ஆன்மீக பயிற்சியின் நன்மைகள்

பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியில் இருந்து விடுதலை

ஆன்மீக சாஸ்திரப்படி விடுதலை பெறுவது என்பது ஒருவருடைய விதி பெருமளவில் குறைந்திருப்பதால் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதாகும்.

மனிதன் இரு காரணங்களுக்காக திரும்பத் திரும்ப பிறக்கிறான். முதல் காரணம், அதாவது 65% அவரவர் விதிக்கேற்ப இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிப்பதற்காகும். இரண்டாவது, 35% காரணம் ஆன்மீக முன்னேற்றம் அடைந்து ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகும்.

பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியில் இருந்து விடுதலை

சராசரியாக ஒருவர் சஞ்சித கர்மாவினை (இது மொத்தமாக ஒருவரின் கொடுக்கல்-வாங்கல் விதிக்கேற்ப சேர்த்துக் கொண்ட புண்ணிய பாவங்கள்) 100 அலகுகள் என வைத்துக் கொள்வோம். ஒரு பிறவியில் இதிலிருந்து 6 அலகுகள் விதியாக அனுபவிக்கப்படுகிறது. இதனை பார்க்கும்போது ஒருவன் 16-17 பிறவிகளில் மோக்ஷம் அடையவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏனென்றால் இந்த 6 அலகுகள் விதியினை அனுபவிக்கும்போது பொதுவாக ஒரு சாதாரண மனிதன் ஆன்மீக பயிற்சியினை செய்வதில்லை. அத்துடன் தன்னிச்சையான செயலால் அவனின் சஞ்சித கர்மா மேலும் 10 அலகுகளாக அதிகரிக்கிறது. இதனால் ஒருவர் இறக்கும்போது சஞ்சித கர்மா 104 அலகுகளாகி மறுபடியும் அவரை பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியில் சிக்க வைக்கிறது.

ஸமஷ்டி ஆன்மீக நிலை என்பது சமூக நலனுக்காக செய்யும் ஆன்மீக பயிற்சியால் (ஸமஷ்டி சாதனை) கிடைக்கும் ஆன்மீக நிலையை குறிக்கும். வ்யஷ்டி ஆன்மீக நிலை என்பது தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யும் ஆன்மீக பயிற்சியால் (வ்யஷ்டி சாதனை) கிடைக்கும் ஆன்மீக நிலையை குறிக்கும். தற்போதைய காலத்தில், சமூகத்திற்காக செய்யும் ஆன்மீக பயிற்சிக்கு 70% முக்கியத்துவமும், தனிமனித ஆன்மீக பயிற்சிக்கு 30% முக்கியத்துவமும் உள்ளது.

பெரும்பாலும் அடுத்த சில பிறவிகளிலும் சந்தோஷமாக இருக்கும் விதத்தில்  வாழ்க்கையை வாழவே எல்லோரும் விருப்பப்படுகிறார்கள். அனால் வாழ்வின் நோக்கம் வரும் பிறவிகளில் சந்தோஷமான வாழ்க்கையினை பெறுவது இல்லை, பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியில் இருந்து வெளியேறுவது தான். நாம் பிறந்ததன் காரணம் என்னவென்றால் நாம் இன்னும் கற்கவேண்டிய பாடங்களை முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை என்பதே ஆகும். பரீட்சையில் தேர்ச்சி பெறாவிட்டால் எவ்வாறு நாம் ஒரே வகுப்பினில் இருக்க வேண்டுமோ அதுபோல் நாம் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டி இருக்கிறது. ஆன்மீக முன்னேற்றம் அடைந்து இறைவனை உணர்வதற்கு முயற்சி எடுப்போமாக இருந்தால் இப்பிறவியிலேயே இந்த தொடர் சுழற்சியில் இருந்து விடுபட்டு மோக்ஷத்தினை அடையலாம். இதுவே ஒரு மனிதன் கொண்டிருக்கக்கூடிய மிக உயர்வான ஆன்மீக குறிக்கோள் ஆகும்.

ஆன்மீக பயிற்சியின் மூலம் ஒரு நபர் குறைந்தபட்சம் 60% (ஸமஷ்டி) அல்லது 70% (வ்யஷ்டி) ஆன்மீக நிலையினை அடைந்த பின்பு மேற்கொண்டு முன்னேற்றம் அடைவதற்கு மறுபடியும் பிறக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.