விலகல் முறையின் மூலம் நாமஜபம் ஆழ்மனதில் எவ்வாறு செயல்படுகிறது

ஆழ்மனதில் பதிவாகியுள்ள தவறான எண்ணங்களை நாமஜபம் செயல்பட்டு அழிக்கிறது. விலகல் முறை எனப்படும் இம்முறையினால்  நாமஜபத்தின் மூலம் நன்மை பெற உதவுகிறது.

விலகல் முறையின் மூலம் நாமஜபம் ஆழ்மனதில் எவ்வாறு செயல்படுகிறது

மேலே உள்ள படத்தில், வெளிமனதிற்கும் ஆழ்மனதிற்கும் இடையே ஒரு தடுப்பு சுவர் இருப்பதைக் காணலாம். இது சில சிறப்பு தன்மைகளை உடையது. ஆழ்மனதில் பூட்டி வைக்கப்பட்ட சில ரகசியங்களை வெளி மனம் அறிய இது அனுமதிப்பதில்லை. இதில் துளைகள் இருந்தாலும், இது ஒரு சமயத்தில் ஒரே ஒரு எண்ணத்தை மட்டுமே ஆழ்மனதில் இருந்து வெளிமனதிற்கு செல்ல அனுமதிக்கிறது. மிகவும் வலிமை உள்ள எண்ணமே இவ்வாறு வெளியேறுகிறது. எனவே ஆழ்மனதிலிருந்து பதிவுகள் வெளிமனத்தை திரும்பத் திரும்ப போய் இடித்துவிட்டு தான் எங்கிருந்து வந்ததோ அந்த தனது இருப்பிடமாகிய மையத்திற்கு திரும்பி வந்து அதை வலுப்படுத்துகிறது.

இருந்தாலும் நாமஜபமாகிய ஆன்மீக பயிற்சியினால் பக்தி மையம் மென்மேலும் வலுவடைய, அதுவே வலுவுள்ள எண்ணமாக வெளிமனத்தில் எழும்புகிறது. இறைவனின் நாமம் ஆழ்மனதிலிருந்து புறப்பட்டு வெளிமனத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும், நடுவில் உள்ள தடுப்பு சுவர் ஆழ்மனதிலிருந்து வெளிமனதிற்குள் வேறு எந்த எண்ணமும் நுழைய அனுமதிக்காமல் தடுத்து விடுகிறது. இவ்வாறாக வரைபடத்தில் காட்டப்பட்டது போல், எந்த எண்ணமும் ஆழ்மனதிலிருந்து வெளிமனதிற்கு செல்ல இயலாதவாறு தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.

இம்மாதிரியான செயல்பாட்டில் மற்ற பதிவுகளும் அதன் மையங்களும் மிகக் குறைந்த கவனத்தையே பெறுகின்றன. தொடர்ந்த கவனிப்பின்மையால் மற்ற மையங்களின் செயல்பாடு குறைந்து கொண்டே வந்து, இறுதியில் இல்லாமலேயே போய் விடுகிறது. எனவே இந்த பயனுள்ள முறை மூலமாகவும் பக்தி மையம் ஆழ்மனதை தூய்மைப்படுத்துகிறது.