1. அறிமுகம்

‘சத்’ மற்றும் ‘சங்கம்’ ஆகிய இரு வார்த்தைகளும் சேர்ந்தே சத்சங்கம் எனும் வார்த்தை உருவானது. ‘சத்’ என்பது பூரண சத்தியம் அல்லது இறை தத்துவம். ‘சங்கம்’ என்பதன் பொருள் சகவாசம் ஆகும். எப்பொழுதும் இறைவனுடன் சகவாசத்தில் இருப்பது அல்லது இறை உணர்வினை நிலைநாட்டுவதே சத்சங்கம் எனும் வார்த்தையின் அர்த்தமாகும்.

மகான்களின் சகவாசத்தில் இருத்தல், அவர்களுடைய விலைமதிப்பற்ற அறிவுரைகளை கேட்டு முழு நம்பிக்கையுடன் பின்பற்றுதல் போன்றவை மகான்களின் சத்சங்கம் என கூறப்படுகிறது.

மகான்கள் என்போர் மனித ரூபத்தில் இறைவனை பிரதிநிதித்துவ படுத்துவதால் அவர்களுடன் சத்சங்கத்தில் இருப்பது அல்லது மகான்களின் சகவாசத்தில் இருப்பது மிகவும் உயரிய வகை பௌதீக சத்சங்கங்களில் ஒன்றாகும்.

2. இறைவனும் மகான்களும்

இறைவன் தன்னை மகான்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆகையினால் மகான்களின் சத்சங்கம் என்பது இறைவனின் சத்சங்கம் போன்றதாகும். மகான்கள் என்போர் ஞானத்தின் ஊற்றுக்கண்களாகும், எனவே கற்கும் மனப்பான்மையுடன் அவர்களிடம் சென்றால் நாம் கண்டிப்பாக நன்மைகளை பெறுவோம்.

மகானின் பணிகளில் ஒன்று மக்களுக்கு அவர்களுடைய தெய்வீக தன்மையை அல்லது ஆனந்தத்தை உணர்வதற்கு வழிநடுத்துவதாகும். இருப்பினும் மகான்களிடம் காணப்படும் இறை தத்துவம் அல்லது தெய்வீக தத்துவம் மிகவும் சூட்சுமம் என்பதால் பெரும்பாலான ஸாதகர்கள் மகான்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. இதற்கு காரணம் அவர்களுடைய சூட்சும ஆற்றல் விருத்தி அடையவில்லை என்பதாகும்.  இதனால் பெரும்பாலான ஸாதகர்கள் மகான்களின் பௌதீக இயல்புகளான பழக்கவழக்கம், தோற்றம், பேச்சுத்திறன் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். வெவ்வேறு மகான்களின் பௌதீக இயல்புகள் வேறுபடுவதால் ஸாதகர்கள் மகான்களை ஒப்பிட்டு பார்த்து ஒருவர் மற்றையவரை விட உயர்ந்தவர் என கருதுகின்றனர். எவ்வாறாயினும் மகான்களை தரிசிப்பதில்அதிகபட்ச நன்மையை பெற வேண்டுமாயின், அவர்களிடம் வெளிப்படும் இறை தத்துவமானது எல்லா மகான்களிலும் ஒன்றே என்பதை உணர்ந்து அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டும்.

3. ஒரு மகான் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

ஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த பௌதீக சத்சங்கம் மகான்களின் சகவாசம் ஆகும். இதனால் ஒருவற்கு கிடைக்கும் நன்மையானது, மகான்களை பற்றிய அவருடைய மனப்பான்மையினையும் அவர்களுடன் நடந்து கொள்ளும் முறையினை பொருத்தும் இருக்கும்.

3.1 ஒருவர் மகான் ஒருவரை அணுகும் போது அவரை இறைவனின் அம்சம் என்ற ஆன்மீக உணர்வுடன் அணுக வேண்டும். அதுபோல் மகான்களுக்கு உரிய மரியாதையை செய்ய வேண்டும். உதாரணமாக, மகான் ஒருவரை சந்திக்கும்போது சரணாகதியை குறிக்கும் முகமாக ஒருவர் தன்னுடைய சிரத்தை அவரது பாதங்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒருவரின் பிரஹ்மரந்திரத்தின் (தலை உச்சி) மூலமாக, மகானிடம் இருந்து வெளிப்படும் ஆனந்த அதிர்வலைகள் ஒருவருடைய தேகத்திற்குள் செல்லுகிறது.

3.2 மகானது அருகில் இருக்கும்போது இறைவனுடைய நாமத்தை நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உச்சரிக்க வேண்டும். மகான்கள் நாம் செய்யும் ஆன்மீக பயிற்சியிலும் இறைவனை அடைய நாம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் மாத்திரமே கருத்தில் கொள்வார்கள்.

3.3 ஒருவர் மகானின் முன்னிலையில் பணிவுடன் பேச வேண்டும். சத்தமாகவோ வலுவுடனோ பேசக்கூடாது.

3.4 அவர்களை பரிசோதிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்க கூடாது. ஒருவர் அவ்வாறு மகான் ஒருவரை பரிசோதிக்க முயல்வது அவருடைய உயர்வு மனப்பான்மையினை காட்டும். இதனால் அவரிடம் கற்கும் மனப்பான்மை குறைவடைவதுடன் மகானின் அருளையும் பெற முடியாமல் போய்விடும்.

3.5 மகான்கள் தமது பேச்சு, செய்கை, மேற்கோள், நகைச்சுவை, பரீட்சைகள், ஆன்மீக அனுபவங்கள் போன்ற பல்வேறு விதத்தில் கற்று தருகிறார்கள். ஆகையினால் ஒருவர் கற்கும் மனநிலையுடன் இருந்து அவர்கள் சொல்லி கொடுப்பவற்றை உள்வாங்கி கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் ஒருவர் அவற்றை நேர்மையாக கற்று, புரிந்து கொண்டு அவற்றை நடைமுறை படுத்த வேண்டும். மகான்கள் தம்முடைய படிப்பினைகளை நடைமுறை படுத்துபவர்களையே வழிநடத்துவார்கள்.

3.6 சில சமயங்களில் மகான்கள் நம்மை நிந்திக்கவோ அல்லது ஏசவோ கூடும். நாம் அவற்றுக்காக வருந்தவோ அவமதிப்பிற்கு உட்பட்டதாகவோ நினைக்க கூடாது. மாறாக அவர்கள் நம்மேல் கவனம் செலுத்தி நமது பிழைகளை திருத்த நேரம் செலவிடுகிறார்கள் என்பதை எண்ணி நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். அத்துடன் மகான்களது நோக்கம், நமக்கு பாடம் புகட்டுவதும் பெரும்பாலும் நமது ஆணவத்தை அழிப்பதும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மை திருத்தும் போது அதிலுள்ள படிப்பினையை உள்வாங்கி எவ்வாறு நம்மை மேம்படுத்தலாம் என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு மகான் ஸாதகரை நிந்திப்பது அவரை ஆன்மீக ரீதியில் முன்னேற்றுவதற்கே ஆகும்.

3.7 நாம் மகானை சந்திக்கும் போது எந்தவொரு எதிர்பார்ப்பும் கொள்ள கூடாது. முக்கியமாக வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சில மகான்கள் பதில் அளித்தாலும் அவ்வாறான எதிர்பார்ப்புகளை கொண்டிராமல் இருப்பது சிறந்தது. மகான்களை சந்திக்கும் போது வெறுமனே பொருள் ஆதாயங்களிற்கு ஆசீர்வாதம் பெறுவதை விட, ஆன்மீக மனப்பான்மையினை கொண்டிருப்போமானால் நமது ஆன்மீக பயிற்சியினை கொண்டு நடத்துவதற்கு தேவையான வழிநடத்தலையும் மகான்களின் அருளினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

3.8 ஒருவர் ஒரு மகானுக்கு சேவை செய்யக்கூடிய ஒவ்வொரு தருணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது இறைவனின் சகுண ரூபத்திற்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகும். ஆன்மீகத்தை பரப்புவது (இது இறைவனுடைய நிர்குண ரூபத்திற்கு சேவை செய்வது) போல், மகான்களிற்கு சேவை செய்வது ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவசியமாகும்.

4. மகான்களின் சத்சங்கம் மூலம் பெறப்படும் நன்மைகள்

4.1 ஆன்மீக பயிற்சிக்கு தேவையான அருளையும் தனிப்பட்ட வழிகாட்டுதலையும் பெறுதல்

மகான்கள் எதிர்பார்ப்பு அற்ற அன்பின் மறுவடிவம். அவர்களது அக்கறை யாவும் இறைவனை அடைவதில் தீவிரமான ஆசையை கொண்டிருக்கும் சாதகர்களின் ஆன்மீக முன்னேற்றமே. சத்சங்கத்தின் போது மகான்கள் ஸாதகர்களை தனிப்பட்ட முறையினில் வழிநடத்துகிறார்கள். ஒரு ஸாதகரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு என்ன தேவை என்பதை மகான்கள் மிகச் சரியாக அறிவார்கள். ஆகையால் அதற்கு ஏற்றாற்போல் சரியான ஆன்மீக பயிற்சி பற்றி வழிநடத்துகிறார்கள். மகான் கூறுவது யாவற்றையும் ஒரு சாதகர் பணிவுடன் நடைமுறை படுத்துவார் எனில் மகானின் பூரண கருணையினை பெற்று அவர் தன்னுடைய ஆன்மீக பாதையில் முன்னேறுவர்.

ஆன்மீகத்தை பொறுத்தவரையில் விரைவான முன்னேற்றத்திற்கு மகான் ஒருவர் கூறும் காரியத்தை எந்தவொரு நிபந்தனையும் இல்லாது உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும். கீழ்ப்படிதல் என்பது வழிநடத்தல்களை உடனடியாக, பூரணமாக மற்றும் நிபந்தனைகள் அற்று முழுமையாக ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறை படுத்துதலும் ஆகும். கீழ்ப்படிதல் பூரணமாக இருக்கும் போது அதிகபட்ச நன்மையினை பெற முடியும். ஒரு சாதகர் தனது ஆரம்ப காலங்களில் முழுமையான கீழ்ப்படிதலை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருக்கும். ஆகையினால் தன்னால் முடிந்தவரை கீழ்ப்படிய முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் குறிப்பிட்ட வழிநடத்தலை புரிந்து கொள்ளவில்லை அல்லது உடன்பாடு இல்லை அல்லது தன்னால் செய்ய முடியாது போன்ற எண்ணங்கள் இருப்பினும் மகான் கூறியுள்ளார் எனும் ஒரே காரணத்திற்காக அவர் அவ்வழிநடத்தலை பின்பற்ற வேண்டும். இந்த முறையில் ஒருவருடைய மனமானது செயற்பாடற்று கரைந்து போகிறது. இதன் காரணமாக சாதகர் இறைவனுடைய பிரபஞ்ச மனதுடன் இணைந்து பேரானந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

4.2 தெய்வீக உணர்வினை பெற்றுக்கொள்ளுதல்

மகான்கள் சைதன்யம் எனப்படும் தெய்வீக உணர்வின் களஞ்சியம் ஆவர். வெறுமனே அவர்களது இருப்பால் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்கள், அவர்களை சுற்றியுள்ள சூழல் மற்றும் அவர்களுடன் தொடர்புபடும் பொருட்கள் கூட சாத்வீகத்தால் நிறைகிறது. SSRF மகான்களால் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் சூட்சும நேர்மறை மாற்றங்களை காட்டுகின்றன.

மகான்களின் சத்சங்கத்தின் போது சுற்றுப்புற சூழல் சாத்வீகத்தால் நிரப்பப்படுவதால் அங்கு வருகை தந்திருக்கும் சாதகர்கள் மகான்களிடம் இருந்து வெளிப்படும் சாத்வீகத்தையும் தெய்வீக  உணர்வையும் பெற கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் விளைவாக ஸாதகர்களின் சாத்வீக தன்மையும் மகான் ஒருவரின் சகவாசத்தால் அதிகரிக்கிறது.

4.3 ஆன்மீக நிவாரணம்

மகான்களின் சத்சங்கத்தின் போது தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஸாதகர்கள் பகிரங்கமாக வெளிப்பட ஆரம்பிப்பதை கவனிக்க முடிகிறது. இவ்வாறு நடப்பதற்கு காரணம் மகான்களிடம் இருந்து வெளிப்படும் அதிகப்படியான சாத்வீகத்தினை தீய சக்திகளால் தாங்க முடியாததே ஆகும். மகானின் சாத்வீகத்திற்கும் தீய சக்தியின் ரஜ தம அணுக்களிற்கும் இடையே மோதல் நடைபெறுவதால் ஆட்கொண்டிருக்கும் தீய சக்தி வெளியில் வெளிப்பட ஆரம்பிக்கும். இவ்வாறு தீய சக்தி வெளிப்படும் போது அதன் கருப்பு சக்தி எனும் வல்லமை குறைவடைகிறது. இது ஆன்மீக பயிற்சி செய்பவர்களுக்கு உதவுவதாக அமைகிறது.

4.4 சஞ்சித கர்மா மற்றும் விதியும் மகான்களின் ஆசியால் செயலற்று போகிறது

மகான் ஒருவரை சந்திக்க செல்லும்போது அத்தருணத்தை பயன்படுத்தி நம்மால் முடிந்தது ஏதேனும் அவருக்கு வழங்கலாம். மகான்கள் இறைவனின் சகுண ரூபம் என்பதால் மகான்களுக்கோ அல்லது அவர்களது தெய்வ காரியமான ஆன்மீகத்தை பரப்பும் விஷயங்களுக்கோ நமது செல்வத்தை தருவோமானால் அது ஒருவரது சேர்க்கப்பட்ட கணக்கினை (சஞ்சித் கர்மா) குறைப்பதோடு விதியினை (பிராரப்த கர்மா) தாங்குவதற்கு வலிமையினையும் வழங்குகிறது. ஆகையினால் இத்தகைய சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி உணர்வுடனும் மகானின் காரியத்திற்கு நான் பணம் வழங்குகின்றேன் எனும் ஆணவம் இல்லாது நம்மால் முடிந்தளவு கொடுக்க வேண்டும்.

4.5 ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுதல்

மகான்களுடன் தொடர்ச்சியாக சத்சங்கத்தில் இருப்பதால் ஏற்படும் முக்கியமான பயன் யாதெனில், மேற்கூறிய எல்லா விஷயங்களினாலும் நமது ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். அவ்வாறே ஸாதகரும் தன்னாலான அதிகபட்ச முயற்சியினை மேற்கொள்ளவேண்டும். அப்பொழுதே ஒருவர் மகான் ஒருவரின் சகவாசத்தில் இருக்கும் பேறு பெறுகிறார்.