பில் வந்தபோது, தீய சக்தியின் தீவிரத்தை அதிகமாக காண முடிந்தது. ஏனென்றால், தீய சக்தியால் இந்தப் பொருட்களின் ஆன்மீகத் தூய்மையைத் தாங்க முடியவில்லை. இதை பற்றிய ஒரு சூட்சும ஆய்வில், இந்த பொருளிலிருந்து வெளிப்படும் நேர்மறை அதிர்வுகளுக்கும், தீய சக்தியால் பீடிக்கப்பட்டவரிடம் இருந்து வெளிவரும் எதிர்மறை அதிர்வுகளுக்கும் இடையே ஒரு சூட்சும-போர் நடைபெறுவதை காட்டியது. மகத்தான நேர்மறைத்தன்மை காரணமாக, தீய சக்தியிடம் இருந்து வெளிவரும் எதிர்மறை ஆற்றல் குறைந்து, அந்த நபர் மேலும் நேர்மறை தன்மை கொண்டவராக மாறுகிறார்.
எஸ்.எஸ்.ஆர்.எஃப் இல் நாங்கள் இதுபோன்ற நேர்மறையான கட்டுரைகளைப் பாதுகாக்கிறோம்.ஆன்மீக நிவாரணம் அளிக்கவும், கடுமையான தீயசக்தியால் ஏற்படும் கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட ஸாதகர்களுக்கு ஏற்படும் நேர்மறையான மாற்றங்களை ஆய்வு செய்யவும் ஆன்மீக மையத்தில் இதை பயன்படுத்துகிறோம். இந்த பொருட்களில் நேர்மறை சக்தி அதிகரிக்கும்போது, அவை வரும் ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு உதவியாக இருக்கும். அவை நேர்மறை ஆற்றலின் ஆட்சிமையம் போன்றவை, மேலும் அவை சூழலில் சத்வ கூறுகளை பராமரிக்கின்றன.
சில நேரங்களில் மஹான்கள் இந்த பொருட்களை ஸாதகர்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ பரிசாக வழங்குகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கடவுள் காரியங்கள் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு ஆன்மீக சக்தியை வழங்குகிறார்கள். அத்தகைய பொருட்களில் கடவுள் காரியங்களுக்கு தேவையான சக்தியானது மஹான்களின் சங்கல்ப-சக்தியால் நிரப்பப்படுகின்றன. மஹான்கள் கடவுளின் விருப்பத்திற்கு (ஈஸ்வரச்சா இணங்க செயல்படுகிறார்கள், இதனால் கடவுள் காரியங்களுக்கு தேவையான நேர்மறை சக்தியை வழங்கவும், கடவுள் பணிக்கு தடையாக இருக்கும் தீயசக்திகளிலிருந்து பாதுகாக்கவும் இந்த நேர்மறை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சுருக்கமாக, இந்த நேர்மறையான பொருட்கள், ஆன்மீக பயிற்சியில் தீவிர அக்கறை கொண்டவர்களுக்கும், ஸாதகர்களுக்கும் மிகவும் பொருத்தமானவை.அத்தகைய பொருட்களிடம் நாம் மிகுந்த நன்றியுணர்வைக் கொண்டிருக்க வேண்டும், அவற்றை முறையாகப் பாதுகாக்கவும் வேண்டும். சிலருக்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம் அல்லது மாற்றங்கள் உண்மையில் நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பது குறித்து குழப்பமும் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், ஆன்மீக ரீதியில் வளர்ந்த ஒரு நபரை அணுகுவது சிறந்தது.
5. நேர்மறை ஆற்றலை நாமே உணருதல்
மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்கள் புகைப்படத்தொகுப்பில்(கேலரி) உள்ள பொருட்களைப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் அனுபவங்களை ‘கருத்துப்பதிவின்’ மூலம் எங்களுக்கு அனுப்பலாம்.
