ஆறாவது அறிவு என்றால் என்ன?

ஆறாவது அறிவு என்றால் என்ன?

அட்டவணை

1. ஆறாவது அறிவு என்றால் என்ன?

ஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர் திறன் என்பது சூட்சும பரிமாணம் அதாவது தேவர்கள், பேய்கள், சொர்க்கம் போன்ற கண்ணுக்கு புலப்படாத உலகங்களை உணரும் திறன் ஆகும். நமது புத்திக்கும் அப்பாற்பட்ட பல நிகழ்வுகளின் சூட்சும காரண-காரிய சம்பந்தங்களைப் பற்றி அறியும் திறனும் இதில் அடங்கும். புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு, ஞானதிருஷ்டி, முன்னுணர்வு, உள்ளுணர்வு போன்றவை ஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர் திறனிற்கு ஈடான வார்த்தைகள் ஆகும். இந்த வலைதளத்தில் ஆறாவது அறிவு, புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு மற்றும் சூட்சும உணர் திறன் ஆகிய சொற்பதங்களை மாறிமாறி பயன்படுத்துவோம்.

2. ஆறாவது அறிவால் நாம் காண்பதும் புரிந்துக்கொள்வதும் என்ன?

எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF), ‘சூட்சும உலகம்\' அல்லது \'ஆன்மீக பரிமாணம்\' என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது கண்களால் காண இயலாத தேவர்கள், ஆவிகள், சுவர்க்கம் நிறைந்த உலகை குறிக்கிறது. இதை நம் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்

கண்ணில் தென்படும் இந்த ஸ்தூல உலகை நாம் நமது ஐந்து ஸ்தூல புலன்கள் (வாசனை, சுவை, பார்வை, தொடுகை, ஒலி), மனம் (நம் உணர்வுகள்) மற்றும் புத்தியால் (முடிவெடுக்கும் திறன்) உணர்கிறோம். சூட்சும அல்லது கண்ணுக்கு புலப்படாத உலகங்களை ஐந்து சூட்சும புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தியால் உணர்வதைத்தான் நமது ஆறாவது அறிவு என்று கூறப்படுகிறது. ஆறாவது அறிவு வளர்ச்சி அடைந்திருந்தால் அல்லது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இந்த சூட்சும உலகம்/ பரிமாணத்தை உணர உதவுகிறது. சூட்சும உலகின் இவ்வனுபவம் ‘ஆன்மீக அனுபவம்’ எனப்படும். இறப்பிற்கு பின் வாழ்க்கை, குண்டலினி எழுச்சி, வர இருக்கும் மூன்றாம் உலகப்போர்.  ன்ற வெவ்வேறு விஷயங்களை பற்றி நமது எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர்கள் ஆறாவது அறிவின் மூலமே தெய்வீக ஞானத்தை பெற்றார்கள்.

ஒரு அனுபவம் ஒரு அனுபவம் ஒரு ஆன்மீக அனுபவம்
அனுபவித்தது என்ன? ரோஜாக் கொத்தில் இருந்து ரோஜாவின் நறுமணத்தை ஒரு பெண் உணர்கிறாள். அருகில் சந்தனமே இல்லாமல் சந்தன நறுமணத்தை ஒரு பெண் உணர்கிறாள்
மூலம் வெளிப்படையான ஸ்தூல உலகில் இருந்து வெளிப்படாத சூட்சும உலகில் இருந்து
எந்த ஊடகம் மூலம் பெறப்பட்டது? ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியின் மூலம் பெற்றது, இந்த உதாரணத்தில் மணம் உணரும் புலன் உறுப்பு மூலம் (மூக்கு) ஆறாவது அறிவின் மூலம் அதாவது 5 சூட்சும புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி என்கிற சூட்சும புலன் உறுப்புகளின் மூலம் பெற்றது. உதாரணத்தில் மணம் உணரும் சூட்சும புலன் உறுப்பின் மூலம்.

மேலே இருக்கும் படத்தில் ரோஜாக் கொத்தை முகரும் ஒரு பெண்ணை காண்கிறோம். ரோஜா நறுமணத்தின் மூல காரணமான ரோஜாக் கொத்து கண்டிப்பாக அங்கே இருப்பதால் இது ஒரு அனுபவம் ஆகும். அடுத்த படத்தில் ரோஜா வாசனை ஏதும் முகராத ஒரு பெண் தன் வேலையை தொடங்க இருக்கிறாள். திடீரென்று எக்காரணமும் இல்லாது அவளுக்கொரு சந்தன வாசம் கிடைக்கிறது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் முதலில் அவள் இதை மறுத்துவிட்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்கிறாள். அந்த வாசனை அவளை வேலைத்தளம் வரை பின்தொடர்ந்து வருகிறது. அருகில் இருப்பவர்களிடம் சந்தன வாசனை வருகிறதா என்று அவள் கேட்டதற்கு இல்லை என்று பதில் கிட்டியது. இது ஒரு ஆன்மீக அனுபவம், ஏனென்றால் சூட்சும பரிமாணத்தில் இருந்து மணம் உணரும் சூட்சும உறுப்பால் இவ்வாசனையை அப்பெண் பெற்றுள்ளாள். சூட்சும புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தியின் மூலம் சூட்சும பரிமாணத்தை உணர்வதைத்தான் ஆறாவது அறிவு என்கிறோம்.

3. ஐந்து சூட்சும புலன்கள் மூலம் பெறும் ஆறாவது அறிவு ஞானம் என்பது என்ன?

இவ்வுலகம் பஞ்ச தத்துவங்களால் ஆனது. காணமுடியாத இந்த தத்துவங்கள் படைக்கப்பட்ட அனைத்திலும் இருக்கும். ஆறாவது அறிவு எழுச்சி அடைந்தவுடன் அதிகபட்ச ஸ்தூலத்தில் இருந்து அதிகபட்ச சூட்சுமம் வரை பரிபூரண பஞ்சபூத தத்துவங்களை உணரத் தொடங்குவோம். ஆகையால் வரிசையாக பரிபூரண நிலம் (ப்ருத்வி), நீர் (ஆப), நெருப்பு (தேஜ), காற்று (வாயு)  மற்றும் ஆகாய (ஆகாஷ்) தத்துவங்களை சூட்சும புலன்களாகிய வாசனை, சுவை, பார்வை, தொடுகை மற்றும் ஒலியால் உணர்கிறோம்.

கீழே உள்ள அட்டவணையில் ஆறாவது அறிவு மூலம் (அதாவது ஐந்து சூட்சும புலன்கள் மூலம்) உணரப்படும் நேர்மறை மற்றும் எதிர்மறையான ஆன்மீக அனுபவங்களிற்கான உதாரணங்களை காணலாம்:

ஆறாவது அறிவு சூட்சும புலன்  சம்பந்தப்பட்ட பரிபூரண பஞ்ச தத்துவம் ஆன்மீக அனுபவத்தின் உதாரணம்
+ நேர்மறை அனுபவம் எதிர்மறை அனுபவம்

வாசனை

நில தத்துவம்

அருகில் சந்தனமே இல்லாமல் அதன் வாசனை பெறுவது

காரணமே இல்லாது வீட்டில் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படுவது

சுவை

நீர் தத்துவம் வாயில் எதுவும் போடாமல் இனிப்புச் சுவை  உணர்வது வாயில் கசப்புச் சுவை உணர்வது
பார்வை

நெருப்பு தத்துவம்

தெய்வம் அல்லது ஒளி மண்டலத்தை பார்ப்பது

பேயை பார்ப்பது

தொடுகை

காற்று தத்துவம்

அருகில் யாரும் இல்லாமல் தலையில் கை வைக்கப்பட்ட உணர்வு

இரவில் பேய், பிசாசு போன்ற தீய சக்திகளால் தாக்கப்பட்ட உணர்வு

ஒலி

ஆகாய தத்துவம்

மணி அல்லது சங்கு அருகில் இல்லாமல் அதன் ஓசையை கேட்பது

அருகில் யாரும் இல்லாமல் விசித்திரமான மிரட்டும் குரல்களை கேட்பது

ஒரு நபர் சூட்சும புலன் உறுப்பால்,  ஒன்றை உணர்ந்தால், உதாரணமாக மணம், அது நேர்மறை சக்தியான தெய்வத்திடம் இருந்தோ அல்லது எதிர்மறை சக்தியான  பேய் போன்றவற்றிடம் இருந்தோ வரலாம்.

4. ஆறாவது அறிவை வளர்ப்பது எப்படி?

சூட்சும உலகம் நம்மை சூழ்ந்து இருந்தாலும் அதை நாம் காண முடியாது. காண முடியாத போதிலும் சூட்சும உலகமானது நமது வாழ்வில் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது. இத்தகைய உலகை உணர நமக்கு ”ஆன்மீக ஆன்டனா (antenna)” ஒன்று தேவைப்படுகிறது, அதாவது நமது ஆறாவது அறிவு எழுச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்மீக பயிற்சியால் ஆறாவது அறிவு வளர்ச்சியடையும். ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளின் படி ஆன்மீக பயிற்சி செய்தால் நமது ஆன்மீக நிலை வளர்ந்து அதிகபட்ச சூட்சும உலகை உணர முடியும்.

ஆறாவது அறிவு என்றால் என்ன?
\'விஸ்வ மனமும் புத்தியும்: கடவுளின் படைப்பான மானிடர்கள், விலங்குகளுக்கு மனமும் புத்தியும் இருப்பது போல் கடவுளின் மொத்த படைப்பான அண்டத்திற்கும் மனமும் புத்தியும் உண்டு. இதில் அண்டத்தில் உள்ள அனைத்தின் உண்மையான தகவல்கள் இருக்கும். இது கடவுளின் மனம் மற்றும் புத்தி என்றும் கூறலாம். ஒருவர் ஆன்மீக வளர்ச்சி அடைய அவரது சூட்சும மனமும் புத்தியும் கடவுளின் மனம், புத்தியுடன் இணைந்து கடவுளின் சகல படைப்பைப் பற்றியும் அறியலாம்.

ஆன்டனாவுடன் இணைக்கப்படாத தொலைகாட்சி கருப்பு-வெள்ளை புள்ளிகள் மட்டுமே காண்பிப்பது போல், தொலைகாட்சி நிலையம் சிக்னலை அனுப்பிய பின்பும் ஆன்டனாவுடன் இணைக்கப்படாத வரை தொலைகாட்சி சிக்னலை பெற முடியாது. அதே போல் சூட்சும உலகமும் கடவுளும் நம்மை சுற்றி இருக்கிறார்கள் ஆனால் ஆன்மீக பயிற்சி செய்து ஆறாவது அறிவை எழுப்பாத வரை அவைகளை உணர முடியாது.

ஆன்மீக பயிற்சியால் ஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர் திறனை மேம்படுத்துவது எப்படி என்ற பக்கத்தை பார்க்கவும்.

சில நேரங்களில் எவ்வித ஆன்மீக பயிற்சி செய்யாத போதும் இளம் வயதிலேயே சூட்சும உலகை உணரும் திறன் கொண்டவர்களை பார்க்கிறோம். ஏனென்றால் தேவையான ஆன்மீக நிலையை முற்பிறவியிலேயே ஆன்மீக பயிற்சி செய்து பெற்றிருப்பார்கள். மற்றொரு காரணம் என்னவென்றால் இளம் வயதிலேயே சூட்சும மாந்த்ரீகனால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பார்கள். இங்கு மாந்த்ரீகனின் ஆறாவது அறிவுதான் வெளிப்படுகிறது.

5. ஆறாவது அறிவுடன் ஆன்மீக நிலையின் சம்பந்தம் என்ன?

அறிந்த உலகுடன் சூட்சும உலகம் அல்லது பரிமாணத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் விகிதம் ஒன்றுக்கு முடிவிலியாக (Infinity ‘∞’) இருக்கும்

நமது ஆன்மீக நிலை அதிகரிக்கும் பொழுது படிப்படியாக அதிக அளவில் சூட்சும உலகை ஆறாவது அறிவால் உணரத் தொடங்குவோம். ஆன்மீக நிலையுடன் ஆறாவது அறிவிற்கு இருக்கும் தொடர்பை கீழே உள்ள பட்டியல் விளக்குகிறது.

சூட்சும உணர் திறனும் ஆன்மீக நிலையும்

நபரின் ஆன்மீக நிலை (%) பெற்ற ஞானத்தின் சதவிகிதம் (%)
5 சூட்சும புலன்கள் மூலம்  சூட்சும மனம் மற்றும்  புத்தியின் மூலம்
40% 10% 40%
50% 30% 50%
60% 70% 60%
70% 100% 70%
80% 100% 80%
90% 100% 90%
100% 100% 100% (அத்வைதம்)

மேலே உள்ள அட்டவணையில் 70% ஆன்மீக நிலை அடைந்தவுடன் சூட்சும புலனுறுப்புகளால் அதிக பட்சம் உணர முடியும்  என்பதை காணலாம். ஆகையால், ஆன்மீக நிலை மேலும் வளர 5 சூட்சும புலனுறுப்புகளின் சூட்சும உணர் திறன் மேலும் பெருகாது. ஆனால் சூட்சும மனமும் புத்தியும் 100% ஆன்மீக நிலை அடையும் வரை, அதிக அளவில் விஸ்வ மனம் மற்றும் புத்தியை தொடர்ந்து கிரஹிக்கும். ஆன்மீக நிலையினால் மட்டுமே ஆறாவது அறிவு இயங்கும் எனில், ஒவ்வொரு சூட்சும புலனையும் உணர தேவையான குறைந்தபட்சம் ஆன்மீக நிலை என்னவென்பதை கீழே உள்ள அட்டவணையில் காணலாம். உதாரணம், 40% ஆன்மீக நிலையில் ஒருவர் வாசனை என்ற சூட்சும புலனை உணரலாம்.

ஆறாவது அறிவு என்றால் என்ன?

ஆன்மீக நிலைக்கும் ஆறாவது அறிவுக்கும் உள்ள உறவை விளக்க வழிகாட்டியாக இந்த சட்டவரைப்படம் இருந்தாலும் கீழேயுள்ள சில விஷயங்களை கவனிக்க வேண்டும்:

  • சூட்சும வாசனை என்ற ஆன்மீக அனுபவத்தை யாராவது பெற்றிருந்தால், 40% ஆன்மீக நிலையை அடைந்துள்ளார் என்ற அவசியம் இல்லை. பல நேரங்களில் நாமஜபம் போன்ற தீவிர ஆன்மீக பயிற்சி அல்லது மஹான்களின் ஸத்சங்கத்தில் இருந்ததால் தற்காலிக ஆன்மீக நிலையோ திறனோ உயர வாய்ப்புண்டு.
  • இந்த அனுபவத்தின் வேறு சில காரணங்களும் இருக்கலாம். உதாரணம், பேய், பிசாசு, தீய சக்தி போன்றவை ஒருவரை பயமுறுத்த தனது ஆன்மீக சக்தியை உபயோகித்து வீட்டில் சிறுநீர் நாற்றத்தை ஒருவருக்கு ஏற்படுத்தலாம். அவரின் ஆன்மீக நிலை உயராவிட்டாலும் இது நடக்கலாம்.
  • 40% ஆன்மீக நிலை அடைந்த அனைவருமே சூட்சும வாசனை உணருவார்கள் என்று அவசியம் இல்லை. ஒரு நபரின் ஆன்மீக நிலை என்பது பல பண்புகளின் நிகர செயல்பாடு; ஆறாவது உணர்வு அவற்றில் ஒன்று. ஆன்மீக நிலை என்ற கட்டுரையை படிக்கவும்.
  • எந்நேரமும் மற்றும் குறித்த நேரத்திலும், எல்லாவித சூட்சும வாசனைகளையும் 100 சதவிகிதம் இந்த நபர்கள் உணர முடியும் என்றும் அவசியம் இல்லை.
  • 40% ஆன்மீக நிலை அடைந்த ஒருவர் கண்டிப்பாக சூட்சும வாசனை உணருவார்கள் என்றும் அவசியம் இல்லை. 5 சூட்சும புலன்களால் எதுவும் உணராமலும் மஹான் நிலை (70% ஆன்மீக நிலை) அடைய வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு காரணம், முற்பிறவியில் இந்த அனுபவங்கள் கிடைத்திருந்து, இப்பிறவியில் அவை தேவைப்படாது இருக்கலாம். சூட்சும மனம் மற்றும் புத்தியுடன் தொடர்புடைய ஆறாவது அறிவு அனைத்து மஹான்களிலும் இருக்கும்.

வரைபடத்தில் இன்னொரு விஷயத்தை காணலாம், உயர்ந்த ஆன்மீக நிலையில் மட்டுமே தொடுகை  மற்றும் ஒலி  என்ற சூட்சும புலன்களை உணர முடியும். காரணம், 5 சூட்சும புலன்களில் இவ்விரண்டும் மிகவும் சூட்சுமம் ஆகும்.

6. ஆறாவது அறிவிற்கும் பாலினத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?

பெண்களுக்கு ஆண்களைவிட பொதுவாக வலிமையான ஆறாவது அறிவு இருக்கும். அவர்களுக்கு மிக இயல்பாகவே புலன்கடந்த உணர்வு இருப்பதோடு, ஆண்களை விட அதிக உள்ளுணர்வை கொண்டிருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் அதிகம் புத்தி ரீதியாகவும் பகுத்தறிவுடனும் இருப்பதே ஆகும்.

7. சூட்சும மனம் மற்றும் புத்தியால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்கள்

சில நேரங்களில் அறியாத ஒரு வீட்டிற்கு வந்தவுடன் நம் வீட்டிற்கே வந்தது போல் விசித்திரமாக உணருதல், வரவிருக்கும் பேரழிவின் முன்னுணர்வு அல்லது நம் விருப்பிற்கு முற்றிலும் முரணாக இருக்கும் ஒருவரின் மீது தீராத காதல் போன்றவையை அனுபவித்து இருப்போம். சூட்சும மன அனுபவங்களே இவை. இதற்கான காரணங்களை நம்மால் விளக்க முடியாது. சூட்சும பரிமாணத்தில் இருந்து தகவல் பெற்று அவ்வுலக வாசிகளுடன் உரையாடும் நபர்களை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். கீழே உள்ள பத்திகளில் இந்த நூதனமான சம்பவங்களின் விரிவான  விளக்கங்களை காணலாம்.

7.1 இந்த தகவலை மக்கள் எவ்வாறு உணருகிறார்கள்?

சூட்சும பரிமாணத்தில் இருந்து தகவல் பெறுபவர்கள் பொதுவாக மூன்று வழிகளில் பெறுவார்கள்:

  • ஒரு சூட்சுமவாசியிடம் நமது கையை உபயோகிக்க விட்டு அவரது தகவலை எழுதுவது (தானாக எழுதுதல்)
  • வார்த்தைகளையும் பத்திகளையும் கண்ணெதிரே நேரில் காணுதல்
  • எண்ணங்களின் மூலம்

இவைகளில் எண்ணங்களால் பெற்ற பதில்கள் தான் மிகவும் சூட்சுமமானது.

7.2 ஆறாவது அறிவு அனுமதிக்கும் ஞானத்தின் மூல இடம் என்ன?

சூட்சும பரிமாணத்தில் இருந்து தகவல் பெறுபவர்கள் கீழ்கண்டவாறு பெறுவார்கள்:

  • விஸ்வ மனம் மற்றும் புத்தியில் இருந்து சுயமாக தகவல் எடுக்கும் திறமை
  • சூட்சும வாசிகளிடம் குறிப்பான கேள்விகள் கேட்டு பதில்கள் அறிவது. ஆறாவது அறிவான சூட்சும மனம் மற்றும் புத்தியால் இதைச் செய்வார்கள்.

இவ்விரு சூழ்நிலைகளிலும் அந்த நபர் சூட்சும பரிமாணத்தை புரிந்து கொண்டாலும் ஆன்மீக வளர்ச்சி  பெற்ற நபரால் மட்டுமே தகவல் பெற்றது முதல் வழியிலா அல்லது இரண்டாவது வழியிலா என்று சொல்ல முடியும். பல நேரங்களில் புவர்லோகம் அல்லது பாதாள லோகத்தில் வசிக்கும் சூட்சும தேகங்களுடன் தான் அந்த நபர்கள் உரையாடுவார்கள். தெய்வம் மற்றும் கடவுளிடம் (விஸ்வ  மனம் & புத்தி) உரையாடுவது அரிது.

பெற்ற தகவலின் வகை மற்றும் நிலை, தகவல் பெறுபவரின் ஆன்மீக நிலையை பொறுத்து இருக்கும்.

ஆறாவது அறிவு என்றால் என்ன?

தாழ் லோகங்களில்  இருந்து பெறப்படும் தகவல்:

பரிபூரண அல்லது தெய்வீக ஞானம் என்பது முழுமையான, உண்மையான மாற்றமில்லாத ஞானமாகும் அதாவது பரிபூரண சத்தியம்.

தாழ்ந்த லோகங்களில் (புவர்லோகம், பாதாளம்) வசிக்கும் சூட்சும தேகங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் பொதுவாக உலக ரீதியில் குறிப்பிட்ட உலக பகுதிகளுக்கு மட்டுமானதாகவும் குறுகிய கால இடைவெளி கொண்டதாகவும் இருக்கும். இதற்கு உதாரணம், ஒருவருக்கு திருமணம் ஆவது அல்லது வேலை கிடைப்பது போன்ற தகவல்கள். சூட்சும பரிமாணத்தின் தாழ்ந்த நிலை சூட்சும தேகங்களிடம் இருந்து பெறப்பட்ட ஞானத்தின் மற்றொரு உதாரணம் எந்த நாட்டில் எந்த அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்பதாகும்.

நாஸ்டிரடேமஸ் பெற்ற தகவல் இவ்வகையைச் சார்ந்தது ஆகும். 50% ஆன்மீக நிலையில் இருக்கும் அவர் 40% ஆன்மீக நிலையில் இருக்கும் ஒரு சூட்சும தேகத்திடம் இருந்து தகவல்களை பெற்றார். ஞானம் பெற பல வழிகள் இந்த வகையைத்தான் சார்ந்தது.

40% ஆன்மீக நிலையில் உள்ள சூட்சும தேகம் அதைவிட உயர்ந்த நிலை சூட்சும தேகத்திடம் இருந்து ஞானம் பெறும். சமநிலையோ அல்லது சிறிதளவு அதிக நிலையில் இருக்கும் சூட்சும தேகங்களும் இந்த தேகத்திற்கு தகவலை பகிரலாம். அதாவது கொத்தனார் தச்சு வேலை  அல்லது கட்டிடக்கலை பற்றி இன்னொருவரிடம் ஞானத்தை பெறுவது போன்றதாகும்.

உயர் லோகங்களில்  இருந்து பெறப்படும் ஞானம்:

இந்த பிரபஞ்சம் பதினான்கு லோகங்களால் ஆனது. இதில் ஏழு நல்ல லோகங்களும், ஏழு தீய லோகங்களும் அடங்கும். பூமி ஒன்றே ஸ்தூலமான லோகமாகும், மற்ற எல்லா லோகங்களும் சூட்சுமமானவை. சொர்க்கம் என்பது இறப்பிற்கு பிறகு நாம் போகக்கூடிய நல்ல லோகங்களுள் ஒன்றாகும்.

மஹர்லோகம், மற்றும், அதன் மேலிருக்கும் லோகங்களில் வசிக்கும் சூட்சும தேகங்களிடம் இருந்து பெறப்பட்ட ஞானம் ஆன்மீகமானதே ஆகும். பெறப்பட்ட இந்த ஞானம்  விருத்தியடையும்  அண்டத்தின் தேவைக்கேற்றதாகும். பல நூற்றாண்டு காலத்திற்கு மகத்துவம் பெற்றதாகும். விஸ்வ மனம் மற்றும் புத்தியிடம்  (கடவுளின் மனம் & புத்தி) இருந்து பெற்ற ஞானம் மிகவும் உயர்ந்த வகை ஆகும். படத்தில் விளக்கியது போல் மஹான்களால் மட்டுமே இஞ்ஞானத்தை பெற முடியும். இதற்கு உதாரணமாக, பண்டைய பாரதத்தின் முனிவர்கள் புனித வேதங்களின் ஞானம் பெற்றதை கூறலாம்.

ஆறாவது அறிவினால் பெற்ற ஞானத்தின் மூலத்தை சரிபார்ப்பதற்கு ஒருவர் 90% ஆன்மீக நிலையில் உள்ள மஹானாக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

சூட்சும லோகங்களை பற்றி மேலும் தகவல் அறிய இக்கட்டுரையை படிக்கவும் “இறப்பிற்கு பின் வாழ்வு – நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்?“.

7.3 பெற்ற தகவல் ஆறாவது அறிவினால் தானா அல்லது நமது ஆழ்மன எண்ணங்களில் இருந்து வருகிறதா என்று கண்டறிவது எப்படி?

பெற்ற ஞானம் வெளி இடத்தில் இருந்து பெறப்பட்டதா இல்லை நமது கற்பனையில் உருவாகியதா என்று அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன.

  • இஞ்ஞானத்தின் உள்ளடக்கம் அவர் பயிலும் துறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருத்தல். உதாரணம், உயிர்நிலை பள்ளியில் கூட தேர்ச்சி பெறாத ஸாதகர் ஒருவர் இயந்திரங்களின் சிக்கலான வரைபடங்களை பெறுகிறார்.
  • பெற்ற ஞானத்தின் அளவும் இன்னொரு அறிகுறியாகும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர் ஒருவர் சூட்சும பரிமாணத்தில் இருந்து 28 அக்டோபர் 2003 முதல் தெய்வீக ஞானத்தை பெற்று வருகிறார். தினமும் 15-20 A4 காகித அளவில் பெறப்படும் இஞ்ஞானம் மனிதகுல நன்மைக்காக ஆராயப்படுகிறது.

7.4 ஆறாவது அறிவு மற்றும் சூட்சும புத்தியின் மூலம் யார் ஞானத்தை பெறுவார் என்று நிர்ணயிக்கும் காரணிகள் எவை?

எப்படிப்பட்டவர் ஆறாவது அறிவின் மூலம் ஞானம் பெறுவார் என்பதை பல காரணிகளின் சேர்க்கை தீர்மானிக்கிறது. சூட்சுமத்தில் இருந்து ஞானத்தை யார் பெறுவார் என்பதை தீர்மானிப்பதில் உள்ள முக்கிய காரணி அவரது ஆன்மீக நிலை ஆகும். ஆன்மீக நிலையைத் தவிர, ஞானத்தை பெறுவது போன்ற உயர் ஆன்மீக அனுபவங்களைப் பெறுவதை தீர்மானிக்கும் காரணிகள்:

  • அந்நபரின் ஊக்கமும் ஆழ்ந்த தாபமும்
  • இறை பணியின் தேவை
  • குருவின் சங்கல்பமும் ஆசீர்வாதமும் (70%-க்கு அதிக ஆன்மீக நிலை உள்ள ஆன்மீக வழிகாட்டி)
  • ஞானம் பெறுபவரின் விதி

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உயர் ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் பூமியில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் போன்ற தாழ்ந்த வகை ஞானத்தை பெற ஆசை இருந்தால், உயர் நிலை சூட்சும சரீரங்களில் இருந்து ஞானம் பெற வல்லவராக இருப்பினும் தாழ்ந்த சூட்சும சரீரங்களிடம் இருந்து தான் ஞானம் பெறுவார். மாறாக, 50% போன்ற குறைந்த ஆன்மீக நிலை கொண்டவர், ஆன்மீக அறிவியலின் உயர் தத்துவங்களை அறியும் ஆழ்ந்த ஊக்கம் கொண்டிருந்தால் உயர் சூட்சும சரீரங்கள் அல்லது உச்சலோகத்தின் சூட்சும சரீரங்களிடம் இருந்து ஞானம் பெறுவார், குறிப்பாக குருவினால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தால்.

7.5 ஆறாவது அறிவு, முன்னுணர்வு மற்றும் இடம்-நேரம்

சிலருக்கு நிகழ இருக்கும் நிகழ்வுகளின் முன்னுணர்வு, அல்லது கடந்த காலத்தில் நிகழ்ந்தவை பற்றி உள்ளுணர்வு இருக்கும். இவை இரு வழிகளால் சாத்தியம்:

  1. சூட்சும சரீரங்கள் மூலம்: சூட்சும சரீரங்களால் அவரது ஆழ்மனதில் முன்னுணர்வு தகவல் செலுத்தப்படும். பல சமயங்களில்,  இந்த சூட்சும சரீரங்கள் புவர்லோகம் அல்லது பாதாளத்தின் ஆவிகளாக தான் இருக்கும். இத்தகைய சரீரங்களுக்கு காலம் கடந்து பார்க்கும் திறமை இருக்கலாம். அவைகளிடம் இத்தகுதி இல்லையெனில் உயர்தர பேய்கள், மந்திரவாதிகளிடம் இருந்து தகவல் பெறும்.
  2. விஸ்வ மனம் மற்றும் புத்தியை அணுகுதல்: விஸ்வ  மனம் மற்றும் புத்திக்கு 7 படலங்கள் உண்டு. ஒருவரின் ஆறாவது அறிவின் தரத்தை பொறுத்து விஸ்வ மனம் மற்றும் புத்தியின் தாழ்ந்த அல்லது உயர் படலத்தை அணுகலாம்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னுணர்வு (எதிர்காலத்தின் முன்னெச்சரிக்கை), ஞானதிருஷ்டி (தொலைவிலுள்ள பகுதியில் இருந்து வரும் தகவல்) மற்றும் முன்னறிவிப்பு (நீண்ட காலத்தில் இருந்து கிடைத்த தகவல்) நிகழ்வுகளிலும் பெற்ற தகவல்கள் சூட்சும சரீரங்களிடம் இருந்து வந்ததே தவிர, இறைவனின் மனம் மற்றும் புத்தியை தொடர்புகொண்டு பெற்ற தகவல்கள் அல்ல. சூட்சும சரீரங்கள் ஏற்படுத்தக்கூடிய தீங்குகளைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

7.6 ஆறாவது அறிவின் மூலம் பெற்ற தகவலின் துல்லியம் என்ன?

பொதுவாக ஒருவர் தனக்கு சமமான ஆன்மீக நிலையில் இருக்கும் சூட்சும சரீரங்களிடம் இருந்து ஞானம் பெறுவார். ஞானத்தின் துல்லியமும் தரமும் கூட ஒரே மாதிரி இருக்கும். இதை புரிந்துக்கொள்ள 0 – 100% வரையான அளவுகோலை எடுத்துக்கொள்வோம். ஞானமற்றது என்பது 0%. நம் புத்தியால் பெறப்படும் குறைந்தபட்ச ஞானம் 1% ஆகும். விஸ்வ புத்தியில் இருந்து பெறப்படும் ஞானம் 100%.

  • 40% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் அதே அளவில் (40%) இருக்கும் சூட்சும சரீரத்திடம் இருந்து ஞானம் பெறுவார். அந்த ஞானத்தின் துல்லியமும் தரமும் 40% அளவே ஆகும்.
  • 70% ஆன்மீக நிலை வரை பெறப்படும் ஞானம் அநேகமாக பேய்கள் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து தான் வரும் அதனால் அதனுடன் கருப்பு சக்தியும் இருக்கும். ஞானம் பெரும் வழிமுறைகளை பற்றி அறியாதவர்கள் இதைப் பற்றி அலட்சியமாக இருந்து பெற்ற ஞானத்தை கண்மூடித்தனமாக நம்பிவிடுவார்கள். சூட்சும சரீரங்களிடம் இருந்து பெற்ற ஞானமாக இருந்தால் அநேகமாக பகுதியாகவோ முழுமையாகவோ தவறானதாக இருக்கும். ஆரம்பத்தில் சூட்சும சரீரங்கள் சில உண்மையான தகவல்களை கொடுத்து நம்மை நம்ப வைக்கும். நாம் நம்பத்தொடங்கிய பின்பு பலவகை தவறான தகவல்களை அள்ளிக்கொடுக்கும். இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் சூட்சும சரீரங்கள் கொடுக்கும் தகவல்கள் கருப்பு சக்தி கூடியதாக இருக்கும். இது உடல்நலம், உளவியல் பலவீனம், குழம்பிய புத்தி போன்ற பல்வேறு வழிகளில் ஞானம் பெறுபவரை மோசமாக பாதிக்கிறது. ஆனால் இந்த செயல்முறை  படிப்படியாக மெதுவாக ஏற்படுவதால் அது ஞானம் பெறும் நபர், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கவனத்திலிருந்து தப்பிக்கிறது. ஞானத்தை பெறும் இந்த செயல்முறை சிறிது காலம் தொடர்ந்தால், மெதுவாக நபர் சூட்சும சரீரத்தின் கைகளில் ஒரு கைப்பாவையாக மாற்றப்பட்டு, சூட்சும சரீரத்தின் சுயநலனுக்காக பயன்படுத்தப்படுகிறார்.
  • 70% ஆன்மீக நிலைக்குப் பிறகு, ஞானமானது சுவர்க்கத்திற்கும் மேலேயுள்ள உயர் பகுதிகளில் உள்ள மகான்கள் மற்றும் முனிவர்கள் போன்ற நேர்மறையான சூட்சும சரீரங்களால் வழங்கப்படும், அல்லது விஸ்வ மனம் மற்றும் புத்தியின் ஊடகங்கள் மூலம் பெறப்படும், மேலும் அதனுடன் எந்த கருப்பு சக்தியும் இருக்காது.
  • ஒருவர் 70% ஆன்மீக நிலை அடைந்த பின்பு விஸ்வ மனம் மற்றும் புத்தியில் இருந்து பரிபூரண ஞானம் பெறுவார்.

பேய்கள் (பிசாசுகள், துர்தேவதைகள், தீய சக்திகள் போன்றவை) தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு போன்ற சூட்சு பரிமாணத்தின் எதிர்மறை தாக்கங்களை புரிந்துக்கொள்ள பல்வேறு நிலைகள் உள்ளன. பொதுவாக மக்கள் அனுபவிப்பது சிறுதுளி தான். ஆன்மீக நிலை 90% அடைந்தால் மட்டுமே சூட்சும பரிமாணத்தின் முழு விஸ்தீரணத்தையும் உணர முடிகிறது.

அமானுஷ்ய செயல்பாட்டை ஆறாவது உணர்வோடு உணரும் திறனின் ஆழம் குறித்த எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

8. ஆறாவது அறிவை தவறாக பயன்படுத்துவதன் விளைவு என்ன?

மோக்ஷம் எனும் உச்சகட்ட ஆன்மீக வளர்ச்சி அடையவே ஆறாவது அறிவை பயன்படுத்த வேண்டும். ஆகையால் உலக ஆதாயங்களுக்கு ஆறாவது அறிவை உபயோகித்தால் விளைவு என்ன? ஆன்மீக ரீதியில், ஆன்மீக முன்னேற்றத்தை தவிர மற்றதற்கு ஆறாவது அறிவை உபயோகித்தால் துஷ்பிரயோகம் என்று கருதப்படும். உதாரணம், ஒரு மனத்திறன் கொண்ட நிபுணர் தனது சூட்சும திறனை ஒரு நபருக்கு திருமணம் நடக்குமா, வேலை கிடைக்குமா என்று அறிய முயன்றால் ஆன்மீக ரீதியில் இது துஷ்பிரயோகம் ஆகும்.

சூட்சும திறன் கொண்ட ஒருவர் தனது ஆறாவது அறிவை துஷ்பிரயோகம் செய்தால் காலப்போக்கில் 2 நிகழ்வுகள் நடக்கலாம்:

  1. 30 ஆண்டு காலாவதியில் தனது சூட்சும திறனை இழக்கக்கூடும்.
  2. உயர்ந்த ஆன்மீக நிலை சூட்சும மந்திரவாதிகளின் இலக்கு ஆகிவிடுவார்கள். சூட்சும மந்திரவாதிகள் ஆரம்பத்தில் சில உண்மையான தகவலை கொடுத்து நம் நம்பிக்கையை வென்று விடுவார்கள். ஆனால் சிறு காலத்திற்கு பின் நம்மை தவறான திசையில் வழி  நடத்துவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களின் சூட்சும திறன் நீண்ட காலத்திற்கு நீடிக்கும், உண்மையில் அவை சீராக முன்னேறியதாகத் தோன்றலாம். ஆனால் இத்திறன் தனது முயற்சியால் இல்லாமல் அந்நபரை வழிநடத்தும் சூட்சும மந்திரவாதியால் தான் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரிய பொக்கிஷமான சூட்சும திறனை மோக்ஷம் அடைய உபயோகிக்காமல் தாழ்ந்த விஷயங்களில் வீணாகி விடுகிறது.