ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?

ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?

அட்டவணை

1. அனுபவம் மற்றும் ஆன்மீக அனுபவத்தின் பொருள் விளக்கம்

ஐம்புலன்கள், மனம், புத்தி மூலமாக உணர்வது ‘அனுபவம்’ ஆகும் என்று எஸ்.எஸ்.ஆர்.எப் பொருள் விளக்கம் அளித்துள்ளது. உதாரணத்திற்கு, பிடித்தமான உணவை உண்பது, தன் குழந்தையின் மீது அன்பு வைப்பது, புத்திபூர்வமாக அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பது போன்றவை ‘அனுபவம்’ என்ற பிரிவிற்குள் அடங்கும். ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணர்வது ‘ஆன்மீக அனுபவம்’ ஆகும். ஐம்புலன்கள், மனம், புத்தி மூலமாக சில சம்பவங்களை உணர முடிந்தாலும் அதற்கு மூல காரணமானது ஸ்தூல மனித புத்திக்கு அப்பாற்பட்டு இருந்தால் அதுவும் ‘ஆன்மீக அனுபவம்’ ஆகிறது.

2. அனுபவம் மற்றும் ஆன்மீக அனுபவம் – ஒரு ஒப்பீடு மற்றும் நம்முடைய கண்ணோட்டம்

ஒரு அனுபவம் ஒரு ஆன்மீக அனுபவம்
ஆன்மீக அனுபவம் என்றால் என்ன? ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?
என்ன அனுபவம் ஏற்பட்டது? ஒரு பெண்ணிற்கு, ஒரு ரோஜா பூங்கொத்திலிருந்து ரோஜா வாசனை கிடைகிறது சந்தனம் இல்லாமலேயே ஒரு பெண்ணிற்கு சந்தன சுகந்தம் கிடைக்கிறது
மூலம் வெளிப்பட்டது மற்றும் ஸ்தூல பரிமாணம் உடையது வெளிப்படாதது மற்றும் சூட்சும பரிமாணம் உடையது
எதன் மூலம் உணரப்பட்டது? ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியை உபயோகித்து உணரப்படுவது. இந்த உதாரணத்தில் நுகரும் புலன் அதாவது மூக்கு வாயிலாக உணரப்பட்டது ஆறாவது அறிவின் மூலமாக உணரப்படுவது. அதாவது சூட்சும புலன்களான சூட்சும ஐம்புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தியை உபயோகித்து உணரப்படுவது. இந்த உதாரணத்தில் சூட்சும நுகரும் புலன் வாயிலாக உணரப்பட்டது
எஸ்.எஸ்.ஆர்.எப், ‘சூட்சும உலகம்' அல்லது 'ஆன்மீக பரிமாணம்' என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது கண்களால் காண இயலாத தேவதைகள், ஆவிகள், ஸ்வர்க்கம் நிறைந்த உலகைக் குறிக்கிறது. இதை நம் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.

நாம் ஸ்தூல உலகை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியைக் கொண்டு உணர்கிறோம். நாம் அறிந்த இந்த ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியைப் போலவே நம்மிடம் சூட்சும ஐம்புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி உள்ளன. இவற்றை மேம்படுத்தி விழிப்படைய செய்வதன் மூலம் சூட்சும உலகம் மற்றும் சூட்சும பரிமாணத்தை நம்மால் உணர முடியும். இத்தகைய சூட்சும உலக அனுபவத்தை ‘ஆன்மீக அனுபவம்’ எனக் கூறுவர்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு பெண் ரோஜா பூங்கொத்தை நுகர்ந்து அதன் நறுமணத்தை அனுபவிப்பதை பார்க்க முடிகிறது. இது ஒரு அனுபவம் ஆகிறது; இதில் நறுமணத்திற்கு ஆதாரமாக ரோஜா பூங்கொத்து உள்ளது. இன்னொரு படத்தில் ஒரு பெண் தன் காலை காபியை உறிஞ்சியபடியே அன்றைய வேலைகளை பற்றி சிந்திக்கிறாள். திடீரென்று எந்த ஒரு காரணமுமின்றி அவளால் சந்தன நறுமணத்தை நுகர முடிகிறது. நறுமணம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததால் அதைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை. ஆனால் அந்த நறுமணம் அவள் அலுவலகத்திற்கு சென்ற பிறகும் அவளைத் தொடர்கிறது. அன்றைய காலைப் பொழுது முழுவதும் அவளை சுற்றி அந்த நறுமணம் கமழ்கிறது. மற்றவர்களால் அந்த நறுமணத்தை உணர முடிகிறதா எனக் கேட்கிறாள். ஆனால் யாராலும் உணர முடியவில்லை. இது ஒரு ஆன்மீக அனுபவமாகும். இந்த சம்பவத்தில் அந்தப் பெண் சூட்சும பரிமாணத்திலிருந்து வெளிப்படும் நறுமணத்தை தன் சூட்சும நுகர்தல் புலன் மூலமாக உணர்ந்துள்ளாள்.

நம்மில் பலருக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதாவது எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே நறுமணத்தை நுகர்ந்து பின்பு அதைப் பற்றிய ஞானம் இல்லாததால் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். இது போன்ற ஆன்மீக அனுபவத்தை மற்ற நான்கு சூட்சும புலங்களான சுவை, தொடு உணர்ச்சி, நாதம் மற்றும் காட்சி ஆகியவற்றுடன் சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி மூலமாகவும் உணரலாம். இது போன்ற அதீதமான உணர்வை நம் ஆறாவது அறிவு என்கிறோம். முன்பு கூறியது போல், ஒரு நிகழ்வை நம் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி மூலமாக உணர்ந்தாலும் அதற்கு பின்புலமான காரணம் மனித இனத்தின் ஸ்தூல புத்திக்கு அப்பாற்பட்டு இருந்தால் அதுவும் ஆன்மீக அனுபவமாகிறது.

  • இதற்கான ஒரு உதாரணம் – எந்தவித வெளி உந்துதல் இல்லாமல் ஒரு பொருள் தானாகவே நகர்தல் மற்றும் அதை ஸ்தூலமாக கண்களால் பார்த்தல் (அதாவது சூட்சும பார்வையால் அல்ல). சாதாரண உலக வழக்கில் இது போன்ற சம்பவங்கள், அமானுஷ்ய சம்பவங்கள் என கூறப்படுகின்றன. இவற்றை ‘ஆன்மீக பரிமாணத்தின் உணர்வுகள்’ எனக் கூறுவர்.
  • இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு பயங்கர விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் அபாயகர நிலையில் உள்ள ஒரு குழந்தையின் தாயின் உதாரணம். மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் கூட எந்த பயனும் இல்லை. அவர்களால் உறுதி கூற முடியவில்லை. துக்கத்தின் எல்லைக்கு சென்று விட்ட தாய், கடவுளிடம் குழந்தையின் உயிருக்காக தொடர்ந்து மன்றாடுகிறாள். மாயமந்திரத்தைப் போல மறுநாள் எந்த வித மருத்துவ விளக்கமும் இல்லாமல் குழந்தை தேற ஆரம்பிக்கிறது. சிறிது சிறிதாக தேறி அபாய கட்டத்தை கடந்து விடுகிறது. இங்கு குழந்தையின் நிலை மற்றும் தாயின் பிரார்த்தனை ஸ்தூலத்தில் நடந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு சவாலாக விளங்கும் உடல்நிலை தேர்ச்சி புத்திபூர்வமாக விளக்க முடியாததாக உள்ளது. இது போன்ற அனுபவங்களும் ஆன்மீக அனுபவங்கள் ஆகின்றன.

ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?

3. ஆறாவது அறிவு என்றால் என்ன மற்றும் சூட்சும உலகை எவ்வாறு உணர்வது? 

ஆன்மீக அனுபவங்களை மற்றும் எல்லையில்லாத சூட்சும உலகத்தை எவ்வாறு உணர்வது போன்றவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு ஆறாவது அறிவு சம்பந்தமான கட்டுரைகளை படிக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

4. சூட்சும ஐம்புலன்கள் மற்றும் பஞ்சமஹாபூதங்களுடன் சம்பந்தப்பட்ட ஆன்மீக அனுபவங்கள்

இவ்வுலகம் பஞ்சமஹாபூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்ணால் காண முடியாது, ஆனால் எல்லா படைப்புகளிலும் இவை உள்ளன. நாம் ஆன்மீக பயிற்சியில் முன்னேறும்போது நமது ஆறாவது அறிவு விழிப்படைகிறது. அதன் மூலம் நமக்கு படிப்படியாக ஸ்தூலத்திலிருந்து அதி சூட்சுமம் வரை இந்த பரிபூரண தத்துவங்களின் அனுபவம் சித்திக்கிறது. இப்படியாக வரிசைப்படி பரிபூரண நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாய தத்துவங்களை முறையே நம்முடைய சூட்சும வாசனை, சுவை, காட்சி, தொடு உணர்ச்சி மற்றும் நாதம் மூலமாக அனுபவிக்க முடிகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் நமது ஆறாவது அறிவு, அதாவது நமது சூட்சும ஐம்புலன்கள் மூலமாக உணரப்படும் நல்ல மற்றும் கெட்ட ஆன்மீக அனுபவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆறாவது அறிவின்
சூட்சும உறுப்பு
சம்பந்தப்பட்ட பஞ்சமஹாபூதம் சம்பந்தப்பட்ட ஆன்மீக அனுபவத்தின் ஒரு உதாரணம்
plusநல்ல அனுபவம் கெட்ட அனுபவம்
வாசனை பரிபூரண நில தத்துவம் plusஎக்காரணமும் இல்லாமல் சந்தன நறுமணத்தை நுகர்வது

minusஎக்காரணமும் இல்லாமல் வீட்டை சுற்றி மூத்திர துர்நாற்றம் அடித்தல்

சுவை பரிபூரண நீர் தத்துவம் plusவாய்க்குள் எதுவும் போடாமலேயே இனிப்பு சுவையை உணர்தல்
minus வாயில் கசப்பு சுவையை உணர்தல்
பார்வை பரிபூரண நெருப்பு தத்துவம் plusதெய்வத்தை அல்லது ஒரு ஒளி வட்டத்தை காணுதல்
minusபேயைப் பார்த்தல்
தொடு உணர்ச்சி பரிபூரண காற்று தத்துவம் plusயாரும் அருகில் இல்லாமலேயே தலையின் மீது யாரோ கை வைப்பது போல் உணர்தல்
minus இரவில் ஆவியால் தாக்கப்படுதல் (பேய், பிசாசு, தீய சக்திகள்)
நாதம் பரிபூரண ஆகாய தத்துவம் plusமணி அல்லது சங்கு அருகில் இல்லாமலேயே மணியோசை அல்லது சங்கொலியை செவிமடுத்தல்
minus யாரும் அருகில் இல்லாமலேயே வினோத அச்சுறுத்தும் சத்தத்தை செவிமடுத்தல்

ஒருவர் சூட்சும புலன் மூலமாக ஏதாவது உணரும்போது, உதாரணத்திற்கு வாசனையை நுகரும்போது, தெய்வத்தைப் போன்ற ஒரு நல்ல சக்தி அல்லது ஆவியைப் போன்ற ஒரு தீய சக்தி அதற்கு காரணமாக விளங்கலாம்.

5. ஆன்மீக அனுபவம் மற்றும் ஆன்மீக நிலை

தெரிந்த உலகத்தை தெரியாத சூட்சும உலகம் அல்லது சூட்சும பரிமாணத்துடன் ஒப்பிடுவது என்பது எண் ஒன்றை அனந்தத்துடன் (முடிவிலி) ஒப்பிடுவதற்கு சமானமானது.

நம் ஆன்மீக நிலை உயர உயர, நமக்கு உயர்நிலை மற்றும் மேலும் சூட்சும நிலையிலான ஆன்மீக அனுபவங்கள் கிட்டுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒருவரின் ஐம்புலன்கள் மூலம் சூட்சும அனுபவத்தைப் பெற தேவையான குறைந்தபட்ச ஆன்மீக நிலை கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒருவர் சூட்சும வாசனையை நுகர அவர் 40% ஆன்மீக நிலை உள்ளவராக இருக்க வேண்டும்.

ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?

இந்த சட்ட வரைபடம் ஆன்மீக நிலைக்கும் சூட்சும புலன்களால் கிடைக்கும் அனுபவத்திற்கும் உள்ள நேரிடையான சம்பந்தத்தை விளக்குகிறது. அத்துடன் கீழுள்ள குறிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் :

  • ஒருவருக்கு சூட்சும வாசனையை நுகரும் ஆன்மீக அனுபவம் கிட்டுவதால் அவர் 40% ஆன்மீக நிலை அடைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பான்மையான சமயங்களில் தீவிர நாமஜபத்தை செய்ததால் அல்லது மகான்களின் ஸத்சங்கத்தில் இருப்பதால் தாற்காலிகமாக ஒருவரின் ஆன்மீக நிலை அல்லது திறன் உயர்வதால் இந்த அனுபவம் கிட்டுகிறது.
  • இந்த அனுபவம் ஏற்பட வேறு காரணங்களும் இருக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு ஆவி (பிசாசு, பேய், தீய சக்தி போன்றவை) ஒருவரை பயமுறுத்த அவர் வீட்டில் மூத்திர நாற்றம் அடிக்க வேண்டும் என நினைத்தால் தன் ஆன்மீக சக்தியை உபயோகித்து அதை செய்விக்கிறது. இதில் பாதிக்கப்படும் நபரின் ஆன்மீக நிலை உயர்வாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
  • 40% ஆன்மீக நிலையில் உள்ள எல்லோருக்கும் சூட்சும வாசனையை நுகர முடியும் என்று சொல்வதற்கில்லை. ஒருவரின் ஆன்மீக நிலை என்பது அவரின் பல தன்மைகளின் நிகர செயல்பாடு ஆகும்; ஆறாவது அறிவு என்பது அதில் ஒன்று ஆகும். ஆன்மீக நிலை பற்றிய கட்டுரை படிக்கவும்.
  • இவர்களால் எல்லா சூட்சும வாசனைகளையும் 100% நுகர முடியும் அல்லது எந்த நேரமும், எல்லா நேரமும் நுகர முடியும் என்று அர்த்தமில்லை.
  • 40% அல்லது அதற்கு மேல் ஆன்மீக நிலை கொண்ட ஒருவரால் கட்டாயம் சூட்சும வாசனையை நுகர முடியும் எனவும் கூற இயலாது. ஒருவர், ஒருமுறை கூட சூட்சும ஐம்புலன்கள் மூலமாக எதுவும் உணராமலேயே மகானின் நிலையை (70% ஆன்மீக நிலை) அடையலாம். இவ்வகை அனுபவங்களை பெறாததற்கு ஒரு காரணம், குறிப்பிட்ட நபர் ஏற்கனவே முந்தைய ஜென்மங்களில் இந்த அனுபவங்களை பெற்றிருக்கிறார் என்பதும் தற்போது அவை தேவையில்லை என்பதுமாகும். இருப்பினும், சூட்சும மனம் மற்றும் புத்தியுடன் தொடர்புடைய ஆறாவது அறிவு எல்லா மகான்களிடமும் உண்டு.

சட்ட வரைபடத்தின் மூலம் சூட்சும தொடு உணர்வு மற்றும் நாதம் உயர் ஆன்மீக நிலைகளிலேயே கிடைக்கிறது என்பது தெரிகிறது. இதன் காரணம் ஐம்புலன்களில் அவை அதி சூட்சுமமாக உள்ளன.

6. ஆன்மீக அனுபவங்களின் முக்கியத்துவம் என்ன?

ஆன்மீக அனுபவங்களின் முக்கிய பலன்கள் கீழே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன:

6.1ஆன்மீகத்தின் தத்துவார்த்த கோட்பாடுகளில் நம்பிக்கை உண்டாதல்

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி புத்தி அளவில் தத்துவார்த்த ஞானத்தின் வார்த்தைகள் 2% முக்கியத்துவமே கொண்டது, ஆனால் இவ்வார்த்தைகளை அனுபவபூர்வமாக உணர்தலே 98% முக்கியத்துவம் வாய்ந்தது.  ஒருவர் ஆன்மீகத்தின் அடிப்படை கோட்பாடுகளின்படி ஆன்மீக பயிற்சி செய்யும்போது அவரின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டு ஆன்மீக அனுபவங்களும் கிடைக்கின்றன. புத்தகங்களிலிருந்து கிடைக்கும் ஞானத்திற்கும் ஆன்மீக அனுபவ ஞானத்திற்கும், ஆன்மீக பயிற்சி பாலமாக விளங்குகிறது.

ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?

ஆன்மீகத்தைப் பற்றி ஆர்வமுள்ளவருக்கு ஓரளவு நம்பிக்கை வருமளவிற்கே தத்துவார்த்த ஞானம் பயன்படுகிறது. ஆன்மீக வளர்ச்சியின் நிலைகளில் இதுவும் ஒரு படி; எனினும் ஒருவருக்கு ஆன்மீக அனுபவங்கள் கிட்டும்போது அவருக்கு புத்திபூர்வமான ஞானத்திலும் நம்பிக்கை ஏற்படுகிறது.

ஆன்மீக வளர்ச்சியின் நிலைகள் கட்டுரையைப் படிக்கவும்.

இக்காரணத்தினால்தான் ஸத்சங்கங்களின் போது ஆன்மீக அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆன்மீக ஞானமாக ஸத்சங்கங்களில் கற்றுத் தரப்படுபவை வெறும் தகவல்கள் அல்ல, மாறாக அவற்றை உண்மையில் அனுபவபூர்வமாக உணர முடியும் என்பதை ஸத்சங்கங்களில் பங்கேற்கும் ஸாதகர்கள் உணர்கிறார்கள்.

6.2 ஆன்மீக முன்னேற்றத்தை உணர்தல்

சரியான ஆன்மீக பயிற்சி செய்து அதிக தரமுள்ள உயர்நிலை ஆன்மீக அனுபவங்களைப் பெறும் ஸாதகர்கள், ஆன்மீக முன்னேற்றத்தை அடைகின்றனர் என்பது அவர்களுக்கு கிடைக்கும் ஆன்மீக அனுபவங்களின் மூலம் தெரிகிறது. அவர்கள் ஆன்மீக மைல்கல்லாக செயல்பட்டு மற்றவர்களின் ஆன்மீக பயணத்திற்கும் ஊக்கம் அளிக்கின்றனர். நாம் ஆன்மீக பயிற்சியைத் தொடரவில்லை என்றால் நமக்கு ஆன்மீக அனுபவங்கள் தொடர்ந்து கிடைக்காது. நாம் ஆன்மீக பயிற்சியில் தேக்கமடைந்து விட்டால் உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் கிட்டாது. தேக்கம் என்றால் தரத்திலோ அல்லது அளவிலோ உயர்த்தாமல் அதே ஆன்மீக பயிற்சியை வருடம் முழுவதும் செய்வதாகும். நாம் நம் ஆன்மீக பயிற்சியை மேலும் நெறிப்படுத்த வேண்டும் என்று இறைவன் நமக்கு அறிவிக்கும் செய்தி இது.

 ‘தினசரி ஆன்மீக பயிற்சியை செய்ய வேண்டும்’ மற்றும் ‘ஆன்மீக பயிற்சியை தொடர்ந்து அதிகப்படுத்த வேண்டும்’ என்ற கட்டுரைகளைப் படிக்கவும்.

குறிப்பு : ஒரு குறிப்பிட்ட வழியில் ஆன்மீக பயிற்சி செய்யும்போது நமக்கு மூன்று வருடங்களாக எந்த ஒரு ஆன்மீக அனுபவமும் ஏற்படவில்லை என்றால் நம்முடைய வழி சரியானதா என்று ஆன்மீகத்தில் உயர்நிலையிலுள்ள ஒரு மகானைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மகானை அணுக முடியவில்லை என்றால் ‘நீங்கள் பிறந்துள்ள மதத்திற்கு ஏற்ற நாமஜபத்தை செய்தல்’ என்ற கட்டுரையைப் படித்து உங்களின் ஆன்மீக பயணத்தைத் துவங்குங்கள்.

6.3 இறைவனின் உன்னதத்தை உணர்வதால் அகம்பாவம் குறைகிறது.

ஒருவரின் ஆன்மீக பயணத்தின் துவக்க காலத்தில், மற்ற ஸாதகர்களின் வேறுபட்ட, ஆழமான ஆன்மீக அனுபவங்களைக் கேட்கும்போது மனம் பிரமிப்பில் ஆழும். ஒவ்வொருவருள்ளும் நம்பிக்கை வளர இவ்வளவு விதமான ஆன்மீக அனுபவங்களைத் தரும் இறைவனோடு ஒப்பிடும்போது நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று உணர ஆரம்பிப்போம். அதன் பலனாக ஒருவருக்கு தன் திறனின் மீதுள்ள அகம்பாவம் குறைய ஆரம்பிக்கிறது. குறைவான அகம்பாவமே ஆன்மீக முன்னேற்றத்திற்கு வித்திடுகிறது.

7. ஆன்மீக அனுபவங்களை பதிவு செய்வதன் முக்கியத்துவம் என்ன?

  • ஆன்மீக அனுபவங்களை பதிவு செய்து வெளியிடுவதால் ஆன்மீக பயிற்சியால் கிடைக்கப் பெறும் பல்வேறு ஆன்மீக அனுபவங்களைப் பற்றி மற்ற ஸாதகர்களுக்கு தெரிய வருகிறது. அதனால் மேலும் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட ஸாதகர்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது.
  • ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவத்தை மனதில், புத்தியில் பதிய வைத்து விடாமுயற்சியுடன் ஆன்மீக பயிற்சி செய்ய நம்மை ஊக்குவிக்கிறது.
  • ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவம் ஏற்படும்போது அது உண்மைதானா என்ற சந்தேகம் எழும்புகிறது. ஆனால் அதைப் போன்ற ஆன்மீக அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளது என தெரிய வரும்போது நம்பிக்கை வலுவடைகிறது. இதன் பின்னால் சாஸ்திரம் உள்ளது என்பது புரியும்போது ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.
  • ஆன்மீக அனுபவங்கள் பெற்ற ஒரு ஸாதகர் எம்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டார் என்று கண்டறிவதன் மூலம் நம்முடைய ஆன்மீக பயிற்சியை வளப்படுத்த முடிகிறது.

8. ஆன்மீக அனுபவங்களால் ஆன்மீக பயிற்சியை மேம்படுத்துவதில் எவ்வாறு தடைகள் ஏற்படுகின்றன?

இவ்வளவு கூறிய பின்பும், ஆன்மீக அனுபவங்கள் கட்டாயம் ஆன்மீக பயிற்சியை மேம்படுத்துகிறது என்று சொல்ல இயலாது. பெரிய அதிசயத்தைக் கண்டால் கூட மக்கள் உடனே ஆன்மீக பயிற்சியை செய்ய ஆரம்பிப்பார்கள் எனக் கூற இயலாது. ஆன்மீக பயிற்சி செய்யும் மக்கள் ஆன்மீக அனுபவங்கள் பெற்றும் கூட ஆன்மீக பயிற்சி செய்வதை நிறுத்தி விடுகிறார்கள் அல்லது ஒரு நிலையில் தேங்கி விடுகிறார்கள். முழு செயல்பாட்டுடன் ஆன்மீக பயிற்சியைத் தொடர ‘நான் இப்பிறவியிலேயே ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டும்’ என்ற மன உறுதி வேண்டும். இதற்கு ஆன்மீக அனுபவங்கள் புத்திக்கு துணை போவது இல்லை. தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்வதற்கும் ஆன்மீக பற்றுதல் வளர்வதற்கும் ஆன்மீகத்தை பற்றி ஆழ்ந்து கற்க வேண்டும். மனதில் முன்பே தீர்மானிக்கப்பட்ட எண்ணங்கள் எதுவுமில்லாமல் திறந்த மனத்துடன் கற்க வேண்டும்.

9. ஏன் சில சமயங்களில் ஆன்மீக பயிற்சி செய்தும் கூட ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுவது இல்லை?

இதற்கான காரணங்கள் பின்வருமாறு :

  • ஆன்மீக அனுபவங்கள் என்பவை நம் ஆன்மீக முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். இருந்தாலும் ஆன்மீக பயிற்சியை ஆரம்பித்த உடனேயே ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்காது. இதற்கான காரணம் நம் ஆன்மீக பயிற்சியின் பலன் நம்முடைய தீவிர எதிர்மறை விதியை அல்லது சஞ்சித கர்மாவை குறைக்க பயன்படுகிறது. அதனால் ஆரம்பத்தில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதில்லை, ஆன்மீக அனுபவங்களும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் தொடர்ந்த விடாமுயற்சியால் இந்த ஆரம்ப நிலையை நாம் தாண்டி செல்ல இயலும்.

இங்கு துக்கத்திற்கு காரணமாகும் விதியை எதிர்மறை விதி என குறிப்பிடுகிறோம். இதற்கான ஒரு உதாரணம் ஒரு பெரிய விபத்தில் சிக்குவது. அதாவது ஒருவர் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்கும்போது இதன் பலன் தீவிர விதியான பெரிய விபத்தின் தீவிரத்தைக் குறைக்க பயன்படுகிறது. அதன் மூலம் அந்த விபத்து நடப்பதற்கு முன்னால் அந்த ஸாதகருக்கு மெதுவாக செல்லவோ, வேறு திசையில் செல்லவோ உந்துதல் ஏற்பட்டு விபத்தின் தீவிரத்தன்மை குறைக்கப்படுகிறது. அதனால் ஸாதகருக்கு மிக சிறிய காயங்களோ அல்லது எந்தவித காயங்களோ ஏற்படாமல் அவர் தப்பிக்கலாம். கடவுளின் மீது நம்பிக்கை ஏற்பட அல்லது  சிறிது தத்தளிக்கும் நம்பிக்கை உறுதிப்பட கடவுள் நமக்கு ஆன்மீக அனுபவங்களை அருள்கிறார். நம்முடைய பக்தி, உறுதியாக இருக்கும் பட்சத்தில் நமக்கு ஆன்மீக அனுபவங்கள் தேவைப்படுவதில்லை. ஆன்மீக முன்னேற்றத்தின் நிலைகள் என்ற கட்டுரையைப் படித்து ஆன்மீக அனுபவங்கள் எவ்வாறு நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன என தெரிந்து கொள்ளுங்கள்.

10. ஆன்மீக அனுபவங்களின் சில உதாரணங்கள்

10.1சூட்சும வாசனை சம்பந்தமான ஆன்மீக அனுபவங்கள் (பூரண நில தத்துவத்துடன் சம்பந்தப்பட்டது)

spiritual experience of foul smell ஸத்சங்கத்திற்கு முன்பு துர்நாற்றத்தை நுகர்ந்த ஷில்பாவின் ஆன்மீக அனுபவத்தைப் படியுங்கள்
spiritual experience of a bad fish smell மீனின் துர்வாடையை நுகர்ந்த மனீஷாவின் ஆன்மீக அனுபவத்தைப் படியுங்கள்
spiritual experience of a fragrance from Holy ash ஸத்சேவை செய்யும்போது விபூதி வாசனையை நுகர்ந்த வம்சியின் ஆன்மீக அனுபவத்தைப் படியுங்கள்
spiritual experience of fragrance from a sweet (candy) wrapper that had been touched by H.H. Dr. Athavale பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் தொட்ட மிட்டாய் மேலுறையிலிருந்து சுகந்தத்தை நுகர்ந்த ஷானின் ஆன்மீக அனுபவத்தைப் படியுங்கள்
spiritual experience of a subtle fragrance emanating from a spiritual centre of SSRF 11 கி.மீ. தூரத்திலுள்ள எஸ்.எஸ்.ஆர்.எப். கேந்திரத்திலிருந்து வந்த சூட்சும சுகந்தத்தை நுகர்ந்த ஷில்பாவின் ஆன்மீக அனுபவத்தைப் படியுங்கள்
spiritual experience of a subtle fragrance of sandalwood ஆதாரம் எதுவுமில்லாமல் சூட்சும சந்தன வாசனையை நுகர்ந்த டாக்டர் கஷீத்தின் ஆன்மீக அனுபவத்தைப் படியுங்கள்

10.2 சூட்சும சுவை சம்பந்தமான ஆன்மீக அனுபவங்கள் (பூரண நீர் தத்துவத்துடன் சம்பந்தப்பட்டது)

spiritual experience of unexplained bitter taste நீர்க் குடுவையின் தண்ணீரில் கசப்பு சுவையை உணர்ந்த யோகிதாவின் ஆன்மீக அனுபவத்தின் ஆன்மீக சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்
spiritual experience of a weird taste of blood in the mouth மாந்த்ரீகனால் வாயில் அமானுஷ்ய ரத்த சுவையை உணர்ந்த யோகேஷின் ஆன்மீக அனுபவம்
spiritual experience of subtle fragrance and taste of sandalwood எஸ்.எஸ்.ஆர்.எப் வெளியிட்ட கட்டுரைகளைப் படிக்கும்போது சூட்சும சந்தன சுகந்தத்தையும் சுவையையும் உணர்ந்த மாயாவின் ஆன்மீக அனுபவத்தைப் படியுங்கள்
spiritual experience of subtle taste of sweetness தெருவில் நடந்து செல்லும்போது வாயில் இனிப்பு சுவையை உணர்ந்த தெரசாவின் ஆன்மீக அனுபவத்தைப் பற்றி படியுங்கள்