உப்பு நீர் ஆன்மீக நிவாரணம்

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு SSRF அறிவுறுத்துகிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாக தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அட்டவணை

1. உப்பு நீர் நிவாரணம் என்றால் என்ன?

ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) அவற்றின் சூட்சும கருப்பு சக்தியின் மூலம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, கஷ்டங்களை உருவாக்குகின்றன. கருப்பு சக்தியானது மனஅழுத்தம், தெளிவற்ற சிந்தனை அல்லது உடலுறுப்பு கோளாறு போன்ற பிரச்சினைகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், போதை பழக்கம், நிதி பிரச்சனைகள் அல்லது நெஞ்சுவலி போன்ற சிரமங்களுக்கும் முறையே வழிவகுக்கும்.

கருப்பு சக்தி: தீய சக்திகள் பயன்படுத்தும் பிரதான ஆயுதமான கருப்பு சக்தி, உலகத்தில் நிகழும் எந்த ஒரு செயலையும் கையாளக்கூடிய திறன் உடைய ஒரு ஆன்மீக சக்தியாகும். இந்த திறன், தாக்கும் தீய சக்தியின் வலிமையை பொருத்தது. ஆவிகள், தாங்கள் இலக்காக கொண்ட நபர்களின் மீது கருப்பு சக்தியை அனுப்பி, அவர்களின் உடலில் பெருமளவு கருப்பு சக்தியை சேகரித்து வைக்கின்றன. இந்த கருப்பு சக்தியை ஆன்மீக பயிற்சி போன்ற பொதுவான ஆன்மீக நிவாரணம் அல்லது உப்பு நீர் நிவாரணம் போன்ற குறிப்பிட்ட நிவாரணத்தால் மட்டுமே அழிக்க முடியும். மற்ற வழிகளில் இந்த கருப்பு சக்தியிலிருந்து விடுபடுவது கடினம்.

உப்பு நீர் நிவாரணம் என்பது, நமது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத, தீங்கு விளைவிக்கும் கருப்பு சக்தியை எதிர்த்து அதனை வெளியேற்றும் ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த ஆன்மீக நிவாரணமாகும். இவ்வாறு செய்வதன் மூலம், நமது ஆன்மீக பயிற்சி இந்த கருப்பு சக்தியை எதிர்ப்பதில் வீணாகாமல், நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

2. நாம் எப்பொழுது உப்பு நீர் நிவாரணத்தை பயன்படுத்துவது?

நாம் ஒவ்வொருவரும், ஆவிகளால் பல்வேறு அளவுகளில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதன் விளைவாக, நம் அனைவர் உடலிலும் ஓரளவு கருப்பு சக்தி தங்கி உள்ளது. தினசரி இந்த உப்பு நீர் நிவாரணத்தை செய்வதன் மூலம், இந்த கருப்பு சக்தியை நமது உடலில் இருந்து அகற்றலாம்

குறிப்பாக, கீழ்க்கண்ட சில அறிகுறிகளை நாம் உணரும் போது இந்த உப்பு நீர் நிவாரணத்தை செய்ய வேண்டும்:

  • சோம்பல்
  • எதையும் குறித்த நேரத்தில் செய்ய இயலாமை
  • சிந்திக்க இயலாமை
  • அதிகப்படியான எண்ணங்கள், குறிப்பாக எதிர்மறையான தன்மை உடையவை
  • கோபம் அல்லது வேறு தீவிரமான உணர்ச்சி
  • மன அழுத்தம்
  • எந்தவொரு உடல்ரீதியான வியாதி

மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நாம் உணரும்போது, உடல்ரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ பலவீனமாக உள்ளோம். ஆவிகள் இந்த பலவீனமான நிலையை பயன்படுத்திக்கொண்டு நம்மை தாக்கி, கருப்பு சக்தியை மேலும் நம் உடலில் செலுத்தி, இந்த அறிகுறிகளை மேலும் அதிகரிக்கின்றன.

ஒரு ஆவி ஒருவருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதை காட்டும் சூட்சும ஞானம் கொண்டு வரையப்பட்ட வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உப்பு நீர் ஆன்மீக நிவாரணம்

இந்த ஆய்வுக் கட்டுரையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்கவும் – ஏன் ஆவியைப் பற்றி சூட்சும ஞானம் கொண்டு வரையப்பட்ட இந்த வரைபடத்தை சுற்றி பாதுகாப்பு எல்லைக்கோடுகள் போடப்பட்டுள்ளது?

குறிப்பு: ஒவ்வொருமுறையும் நாம் பலவீனமான நிலையில் உள்ளபோது (குறிப்பாக ஆன்மீக நிலையில்), நாம் ஆவிகளின் தாக்குதலுக்கு சுலபமான ஒரு இலக்காகிறோம். இந்த பலவீனமான நிலையில், ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) நம்மை தாக்குவதற்கு குறைந்த சக்தியே தேவைப்படுகின்றது.

தீவிரமான கஷ்டத்தின் போது, நாம் இந்த உப்பு நீர் நிவாரணத்தை தினமும் 2-3 முறை, 2-3 மணி நேர இடைவேளைகளில் செய்வது சிறந்த பயனை தரும்.

3. இந்த உப்பு நீர் நிவாரணத்திற்கு தேவைப்படும் பொருட்கள் யாவை?

  • ஒரு பெரிய அளவு வாளி
  • நமது கணுக்கால்கள் மூழ்குவதற்கு தேவையான அளவு நீர் வாளியில் நிரப்பப்பட (50% வரை) வேண்டும்.
  • கல் உப்பு
    • கல் உப்பு கிடைக்கவில்லையெனில் கடலுப்பு படிகங்கள்/மேசை உப்பு பயன்படுத்தலாம். எனினும் இதனால், நிவாரணத்தின் அளவு கல் உப்பை பயன்படுத்தும் போது கிடைக்கும் நிவாரணத்தின் அளவில் 30% -ஆக குறைந்து விடுகிறது.
  • ஒரு துண்டு
  • ஒரு மிதியடி

4. உப்பு நீர் நிவாரணம் எவ்வாறு செய்யப்படுகின்றது?

4.1 படிப்படியான வழிமுறைகள்

முன்னேற்பாடு:

  • கணுக்கால் மூழ்கும் அளவிற்கு வாளியில் (50% வரை) நீர் நிரப்பவும். இரண்டு மேசைக்கரண்டி கல் உப்பு அதில் சேர்க்கவும்.

  • உங்களிடம் உள்ள கருப்பு சக்தியை வெளியேற்ற, கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யவும். மேலும், குறிப்பாக, உங்களை தாக்கும் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) கருப்பு சக்தியை அழிப்பதற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நிவாரணத்தின் திறனை மேம்படச் செய்வதில் பிரார்த்தனை ஒரு முக்கியமான காரணியாகும்.

நிவாரணம்:

  • கால்கள் உப்பு நீரில் மூழ்குமாறு நிமிர்ந்து உட்காரவும். இரண்டு பாதங்களுக்கும் இடையில் 2-3 செ.மீ இடைவேளையாவது இருக்க வேண்டும். இது கருப்பு சக்தி அதிக அளவில் வெளியேறுவதற்கு உதவுகிறது. பாதங்கள் ஒன்றுக்கொன்று தொடுவதால், கருப்பு சக்தி பாதங்களின் வழியே வெளியேறுவதில் தடங்கல் ஏற்படுகின்றது.

  • உப்பு நீரில் பாதங்களை 10-15 நிமிடங்கள் வரை வைக்கவும்.

  • பாதங்கள் மூழ்கியிருக்கும்போது, உங்களின் மதத்தின் படி கடவுளின்  நாமத்தை ஜபம் செய்யவும்.

முடிவில்:

  • நிவாரணம் முடிந்த பிறகு,  கடவுளுக்கு நன்றி செலுத்தவும் மற்றும் உங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கக் கோரி பிரார்த்தனை செய்யவும்.

  • பிறகு, வாளியில் உள்ள நீரை கழிப்பறையில் ஊற்றிவிட்டு, சுத்தமான நீரைக்கொண்டு வாளியைக் கழுவவும்.

  • உங்களின் மதத்தின் படி கடவுளின் நாமத்தை 2-3 நிமிடங்கள் ஜபம் செய்யவும்.

4.2 உப்பு நீர் நிவாரணத்தின் காணொளி விளக்கம்

இந்த காணொளியை பதிவு செய்யும்போது ஏற்பட்ட எதிர்மறையான ஆன்மீக அனுபவம்

5. தீய சக்தியை வெளியேற்றுவதில் உள்ள தத்துவம் என்ன?

  1. நாமஜபம் மற்றும் பிரார்த்தனை, ஆவிகள் மூலம் நமது உடலில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட கருப்பு சக்தியை சிதைவடைய செய்து அவற்றை வெளியேற்றுகிறது.
  2. உப்பு நீருக்கே (கல் உப்பு கரைந்த நீர்) கருப்பு சக்தியை உறிஞ்சி வெளியேற்றும் தன்மை உள்ளது.
  3. கருப்பு சக்தி வெளியேறும்போது, கொட்டாவி விடுதல், ஏப்பம் விடுதல், கால்கள் மறத்துபோதல், கண்கள் மற்றும் காதுகளில் வெப்பத்தன்மையை  உணர்தல் போன்ற சில அறிகுறிகளுடன் வெளியேறலாம். சில நேரங்களில், மூழ்கிய பாதங்களில் ஏதோ ஊர்ந்து செல்லும் உணர்வை பெறலாம். இது கருப்பு சக்தி வெளியேறுவதன் அறிகுறியாகும். சில நேரங்களில், உப்பு நீர் நிவாரணத்திற்கு பிறகு அந்த உப்பு நீர் கருமையாக மாறுவதையோ அல்லது துர்நாற்றம் வீசுவதையோ அல்லது சில நேரங்களில் அந்த நீர் வெதுவெதுப்பாக மாறுவதையோ கவனிக்கலாம். இந்த மாறுதல்கள் அனைத்தும் உடலிலிருந்து வெளியேறும் கருப்பு அதிர்வலைகளின் தொடர்பால் ஏற்படுகின்றன.

5.1 கல் உப்பிற்கு பதிலாக எப்சம் உப்பு பயன்படுத்தலாமா?

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட், ஆனால் கல் உப்பு சோடியம் குளோரைடு, இது முற்றிலும் வேறுபட்டது. எப்சம் உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாக அறியப்பட்டிருந்தாலும், உடலில் இருந்து கருப்பு சக்தியை வெளியேற்றும் கண்ணோட்டத்தில் எப்சம் உப்பிற்கு எந்த திறனும் இல்லை.

6. இந்த சிகிச்சையின் நன்மைகளின் எடுத்துக்காட்டுகள்

6.1 உண்மையில் உப்பு நீர் நிவாரணத்தின் போது சூட்சுமமாக என்ன நடக்கின்றது?

ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பாதிக்கப்பட்ட ஒரு நபர் உப்பு நீர் நிவாரணம் செய்யும்போது, அந்த ஆவி மற்றும் அதன் கருப்பு சக்திக்கு ஏற்படும் விளைவுகளை அதிநுட்பமான ஆறாவது அறிவு (ESP) கொண்ட ஸாதகரான மதுரா போசலே, பின்வருமாறு உணர்ந்தார்.

உப்பு நீர் ஆன்மீக நிவாரணம்

6.2 சூட்சும ஞானத்தை கொண்டு வரையப்பட்ட கருப்பு சக்தி அகற்றப்படும் வரைபடம்

உப்பு நீர் ஆன்மீக நிவாரணம்

மேலே கொடுக்கப்பட்ட படமானது, ஒரு நபருக்கு அதீத பாலியல் எண்ணங்களை உருவாக்கிய ஒரு சூனியக்காரியின் (chetkin) கருப்பு சக்தியின் மீது உப்பு நீர் சிகிச்சை ஏற்படுத்தும் விளைவுகளை, சூட்சும ஞானத்தை கொண்டு வரைந்த படமாகும்.

அதீத பாலியல் எண்ணங்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை படிக்கவும்.

மேலும் படிக்கவும் – நாம் பாதுகாப்பு எல்லைக்கோடுகளை ஏன் உபயோகிக்கின்றோம்?