மகான் என்பவர் யார்?

1. அறிமுக ஸ்லைடு

மேலே வழங்கப்பட்டுள்ள இணைப்பில் ஆன்மீக சாஸ்திரப்படி யாரை மகானாகக் கருதலாம் எனும் ஆன்மீக எண்ணக்கருவினை விளக்குகிறோம். இந்த விளக்கக்காட்சியை முழு திரையில் பார்க்க விரும்பினால், கீழே வலது புறத்தில் உள்ள முழு திரை தெரிவை கிளிக் செய்யவும்.

2. பல நூற்றாண்டுகளாக மகான்களை தொடர்ந்து வருகின்றமை

பல நூற்றாண்டுகளாக, இவ்வுலகம் பல ஆன்மீக ஆசான்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மகான்களாக கருதி வருகிறது.

3. மகான் நிலைக்குரிய வெவ்வேறு குணாதிசியங்கள்

பல மதங்களும் கலாச்சாரங்களும் ஒருவரின் மீது வழங்கப்படும் மகான் நிலைக்கான பல்வேறு குணாதிசயங்களையும், அளவுகோல்களையும் நிர்ணயித்துள்ளன.

4. மகான் நிலைக்குரிய பொதுப்படையான அளவுகோல்கள்

இதைப் பற்றி சுருக்கமான ஆய்வு ஒன்று நடத்திய பிறகு, பல்வேறு மதங்களிடையே ஒருவரை மகானாக கருத்துவதற்கான சில பொதுவான அளவுகோல்கள் இருப்பதை நாங்கள் கண்டோம்.

  • முதலாவதாக ஒரு நபர் தர்மவழி நிற்பவராகவும் நற்பண்பு உடையவராகவும் இருக்க வேண்டும்.
  • அந்த நபர் குறிப்பிட்ட மதத்தவராக இருக்க வேண்டும். இதை வேறுவிதமாக கூற வேண்டும் என்றால் பொதுவாக ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு மதத்தின் மகானை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், காரணம் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பது ஒன்றே ஆகும்.
  • சில மதங்களில், மகான் நிலைக்கு ஒருவரை கருத்தில் கொள்வதற்கு முன்பு அவர் காலமாகி சுவர்க்கத்தில் ஓர் இடத்தை அடைந்திருக்க வேண்டும் என்பது தேவைப்பாடாக இருக்கிறது. எனினும் மற்றும் சிலர் ஓரு நபர் வாழும் போதே மகான் நிலையை அடைய முடியும் என்றும் ஒப்புக் கொள்கின்றனர்.
  • சிலருக்கு ஒரு மகான் என்பவர், உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் அற்புதங்களை நிகழ்த்த வேண்டும். அந்த நபரின் பூத உடல் அழியாமல் இருப்பதும் இறந்த பிறகு ஏற்படும் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அத்துடன் அந்த மகானிடம் பிராத்தனை செய்த பிறகு குணமாவதுடன், அது அவர் இடையிட்டு கடவுளிடம் பரிந்து பேசியதால் தான் குணம் அடைந்ததாகவும் கருதப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஒரு நபர் அந்த மகான் விட்டுச் சென்ற பொருட்களுடன் தொடர்பு கொள்ளும்போது வியக்கத்தக்க வகையில் குணமடைகிறார். எனவே, பக்தன் சார்பில் கடவுளுடன் இடைவிடாமல் செயல்பட மகான் சக்தியுடையவராக இருப்பது அவசியம்.

5. மகான் ஒருவர் உருவாகும் செயல்முறை

நாம் இப்பொழுது ஒரு மகான் எப்படி பிரகடனப்படுத்தப்படுகிறார் என்பதற்கான சில பிரபலமான வழிகளை பார்ப்போம்.

  • முறையான / முறைசாரா செயல்முறை: ஒரு நபர் அம்மதத்தின் அடிப்படை விதிகளை பூர்த்தி செய்தால், அவர் முறையான அல்லது முறைசாரா செயல்முறை மூலம் ஒரு மகானாக அறிவிக்கப்படுவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இந்த முறையான செயல்முறையை கேனோநைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்த முறையான நடைமுறை பல வருடங்கள் வரை நீடிக்கும்.
  • இச்செயல்முறையை நடத்தும் மக்கள் மகான்கள் அல்ல: பெரும்பாலும், இவ்வகை முறையான அல்லது முறைசாரா செயல்முறைகளின் மூலம் மகானாக பிரகடனப்படுத்துபவர்கள் மகான்கள் அல்ல, ஆனால் அவர்கள் மதம் சார்ந்த அல்லது அந்த மதத்தை ஒழுகுபவர்களாக இருக்கலாம்.
  • சமுதாயத்தின் பிரபலமான வாக்கு: சில சந்தர்ப்பங்களில் அது சமூகத்தின் பிரபல வாக்குகளால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது.
  • மதத்தினை மையமாகக் கொண்டது: எந்த மதத்தினராயினும், மக்கள் பொதுவாக தமது மதத்தில் இருந்து ஒரு நபருக்கு மாத்திரமே மகான் பட்டத்தை வழங்குகின்றனர். மற்றொரு மதத்திலும் அல்லது பண்பாட்டிலும் கூட ஓர் மகான் இருக்கலாம் என்பதனை அவர்கள் பொதுவாக கருதுவதில்லை.
  • அமானுஷ்ய சக்திகளை காண்பித்தல்: சில சந்தர்ப்பங்களில் மக்கள் தங்களை சுயமாக மகான்களாக அறிவித்துக் கொள்கிறார்கள். சில குறிப்பிட்ட ஆன்மீக பயிற்சிகள் மூலம் சில அமானுஷ்ய சக்திகளை வெளிக்காட்டுவதால், அவர்களை மக்கள் பின்தொடரவும் செய்கின்றனர்.

6. ஆன்மீக சாஸ்திரப்படி மகான் என்பதன் வரைவிலக்கணம்:

ஒரு நபரின் ஆன்மீக நிலை அல்லது ஆன்மீக முதிர்ச்சியை 1% முதல் 100% அளவுகோல் மூலம் காணும் போது, 100% இறைவனாக இருக்கையில், அத்துடன் ஆறாவது அறிவின் மூலம் மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், இன்றைய உலகில் சராசரி நபரின் ஆன்மீக நிலை 20% தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாங்கள் ஆன்மீக ஆராய்ச்சி மூலம், உலகின் 80% -மான மக்களின் ஆன்மீக நிலை 35% -ற்கு கீழே உள்ளது என்றும் கண்டறிந்துள்ளோம்.

ஆன்மீக சாஸ்திரத்தின்படி, எந்த மதம் அல்லது ஆன்மீக ஸாதனை வழிமுறையை செய்பவராக இருப்பினும் ஒருவரின் ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 70% இருந்தால்தான், அவர் மகான் நிலையை அடையும் தகுதி பெறுகிறார்.

7. நாம் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளோம் ?

இப்போது ஆன்மீக நிலை என்பது என்ன என்று நீங்கள் யோசிப்பீர்கள்.

மனிதர்களான நாம் பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளோம், அவையாவன:

  • <பௌதீக உடல் (ஸ்தூல தேஹம்): இதனுள் நமது உடலும் மற்றும் தொடுதல், சுவை, ஒலி, மணம் மற்றும் பார்வை ஆகிய ஐந்து உணர்வுகளும் அடங்கும்.
  • மனம் (மனோ தேஹம்): இது வெளிமனம் மற்றும் ஆழ்மனம் இரண்டையும் கொண்டுள்ளது. நமது மனமே உணர்வுகள் மற்றும் உள்ளுணர்ச்சிகளின் ஆதாரமாக விளங்குகிறது.
  • புத்தி (காரண தேஹம்): தகவல்களை செயலாக்கும் திறனை நமக்கு வழங்குகிறது.
  • சூட்சும அகம்பாவம் (மஹாகாரண தேஹம்): இது நம்மை கடவுளிடமிருந்து தனித்திருப்பதாக உணரச் செய்கிறது.
  • இறுதியாக ஆத்மா: நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இறைத்தத்துவம் ஆகும்.

அகம்பாவம் என்றால் என்ன? முதல் நான்கும் நமது அகம்பாவத்தை நிர்மாணிக்கிறது அல்லது நம்மை கடவுளிடமிருந்து தனித்திருப்பதாக உணரச் செய்கிறது. நமது ஆத்மா தான் நம்முள் இருக்கும் இறைத்தத்துவம். ஆன்மீக சாஸ்திரத்தின்படி நமது ஆத்மா தான் உண்மையான உணர்வு நிலை ஆகும்.

8. ஆன்மீக முதிர்ச்சி மற்றும் ஆன்மீக பரிணாமம் மற்றும் ஆன்மீக நிலையை எது நிர்ணயம் செய்கிறது?

ஒரு மனிதனின் பரிணாமம் அல்லது ஆன்மீக முதிர்ச்சி அல்லது ஆன்மீக நிலை என்னவென்றால், உள்ளிருக்கும் ஆத்மாவை எந்தளவு தூரம் அடையாளம் காண்கிறார்கள் அல்லது அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள் மற்றும் எந்தளவு தூரம் தம்முடன் பிறந்த ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியிலிருந்தும் அகம்பாவத்தில் இருந்தும் பிரித்து அறிகிறார்கள் என்பதை பொருத்ததாகும்.

9. மகானைப் பற்றி மேலும் சில தகவல்கள்

ஒரு மகான் என்பவர் குறைந்த அகம்பாவம் கொண்ட ஒரு நபர். அவர்கள் தங்களுக்குள்ளே கடவுளை அனுபவிப்பதுடன், மற்றவர்களிடம் உள்ள இறை தத்துவத்தையும் காண்பார்கள்.

10. மகான் நிலையை எவ்வாறு அடைவது?

ஒருவரின் ஆன்மீக நிலையை உயர்த்த ஒரே வழி ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்கிய ஆன்மீக பயிற்சியை படிப்படியாக அதிகரிப்பதாகும். இக்கோட்பாடுகளை பற்றி விரிவாக SSRF (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) வகுப்பறை பயிற்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. அனைவரையும் அதைக் காணுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.