நமஸ்காரம், நமஸ்தே ஆகிய சொற்களின் வரைவிலக்கணமும் பொருளும்

பின்னணித் தகவல்

வாழ்த்துதல்/வரவேற்றல் பற்றிய ஆன்மீக கண்ணோட்டம் என்ற எங்களது கட்டுரையை படித்து தெரிந்துகொள்ள நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஏனெனில் இந்த கட்டுரையை புரிந்துகொள்ள முக்கியமான பின்னணி தகவல்களை அக்கட்டுரை வழங்குகிறது.

1. நமஸ்தே அல்லது நமஸ்காரம் என்பதன் பொருளிற்கான அறிமுகம்

நமஸ்காரம் மற்றும் நமஸ்தே என்பது இந்திய துணைக் கண்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் வாழ்த்து பரிமாறலாக உள்ளது. குறிப்பாக ஒருவரை சந்திக்கும் போதும், அவரிடமிருந்து விடைபெறும் போதும் பயன்படுத்தப் படுகிறது. ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, அவரை வரவேற்கும் விதமாக தலையை சற்று தாழ்த்தி, இரு கைகளையும் மார்பின் முன்னால் ஒன்றாக அழுத்தி, உள்ளங்கைகளைத் தொட்டு, விரல்கள் மேல் நோக்கிய வண்ணம் கை குவித்து ‘நமஸ்காரம் ’அல்லது ‘நமஸ்தே’ கூறி வரவேற்பார்கள். கைகளின் இந்த நிலையை நமஸ்கார முத்ரா என்பார்கள் (முத்ரா என்றால் குறிப்பிட்ட கை சைகை அல்லது ஒரு குறிப்பிட்ட நிலையில் கைவிரல்களை வைக்கும் நிலையாகும்.)

தலை வணங்குதல் மற்றும் கை அசைத்து உபசரிக்கும் ஜப்பானியர்களின் முறையை போன்றே இதுவும் ஒருவரை ஒருவர் தொடாமல் வரவேற்கும், பிரபலமான முறையாகும். நாங்கள் ஆராய்ச்சி செய்த மற்ற எந்த உபசரிக்கும் முறைகளையும் காட்டிலும் இது தனித்து நிற்பதற்கு, இதன் ஆன்மீக அடிப்படையே காரணமாகிறது. இதன் ஆன்மீக அர்த்தத்தையும், இதனால் ஒருவருக்கு ஆன்மீக நிலையில் ஏற்படும் நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் நாம் விரிவாக காண்போம்.

2. நமஸ்தே அல்லது நமஸ்காரம் என்பதன் பொருள்

நமஸ்காரம்’ என்பது ஒரு ஸம்ஸ்க்ருத வார்த்தையாகும், இது மற்றொரு ஸம்ஸ்க்ருத வார்த்தையான ‘நமஹா’ என்பதிலிருந்து உருவானது. அதன் அர்த்தமானது வணங்குதல் ஆகும். ‘மனிதர்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளார்கள்’. மற்றும் ‘மரணத்திற்குப் பின் வாழ்க்கை‘ பற்றிய எங்களது கட்டுரைகளில், ஆத்மா என்பது நம் அனைவரின் உள்ளே இருக்கும் தெய்வீகம் (இறை தத்துவம்) என்று குறிப்பிட்டுள்ளோம். ஒருவரை வணங்கி வரவேற்கும் போது, அவரின் ஆத்மாவானது மற்றொருவரின் ஆத்மாவை. ஏற்றுக்கொண்டு வணங்குகிறது.

நமஸ்தே மற்றும் நமஸ்காரம் ஒத்த பொருளுள்ள சொற்கள் என்றாலும், அவற்றுக்கிடையே ஆன்மீக வேறுபாடு உள்ளது. நமஸ்தே என்ற வார்த்தையை விட நமஸ்காரம் அதிக ஸாத்வீகமானது.

3நமஸ்காரம் (நமஸ்தே) என்பதன் பொருள் குறித்த ஆன்மீக ஆராய்ச்சி

3.1 நமஸ்காரத்தின் (நமஸ்தே) ஆன்மீக நன்மைகள்

நமஸ்காரம் (நமஸ்தே) என்பதன் பொருள் குறித்த ஆன்மீக ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டபோது, மற்றவர்களை வணங்கி வரவேற்பதற்கு இதுவே மிகவும் ஸாத்வீகமான முறை என்றும், ஆன்மீக ரீதியாகவும் பயனளிக்கிறது என்றும் கண்டறிந்தோம். ஆறாவது அறிவின் மூலம் இவை அனைத்தும் கண்டறியப்பட்டன. இதற்கான காரணங்கள்:

 1. வரவேற்பு உபசரிப்பின் நோக்கம்:
  • வணங்கி வரவேற்கும் இம்முறையானது ஒருவரிடம் உள்ள தெய்வீக தன்மையை அங்கீகரிப்பதால், இதன் ஆன்மீக வலிமை மேம்பட்டு தெய்வீக சைதன்யமும் ஈர்க்கப்படுகிறது. மற்றவரின் ஆத்மாவை வணங்குகிறேன் என்ற ஆன்மீக உணர்வுடன். ஒருவர் வணங்கினால், நன்றியுணர்வும் சரணாகதி மனப்பான்மையும் மனதில் ஆழப்பதிந்து ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • நமஸ்காரம் செய்யும் போது, “நீங்கள் என்னை விட உயர்ந்தவர்; ‘நான்’ தங்களுக்கு அடிபணிந்தவன். எனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் எல்லாம் அறிந்தவர்”, என்ற எண்ணத்துடன் செய்வதால், அது ஒருவரின் அஹம்பாவத்தை குறைக்கவும் பணிவை அதிகரிக்கவும் உதவுகிறது.
 2. நடைமுறையில் உள்ள கை சைகை:
  • நமஸ்காரம் முத்ரா செய்வதன் மூலம், தெய்வீக உணர்வு அதிக அளவில் உடலில் உள்ளீர்த்துக் கொள்ளப்படுகிறது. நமஸ்தே அல்லது நமஸ்காரம் என்ற சொற்களை கூறுவதால், பரிபூரண ஆகாய தத்துவம். செயல்படுத்தப்படுகிறது. ஆயினும் முத்ராவுடன் சொற்களை கூறும்போது பரிபூரண பிருத்வி தத்துவம் (புவி தத்துவம்) பெறப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஏனென்றால் நமஸ்காரம் முத்ராவே பரிபூரண பிருத்வி தத்துவத்துடன் தொடர்புடையது. அதிக எண்ணிக்கையில் ஐந்து பரிபூரண பிரபஞ்ச தத்துவத்துங்கள். பயன்படுத்தப்படுவதால்,ஆன்மீக நேர்மறை அதிகமாக ஈர்க்கப்படுகிறது. 
 3. உடல்ரீதியான தொடர்பு இல்லாமை:
  • உடல்ரீதியான தொடர்பால் இரண்டு நபர்களிடையே சூட்சும-சக்தியின் ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. ஆகையால் ஸ்தூலமான தொடர்பு இல்லாத இந்த வரவேற்ப்பின் மூலம், ஒரு நபர் மற்றொருவரை எதிர்மறையாக பாதிக்கும் திறன் குறைக்கப்படுகிறது.
  • வாழ்த்தின் ஆன்மீகதன்மை காரணமாக ஸத்வ கூறு அதிகரிப்பதினால், வரவேற்பவரையும் வரவேற்கப்படுபவரையும் பாதிக்கும் எதிர்மறை அதிர்வுகளின் தாக்கம் மேலும் குறைகிறது.
  • இருப்பினும், தீய சக்திகளால், பீடிக்கப்பட்டிருக்கும் ஒருவர் மற்றொருவரை நமஸ்காரம் முத்ராவுடன் வரவேற்றாலும், இந்த வாழ்த்து கூட எதிர்மறையான அதிர்வுகளை வெளிப்படுத்தக்கூடும். பீடித்திருக்கும் ஆவியானது வரவேற்கும் நபரின் கைவிரல் நுனியிலிருந்து வரவேற்கப்படும் நபரிடமும், சுற்றுசூழலிலும் எதிர்மறையான அதிர்வுகளை வெளிப்படுத்தலாம். இருப்பினும், ஸ்தூலமான தொடர்புடைய ஒரு வரவேற்புடன் ஒப்பிடும்போது, இம்முறையில் எதிர்மறை ஆவியின் தாக்கம் குறைவாகவே உள்ளது. ஆன்மீக உணர்வு. மேலோங்கிய நிலையில் ஒருவரை வரவேற்கும் போது அது எதிர்மறை அதிர்வுகளை மேலும் குறைத்து மற்றும் முற்றிலுமாக நீக்குகிறது.

3.2 நமஸ்காரம் (நமஸ்தே) என்பதிலிருந்து உருவாகும் ஆன்மீக அதிர்வலைகள்

கீழேயுள்ள வரைபடம் சூட்சும ஞானத்தின் துணைக் கொண்டு வரையப்பட்டது. இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் நமஸ்கார முத்ராவுடன் வணங்கிய போது தோன்றிய ஆன்மீக அதிர்வலைகளைக் காட்டுகிறது. இந்த உதாரணத்தில் வரவேற்பவரின் ஆன்மீக நிலை 30%மும் வரவேற்கப்பட்டவரின் ஆன்மீக நிலை 50% ஆகும்.

சூட்சும ஞானத்தின் அடிப்படையிலான இந்த வரைபடத்தை குமாரி பிரியங்கா லோட்லிகர் தனது மேம்பட்ட ஆறாவது அறிவின் மூலம் வரைந்துள்ளார். மேலும் இது பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட ஆறாவது அறிவு மூலம் சரிபார்க்கும்போது, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம், 80% துல்லியமானது என்று கண்டறியப்பட்டது. (சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தில், 80% துல்லியத்தை அடைய முடிந்தது மிக உயர்ந்த சாதனை ஆகும். ஆழ்ந்த ஆன்மீக பயிற்சி மேற்கொள்ளப்படாவிட்டால், சூட்சும கலைஞர்களால் சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரைபடத்தில் முழுமையான சத்தியத்தின் இந்த சதவீத துல்லியத்திற்கு அருகில் கூட வர முடியாது.)

கீழேயுள்ள அட்டவணை சூட்சும ஞானத்தின் அடிப்படையில் மேலே உள்ள வரைபடத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும்  பின்னால் இருக்கும்  விவரங்களை வழங்குகிறது. கீழே உள்ள அட்டவணையைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள சக்கரங்கள் பற்றிய கட்டுரையை பார்க்கவும்.

வரிசை  எண்

விளக்கம்
1 ஒரு நபர் மற்றொருவரின் ஆத்மாவை வணங்குகிறேன் என்ற ஆன்மீக

உணர்வுடன் வணங்கி வரவேற்கும் போது, அவருக்குள்ளே ஆன்மீக உணர்வின் வளையம் உருவாகிறது

1அ ஆன்மீக உணர்வு மேலோங்கி இருக்கும் நிலையில் கடவுளுடன் ஒன்றுதல் ஏற்பட்ட சிறப்பான முறையில் கடவுளின் எண்ணங்களை பெற ஏதுவாகிறது
1ஆ இதன் விளைவாக, வரவேற்கப்படும் நபரை சுற்றி ஆன்மீக உணர்வின் வளையம் உருவாகிறது
2 இதனால் தெய்வீக தத்துவம் அல்லது கடவுளின் சக்தியின் ஓட்டம் ஈர்க்கப்படுகிறது
2 அ தெய்வீக தத்துவத்தினாலான ஒரு வளையம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது
3 எங்கெல்லாம் தெய்வீக தத்துவம் நிறைந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆனந்தம் ஈர்க்கப்படுகிறது. ஆனந்தம். என்பது எந்தவொரு தூண்டுதலையும் சாராத மேற்பட்ட உன்னதமான மகிழ்ச்சியை தரும் சூட்சும சக்தி ஆகும்
3 அ வரவேற்பவரை சுற்றி ஆனந்தத்தின் வளையம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது
3 ஆ வரவேற்க படுபவரும் ஆனந்தத்தின் இந்த ஓட்டத்தை உள்ளீர்த்துக்கொள்கிறார்
3 இ இதன் விளைவாக, வரவேற்கப்படும் நபரை சுற்றி ஆனந்தத்தின் வளையம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது
3 ஈ ஆனந்தத்தின் துகள்கள் செயல்பெறப்பட்டு சுற்றுச்சூழலுக்குள் வெளிப்படுகின்றன
4 தெய்வீக சைதன்யத்தின் ஓட்டம் வரவேற்கும் நபரிடமும் ஈர்க்கப்படுகிறது
4 அ இதன்மூலம் அவரை சுற்றி தெய்வீக சைதன்யத்தின் வளையம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது
4 ஆ தெய்வீக சைதன்யம் சுற்று சூழலில் வெளிப்படுத்தப்படுகிறது
4 ஆ2 வரவேற்பை ஏற்பவரும் அவரை வரவேற்பவரிடமிருந்து தெய்வீக சைதன்யத்தின் உள்ளீர்த்துக்கொள்கிறார்
4 இ தெய்வீக சைதன்யத்தின் ஓட்டம் வரவேற்கப்படுபவரிடம் நேரடியாக ஈர்க்கப்படுகிறது
4 ஈ வரவேற்கப்படுபவரைச் சுற்றி தெய்வீக சைதன்யத்தின் வளையம் உருவாக்கப்பட்ட செயல்படுத்தப்படுகிறது
4 உ தெய்வீக சைதன்யன்தின் துகள்கள் செயல்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் ஆன்மீக ரீதியாக பயனடைகிறது

3.3 நமஸ்காரம் (நமஸ்தே) செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய குறிப்பீடுகள்

 • கண்கள் மூடிய நிலையில் நமஸ்காரம் செய்ய வேண்டும்: கண் மூடிய நிலையில் கடவுளுக்கோ அல்லது மனிதருக்கோ ஒருவர் நமஸ்காரம் செய்வதால், ஒருவர் தனக்குள் ஆழ்ந்து நோக்கி கடவுளின் விம்பத்தை தமக்குள்ளே காணவும் அல்லது உள்ளிருக்கும் ஆத்மா (கடவுள்) மீது கவனம் செலுத்துவதற்கான வழிமுறையை எளிதாக்குகிறது.
 • நமஸ்காரம் செய்யும் போது எந்த பொருளும் வைத்திருக்க வேண்டாம்: நமஸ்காரம் செய்யும் போது, ஏதேனும் ஒரு பொருளை கையில் வைத்திருந்தால், பொதுவாக விரல் நுனி நேராக இருக்காது. இதன் விளைவாக, ஸத்வ கூறுகளின் ஓட்டம் நுனி விரல்களில் நுழைவது தடை செய்யப்படுகிறது. நமஸ்கரிபவரிடமிருந்து வரும் ஸத்வ கூறுகள், வைத்திருக்கும் பொருளைத் தாக்கி மீண்டும் திரும்பிப் போகிறது. கூடுதலாக, கையில் உள்ள பொருளில் ரஜ அல்லது தம ஆதிக்கம் அதிகமிருந்தால், நமஸ்காரம் செய்யும் போது அது நெற்றியையோ அல்லது மார்பையோ தொட்டால், அதிலிருந்து வரும் ரஜ அல்லது தம கூறுகள் நமஸ்காரம் செய்கிறவரின் உடலில் நுழையக்கூடும்.

 4. சுருக்கம்

 • ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையானது அனைத்து வாழ்த்து/வரவேற்பிற்கு முறைகளுக்கு மேலாக நமஸ்காரத்தை (நமஸ்தே) மிகவும் ஸாத்வீகமான முறையாக அங்கீகரிக்கிறது மற்றும் முடிந்தவரை ஏற்றுக்கொள்ள பரிந்துரைக்கிறது.
 • இம்முறையில் ஒருவரை வாழ்த்துவது/வரவேற்பது கலாச்சார விதிமுறை இல்லையென்றாலும், ஒருவர் மற்றொருவரை நமஸ்கார முத்ராவுடன் மனதளவில் வாழ்த்தலாம்/ வரவேற்கலாம்.
 • ஆன்மீக உணர்வுடன் நமஸ்காரம் (நமஸ்தே) செய்வதற்கு ஒருவர் தினமும் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வது அவசியம். ஆன்மீக பயிற்சியின் மூலம் ஒருவரின் ஆன்மீக உணர்வு மேலோங்குகிறது மற்றும் வாழ்க்கையின் ஆன்மீக நோக்கத்துடன்  ஒத்துப்போகிறது.