1. வாழ்வின் நோக்கம் – ஒரு அறிமுகம்

திரும்பத் திரும்ப நமக்குள் தோன்றும் கேள்வி, ‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அல்லது வாழ்வின் நோக்கம் என்ன? அல்லது நாம் ஏன் பிறக்கிறோம்?’. பெரும்பான்மையினர் வாழ்வின் நோக்கத்தை தாங்களே வரையரைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆன்மீக கண்ணோட்டத்தில் நாம் பிறந்ததற்கு இரு காரணங்கள் உண்டு. இந்த காரணங்கள் அடிப்படையாக வாழ்வின் நோக்கத்தை நிர்ணயிக்கின்றன. அவை :

  • பிறரிடம் நமக்குள்ள கொடுக்கல்வாங்கல் கணக்கு என்பதை சரி செய்து கொள்வது
  • இறைவனிடம் ஐக்கியமாகும் நோக்கத்துடன் ஆன்மீக முன்னேற்ற பாதையில் சென்று அதன் மூலம் பிறப்பு-இறப்பு என்ற வாழ்க்கை சக்கரத்திலிருந்து விடுபடுவது.

2. கொடுக்கல்-வாங்கல் கணக்கை நிவர்த்தி செய்தல்

பல பிறவிகளில் செய்த கர்மாக்களின் நேரடி விளைவாக நாம் கொடுக்கல்-வாங்கல் கணக்கை சேர்க்கிறோம். அவை நேர்மறை அல்லது எதிர்மறை கணக்காக நாம் செய்யும் நல்லது அல்லது கெட்ட செயல்களை பொறுத்து அமையும். விதிமுறைப்படி தற்காலத்தில் நம் வாழ்வின் நிகழ்வுகள் 65% ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. 35% மட்டுமே நம் கையில் உள்ளது.  நம் வாழ்க்கையின் பெரும்பான்மையான முக்கிய நிகழ்வுகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டவை.  நம் பிறப்பு, நம் குடும்பம், யாரை மணப்போம், நம் குழந்தைகள், தீவிரமான நோய்கள், இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் இதில் அடக்கம். நாம் நம் உடன்பிறப்புகளுக்கும் நெருக்கமானவர்களுக்கும் தரும் சுக துக்கங்கள், முன் ஜன்மத்தின்கொடுக்கல்-வாங்கல் கணக்கை அடிப்படையாக கொண்டவையே.

எனினும் நம்முடைய இந்த பிறவியின் விதி கூட மற்ற பிறப்புகளில் நாம் சேர்த்து வைத்துள்ள கர்மாக்களின் ஒரு சிறிய பகுதியே ஆகும்.

இப்பிறவியில் நமக்கு விதிக்கப்பட்ட கொடுக்கல்-வாங்கல் கணக்கை, விதியை நாம் முடித்தாலும் நாம் செய்யும் சில செயல்களால் புதிய கொடுக்கல்-வாங்கல் கணக்குகளை உருவாக்குகிறோம். இவை நம் ஒட்டு மொத்த கொடுக்கல்-வாங்கல் கணக்கான சஞ்சித கர்மாவுடன் சேர்கிறது. இதன் பலனாக இந்த கொடுக்கல்-வாங்கல் கணக்கை முடிப்பதற்கு இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்கிறோம்.

‘பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து நிரந்தர விடுதலை’ என்ற தலைப்பிலுள்ள பதிப்பு இதை மேலும் தெளிவாக விளக்குகிறது.

3. ஆன்மீக முன்னேற்றம்

ஸமஷ்டி ஆன்மீக நிலை என்பது சமூக நலனுக்காக செய்யும் ஆன்மீக பயிற்சியால் (ஸமஷ்டி சாதனை) கிடைக்கும் ஆன்மீக நிலையை குறிக்கும். வ்யஷ்டி ஆன்மீக நிலை என்பது தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யும் ஆன்மீக பயிற்சியால் (வ்யஷ்டி சாதனை) கிடைக்கும் ஆன்மீக நிலையை குறிக்கும். தற்போதைய காலத்தில், சமூகத்திற்காக செய்யும் ஆன்மீக பயிற்சிக்கு 70% முக்கியத்துவமும், தனிமனித ஆன்மீக பயிற்சிக்கு 30% முக்கியத்துவமும் உள்ளது.
  • எந்த ஒரு ஆன்மீக மார்க்கத்திலும் இறைவனை அடைவதே இறுதி லட்சியமாகும். தெய்வத்துடன் ஒன்றிணைவது என்பது தெய்வத்தை நம்முள்ளும் நம்மை சுற்றி வெளியிலும் உணர்வதே அன்றி நம் ஐம்புலங்கள், புத்தி மற்றும் மனதால் நம்மை அடையாளம் கண்டு கொள்வதல்ல. இது 100% ஆன்மீக நிலையில் கைகூடுகிறது. இந்த உலகத்தில் பெரும்பான்மையோர் 20-25% ஆன்மீக நிலையில் உள்ளவர்கள்தான். இவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பதில்லை. தங்களின் ஐம்புலன்கள், மனம், புத்தியுடன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்.  நம் தோற்றத்தின் மீது அதிக கவனம் செலுத்தும்போது, நம் புத்தியால் அல்லது நமக்கு கிடைக்கும் வெற்றியால் கர்வம் கொள்ளும்போது இது நம் வாழ்விலும் வெளிப்படுகிறது.

நாம் ஆன்மீக ஸாதனை செய்து ஸமஷ்டி நிலையில் 60% ஆன்மீக நிலையும் வ்யஷ்டி நிலையில் 70% ஆன்மீக நிலையும் அடையும்போது,  பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியிலிருந்து விடுபடுகிறோம். இந்த நிலைக்குப் பின் மீதமுள்ள கொடுக்கல்-வாங்கல் கணக்கை மேன்மையான சூட்சும உலகத்தில் (மஹர்லோகம் மற்றும் அதன் மேலுள்ள லோகங்கள்) தீர்த்துக் கொள்ளலாம். சில சமயங்களில் ஸமஷ்டியில்  60% அல்லது வ்யஷ்டியில் 70% ஆன்மீக நிலை அடைந்தவர்கள், மனிதகுலத்தை ஆன்மீக பாதையில் அழைத்து செல்ல திரும்பவும் பூமியில் பிறப்பார்.

ஆன்மீக பாதையின் ஆறு அடிப்படை தத்துவங்களுக்கு இணங்க நம் ஆன்மீக பயிற்சி அமைந்தால் மட்டுமே ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். ஆறு அடிப்படை தத்துவங்களுக்கு இணங்க அமையாத ஆன்மீக பாதையால் ஒருவனின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது.

சுவர்க்கம், நரகத்துடன் ஒப்பிடும்போது ஆன்மீக பயிற்சி செய்வதற்கேற்ற சூழ்நிலை அமைந்த பூமியின் மகத்துவம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

4. வாழ்க்கை லட்சிய கண்ணோட்டத்தில் இதன் அர்த்தம் என்ன?

நம்மில் பெரும்பான்மையினருக்கு வெவ்வேறு வாழ்க்கை லட்சியங்கள் உள்ளன. இதில் டாக்டராவது, பணக்காரனாக, பிரபலமானவனாக ஆவது, அல்லது தேசத்தின் பிரதிநிதியாக எந்த துறையிலாவது இருப்பது ஆகியவையும் அடக்கம். நம்மில் பலருக்கு எந்த லட்சியம் இருந்தாலும் பெரும்பான்மையாக அது உலக விஷயத்தை சார்ந்ததாகவே உள்ளது. நம்முடைய கல்விமுறை இந்த உலக லட்சியங்களை அடையவே கட்டமைக்கப்பட்டுள்ளது. நாமும் நம் குழந்தைகளை இந்த உலக விஷயங்களை அடையவே ஊக்குவித்து கல்விபயிற்சி அளிக்கின்றோம். நம்மைக் காட்டிலும் அதிக பணம் சம்பாதிக்கும் துறையில் அவர்களை ஈடுபடுத்துகின்றோம்.

நீங்கள் கேட்கலாம், ‘உலக லட்சியங்களை அடையும் இந்த நோக்கத்திற்கும் ஆன்மீக பயிற்சி செய்வதற்கும் மறு பிறவி ஏற்படுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?’

இதற்கான விடை மிகவும் எளிதானது. அடிப்படையாக திருப்தியும் மகிழ்ச்சியும் பெறவே நாம் உலக லட்சியங்களை அடைய முயல்கிறோம். கிடைப்பதற்கு அரிதான ‘நிரந்தர நீடித்திருக்கும் ஆனந்தத்தை’ அடையவே நாம் இந்த காரியங்களை செய்கிறோம். ஆனால் இந்த உலக லட்சியங்களின் மூலம் கிடைக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் குறைந்த காலத்திற்கே நீடிக்கிறது. பிறகு வேறு கனவை, லட்சியத்தை துரத்த முற்படுகிறோம்.

‘நிரந்தர நீடித்த ஆனந்தம்’ என்பது ஆறு அடிப்படை தத்துவங்களுக்கு இணங்க செய்யப்படும் ஆன்மீக பயிற்சி மூலமே கிடைக்கும். மிக உன்னத நிலையிலுள்ள ஆனந்தம் என்பது இறைவனின் ஒரு அம்சமாகும். இறைவனோடு ஒன்றும்போது நாமும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

நாம் செய்யும் அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மீக பயிற்சியிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல. உலக வாழ்க்கையோடு இணைந்த ஆன்மீக பயிற்சி செய்யும்போது இந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் என்பதே இதன் அர்த்தம். ஆன்மீக பயிற்சியின் பயன்கள் பற்றிய முழு விவரங்கள் ‘நீடித்த ஆனந்தத்திற்கான ஆன்மீக ஆராய்ச்சி’ என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக, நம் வாழ்க்கை லட்சியம், ஆன்மீக முன்னேற்றத்துடன் ஒருங்கிணையும்போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது; வாழ்க்கையின் துன்பங்கள் குறைகின்றன. கீழ்க்கண்ட உதாரணத்தின் மூலம் ஆன்மீக முதிர்ச்சி அடையும்போது வாழ்வின் கண்ணோட்டம் எவ்வாறு மாறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உலக அர்த்தம் – ஆன்மீக அர்த்தம்

உலக கண்ணோட்டம்

ஆன்மீக கண்ணோட்டம்

அறியாமை என்பது என்ன?

உலக விஷயங்களைப் பற்றிய அறியாமை

‘நான்’ என்பது உடல் அல்லது மனம் என்று நம்புவது

தன்னைத் தானே அறிதல் என்பதன் அர்த்தம் என்ன?

தன்னுள் இருக்கும் உடல்ரீதியான, மனோரீதியான, அறிவு சார்ந்த குணங்கள் மற்றும் குறைகளை அறிவது

‘நான்’ என்பது இறைவனே என்பதை அனுபவபூர்வமாக உணர்வது

வெற்றிக்கான அர்த்தம் என்ன?

மரியாதை, பணம், புகழ், ஆகியவற்றை சம்பாதிப்பது

ஆன்மீக முன்னேற்றம் அடைவது

5. உலக வாழ்க்கை எவ்வாறு ஆன்மீக லட்சியத்தோடு இணைந்து செயல்படுகிறது என்பதன் உதாரணம்

SSRF – ல் தங்களின் நேரம் மற்றும் செயல்திறனை இறைவனுக்காக அர்ப்பணித்துள்ள பல தொண்டர்கள் உள்ளனர். சில உதாரணங்கள் :

  • தகவல் தொழில்நுட்ப பொறியாளரான எங்களின் ஒரு அங்கத்தினர் தன்னுடைய ஒய்வு நேரத்தில் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
  • மனோதத்துவ மருத்துவரான ஒரு அங்கத்தினர் எங்களின் பத்திரிக்கை துறையில் மருத்துவ மற்றும் ஆன்மீக கண்ணோட்டத்தில் பதிவேற்றப்படும் தகவல்களை சரிபார்க்கிறார் .
  • இன்னுமொரு SSRF அங்கத்தினர் வேலை நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணம் செய்கிறார். அவர் தனது ஒய்வு நேரத்தில் அங்குள்ளவருக்கு வலைதளத்தை பற்றி எடுத்துக் கூறுகிறார்.
  • ஒரு குடும்பத் தலைவி, ஆன்மீக ஸத்சங்கங்களுக்கு தேவையான பிரசாதங்களை செய்து தருகிறார்.

SSRF அங்கத்தினர், ஆன்மீகத்தை தங்களின் வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொண்டதால் பல நல்ல மாறுதல்களை உணர்ந்து வருகின்றனர்.  அதில் முக்கிய வேறுபாடு   மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. துக்கம் குறைந்துள்ளது. SSRF அங்கத்தினர், மிக மன அழுத்தம் ஏற்படுத்தும் கஷ்டமான சூழ்நிலையிலும் அந்த கஷ்டத்திலிருந்து தாங்கள் பாதுகாக்கப்படுவதை உணர்ந்துள்ளனர்.

6. திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு?

சிலர் நினைக்கின்றனர், ‘திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு உள்ளது’ என்று.

கலியுகத்திற்கு உள்ளே ஆழ நுழையும்போது வாழ்க்கை அதிக கஷ்டங்கள் நிறைந்ததாக துக்கம் நிறைந்ததாக மாறும். உலகம் முழுவதும் நடத்திய ஆன்மீக ஆய்வின்படி ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் 30% நேரம் மகிழ்ச்சியையும் 40% நேரம் துக்கத்தையும் அனுபவிக்கின்றனர். மீதமுள்ள 30% நேரத்தில் மகிழ்ச்சியுமில்லாத துக்கமுமில்லாத நடுநிலையை அனுபவிக்கின்றனர். உதாரணத்திற்கு ஒருவர் தெருவில் நடந்து போகும்போதோ அல்லது வேறு சாதாரண அன்றாட அலுவலில் ஈடுபடும்போதோ அவருக்கு மகிழ்ச்சி அல்லது துக்கம் ஆகிய இரண்டுமே ஏற்படுவது இல்லை.

இதன் முக்கிய காரணம் பெரும்பான்மையோர் குறைவான ஆன்மீக நிலை கொண்டவராவர். அதனால் நம் செயல்களும் தீர்மானங்களும் பிறருக்கு துக்கத்தை வழங்குவதாக, சூழலில் உள்ள ரஜ-தம தன்மையை அதிகரிப்பதாக உள்ளது. இதன் விளைவாக  நாம் அதிக எதிர்மறையான கர்மாக்களை, கொடுக்கல்-வாங்கல் கணக்கை சேர்க்கிறோம். அதனால் பெரும்பான்மையினருக்கு அடுத்தடுத்து வரக்கூடிய பிறவிகள் அதிக துக்கம் தரக்கூடியதாக இருக்கும்.

பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப துறையில் உலகம் பெரும் அடிகளை எடுத்து வைத்திருந்தாலும் நமக்கு முந்தைய தலைமுறைகளோடு ஒப்பிடும்போது வாழ்வின் அடித்தளமான ஆனந்தத்தை நாம் தொலைத்து விட்டோம்.

நாம் அனைவருமே ஆனந்தமாக இருக்க விரும்புகிறோம். அடுத்தடுத்து எடுக்கப் போகும் பிறவிகள், நாம் அடைய நினைக்கும் இந்த நிரந்தரமான நீடித்திருக்கும் ஆனந்தத்தை தராது. ஆன்மீக முன்னேற்றமும் இறைவனோடு இரண்டறக் கலந்த நிலையுமே நிரந்தர ஆனந்தத்தை தர வல்லது.