ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் எவை

அட்டவணை

சுருக்கம் : ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் ஆன்மீக ஆராய்ச்சியில் ஒரு முக்கிய கருவியாகும். இது மருத்துவ அறிவியலில் உள்ள ஊடுகதிர்களுக்கு(எக்ஸ்ரே) இணையானது, சுயமாகப் பார்க்க முடியாதவர்களுக்கு சூட்சும உலகத்தைப் பற்றிய உண்மையான பார்வையை அவை வழங்குகின்றன. ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையானது (SSRF) தங்களது பல ஸாதகர்களது ஆறாம் அறிவை அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வை(ESP), சூட்சும உலகைப் பற்றிய நுண்ணறிவைப் பெறவும், மனிதகுலத்தின் நலனுக்காக அதைப் பதிவு செய்யவும் பயன்படுத்துகிறது. இது வாழ்க்கையின் பல்வேறு சிரமங்களுக்கு பின்னால் உள்ள ஆன்மீகக் காரணங்களை புரிந்து கொள்ள கண்டறியும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஆல் புதுமைப்படுத்தப்பட்ட பல்வேறு ஆன்மீக நிவாரண முறைகளின் விளைவை சரிபார்க்கவும் இவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் நாங்கள், சூட்சும ஞானத்தின் அடிப்படையிலான வரைபடங்களைப் பற்றிய விரிவான பார்வையை ( விளக்கத்தை) முன்வைக்கிறோம்.

1. ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் எவை?

 

எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF), \'சூட்சும உலகம்\' அல்லது \'ஆன்மீக பரிமாணம்\' என்ற வார்த்தையை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்ட உலகம் என்று வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது தேவதைகள், ஆவிகள், சுவர்க்கம் போன்ற கண்ணுக்கு தெரியாத உலகத்தைக் குறிக்கிறது, இதை நமது ஆறாவது அறிவின் மூலம் மட்டுமே உணர முடியும்.

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (SSRF) பல ஸாதகர்கள் மிகவும் வளர்ச்சியடைந்த ஆறாவது அறிவைக் கொண்டுள்ளனர். புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு (ESP), சூட்சும உணர் திறன், மனநலத்திறன், ஞானதிருஷ்டி, முன்னுணர்வு, உள்ளுணர்வு அனைத்தும் ஆறாவது அறிவுக்கு இணையானது ஆகும். அவர்களின் ஆறாவது அறிவால், சாதாரண மக்கள் பார்க்க முடியாததைக் காணவும், சூட்சும உலகத்தைப் பார்க்கவும் முடிகிறது. அவர்களின் ஆறாவது அறிவுத் திறனின் ஆழத்தைப் பொறுத்து அவர்கள் சூட்சும உலகத்தின் வெவ்வேறு கோணங்கள், பல்வேறு விவரங்களை உணர முடியும். மேலும் அவர்கள் நேரம் மற்றும் இடத்தின் தடையை கடக்க முடியும். அதாவது அவர்கள் உருவாக்கும், சூட்சும அறிவின் அடிப்படையில் வரையப்பட்ட வரைபடத்தின் நிகழ்வுகள் கடந்த காலத்தில் நிகழ்ந்ததாகவோ அல்லது உலகில் வேறு எங்கோ நடந்த நிகழ்வுகளாகவோ இருக்கலாம், அந்த இடம் அவர்கள் இது வரை செல்லாத இடமாக இருக்கலாம் அல்லது அந்த மக்களை,  அவர்களின் பின்னணியை எந்த வகையிலும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் கூட இருக்கலாம். சூட்சும பரிமாணத்தில் இந்த ஸாதகர்களால்,  உணரந்து வரையப்பட்ட வரைபடங்கள் மற்றும்  விளக்கங்கள் சூட்சுமமான அல்லது ஆன்மீக ஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்ட வரைபடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஸாதகர்கள் தங்களது ஆறாவது அறிவின் (புலனுக்கு அப்பாற்பட்ட ஆறாம் அறிவின்) உதவியுடன் சூட்சும உலகை பார்த்து வரையப்படும் இந்தப்படங்கள்

2. ஆன்மீக ஞானத்தின் அடிப்படையில் யார் இந்த வரைபடங்களை உருவாக்க முடியும்?

இவர்கள் சூட்சும கலைஞர்கள் அல்லது ஞானதிருஷ்டி உடைய கலைஞர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக 40% அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்மீக நிலை மற்றும் வளர்ச்சியடைந்த ஆறாவது அறிவு கொண்டவர்களால் சூட்சும பார்வை, உணர்வு,மற்றும் சூட்சும பரிமாணத்தை உணர முடியும். நாம் பௌதிக உலகத்தைப் பார்ப்பது போல் இவர்களால் உண்மையில் கண்ணுக்குத் தெரியாத சூட்சும உலகத்தைப் பார்க்க முடியும். இவர்களில் சிலர் திறமையான கலைஞர்களாக இருப்பதினால் தாங்கள் பார்த்ததை அப்படியே துல்லியமாக முன்வைக்கவும் முடியும்.

பின்வரும் காரணங்களால் வரைபடங்களின் துல்லியம் மேம்படுகிறது :

3. எஸ்.எஸ்.ஆர்.எஃப் இல் வெளியிடப்பட்ட ஆவிகள் பற்றிய ஆன்மீக ஞானத்தின் அடிப்படையிலான வரைபடங்கள் பற்றி

எஸ்.எஸ்.ஆர்.எஃப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் அட்டவணையில் ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள்  போன்றவை) பற்றி ஆன்மீக ஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்ட வரைபடங்களைப் பற்றிய சில விவரங்களை வழங்குகிறது. இது இரண்டு நடப்புகளை(சூழ்நிலைகளை) பற்றி கூறுகிறது.

 • ஏற்ற சூழ்நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ள ஸாதகர்களின் சூட்சும ஞானத்தின் அடிப்படையில் புவர்லோகம் அல்லது பாதாளத்தின் 1வது மற்றும் 2வது நிலைகளில் இருக்கும் கீழ் நிலை ஆவிகளைப் பற்றிய  வரைபடங்களை உருவாக்க விரும்புகிறோம். இந்த யுகத்திற்கு (காலத்திற்கு) மிக அதிகமாகத் தேவைப்படுவது துல்லியமான வரைபடமாகும். மேலும் ஸாதகர்களுக்கு பேய்கள் மூலம் குறைந்த பட்ச கஷ்டங்களுடனும் இருக்க வேண்டியதும்  அவசியமாகும்.
 • உண்மையான சூழ்நிலை தற்போதைய சூழ்நிலையில் சூட்சும பார்வை கொண்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஸாதகர்கள் சூட்சும ஞானத்தின் அடிப்படையில், பாதாளத்தின் 5-7வது நிலையில் இருக்கும் உயர் நிலை சூட்சும மந்திரவாதிகளின் (மாந்தீரிகர்கள்) வரைபடங்களை உருவாக்குகிறார்கள். இதன்மூலம், அவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அடிக்குறிப்புகள்: (சிவப்பு நிறத்தில் உள்ள எண்களுக்கு)

 1. நாம் பிரபஞ்சத்தில் 3 யுகங்களைக் கடந்து, இப்போது கலவரம் நிறைந்த யுகம் (கலியுகம்) எனப்படும் நான்காவது மற்றும் கடைசி யுகத்தில் இருக்கிறோம். இதில், பெரும்பாலான மக்கள் 20% ஆன்மீக நிலையில் உள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் சூட்சும பார்வை கொண்டவர்களின் திறன் குறைந்து காணப்படுவதால், அவர்களால் நேர்மறை ஆற்றல்களையும் தெய்வங்களையும் அதிகபட்சமாக 30% துல்லியமாக வரைய முடியும். மேலும் இன்றைய மக்கள், குறைந்த ஆன்மீக நிலையில் இருப்பதால்,30%க்கும் மேற்பட்ட துல்லியநிலையில் வரையப்பட்டு இருந்தாலும் கூட சூட்சும ஞானத்தின் அடிப்படையில் ஒரு வரைபடத்தைப் பார்ப்பதன் மூலம்,  பயனைப் பெற இயலாது. உதாரணமாக, ஒரு தெய்வத்தை 30% க்கு மேல் துல்லியமாக வரைந்தால், படம் அல்லது சிலையிலிருந்து வெளிப்படும் ஆற்றல்/தெய்வீக உணர்வை (சைதன்யம்) நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. சராசரியாக தெய்வங்களின் பெரும்பாலான வணிக ஓவியங்களால்  தெய்வத்தின் ஆற்றல்/தெய்வீக உணர்வை 1-2% மட்டுமே கிரகிக்க முடியும். நாம் துல்லியம் என இங்கே குறிப்பிடுவது அனைத்து நுணுக்கங்களையும் கிரகிக்கும் தெய்வம் அல்லது தீய சக்திகளின் சூட்சும திறனைக் குறிப்பதாகும். அவ்வாறு செய்யும்போது, ஒரு தெய்வத்தின் விஷயத்தில் தெய்வீக உணர்வையோ அல்லது பேய்களின் கருப்பு சக்தியையோ நாம் தாமாகவே அடைகிறோம்.

 2. சூட்சும ஞானத்தை கொண்டு வரையப்படும் தீய சக்திகளின் வரைபடங்களால் எற்படும் கஷ்டத்தைக் கட்டுப்படுத்த, அதன் துல்லியத்தை 8% ஆகக் கட்டுப்படுத்தியுள்ளோம். இந்த செயலானது நரகத்தின் ஆழமான பகுதிகளிலிருக்கும் அதிக சக்திவாய்ந்த ஆவிகளை  (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள்  போன்றவை) வரைவதற்கு மிகவும் பொருத்தமானதாகும், ஏனெனில் வரைபடத்தில் அவற்றின் 8% கருப்பு சக்தியை நாம் உள்ளார்ந்த முறையில் பெறுகிறோம். தீய சக்திகள் பற்றிய ஆன்மீக அறிவின் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியங்கள், எதிர்மறை தன்மையை அதிக அளவில் வெளியிடும், அதன் விளைவுகள் நம் வாசகர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட 8% துல்லியமுடைய ஒரு வரைபடம், ஆவியின் மொத்த பண்புகளின் அடிப்படையில் ஒரு உண்மையான உருவத்தை பிரதிபலிக்கிறது, அதாவது சூட்சும பார்வை கொண்ட மற்றொரு நபரும் அந்த ஆவியை பார்க்க நேர்ந்தால், வரைபடத்தில் உள்ளது போன்று, அதை அவரால் அடையாளம் காண முடியும். 8% துல்லியம் என்பதன் மூலம், ஆவியின் ஆன்மீக சக்தியில் 8% ஐப் பிடிக்கும் வகையில், ஆவி போலவே இருக்கும் ஒரு வரைபடத்தைக் குறிக்கிறோம். மீதமுள்ள 22% (அதிகபட்சமாக அடையக்கூடிய 30%) நாம் ஒவ்வொரு வண்ண சாயலையும் ஆவியின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கைப்பற்றினால் மட்டுமே சாத்தியமாகும். சூட்சுமமான உலகத்தைப் பார்க்கும் திறனே இல்லாத ஒரு சராசரி மனிதனுடன் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால்  8% என்பது எந்த வகையிலும் சிறிய அளவு அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 3. 100% என்பது மரணத்திற்குச் சமமாகும்.

 4. பாதாளத்தின் முதல் இரண்டு பகுதிகளில் வசிக்கும் ஆவிகள் சூட்சுமமானவை. ஒருவர் பாதாளத்தின் ஒன்றாவது பகுதியிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும்போது அவை இன்னும் சூட்சுமமாகின்றன. 5 முதல் 7 வரை உள்ள பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சூட்சுமமான மற்றும் ஒப்பீட்டளவில் நன்கு வளர்ந்த ஆறாவது அறிவு உள்ளவர்களுக்கு கூட புலப்படமாட்டார்கள். எனவே அவற்றைக் கண்டறிவது மற்றும் துல்லியமாக வரைவது மிகவும் கடினம். அவற்றை திறன்மிக்க ஆறாவது அறிவைக் கொண்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) இன் ஸாதகர்கள் வரைந்து வருகின்றனர், ஏனெனில் தற்போது பாதாளத்தின் 5 முதல் 7 வது பகுதிகளில் உள்ள உயர்நிலை ஆவிகள் எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) இன் ஸாதகர்களைத் துன்புறுத்துகின்றன. அதிக சக்தி வாய்ந்த ஆவிகளின் தாக்குதலுக்கான முக்கிய காரணமாவது  எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) இன் ஸாதகர்களின் ஆன்மீகம் மற்றும் அறிவின் தேடலும் எதிர்ப்பதே ஆகும்

4. பாதுகாப்பு எல்லை

தீயசக்திகளை சித்தரிக்கும் ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒவ்வொரு வரைபடத்தையும் சுற்றி ஒரு பாதுகாப்பு எல்லையை நாங்கள் வழங்கியிருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம் இது ஒருசில இடங்களில் முழு கட்டுரையை சுற்றியும் இருக்கும். இந்த பாதுகாப்பு எல்லையானது ஒவ்வொரு பக்கத்திலும் மேம்பட்ட ஆறாவது அறிவின் மூலம் பெறப்பட்ட கடவுளின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் பெயரைக் கொண்டு இருக்கும். வரைபடம் மூலமாகவோ அல்லது தீய சக்திகளை பற்றி எழுதிய கட்டுரை மூலமாகவோ வெளியிடப்படும் தீங்கு விளைவிக்கும் சூட்சும அதிர்வலைகளை எதிர்கொள்வதற்காக நாம் இந்த பாதுகாப்பு எல்லையைப் பயன்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் எங்களது வாசகர்கள் இந்த சூட்சும தீய அதிர்வலைகளில் இருந்து  பாதுகாக்கப்படுகிறார்கள்.

எல்லையில் பயன்படுத்தப்படும் தெய்வத்தின் பெயருக்கு ஏற்ப எல்லையின்(கோட்டின்) நிறம் மாறுபடும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். இதற்குக் காரணம், ஆன்மீகப் பரிமாணத்தில் ஒவ்வொரு தெய்வமும் (கடவுளின் அம்சமும்) ஒரு குறிப்பிட்ட நிறத்தை பிரதிபலிப்பதை ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் கண்டறிந்துள்ளோம். எல்லையில்(எல்லை கோட்டிற்கு) இதே நிறத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கடவுளின் தெய்வீக பாதுகாப்பு ஆற்றலை ஈர்க்கும் எல்லையின் திறனை அதிகரிக்கிறோம்.

இந்த பாதுகாப்பு எல்லைகளில் சூட்சும பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.

5. ஆன்மீக ஞானத்தின் அடிப்படையில் வரைபடங்களில் உள்ள உண்மையின் சதவீதத்தை எது தீர்மானிக்கிறது?

உண்மையின் விழுக்காடு மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களும் தெளிவாகவும், சத்தியக்கூற்றுடன் விவரிக்கப்படும்போது சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரைபடத்தின் ஒட்டுமொத்த வாசிப்பு அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரைபடத்தில் சித்தரிக்கப்பட்ட நபரின் உண்மையான பெயரை மறைப்பதன் மூலம்   கூட அதில் உள்ள சத்தியக்கூறுகள் குறைக்கப்படுகின்றது.

  ஒரு சூட்சும கலைஞரின் விளக்கப்படத்தின் துல்லியத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளின் முழுமையான விபரம் பின்வருமாறு.

தவறான சூட்சும வரைபடங்களுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?
1. ஆவிகளால் உருவாக்கப்பட்ட மாயைகள்/மாயத்தோற்றங்கள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) 30%
2. ஆவிகளால் உருவத்திலும் ஆன்மீக சக்தியிலும் எற்படும் மாற்றம் 10%
3. கற்பனை 10%
4. ஆவிகளினால் ஏற்படுத்தப்படும் கஷ்டத்தினால் வரைய இயலாமை 10%
5. கஷ்டங்களை கொடுக்கும் உண்மையான ஆவியின் படமா அல்லது உயர்ந்த ஆவிகளின் உத்தரவின்படி செயல்படும்  நடுவிலுள்ளவரின் படமா என்பது பற்றிய குழப்பம் 10%
6. காலம் மற்றும் சந்திரனின் அமைப்பு(அமாவாசை, பெளர்ணமி) போன்றவை 10%
7. உளவியல் நிலை 5%
8. உடல் நிலை 3%
9. மற்றவை 12%
குறிப்பு: 100%

மேலே உள்ள அட்டவணையில் இருந்து சூட்சும பரிணாமத்தில் துல்லியமான வரைபடங்களை உருவாக்குவதற்குகான பல காரணிகளை நாம் காணலாம்.

சூட்சும லோகங்களிருக்கும் ஆவி வழிகாட்டிகள் அல்லது தேவதைகளை வரையும்  சூட்சும கலைஞர்களை (தெளிவான கலைஞர்கள்)  நாம் அடிக்கடி சந்திக்கிறோம். கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளிலும், இந்த வரைபடங்கள் சூட்சும – கலைஞர்களுக்கு ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) (தெளிவான கலைஞர்கள்) வழங்கப்படும் தவறான படங்களேயாகும். அவர்கள் ஆன்மீக ரீதியில் பரிணாம வளர்ச்சியடையாததாலும், தகுந்த வழிகாட்டி இல்லாததாலும்,ஆன்மீக வலிமை கொண்ட ஆவிகளால் அடிக்கடி தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தேவதையின் ஓவியம் தங்களிடம் இருப்பதாக நினைக்கும் அவர் உண்மையில் பாதாளத்தின் பகுதியிலிருக்கும் ஒரு ஆவியை வரைந்துள்ளார். வீட்டிற்கு எடுத்துச் செல்லும்போது இந்த ஓவியம் ஒரு ஆவிக்கு கருப்பு சக்தியை வெளியிடுவதற்கான ஒரு வழியாக மாறும்.

6. ஆன்மீக அறிவின் அடிப்படையில் வரைபடங்களை எவ்வாறு சரிபார்க்கலாம்?

 • ஆறாவது அறிவைக் கொண்ட (ESP) ஸாதகர்களால் உடனடியாக சரிபார்க்கக்கூடிய பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. உதாரணமாக:
  • ஒரு புத்தகத்திலிருந்து தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தை அதன் எண்ணை பார்க்காமலே அடையாளம் காணுதல்.
  • விளையாடும் சீட்டுக் கட்டுகளிலிருந்து தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டையை அடையாளம் காணுதல்.
  • தெரியாத நபரின் வீட்டின் விவரங்களை விவரித்தல்.
  • தகனம் செய்யப்பட்ட ஒரு நபரின் இறுதிச் சடங்கின் சாம்பலைப் பார்த்து அவரின் வாழ்க்கையை பற்றி விவரித்தல்.
 • இது போன்ற சுமார் 300 கேள்விகளுக்கான பதில்களை சரிபார்த்தபோது 90% மிக சரியாக (துல்லியமாக) இருப்பது கண்டறியப்பட்டது. சரிபார்க்கக்கூடிய பதில்கள் துல்லியமாக இருந்ததால், சரிபார்க்க முடியாத பதில்களையும் நம்பத் தொடங்கினோம்.
 • பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஸாதகர்கள் ஆறாவது அறிவின் மூலம் விவரங்களை தனித்தனியாக பெற்ற போதும் அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டது.  உதாரணமாக, ஆவி பிடித்த ஒருவருக்கு ஆன்மீக நிவாரண முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்போது சூட்சும பரிமாணத்தில் சரியாக என்ன நடக்கிறது’ என்பது பற்றிய விவரங்கள் வெவ்வேறு ஸாதகர்கள் அளித்த போதும் அவை ஒரே மாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டது.
 • மேலும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே  அவர்கள் அவரது மிகவும் வளர்ந்த ஆறாவது அறிவின் (ESP) மூலம் அனைத்து ஸாதகர்களாலும் தெரிவிக்கப்பட்ட அனைத்து கண்டுபிடிப்புகளையும்  சரிபார்த்து இருக்கிறார்.

7. எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஸாதகர்களின் ஆன்மீக அறிவை அடிப்படையாகக் கொண்ட (வரைந்த) வரைபடங்களின் சில முக்கிய அம்சங்கள்

  சூட்சும பார்வை கொண்ட பெரும்பாலான சூட்சும கலைஞர்கள் (தெளிவான கலைஞர்கள்) கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உருவங்களைப் பார்க்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சூட்சும  பரிமாணத்தின் மொத்த பகுதியை மட்டுமே அவர்களால் உணர முடிகிறது. உதாரணமாக, புவர் லோகத்தில் இருக்கும் ஆவி எப்படி இருக்கும்? மிகவும் சூட்சுமமான பாதாளத்தின் ஆழமான பகுதிகளில் இருக்கும் ஆவிகளைப் பார்க்கும் சூட்சும அல்லது தெளிவான திறன் அவர்களுக்கு எட்டாததாக இருக்கும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஸாதகர்கள் சூட்சும பரிமாணத்தை மிக நுணுக்கமான விவரங்கள் மற்றும் வண்ணங்களில் உணரும் திறனைப் பெற்றுள்ளனர். அந்த குறிப்பிட்ட தருணத்தில் ஆவிகள்  என்ன செய்கின்றன, ஏன் செய்கின்றன, மேலும் யாருடைய உத்தரவின் பேரில் அதைச் செய்கின்றன, அதன் செயல்பாட்டின் பின்னால் உள்ள விளைவுகள் எனன என்பது போன்ற ஆழமான பரிமாணங்களையும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) ஸாதகர்களால் உணர முடிகிறது.

 • எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர்களில் ஒருவரான அனுராதா வடேகர் அவர்கள், தனக்குத் தெரியாத ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் அறிகுறிகளை விவரித்தார். அந்த நபரை நேர்காணல் செய்தபோது, அறிகுறிகள் 80% அளவிற்கு பொருந்தின. அனுராதா அவர்கள் தனது ஆறாவது அறிவின் மூலம் தெரிந்து கொண்ட இந்த உண்மைகளை வெளிக்கொணர ஒரு மனநல மருத்துவருக்கு பல மணிநேரம் தேவைப்பட்டிருக்கலாம்.
 • எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் மற்றொரு ஸாதகரான, பூஜ்ய யோயா வாலே அவர்கள், சூட்சும ஞானத்தின் அடிப்படையில் உணருபவற்றை பகுதிகளாக வரைவார், உதாரணமாக முதலில் கண்கள், பின்னர் கைகால்கள் முதலியன,பிறகு அவற்றை தொகுத்து முழு வரைபடத்தை உருவாக்குவார்.

காணும் அனைத்தும் சூட்சும பரிமாணத்தில் தோன்றுவது அல்ல. உதாரணமாக, ஒரு சூட்சும-கலைஞர் ஒரு ஆவி வழிகாட்டியின் தரிசனத்தைப் பெறுவதாக நினைத்தால், அது அவர்களுக்கு தவறான உருவத்தை வழங்கும் ஒரு ஆவியாக கூட இருக்கலாம். சூட்சும பரிமாணத்தில் ஒரு ஆவி, உயர் நிலையிலுள்ள மற்றொரு ஆவி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. பல நிலைகளில் கட்டுப்பாடு இருப்பது மிகவும் பொதுவானது. கீழ்நிலை ஆவிகளின் செயலுக்கு காரணமாக உள்ள பாதாளத்தின் 7வது பகுதியில் உள்ள சூனியக்காரனை வெற்றிகரமாக கண்டுபிடிக்க, ஒருவருக்கு ஆறாவது அறிவின் (ESP) உயர்ந்த நிலை ஞானம் தேவை.

எங்கள் ‘ஆறாவது அறிவுடன் அமானுஷ்ய செயல்பாட்டை உணரும் திறனின் ஆழம்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.