குருக்ருபாயோகம்

இந்த கட்டுரையை நன்கு புரிந்து கொள்வதற்கு, தயவு செய்துகுரு என்பவர் யார்? எனும் கட்டுரையினை  படிக்கவும்

1. குருக்ருபாயோகம் ஒரு அறிமுகம்

இறைவனை அடைவதற்கு பல பாதைகள் இருந்தாலும் குருக்ருபாயோகமே ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் உச்சகட்டத்தை அடைவதற்கு உதவும் மிக முக்கியமான வழியாகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும், முன்னேற்றம் காணவும் நமக்கு உதவ வழிகாட்டி அல்லது ஆசிரியர் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த பிரபஞ்ச விதிக்கு ஆன்மீக முன்னேற்றம் மட்டும் விதிவிலக்கல்ல. நித்தியமான குரு தத்துவம் (இறைவனின் கற்றுக்கொடுக்கும் தத்துவம்) மனித உருவிலிருக்கும் குரு ஒருவர் மூலம் செயல்பட்டு மாணவன் ஒருவன் விரைவாக ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய உதவுகிறது.

எந்த ஆன்மீக பாதையாக இருந்தாலும், நாமாக முயற்சி செய்யும் பொழுது  ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிலை வரை மட்டுமே செல்ல முடியும். இதனை தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் கண்டிப்பாக குருவின் அருள் அவசியமாகும்.

2. குருக்ருபாயோகத்தின் பொருள் விளக்கம்

க்ருபா எனும் வார்த்தை சமஸ்க்ருத ‘க்ருப்’-லிருந்து வந்துள்ளது. க்ருப் என்றால் காருண்யம் என்று பொருள். க்ருபா என்பதை கருணை, தீட்சை வழங்குதல் அல்லது ஆசீர்வாதம் எனவும் பொருள் கொள்ளலாம். அதன்படி குருக்ருபாயோகம் என்பது குருவின் கருணையின் உதவியுடன் ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் ஒன்றிணைதல் ஆகும்.

3. குருக்ருபாயோகத்தின் முக்கியத்துவம்

3.1 முன்னேற்றம் அடைவதற்கு எடுக்கும் காலம்

  • குருக்ருபாயோகத்தினை பின்பற்றி ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு எடுக்கும் குறைந்த கால அளவே இவ்வழியின் மிக முக்கிய நன்மையாகும். ஒரு ஸாதகர் குருவின் பணியான ஆன்மீகத்தினை பரப்பும் காரியங்களை செய்து குருவின் அருளினைப் பெற்று விரைவான ஆன்மீக முன்னேற்றத்தினை அடைகிறார். குருவின் அருளைப் பெறுதலை வேறு எந்த உலக வெற்றிகளுடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் பின்வரும் உதாரணம் இதனை நன்கு புரிந்து கொள்ள உதவும். வறுமையில் வாடும் மாணவன் ஒருவன் தன்னுடைய கடும் உழைப்பால் கோடீஸ்வரன் ஒருவரின் கவனத்தைப் பெறுகிறான். அதன் பின் அக்கோடீஸ்வரர் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் அவன் சேர்வதற்கான அனைத்து செலவினையும் ஏற்கிறார் மற்றும்  அவனது எதிர்கால வேலைவாய்ப்புக்களையும் பார்த்துக் கொள்கிறார். இதன் மூலம் பல வருடங்களாக வேலை செய்து மெதுவாக வேலைத்தளத்தில் உயர்வினை பெறும் காலம் சேமிக்கப்படுகிறது. அதுபோல் குருவின் அருளினைப் பெறும் இறைவனின் ஸாதகரும் மற்றைய ஆன்மீக பாதைகளில் செலவழிக்கும் பல வருட ஆன்மீக பயிற்சியினை சேமிக்கிறார்
  • வேறு எந்தவொரு ஆன்மீக பாதையினில் ஆன்மீக பயிற்சி செய்தாலும் சராசரியாக ஒருவர் ஒரு வருடத்திற்கு 0.25% மட்டுமே முன்னேற்றம் அடைகிறார். குருவின் வழிகாட்டுதலில் ஆன்மீக பயிற்சி செய்தால் ஒருவர் ஒரு வருடத்திற்கு 2-3% வரை முன்னேற்றம் அடைய முடியும். குருவின் அருளினை ஒரு சிஷ்யன் பெற்றிருந்தால் அவனால் ஒரு வருடத்திற்கு 5-8% வரை கூட முன்னேற்றம் அடைவதற்குரிய சாத்தியக்கூறு உள்ளது.

3.2 ஒரு குறிப்பிட்ட நிலையினை தாண்டி முன்னேறுதல்

  • சம்ஸ்க்ருதத்தில் ஒரு பிரபல கூற்று உள்ளது. ‘குருக்ருபா ஹி கேவலம் சிஷ்ய பரமமங்கலம்’, இதன் பொருள் என்னவென்றால் குருவின் அருள் ஒன்றால் தான் சிஷ்யன் தனது உச்சகட்ட பரிசான ஆன்மீக முன்னேற்றத்தை அடைய முடியும்.
  • குருவின் அருள் இல்லாமல் ஒருவர் தன் மனம் மற்றும் புத்தியைக் கரைத்து மகானின் நிலையினை (அதாவது 70% ஆன்மீக நிலை) அடைவது இயலாது.
  • குருக்ருபாயோகத்தை தவிர்த்து வேறு எந்த ஆன்மீக பாதையினை பின்பற்றினாலும் ஒருவரால் மனோ தேஹத்தையும் காரண தேஹத்தையும் மஹாகாரண தேஹத்தையும் பூரணமாக சுத்திகரிக்க முடியாது. அதனால் இந்த பாதைகள் எதுவும் இறுதி இலக்கான மோக்ஷத்தினை பெற்றுத் தரும் திறன் கொண்டிருக்கவில்லை.
  • குருவின் அருள் ஒரு ஸாதகருக்கு இருந்தால்தான் அவர் பின்பற்றும் கர்மயோகத்தால், ஞானயோகத்தால் அல்லது பக்தியோகத்தால் அவரின் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறும். அதன் பின்பு குருவால் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக பயிற்சியையே ஒரு சிஷ்யன் செய்வதால் அவருக்கு குருவருளின் பாதை மட்டுமே எஞ்சியுள்ளது. இறைவனை நோக்கி செல்லும் எல்லா பாதைகளின் உச்சக்கட்டத்தில் ஒரு ஸாதகன் இறுதி இலக்கான இறைவனோடு ஒன்றறக் கலக்க குருவருளே. துணை புரிகிறது.

4. குருவின் அருள் எவ்வாறு வேலை செய்கிறது?

குருவின் அருள் 2 வழிகளில் செயல்படுகிறது :

  • ஸங்கல்பம் : எப்பொழுது குரு ஒருவர் ‘இந்த சிஷ்யன் ஆன்மீகத்தில் முன்னேறட்டும்’ என ஸங்கல்பம் செய்கிறாரோ அப்பொழுது தான் சிஷ்யன் உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தினை அடைகிறான். இதுவே குருவின் க்ருபை என குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கு குருவின் மனதில் ‘இது நடக்கட்டும்’ எனும் வெறும் எண்ணம் ஒன்றே போதும். வேறு எதுவும் தேவையில்லை. எனினும் இது 80% ஆன்மீக நிலையினை அடைந்த ஒரு மகானினால் மட்டுமே சாத்தியமாகும். 70% ஆன்மீக நிலையில் இருக்கும் மகான்களின் ஸங்கல்பம் பெரும்பாலும் சிஷ்யர்களின் உலக விஷயங்களுக்கு மட்டுமே சாதித்துத் தரக்கூடியது.
  • இருப்பு :  சிஷ்யனின் ஆன்மீகப்பயிற்சியும் முன்னேற்றமும் தானாக நடைபெறுவதற்கு குருவின் அருகாமை, அவரின் சகவாசம் அல்லது அவருடைய வெறும் இருப்பு ஒன்றே போதும். இதற்கு சிறந்த உதாரணம் சூரியன் உதிக்கும் போது எல்லோரும் விழிப்பு நிலை பெறுகின்றனர்; பூக்கள் மலர்கின்றன. இது சூரியனின் இருப்பினால் மட்டுமே நிகழ்கிறது. சூரியன் யாரையும் எழும்ப சொல்வதுமில்லை, அல்லது பூக்களை மலர சொல்வதுமில்லை. 90% ஆன்மீக நிலையினை அடைந்த குரு ஒருவரின் பணியும் இவ்வாறே நிகழ்கிறது.

5. குருக்ருபாயோகத்தின்படி ஆன்மீக பயிற்சி

இந்த பிறவியிலேயே ஆன்மீக முன்னேற்றம் அடைந்து, ஆன்மீக வளர்ச்சிக்கு தகுந்த இந்த காலகட்டத்தை பயன்படுத்த குருக்ருபாயோகத்தினை எஸ்.எஸ்.ஆர்.எப். பரிந்துரை செய்கிறது.

பின்வரும் 8 பயிற்சிகளை குருக்ருபாயோகம் கொண்டுள்ளது.

குருக்ருபாயோகம்

ஆன்மீக பயிற்சி எனும் எங்கள் பக்கத்தில் இது பற்றிய விரிவான தகவல்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.