எந்தவித வெளிப்புற மூல காரணமும் இல்லாமல் சுகந்தம் அனுபவித்தல்

Homeஎந்தவித வெளிப்புற மூல காரணமும் இல்லாமல் சுகந்தம் அனுபவித்தல்

ஏப்ரல் 2000 -ல் ஒரு நாள் மதியம், நான் நாமஜபம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று சந்தனத்தின் சுகந்தத்தை அனுபவித்தேன். யாராவது சந்தன வாசனை கலந்த ஊதுபத்தி ஒன்றை ஏற்றியிருக்கலாம்  அல்லது வாசனை திரவியமாக இருக்கலாம் என்று நினைத்தேன். இதை உறுதிப்படுத்தி கொள்வதற்காக வீட்டிலுள்ள அனைவரிடமும் அவர்கள் ஏதாவது சுகந்தத்தை உணர்கிறார்களா அல்லது வேறு எதுவும் வாசனைத் திரவியம் உபயோகித்து உள்ளனரா அல்லது ஊதுபத்தி ஏற்றியிருக்கிறார்களா என்று கேட்டேன். ஆனால் அனைத்திற்கும் எதிர்மறையான பதில் வந்தது. இறுதியாக, நான் கழிப்பறைக்குள்ளும் சென்றேன், ஆம், கழிப்பறையிலும்  அதே சுகந்தத்தை உணர்ந்தேன். இந்த சுகந்தம் சுமார் 5 நிமிடங்கள் வரை நீடித்தது. இதற்கு முன் நான் என் வாழ்க்கையில் இதை அனுபவித்ததில்லை.

– டாக்டர் அவினாஷ் காஷித், பீட், இந்தியா.

இந்த அனுபவத்திற்கு பின் உள்ள ஆன்மீக சாஸ்திரம்

ஆன்மீக சாஸ்திரப்படி சாதாரணமாக ஜீவனை ‘ஆத்மா’வாகக் கொள்ளாமல் ஐம்புலன்கள், மனம், புத்தியுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதால் அதை ‘ஜீவன்’ என்கிறோம். சூட்சும தேஹத்தின் (இறந்து, உடல் அழிந்த பின்) ஆத்மாவும் ‘ஜீவன்’ என்றே கூறப்படுகிறது.

45% லிருந்து 50% ஆன்மீக நிலையில் சூட்சும (வெளிப்படையாக புறக் காரணம் இல்லாமல்) சுகந்தத்தை அனுபவிக்க முடியும். ஆன்மீக நிலை 45% -ற்கு குறைவாக இருந்தாலும், டாக்டர் காசித் நாமஜபம் செய்தது போல், பக்தி மற்றும் மன ஒருமைப்பாட்டுடன் ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும் போது, ஆன்மீக நிலை தற்காலிகமாக அதிகரிக்கலாம். ‘ஆன்மீக பயிற்சி செய்யும் ஜீவன்’ எனும் நிலையில் அதாவது ஜீவாத்மா நிலையில் இந்த ஆன்மீக அனுபவம் கிடைக்கிறது. இந் நிலையில்  இறைவனை நோக்கிய ஆன்மீக உணர்வு விழிப்படைந்திருக்கும். இதனால் மனமானது, ஆத்மாவிலிருந்து வெளிவரும் தெய்வீக சைதன்ய அதிர்வலைகள் மீது கவனத்தை செலுத்துகிறது. இந்த அதிர்வலைகள் பரிபூரண நில தத்துவத்துடன் (ப்ருத்வி தத்துவம்) தொடர்புடையவை. பரிபூரண நில தத்துவத்தின் சூட்சும அனுபவம் வாசனையாகும்.

ஆன்மீக அனுபவமானது நமது ஆன்மீக பாதையில் மைல்கல் ஒன்றை அடையும் வகையில் அமைந்துள்ளது. நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம் என்பதனை இறைவன் இதன் மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார்.