விதி என்றால் என்ன? அதை எவ்வாறு வெல்வது?

விதியை எவ்வாறு வெல்வது என்பதை அறிய, ஒருவர் முதலில் விதியைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்:

விதி மற்றும் தன்னிச்சையான செயல் என்றால் என்ன?

  • நம் வாழ்க்கை நமது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது, நடக்கும் அனைத்தும் நாம் தேர்ந்தெடுத்த பாதைகளின் விளைவுகளாகும் என்பது பொதுவான மேற்கத்திய கருத்து ஆகும்.
  • மறுபுறம், நடக்கும் அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தில் நாம் அனைவரும் கைப்பாவைகள் என்பது பொதுவான கிழக்கத்திய கருத்து ஆகும்.
விதி மற்றும் தன்னிச்சையான செயல் என்றால் என்ன?

எனினும் இந்த கருத்துக்கள் எதுவும் முற்றிலும் சரியானவை அல்ல. இன்றைய  சூழலில் ஒருவரது வாழ்க்கை 65% விதியாலும், மீதம் 35% தன்னிச்சையான செயலாலும் நிர்ணயிக்கப்படுகின்றது என்கிறது ஆன்மீக சாஸ்திரம்.

முறையான ஆன்மீக பயிற்சியை மேற்கொண்டு ஒருவர், தன்னுடைய தன்னிச்சையான செயலின் 35%-த்தை பயன்படுத்தி, அவரது 65% விதியை வெல்ல முடியும்.

ஆனால் விதி என்றால் என்ன? ஆன்மீக சாஸ்திரத்தின் படி, வாழ்க்கை சூழ்நிலைகளில் ஒருவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத போது அது விதியை குறிக்கிறது.

ஒருவரது வாழ்வில் எந்த பகுதி அவரது கட்டுப்பாட்டில் உள்ளதோ, அதுவே தன்னிச்சையான செயலை குறிக்கும்.

தன்னிச்சையான செயலுக்கு ஒரு எடுத்துக்காட்டு: ஒரு நபர் குடிபோதையில் இருக்கிறார் மற்றும் மோசமாக பராமரிக்கப்பட்ட ஒரு வாகனம் அவரிடம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது வாகனத்தை குடிபோதையில் செங்குத்தான மலைப்பகுதியில் ஓட்ட முடிவு செய்து, அதிவேகத்தில் செலுத்துகிறார். அவர் ஒரு கட்டத்தில் மலைப்பாதையிலிருந்து சறுக்கி விழுந்தால், அது யாருடைய தவறு? இது விதியால் ஏற்பட்ட விபத்தா அல்லது தன்னிச்சையான செயலால் ஏற்பட்ட விபத்தா?

அவர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாமல் இருந்திருக்கலாம், ஆகையால் இது தன்னிச்சையான செயலாகும். அவர் தனது வாகனத்தை சிறந்த முறையில் பராமரித்து வைத்திருக்கலாம் மற்றும் அதை மெதுவாக ஓட்டிச் சென்றிருக்கலாம்.

விதிக்கப்பட்ட நிகழ்வின் எடுத்துக்காட்டு: குடிபோதையில் இல்லாத மற்றொரு ஓட்டுநரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தனது வாகனத்தை சரியாக பராமரித்து, கவனமாக ஓட்டுபவர். அவரும்  அதே மலைப் பகுதியில் தனது வாகனத்தை முன்னெச்சரிக்கையாக கவனத்துடன் ஓட்டுகிறார். திடீரென நிலச்சரிவு காரணமாக சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, அவர் விபத்தை சந்திக்கிறார். இந்த நிகழ்வில் அந்நபரின் பங்களிப்பு எதுவும் இல்லாததால் இது ஒரு விதிக்கப்பட்ட நிகழ்வாகும்.

விதி என்பது ஆன்மீக ரீதியானதால் அதற்கு ஆன்மீக நிவாரணத்தால் மட்டுமே  தீர்வு காண முடியும், அந்த தீர்வு ஆன்மீக பயிற்சியாகும். விதியின் தீவிரத்தன்மைக்கு ஏற்றார் போல் ஒருவர் பொருத்தமான அளவில் ஆன்மீக பயிற்சியை மேற்கொண்டால், விதியிலிருந்து மீண்டு வரலாம். பின்வரும் அட்டவணை பல வகையான விதி மற்றும் அதைக் கடப்பதற்கான வழிகளையும் எடுத்துக்காட்டுகளுடன் காட்டுகிறது:

விதியின் வகைகள்
மிதமான மத்யம தீவிர
உதாரணங்கள் சிறு வியாதிகள், ஒரு திருமணம் ஏற்பாடு செய்ய தேவையான முயற்சிகள் சராசரியை விட அதிகம் பொருள் பிரச்சினைகள், நிதி இழப்புகள், குழந்தைப்பேறு இல்லாமை பெரும் விபத்துக்கள் மற்றும் அகால மரணம், மிக அதிக முயற்சிகள் எடுத்தும் ஒரு திருமணம் ஏற்பாடு செய்ய முடியாதது
எவ்வாறு வெற்றி கொள்வது மத்யம ஆன்மீக பயிற்சி தீவிர ஆன்மீக பயிற்சி ஆன்மீக பயிற்சியால் மாற்ற முடியாது. குருவின் அருள் மட்டுமே அதை மாற்ற முடியும்

தீவிர ஆன்மீக பயிற்சி என்பது, அளவின் அடிப்படையில், ஒரு நாளில் 12-14 மணி நேரத்தை ஆன்மீக பயிற்சிக்காக ஒதுக்குவதாகும். தரத்தின் அடிப்படையில், இது ஒருவர் இறைவனை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில், மிகுந்த ஏக்கத்துடன், தன் அன்றாட வேலைகளை ஆழ்ந்த பக்தியுடன் இறைவனுக்கு செய்யும் சேவையாக செய்வதாகும்.

ஆய்வுக் கட்டுரைகள்

1. தீவிரமான விதியிலிருந்து பாதுகாப்பு

Mr. Thakkar

திரு.தக்கர் அவர்கள், தனது ஆன்மீக பயிற்சி மற்றும் தனது உன்னத ஆன்மீக வழிகாட்டியின் அருளால், அகால மரணம் ஏற்படக் கூடிய அபாயத்தைக் கடந்தார்.  மேலும் அறிக