பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?

சுருக்கம்

இக்கட்டுரையில் நாம் பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பது பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம். பிரார்த்தனையில் இரு வகைகள் உண்டு – உலக நன்மை பெறுவதற்கு மற்றும் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு. அதற்கேற்றாற்போல், இறைவனின் வெவ்வேறு அம்சங்கள் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கின்றன. நமக்கு தீங்கு விளைவிப்பதற்காக சில சமயங்களில் தீய சக்திகளும் நம் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றன என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் பிரார்த்தனை நிறைவேறுவதற்கான முக்கிய கூறு அவரின் ஆன்மீக நிலையாகும். உலக அமைதிக்காக வேண்டிக் கொள்வது உன்னதமான ஒரு செயலாக இருந்தாலும், பெரும்பாலும் அதை செய்யும் மக்கள் போதிய ஆன்மீக நிலையில் இல்லாததால் அவர்களின் இந்த பிரார்த்தனை நிறைவேறுவதில்லை. இதற்கு மாறாக, ஒரே ஒரு பிரார்த்தனை மூலமாக மாற்றத்தைக் கொண்டு வர மகான்களால் முடியும். ஆனால் அவர்கள் இறைவனின் இச்சையோடு ஒருங்கிணைந்துள்ளதாலும் தங்களுக்கென்று தனி இச்சைகள் இல்லாததாலும் பிரார்த்தனை செய்வதால் பயன் ஒன்றும் இல்லை என்று உணர்ந்துள்ளார்கள். இறுதியாக, பிரார்த்தனை செய்பவரின் தோற்றப்பாங்கும் ஒரு பிரார்த்தனை நிறைவேற பங்களிக்கிறது.

1. பிரார்த்தனையின் வழிமுறையைப் பற்றிய ஒரு அறிமுகம்

விலைமதிப்பற்ற பொருள் தொலைந்து போதல், தீர்க்க முடியாத கொடிய நோய்வாய்ப்படுதல், பெரிய நிதி நெருக்கடி போன்ற கஷ்டமான, தீர்க்க முடியாத சூழ்நிலைகளை அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும்போது மக்கள் இறைவனை அல்லது இறைவனின் அம்சமான ஒரு தெய்வத்தை பிரார்த்திக்கின்றனர். இந்த பிரார்த்தனைகள் பொருள் மற்றும் உலக எதிர்பார்ப்புகளைக் கொண்டவை ஆகும்.

ஆன்மீக முன்னேற்றத்தை வாழ்கையின் முக்கிய குறிக்கோளாக கொண்ட ஸாதகர்களும், கஷ்டமான சூழ்நிலைகளில் மட்டும் அல்லாமல், அன்றாட வாழ்விலும் வழக்கமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.  எனினும், அவர்களின் பிரார்த்தனைகள்  உலக எதிர்பார்புகளுடன் இல்லாமல், தங்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சியின் ஒரு அங்கமாக விளங்குகின்றது.

இரண்டு வகையான பிரார்த்தனைகளும் எவ்வாறு நிறைவேறுகின்றன என்பதை இந்த கட்டுரை விளக்குகின்றது.

இக்கட்டுரையை மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள படியுங்கள்:

  • பிரார்த்தனையின் பொருள் விளக்கம்
  • எதிர்பார்ப்புடன் கூடிய மற்றும் எதிர்பார்ப்பு இல்லாத பிரார்த்தனைகள் இடையே என்ன வித்தியாசம்?

வாழ்வில் ஒரு பிரச்சனை அல்லது கஷ்டம் ஏற்படும்போது, அதன் மூல காரணம் உடல்ரீதியானதாக, மனோரீதியானதாக அல்லது ஆன்மீக ரீதியானதாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம். எஸ்.எஸ்.ஆர்.எஃப். நடத்திய ஆராய்ச்சிப்படி, வாழ்வின் 80% கஷ்டங்களின் மூல காரணம் ஆன்மீக பரிமாணத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. வாழ்வின் பிரச்சனைகளின் ஆன்மீக காரணங்களில், விதி மற்றும் இறந்த முன்னோர் ஆகிய இரு விஷயங்களும் மிக முக்கியமான கூறுகள் ஆகும்.

2. பிரார்த்தனைகள் எவ்வாறு நிறைவேறுகின்றன? அதன் செயல்பாடு என்ன?

2.1 நம் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பவர் யார்?

  • பிரார்த்தனையின் வகைக்கு ஏற்றபடி யார் அதற்கு செவி சாய்க்கின்றார் என்பதை கீழ்க்கண்ட வரைபடம் காண்பிக்கின்றது. பொதுவாக, ஒருவரின் ஆன்மீக நிலைக்கேற்றபடி அவரின் பிரார்த்தனைகள் மாறும். உதாரணத்திற்கு, 30% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் பெரும்பாலும் உலக விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்வார். அதுவே 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் பெரும்பாலும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே பிரார்த்தனை செய்வார். அதற்கேற்றாற்போல், இந்த பிரார்த்தனைகளுக்கு பிரம்மாண்டத்தின் பல்வேறு சூட்சும சக்திகள் செவி சாய்க்கின்றன. தீய சக்திகளும் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கின்றன என்பது சுவாரஸ்யமான விஷயமாகும். ஒருவர் மற்றவருக்கு தீங்கு இழைக்க வேண்டி பிரார்த்தனை செய்யும்போது மற்றும்/அல்லது ஒருவரின் பிரார்த்தனை பலிக்குமாறு செய்து அவரை தன் வசப்படுத்த தீய சக்திகள் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கின்றன. உதாரணத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின்படி, மற்றொருவர் இறக்க வேண்டும் என பிரார்த்தனை செய்பவருக்கு நான்காம் நிலை பாதாளத்திலுள்ள சூட்சும தீய சக்தி உதவுகிறது. உலக நலன்களுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகளை சாதாரணமாக கீழ்நிலை தெய்வங்கள் மற்றும் கீழ்நிலை நல்ல சக்திகள் நிறைவேற்றுகின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் பிரார்த்தனைகளை உயர்நிலை தெய்வங்கள் அல்லது உயர்நிலை நல்ல சக்திகள் நிறைவேற்றுகின்றன.
பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?
  • வேலை வேண்டி அல்லது நோய் தீர என்பது போன்ற  எதிர்பார்ப்புடன் இறைவனிடம் அல்லது ஒரு குறிப்பிட்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யும்போது, ஏற்கனவே குறிப்பிட்டபடி, அந்த பிரார்த்தனைக்கு கீழ்நிலை தெய்வங்கள் அல்லது கீழ்நிலை நல்ல சக்திகள் செவி சாய்க்கின்றன. வேலை வேண்டி தீவிரமாக பிரார்த்தனை செய்யும் ஒருவரின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.  அவரின் விதிப்படி, அவர் ஐந்து வருடங்கள் வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்றிருந்தால், கீழ்நிலை நல்ல சக்திகள் அல்லது கீழ்நிலை தெய்வங்கள் அவரின் இந்த வேலையில்லா கால கட்டத்தை வாழ்வின் பிற்பகுதிக்குத் தள்ளி அவரின் பிரார்த்தனைக்கு செவி சாய்க்க முடியும். இவ்வாறு, அவர் கட்டாயம் வேலையில்லா கால கட்டத்தை கழித்தே ஆக வேண்டும். (ஏனென்றால், எது எப்படியிருந்தாலும் ஒருவரின் விதிப்பலனை ஒருவர் அனுபவித்தே ஆக வேண்டும். ஆன்மீக பயிற்சி செய்வதால் மட்டுமே அதை வெற்றி கொள்ள முடியும்.)
  • எப்பொழுது ஒரு ஸாதகரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக உலக சூழ்நிலை உள்ளதோ, அப்பொழுது சில சமயங்களில் உயர் நிலை தெய்வங்கள் அவருக்கு உதவலாம்.

2.2 பிரார்த்தனைகள் எவ்வாறு நிறைவேறுகின்றன?

  • ஒருவர் பிரார்த்தனை செய்யும்போது, இறைவனை தீவிரமாக நினைக்கிறார், இறைவனோடு ஆத்மார்த்தமாக உரையாடுகிறார், மனந்திறந்து பேசுகிறார். இதன் பிரதிபலிப்பாக, இறைவனும் அவருடன் நெருங்கிய உணர்வு கொள்கிறார்.
  • பிரபஞ்சத்திலுள்ள தெய்வ தத்துவங்களை (கடவுளின் அம்சங்கள்) செயல்படுத்தும் ஆற்றல் பிரார்த்தனைக்கு உண்டு. பிரார்த்தனையோடு சேர்ந்து நன்றி செலுத்தும்போது, சூட்சுமாதி சூட்சும அதிர்வலைகள் உருவாகின்றன. இந்த அதிர்வலைகள் தெய்வ தத்துவங்களை செயல்படுத்துவதுடன் தெய்வங்களைத் தொடுகின்றன; அதனால் தெய்வ தத்துவங்கள் விரைவில் செயல்பட ஆரம்பிக்கின்றன. தெய்வ தத்துவங்கள் (கடவுளின் அம்சங்கள்) செயல்படுவதால், பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. தெய்வங்கள் தங்களின் சங்கல்ப சக்தியைக் கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றன. தெய்வம் என்றால் என்ன? என்ற கட்டுரையைப் படிக்கவும்.

    நன்றியுடன் கூடிய பிரார்த்தனைகளின் சில உதாரணங்கள்:

    • இறைவா, தயை கூர்ந்து இந்த வேலை எனக்கு கிடைக்கட்டும்; எனக்கு இது மிகவும் தேவை. இந்த பிரார்த்தனையை செய்வதற்கான புத்தியை நீ எனக்கு தந்தருளியதற்கு என் நன்றியை ஏற்றுக் கொள்க.
    • இறைவா, இன்று நாள் முழுவதும் எல்லா காரியங்களையும் ஆன்மீக பயிற்சியாக செய்ய வேண்டும். இந்த பிரார்த்தனை செய்வதற்கான நல்ல புத்தியை எனக்குக் கொடுத்து, என் மூலமாக பிரார்த்தனையை செய்வித்ததற்காக உன் சரண கமலங்களில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ஒருவர் பிரார்த்தனை செய்யும்போது, அப்பிரார்த்தனை சூட்சும தெய்வீக அதிர்வலைகளை அவரை நோக்கி ஈர்ப்பதால், பிரார்த்தனை செய்பவரை சுற்றி இருக்கும் ரஜ-தம அதிர்வலைகள் நஷ்டமடைகின்றன. அதனால் அவரை சுற்றிய சூழல் மேலும் ஸாத்வீகமானதாக மாறுகிறது. சுற்றுப்புற சூழலில் உள்ள அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மை அதிகரிப்பதால், அவரின் எண்ணங்கள் குறைந்து, அவரும் அதிக ஸாத்வீகமானவராக மாறுகிறார். ஏனென்றால், மனம் வெளிப்புற சூழலால் பாதிக்கப்படுகிறது.
  • கோசம் என்பது சூட்சும உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் சுற்றி இருக்கும் நுண்ணிய சூட்சும ஆவரணம் ஆகும். இது அதிக சக்தி வாய்ந்தது. இதன்படி, பிராண தேஹம், மனோ தேஹம், காரண தேஹம் (புத்தி) மற்றும் மகாகாரண தேஹம் (சூட்சும அகம்பாவம்) ஆகிய ஒவ்வொன்றை சுற்றியும் தனித்தனியான கோசங்கள் உள்ளன.

    பிராண மற்றும் மனோ தேஹத்தைப் பற்றி மேலும் விவரங்களுக்கு, படியுங்கள் “நாம் எதனால் ஆக்கப்பட்டுள்ளோம்?”

  • பிரார்த்தனை செய்வதால், பிராண தேஹத்தின் கோசத்தை சுற்றி அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மையின் துகள்கள் அதிகரிக்கின்றன. நன்றி செலுத்தும்போது, மனோ தேஹத்தின் கோசத்தை சுற்றி அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மையின் துகள்கள் அதிகரிக்கின்றன. இதுபோல, பிரார்த்தனையுடன் கூடிய நன்றி செலுத்தலால், பிராண தேஹம் மற்றும் மனோ தேஹத்தின் கோசங்கள் ஆன்மீகத் தூய்மை பெறுகின்றன. இவ்வாறு ஆன்மீக தூய்மை கிடைப்பதால், பிராண தேஹம் மற்றும் மனோ தேஹத்தின் கோசத்திலுள்ள எண்ணப்பதிவுகள் நஷ்டமடைய ஆரம்பிக்கின்றன. எண்ணப்பதிவுகள் குறைவதால், தன்னைப் பற்றிய சிந்தனைகள் குறைந்து, உலக விஷயங்களைப் பற்றிய ஈர்ப்பும் குறைகிறது. இதன் பலனாக, இறைவனின் மேலுள்ள பற்றுதல் அதிகரித்து, இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்ற தாபமும் அதிகரிக்கிறது. மேலும், இரு கோசங்களும் தூய்மை அடைவதால், தீய சக்திகளால் அவ்வுடலுக்குள் நுழைய முடிவதில்லை. நாமஜபம் எவ்வாறு நம் மனதிலுள்ள எண்ணப்பதிவுகளை நீக்கி தூய்மைப்படுத்த உதவுகிறது என்ற கட்டுரையைப் படிக்கவும்.
  • நாம் பிரார்த்தனை செய்யும்போதே, கஷ்டங்களை தீர்க்க முடியாத நம் இயலாமையை ஒப்புக் கொள்கிறோம்; நம்மையே குறைத்து இவ்வாறு பார்க்கும்போது நம் அகம்பாவம் குறைகிறது. அகம்பாவம் குறைவதால், தாற்காலிகமாக நம் ஆன்மீக நிலை உயருகிறது. அதனால் நம் அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மையும் தாற்காலிகமாக அதிகமாகிறது. மேலும், நாம் நன்றி செலுத்தும்போது, அது நம்முள் பணிவை ஏற்படுத்துகின்றது; இது நம் ஆன்மீக நிலையின் மீது இன்னும் அதிகமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இறைவனுடனான நம் தொடர்பு அதிகமாகிறது. இவ்வாறு அதிகரிக்கும் நம் அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மையே, கஷ்டங்களை தாங்குவதற்கும் வெற்றி கொள்வதற்கும் உரிய சக்தியை அதிகரிக்கிறது.

3. நம் பிரார்த்தனைகள் எப்பொழுது நிறைவேறுகிறது?

நம் வாழ்வில், 65% நிகழ்வுகள் விதிப்படி நடக்கின்றன. விதிக்கப்பட்ட நிகழ்வுகளின் மீது நமக்கு கட்டுப்பாடு கிடையாது. விதியும் தன்னிச்சையான செயல்களும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

விதிப்படியான நிகழ்வுகள், நல்லவை கெட்டவை ஆகிய இரண்டுமே, நம் வாழ்வில் நடக்கலாம். விதிப்படியான கெட்ட நிகழ்வு என்பது நோய் அல்லது பொருந்தாத திருமணமாக இருக்கலாம். ஒரு சராசரி மனிதன் கஷ்டம் வரும்போதே இறைவனிடம் வேண்டிக் கொள்கிறான். கஷ்டங்களிலிருந்து விடுபட இறைவனை வேண்டுகிறான். இருந்தாலும், நம் பிரார்த்தனைகள் எப்பொழுதுமே நிறைவேறுவதில்லை. படிக்கவும்: வாழ்வின் கஷ்டங்களுக்கான ஆன்மீக மூல காரணமான விதி.

அப்படி என்றால், இதில் விதிமுறைதான் என்ன? எப்பொழுது பிரார்த்தனை ஒரு விதிக்கப்பட்ட கெட்ட நிகழ்வை நடக்காமல் செய்து அல்லது குறைந்தபட்சம் அது நம்மை பாதிக்காமல் நம்மைக் காக்கிறது?

பொதுவாக:

  • விதிக்கப்பட்ட நிகழ்வின் தீவிரத்தை விட பிரார்த்தனை அதிக பலம் வாய்ந்ததாக இருந்தால், பிரார்த்தனை நிறைவேறுகிறது.
  • விதிக்கப்பட்ட நிகழ்வின் தீவிரம் பிரார்த்தனையை விட அதிக பலம் வாய்ந்ததாக இருந்தால், பிரார்த்தனை ஓரளவே நிறைவேறுகிறது அல்லது நிறைவேறாமல் போகிறது.

4. ஒருவரின் பிரார்த்தனையின் பலனளிக்கும் திறனை எது நிர்ணயிக்கிறது?

கீழ்க்கண்ட கூறுகள் பிரார்த்தனையின் பலனளிக்கும் திறனை அதிகப்படுத்துகிறது :

  • பிரார்த்தனை செய்பவரின் ஆன்மீக நிலை – ஆன்மீக நிலை எந்த அளவு உயர்வாக உள்ளதோ, அந்த அளவு பிரார்த்தனையின் பலனளிக்கும் திறனும் அதிகமாகிறது.
  • பிரார்த்தனையின் தரம் – ஸாதகரின் பிரார்த்தனை இயந்திரத்தனமாக அல்லது உள்ளார்ந்த உணர்வுடன்  அல்லது ஆன்மீக உணர்வுடன் உள்ளதா என்பதைப் பொருத்தது.
  • யாருக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது (தனக்காக அல்லது பிறருக்காக) – நாம் மற்றவருக்காக பிரார்த்தனை செய்யும்போது, ஆன்மீக பலம் மிக அதிக அளவு தேவைப்படுகிறது. சமூகத்தின் அதிகபட்ச மக்களை ஒரு நிகழ்ச்சி பாதிக்கும் பட்சத்தில், நமக்கு வேண்டிய பலன் கிடைக்க அதிக அளவு ஆன்மீக பலம் வேண்டியுள்ளது. உயர் நிலை மகான்களால் மட்டுமே சமூகத்தில் மாறுதலைக் கொண்டு வர முடியும்.
  • அகம்பாவம் – குறைவான அகம்பாவம் பிரார்த்தனையின் பலனளிக்கும் திறனை அதிகப்படுத்துகிறது.
  • எந்த பிரார்த்தனை தோற்றப்பாங்கை (முத்திரையை) ஒருவர் உபயோகிக்கிறார்? மற்ற கூறுகள் பெரும்பான்மையினரிடம் குறைவாக இருப்பதால், இந்தக் கூறு, பெரும்பான்மையினருக்கு முக்கிய கூறாக உள்ளது.

4.1 ஒருவரின் ஆன்மீக நிலை மற்றும் பிரார்த்தனை

ஒருவரின் பிரார்த்தனையின் பலனளிக்கும் திறனை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக அவரின் ஆன்மீக நிலை விளங்குகிறது.

  • 60% ஆன்மீக நிலைக்கு மேலே உள்ள ஸாதகர்களுக்கு பிரார்த்தனை தேவைப்படுவதில்லை. அவர்கள், ‘எல்லாம் இறைவனின் இச்சைப்படி நடக்கின்றன’ என்ற ஆன்மீக உணர்வுடன் செயல்படுகின்றனர். வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இறையருளால் நடக்கிறது என்பதை அவர்கள் நேரிடையாக உணர்கின்றனர். அவர்களின் மனம் எப்பொழுதும் நன்றியுணர்வில் நிரம்பியுள்ளது. இந்நிலை அடைந்த பின் பிரார்த்தனை தேவைப்படுவதில்லை.
  • 30% ஆன்மீக நிலைக்கு கீழே உள்ளவர் செய்யும் பிரார்த்தனையில் சக்தி குறைவாக இருப்பதால், அதன் மூலமாக அவர்களுக்கு மானசீக அளவிலேயே பயன் கிடைக்கிறது. அவர்களின் பிரார்த்தனை தெய்வ தத்துவத்தை அடையாதிருப்பதன் காரணம் அவர்களை சுற்றியுள்ள அகம்பாவ ஆவரணம்தான்.
  • இதன் மூலம் பிரார்த்தனை என்பது 30-60% வரையுள்ள நபர்களுக்கே மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பது தெரிகிறது.

இக்கட்டுரையைப் படிக்கவும் இன்றைய உலக ஜனத்தொகையின் ஆன்மீக நிலையின் பாகுபாடு’.

அவ்வப்பொழுது, உலக அமைதி அல்லது உலக வெப்பமயமாதலை குறைப்பது போன்ற உன்னத காரணங்களுக்காக சிலர் அனைவரையும் கூட்டி பிரார்த்தனை செய்கின்றனர் என கேள்விப்படுகிறோம். உண்மையான பலன்களின் கண்ணோட்டத்தில், இது ஒரு மன அளவிலான முயற்சியே ஆகும். ஏனென்றால், மிகப் பெரிய உலக நிகழ்வுகள் எல்லாம் பலமான ஆன்மீக அடித்தளத்தைக் கொண்டவை. அதனால் அவற்றை மிக உன்னத நிலையில் இருக்கக்கூடிய மகான்களால் மட்டுமே தங்களின் ஆன்மீக முயற்சியைக் கொண்டு வெற்றி காண முடியும். சராசரி ஆன்மீக நிலையிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பெரிய உலக நிகழ்வு ஒன்றிற்காக ஒரே பிரார்த்தனை செய்தாலும் கூட, அது பல எறும்புகள் ஒன்றுகூடி ஒரு பாறையை உயர்த்த முயற்சிப்பதற்கு ஒப்பாகும்.

குறிப்பு: மகான்களால் உலகளாவிய மாற்றத்தை கொண்டு வர இயலும் என்னும்போது, அவர்கள் உலக அமைதியை வரவழைக்கவோ அல்லது உலக வெப்பமயமாதலை  குறைப்பதற்கோ முயற்சிக்கலாமே என சிலர் நினைக்கலாம். மகான்களிடம் உலக நிகழ்வுகளை மாற்றியமைக்கக் கூடிய ஆன்மீக சக்தி இருந்தாலும், இறைவனுக்கே எல்லாம் தெரியும் என்ற ஆன்மீக உணர்வு அவர்களிடம் உள்ளது. அதோடு, அவர்கள் இயல்பாகவே ‘பார்வையாளர் நிலையில்’ (சாக்ஷி உணர்வுடன்) இருப்பதால், அவர்கள் எவ்விதத்திலும் இறைவனின் திட்டத்தில் குறுக்கிடுவது இல்லை. இறைவனின் திட்டத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறார்கள். இறைவனின் திட்டப்படி, எல்லாமே தனி நபர்களின் மற்றும் சமூகத்தின் விதியைப் பொருத்தே நிகழ்கிறது என்பதை முழுவதும் உணர்ந்துள்ளனர். (விதிப்படியான நிகழ்வுகள் என்பவை நம்முடைய முந்தைய பிறவிகளின் மற்றும் இப்பிறவியின் செயல்பாடுகளின் விளைவாக நடக்கும் நம் வாழ்வின் நிகழ்வுகள் ஆகும்.)

5. பிரார்த்தனை செய்வதற்குரிய சரியான தோற்றப்பாங்கு என்ன மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக எஸ்.எஸ்.ஆர்.எஃப்., பிரார்த்தனை மூலம் அதிகபட்ச தெய்வீக சக்தியை பெறுவதற்குரிய தோற்றப்பாங்கை அல்லது முத்திரையை கண்டுபிடித்து நமக்கும் பரிந்துரைக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சித்திரங்கள் முத்திரையின் இரு நிலைகளையும், பிரார்த்தனை செய்யும்போது ஆன்மீக அளவில் ஏற்படும் நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றது.

5.1 பிரார்த்தனை முத்திரையின் முதல் நிலையின் விளக்கம்

பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?

பிரார்த்தனையின் முதல் நிலை என்பது இரு கைகளையும் கூப்பி, கட்டை விரல்களை புருவ மைய சக்கரத்தில் (ஆக்ஞா சக்கரத்தில்) லேசாக தொடும்படி வைத்து நமஸ்கரிப்பது ஆகும். இந்நிலையில் பிரார்த்தனை செய்ய ஆரம்பிப்பது சிறந்ததாகும்.

இந்த பிரார்த்தனை நிலையில் நாம் தலை வணங்கும்போது, ​​அது நம்மிடம் உள்ள சரணாகதி உணர்வை விழிப்படைய செய்கின்றது. இதன் பலனாக பிரபஞ்சத்திலுள்ள நமக்குத் தேவையான சூட்சும அதிர்வலைகள் செயல்பட ஆரம்பிக்கின்றன. இந்த தெய்வீக அதிர்வலைகள், கிரகிக்கும் கருவியாக செயல்படும் விரல் நுனிகளின் வழியாக நம்முள்ளே நுழைகின்றன. இந்த தெய்வீக அதிர்வலைகள் கட்டை விரல்களின் வழியாக புருவ மைய சக்கரத்திற்கு சென்று, நம் உடலில் நுழைகின்றன. இதன் விளைவாக, நம்முள்ளே இருக்கும் நேர்மறை ஆன்மீக சக்தி அதிகரித்து, நம்மை லேசாக உணரச்செய்கின்றது அல்லது, நம் உடல்ரீதியான அல்லது மனோரீதியான கஷ்டங்களின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கொடுக்கின்றது.

5.2 பிரார்த்தனை முத்திரையின் இரண்டாம் நிலையின் விளக்கம்

பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?

பிரார்த்தனையை முடித்தவுடன், மேலே உள்ள சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சித்திரப்படி, இரண்டாவது முத்திரையை செய்ய வேண்டும்.  அதாவது, கைகளை உடனே கீழே இறக்காமல், மணிக்கட்டு மார்பில் படும்படி கைகளை மார்புக்கருகில் கூப்ப வேண்டும். இதன் மூலமாக, தெய்வ தத்துவத்தின் சைதன்யத்தை (தெய்வீக உணர்வு) முழுமையாக கிரகிக்கும் செயல்பாடு நடக்கிறது. ஆரம்பத்தில் கைவிரல்களின் வழியாக உள்ளே நுழைந்த தெய்வ தத்துவத்தின் தெய்வீக உணர்வு, இப்பொழுது இதய சக்கரத்தின் (அநாஹத சக்கரம்) ஸ்தானமான மார்புப் பகுதியில் பரவுகிறது. புருவ மைய சக்கரத்தைப் போலவே, இதய சக்கரமும் ஸாத்வீக அதிர்வலைகளை கிரகித்துக்  கொள்கிறது. மணிக்கட்டை மார்புப் பகுதியில் வைப்பதால், இதய சக்கரம் செயல்படத் துவங்கி, அதிக ஸாத்வீக அதிர்வலைகளை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. இதய சக்கரம் விழிப்படைவதால், ஒரு ஸாதகரின் ஆன்மீக உணர்வும் பக்தியும் விழிப்படைகிறது.

பிரார்த்தனை முத்திரையுடன் கூடிய இந்நிலையில் ஒருவர், மனதை உள்முகப்படுத்தி, இறைவனின் சந்நிதியில் உள்ள உணர்வை அனுபவபூர்வமாக உணர வேண்டும்.

5.2.1 எவ்வாறு பிரார்த்தனை செய்வது – பிரார்த்தனையின் போது தலை வணங்குவதன் சரியான தோற்றப்பாங்கு

பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?
பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?

பிரார்த்தனை செய்யும் சரியான வழிமுறை பற்றிய சில குறிப்புகள்:

  • உடல் நிமிர்ந்து இல்லாமல் வளைந்து இருக்க வேண்டும்.
  • விரல்கள் நெற்றிக்கு இணையாக நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். விரல்கள் விறைப்பாக இல்லாமல், தளர்ந்து இருக்க வேண்டும்.
  • விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து இருக்க வேண்டும் – விரித்து இருக்கக் கூடாது.
  • கட்டைவிரல்கள் லேசாக புருவ மத்தியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
  • உள்ளங்கைகளுக்கு இடையே மட்டும் சிறிது இடைவெளி விட்டு, இரு கைகளும் ஒன்றோடொன்று லேசாக அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். 50% ஆன்மீக நிலைக்கு மேலே உள்ள ஸாதகர்களுக்கு, உள்ளங்கைகளுக்கு இடையே இடைவெளி தேவையில்லை.

5.3 ஆன்மீக உணர்வுடன் பிரார்த்தனை செய்யும்போது

50% ஆன்மீக நிலையிலுள்ள ஒருவர் ஆன்மீக உணர்வுடன் பிரார்த்தனை செய்யும்போது என்ன நடக்கிறது என்பதை விவரிக்கும் சூட்சும ஞானத்தை அடிப்படையாக கொண்ட வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், அருகில் உள்ளவர்களுக்கும் அவருக்கு கிடைக்கும் தெய்வீக உணர்வின் பலன் கிடைக்கிறது. (தெய்வீக உணர்வின் 5% அதிர்வலைகள் உடலுக்கு வெளியே வெளிப்படுவதைக் காட்டும் சூட்சும வரைபடத்தின் பகுதியைப் பார்க்கவும்.) அதனால்தான் ஒருவர் ஆன்மீக உணர்வுடன் பிரார்த்தனை செய்யும்போது, சுற்றியிருப்பவரிடமும் ஆன்மீக உணர்வு விழிப்படைகிறது.

பிரார்த்தனை எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு பிரார்த்தனை செய்வது?

5.4 நாம் ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதும் இந்நிலையில் இருக்க வேண்டுமா?

ஒருவர் உயர்ந்த ஆன்மீக நிலையில் இருக்கும்போது (50% மேலே), நேரடியாக பிரம்மரந்திரம் (உச்சந்தலை) வழியாக சூட்சும தெய்வீக அதிர்வலைகளை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. குண்டலினி யோகத்தின்படி, பிரம்மரந்திரம் என்பது விச்வமனம்  மற்றும் விச்வபுத்தியை அணுகக்கூடிய, கிரீட  சக்கரத்திற்கு (சஹஸ்ரார சக்கரம்) மேலே உள்ள சூட்சும துவாரமாகும். தாழ்ந்த ஆன்மீக நிலை உள்ளவருக்கு இந்த சூட்சும துவாரம் மூடியிருக்கும். பிரம்மரந்திரம் திறப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது குறைந்த அகம்பாவமாகும். ஆன்மீக முன்னேற்றத்தின் இந்நிலையில் இருக்கும்போது, மேலே விளக்கப்பட்டுள்ள பிரார்த்தனை முத்திரையின் அவசியம் குறைகிறது.

எனினும், 50% முதல் 80% வரை ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர், அவரின் பிரார்த்தனையுடன் முத்திரையையும் சேர்த்து செய்யும்போது, அவருக்கு கூடுதல் தெய்வீக உணர்வு கிடைக்கிறது. 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவருக்கு, 30% கூடுதல் பயன் கிடைக்கிறது. ஆன்மீக நிலை உயர உயர, அதே விகிதாசாரத்தில் பயன் குறைகிறது.

பெரும்பான்மையினர் உயர் ஆன்மீக நிலையில் இல்லாததால், அவர்களால் பிரம்மரந்திரத்தின் மூலமாக தெய்வீக அதிர்வலைகளை  கிரகிக்க முடிவதில்லை. எனினும், பெரும்பான்மை மக்களால் (30–60% ஆன்மீக நிலை கொண்டவர்கள்), அவர்களின் விரல்நுனிகளின் மூலமாக (மிகவும் குறைந்த அளவிற்கு என்றாலும்) சூட்சும அதிர்வலைகளை கிரகிக்க முடிகிறது. ஏனென்றால், நம் விரல் நுனிகள், சூட்சும சக்தியை கிரகிக்கும் அல்லது வெளியிடும் நுண்ணிய உணர்ச்சி கொண்டவை. ஆன்மீகத்தில் இந்நிலையில் இருப்பவர்கள், பிரார்த்தனை முத்திரையுடன் பிரார்த்தனை செய்வது சிறந்தது. மற்ற எல்லா கூறுகளும் மாறாது இருக்கும் பட்சத்தில், பிரார்த்தனையை முத்திரையுடன் செய்யும்போது அதன் பலன், பிரார்த்தனையை முத்திரையுடன் செய்யாததைக் காட்டிலும் 20% அதிகரிக்கிறது.

5.5 பிரார்த்தனை நிலைகளின் பலனளிக்கும் திறன்களின் ஒரு ஒப்பீடு

பிரார்த்தனை செய்யும்போது நாம் கைகளை பல்வேறு நிலையில் வைக்கிறோம். பிரார்த்தனையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கை முத்திரைகளைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது, அவற்றின் திறன் பற்றிய கீழ்க்கண்ட விளக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன:

பிரார்த்தனையின் பல்வேறு நிலைகளின் செயல்திறன்

பிரார்த்தனையின் நிலை ஆன்மீக பயன்களின் ஒரு ஒப்பீடு1 கிடைக்கக்கூடிய நல்ல சக்தியின் நிலை2 கிடைக்கக்கூடிய நல்ல சக்தியின் அளவு3 தீய சக்திகளின் குறுக்கீடு4
8% உயர்நிலை 30% 2%
4% மத்தியநிலை 10% 4%
2% கீழ்நிலை 5% 5%
2% கீழ்நிலை 5% 5%

அடிக்குறிப்புகள்:

  1. 100% என்பது முழு ஆன்மீக பயனை அடைவது, அதாவது இறைவனுடன் ஒன்றிணைவது.
  2. வெளிப்பட்ட தெய்வ தத்துவத்தின் நிலை, அதாவது உயர்நிலை, மத்தியநிலை மற்றும் கீழ்நிலை தெய்வம்.
  3. கிடைக்கப் பெறும் தெய்வ தத்துவத்தின் சதவிகிதம்.
  4. தீய சக்தி, ஒரு ஸாதகரின் நம்பிக்கையைக் குலைக்க, அவரின் பிரார்த்தனையில் குறிக்கிடுவதை இது காண்பிக்கிறது. தீய சக்திகள் பிரார்த்தனை நிறைவேறக் கூடாது என்ற நோக்கத்தில் அதில் குறுக்கிட்டு, பிரார்த்தனை செய்பவரின் நம்பிக்கையைக் குலைக்கிறது.

ஒரே பிரார்த்தனையை பல்வேறு முத்திரைகளை உபயோகித்து செய்து, பிரார்த்தனையின் சூட்சும பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள்.

சிலர், மற்றவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்வர். இதுவும் ஆன்மீக ரீதியில் தவறானது. ஏனென்றால், மற்றவர் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த கருப்பு சக்தி நம்மையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

‘உலகின் ஜனத்தொகையில் எவ்வளவு நபர்கள் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்?’ என்ற கட்டுரையைப் படிக்கவும்.

6. பிரார்த்தனை வழிமுறையின் சில முக்கிய குறிப்புகள்

    • ஒருவர் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்கின்றாரா அல்லது உலக நன்மைகளைப் பெற பிரார்த்தனை செய்கின்றாரா என்பது அவரது ஆன்மீக நிலையைப் பொருத்தது. பிரார்த்தனைக்கு ஏற்ப, உயர்நிலை தெய்வங்கள் அல்லது கீழ்நிலை தெய்வங்கள் ஒருவரின் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கின்றன.
    • ஒருவர் ஆன்மீக உணர்வுடன் பிரார்த்தனை செய்யும்போது, அது பிரார்த்தனையின் பலனளிக்கும் திறனின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
    • எந்த முத்திரையை உபயோகிக்கின்றார் என்பதை பொருத்து, ஒருவருக்கு பிரார்த்தனையின் பலன் கிடைக்கிறது.
    • மற்ற விஷயங்கள் மாறாதிருக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட முத்திரையில் பிரார்த்தனை செய்வதால் ஒருவரின் பிரார்த்தனை நிறைவேறும் வாய்ப்பு 20% அதிகரிக்கிறது.
    • கீழ் ஆன்மீக நிலையில் உள்ளவர்கள், பெரும்பான்மை உலக மக்களை பாதிக்கும் விஷயங்களான உலக அமைதி, உலக வெப்பமயமாதல் குறைவது போன்றவற்றிற்காக செய்யும் பிரார்த்தனை எந்தப் பலனையும் கொடுப்பதில்லை.
    • ஒருவர் பிரார்த்தனையுடன் சேர்ந்து நன்றியையும் செலுத்தும்போது, அது பிரார்த்தனையின் பலனளிக்கும் திறனை அதிகரிக்கின்றது.