சுருக்கம்

ஆண்டவன் படைப்பில் ஸத்வ, ரஜ, தம என்ற மூன்று சூட்சும கூறுகள் (த்ரிகுணங்கள்) அடிப்படையானவை. நவீன அறிவியலுக்கு அப்பாற்பட்டு, இந்த குணங்கள் உயிர் உள்ள, உயிரற்ற அல்லது திடமான, திடமற்ற எல்லாவற்றிலும் உட்பொருளாக விளங்குகிறது. இந்த அடிப்படை தன்மைகளுக்கு ஏற்றார் போல் ஒவ்வொன்றிடமிருந்தும் அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. ஒவ்வொன்றின் நடத்தையும் அதற்கேற்றாற்போல் அமைகிறது. ஆன்மீக பயிற்சியால் மட்டும்தான் மனித உடலில் இதன் விகிதத்தை மாற்ற இயலும்

அட்டவணை

1. முன்னுரையும் , அர்த்தமும்

இந்த கட்டுரையின் நோக்கம் நம் வாசகர்களுக்கு மூன்று சூட்சும அடிப்படை கூறுகள் பற்றிய ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குவது ஆகும். இந்த வலைதளத்தில் உள்ள மற்ற கட்டுரைகளின் அடித்தளமாக இக்கட்டுரை விளங்குவதால் வாசகர்களுக்கு இது மிக முக்கியமான கட்டுரையாகும்.

நவீன அறிவியலின்படி இந்த பிரபஞ்சம் எலேக்ட்ரோன்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள், மேசான்ஸ்கள், குளூவான்கள், குவார்க்குகள் போன்றவற்றால் ஆனது.

ஆன்மீகத்தின்படி இந்த பிரபஞ்சமானது இன்னும் அடிப்படையான தத்துவங்களால் அமையப்பெற்றது. அவை, ஸத்வ, ரஜ, தம என்னும் மூன்று சூட்சும கூறுகள் (த்ரிகுணங்கள்) ஆகும். ‘த்ரிகுணங்கள்’ என்ற வார்த்தையில், ‘த்ரி’ என்பது மூன்றையும் ‘குணங்கள்’ என்பது சூட்சும கூறுகளையும் குறிக்கின்றன.

இந்த மூன்று சூட்சும கூறுகளின் பண்புகளை பற்றி கீழே காண்போம்.

மூன்று கூறுகள் தன்மைகள் அடைமொழி உதாரணம்
சத்வ

 

தூய்மை மற்றும் ஞானம் சாத்வீக சாத்வீக மனிதன் – புகழ், வெகுமானம் அல்லது வேறு நோக்கம் என்று எந்த எதிர்பார்ப்புமின்றி சமூக நலனுக்காக வாழ்பவர்
ரஜ செயல்பாடு மற்றும் ஆசை ராஜஸீக ராஜஸீக மனிதன் – சுய லாபத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் வாழ்பவன்
தம அறியாமை மற்றும் சோம்பல் தாமசீக தாமசீக மனிதன் – மற்றவர்களை மிதித்து மேலே செல்ல தயங்காதவன், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவன்

இந்த கூறுகளை ஏன் சூட்சுமம் என்கிறோம் என்றால், அவை உருவமற்றவை, சமீபத்திய நுண்ணோக்கியாலும் பார்க்கமுடியாதவை. அறிவியல் முன்னேற்றத்தாலும் இனி வரும் கருவிகளாலும் அளவிடமுடியாதவை. இந்த மூன்று சூட்சும கூறுகளை  சூட்சும ஐம்புலன்களால் அல்லது ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.

 • இந்த மூன்று சூட்சும கூறுகளிலும் ஸத்வ குணம் அதிகபட்ச சூட்சும தன்மை வாய்ந்தது; தெய்வீகமானது. எவரிடத்தில் இந்த குணம் அதிகமாக உள்ளதோ அவரிடம் பொறுமை, விடாமுயற்சி, மன்னிக்கும் தன்மை, போதும் என்ற மனம், மகிழ்ச்சி, ஆன்மீகத்தில்  பற்றுதல் போன்றவை அதிகமாக இருக்கும்.
 • இந்த மூன்று சூட்சும கூறுகளிலும் தமோ குணம் மிக கீழ்த்தரமானது. எவரிடத்தில் இந்த குணம் அதிகமாக உள்ளதோ, அவரிடம் சோம்பேறித்தனம், உலக விஷயத்தில் பற்றுதல், பேராசை போன்றவை அதிகமாக இருக்கும்.
 • ரஜோ குணம் மற்ற இரண்டு குணங்களை செயல்கள் செய்ய தூண்டுகிறது. ஸத்வ குணம் உள்ளவரிடத்தில் சாத்வீக செயல்களையும், தமோ குணம் உள்ளவரிடத்தில் தாமசீக செயல்களையும் செய்ய தூண்டுகிறது.

இந்த மூன்று சூட்சும கூறுகளின் உருவமற்ற தன்மையால், நவீன அறிவியலை போதிக்கும் பள்ளிகளுக்கும், பல்கலைகழகங்களுக்கும் இவை இருப்பது தெரிவதில்லை. அதனால் அவற்றை பாடத்திட்டத்திலும் சேர்ப்பதில்லை. இதன் விளைவாக இந்த மூன்று சூட்சும கூறுகளும் நமக்கு அன்னிய விஷயங்களாகி விட்டன. இருந்தாலும், அவை நம் வாழ்க்கையிலும் இவ்வுலகிலும் பரந்து விரிந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த மூன்று கூறுகளில் எது நம்மிடம் அதிகமாக உள்ளதோ அதற்கேற்றபடி நம் மீது பாதிப்பு இவ்வாறு ஏற்படும் :

 • சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் மனதில் எண்ணங்கள் எழுதல்
 • முடிவுகள் எடுத்தல்
 • தேர்ந்தெடுத்து வாழ்க்கையை வாழ்தல்

இவைகள் உருவமற்றதால், அவற்றின் உருவ பண்புகளை விளக்குவது கடினம். இந்த மூன்று சூட்சும கூறுகளின் தன்மைகளையும், அதனால் நம் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளையும் இந்த கட்டுரையில் விளக்க முயல்கிறோம்.

2. மிகச்சிறிய பரமாணுவிற்கும்,  அடிப்படை மூன்று சூட்சும கூறுகளுக்கும் உள்ள ஒப்பீடு

கீழே உள்ள அட்டவணையில் நவீன அறிவியலின் மிகச்சிறிய பரமாணுவிற்கும், ஆன்மிகத்தின் அடிப்படை மூன்று சூட்சும கூறுகளுக்கும் உள்ள வித்தியாசம் தரப்பட்டுள்ளது.

அளவுகோல் மிகச்சிறிய பரமாணு சூட்சும அடிப்படை கூறுகள்
வகை ஸ்தூலம் சூட்சுமம்
எவ்வாறு அளப்பது ? நவீன விஞ்ஞான கருவிகளைக் கொண்டு பரிசோதனை முறையில் அளப்பது நமது ஆறாவது அறிவைக் கொண்டு அளப்பது
எவற்றை உள்ளடக்கியது? ஸ்தூல உலகம் அனைத்தையும் படைப்பிலுள்ள ஸ்தூல, சூட்சும, ஆன்மீக கூறுகள் அனைத்தையும். மிகச் சிறிய பரமாணுவிலும் சத்வ, ரஜ, தம கூறுகள் உள்ளன. நமது சூட்சுமமான எண்ணங்களும் இம்மூன்று கூறுகளையும் உள்ளடக்கியவை.
அவற்றின் கூறுகள் படைப்பின் ஸ்தூல தன்மைகளை அதாவது ஒரு பொருள் திடமானதா, திரவமா என நிர்ணயிக்கிறது. படைப்பின் தன்மைகள், முடிவெடுக்கும் ஆற்றல், விருப்பங்கள் ஆகியவற்றை பாதிக்கிறது. அதோடு ஸ்தூல தன்மையையும் பாதிக்கிறது. உதா. தம தன்மையால் வெளிப்பாடு, திடத் தன்மை ஏற்படுகிறது.

3. சூட்சும கூறுகளின் தோற்றம் எப்படி இருக்கும்?

ஆறாவது அறிவின் கோணத்தை தரும் கருவியின் மூலம், கீழே உள்ள படத்தில், செயல்பாட்டில் மூன்று சூட்சும கூறுகளின் தோற்றம் பதிக்கப்பட்டது தரப்பட்டுள்ளது.

இந்த மூன்று சூட்சும கூறுகளும் அடிப்படையாக உருவமற்றவை. அவைகள் செயல்பாட்டில் இருக்கும்போது அதாவது அவற்றுடன் சக்தி சேரும்போது அவை அலை வடிவில் தோன்றுகின்றன.

படத்தின் விளக்கம்.

 • நிறம்: ஆறாவது அறிவைக் கொண்டு நோக்கும்போது, ஸத்வ கூறு மஞ்சள் நிறத்திலும், ரஜ கூறு சிகப்பு நிறத்திலும், தம கூறு கருப்பு நிறத்திலும் தெரிகிறது.
 • அலைகளின் அளவு: அதிக செயல்பாட்டிலுள்ள ரஜ கூறு குறுகிய அலைகளாகவும், அமைதியான ஸத்வ கூறு நீண்ட அலைகளாகவும், ஒழுங்கற்ற, சிதைந்துவிடும் தன்மையுள்ள தம கூறு ஒழுங்கற்ற அலைகளாகவும் தெரிகிறது.
 • அலைவீச்சு: ரஜ கூறு அதிக செயல்பாட்டுடன் இருப்பதால் அதிக அலைவீச்சுடனும், ஸத்வ கூறு முறையான குறைந்த அலைவீச்சுடனும், தம கூறு முறையற்ற குறைந்த அலைவீச்சுடனும் உள்ளது.
 • நீளம்: அலைகளின் நீளம் அதனதன் செயல்பாட்டை பொருத்தது.

4. மூன்று  சூட்சும அடிப்படை கூறுகளும் பிரபஞ்சத்தின் ஐந்து தத்துவங்களும்

இந்த ஐந்து அண்டங்களின் (பஞ்சமகாபூதங்கள்) தத்துவங்களும் மூன்று சூட்சும கூறுகளால் ஆக்கப்பட்டவை. பஞ்சமகாபூதங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இந்த தத்துவங்கள் உருவமற்றவை; நாம் கண்ணால் பார்க்கும், உணரும் பஞ்சபூதங்களின் அதி சூட்சும கூறுகளே இவை. உதாரணத்திற்கு நீர் தத்துவம் என்பது நீரின் சூட்சும தன்மை கொண்டது. அதன் மூலமே ஆறு, கடல் போன்றவை உருவாகின்றன. சுருக்கமாக இந்த பிரபஞ்சம் இந்த பஞ்சமகாபூதங்களால் ஆனது. மேலும் இந்த பிரபஞ்சம் மூன்று சூட்சும அடிப்படை கூறுகளாலும் ஆக்கப்பட்டது.

கீழே உள்ள அட்டவணை, எப்படி ஒவ்வொரு பஞ்சமகாபூதமும் அதன் அமைப்பில் மூன்று சூட்சும கூறுகளின் விகிதத்தில் மாறுபடுகிறது என்பதை காட்டுகிறது.

மூன்று சூட்சும அடிப்படை கூறுகளும் பஞ்சமகாபூதங்களும்

சத்வ ரஜ தம
நிலம் 10% 40% 50%
நீர் 20% 40% 40%
நெருப்பு 30% 40% 30%
காற்று 40% 40% 20%
ஆகாயம் 50% 40% 10%

மேலே உள்ள அட்டவணைபடி, நிலம் அதிக தம தன்மை உடையது; அதனால் அதிக கனமானதும் கூட. தம குணத்தின் தன்மை, இருப்பை கட்டுப்படுத்துகிறது. ஆனால் ஸத்வ குணம், இருப்பை பரவச் செய்கிறது. இதனால் நிலம் பஞ்சபூதங்களில் மிகத் தாழ்மையானது என்பது தெளிவாகிறது.  அதேபோல் ஆகாயம் மிக சூட்சுமமானது, சாத்விகமானது அதனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதும் விளங்குகிறது. பஞ்சபூதங்களில் தம குணம் குறைய குறைய அதன் ஸ்தூலத்தன்மை குறைகிறது. உதாரணதிற்கு நெருப்பு பூமியை விட குறைந்த ஸ்தூலத்தன்மை கொண்டது.

மனிதர்கள் பெரும்பாலும் நிலம் மற்றும் நீர் தத்துவத்தை கொண்டவர்கள். ஆன்மீக வளர்ச்சி அடையும்போது மனிதன் நெருப்பு தத்துவ நிலையில் செயல்பட ஆரம்பிக்கிறான். இதை நாம் அவர்களிடம் தோன்றும் பிரகாசத்திலிருந்து அறியலாம். அப்பொழுதிலிருந்து அவனிடம் மிக அடிப்படை தேவைகளான உணவு, தூக்கம் போன்றவை குறைகின்றன. அதே சமயம் அவனிடம் அளவிலும் சரி, தரத்திலும் சரி, பல காரியங்களை செய்யும் திறன் அதிகரிக்கிறது.

5. மூன்று சூட்சும அடிப்படை கூறுகளும், உலகமும்

5.1 இயற்கை அழிவுகள்.

ரஜ, தம குணங்கள் அதிகரிக்கும் போது யுத்தம், இயற்கை அழிவுகள், பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கின்றன. அவை பஞ்சபூதங்களின் உறுதியை குலைத்து இயற்கை அழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதிகரித்து வரும் இயற்கை அழிவுகளின் தீவிரத்தன்மையின் காரணம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

5.2 உயிரற்ற பொருட்கள்

கீழே உள்ள அட்டவணையில் உயிரற்ற பொருட்களுக்கு, மூன்று சூட்சும கூறுகளிடம் உள்ள சம்பந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது.

பலவித உயிரற்ற பொருட்களிலுள்ள சூட்சும அடிப்படை கூறுகளின் விகிதாசாரம்

சத்வ ரஜ தம
கோவில்கள், புனித ஸ்தலங்கள், தீர்த்த க்ஷேத்திரங்கள் 5% 1% 94%
சாதாரண/சராசரி இடங்கள் 2% 2% 96%
தீய இடங்கள் 1% 1% 98%


5.3 உயிர் நிலைகள்

கீழே உள்ள அட்டவணையில், உயிர் நிலைகளுக்கு மூன்று சூட்சும கூறுகளிடம் உள்ள சம்பந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சமய இடங்களைக் காட்டிலும் உயிர் நிலைகள் அதிக சாத்வீகத் தன்மை கொண்டவை என்பது விளங்குகிறது.

பலவித உயிருள்ள நிலைகளிலுள்ள சூட்சும அடிப்படை கூறுகளின் விகிதாசாரம்

சத்வ ரஜ தம
மகான் 50% 30% 20%
சராசரி மனிதன் 20% 30% 50%
தீயவன் 10%2 50% 40%
புத்தி சுவாதீனமில்லாதவன் 10%1 30% 60%
மிருகங்கள் மற்றும் பறவைகள் 10–20%3 25–40% 40–65%
தாவர வகைகள் 5–10% 10–15% 65–85%

அடிக்குறிப்புகள்:

 1. ஒரு நபரின் உடல் மற்றும் மனதை விட புத்தி தான் அதிக விகிதத்தில் ஸத்வ குணத்தைப் படைத்திருக்கும் (பகுதி 6.1 அட்டவணையை காண்க). அறிவு குன்றிய ஒரு நபரைப் போல ஒருவரது புத்தியில் சமரச இணக்கம் ஏற்பட்டு இருந்தால் அவரது ஒட்டுமொத்த ஸத்வ குணம் குறைந்துவிடும், ஆகையால் நாங்கள் ஸத்வ குணத்திற்கு 10% என கொடுத்துள்ளோம். ஒரு சராசரி நபரின் 20% ஸத்வ குணத்தைவிட இது குறைவானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புத்தியின் சமரச இணக்கம், ஒருவருக்கு அவர் பிறக்கும் பாதகமான விதியாலே தான் ஏற்படுகிறது.
 2. மாறாக ஒரு தீய நபர் தீய செயல்களுக்காகவே தனது புத்தியை உபயோகிப்பர் என்பதால் அவரது புத்தியின் ஸத்வ குணம் குறைவதோடு ஒட்டுமொத்த ஸத்வ குணமும் குறையும். அதனால் அறிவு குன்றிய நபர் மற்றும் தீயவரின் குறைந்த ஸத்வ குணத்திற்கான காரணம் வேறுபடும்.
 3. சில சூழல்களில் இந்திய பசுமாட்டை போலவே சில விலங்குகளில் ஸாத்வீகத்தன்மை அஇருந்தால், அதன் ஸத்வ குணம் 20% விட அதிகமாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒருவனின் ஆன்மீக நிலை அந்த கட்டிடத்திலிருந்து வெளிப்படும் அதிர்வலைகளைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது என்பதும் ஒரு முக்கிய காரணம். உதாரணத்திற்கு ஒரு கட்டிடத்தில் உள்ள கோளாறுகளால் ஏற்படும் எதிர்மறை அதிர்வலைகளால் அந்த கட்டிடத்தில் நுழையும் ஒரு மகானின் மீது ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஃபெங் சுயி, வாஸ்து சாஸ்திரம் போன்ற மனையடி சாஸ்திரங்கள் குறைந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கள் அல்லது ஆன்மீக பயிற்சி செய்யாதவருக்கே உகந்தது.

6. மூன்று சூட்சும அடிப்படை கூறுகளும் மனிதர்களும்

கீழே உள்ள பத்தியில் எவ்வாறு மூன்று சூட்சும அடிப்படை கூறுகள் நமது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்

6.1 நாம் எதனால் ஆக்கப்பட்டுள்ளோம் என்ற நிலையில்

மூன்று சூட்சும அடிப்படை கூறுகளின் விகிதாசாரம்

உடல்

சத்வ

ரஜ

தம

ஸ்தூல உடல்

20%

40%

40%

மனோ தேஹம் அல்லது மனம்

30%

40%

30%

காரண தேஹம் அல்லது புத்தி

40%

40%

20%

மகாகாரண தேஹம் அல்லது சூட்சும அஹம்

50%

40%

10%

ரஜ குணம் நம் உடலின் செயல்பாட்டை சார்ந்தது. அதனால் அதன் விகிதாசாரம் எல்லா விதமான உடற்கூறுகளிலும் சமமாக உள்ளது. ஆனால் மேலே உள்ள அட்டவணைப்படி, ஸத்வ குணமும் தம குணமும் எல்லா தேஹங்களிலும் வெகுவாக மாறுபட்டு இருப்பதை காணலாம். இது, தொடர்ந்து நீடித்த மகிழ்ச்சியை நம் உடல் நமக்கு அளிப்பதன் மேல் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு ஸத்வ குணகூறு, நமது உடலை விட புத்தியில் அதிகமாக உள்ளது. அதனால் புத்தியினால் ஏற்படும் மகிழ்ச்சி உடலால் ஏற்படும் மகிழ்ச்சியை விட உன்னதமானது, நீடித்திருப்பது.

6.2 ஆன்மீக நிலையை சார்ந்து

ஆன்மீக நிலையும், மூன்று சூட்சும அடிப்படை கூறுகளின் விகிதாசாரமும் பின்னிப்பிணைந்துள்ளது. ஆனால் முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பதைப் போன்றது இது. ஒருவரிடமுள்ள சத்வ, ரஜ, தம கூறுகளைப் பொருத்து ஒருவரின் ஆன்மீக நிலை அமைகிறது எனக் கூறலாம். இன்னொரு விதத்தில் ஒருவரிடம் பிரதானமாக உள்ள சத்வ, ரஜ அல்லது தம கூறே அவரின் ஆன்மீக நிலையை நிர்ணயிக்கிறது எனலாம். நாம் ஆன்மீக பயிற்சி செய்து வரும்போது நம்மிடமுள்ள சாத்வீக தன்மையை அதிகரிக்கும் முயற்சியும் நடக்கிறது. அதாவது நம்மிடமுள்ள தம தன்மையை சத்வ தன்மையாக மாற்ற முயல்கிறோம்.

நம்மிடமுள்ள சத்வ தன்மையை அதிகரிக்கும்போது (மற்ற இரு கூறுகளோடு ஒப்பிடும்போது), அது நம்முடைய ஆன்மீக நிலை மற்றும் ஆளுமையின் மேல் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.

ஆன்மீக பயிற்சியின் மூலமாக நம் ஆன்மீக நிலை உயரும்போது மூன்று சூட்சும அடிப்படை கூறுகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதை இந்த வரைபடம் சித்தரிக்கிறது.

அடி குறிப்புகள்:

 1. 50% ஆன்மீக நிலைக்கு பிறகு, ஒருவரின் மூன்று கூறுகளும் ஒரே நிலையில் உள்ளன. இதன் காரணம் ஒருவரிடம் 20% -ற்கு குறைவாக தம தன்மை இருக்க முடியாது. இது நடந்தால் அவரின் ஸ்தூல நிலை தகர்ந்து விடும். அதனால் உடல் தரித்திருக்கும்வரை ஒருவரிடம் குறைந்தபட்சம் 20% தம தன்மை இருத்தல் அவசியம். ஆனால் ஆன்மீக நிலை அதிகரிக்கும்போது மற்ற கூறுகளின் வீரியம் குறைகிறது; 80% ஆன்மீக நிலையில் அவை முற்றிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அடுத்த பத்தியில் இதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
 2. 1௦௦% ஆன்மீக நிலையிலுள்ள உன்னத மகான் உடல் தரித்திருக்கும் வரை இந்த மூன்று சூட்சும அடிப்படை கூறுகளால் ஆக்கப்பட்டிருப்பார். அவர் இறந்தவுடன் எல்லா சூட்சும அடிப்படை கூறுகளும் பூஜ்யமாகி விடுகின்றன; அவர் இறைவனோடு இரண்டறக் கலந்து விடுகிறார்.

6.3 ஆன்மீக நிலை அதிகரிக்கும்போது மூன்று சூட்சும கூறுகளின் தாக்கமும் குறைகின்றன

நம்முள் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்போது நுணுக்கமாக என்ன நடக்கிறதென்றால் இருளான நம் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி குறைந்து நம்முள் அந்தர்யாமியாய் உள்ள ஆத்மா ஒளிர்விட துவங்குகிறது. கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும். இதையே ஐம்புலன்கள், மனம் புத்தி அடங்கி விட்டது என்கிறோம். நம்முடைய உண்மை ஸ்வரூபமான ஆத்மாவை உணர்ந்து கொள்ளாது நம்மை திசை திருப்புவதால் இவற்றை இருள் என சொல்கிறோம்.

நம்முள்ளே ஆத்மாவாக நிறைந்திருக்கும் பரம்பொருள், மூன்று சூட்சும அடிப்படை கூறுகளுக்கு அப்பாற்பட்டதால் ஆத்மாவும் இம்மூன்றால் ஆக்கப்பட்டது அல்ல. அதனால் எந்த அளவிற்கு நம் ஆத்ம ஜோதியை நம்முள்ளே ஒளிர் விட செய்கிறோமோ அந்த அளவு இம்மூன்று சூட்சும கூறுகளும் நம் ஆளுமையை, விருப்பு-வெறுப்புகளை, செயல்களை நிர்ணயிக்காது. ஆன்மீக முன்னேற்றத்தின் இறுதிக் கட்டத்தில் ஆத்ம ஜோதி நம்மை நிறைக்கும்போது இறை சித்தத்தோடு ஒன்றிய வாழ்க்கையை நாம் வாழ ஆரம்பிக்கிறோம்; மூன்று சூட்சும கூறுகளும் கரைந்து போய் எந்தவித தாக்கத்தையும் நம்மீது ஏற்படுத்துவதில்லை.

6.4 நம் ஆளுமையை சார்ந்த நிலையில்

கீழே உள்ள அட்டவணையில் ஒருவரிடம் பிரதானமாக உள்ள சூட்சும தன்மையால் அவரின் ஆளுமை எவ்வாறு வெளிப்படுகிறது என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அடிப்படையாக புரிந்து கொள்ள இவை உதவும். ஒருவரின் விழிப்படைந்த ஆறாவது அறிவால் மட்டுமே மற்றொருவரின் பிரதானமான சூட்சும தன்மையை பற்றி சரியாக கணிக்க முடியும்.

  சாத்வீக மனிதர் ராஜஸீக மனிதர் தாமசீக மனிதர்
குறைகள் உணர்வுகள், எண்ணங்கள், செயல்களின் மீது முழு கட்டுப்பாட்டு கோவம், பொறாமை, பெருமை, கர்வம், அதிகாரம், கவனத்தை தன் பக்கம் திருப்புதல், பேராசை, உலக இச்சைகள், லட்சியம்  பூர்த்தியாக எதையும் செய்வது, கவலை, பகல்கனவு காணுதல் சோம்பல், செயலின்மை, தீவிர சுயநலம், மன அழுத்தம், மற்றவரை பற்றி சிந்திக்காமல் இருப்பது, தன் சுயநலத்திற்காக மற்றவரை துன்புறுத்துவது, எரிச்சல் தன்மை
குணங்கள் எல்லா நற்குணங்கள், நேர்மை, சட்டத்திற்கு உட்படுதல், பொறுமை, அமைதி, ஸ்திரமான புத்தி, குறைவான அஹம், இறுதியில் குண-குறைகளை தாண்டி செல்வது, இறப்பை பற்றி பயமின்மை தலைமையேற்று நடத்துவிக்கும் குணம், ஆனால் ஆன்மீக முன்னேற்ற பாதை அறியாத முயற்சி இல்லை
மகிழ்ச்சியை தேடும் முக்கிய வழிகள் ஞானம் பெறுதல், திறன், மற்றவருக்கு உதவுதல், தியானம், ஆன்மீக நிலையை அதிகரித்தல், இறுதியில் மகிழ்ச்சி, துக்கத்திற்கு அப்பால் சென்று ஆனந்தத்தை அனுபவித்தல் அதிகாரம் பெறுதல், உலக செல்வங்களை அடைதல் உண்ணுதல், அருந்துதல், உடலுறவு கொள்ளுதல்
மற்றவர் சம்பந்தமாக சமூகசேவை செய்ய வாழுதல், மற்றவர் ஆன்மீக முன்னேற்றம் அடைய உதவுதல்; இங்கு ஆன்மீக முன்னேற்றம் என்பது பரந்த நோக்கில் ஆறு அடிப்படை தத்துவங்களின்படியான ஆன்மீக பயிற்சியை குறிக்கிறது சுயநலம் பேணுதல், அஹம்பாவத்துடன் ‘நான் செய்கிறேன்’ என்ற உணர்வுடன் மற்றவருக்கு உதவுதல் மற்றவருக்கு தீங்கிழைத்தல்; அதிகபட்ச தாமசீகமானவர் –மதம், கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தினருக்கு பெரும் கேடு விளைவித்தல்
உறக்கம் 4 – 6 மணி நேரம் 7 – 9 மணி நேரம் 12 – 15 மணி நேரம்
ஆன்மீக ஆற்றல் அதிகம் குறைவு மிகக்குறைவு1

அடிகுறிப்புகள் :

 1. அதிகபட்ச தாமசீக தன்மையுடைய மாந்த்ரீகர்கள், கடும் ஆன்மீக பயிற்சி செய்து அதிக ஆன்மீக சக்தியை பெற்றுள்ளனர்; அதனால் அவர்கள் இதற்கு விதிவிலக்கு.

இதில் கொடுக்கப்பட்ட குணங்கள், குறைகள் எல்லோருக்கும் எப்போதும் பொருந்தும் என சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு ஒரு சாத்வீகமான மனிதருக்கு 9 மணி நேர உறக்கம் தேவைப்படலாம். அதே போல் ஒரு தாமசீக மனிதரிடம் பொறுமை என்ற குணம் இருக்கலாம். ஒருவரின் ஒட்டுமொத்த குண, குறைகளை பொருத்தே அவரின் இயல்பு நிர்ணயமாகிறது. அதனால் ஓரிரு தன்மைகளை வைத்து தன்னையோ மற்றவரையோ எடை போட கூடாது. ஒட்டுமொத்த தன்மைகளைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும்.

அதோடு ஒட்டுமொத்த சாத்வீக, ராஜஸீக, தாமசீக மனிதரைப் பார்ப்பது அரிது. பெரும்பாலும் ஒருவர் சத்வ-ரஜ அல்லது ரஜ-சத்வ அல்லது ரஜ-தம தன்மை கொண்டவராயிருப்பர். ஒரு சத்வ-ரஜ மனிதரிடம் சாத்வீக, ராஜஸீக கூறுகள் இருந்தாலும் அதிக அளவு சாத்வீக தன்மையே இருக்கும். ரஜ-சத்வ மனிதர் விஷயத்தில் இது அப்படியே மாறுபடுகிறது.

ஒருவரிடம் உள்ள அதிகபட்ச தன்மையைப் பொருத்தே அவரின் ஆளுமையின் வெளிப்பாடு அமையும். இருந்தாலும் எப்படி எல்லாம் ஒருவர் விலையுயர்ந்த ஆடைகள், அணிகலங்களாலும் நாகரீகமான பேச்சாலும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாலும் அவரிடமிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் அவரின் அடிப்படை குணத்தை பொருத்தே அமையும். அதிநுட்ப ஆறாவது அறிவு உடைய ஒருவரால் மட்டுமே இந்த வெளிப்புற அடையாளங்களை தாண்டி ஒருவரின் சூட்சும அதிர்வலைகளை உணர முடியும். அதன் மூலம் ஒருவர் அடிப்படையில் சாத்வீகமானவரா, ராஜசீகமானவரா அல்லது தாமசீகமானவரா என்பதை அவரால் கூற இயலும்.

ஒருவர் தனித்திருக்கும்போதே அவரின் உண்மையான சூட்சும வெளிப்பாடு நிகழும். ஒருவர் தன்னிச்சையாக செயல்படும்போதே அவரின் உண்மை ஸ்வரூபம் தெரியும். கீழ்க்காணும் உதாரணம் இதை நன்கு விளக்கும்.

4-ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பை எடுத்துக் கொள்வோம். ஆசிரியர் கட்டுப்படுத்த முயற்சிக்கும், அதிக சப்தமெழுப்பும் போக்கிரி வகுப்பு அது. ஆசிரியர் கண்டிப்பானவராக இருந்தால் அவரால் ஓரளவிற்கு அவர்களை கட்டுப்படுத்த முடியும். அதன் பலனாக அவர் இருக்கும் நேரத்தில் மட்டும் வகுப்பு அமைதியாக இருக்கும். அவர்  வகுப்பை விட்டு வெளியேறியதும்  மாணவர்கள் தங்களின் போக்கிரித்தனத்தை துவங்கி விடுவர். ஏனென்றால் அவர்களின் அடிப்படை இயல்பு ராஜசீகம் மற்றும் தாமசீகமானவை.

மறுபுறம் அந்த வகுப்பில் ஒரு சாத்வீகமான மாணவன் உள்ளான். மற்ற மாணவர்கள் தவறான செயல்களான வம்புக்கிழுப்பது, கிண்டல் செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களில் அவனையும் ஈடுபட அழைக்கும்போது அவனது சாத்வீக குணத்தால் அவன் மறுக்கிறான். அவர்களின் செயல்கள் அவனுக்கு மகிழ்ச்சியை தராது; மாறாக அவனுக்கு வயிற்றை பிசையும். தவறான செயல்களில் அவனால் ஈடுபடவே முடியாது.

அதனால் மேலோட்டமாக நீதிபோதனை கதைகள் மூலம் குழந்தைகளை திருத்த முடியாது. நிரந்தர தீர்வு அவர்களை ஆன்மீக பயிற்சி செய்ய வைப்பதே. அதோடு ஆன்மீக சூழலில் அவர்களை வளர்ப்பதால் அவர்களின் சாத்வீக தன்மை அதிகரிக்கிறது.

7. மூன்று சூட்சும அடிப்படை கூறுகளும் நமது வாழ்க்கைமுறையும்

நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் அவற்றின் அதிகபட்ச சூட்சும தன்மைக்கேற்ப சத்வ, ரஜ, தம என்று வகைப்படுத்த முடியும். ஒன்றின் அதிகபட்ச சூட்சும கூற்றை, ஆறாவது அறிவு கொண்டே அறிந்து கொள்ள முடியும்.

உலகிலுள்ள பல விஷயங்களின் அதிகபட்ச சூட்சும கூற்றை சில உதாரணங்கள் மூலம் கொடுத்துள்ளோம். நம்மிடமுள்ள சத்வ, ரஜ, தம தன்மைகளுக்கு ஏற்ப நாம் சத்வ, ரஜ அல்லது தம வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வோம். அதேபோல் நாம் தொடர்ச்சியாக வாழும் வாழ்க்கை முறையும் அதற்குரிய சூட்சும கூறுகளை  அதிகரிக்க செய்கின்றன.

மூன்று சூட்சும அடிப்படை கூறுகளும் நமது வாழ்க்கைமுறையும்

சாத்வீக ராஜஸீக தாமசீக
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

உணவு

கோதுமை, வெள்ளரி, கீரை, சர்க்கரை, பால், வெண்ணெய், நெய், பட்டை, பாதாம், வால்நட், முந்திரி அதிக உப்பான, கசப்பான, புளிப்பான, மசாலா மிகுந்த, சூடான உணவுகள் (உதா. கொதிக்கும் காபி அல்லது டீ), வெங்காயம், பூண்டு காய்ந்து போன காய்கறி, பதப்படுத்தப்பட்டவை, இருமுறை சுட வைத்தவை, துர்நாற்றம் மிகுந்தவை, பழைய கெட்டுப்போன உணவு, பாதி வெந்தது (மாமிசம் போன்றவை), சமைக்கப்படாத உணவு, ஜீரணத்திற்கு கடினமானவை, அசைவ உணவு, மற்றும் மதுபானங்கள்
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

நிறம்

வெள்ளை, மஞ்சள், நீலம் சிவப்பு, அடர் சிவப்பு, பச்சை, ஊதா கருப்பு, கருப்பு கலந்த மற்ற நிறங்கள்
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

ஆடைகள் (நூலிழை)

இயற்கை இழைகளான பருத்தி, பட்டு, கம்பளி மிருகங்களின் தோல்கள் செயற்கை இழைகளான லைக்ரா, நைலான் முதலியன., கிழிக்கப்பட்ட அயர்ன் செய்யப்படாத ஆடைகள்
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

இசை

மகான்களால் இயற்றப்பட்ட, மெட்டமைக்கப்பட்ட பாடல்கள் கிராமீய பாடல்கள், பாப் இசை, சினிமா பாடல்கள் முதலியன வன்முறையை, போதையை தூண்டும் கனத்த உலோக இசை
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

திரைப்படங்கள்

மக்களுக்கு ஆன்மீக அல்லது  உலக விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள் விறுவிறுப்பான மற்றும் மர்ம படங்கள் ஆபாசம், வன்முறை மற்றும் திகிலூட்டும் படங்கள்
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

நூல்கள்

ஆன்மீகம் பற்றி தெளிவான பரந்த விளக்கம் கொண்ட நூல்கள் உணர்வுகளை தூண்டி உலகப்பற்றை ஏற்படுத்தும் நூல்கள் ஆன்மீகத்தை இழிவு செய்யும், சமூக கேடு விளைவிக்கும் நூல்கள்
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

சகவாசம் மற்றும் பொழுதுபோக்கு

ஆறு அடிப்படை தத்துவங்களின்படி ஆன்மீக பயிற்சி செய்யும் சாதகர்கள் உலக விஷயங்கள், வியாபாரம் பற்றிய சர்ச்சைகள் நிறைந்த சமூக நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கிற்காக கடைகளுக்கு செல்லுதல் போதை பழக்கம் உடையவர் களுடன் சகவாசம், மூர்க்கமான விழாக்கள், போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் விழாக்கள், சமூக கேடு விளைவிக்கும் சகவாசம்
சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

திருமணம்

ஆன்மீக முன்னேற்றத்தை மையமாக கொண்ட கணவன்-மனைவி உறவு, எதிர்ப்பார்ப்பில்லாத ஆன்மீக அன்பு உலக செல்வங்களை சேகரித்தல், எதிர்ப்பார்ப்புடன் கூடிய உலக அன்பு கருத்து வேற்றுமை, நம்பிக்கையின்மை, சண்டைகள், வன்முறை

8. மூன்று சூட்சும கூறுகளும் ஆவிகளும் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை)

ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) அடிப்படையில் ரஜ-தம பிரதானமானவை. தாழ்ந்த நிலையில் உள்ள ஆவி, அதாவது 50% ஆன்மீக சக்திக்கு குறைவான சாதாரண ஆவி, ரஜ-தம பிரதானமானவை. உயர் நிலையில் உள்ள ஆவி, அதாவது 50% ஆன்மீக சக்திக்கு மேற்பட்ட 6-வது, 7-வது பாதாளத்தை சார்ந்த மாந்த்ரீகன் போன்றவை தம-ரஜ பிரதானமானவை.

ஆவிகள் ரஜ-தம தன்மையை பிரதானமாக கொண்டிருப்பதால் அவை, பூமியில் ரஜ-தம மக்கள் நிறைந்த ரஜ-தம இடங்களையே நாடும். இது போன்ற ஒத்த மனநிலை கொண்ட மனிதர்களே, ஆவிகள் பீடிப்பதற்கு ஏற்றவர்கள். அவர்களின் மூலம் ஆவிகள் தங்கள் திட்டத்தை பூமியில் நடத்துகின்றன. அதாவது, அதிக தாமசீக குணமுடைய, மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் விருப்பமுடையவர்களே ஆவிகளின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அபாயத்தில் உள்ளவர்கள். அவர்கள் மூலமாக சமூகத்திற்கு தீங்கிழைக்கப்படுகிறது.

ஒருவர், தன்னுடைய சாத்வீக தன்மையை அதிகரிப்பதன் மூலம் ஆவிகளிடமிருந்து பாதுகாப்பு பெறலாம். ஆவிகள் தாமசீக தன்மை உடையதால் அவற்றால் அதிக சாத்வீக சூழ்நிலையை அல்லது மனிதர்களை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இக்காரணத்தால்தான், அவற்றால் ஓர் உயர் நிலை மகானை அல்லது குருவை பீடிக்க முடிவதில்லை.

‘அதிக சாத்வீக தன்மையோடு தொடர்பு கொள்ளும்போது ஏன் ஒரு பீடிக்கப்பட்ட மனிதனின் ஆவி வெளிப்படுகிறது?’ என்ற கட்டுரையைப் படிக்கவும்.

9. முடிவுரை

இக்கட்டுரையிலிருந்து நாம் க்ரஹிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் :

 • நம்மிடமுள்ள அதிகபட்ச சூட்சும அடிப்படை கூற்றுக்கு ஏற்ப நம்மிடமிருந்து சத்வ, ரஜ அல்லது தம அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. சத்வ தன்மை அதிகம் கொண்டவர்களிடம் அதிக நல்ல குணங்கள் காணப்படுகின்றன. அதோடு அவர்களுக்கு, அலுவலக வாழ்வில், உறவுகளில், உலக வாழ்க்கையில் நீடித்த வெற்றி மற்றும் திருப்தி கிடைக்கின்றன.
 • நம்மிடமுள்ள ரஜ-தம குணங்களை குறைத்து ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய சாத்வீக தன்மையை அதிகரிக்க முடியும்.
 • நாம் கொண்டுள்ள சகவாசம், நம் ஆன்மீக பயிற்சியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 • ஆவிகள், தம பிரதானமான இடங்களை, மனிதர்களை சாதகமாக்கி கொண்டு சமூக கேடு விளையும், தர்மத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களை நடத்துவிக்கின்றது.