ஆத்மாவின் ஆனந்தத்தை எவ்வாறு பெறுவது?

ஆத்மாவின் ஆனந்தத்தை எவ்வாறு பெறுவது?

ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் பாதையில் நாம் செல்லுகையில் உள்முகமாக சென்று நமக்குள்ளேயே இருக்கும் ஆத்மாவின் ஆனந்தத்தை உணரும் பக்குவத்தைப் பெறுகிறோம். நாம் ஒவ்வொருவரும் ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் உள்ளோம். நமது ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் நிலைக்குத்  தகுந்தபடியே நாம் அனுபவிக்கும் ஆனந்தத்தின் தரம், அளவு, மற்றும் காலம் வேறுபடுகிறது.

நாம் தினந்தோறும் காலையில் நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது நமக்குப் பழக்கப்பட்ட நம் முகத்தையே பார்க்கிறோம். ஆனால் உங்கள் ஆத்மாவின் வடிவத்தை கண்ணாடியில் காண நேரிட்டால் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

ஆன்மீக சாஸ்திரப்படி சாதாரணமாக ஜீவனை ‘ஆத்மா’வாகக் கொள்ளாமல் ஐம்புலன்கள், மனம், புத்தியுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதால் அதை ‘ஜீவன்’ என்கிறோம். சூட்சும தேஹத்தின் (இறந்து, உடல் அழிந்த பின்) ஆத்மாவும் ‘ஜீவன்’ என்றே கூறப்படுகிறது.

இது இன்றைய உலகில் ஒரு சாதாரண மனிதனின் உள்முகத் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதனை காட்டுகிறது.

நமக்குள்ளே ஒளி வீசும் விளக்காக நமது ஆத்மா இருந்தாலும் அது கனத்த போர்வையால் மூடப்பட்டிருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறே இருக்கிறது. நமது ‘ஆன்மீக அறியாமையால்’தான் உண்மை நிலையான ஆனந்தத்தை அறியாது, அவ்வாறு ஆத்மாவானது இருள் சூழ்ந்த நிலையில் தோற்றமளிக்கிறது. ஐம்புலன்கள், மனம், புத்தி ஆகியவைகளைக் கடந்து நமது ஆத்மாவின் தன்மையை உணர முடியாத நமது இயலாமையையே இந்த ஆன்மீக அறியாமை குறிக்கிறது. மாறாக நாம் (ஜீவன்) ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளும்போது படிப்படியாக நாளடைவில் இந்த இருள் அகன்று நாம் நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவையும் அதன் இயல்பான ஆனந்தத்தையும் உணர ஆரம்பிக்கிறோம். புறத்-தோற்றத்தில் இருக்கும் தூசு, மாசு ஆகியவைகள் நம் கண்களுக்குப் புலப்படுவதால் தினமும் நாம் குளித்தும் நம் வீட்டைப் பெருக்கியும் சுத்தப்படுத்துகிறோம். ஆனால் உள்முகமாக ஆன்மீக நிலையில் தூய்மைப்படுத்தும் காரியம் வெகு அரிதாகவே நடக்கிறது.

ஆத்மாவின் ஆனந்தத்தை எவ்வாறு பெறுவது?

நாம் தொடர்ச்சியாக ஆன்மீக பயிற்சியை  மேற்கொள்ளும்போது மின்னல்கீற்று போல தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடுகளை அவ்வப்போது உணர ஆரம்பிக்கிறோம். இவை ஆன்மீக அனுபவங்கள் என கூறப்படுகின்றன. இது போன்ற சில ஆன்மீக அனுபவங்களை நாம் பிறகு விவரிப்போம்.

சிவதசையே இறுதி நிலை (அதாவது இறைவனுடன் ஒன்றி-யிருக்கும் நிலை அல்லது இறைவனுடன் இடைவிடாத தொடர்புடைய நிலை). ஆத்மாவை சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருள் அல்லது போர்வை முழுவதும் விலகி, அதன் பேரொளியை மறைக்கும் ‘ஆன்மீக அறியாமை’ நீங்கி, ஆத்மா சுடர் விட்டு பிரகாசிக்கும் நிலையே இறுதி நிலையாகும்.

ஆத்மாவின் ஆனந்தத்தை எவ்வாறு பெறுவது?