குளியல் தொட்டியில் குளிப்பதால் ஏற்படும் ஆன்மீக விளைவு

1. அறிமுகம்

குளிப்பது என்பது அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவான ஒரு நடைமுறையாகும். உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களின் தனிப்பட்ட சுகாதாரத்திற்காகவும், சிகிச்சை அல்லது மத ரீதியான  காரணங்களுக்காகவும், இளைப்பாறுவதற்காகவும் தங்கள் உடலை தவறாமல் நீரினால் சுத்தம் செய்கிறார்கள். குளிக்கும் முறை பல்வேறு இடங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களுக்கு பொதுவானது என்பதால் உலகளவில் பல்வேறு வகையான குளியல் முறைகள் பின்பற்றப்படுவதும்  இயற்கையே. குளியல் தொட்டியைப் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளில் குளிப்பதற்கான ஒரு பொதுவான வழியாகும். ஆன்மீக ஆராய்ச்சி மூலம் குளியல் தொட்டியில் குளிப்பதால் ஏற்படும் ஆன்மீக விளைவை நாங்கள் ஆராய்ந்தோம்.

2. பின்னணித் தகவல்

இந்தக் கட்டுரையைப் புரிந்துகொள்ள, பின்வரும் கட்டுரைகளைப் படிக்க பரிந்துரைக்கிறோம்:

3. குளியல் தொட்டியில் குளிப்பதைப் பற்றிய ஆன்மீகக் கண்ணோட்டம்

குளியல் தொட்டியில் குளிக்கும் பழக்கம் தூய்மையைப் பேணுவதற்கும் அதே நேரத்தில் ஓய்வெடுப்பதற்கும் ஒரு பாதிப்பற்ற(பாதிப்பில்லாத) வழியாகத் தோன்றலாம். இருப்பினும், ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், குளியல் தொட்டியில் குளிப்பதால் உண்மையில் தீய சக்தி ஈர்க்கப்பட்டு, குளிக்கும் நபருக்கு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த அம்சத்தைப் புரிந்து கொள்ள, அதிநுட்பமானஆறாவது அறிவு திறன் கொண்ட, எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஸாதகரான   குமாரி பிரியங்கா லோட்லிகரின் உதவியை நாங்கள் பெற்றோம். ஆன்மீக ரீதியாக, சராசரியான ஒருவர் குளியல் தொட்டியில் குளிப்பதைப் பற்றி, அவர் ஆய்வு செய்து, ஆன்மீகப் பரிமாணத்தில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்த தனது கண்டுபிடிப்புகளை கீழே உள்ள சூட்சும ஞான வரைபடத்தில் வழங்கினார். இந்த சூட்சும ஞான வரைபடத்தின் துல்லியத்தை பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் சரிபார்த்துள்ளார்.

குளியல் தொட்டியில் குளிப்பதால் ஏற்படும் சூட்சும விளைவுகள்

குளியல் தொட்டியில் குளிக்கும்போது ஆன்மீகப்பரிமாணத்தில் எதிர்மறை விளைவு  ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • ஒருவர் குளியல் தொட்டியில் குளிக்கும்போது, ​​அவரின் உடலில் உள்ள அழுக்குத் துகள்கள் தொட்டியில் சேரும். அழுக்கு, ரஜ-தம வில் பிரதானமாக இருப்பதால் அது தீயசக்தியை ஈர்க்கிறது. பரிபூரண நீர் தத்துவம் (ஆப தத்துவம்) நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகளை செயலூக்கத்துடன் சேமிக்கும் ஆற்றல் வாய்ந்தது. எனவே, ஒருவர் குளிக்கும் போது குளியல் நீரில் கருப்பு சக்தி குவிகிறது. இந்த நீர் நீண்ட நேரத்திற்கு குளிக்கும் நபருடைய உடலுடன் நேரடித்தொடர்பில் இருப்பதால், பரிபூரண நீர் தத்துவத்தின் மூலம் கஷ்டம் தரும் சக்தியின் அதிர்வலைகள் அந்த நபரின் உடலுக்குள் பரவுகின்றன.
  • ஒருவர் சாய்ந்து படுத்திருக்கும் போது, ​​அவருக்குள் தம கூறு அதிக அளவில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, குளியல் தொட்டியில் சாய்ந்த நிலையில் ஒருவர் குளிக்கும் முறையானது, ஆன்மீக ரீதியாக எதிர்மறையான விளைவை அதிகரிக்கிறது.
  • குளிக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கொண்ட குளியல் திரவங்களும் எதிர்மறை விளைவை அதிகரிக்கின்றன.

குளியல் தொட்டியில் குளிப்பவருக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகள்:

  • குளியல் தொட்டியில் குளிப்பவரிடம் மாயாவி சக்தியும் கருப்பு சக்தியும் ஈர்க்கப்படுகின்றன. மாயாவி சக்தி தீய சக்திகளால் உருவாக்கப்பட்டு, பொருட்களை (விடயங்களை) போலியாக மனதிற்கு உகந்ததாக தோன்ற செய்கிறது. எனவே, குளியல் தொட்டியில் குளிக்கும்போது ஒருவர் இன்பமாக  உணர்ந்தாலும், அந்தச் செயல் ஆன்மீக ரீதியாக தீங்கு விளைவிக்கும். இந்த தீயசக்தி அந்த நபரைப் பாதித்து, மேலும் சுற்றியுள்ள சூழலையும் மாசுபடுத்துகிறது.
  • குளியல் தொட்டியில் தொடர்ந்து குளிப்பதால், ஒரு நபரைச் சுற்றியுள்ள கருப்புப் படலம் அதிகரித்து, ஆவிகள் அவரை ஆட்கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும்.
  • குளியல் தொட்டியில் குளிப்பது காலப்போக்கில் உடல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். மன அளவில், ஒரு நபர் நிலையற்ற எண்ணங்களையும் அதிகரித்த எரிச்சலையும் அனுபவிக்கலாம்.

4. குளியல் தொட்டியில் குளிப்பதால் ஏற்படும் ஆன்மீகத் தீமைகளை குறித்து நாம் என்ன செய்ய முடியும்?

முடிந்தவரை குளியல் தொட்டியில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக நின்று கொண்டே குளிக்கலாம், அல்லது இன்னும் சிறப்பாக, குளிக்கும் போது சம்மணமிட்டு உட்கார்ந்து குளிக்கலாம். குளியல் தொட்டியில் குளிப்பதால் ஏற்படும் ஆன்மீகத் தீமைகள் குறித்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம்.

குளியல் தொட்டியில் குளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால், நாம் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • குளியல் நீரில் சில தேக்கரண்டி கல்லுப்பு அல்லது சில துளிகள் கோமூத்திரத்தை சேர்க்கவும். கல்லுப்பு கிடைக்கவில்லை என்றால், கடலுப்பு படிகங்கள்/ மேசை உப்பைப் பயன்படுத்தலாம். ஆனால் நிவாரணத்தின் செயல்திறன்(கல்லுப்பு பயன்படுத்தப்படும்போது கிடைக்கும் நிவாரணத்தின் அளவோடு ஒப்பிடும் போது) 30% ஆகக் குறையும் .
  • குளித்த பிறகு சில குவளைகள் தண்ணீரில் கல்லுப்பு அல்லது கோமூத்திரைத்தைச் சேர்த்து நம் உடல் மீது ஊற்றலாம். இது ஓரளவுக்கு எதிர்மறை விளைவுகளைக் குறைக்க உதவும்.
  • குளிக்கும் போது தொடர்ந்து கடவுளின் நாமஜபம் செய்யவும். தொடர்ந்து நாமஜபம் செய்வது நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது மற்றும் தீயசக்தியின் தாக்குதல்களுக்கு ஆளாகாமல் இருக்க உதவுகிறது.
  • குளியல் தொட்டியில் குளிப்பதால் ஏற்படும் ஆன்மீகத் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். “இறைவா, இந்த குளியலின் போது தீயசக்திகளிடமிருந்து என்னைப் பாதுகாத்து என் ஆன்மீகப் பயிற்சி பாதிக்கப்படாமல் தயைகூர்ந்து பார்த்து கொள்ளவும்” என்றவாறு பிரார்த்தனை செய்யலாம்”

5. முடிவுரை

குளியல் தொட்டியில் குளிப்பது பரவலாக இன்பமானதாகவும், ஓய்வெடுக்க உதவுவதாகவும் கருதப்பட்டாலும், ஆன்மீக மட்டத்தில் அது நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் கஷ்டம் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. குளியல் தொட்டியில் குளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால், குளியல் தொட்டியில் குளிக்கும்போது குவியும் தீயசக்தியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆன்மீக ரீதியாக சுத்தப்படுத்தவும் சில நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.