விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு தினமும் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக பயிற்சியின் 8 படிகள்

குறுகிய விளக்கம் : ஆன்மீக பயிற்சியின் எட்டு அம்ச பாதை தற்போதைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு பாதை ஆகும். விரைவான ஆன்மீக வளர்ச்சி மற்றும் உங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய இதை  பயிற்சி செய்யுங்கள்

விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு தினமும் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக பயிற்சியின் 8 படிகள்

1. விரைவான ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஆன்மீக பயிற்சி

நீங்கள் ஆன்மீக ரீதியாக வளர ஒவ்வொரு நாளையும்  பயன்படுத்த  விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கானதே :

இக்காலத்தில் ஆன்மீக ரீதியாக வளர வேண்டும் என்ற ஆர்வம்  ஒரு கடந்து போகும் எண்ணமாக இல்லாமல் இருப்பதே ஒரு ஆசீர்வாதம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்றைய உலகில் பெரும்பான்மை மக்கள், ஆன்மீக ரீதியான குறிக்கோள்களை விட பொருள் சார்ந்தக் குறிக்கோள்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். பொருள் சார்ந்த உலகில் மகிழ்ச்சியை பெற மக்கள்  முயல்கிறார்கள். இதில்  முரண்பாடு என்னவென்றால் உண்மையில் நீடித்த மகிழ்ச்சியை, ஆன்மீக ரீதியாக வளரக்கூடியவர்களால் மட்டுமே தங்கள் உலகியல்  கடமைகளை செய்து கொண்டே அனுபவிக்க முடியும்.

இருப்பினும், ஆன்மீக ரீதியாக வளர வேண்டும் என்பது வேகமான விகிதத்தில் என்பதில்லாமல், சாதாரண விகிதத்தில் என்பது கூட செயலாற்றுவதை விட சொல்வது மிகவும் எளிதாகும்.

ஆன்மீக வளர்ச்சியை விரும்பும் ஸாதகர் அவரது ஆன்மீக பயணத்தில் எதிர்கொள்ள நேரிடும் பல சவால்களை கடக்க  முதலில்  அவற்றை புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையில், நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள சரியான பயிற்சிக ளை செயல்படுத்தினால், அது உங்களின் விரைவான ஆன்மீக முன்னேற்றத்தை உறுதி செய்யும்.

2. ஆன்மீக பயிற்சியில் அன்றாட முயற்சிகள் செய்வதில் நாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள்

ஒரு ஸாதகர் பல சவால்கள் எதிர்கொள்ளக்  கூடும். ஆன்மீக ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும் என்ற ஸாதகரின் தேடலில் நாங்கள் கவனித்த சில முக்கிய சவால்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. தவறான வழிகாட்டல் : நாம் தற்போது தகவல் யுகத்தில் வாழ்வதால். ஆன்மீகத்தைப் பற்றி ஏராளமான வழிகாட்டல் கிடைக்கிறது.  இந்த அதிகப்படியான தகவல்களால் ஒரு ஸாதகர் என்ன செய்வது, யாரைப் பின்பற்றுவது என்று குழப்பமடைகிறார். பெரும்பாலும், வழிகாட்டல் அனைத்தும் உண்மையான மகான் அல்லது ஆன்மீக வழிகாட்டி மூலம் கிடைத்தவை அல்ல [அதாவது, 70% அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர்]. ஆன்மீக பயணங்களை தொடங்கும் ஸாதகர்கள் உண்மையான ஆன்மீக மதிப்பற்ற ஆனால் ஆனால் பெயரளவில் சொல்லப்படும்  நல்ல சொற்கள் மற்றும்  பக்தியுள்ள நடத்தைகளால் எளிதில் தவறாக வழி நடத்தப்படலாம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒருவர் ஆன்மீக கோட்பாடுகளின் படி ஆன்மீகத்தை கடைப் பிடிக்கவில்லை என்றால், அவரது ஆன்மீக ரீதியான வளர்ச்சி நிகழாமல் மற்றும் எவ்வித ஆன்மீக நன்மையையும் பெறாமல் பல ஆண்டுகளை அவர் வீணடித்து விடுவார்.
  2. எனது அடுத்த படி என்ன? :  வளர்ச்சி ஏற்பட, உங்களுக்கு  அடுத்த பட அவசியம் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக பல ஸாதகர்கள்பல ஆண்டு காலமாக மத வழிபாட்டுத்தலத்திற்கு செல்வது, யாத்திரை மேற்கொள்வது போன்ற ஒரே அளவிலான ஆன்மீக பயிற்சியைத் தொடர்ந்து செய்கிறார்கள். ஒரு பழைய பழமொழி உள்ளது – “நீங்கள் எப்போதும் செய்வதை செய்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் எப்போதும் பெற்றதையே நீங்கள் பெறுவீர்கள் ”. இது மற்ற துறைகளுக்கு பொருந்துவது போல ஆன்மீகத்திற்கும் பொருந்தும். அதே அளவிலான பயிற்சிகள் அதே அளவிலான முடிவுகளைத் தருகின்றன மற்றும் வேறு எந்த வளர்ச்சியும்  ஏற்படுவதில்லை. ஆன்மீக ரீதியாக வளர்ச்சி அடைய மேலும் மேலும் உயர்நிலையிலான ஆன்மீக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை பல ஸாதகர்கள் புரிந்து கொள்ளவதில்லை. ஆன்மீக பயிற்சியில் எனது அடுத்த படி என்ன ? என்ற முக்கியமான கேள்வியை  யாரும் கேட்பதில்லை, அதற்கான முயற்சியையும் எடுப்பதில்லை. ஆகையால் தேக்க நிலைக்கு இது வழிவகுக்கிறது.
  3. நம் புரிதலின் அடிப்படியில் நாமே செய்ய கூடிய ஆன்மீகத்தின் அபாயம் : நமக்கு ஒரு சட்ட சிக்கல் இருக்கும்போது நாம் ஒரு வழக்கறிஞரிடம் செல்கிறோம்… ஒரு மருத்துவ பிரச்சினை என்றால் ஒரு மருத்துவரிடமும் …  டிவியில்   பழுது என்றால் ஒரு டிவி பழுதுபார்க்கும் மெக்கானிக்கிடம் செல்வோம்.  இப்படியாக மற்றும் பல. இருப்பினும், மிகவும் சிக்கலான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஆன்மீக சாஸ்திரத்தைப் புரிந்துகொள்வதற்கு, மக்கள் பெரும்பாலும் எந்த உதவியும் தேவையில்லை என்று தங்கள் வழியில் செல்ல நினைக்கிறார்கள். சரியாக பயிற்சி செய்தால் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து  விடுவிக்கும் சக்தி  உள்ள அறிவியல் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆன்மீக புத்தகங்கள் படிப்பது அல்லது ஒருவர் விரும்பும் சில பயிற்சிகளை செய்வதனால், முன்னேற முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது மிகவும் அரிதாக நிகழ்கிறது என்பது எங்கள் அனுபவம். ஒரு உண்மையான ஆன்மீக வழிகாட்டி இல்லாமல், ஆன்மீக முன்னேற்றத்தை அடைவது மிகவும் கடினம்.
  4. ஊக்குவிப்பான் எனது கையில் உள்ளது : அதிர்ஷ்டவசமாக ஒரு உண்மையான ஆன்மீக வழிகாட்டியிடமிருந்து ஒரு ஸாதகர்க்கு சரியான வழிகாட்டல் கிடைத்து , ஆன்மீக பயிற்சியில் அவரது அடுத்த படி என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது என்று வைத்து கொண்டாலும் கூட ஒரு ஸாதகரின் ஆன்மீக வளர்ச்சி, அவருக்கு கிடைத்த வழிகாட்டலை செயல்படுத்தும் அவரது உண்மையான விருப்பத்தையும், விடாமுயற்சியுடன் ஆன்மீக பாதையில் செயல்படும் திறனையும் சார்ந்துள்ளது. ஆன்மீகத்தை தொடங்குபவர்கள் பலர், ஆனால் சிலர் மட்டுமே நீண்ட காலத்திற்கு அதை பின்பற்றுகின்றனர். இறுதி வரை இருப்பவர்கள் மிகவும் குறைவு. எனவே, ஆன்மீகம் என்பது வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதில்  நேர்மறையான விஷயம் என்னவென்றால் – எத்தகைய தடைகள் ஒருவரது வாழ்வில் இருந்தபோதிலும், ஒரு ஸாதகர் நேர்மையாகவும, உண்மையில் ஆன்மீக வளர்ச்சியை விரும்புபவராகவும் இருந்தால, கடவுள் எப்பொழுதும் அந்த ஸாதகர்க்கு உதவி புரியவும், சரியான பாதையில் வழிநடத்தவும் வருவார். இது பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் பொன்மொழி ஆகும்.

நாம் கடவுளை நோக்கி ஒரு அடி வைத்தால், கடவுள் நம்மை நோக்கி 10 அடிகள் வைக்கிறார்.”

– பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்

3. ஆன்மீக பயிற்சியின் எட்டு அம்ச பாதை

மேற்கண்ட அனைத்து சவால்களுக்கும் விடையாக, பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் குரு அருளிய பாதையை (குருக்ருபாயோகம்) உருவாக்கினார். அவர் தனது குரு ஸந்த் பக்தராஜ் மஹராஜ் (உயரிய நிலையில் உள்ள மகான்) அவர்களின் ஆசீர்வாதத்துடன் செய்தார். பராத்பர குரு என்பவர் மிக உயரிய நிலையில் உள்ள மகான். அதாவது 90% ஆன்மீக நிலை அல்லது அதற்கு மேல் உள்ளவர் . குரு அருளிய பாதை 8 ஆன்மீக பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த பாதை ஆன்மீக பயிற்சியின் மற்ற எல்லா பாதைகளிலிருந்தும் சிறந்த பயிற்சிகளை ஒருங்கிணைத்து, தற்போதைய கால கட்டத்தில் விரைவான ஆன்மீக முன்னேற்றம் அடைய ஈடு இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.

குரு அருளிய (குருக்ருபாயோகம்) பாதையின் 8 அம்சங்கள்:

  1. ஆளுமை குறைகளைக் களைதல் (பி.டி. ஆர் அல்லது ஸ்வபாவ்தோஷ்-நிர்மூ லன்)
  2. அஹம்பாவம் களைதல் (அஹம்-நிர்மூலன்)
  3. நாமஜபம் (நாம்)
  4. ஸத்சங்கம் (ஸத்சங்)
  5. ஸத்சேவை (ஸத்சேவை)
  6. ஆன்மீக உணர்வு
  7. தியாகம்
  8. ஆன்மீக அன்பு (ப்ரீதி)

அடைப்புக்குறிக்குள், ஆன்மீக பயிற்சியின் அந்த அம்சத்தை குறிக்கும் ஸம்ஸ்க்ருத சொற்களை வழங்கியுள்ளோம்

இந்த அம்சங்களை எந்த வரிசையிலும் பயிற்சி செய்யலாம். விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு அனைத்து அம்சங்களும் கடைப்பிடிக்க பட வேண்டும். இதனால் ஒரு ஸாதகர் எல்லா கோணங்களிலிலிருந்தும் ஆன்மீக வளர்ச்சியை அனுபவிக்க ஒரு வழிமுறை பெறுகிறார். ஒரு ஸாதகரின் ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கும் அனைத்து தடைகளையும்/ சவால்களையும் சமாளிக்க இந்த அம்சங்கள் உதவுகின்றன. ஒரு ஸாதகர் முதலில் பின்பற்ற வேண்டிய அம்சம் அவரது அடிப்படை தன்மையை சார்ந்துள்ளது. ஒருவரிடம் பல ஆளுமை குறைபாடுகள் இருந்தால், ஆளுமை குறைகளை களையும் (பி.டி.ஆர்) செயல்முறை அவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். ஒருவர் மிகவும் பக்தியுள்ளவராக இருந்தால், அவருக்கு நாமஜபம் ஒரு நல்ல தொடக்கமாகும். யாராவது அதிக நடவடிக்கையில் ஈடுபடுபவராக இருந்தால, அவர் தனது முதல் படியாக ஸத்சேவையை (சத்யத்திற்கு செய்யும் சேவை) தெரிவு செய்யலாம்.

4. ஆளுமை குறைகளை களையும் செயல்முறை

ஆளுமை குறைகளை களையும் செயல்முறைஒரு ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

ஆளுமை குறைபாடுகள் (அல்லது விரும்பத்தகாத பண்புகள்) என்பது  கோபம், பேராசை, சோம்பல், பாதுகாப்பின்மை, உணர்ச்சிவசப்படுதல் போன்ற பண்புகள் ஆகும். இவை நம் இருப்புக்குத் தடையாகின்றன. ஒருவரை குறைவான செயல்திறன் மிக்கவர்களாக மாற்றுவதுடன் அவரது வாழ்விலும் மற்றவரது வாழ்விலும் தொடர்ந்து மன அழுத்தத்தையும் துயரத்தையும் தருகின்றன. ஒவ்வொருவரிடமும் ஆளுமை குறைகள் மாறுபட்ட அளவுகளில் உள்ளன – சிலரிடம் அதிகமாகவும் மற்றும் சிலரிடம்  குறைவாகவும் உள்ளன. ஸாதகர்களிடம் உள்ள இத்தகைய குறைபாடுகள், ஆன்மீக பயிற்சியினால் ஏற்படும் மகிழ்ச்சியை கூட (ஆனந்தம் ஒருபுறம் இருக்கட்டும் ) அனுபவிக்க முடியாமல் பறிக்கிறது. மேலும், ஒரு சூழ்நிலைக்கு எதிர்வினையாக வெடிக்கும்போது, இந்த ஆளுமை குறைபாடுகள் நம்மை சீர்குலைக்கின்றன.

சூட்சும பரிமாணத்திலிருக்கும் தீய சக்திகள் பல ஆளுமைக் குறைபாடுகளைக் கொண்ட ஒருவரை ஆட்கொள்வது மிகவும் எளிது. ஒருவரிடம் இருக்கும் எதிர்வினைகளை அதிகரித்து, அந்நபரையும் பிறரையும் எதிர்மறையாக பாதிக்கிறது. உதாரணமாக, நம்மிடம் கோபம் என்ற குறைபாடு இருந்தால், நாம் பேசும் விதத்தில் மற்றவர்களை காயப்படுத்தி, பாவத்திற்கு ஆளாகிறோம். ஆன்மீக நிலையில், ஆன்மீக பயிற்சியின் மூலம் உருவாகும் சக்தி பாவத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஒருவர் அவரது ஆன்மீக பாதையில் விடாமுயற்சியுடன் செயல்பட்டாலும் பட்டாலும். ஒருவர் எந்த ஆன்மீக பாதையை சார்ந்தவராக இருந்தலும், அவரிடம் பல ஆளுமைக் குறைபாடுகள் இருந்தால், ஆன்மீக முன்னேற்றம் என்பது கடினமாவது மட்டுமில்லாமல் நடக்க முடியாமலும் போகலாம் .

ஆளுமை குறைகளை களையும் செயல்முறை எவ்வாறு உதவுகிறது :

நம்மைப் பற்றி நாம் அறியாததை நாம் சரிசெய்ய இயலாது. ஆளுமை குறைபாடு நீக்குதல் செயல்முறை இதை சரிசெய்ய உதவுகிறது. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் முன்னோடியாக உருவாக்கிய இந்த செயல்முறை, மேற்கண்ட சவால்களை சமாளிக்க ஒரு ஸாதகருக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை பின்வரும் மூன்று படிகள் மூலம் உருவாக்குகிறது  :

  1. தரவு சேகரிப்பு /கவனிப்பு : இந்த பயிற்சி முதலில் நாம் நமது குறைபாடுகள் என்ன என்பதை புரிந்துகொள்வதற்காக தெளிவான வழிமுறையை அமைக்கிறது. ஏனென்றால், பெரும்பாலானவர்கள் மற்றவர்களை விமர்சிப்பவர்களாகவும், குற்றம் காணும் மனப்பான்மையுடன் இருந்தாலும் தங்களின் சொந்த குறைபாடுகளை மறந்துவிடுகிறார்கள். ஆளுமை குறைகளை களையும் செயல்முறை மூலம், நாம் செய்யும் தவறுகள் மற்றும் அதற்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் குறித்து தரவு சேகரிக்கப்படுகிறது. இத்தகைய தரவுசேகரிப்பு, ஒருவர் தன்னைப் பற்றி அறிந்திராத  குறைகளுக்கு திறவுகோலாக விளங்கி அவரின் குணங்கள் மற்றும் பண்பின் வலிமை பற்றிய புரிதலை தருகிறது. சுருக்கமாக, இந்த செயல்முறை ஒருவரின் உண்மையான  இயல்புக்கு பிரதிபிம்பமாக விளங்கி நாம் யார் என்பதை நம்  அனைவருக்கும் காட்டுகிறது
  2. பகுப்பாய்வு : பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தவறு அல்லது குறைபாடு நம்மை பற்றிய ஒரு நல்ல புரிதலை தருகிறது. எதிரெண்ணத்தின் தாக்கத்தால் செய்யப்படும் தவறுகளின் பகுப்பாய்வு எதிரெண்ணங்கள் உண்டாகும் உண்மையான காரணத்தை  அறிய  நமக்கு உதவுகிறது. நமது தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து தெளிவு பெறுகிறோம். உதாரணத்திற்கு, எந்தத் தவறுகள் அடிக்கடி நிகழ்கின்றன அல்லது எந்த தவறுகள் நம்மை மட்டுமல்லாமல்,  மற்றும் பலரையும் பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம். இந்த பகுப்பாய்வு, நாம் யார் என்பதற்கான தெளிவான பிம்பத்தை அளித்து ஒரு யதார்த்தமான பார்வையை நமக்கு வழங்குகிறது.
  3. சுய ஆலோசனைகள் : தவறுக்கு காரணமான அடிப்படை ஆளுமை குறைபாட்டை நாம் கண்டறிந்தவுடன், அதை சரி செய்வதற்கான வழி மிகவும் நேரடியானதாக அமைகிறது . இதுமுயற்சித்து  சோதிக்கப்பட்ட சுய ஆலோசனை (AS) முறை ஆகும். இந்த சுய ஆலோசனைகள் நேர்மறையான சொற்றொடர்களை கொண்டு  சூழ்நிலைகளுக்கு சரியான முறையில் மறுமொழி அளிக்க மனதை பயிற்றுவிக்கின்றன. இவற்றை ஒரு நாளைக்கு பல முறை செய்ய வேண்டும். சுய ஆலோசனையில் 7 நுட்பங்கள் உள்ளன. உறுதிப்படுத்தல் போலல்லாமல், இவை தனித்துவமானது மற்றும் தவறுக்கு தொடர்பான சூழ்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது . எனவே, இவ்வாறு செய்வதால், நம்முடைய குறைபாடுகளை நீக்கி, மகிழ்ச்சியான, மிகவும் அர்த்தமுள்ள மற்றும் மிகவும் ஆனந்தமான வாழ்க்கை முறையை –  வாழ லாம்.

நினைவுகொள்ளவும்: ஆளுமை குறைகளை களையும் செயல்முறை ஒருவரது குறைபாடுகளின் தீவிரத்தை குறைக்கிறது. குறைவான குறைபாடுகளை உடைய மனம் ஒருவர் எந்த ஆன்மீக பாதையைப் பின்பற்றினாலும் விரைவான ஆன்மீக முன்னேற்றத்தை அனுபவிக்க உதவுகிறது.

குருக்ருபாயோகத்தில், குறைபாடுகளை களைவதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் ஆளுமை குறைபாடுகளை நீக்குவதன் மூலம், அவரது ஆன்மீக பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கு அதிக சக்தி கிடைக்கிறது. இதனால் இந்த ஆன்மீக பயிற்சி, ஆன்மீக ரீதியாக வேகமாக  வளர விரும்பும் ஸாதகர்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கும் காரணியாக  வல்லது

இந்த செயல்முறையை இன்னும் விரிவாக புரிந்து கொள்ள ஆளுமை குறைகளை களையும் செயல்முறை உள்ள பகுதியைப் பார்க்கவும்

5. அகம்பாவம் நீக்கும் செயல்முறை

அஹம்பாவத்தை நீக்குதல்

ஒரு ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

ஒருவரது ஆன்மீக பயணத்தில் அகம்பாவம் மிகப்பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்த வல்லது. ஏனென்றால், ஆன்மீக  அடிப்படையில் , நம்முடைய அகம்பாவம் நம்முள் இருக்கும் தெய்வீகத்தையோ கடவுளையோ அனுபவிப்பதில் இருந்து நம்மை பிரிக்கிறது. அகம்பாவத்தால் நாம் நமது இருப்பு என்பது   5 புலன்கள், மனம் மற்றும் புத்தி இவை மட்டுமே என்ற குறுகிய வட்டத்துடள் நம் வாழ்க்கையை மட்டுப்படுத்தி குறுகிய கண்ணோட்டத்துடன்  வாழ்வதற்கு சமம். நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால் – எனது பெயர், எனது உடல், எனது தோற்றம், எனது கல்வி, எனது நிலை, எனது குடும்பம், எனது சாதனைகள்  எனும் எண்ணங்களை  கொள்வதாகும் . ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இந்த எண்ணங்கள்  மட்டுமே உள்ளது. வாழ்க்கையின் இந்த வரையறுக்கப்பட்ட பார்வைக்கு அப்பால் ஒருவர் சிந்திப்பதில்லை. நாம் அனைவரும் முக்கியமாக நம்மைப் பற்றிய இந்த  தாழ்வான  பார்வையை மாறுபட்ட அளவுகளில் அடையாளம் காண்கிறோம். மறுபுறம், ஆன்மீக முன்னேற்றம் என்பது நாம் நம்முடைய 5 புலன்கள் , மனம் மற்றும் புத்தி ஆகியவற்றை கடந்து, நம்முள் இருக்கும் ஆத்மா அல்லது இறை தத்துவத்தை  அனுபவிப்பதாகும்.

அகம்பாவம் நமக்குள் இருக்கும் இறை தத்துவத்தை அனுபவிப்பதிலிருந்து நம்மை தடுக்கிறது. எல்லா ஆளுமை குறைபாடுகளும் ஒருவரின் அகம்பாவத்திலிருந்தே எழுகின்றன என்றாலும்   அகம்பாவம்  மிகவும் சூட்சுமமானது. அகம்பாவம்  எண்ணற்ற வழிகளில் வெளிப்படுகிறது. அகம்பாவத்தின் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பொதுவான வெளிப்பாடுகளில் சில – கர்வம், உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, கற்பிக்கும் மனப்பான்மை, நான் சொல்வதே/ நினைப்பதே சரி, அதிகாரபூர்வமாக பேசுதல், அடிக்கடி சத்தமாக பேசுவது, எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது, பாராட்டுககளை எதிர்நோக்குவது, தானே கர்த்தா என்ற உணர்வு, ஒருவரின் தோற்றத்தைப் பற்றிய சிந்தனை , சுயநலம், தொடர்ந்து தன்னைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசுவது மற்றும் எனது விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

இது ஒருவரிடம் காணப்படும் அகம்பாவத்தின் பல அம்சங்களை பற்றிய கருத்தை உங்களுக்கு அளித்திருக்கும் .

ஒருவர் பின்பற்றும் பாதை எதுவாக இருந்தாலும், ஒருவரிடம் அதிக அகம்பாவம் இருந்தால், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது.

இந்த பயிற்சி எவ்வாறு உதவுகிறது

ஆன்மீக ரீதியாக முன்னேற, நாம் நமது அகம்பாவத்தை குறைக்க வேண்டும். இதற்கு எந்த மாற்று தீர்வும்  இல்லை. இருப்பினும், நம்முடைய அகம்பாவம்  நம்முள் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளதால், ஆன்மீகத்தை கடைப்பிடிக்கும்போது கூட அதை நீக்குவது எளிதல்ல. எனவே, ஆன்மீக பயிற்சியை செய்வதன் மூலம் ஒருவரின் அகம்பாவம்  தானாகவே அகற்றப்படும் என்று நினைப்பதற்குப் பதிலாக, அகம்பாவத்தைக் குறைக்க ஒருவர் விழிப்புணர்வுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அகம்பாவத்தைக் குறைக்க நடைமுறையில் செய்யக்கூடிய சில முயற்சிகள் பின்வருமாறு:

  • பிரார்த்தனை: நாம்  ஆர்வத்துடன் கடவுளிடம் பணிவோடு பிரார்த்தனை செய்யும் போது, நம்முடைய  இயலாமையை வெளிப்படுத்துகிறோம். இது அகம்பாவத்தைக் குறைக்க உதவுகிறது. அகம்பாவத்தைக் குறைக்க நாம் செய்யக்கூடிய பிரார்த்தனைகளின் சில உதாரணங்கள் பின்வருமாறு
    • எனது அருமை இறைவா, என் அகம்பாவத்தை அதிகப்படுத்தும் அம்சங்களைப் பற்றி நான் அறியும் படி செய்யுங்கள்
    • எனது அருமை இறைவா என் அகங்காரத்தை குறைக்க உதவும் அத்தகைய நபர்களின் அருகாமையில்  என்னை வைத்து அதற்கேற்ற  சம்பவங்களை என் வாழ்க்கையில் உருவாக்குங்கள்.
    • எனது அருமை இறைவா மற்றவர்கள் என்னிடம் சுட்டிக்காட்டுகின்ற எந்தவொரு கருத்தையும் அல்லது தவறுகளையும் ஏற்க எனக்கு உதவுங்கள்.
  • மற்றவர்களைப் பற்றி சிந்திக்கும் குணத்தை வளர்ப்பது, அகம்பாவத்தை குறைக்க உதவுகிறது. மற்றவர்களைப் பற்றி சிந்திக்க நாம் நடைமுறையில் முயற்சி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு பணிச்சுமை அதிகரித்திருப்பதைக் காணும்போது, அவரின் ஆடைகளை சலவை செய்யலாம் அல்லது அவருக்கு தேவையான விஷயங்களுக்கு உதவி செய்யலாம்.
  • உடல் ரீதியான வேலைகளாகிய பாத்திரங்களை சுத்தம் செய்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்வதனால் அகம்பாவம் வேகமாக குறைகிறது. அதிக ஆன்மீக நன்மைகளைப் பெற, ஒரு பணி தெடங்குவதற்கு முன்பு இந்த பணி ஸத்சேவை (கடவுளுக்கு சேவை)  ஆகட்டும் என்று ஒருவர் பிரார்த்தனை செய்யலாம்.
  • பிரபஞ்சம் எவ்வளவு பரந்து  இருக்கிறது  என்பதையும் அதனுடன் ஒப்பிடும்போது  நாம்  எவ்வளவு சிறியவர்  என்பதை சிந்திக்க வேண்டும் . மாறாக, காலத்தின் பரந்த தன்மையை ஒப்பிடுகையில் நம் வாழ்க்கை எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்பதையும் சிந்தியுங்கள். இத்தகைய எண்ணங்கள் அகம்பாவம் வேகமாக குறைய உதவுகிறது
  • எப்பொழுதும் நமது கண்ணோட்டத்தை  அல்லது ஆன்மீக உணர்வை எல்லாம் கடவுளின் விருப்பப்படி அல்லது கடவுளால் நடக்கிறது எனறு பேணுதல்.  உதாரணமாக, உலக வாழ்க்கையில், ‘நான் அறிவார்ந்தவன், ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவன்’ என்பதற்கு பதிலாக ‘கடவுள் எனக்கு கற்பித்தார் ‘ என்றும்  ‘நான் திருமணம் செய்து கொண்டேன்’ என்பதற்கு பதிலாக ‘கடவுள் எனக்கு இந்த திருமண பிராப்பதை அருளினார்’ போன்ற ஆன்மீக உணர்வை நாம் கொண்டிருக்க வேண்டும்.
  • நன்றி செலுத்துவது: நன்றியுணர்வை வெளிப்படுத்துவதன் மூலம், கர்த்ருத்வம் (நான் செய்தேன் எனும் எண்ணம் ) குரு அல்லது கடவுளுக்கு வழங்கப்படுகிறது, இது அகம்பாவத்தை குறைக்கிறது. மேலும் அறிய, ஆன்மீக கண்ணோட்டத்தில் நன்றியுணர்வை பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

மேலும் அறிய அகம்பாவம் நீக்குதல் குறித்த எங்கள் பகுதியைப் பார்க்கவும்.

6. நாமஜபம் செய்வது

நாமஜபம் செய்வது

ஒரு ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

ஒரு ஸாதகர் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று நேரமின்மை. ஸாதகர்கள் தங்களின் ஆன்மீக பயிற்சியை முறையாக செய்ய  நேரம் இல்லை என்று கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். இன்றைய உலகில் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் சிரமங்களால் ஆன்மீக பயிற்சி செய்ய நேரத்தைக் கண்டறிவது கடினம் என்பது  புரிந்து கொள்ள கூடியதே. தியானம் போன்ற ஆன்மீக பயிற்சியைச் செய்வதற்கான நேரத்தை ஒரு ஸாதகர் கண்டறிந்தார் என்றாலும் அவரால், நாள் முழுவதும் அதை தொடர்ந்து செய்ய முடியாது.

நாமஜபம் செய்வது எவ்வாறு உதவுகிறது

இதனால் தான் தற்போதய   யுகத்தில், நாமஜபம் செய்வது சிறந்த ஆன்மீக பயிற்சி என்று முனிவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஏனெனில் நாமஜபத்தை நாள் முழுவதும் ஒருவரின் மனதில் சத்தமில்லாமல்  செய்யலாம். இந்த  எளிய ஆன்மீக பயிற்சி, நேரம் அல்லது இடத்தை சார்ந்தது அல்ல. இதை தொடர்ந்து  செய்ய முடியும் என்பதால், ஆன்மீக பயிற்சியில் தொடர்ச்சியான நிலை உருவாக உதவுகிறது.

மேலும், ஆன்மீக ரீதியாக வளர ஆன்மீக சக்தி தேவை. நாமஜபம் நேர்மறையான தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளது. கடவுளின் பெயரை உச்சரிப்பதன் மூலம், ஒருவர் தெய்வீக சக்தியை  உள் வாங்கி கொள்கிறார். அதிக கவனத்துடனும், மனம் ஒன்றிய நிலையில் நாமஜபத்தில்  ஈடுபடும் போது அந்தளவு  இந்த ஆன்மீக பயிற்சியிலிருந்து அதிகமான நன்மைகள் கிடைக்கின்றது. மேலும் ஆன்மீக உணர்வுடன் நாமஜபத்தில் ஈடுபடும் போது, நன்மை அதிவேகமாக அதிகரிக்கிறது.

நாமஜபத்தின் மற்றொரு நன்மையானது, ஆழ் மனதில் பதிந்துள்ள ஆளுமை குறைபாடுகளின் எதிர்மறை எண்ணப்பதிவுகளை அழிக்க இது உதவுகிறது. ஒருவரின் ஆழ் மனதில் உள்ள  லட்ச கணக்கான எண்ணப்பதிவுகளில்   உளவியல் வழிமுறைகளின் மூலம் தேவையற்ற பண்புகளை  நீக்க பல ஆண்டுகள் அல்லது பல  பிறப்புகள்  கூட ஆகலாம். ஒருவர் நாமஜபத்தில் ஈடுபட்டால் இந்த செயல்முறை விரைவாகிறது. ஏனென்றால், தொடர்ச்சியான நாமஜபத்தினால் ஒருவரின் ஆழ் மனதில் ஒரு ‘பக்தி மையம்’ உருவாகி  ஆழ் மனதில் உள்ள மற்ற எண்ணப்பதிவுகளை வெல்லத் தொடங்குகிறது. இதனால், மற்ற எதிர்மறை எண்ணப்பதிவுகள் தானாகவே வலிமையை இழக்கத் தொடங்கி, அந்த நபர் மீது அவற்றின் தாக்கம் குறைகிறது.

நாமஜபத்தின் மூலம் பெறப்பட்ட ஆன்மீக சக்தி ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுகிறது. நம் பிறந்த மதத்திற்கேற்ற நாமத்தை அல்லது IIஓம் நமோ பகவதே வாஸுதேவாயII (வருடம் 2025 வரை ஸாதகர்களுக்கு உகந்த நாமஜபம் ) எனும் நாமத்தை ஜபிக்க எஸ்.எஸ்.ஆர்.எஃப் பரிந்துரைக்கிறது . இதனுடன், ‘ஸ்ரீ குருதேவ தத்த’ எனும் நாமமும் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பு நாமஜபமாகும். இது அதிருப்தியடைந்த மூதாதையரால் (சூட்சும உடல்கள்) ஏற்படும் ஆன்மீக கஷ்டங்களிலிருந்து ஒருவரை பாதுகாக்க உதவுகிறது.

நாமஜபத்தை பற்றி மேலும் அறிய ‘உங்கள் ஆன்மீக பயணத்தைத் தொடங்குங்கள்’ என்ற எங்களது கட்டுரையைப் பார்க்கவும். அதைப்பற்றி மேலும் விவரமாக அறிய நாமஜபத்தை பற்றிய பகுதியையும் நீங்கள் பார்க்கவும்

7. சத்சங்கம்

சத்சங்கம்

ஒரு ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

ஒரு ஸாதகரின் பயணத்தில், ஆன்மீக உதவி தேவைப்படும் பல தருணங்கள் உண்டு. இதில் பின்வரும் சூழ்நிலைகள் இருக்கலாம்:

  • ஆன்மீகம் குறித்து கேள்விகள் கேட்பது
  • ஆன்மீகம் அல்லது ஒருவரது ஆன்மீக பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெறுதல்
  • விருப்பம் இல்லாமை, கவனமின்மை, எதிர்மறை சிந்தனை, தடைகளை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாத காலங்கள் ஆகியவற்றில் ஆதரவை பெறுதல்.
  • ஆன்மீக நிவாரணத்திற்கு உதவி பெறுதல்

மற்ற வழிகாட்டி ஸாதகர்கள் மற்றும் இணை ஸாதகர்களின் உதவியின்றி, ஆன்மீக பயணங்களில் அவ்வப்போது ஏற்படக்கூடிய தடைகளை சமாளிக்க முடியாமல் ஸாதகர்கள் சில சமயங்களில் செயலற்று போகலாம். இது அவர்கள் ஆன்மீக பயிற்சியை நிறுத்துவதற்கும்  அவர்களது ஆன்மீக இலக்குகளை  கைவிடுவதற்கும் வழிவகுக்கும்

ஸத்சங்கம் எவ்வாறு உதவுகிறது

சத்சங்கம் ஒரு ஸம்ஸ்க்ருத சொல்லாகும்.. அதாவது ‘சத்’ என்பது பூரண சத்தியத்தையும் ‘சங்கம்’ என்பது ஸாதகர்கள் அல்லது மகான்களின் சகவாசம் என்பதாகும். எனவே, முழுமையான உண்மையின் சங்கத்தில் இருப்பது என்று பொருள். சுருக்கமாக சொல்வதெனில் சத்சங்கம் இறைவனின் இருப்பை அனுபவிப்பதற்கு உகந்த சூழலாகும். ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக தத்துவங்களின் தொடர்பான அம்சங்கள், இணை-ஸாதகர்கள் மற்றும் மகான்கள் சகவாசத்துடன் பேசப்படும். சத்சங்கம் என்பது ஸாதகர்களை வளர்ப்பதற்கும் அவர்களின் ஆன்மீக பயிற்சியில் உதவுவதற்கும் உகந்த ஒரு சூழலாகும்.

சத்சங்கத்தில் கலந்துகொள்ளும் பல ஸாதகர்களின் கூட்டு ஆன்மீக சக்தி, ஒருவர் தனது ஆன்மீக பயிற்சியில் விடாமுயற்சியுடன் இருக்க உத்வேகத்தை தருகிறது. வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, மகான்கள் எழுதிய ஆன்மீக நூல்களைப் படிப்பது, சக ஸாதகர்களின் சகவாசத்தில் இருப்பது (ஒரு மகானால் வழிநடத்தப்படும்) மற்றும் ஒரு உண்மையான மகான் அல்லது ஒரு குருவை சந்திப்பது ஆகியவை படிப்படியாக உயர்ந்த தரமான சத்சங்கத்தின் உதாரணங்கள்.

1 முதல் 100 வரையிலான அளவுகோலில், ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, நாமஜபத்திற்கு 5% முக்கியத்துவமும் மகான்களின் சகவாசத்துடன் நிகழும் சத்சங்கத்திற்கு 30% முக்கியத்துவமும்  உள்ளது. ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட இந்த அளவீடுகள் (அதிநுட்பமான ஆறாவது அறிவு மூலம் ) சத்சங்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

சத்சங்கத்தில் இருப்பதால் ஏற்படும் பல நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஒருவர் சத்சங்கத்தில் இருக்கும் போது அவரது ஆன்மீக பயிற்சியில் விடாமுயற்சியுடன் ஈடுபடுவதற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் பெறுகிறார். மேலும் ஆன்மீக பயிற்சி செய்வதற்கான அவரது உற்சாகம் அதிகரிக்கிறது.
  • சத்சங்கத்தில் இருக்கும் தெய்வீக சைதன்யம் ஸாதகரின் ஆன்மீக பயிற்சிக்கான ஆன்மீக சக்தியை கொடுத்து உதவுகிறது.
  • சத்சங்கத்தில் கலந்துகொள்பவர்களிடையே நெருக்கமான உணர்வு உருவாகிறது, இதனால் மற்றவர்களிடம் அதிக அன்பை வளர்ப்பது எளிதாகிறது.
  • சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் பிற ஸாதகர்கள்  ஆன்மீக பயிற்சி செய்ய  கடை பிடித்த முயற்சிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்
  • சத்சங்கத்தில் கலந்து கொள்ளும்போது, ஒருவர் எப்பொழுதும் அனுபவிக்கும் ஆன்மீக அனுபவங்களை விட உயர்ந்த அளவிலான ஆன்மீக அனுபவங்களை பெறலாம். இதனால்  ஆன்மீகத்தில் அவரது நம்பிக்கை அதிகரிக்கிறது.

தற்போதைய காலங்களில், ஆன்மீக பயிற்சியை சுயமாக கடைப்பிடிப்பது மிகவும் கடினம். நம்முடைய ஆன்மீக பயணங்களில் நாம் மேலும் முன்னேறுவதற்கு பிற ஸாதகர்களின் ஆதரவு மற்றும் உன்னத மகானின் வழிகாட்டல் மிகவும் அவசியம். ஆகையால் எஸ்.எஸ்.ஆர்.எஃப். வழக்கமான வாராந்திர ஆன்லைன் சத்சங்கங்களை இலவசமாக நிகழ்த்தி, அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சத்சங்கத்தில் கலந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

ஆன்மீக பயிற்சியின் இந்த அம்சத்தை பற்றி மேலும் அறிய சத்சங்கம் என்ற பகுதியை நீங்கள் பார்க்கவும் .

8. சத்யத்திற்கு செய்யும் சேவை (ஸத்சேவை)

சத்யத்திற்கு செய்யும் சேவை (ஸத்சேவை)

ஒரு ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

ஸாதகர்கள் தங்கள் வாழ்க்கையில் ஆன்மீகத்தைக் கண்டறியும்போது, ​​தங்கள் ஓய்வு நேரங்களில் ஆன்மீகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்கு எழுகிறது. சில நேரங்களில், வழிகாட்டுதல் இல்லாத நிலையில், அவர்கள் சில சமூக சேவை அல்லது தொண்டு வேலைகளைச் செய்கிறார்கள், இது தர்ம பிரசார சேவை செய்வதற்கு இணையாகாது. சமூக சேவை அல்லது தொண்டு பணி போன்ற செயல்களின் மூலம், ஒருவரின் அகம்பாவம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், சமூக சேவை செய்பவர்கள் தொடர்ந்து  ‘நான் எவ்வளவு செய்தேன் என்பதைப் பாருங்கள்’, நான் சமுதாயத்திற்காக இதுபோன்ற நல்ல வேலைகளைச் செய்கிறேன்’, ‘நான் ஒரு நல்ல மனிதன் ‘ போன்ற எண்ணங்களைப் பெறுகிறார்கள். இது ஆன்மீக ரீதியாக தானே கர்த்தா என்ற உணர்வுக்கு சமம். வறுமை, மோசமான சுகாதாரம் போன்ற சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் போது, அவர்கள்  உணர்ச்சி வசப்படும்  வாய்ப்பு உள்ளது. இது அவர்களின் அகம்பாவத்தை அதிகரிக்கலாம் . சரியான கண்ணோட்டத்துடன் உதவி செய்யப்படாவிட்டால், உதவி பெறும் நபர்களுடன் புதிய கொடுக்கல்-வாங்கல் கணக்கு (கர்ம கணக்குகள்) உருவாகும் ஆபத்து உள்ளது . மேலும் அறிய, சமூக சேவை ஆன்மீக பயிற்சியாக கருதப்படுகிறதா என்ற எங்களது கட்டுரையைப் பார்க்கவும்

ஸத்சேவை எவ்வாறு உதவுகிறது

ஸத்சேவை என்றால் சத்யத்திற்கு செய்யும் சேவை, அதாவது தர்ம பிரசாரத்தின் மூலம் கடவுள் பணியில் ஈடுபடுவது (இது உலகளாவிய ஆன்மீகக் கோட்பாடுகளுக்கு  உட்பட்டதாக இரு க்க வேண்டும்) ஆகும். ஆன்மீக பயிற்சியை ஸத்சேவையில் தொடங்குவது என்பது  நமது ஆன்மீக பயிற்சியில் ஒரு பெரிய படியாக கருதப்படுகிறது ஏனெனில் அது நாம் மென்மேலும் ஆன்மீக ரீதியாக வளர பல வாய்ப்புகளை வழங்குகிறது. 1 முதல் 100 வரையிலான அளவுகோலில், ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, நாமஜபத்திற்கு 5% முக்கியத்துவம், மகான்களுடனான ஸத்சங்கத்திற்கு 30% ஆகும். இந்த மற்ற இரண்டு பயிற்சிகளை ஒப்பிடும்போது, ஸத்சேவையின் ஒப்பீட்டு முக்கியத்துவம்100% ஆகும்.

தர்ம பிரச்சாரம் இறைப்பணியில் நாம் பங்கேற்கும்போது, கடவுள் நமது செயலால் மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால் நாம் நம்முடைய தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சியை பற்றி மட்டும் சிந்திக்காமல் மற்றவர்களும் ஆன்மீக ரீதியாக முன்னேற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதால் கடவுள் நம்முடைய செயலால் மகிழ்கிறார். இது கடவுளின் பரந்த மனப்பான்மை உள்வாங்க உதவுகிறது. கடவுள் எவ்வாறு எல்லா உயிரினங்களின் ஆன்மீக முன்னேற்றத்தையும் கவனிக்கிறார் என்பதற்கு ஒத்ததாகும் இவ்வாறு, கடவுளின் இந்த குணத்தை உள்வாங்குவதினால், ஸத்சேவை விரைவான ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.

இறைசேவை அல்லது ஸத்சேவை ஆன்மீக பயிற்சியின் மற்ற எல்லா படிகளையும் ஒருங்கிணைக்கிறது.

ஆன்மீக உள்முக பார்வை என்பதன் மூலம், நமது உள் நோக்கும் குணத்தையும் மற்றும் நமது குறைபாடுகளைப் பற்றி உள்முக சிந்தனையுடன் இருந்து நமது செயல்களாலும் எண்ணங்களாலும் நாம் கடவுளிடம் நெருங்கிச் செல்கிறாமோ என்பதைகவனிப்பதை குறிக்கிறோம்.
  • ஸத்சேவை செய்யும் போது, நாம் நமது தவறுகளை கண்காணிக்கிறோம், மற்ற ஸாதகர்களும் அவர்களின்  கருத்தைத் தெரிவிப்பதால், நாம் ஆன்மீக ரீதியாக உள்முக பார்வை உள்ளவர்களாக (அந்தர்முக்) மாற  உதவுகிறது, எனவே ஆளுமை குறைகளை களையும் செயல்முறையும் நடக்கிறது.
  • பிற்காலத்தில் ஸாதகர்கள் தங்கள் ஸத்சேவையை நன்றியுணர்வோடு செய்யத் தொடங்குகிறார்கள், ஏனென்றால் அவர்களது வாழ்க்கையில் கடவுள் அவர்களுக்காக எவ்வளவு செய்கிறார் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். எனவே ஸத்சேவை ஆன்மீக உணர்வை தூண்டுகிறது
  • முக்கியமாக, ஸத்சேவை நம்மை  சமுதாயம் ஆன்மீக ரீதியாக வளர்ச்சி அடைய உதவும் ஸமஷ்டி ஸாதனையின் எண்ணக்கருவுடன் இணைக்கிறத. தற்போதைய யுகத்தில், சமஷ்டி ஸாதனையின் ஒப்பீட்டு முக்கியத்துவம் 70% ஆகும், அதே சமயம் வ்யஷ்டி ஸாதனையின் அதாவது தனிப்பட்ட ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம் 30% ஆகும்.
  • ஓருவர் தனது நேரத்தையும் முயற்சியையும் இறைசேவைக்கு வழங்குவதன் மூலம், அவரின் உடல், மனம் மற்றும் புத்தியின்  தியாகம்  நிகழ்கிறது
  • மேலும், நாம் மற்றவர்களுடன் ஸத்சேவையில் ஈடுபடும்போது, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் மற்றவர்களைப் பற்றி சிந்திக்க பழகவும் இது நமக்கு வாய்ப்பளிக்கிறது, எனவே நாம் படிப்படியாக ப்ரீதி ( இறை அன்பை) வளர்த்துக் கொள்கிறோம்.

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருள் மற்றும் வழிகாட்டுதலின் மூலம், எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஸாதகர்கள் தங்கள் நேரம், ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ப ஸத்சேவை செய்ய ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தை பரப்புவதற்காக பல வகையான ஸத்சேவைகளுக்கு தங்கள் நேரத்தையும் திறமையையும் வழங்க பல ஸாதகர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த தளத்தில் இணைந்துள்ளனர். புத்தகங்கள் அல்லது கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு, விரிவுரைகள் மற்றும் ஆன்மீக பட்டறைகளை ஒழுங்கமைத்து நடத்த உதவுதல் மற்றும் எஸ்.எஸ்.ஆர்.எஃப்.யின் சமூக ஊடக பக்கங்களுடன் தொடர்புடைய ஸத்சேவை, கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகள் எழுதுதல், எஸ்.எஸ்.ஆர்.எஃப். வலைத்தளத்தை பராமரித்தல் மற்றும் அதன் வளர்ச்சியில் பங்கேற்பது என்பவை  ஸத்சேவைகளின் சில உதாரணங்கள்.  ஸத்சேவைத் தொடங்க ஆர்வமுள்ள வாசகர்களை எங்கள் லைவ்சாட் வசதியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஸத்சேவை பற்றி மேலும் அறிய, தயவுகூர்ந்து எங்களின் இந்த பகுதியைப் பார்க்கவும்

9. ஆன்மீக உணர்வின் விழிப்பு

ஆன்மீக உணர்வு

ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

எந்தவொரு ஆர்வமும் இல்லாமல் ஒரு செயலை அல்லது தொழிலைச் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். ஒருவருக்கு முழு செயல்பாடும் வறண்டதாகத் தோன்றும் மற்றும் செய்வதற்கு உற்சாகம் இருக்காது. ஆன்மீக பயிற்சியும் இதைப்போல் தான். பெரும்பாலும், ஸாதகர்கள் ஆன்மீக பயிற்சியைத் தொடங்கும்போது, ஆன்மீக பயிற்சியின் பல நிலைகளைக் கடந்து செல்கிறார்கள். ஆயினும் அவர்களுக்கு தெய்வீக உணர்வு கிடைக்காமல் போகலாம். ஆன்மீக உணர்வை எவ்வாறு விழிப்பு நிலையில் வைத்து இருப்பது என்று தெரியாததே இதற்கு காரணம். இருப்பினும், அவர்கள் ஆன்மீக உணர்வை அனுபவிக்கும் போது அது அவர்களின் வாழ்க்கையிலும், ஆன்மீக பயிற்சியிலும் தெய்வீக இனிமையைக் கொண்டு வருகிறது.

ஆன்மீக உணர்வு எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை எவ்வாறு எழுச்சி அடைய செய்வது

ஒரு பழமொழி உண்டு: ஆன்மீக உணர்வு உள்ள இடத்தில், கடவுள் இருக்கிறார்.

ஆன்மீக உணர்வு எழுச்சி அடைய மேற்கொள்ளும் முயற்சிகளின் மகத்துவத்தை இந்த கூற்று நமக்கு விவரிக்கிறது. எனவே, ஆன்மீக உணர்வு என்றால் என்ன? இந்த மிக உயர்ந்த ஆன்மீக உணர்வை சொற்கள் கொண்டு விளக்கமுடியாது. ஆன்மீக உணர்வு என்பது கடவுளுடன் ஒன்றியிருத்தல். ஆனால் அதை எப்படி உணர்வது?

வழக்கமாக, நாம் அனைவரும் நம் இருப்பை நன்கு அறிவோம். இருப்பினும், ஆன்மீக உணர்வை எழுப்ப நாம் முயற்சிகள் மேற்கொள்ளும்போது, கடவுளின் இருப்பை அனுபவிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நாம் தெய்வீகத்துடன் ஒன்றி இருக்கிறோம் என்று உணரும் ஒரு உயர்ந்த  நிலை  ஆகும். இந்த நிலையில், தேவைகள் இல்லை, விருப்பங்கள் இல்லை, வெறும் பேரின்ப உணர்வுகள், அன்பு, நன்றியுணர்வு மற்றும் கடவுளுடன் ஒன்றி இருக்கிறோம் என்ற உணர்வு மட்டுமே. பெரும்பாலும் இது கண்ணீர், நடுக்கம் போன்ற சில உடல் வெளிப்பாடுகளுடன் காணப்படும். ஆன்மீக பயிற்சியின் ஒரு பகுதியாக நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் ஓர் அர்த்தம் தருகிறது மற்றும் தெய்வீகத்தின் சாரத்தை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. கடவுள் அல்லது குரு நம்முடன் நடப்பதை நாம் உணர்கிறோம். அந்த நேரத்தில், மன அழுத்தம் மங்கிவிடும். ஆன்மீக உணர்வு எந்தளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவு கடவுளிடம் நெருங்கிய உணர்வு நம்மிடம் மேலோங்கிறது

சில சமயங்களில் நாம் கடவுளிடம் நன்றியுணர்வை உணரும்போது அல்லது கடவுள் நமக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை நினைவில் கூறும்போது நம்முடைய ஆன்மீக உணர்வு தன்னிச்சையாக விழித்துக் கொள்கிறது. ஆதலால்  நாம் நம்முடைய ஆன்மீக உணர்வை அதிகரிக்கவும், அது நம் வாழ்வில் நிலையானதாக மாறவும்  மனம் மற்றும் புத்தியின் நிலையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

ஆன்மீக உணர்வை அதிகரிப்பதற்கு சில எளிய வழிமுறைகள் பின்வருமாறு.

  • அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் கடவுளுக்கு சேவை செய்கிறோம் என்ற உணர்வோடு நாம் செய்ய முடியும். உதாரணத்திற்கு, வீட்டை சுத்தம் செய்யும் போது, நாம் கடவுளின் வீட்டை சுத்தம் செய்கிறோம் என்ற மனப்பான்மையுடனும், ஆன்மீக உணர்வுடன் செய்ய முடியும். உணவை சமைக்கும்போது, நாம் கடவுளுக்காக உணவை சமைக்கிறோம் என்ற ஆன்மீக உணர்வுடன் சமைக்கலாம். வேலை செய்யும்போது நாம் கடவுளுக்கு சேவை செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யலாம்.
  • நாம் கடவுளின் உதவியை உணர்ந்த அனைத்து கடினமான நேரங்களையும், அவருடைய அருளினால் தீர்க்கப்பட்ட சூழ்நிலைகளையும் நன்றியுணர்வுடன் நினைத்து  பார்க்கலாம். திட நம்பிக்கையை வளர்ப்பதற்காக நமது ஆன்மீக பயணங்களின் போது கடவுள் அருளிய அனைத்து ஆன்மீக அனுபவங்களையும் நாம் மீண்டும் நினைவு கூறலாம் . ஆன்மீக உணர்வை எழுச்சி அடைய செய்வதில் நன்றியுணர்வு ஒரு  முக்கிய பங்கை வகிக்கிறது.

நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் தொடர்ந்து ஆன்மீக உணர்வு நிலையில் இருக்க முடியாமல் போகலாம். இருப்பினும், அந்நிலையை அடைவதே நம்முடைய குறிக்கோள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  தொடர்ச்சியான ஆன்மீக உணர்வு  நிலையில் இருப்பது ஒரு மேம்பட்ட ஆன்மீக நிலையில் சாத்தியமாகும். எனவே, ஆரம்பத்தில் நீங்கள் ஆன்மீக உணர்வை அனுபவிக்க முடியாவிட்டால் சோர்வடைய வேண்டாம். ஆன்மீக உணர்வை எழுப்புவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வது மிகவும் அவசியம். நாம் சிரத்தையுடன் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ஆன்மீக உணர்வையும் அவருடைய தெய்வீக இருப்பையும் அனுபவிக்கும் பரிசை கடவுள் நமக்குத் தருகிறார். ஆன்மீக உணர்வை அனுபவிக்க ஒருவர் செய்யக்கூடிய முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஆன்மீக உணர்வு குறித்த எங்கள் பகுதியைப் பார்க்கவும்.

10. தியாகம்

 தியாகம்

ஒரு ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

தங்கள் ஆன்மீக பயிற்சியில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்று பல ஸாதகர்களுக்கும் தெரிவதில்லை. அவர்கள் அன்றாட  நடைமுறையின் சௌகரிய வட்டத்தினுள் இருப்பதே முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அவர்கள் அதற்கு வெளியே செல்ல விரும்பவதில்லை. எனவே, அவர்கள் தங்கள் ஆன்மீக பயிற்சியில் அடுத்த  படியை நோக்கி போவதில்லை

மேலும், மக்களிடம் பல்வேறு பற்றுதல்கள் உள்ளன – இவை  உடல்ரீதியாகவோ அல்லது உணர்வுரீதியாகவும் இருக்கலாம். பற்று சார்ந்த விஷயங்கள் நீடித்த மகிழ்ச்சியைத் தரும் என்ற தவறான கருத்து அவர்களிடம் உள்ளது. ஆனால் இது  உண்மைக்கு  முற்றிலும் புறம்பானதாகும். எல்லோரும் அறிந்தபடி, நாம்  தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு உலகில் வாழ்கிறோம், மேலும் நாம் பற்று கொண்டிருக்கும் அதே  விஷயங்கள் மாறும்போது நமக்கு மிகுந்த சோகத்தைத் தரக்கூடும். ஒருவர் தன் பற்றுதல்கள் மற்றும் சௌகரிய வட்டத்திலிருந்து வெளிவருவது என்பது, சொல்வது எளிது, ஆனால் நடைமுறை படுத்துவது கடினம்.

அப்படியென்றால், இதற்கு என்ன தான் தீர்வு ?

தியாகம் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை நோக்கி எவ்வாறு செல்வது:

தியாகம் என்னும் ஆன்மீக பயிற்சி, இறைசேவை செய்ய அல்லது தர்ம பிரசார பணியில் ஈடுபட ஒருவரின் உடல், மனம் மற்றும் செல்வத்தை தியாகம் செய்ய ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதை உள்ளடக்கியது

இருப்பினும், நாம் ‘தியாகம்’ அல்லது ‘தவிர்தல் ’அல்லது ‘விட்டுக்கொடுத்தல் ’ பற்றி குறிப்பிடப்படும்போது நம்மில் சிலர், இறுதியில் நம் உலக வாழ்க்கையை நாம் கைவிட வேண்டும் என்று இதன் அர்த்தத்தை தவறாக எண்ணுகிறோம். ‘நான் கொடுப்பதற்கு பதிலாக எதையும் பெறாவிட்டால் என்ன செய்வது ?’ என்று நினைப்பது, ஆன்மீக பயிற்சியை பின்பற்றுவதில், நமக்கு ஒரு வகையான அச்சத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

இந்த பயிற்சியின் உணர்வை புரிந்துகொள்வதும் முக்கியம். இது அன்பிலிருந்து உருவாக வேண்டும்.அவ்வாறு செய்தால் தியாகம் செய்வதாக ஒருவர் ஒரு போதும் உணர்வதில்லை. இதற்கு ஓர் உலகியல் உதாரணம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்யும் பல தியாகங்கள். தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வாய்ப்புகள் ஏற்படுத்த அவர்கள் பல சிரமங்களையும் தியாகங்களையும்   மேற்கொள்கிறார்கள். அவர்கள் அதை ஒருபோதும் சிரமமாக உணர்வதில்லை, ஏனெனில் அது அன்பால் செய்யப்படுகிறது. இது ஆன்மீக பயிற்சியில் தியாகம் செய்வதற்கு ஒப்பாகும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், நம்மை படைத்த கடவுளிடமிருந்து நாம் பெற்றவற்றிலிருந்து  ஒரு பகுதியை அவருக்குத் திருப்பித் தருகிறோம். ஆனால் இதற்கு பெரும் முயற்சி தேவைப்படுகிறது. ஏனென்றால் ஒருவர் அவரின் சௌகரிய வட்டதிலிருந்து வெளியே வந்து அவரின் மனம், உடல் மற்றும்  செல்வத்தை தியாகம் செய்ய தயங்குவது இதற்கு காரணமாகும்.

எனவே, ஒருவர் சிறிய அளவிலான தியாகங்கள் செய்வதிலிருந்து தொடங்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் எந்த நோக்கமின்றி பேஸ்புக் போன்ற ஒரு சமூக ஊடகங்களுக்குள், சுமார் ஒரு மணிநேரத்திற்கு உங்கள் இடுகைகளுக்கு எத்தனை நபர்கள் விருப்பங்களை அளித்து உள்ளனர் என்று பார்க்கும் பழக்கத்தில் உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்நேரத்தை மனதின் சிறிய தியாகத்தினால் கடவுளின் நாமத்தை மன ஒருமைப்பாட்டுடன் நாமஜபம் செய்யலாம். ஒவ்வொரு முறையும் நாம்  கடவுளிடம் நெருங்கிச் செல்லவோ அல்லது அவருக்கு ச்சேவை செய்யவோ   தெரிவு செய்யும் போது , நாம்  உடல்ரீதியாகவோ அல்லது மனோரீதியாகவோ மற்றும்  எப்போதும் ஆன்மீக ரீதியாக பலனடைகிறோம் என்பதை கவனிப்பீர்கள்.

நம்மை நாமே முழுமையாக அர்ப்பணிக்கும் போது  – அதாவது மனம், உடல் மற்றும் செல்வம்  எதுவாக இருந்தாலும், நாம் பெற்றுக்கொள்ள தேவையான இடத்தை நமக்குள்ளே நாம் உருவாக்குகிறோம். நாம் நம்முடைய சௌகரிய வட்டத்தை விட்டு வெளியே வந்து கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் போது, அவர் நமக்காக எவ்வளவு   அதிகம் செய்கிறார் என்பதை நாம்  உணர்வோம். இது தெய்வீகத்தை அனுபவிப்பதற்காக நம்முடைய உலக இருப்பை மேலும் மேலும் தியாகம் செய்வதற்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

தியாகம் செய்வதற்கான சில வழிகள் :

  • இறைசேவை செய்ய நமது ஓய்வு நேரத்தை விட்டுக்கொடுப்பது
  • இறைசேவை செய்ய நமது திறமைகளையும் திறன்களையும் வழங்குதல்
  • ஆன்மீகத்தைப் பரப்புவதற்கு நன்கொடை அளித்தல்
  • நம்மிடம் அளிப்பதற்கு எதுவும் இல்லையென்றாலும், நம்மிடம் உடல் உள்ளது. ஒரு ஆன்மீக பட்டறை நடப்பதற்கு முன் வளாகத்தை சுத்தம் செய்ய நாம் உதவலாம்.

ஒருவரது  திறனுக்கு ஏற்ப தியாகங்களைச் செய்யலாம். நமது ஆன்மீக பயிற்சியின் தரமும் அளவும் அதிகரிக்கும்போது, தியாகம் செய்வதற்கான நமது விருப்பம் தானாகவே அதிகரிக்கிறது. இறுதியில், நாம் எல்லாவற்றையும், அதாவது உடல், மனம் மற்றும் செல்வத்தை  தியாகம் செய்ய வேண்டும். நம்முடைய உலக வாழ்க்கை முறையையும் அதனுடன் வரும் அனைத்து இணைப்புகளையும் நாம் முற்றிலும் கைவிடும்போதுதான், கடவுளை முழுமையாக அனுபவிக்க முடியும்.

மேலும் அறிய, தியாகம் குறித்த எங்கள் பகுதியைப் பார்க்கவும்.

11. ஆன்மீக அன்பு (ப்ரீதி)

ஆன்மீக அன்பு (ப்ரீதி)

ஸாதகர் எதிர்கொள்ளும் சவால்கள்

இக்காலத்தில் நிலவும் யதார்த்தம் என்னவென்றால்,பெரும்பாலான மக்கள் சுயநலவாதிகள். எந்த வெளிப்படையான உள்நோக்கம் இல்லாமல் மற்றவர்களிடம் உண்மையான அக்கறையோடு அவர்களை முன்நிறுத்தி எண்ணிப் பார்ப்பவர்கள் மிகவும் அரிது.

எனவே, அன்பு மற்றும் மற்றவர்களை பற்றி சிந்திப்பது  என்பவற்றின் தொடர்ச்சியான இரண்டு முனைகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது  ஒரு பக்கம் சுயநலத்தையும், மறுபுறம் மற்றவர்கள் மீதான நிபந்தனையற்ற அன்பையும் காண முடியும். கடவுளின் இந்த  ஆன்மீக அன்பு (ப்ரீதி )  என்பது மற்றவர்களுக்கான நிபந்தனையற்ற அன்பின் மிக  சரியான உதாரணம். மிக உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ள மகான்கள் மற்றவர்களுக்கும், ஏனைய படைப்பு அனைத்திற்கும் இந்த தன்னலமற்ற அன்பை காட்டுகிறார்கள்.

கடவுளின் இந்த தனித்துவமான குணம்தான்  அவரை மனிதகுலம் மற்றும்  ஆன்மீக பரிமாணத்தில் உள்ள அனைத்து சூட்சும தனிப்பண்புப் பொருள்களுக்கும்  மிகவும் அன்பானவராக ஆக்குகிறது.

ஒரு ஸாதகர் கடவுளுடன் ஒன்றிணைய விரும்பினால், இந்த அன்பின்  தொடர்ச்சியில் அவர் எங்கிருந்தாலும், மற்றவர்களிடம் நிபந்தனையற்ற அன்பை காட்டி, அதன் வழியில் செல்ல முயற்சி செய்ய வேண்டும். எப்படி, எண்ணெயும் நீரும் அவற்றின் வெவ்வேறு பண்புகளின் காரணமாக ஒன்றிணைய  முடியாதோ அது  போல, சுயநலத்துடன் இருப்பவர் ப்ரீதி  நிறைந்திருக்கும் கடவுளுடன் ஒருநாளும் ஒன்றிணைய முடியாது. இருப்பினும், சுயநலம் மற்றும் தன்னலம் கருதும் உலகத்தால் சூழப்பட்டிருக்கும் போது தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது எளிதானது அல்ல. இன்றைய உலகில் நமக்கு நாமே முதலிடம் கொடுத்து கொள்ள வேண்டிய  கட்டாயத்தில் உள்ளோம். மற்றவர்களின் பார்வைக்கு நாம் சாதுவாக தெரிவதால், அவர்களுக்கு சாதகமாக நம்மைப் பயன்படுத்தி விடலாம் என்று நாம் பயப்படலாம்

இன்றைய உலகில் ஒருவர் எவ்வாறு விசாலமான அன்பு உடையவராக மாற முடியும்?

இங்குதான் ஆன்மீக அன்பை (ப்ரீதி) பற்றி கற்றுக்கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும்  அவசியம் ஏற்படுகிறது

ப்ரீதியின் பயிற்சியால் எவ்வாறு ஒரு ஸாதகர் பயன் பெறுகிறார்

எல்லா எல்லைகளையும் மீறக் கூடியது  அன்பு ஒன்று தான்

உங்களிடம் ஆன்மீக அறிவு இருக்கலாம், ஆனால் அன்பு இல்லையென்றால் மக்கள் உங்களுடன் நெருக்கமாக உணர மாட்டார்கள்.

ஒவ்வொரு உயிரினத்திடமும், உயிரற்ற பொருட்களிடமும் நாம் நம்முடைய எல்லா செயல்களாலும், பேச்சாலும், நடத்தையாலும் அன்பு காட்ட வேண்டும். அது உள்ளிருந்து வர வேண்டும்,  போலியாக  உருவாக்க முடியாது. இறைவன் எப்படி உலகம் முழுவதும் தன்னுடையது என்று எண்ணுகிறாரோ, அதேபோல் நாமும் அந்நிலைக்கு வரவேண்டும். அப்போதுதான், நாம் கடவுளுடன் ஒன்றிணையவது சாத்தியமாகும்.

ஒரே நாளில் நாம் ஆன்மீக அன்பு கொண்டவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள முடியாது.

எனவே, நாம் தினமும் சிறிய முயற்சிகளை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும், அவற்றில் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • மற்றவர்களுக்காகச் காரியங்களைச்  செய்வது மற்றும் தன்னிலையிலிருந்து மாறி மற்றவர்களுக்காவே காரியங்களைச்  செய்வது
  • நமது விருப்பத்திற்கு’ பதிலாக ‘மற்றவர்கள் விருப்பத்தின்’ படி செய்வது என்பது இந்த படியின்  ஒரு முக்கியமான முயற்சியாகும்
  • மென்மையாகவும் பணிவாகவும் அன்பாகவும் பேசுவது
  • மற்றவர்களிடம் ஒருவருக்கு இருக்கும் எதிர்பார்ப்பை குறைக்கும் ஆளுமை குறைகளை களையும் முயற்சிகள்
  • மற்றவர்களை விமர்சிக்காமல் மற்றும் குற்றம் காணும் மனப்பான்மை இல்லாமல் அவர்களை புரிந்துகொள்வதும் பொறுத்துக்கொள்வதும்
  • தன்னலமற்று செயல்களை செய்வது
  • எல்லாவற்றிலும் கடவுளைப் பார்க்க முயற்சிப்பதன் மூலம், மற்றவர்களுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்ற ஆன்மீக உணர்வை  வைத்திருத்தல்
  • மற்றவர்களிடமும் அவர்களின் சூழ்நிலைகள்   மீதும் அனுதாபம் காட்டுதல்
  • மற்றவர்களைப் பாராட்டுவதோடு நமது நன்றியுணர்வை வெளிப்படுதல்
  • மன்னிப்பதற்கு பயிற்சி செய்வது.  அவ்வாறு செய்யும் போது, மன்னிப்பது மட்டுமல்லாமல், சம்பவத்தையும் மறந்து விடுவது.
  • ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, மற்றவர்கள் அதைப் பயிற்சி செய்ய உதவுவது

முதலில் ஸாதகர்கள்  மற்றும் நமக்கு அன்பானவர்களுடன் இதை பயிற்சி செய்யலாம். படிப்படியாக, நண்பர்கள், வேலை செய்யும் சகாக்கள், அறிமுகமானவர்கள், அறியப்படாத நபர்கள், விலங்குகள், உயிரற்ற பொருள்கள் மற்றும் பின்னர் நம் எதிரிகளையும் சேர்த்து இந்த பயிற்சியின் வட்டதை அதிகரிக்கலாம்.

இதுபோன்ற முயற்சிகளை நாம் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றும்போது, மற்றவர்களிடம் நாம் எதிர்பார்ப்புகள் இல்லாத  அன்பு அ  காட்ட தொடங்குகிறோம். எதிர்பார்ப்பின்றி தன்னலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் ஆனந்த உணர்வை நாம் அனுபவிக்கலாம். மேலும் மேலும் தொடர்ந்து செய்ய இது நம்மைத் தூண்டுகிறது. முதலில், மற்றவர்களைப் பற்றி சிந்திக்க நாம் அதிக முயற்சி எடுக்க வேண்டும், அதன் பின்னர் 70% ஆன்மீக நிலை அடைந்தவுடன், அதாவது ஒருவர் மகான் நிலை அடையும் போது, உண்மையான ப்ரீதி உருவாகத் தொடங்குகிறது.

மேலும் அறிய ஆன்மீக அன்பு (ப்ரீதி) பற்றிய எங்கள் பகுதியைப் பார்க்கவும் .

12. முடிவுரை

ஆன்மீக சாஸ்திரத்தின் படி, ஆன்மீக ரீதியான வளர்ச்சியே வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் ஆகும். இது எல்லா மனித முயற்சி மட்டும் குறிக்கோளை விட உன்னதமானது. ஆன்மீகத்தின் இறுதி நிலையை நோக்கிச் செல்லும் போது எதையும் சாராத, மகிழ்ச்சியைக் காட்டிலும் பல அம்சத்தில்  மேற்பட்ட உன்னதமான ஆனந்தம் என்ற பரிசை அனுபவிக்க முடியும். இந்நிலையில், ஒருவர் எந்த நிலைமையையும் பொருட்படுத்தாமல் ஆனந்தமாக இருக்கிறார். மேம்பட்ட ஆன்மீக நிலையில் உள்ளவர்கள் அவர்களை சுற்றியுள்ள அனைத்திலும்  நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்துவார்கள் .

ஐ.நா.வைப் பொறுத்தவரை, ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் சுமார் 72 ஆண்டுகள் ஆகும். இது நமது இலக்கை அடைய 50 க்கு மேற்பட்ட வருடங்களை (அல்லது சுமார் 18,250 நாட்கள்)  தருகிறது. இந்த கட்டுரையைப் படிக்கும்போது உங்கள் வயதுக்கு தகுந்தாற்போல், ஒரு ஸாதகராக தமது ஆன்மீக இலக்கை அடைய உங்களுக்கு குறிப்பிட்ட அளவு நேரமே இருப்பதை பற்றி நீங்கள் புரிந்துகொள்வீர்கள். மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், நாம் குறிப்பிட்ட ஆன்மீக நிலையை எட்டவில்லை எனில்,  மீண்டும் பூமியில் பிறந்து நமது கர்மாவைத் தீர்க்க வேண்டும் என்பது கர்மவிதி.  தற்போது நிகழும் கலியுக யுகத்தில் பூமியில் மறுபிறப்பு எடுப்பது பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியை விட அதிக துன்பத்தை ஏற்படுத்தும்.

எப்போதும் நாம் ஒருபோதும் திரும்பப் பெற முடியாத ஒன்று, நேரம் மட்டும் தான் மற்றும் மின்னல் வேகத்தில் செல்லக்கூடியதும் நேரம் தான். நாம் ஒரு நாள் எழும் போது வாழ்க்கையின் குளிர்காலத்தில்  அதாவது இறுதி காலத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து , நேரம் எங்கே போனது என்று  ஆச்சரியப்படுகிறோம். எனவே, ஆன்மீக ரீதியாக வளர விரும்பும் ஒரு ஸாதகர், ஒவ்வொரு நாளையும் கணக்கிட வேண்டும், ஏனென்றால் ஆன்மீக ரீதியாக  உயர்ந்த ஆன்மீக நிலைக்கு வளர ஒருவரின்  வாழ்நாள் முழுவதும் ஆகலாம். ஸாதகர்கள் இந்த அறிவைப் பயன்படுத்திக்கொண்டு, ‘குரு அருளிய (குருக்ருபாயோகம்)’ எட்டு அம்ச பாதையைத் தழுவி, விரைவான ஆன்மீக முன்னேற்றத்தின் பலன்களைப்  பெற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.