கால்களை மடக்கி அமர்ந்து குளிப்பதால் ஏற்படும் ஆன்மீக விளைவு

கால்களை மடக்கி அமர்ந்து குளிப்பதால் ஏற்படும் ஆன்மீக விளைவு

1.ஆன்மீக ரீதியாக சிறந்த முறையில் குளிப்பதற்கான அறிமுகம்

நாம் குளிக்கும் போது, பொதுவாக நமது கவனம், உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில்தான் இருக்கும். ஆனால் ஆன்மீக ரீதியில் நாம் தூய்மை அடைகிறோமா அல்லது எந்த வகையான குளியல் முறை,அதற்கு சிறந்தது என்பதை குறித்து நாம் பெரிதாக சிந்திப்பதில்லை. பல நாடுகளில் குளியல்தொட்டி அல்லது தூவாலை(shower) மூலம் குளிப்பதே பொதுவான முறையாக உள்ளது. ஆனால் எஸ்.எஸ்.ஆர்.எஃப் மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், இந்தியாவில் பொதுவாகப் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய குளியல் முறை ஆன்மீக ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஆர்.எஃப் மேற்கொண்ட ஆன்மீக ஆய்வுகளின்படி, குளியல்தொட்டியிலோ அல்லது தூவாலை மூலம் குளித்தாலோ நம்மை உடல் ரீதியாகச் சுத்தப்படுத்துவதற்கு உதவினாலும், ஆன்மீக ரீதியில் அவை சாதகமானவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில், கால் மடக்கி அமர்ந்த நிலையில் (சுகாசனம் போன்று) குளிப்பது பற்றிய எஸ்.எஸ்.ஆர்.எஃப் -இன் ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகளை உங்களுடன் பகிர்கிறோம்.

இந்த கட்டுரையை நன்கு புரிந்து கொள்ள, கீழ்க்கண்ட கட்டுரைகளை முன்பே படித்து அறிந்து கொள்வதை பரிந்துரைக்கிறோம்:

2. கால்களை மடக்கி அமர்ந்து குளித்தல்

2.1 பரிந்துரைக்கப்பட்ட கால்களை மடக்கி அமர்ந்து குளிக்கும் முறை

கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் குளிப்பதன் ஆன்மீக பலனை அதிகப்படுத்த, குளிக்கும் போது கீழ்கண்ட முறைகளைப் பின்பற்ற பரிந்துரைக்கிறோம்.

கருப்பு சக்தி : தீய சக்திகள் பயன்படுத்தும் பிரதான ஆயுதமான கருப்பு சக்தி, உலகத்தில் நிகழும் எந்த ஒரு செயலையும் கையாளக்கூடிய திறன் உடைய ஒரு ஆன்மீக சக்தியாகும்.இந்த திறன், தாக்கும் தீய சக்தியின் வலிமையைப் பொருத்தது.

பிரார்த்தனை: குளிப்பதற்கு முன், முழுமையான பிரபஞ்ச நீர் தத்துவத்திற்கு (ஆப தத்துவம்) பிரார்த்தனை செய்து நன்றி செலுத்த வேண்டும். உடலில் உள்ள ரஜ-தம குணங்கள் நீங்கி சுத்தமாக வேண்டும் என்று பிரார்த்திக்கலாம். அதேபோல், நம்மை உடல் ரீதியாக சுத்தப்படுத்துவதுடன், நமது ஆழ்மனமும் சுத்தமாக வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யலாம்

ஆன்மீக ரீதியாக தூய்மையான பொருட்களைச் சேர்த்தல்: விபூதி(திருநீறு), இந்தியபசுவின்சிறுநீர்(கோமூத்திரம்) அல்லது கல் உப்பு போன்ற ஸாத்வீகமான குணமுள்ள ஆன்மீக நிவாரண பொருட்களை நீர் இருக்கும் வாளியில் சேர்க்கலாம். இவை உடலில் உள்ள கருப்பு சக்தியை வேகமாக நீக்க உதவுகின்றன.

அமரும் நிலை: இந்த குளிக்கும் முறையில், ஒருவர் மரத்தால் செய்யப்பட்ட ஒரு இருக்கையில் கால்களை மடக்கி அமர்ந்து குளிக்க வேண்டும்.தரையில் அமர்ந்து குளிப்பது பரிந்துரைக்கப்படவில்லை;ஏனெனில் அது தீய சக்திகள் (பேய், பிசாசு,தீயஆவிகள்) போன்றவை தாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். குளியலறையின் தரையில் அமர்வது, பாதாளம் (Pātāl) எனப்படும் கீழ் உலகத்திலிருந்து வரும் பாதிப்பூட்டும் அதிர்வுகள் தரையில் பரவியிருப்பதால், ஆன்மீக ரீதியில் தீங்கிழைக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது. இதனால் நமது கீழ் சக்கரங்களும் (ஆன்மீக சக்தி மையங்கள்) கீழ் வயிற்றுப் பகுதிகளும் (இனப்பெருக்க உறுப்புகள்) சூட்சும தாக்குதல்களினால் எளிதில் பாதிப்படையக்கூடும்.எனவே குளிக்கும் போது ஒரு இருக்கையில் அமர்வது மிகவும் அவசியம். மரமானது,நேர்மறை அதிர்வுகளை வெளியிடடும். அவற்றை தன்னுள் ஏற்கும் தன்மையும் கொண்டதால், அதில் அமர்வது ஏற்றதாகக் கருதப்படுகிறது.

குளிக்கும் உபகரணங்கள்: ஒரு வாளி தண்ணீரைப் பயன்படுத்தி, தண்ணீரை உடல்மீது ஊற்றிக் கொள்ள வேண்டும். முழுமையாகச் சுத்தம் செய்வதற்காக கால்களை விரித்து குளிக்கலாம். குளிக்கும் போது ஸாத்வீகத்தன்மை நிறைந்த தலைக்கழுவும் திரவம்(ஷாம்பூ) மற்றும் சோப்பு பயன்படுத்துவது சிறந்தது.விலை உயர்ந்த சோப்பு என்பதால் ஆன்மீக ரீதியாக சிறந்தது என்பதில்லை.

இறைவனின் நாமம் ஜபித்தல்: குளிக்கும் போது தொடர்ந்து இறைவனின் நாமத்தை ஜபித்து கொண்டிருக்க வேண்டும்.இதனால் தண்ணீரில் உள்ள இறை சைதன்யம் (Chaitanya) செயல்படத் தொடங்குகிறது.

பிரார்த்தனை: குளித்து முடித்த பின், சுத்தமடைந்ததற்காக நன்றி தெரிவிக்கும் ஒரு பிரார்த்தனையை கடவுளிடம் சொல்லுங்கள்.

2.2 கால்களை மடக்கி அமர்ந்து குளிப்பதின் நுண்ணிய (ஆன்மீக) ஆய்வு

திருமதி ப்ரியங்கா லோட்லிகர்

எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஸாதகரும் , அதிநுட்பமான ஆறாம் அறிவுத்திறன் கொண்டவருமான திருமதி பிரியங்கா லோட்லிகர், கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் குளிப்பதால் ஏற்படும் சூட்சும(ஆன்மீக) விளைவுகளை ஆய்வு செய்தார்.இந்த குளியல் முறையில் அவர் கண்ட பல்வேறு ஆன்மீக சக்திகளை சூட்சும அறிவு அடிப்படையில் ஒரு ஓவியமாக வரைந்தார். இந்த சூட்சும அறிவு அடிப்படையிலான ஓவியம், சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களால் துல்லியமாகச் சரிபார்க்கப்பட்டது. இத்தகைய சூட்சும அறிவின் அடிப்படையில் உருவாக்கப்படும் வரைபடங்களின் மூலம், கால்களை மடக்கி அமர்ந்து குளிப்பது போன்ற ஒரு எளிய செயல் கூட எவ்வாறு ஆன்மீக ரீதியில் நமக்கு பயனளிக்கிறது என்பதை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

சூட்சும அறிவு அடிப்படையிலான ஓவியம்:திருமதி பிரியங்கா லோட்லிகர், எஸ்.எஸ்.ஆர்.எஃப்

மர இருக்கையில் அமர்ந்து குளிப்பதனால் கிடைக்கும் சூட்சும(ஆன்மீக) பயன்கள்

  • சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தில், முதன்மையில் ஆன்மீக உணர்வு உருவாகுவது காட்டப்பட்டுள்ளது . இதற்குக் காரணம், நின்ற நிலையில் குளிப்பதைவிட அமர்ந்த நிலையில் குளிக்கும் போது நாம் அதிகமான ஆன்மீக உணர்வை அனுபவித்து, உள்முகமாகி, இறைவனை நோக்கி மனதை ஒருமுகப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதுதான். குளிப்பதற்கு முன் பிரார்த்தனை செய்வது ஆன்மீக உணர்வை உருவாக்க உதவுகிறது. ஆன்மீக உணர்வு உருவாகும் வாய்ப்பு,நாம் ஆன்மீக பயிற்சிகளை(spiritual practice)தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது, அதிகமாகிறது.
ஆன்மீக உணர்வு : ஒருவர் ஆன்மீக உணர்வு நிலையிலிருக்கும்போது, அந்த நேரத்தில் அவரின் ஆழ்மனம் இறைவனுடன் ஒன்றி இணைகிறது. அப்போது மனம் மற்றும் புத்தி பின்நிலைக்கு சென்று, இறைவனுடன் ஆழமான ஒன்றுபட்ட உணர்வை அனுபவிக்க முடிகிறது. எனவே, இந்த நிலையில் ஒருவர் ஆன்மீகம் அல்லது இறைவன் குறித்து எந்த எண்ணங்களும், சந்தேகங்களும் இல்லாமல், இருக்கிறார்.
  • குளிக்கும் நபருக்குள் உருவாகும் இந்த ஆன்மீக உணர்வு, நீரில் தெய்வீக சைதன்யத்தை செயலில் கொண்டு வருகிறது. இதன் விளைவாக, அந்த நபரைச் சுற்றி தெய்வீக பாதுகாப்பு வளையம் உருவாகிறது. கால்களை மடக்கி (பத்மாசனம்/சுகாசனம் போன்ற குறுக்கே அமர்ந்த நிலை) அமரும்போது உடல் வடிவம் முக்கோணமாக மாறுகிறது. இதனால் குளிக்கும் போது பாதுகாப்பு உறை (protective sheath) எளிதில் உருவாகிறது.
  • ஆன்மீக நேர்மறைத்தன்மை (positivity) அதிகரிப்பதால், சுற்றியுள்ள வளிமண்டலத்திலிருந்து தெய்வீக சக்தி (சக்தி) ஈர்க்கப்படுகிறது .அது நீரின் வழியாக உடலுக்குள் பாய்கிறது. கால்கள் குறுக்கே மடக்கப்பட்டிருப்பதால், அந்த சக்தி தொடர்ந்து உடலுக்குள் சுழன்று செயல்பாட்டில் நிலைத்திருக்கிறது. இது நின்ற நிலையில் குளிக்கும் போது நிகழ்வதற்கு நேர்மாறானது. நின்று குளிக்கும் போது, சக்தி பாதங்களின் வழியாக வெளியேறி, நீரில் உள்ள தெய்வீக சைதன்யத்தின் பலனை, பெருமளவு இழக்க நேரிடுகிறது கால்களை மடக்கி அமர்ந்த நிலையில்,
  • ஆன்மீக சக்தி ஓட்ட அமைப்பின் மையக் கால்வாய் (சுஷும்னா நாடி) ஒரு அளவு செயல்படுத்தப்படுவதால், நீரில் உள்ள தெய்வீக சைதன்யத்தை நாம் சிறப்பாக உள்வாங்க உதவுகிறது.
  • வயது, உடல்காயம், இடவசதி அல்லது பொருள் பற்றாக்குறை காரணமாக சிலருக்கு மர நாற்காலியில் அமர்ந்து குளிப்பது சாத்தியமாக இருக்காது. இத்தகைய சூழ்நிலைகளில் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ? எப்போதும் நாம் செய்யக்கூடிய மிக எளிய பயிற்சி ஒன்று உள்ளது — அது பிரார்த்தனை. பின்வரும் பிரார்த்தனையை மனமாரச் சொல்லுவதன் மூலம், உடல்ரீதியாக கால்களை மடக்கி அமர்ந்து குளிக்க முடியாவிட்டாலும், அதனால் கிடைக்கும் ஆன்மீக பலன்களை ஒருவர் பெற முடியும்.

“இறைவனே, நான் கால்களை மடக்கி அமர்ந்து குளிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். தயவுசெய்து, குளிக்கும் போது அதே ஆன்மீக பலனை எனக்கு அருளுங்கள்.”

  • நமது அன்றாட தொடர்புகள் மற்றும் செயல்பாடுகளின் போது, உடலை மூடிக் கொள்ளக்கூடிய சூட்சும கருப்பு சக்தியும் இதன் மூலம் நீக்கப்படுகிறது. இதற்கு மாறாக, தூவாலை அல்லது குளியல் தொட்டியில் (bathtub) குளிப்பது உடலில் கருப்பு படலத்தை மேலும் சேர்க்கக் கூடியதாக இருக்கலாம்.

3. சுருக்கம்

நமது தனிப்பட்ட சுத்தத்திற்காக நாம் பயன்படுத்தும் பல்வேறு முறைகளில், ஒவ்வொன்றுக்கும் ஆன்மீக பயன்கள் அல்லது பாதிப்புகள் வெவ்வேறு அளவில் உள்ளன. இறுதியில் நாம் எதைச் செய்ய இயன்றாலும், எந்த வாழ்க்கை முறையிலிருந்தும் அதிகமான பயனைப் பெறுவது ஆன்மீகப் பயிற்சியுடன் ஸாத்வீகமும் இணைந்து செயல்படும்போதுதான். “ஆன்மீகம் என்பது அனுபவத்தின் அறிவியல்” என்ற கூற்றின்படி, ஆன்மீக உணர்வுடன் சொல்லப்படும் ஒரு பிரார்த்தனை மிக சக்திவாய்ந்த கருவியாகும். அது நீரிலும் சூழலிலும் உள்ள நேர்மறை சக்திகளை நாம் பெற உதவுவதோடு, தீயசக்திகளிலிருந்து நம்மை பாதுகாக்கவும் செய்கிறது.

ஒரு ஞானி ஒருமுறை கூறினார்: உடலிலும், ஆழ்மனதிலும் உள்ள அழுக்குகளை நீக்குவதே உண்மையான குளியல் ஆகும். இதனால்தான், தொடர் ஆன்மீக பயிற்சியே உண்மையான சுத்திகரிப்பு குளியல் ஆகும்

உண்மையான சுத்தகரிப்பு, ஆன்மீகச் சுத்தகரிப்பே ஆகும் .மனம் சுத்தமாக இல்லையெனில் சோப்பினால் என்ன பயன் ?”- ஸந்த் துக்காராம் மஹராஜ்