உங்கள் உணவை சமைப்பவரால் உங்கள் சக்தியை மாற்ற முடியுமா?

உங்கள் உணவை சமைப்பவரால் உங்கள் சக்தியை மாற்ற முடியுமா?
சுருக்கம் : இந்த கட்டுரை ஒரு சமையல்காரரின் ஆன்மீக நிலை, சமைக்கும் முறை மற்றும் சமையலறைச் சூழ்நிலை ஆகியவை எவ்வாறு உணவின் சூட்சும சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப்பற்றி ஆய்வு செய்கிறது. யூனிவர்சல் ஆரா ஸ்கேனரை (Universal Aura Scanner) பயன்படுத்தி நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம், சமைப்பவர், ஆன்மீக ரீதியாக தூய்மையானவராக (ஸாத்வீகமானவர்) இருக்கும் பட்சத்தில் அவர் சமைக்கும் உணவு மற்றும் அதை உண்பவர், இருவரிடமும் நேர்மறை ஒளிமண்டலம் (positive aura) அதிகரிக்கிறது மற்றும் எதிர்மறை குறைகிறது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆன்மீக ரீதியாக நேர்மறையான உட்பொருட்கள் மற்றும் சாதகமான சூழ்நிலைகள் உணவில் நல்ல அதிர்வலைகளை ஊட்ட அத்தியாவசியமானவை என வலியுறுத்துகிறது. இது, சமைப்பது என்பது சுவை மற்றும் ஊட்டச்சத்து மட்டுமல்லாமல், ஆழமான தாக்கங்கள் கொண்ட செயலாகவும் இருக்கலாம் என்பதை காட்டுகிறது.

அட்டவணை

1. அறிமுகம் : சமைக்கும் நபருக்கு முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்பட வேண்டும்

ஒரு நல்ல உணவு பற்றி நாம் சிந்திக்கும்போது, சுவை, தயாரிக்கும் விதம் அல்லது அதிலுள்ள ஊட்டச்சத்தின் மதிப்பை நாம் அடிக்கடி கருத்தில் கொள்கிறோம். ஆனால் உண்ணும் உணவிலுள்ள சூட்சும சக்தி மற்றும் அதன் அதிர்வலைகளில் சமைக்கும் நபரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உணவானது நேரடியாக உடலில் உட்கொள்ளப்படுவதால், அது உங்கள் இருப்பு நிலை மற்றும் நடத்தையில் விரைவான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், உங்கள் ஆன்மீக நிலை பாதிக்கப்படும்போது, இதனால் ஏற்படும் குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்கள் என்ன? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ?

மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்திலுள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சியில், உணவானது உடல்ரீதியான அதிர்வலைகளை மட்டுமின்றி, சூட்சும அதிர்வலைகளையும் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிர்வலைகள் சமையல்காரரின் ஆன்மீக நிலை மற்றும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உணவு தயாரிக்கப்படும் சூழல் ஆகியவற்றால் ஆழமாக பாதிக்கப்படுகின்றன.

இந்த கட்டுரை, சமைப்பவருக்கும், அவர் தயாரிக்கும் உணவின் நேர்மறைத்தன்மைக்கும் இடையிலான சுவாரஸ்யமான உறவை ஆராய்கிறது, இது யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் (UAS) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளக்கமாகும்.

2. ஒளி மண்டலம் மற்றும் ஆன்மீக நிலையைப் புரிந்துகொள்வது

இந்த ஆன்மீக ஆராய்ச்சிக்குள் விரிவாக செல்வதற்கு முன், சில முக்கிய கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

“ஒளி மண்டலம்” என்பது எந்தவொரு நபரையோ அல்லது பொருளையோ சுற்றி சூட்சும சக்தி பரவியுள்ள இடமாகும். இதன் தன்மை அந்நபரின் ஆன்மீக தூய்மை அல்லது தூய்மையற்ற தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.

சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலேயின் வார்த்தைகளில் ஒருவரின் “ஆன்மீக நிலை” என்பது அந்நபர் தெய்வீகத்துடன் இணைவதற்கான அவரின் திறனைக் குறிக்கிறது. இந்த நிலை 1% முதல் 100% வரை மதிப்பிடப்படுகிறது. 70% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பீடு என்பது மஹான் மற்றும் குருவைக் குறிக்கிறது. ஒருவரின் ஆன்மீக நிலை உயர்ந்தால், அவர்களின் ஒளிமண்டலம் மிகவும் நேர்மறையாக மாறும். நமது செயல்கள் (முடிவுகள்), எண்ணங்கள் மற்றும் சூழல் தொடர்ந்து நமது மண்டலத்தைப் பாதிக்கின்றன. நேர்மறை அதிர்வலைகள் நேர்மறையை ஈர்க்கின்றன, அதே சமயம் எதிர்மறை அதிர்வலைகள் எதிர்மறையை ஈர்க்கின்றன.

3. யூனிவர்சல் ஆரா ஸ்கேனர் (UAS) பயன்படுத்தி சமைக்கும் நபரால் தயாரிக்கப்பட்ட உணவில் ஏற்பட்ட தாக்கத்தை ஆய்வு செய்யும் பரிசோதனை அமைப்பு

3.1 யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் (யு. ஏ.எஸ்.)

இந்தப் பரிசோதனைகள் யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் (யு. ஏ.எஸ்.)-ஐப் பயன்படுத்தி நடத்தப்பட்டன – இது பொருள்கள், உணவு மற்றும் மக்களின் சூட்சும சக்தி நிலையங்கள் அல்லது ஒளி மண்டலங்களை அளவிடும் திறன் கொண்ட ஒரு உயிரியல் பின்னூட்டக் கருவியாகும் :

  •  நேர்மறை ஒளிமண்டலம் (PA)
  • எதிர்மறை ஒளிமண்டலம் (IR மற்றும் UV)

கருவி பற்றிய கூடுதல் தகவல் : யுனிவர்சல் ஆரா ஸ்கேனர்(யு. ஏ.எஸ்.

3.2 ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தின் தலைமை சமையல்காரரைப் பற்றிய அறிமுகம்.

இந்த பரிசோதனைகளில் முக்கியமானவர் இந்தியாவின் கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தின் தலைமை சமையல்காரரான பூஜ்ய ரேகா கன்கோங்கர் ஆவார். அவருக்கு சமையலில் முறையான பயிற்சி இல்லாதபோதிலும், அவர் ஒரு மஹானின் ஆன்மீக நிலையை (அதாவது, 70% க்கு மேல்) அடைந்துள்ளார்.

அவர் சமையலை ஆன்மீக பயிற்சிக்கான (ஸாதனா)   ஒரு ஊடகமாகவும், ஆசிரமத்தில் ஸாதகருக்கு சேவை செய்வதற்கான (ஸத்சேவை), ஒரு வழிமுறையாகவும் அணுகுகிறார். அவர் சமைக்கும் போது கடவுளின் நாமத்தை உச்சரிக்கிறார் மற்றும் உணவு தயாரிப்பை ஆன்மீக சேவையின் ஒரு வடிவமாகக் கருதுகிறார். அவரது ஆன்மீக தூய்மை, பணிவு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நேர்மறையான ஆன்மீக ஆற்றலுடன் கூடிய உணவுகள் தயாராவதற்கு காரணமாகின்றன. அவர் சமைக்கும் போது, தெய்வீக சக்தி அவர்மூலம் உணவில் கலந்து, உணவின் ஒளிமண்டலத்திலும் அதை உட்கொள்பவர்களிடமும் கணிசமாக அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

4. பரிசோதனை : சமைக்கும் நபர்களால் உணவின் ஒளிமண்டலம் எவ்வாறு பாதிப்படைக்கிறது என்பதற்கான ஆய்வு – மூன்று உணவகங்களில் சமைக்கப்பட்ட பருப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது

சமைக்கும் நபரால் உணவில் ஏற்படும் தாக்கத்தை விளக்க, மூன்று வெவ்வேறு சமையலறைகளில், மூன்று வெவ்வேறு சமையல்காரர்களால், சமைக்கப்பட்ட மூன்று பருப்பு வகை (இந்திய பாணியில் சமைக்கப்பட்ட பருப்பு) மாதிரிகளைப் பயன்படுத்தி ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது :

மாதிரி 1 : உள்ளூர் உணவகத்தில் தயாரிக்கப்பட்டது.
மாதிரி 2 : 5 நட்சத்திர ஹோட்டல் உணவகத்தில் தயாரிக்கப்பட்டது.
மாதிரி 3 : ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் பூஜ்ய ரேகா கன்கோங்கர் அவர்களால் தயாரிக்கப்பட்டது.

மூன்று வெவ்வேறு சமையலறைகளில் இருந்து மூன்று வெவ்வேறு சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்ட பருப்பில் காணப்படும் சூட்சும அதிர்வலைகளில் உள்ள வேறுபாடுகள்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் (மிகவும் விலையுயர்ந்தது) தயாரிக்கப்பட்ட பருப்பு அதிகமான எதிர்மறையான ஒளிமண்டலத்தைக் கொண்டிருந்தது என்பது தெளிவாக தெரிந்தது. அதைத் தொடர்ந்து உள்ளூர் உணவகத்தில் இருந்து வந்த பருப்பும் குறிப்பிடத்தக்க அளவு எதிர்மறையான ஒளிமண்டலத்தைக் கொண்டிருந்தது .ஆனால், ஆசிரம சமையல்காரர் தயாரித்த பருப்பில் எந்த வித எதிர்மறையான ஒளிமண்டலமும் இல்லாமல், குறிப்பிடத்தக்க அளவில் நேர்மறையான ஒளிமண்டலம் இருந்தது.

யு. ஏ.எஸ் ன் கைகள் 140 டிகிரிக்கு திறக்கும் கோணத்தைப் பற்றிய குறிப்பு: யு. ஏ.எஸ் ன் கைகள் முழுமையாக 180°க்கு திறக்காவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு திறந்திருந்தால், அது ஓரளவு நேர்மறை அதிர்வலைகள் இருப்பதைக் குறிக்கலாம். இருப்பினும், ஒளிமண்டலத்தின் பரவலை அளவிட முடியாது. கைகள் முழுமையாக 180°க்கு திறந்தால் மட்டுமே நேர்மறை ஒளிமண்டலம் பரவியுள்ள நீளத்தை அளவிட முடியும், மேலும் அவ்வாறு செய்ய, ஆபரேட்டர் மெதுவாக பின்னோக்கி செல்வார்கள்.

5. சமைக்கப்பட்ட உணவு, மூலப்பொருட்களை விட அதிக நேர்மறையானது.

மற்றொரு பரிசோதனையில், பச்சை காலிஃபிளவரின் ஒளிமண்டலத்தை, ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரம சமையலறையில், பூஜ்ய ரேகா கன்கோங்கர் (மஹானின் ஆன்மீக நிலையில் உள்ள ஒரு சமையல்காரர்) தயாரித்த காலிஃபிளவர் வறுவல் உணவின் ஒளிமண்டலத்தோடு ஒப்பிட்டனர்.

உணவு / வகை வகை 1 (IR) எதிர்மறை ஒளிமண்டலம் வகை 2 (UV) எதிர்மறை ஒளிமண்டலம் நேர்மறை ஒளிமண்டலம்
சமைக்காத காலிஃபிளவர் (பச்சை ) 4.07 மீ 2.46 மீ 4.34 மீ
சமைத்த காலிஃபிளவர் (வறுவல்) 0 0 17.3 மீ

பொதுவாக, பச்சை காய்கறிகள் நேர்மறையான ஒளியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், உலகளவில் ஆன்மீக மாசுபாடு (ரஜ-தம அதிர்வலைகள்) அதிகரிப்பதால், பயிர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன, எனவே எதிர்மறை ஒளிமண்டலத்தை உள்வாங்குகின்றன.

ஆசிரம சமையலறையின் நேர்மறையான சூழலில், ஆசிரமத்தின் தலைமை சமையல்காரர் பூஜ்ய ரேகா கன்கோங்கர் சமைத்த காலிஃபிளவர் உணவு, எதிர்மறை ஒளிமண்டலத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், பச்சை காலிஃபிளவரின் நேர்மறையான ஒளிமண்டலத்தை கணிசமாக மேம்படுத்தி, அதை 4.5 மீட்டரிலிருந்து 17.3 மீட்டராக அதிகரித்தது. இதன் மூலம் சமைக்கும் நபர், சமையல் செய்யும் முறை மற்றும் சமையலறையின் சூழல் ஆகியன உணவின் நேர்மறையான ஒளிமண்டலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது நிரூபணமாகிறது.

6. ஒரு மஹான் சமைத்த உணவை உண்ணுவதால் ஏற்படும் தாக்கம்

6.1  ஒரு மஹான் சமைத்த பருப்பை உண்ணுவதால் ஏற்படும் தாக்கம்

பூஜ்ய ரேகா கன்கோங்கர் தயாரித்த பருப்பு உணவை உட்கொண்ட ஒருவரின் ஒளிமண்டலத்தில் பின்வரும் மாற்றங்கள் காணப்பட்டன :

  • நேர்மறை ஒளிமண்டலம் : 160% அதிகரிப்பு
  • எதிர்மறை ஒளிமண்டலம் : 85% குறைவு

ஒரு ஸாத்வீகமானவர் (மஹான்) சமைத்த சைவ உணவு எவ்வாறு அதை உண்ணுபவரின் ஒளிமண்டலத்தின் தரத்தை உயர்த்தி எதிர்மறைத்தன்மையைக் குறைக்கும் என்பதை இந்த சோதனை நிரூபிக்கிறது.

6.2 ஒரு மஹான் சமைத்த ஸாத்வீகமான (எ.கா. ஜவ்வரிசி கிச்சடி) உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள்

ஜவ்வரிசி கிச்சடியின் புகைப்படம்ஜவ்வரிசி கிச்சடியின் புகைப்படம்

உபவாச உணவாகப் பயன்படும் ஜவ்வரிசி கிச்சடி பூஜ்ய ரேகா கன்கோங்கர் அவர்களால் தயாரிக்கப்பட்டது. ஒருவர் அந்த உணவை உட்கொண்ட பிறகு, அவரின் ஒளிமண்டல அளவீடு :

  • நேர்மறை ஒளிமண்டலம் : 205% அதிகரிப்பு
  • எதிர்மறை ஒளிமண்டலம் : 86% குறைவு

இது நேர்மறை மற்றும் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்துவதில் ஸாத்வீக (ஆன்மீக ரீதியாக தூய்மையான) உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஸாத்வீகமான சூழலில், ஸாத்வீகமான சமையல்காரரால் சமைக்கப்படும் ஸாத்வீக உணவு, மிகவும் நேர்மறையானதாக மாறி, அதை உண்பவருக்கு நன்மை பயக்கும்.

இந்த சோதனைகளில், ஒரு சமையல் செய்யும் மஹானால் உணவின் மீதும், அந்த உணவை உட்கொள்பவர் மீதும் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை நாங்கள் நிரூபித்துள்ளோம். இதன் மூலம், சமைக்கும் நபர், பொருட்கள் மற்றும் சமையலறை சூழல் அனைத்தும் ஆன்மீக ரீதியாக மிகவும் தூய்மையானதாக (ஸாத்வீகமாக) இருக்கும்போது, உணவில் நேர்மறையின் அளவு (ஒரு உணவில் கண்டறியப்பட்ட நேர்மறை) மிக உயர்ந்த நிலையில் இருப்பது சாத்தியம் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். உண்மை என்னவென்றால், ஒரு சமையல் செய்யும் மஹானால் சமைக்கப்பட்ட உணவை உண்ணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது. உணவின் சூட்சும அதிர்வலைகள், சமைக்கும் நபர், சமையலுக்குரிய பொருட்கள் மற்றும் சூழலில் இருக்கும் ஆன்மீக நேர்மறை அல்லது எதிர்மறையின் கலவையால் பாதிக்கப்படும். இதை பற்றி அடுத்த பகுதியில் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

உணவு தொடர்பான பிற சோதனைகளில், இறைச்சி சாப்பிடுவது அல்லது மது அருந்துவது ஒருவரின் ஒளிமண்டலத்தில் உடனடி மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. மேலும் எதிர்மறையான அதிர்வலைகளை உள்வாங்கி நேர்மறையை குறைக்கும் வகையில் செயல்பட்டதும் தெரிய வந்தது. நீண்ட காலமாக மாமிசம் சாப்பிடுவதும் மது அருந்துவதும் ஒரு நபரின் மனதையும் ஆன்மீக ரீதியாக வளரும் திறனையும் மோசமாக பாதிக்கும்.

7. நேர்மறை ஒளிமண்டலத்துடன் கூடிய உணவை எவ்வாறு தயாரிப்பது

ஆன்மீக ஆராய்ச்சியின் அடிப்படையில், நேர்மறை ஒளிமண்டலத்தை கொண்ட ஒரு உணவைத் தயாரிக்க மூன்று முக்கிய காரணிகள் அவசியமாகின்றன : சமையலுக்குரிய பொருட்கள், சமைக்கும் நபர் மற்றும் சுற்றுச்சூழல்.

நேர்மறை ஒளிமண்டலத்துடன் கூடிய உணவை எவ்வாறு தயாரிப்பது
1. தேவையான பொருட்கள் :

  • மாமிசம், மீன் மற்றும் முட்டைகளைத் தவிர்க்கவும் : இந்த பொருட்கள் இயல்பாகவே எதிர்மறை அதிர்வலைகளைக் கொண்டுள்ளன. மதுவும் உணவில் எதிர்மறையை அதிகரிக்கும். அத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், மற்ற பகுதிகளில் எவ்வளவு முயற்சி செய்தாலும், அந்த உணவு எதிர்மறை அதிர்வலைகளைக் கொண்டதாகவே இருக்கும்.
  • தாவர அடிப்படையிலானதைத் தேர்வுசெய்யவும் : உணவு நேர்மறையான ஒளிமண்டலத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் சைவ அல்லது தாவர அடிப்படையிலான உணவுகள் அவசியம்.

2. சமைக்கும் நபர் :

  • ஆன்மீக ரீதியாக தூய்மையானது(ஆன்மீக தூய்மை) : சமைக்கும் நபரின் ஆன்மீக தூய்மை (ஸாத்வீகம்) ஒரு முக்கிய அங்கமாகும். ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கிய வழக்கமான ஆன்மீக பயிற்சியால் சமைக்கும் நபரின் ஸாத்வீகம் அதிகரிக்கிறது. சமைக்கும் நபரின் ஆன்மீக நிலை உயர்ந்தால், அவர் அல்லது அவள் சமைக்கும் உணவில் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கும் வாய்ப்பு அதிகம்.
  • எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருப்பது : குறிப்பாக சமைக்கும் போது, சமையல்காரர் குறைந்த அளவு எதிர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். கோபம், பேராசை, அல்லது குறை கூறும் பழக்கம் போன்ற ஆளுமை குறைபாடுகள்அதிகமாக இருப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
  • ஆன்மீக கஷ்டங்கள் இல்லாத நிலை : சிறந்த முறையில் உணவு தயாரிக்க,சமைக்கும் நபர் ஆன்மீக கஷ்டங்களின்றி இருக்க வேண்டும். அதாவது, ஏதேனும் தீய சக்திகள் சமையல்காரரை பாதித்தால் அல்லது அவரை கட்டுக்குள் வைத்து இருந்தால், அது உணவில் எதிர்மறையான ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • கடவுளின் நாமஜபம் செய்வது : சமைக்கும் போது கடவுளின் நாமத்தை சொல்லுவது உணவின் நேர்மறைத்தன்மையை கணிசமாக அதிகரிக்கிறது.
  • அஹங்காரம் குறைவாக இருக்க வேண்டும் : பணிவும், ‘நான்’ என்னும் அஹங்காரம் இல்லாமையும் உணவில் நேர்மறை அதிர்வலைகள் ஏற்பட உதவுகின்றன. “நான் மிகச் சிறந்த சமையல்காரர்” என்று பெருமைப்படுவது உணவில் எதிர்மறை அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
  • அன்பு (மிகச் சிறந்ததெனில் எதிர்பார்பற்ற அன்பு) : அன்பு மற்றும் ஆர்வத்துடன் சமைக்கப்படும் உணவு மிகவும் சுவையாகவும், திருப்திகரமாகவும் இருக்கும் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இருப்பினும், இது ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம், ஒரு சமையல்காரருக்கு எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு இருக்கும்போது, அது உணவில் நேர்மறையை அதிகரிக்க உதவுகிறது.

3. சுற்றுச்சூழல் :

சமையலறையின் சூழல், உணவின் அதிர்வுகளையும் ஆற்றலையும் பாதிக்கிறது.

  • ஆன்மீக தூய்மை : சமையலறை ஆன்மீக ரீதியாக தூய்மையாக (ஸாத்வீகமாக) இருக்க வேண்டும். தூய்மை என்பது ஸாத்வீக அதிர்வளைகளை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், அது மட்டுமே அளவுகோல் அல்ல.. எடுத்துக்காட்டாக, ஒரு சமையலறையில் மிருகங்களை கொன்றோ அல்லது மாமிசம் சமைக்கப்பட்டாலோ, அந்த இடத்தில் தீயசக்தி அதிகரிக்கும். இதன் விளைவாக, அங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் அந்த எதிர்மறை அதிர்வலைகளால் பாதிக்கப்படும். மேலும், சமைக்கும் நபரின் குணநலன்கள் சமையலறையின் நேர்மறை தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • சைவ மற்றும் அசைவ சமையலுக்கான பாத்திரங்களை வேண்டாம் : சைவ மற்றும் அசைவ சமையலுக்கான பாத்திரங்களை கலக்காமல் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இது எதிர்மறை அதிர்வலைகளை பரப்பக்கூடும்.
  • நச்சுத்தன்மையற்றது : உணவு நேர்மறை அதிர்வலைகளைக் கொண்டிருக்க, நச்சுத்தன்மையற்ற மற்றும் இணக்கமான சமையலறை சூழல் அவசியம். சமைக்கும் போது கூச்சலிடுவது, துஷ்பிரயோகம் செய்வது மற்றும் பதட்டம் ஆகியவை தயாரிக்கப்படும் உணவில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எதிர்மறை அதிர்வலைகளை வெளியிடும் இசையை இசைப்பதும் உணவுக்கு தீங்கு விளைவிக்கும்..

இந்தியாவின் கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில், அதிநுட்பமான ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஆன்மீக பரிமாணம் குறித்த விரிவான ஆய்வுகள் நடத்தப்படுகிறது. ஆன்மீக ஆராய்ச்சிக் குழுவில் உள்ள ஸாதகர்கள் பெறும் சூட்சும ஞானம், உயர் நிலை மஹான்களால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. தெய்வீக ஞானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி காட்சி வடிவம் ஆகும். இந்த முறையில் ஞானத்தைப் பெறும் ஸாதகர்கள் சூட்சும ஓவியக் கலைஞர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் ஒரு பரிசோதனை அல்லது சூழ்நிலையின் போது சூட்சுமமான செயல்முறைகளை உணர்ந்து, கண்ணால் கண்டு, அதை வரைய முடியும். இந்த வரைபடங்கள் ஆன்மீக எக்ஸ்ரே படங்கள் போன்றவை. இது சாதாரண மக்களுக்கு ஆன்மீக பரிமாணங்களைப் பற்றிய அபூர்வமான காட்சிப் பார்வையை வழங்குகின்றன.

கீழே உள்ள சூட்சும வரைபடம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நேர்மறை அடிப்படைகள் மற்றும் அம்சங்களை பின்பற்றி, அரிசி மற்றும் பருப்பை சமைக்கும்போது ஏற்படும் நேர்மறை சூட்சும ஆற்றல்களை பற்றி விளக்குகிறது.

பருப்புடன் கலந்த அரிசியின் சூட்சும பண்புகள்

8. முடிவுரை கருத்துகள்

‘நீ என்ன உண்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்’ என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. இது உடல் நிலையில் மட்டுமல்ல, மனநிலை மற்றும் ஆன்மீக நிலையிலும் உண்மையாகிறது.

சமைக்கும் நபர், சமையல் செய்யும் முறை மற்றும் சமையலறை சூழல் ஆகியவற்றை பொறுத்து உணவு நேர்மறை அல்லது எதிர்மறை அதிர்வலைகளை வெளியிடுகின்றன. சமைக்கும் போது கடவுளின் நாமத்தை உச்சரிப்பது உணவின் நேர்மறையை பெரிதும் மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழலில் உள்ள எதிர்மறையை எதிர்க்கும். இருப்பினும், எப்போதும் சமையலுக்குரிய பொருட்கள் ஆன்மீக ரீதியாக நேர்மறையானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆன்மீக ரீதியாக நேர்மறையான உணவு உங்கள் ஆரோக்கியத்திலும் (உடல் மற்றும் மன ரீதியாக) மற்றும் உங்கள் குடும்பத்தின் நல்வாழ்விலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நேர்மறையான மனதை வளர்ப்பது சமைக்கும் நபரிடமிருந்து உணவில் பாயும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது. மேலும் வழிகாட்டுதலுக்கு, “உங்கள் ஆன்மீக பயணத்தைத் தொடங்குங்கள்” மற்றும் “ஆன்மீக பயிற்சியாக ஆளுமை குறைபாடு நீக்கும் செயல்முறை“,ஆகியவற்றைப் பார்க்கவும்.

ஒரு சமையல் செய்பவராக நீங்கள் இருப்பின், நீங்கள் தயாரிக்கும் உணவை சாப்பிடும் நபர்கள் உட்கொள்ளும் சூட்சும சக்திக்கு நீங்களே பொறுப்பு. நன்கு தயாரிக்கப்பட்ட உணவிற்கான அளவுகோல்களாக சுவை மற்றும் பரிமாறும் முறையும் முக்கிய காரணமாக இருந்தாலும் கூடுதலாக, உங்கள் உணவில் ஆன்மீக நேர்மறையை எவ்வாறு புகுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.