உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
அட்டவணை
1. ஆன்மீக நிவாரண முறைகள் அல்லது வகைகள்
சக்தியை செலுத்தும் வழிமுறை வேறுபடுவதால் நிவாரண முறைகள் அல்லது வகைகள் இரண்டு வகைப்படும். இந்த இரண்டு முறைகளிலும் நிவாரணமடைதல் கீழ்கண்டவாறு கொண்டு வரப்படுகிறது.
1. தீர்த்தம், விபூதி போன்ற உயிரற்ற பொருட்கள் கொண்டும், மற்றும்
2. மனிதர்கள் மூலமும்:
a. அ. பெரும்பாலும் நிவாரணம் அளிப்பவர் 50% ஆன்மீக நிலைக்கு மேல், ஆன்மீக கஷ்டங்கள் அற்றவராக இருக்க வேண்டும். அல்லது
b. ஆ. ஒரு மகான் (ஆன்மீக நிலையில் 70% மேல் இருப்பவர்) ஆக இருக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறையைப் பொறுத்து செயல்பாட்டின் முறையானது (அதாவது ஆற்றல் எங்ஙனம் வழிமுறைப்படுத்தப்படுகிறது) மாறுகிறது.இக்கட்டுரையில் ஆன்மீக ரீதியாக சக்தி ஏற்றப்பட்ட பொருட்கள் அல்லது கருவியைப் பயன்படுத்தி செய்யப்படும் நிவாரண முறையில் கவனம் செலுத்துவோம்.
2. நிவாரண முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்முறைகள்
மின்விளக்கை ஒளிரச் செய்யும் செயல்முறையுடன் நிவாரண முறைகளை ஒப்புமைப்படுத்தி நாங்கள் இங்கு விளக்கப் போகிறோம்.
- மின்சொடுக்கி(ஸ்விட்ச்) : ஒரு விளக்கை ஒளிரச் செய்வதற்கான முதல்படி பொருத்தமான மின்சொடுக்கியை(ஸ்விட்ச்) அழுத்துவதாகும். அதுபோல் ஆன்மீக நிவாரணமுறையில் பயன்படுத்தப்படும் கருவி அல்லது பொருட்களின் தேர்வை இது குறிக்கிறது.
- கம்பி : மின்னோட்டம் ஒரு கம்பியின் மூலமாக பாய்ந்து இறுதி வெளியீடாக ஒரு மின்விளக்கை ஒளிரச் செய்கிறது. எந்த மின்விளக்கை ஒளிர செய்யவேண்டுமோ,அதற்கான மின்சொடுக்கியை (ஸ்விட்ச்) நாம் அழுத்த வேண்டும். அதுபோல, ஆன்மீக நிவாரணத்தில் உள்ள பல்வேறு நிவாரண முறைகள் மூலம் பல்வேறு விளைவுகளின் வாயிலாக நல்ல சக்திகளின் நிலைகளை பலவாறாக ஏற்படுத்தலாம்.
- மின்விளக்கு : எல்லா சூழ்நிலைகளிலும் நிவாரணத்தின் இறுதி விளைவு(அதாவது இறுதியில் மின்விளக்கு ஒளிர்வது போல்) பஞ்ச பூத தத்துவகோட்பாடுகள் மூலம் ஒழுங்கமைக்கப்படுகிறது.
2.1 முதல் நிவாரண முறையின் செயல்முறை; உயிரற்ற பொருட்கள்
நிவாரணத்திற்கு பயன்படும் உயிரற்ற பொருட்களின் வகைகள் மற்றும் பரிபூரண பிரபஞ்ச தத்துவ கோட்பாடு மூலம் மேற்கொள்ளப்படும் நிவாரண முறைகளின் சில எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன. இங்கு, ஆன்மீக நிவாரணத்தின் அடிப்படை தத்துவம் பின்பற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தின் ஆன்மீக தூய்மையை அல்லது ஸாத்வீகத்தை அதிகப்படுத்துவதன் மூலம் ஒரு நபரை பாதிக்கும் தீயசக்திகளின் திறனைக் குறைக்கிறோம். அதிகரிப்பட்ட ஸாத்வீகத் தன்மை ஒன்று அல்லது அதற்கு இணையான பரிபூரண பிரபஞ்ச தத்துவத்தின் மூலம் நிவாரணத்தின் செயல்முறையை செயல்படுத்துகிறது.
நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் | நேர்மறை ஆன்மீக சக்திகள் (%) | அது செயல்படும் பரிபூரண பிரபஞ்ச தத்துவம் |
---|---|---|
பிராண நிவாரணத்தில் உபயோகிக்கப்படும் ஸ்படிகம் | 0.25% | நெருப்பு |
தாயத்துகள் | 2% | நெருப்பு |
கற்கள் | 2% | பூமி |
ஸ்படிகங்கள் | 2% | நெருப்பு |
மதம் சார்ந்த அடையாளங்கள் | 2% | பூமி |
விபூதி | 2% | நெருப்பு |
நித்யமல்லி ஊதுபத்தி | 2% | காற்று |
புனித தீர்த்தம்(புனித தீர்த்தம் + புனித விபூதி) | 2% | நீர்+நெருப்பு |
வண்ணங்கள் | 2% | நிறத்திற்கேற்ப மாறுபடுகிறது |
கற்பூரம் | 2% | காற்று |
எரியாத ஊதுபத்தி | 2% | பூமி+காற்று |
எரியும் ஊதுபத்தி | 3% | பூமி+காற்று |
இயற்கை வாசனை திரவியங்களிலிருந்து வரும் நறுமணம் | 3% | பூமி |
யந்திரங்கள்(குறிப்பிட்ட வரைப்படங்கள் 2) | 3% | நெருப்பு |
கோமூத்திரம் | 3% | நீர் |
நெய் தீபம் | 3% | நெருப்பு |
மகான்களால் வழங்கப்பட்ட புனித சடங்கு | 4% | நீர் |
ஒரு தெய்வத்துடன் தொடர்புடைய தூய புனித இடம்,அவதாரம், அல்லது உயரிய ஆன்மீக நிலையில் உள்ள மகான் சார்ந்த, நேர்மறை ஆற்றல் நிறைந்த புனித இடம். இது உளவியல் அடிப்படையில் அல்ல ஆனால் அங்கு உண்மையான நேர்மறை ஆன்மீக அதிர்வுகள் நிலைத்து இருக்கும் | 5% | தெய்வத்தை பொறுத்து |
90% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள ஒரு மகானின் கையெழுத்து | 8% | நெருப்பு |
90% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள ஒரு மகானின் குரல்பதிவு | 8% | ஆகாயம் |
90% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள ஒரு மகானின் இறுதி ஒய்வு இடம்(சமாதி) | 8% | ஆகாயம் |
ஆன்மீகத்தில் உயரிய நிலையில் உள்ள ஒரு மகானின் வழிகாட்டுதலின் கீழ்(ஒரு ஸாதகரால் வரையப்பட்ட) உயர் நிலை தெய்வத்தின் படம் | 10% | பக்தரின் தேவைக்கேற்ப பல்வேறு நிலைகளில் பரிபூரண தத்துவத்தின் மூலம் இந்த படங்கள் நிவாரணம் அளிக்கின்றன |
உதாரணமாக தீர்த்தத்தை எடுத்துக் கொள்வோம். தீர்த்தம் தெளிக்கப்பட்ட இடத்தில் நேர்மறை ஆன்மீக சக்தி 2% அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளது. பஞ்ச பூதங்கள் அல்லது பரிபூரண பிரபஞ்ச தத்துவம் மூலம் அந்த இடத்தில் நிவாரணம் ஏற்படுகிறது.
அடிக்குறிப்புகள் :
- ஆன்மீக நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து உயிரற்ற பொருட்களின் நேர்மறை ஆன்மீக சக்தியின் திறன் மாறுபடும்.1 முதல் 100 வரையிலான அளவுகோலில் எந்தவொரு உயிரற்ற பொருளுக்கும் அதன் ஆன்மீக சக்தி பூஜ்யம் (0) ஆகும். அதிகபட்சமாக உயிரற்ற பொருட்களின் நேர்மறை ஆன்மீக சக்தி ஆறு (6) ஆக இருக்கும். பொதுவாக உயிரற்ற பொருட்களில் காணப்படும் நேர்மறை ஆன்மீக சக்தியை விட கடைசி 4வரிசைகளில் உள்ள பொருட்களின் நேர்மறை ஆன்மீக சக்தியின் திறன் 8-10% உயர்ந்து காணப்படுகிறது.கூடுதலாக, மேலே உள்ள அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் +/- 2% வரை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு பிரிவு 2.2 பார்க்கவும்.
- ஆன்மீக நிவாரணத்துடன் தொடர்புடைய யந்திரம் என்பது நேர்மறை ஆன்மீக சக்தியை செலுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு வரைப்படமாகும்.
- இந்த பொருட்கள் உயிரினங்களுடன் தொடர்புடையவை இதனால் அவை நேர்மறையான ஆன்மீக சக்தியை ஈர்த்து, வெளிப்படுத்தும் திறன் கொண்டவையாகும்.
- கீழே குறிப்பிட்டுள்ளபடி அனைத்து நிலைகளும் சிறப்பாக இருப்பின் 10% நேர்மறை ஆன்மீக சக்தியை உருவாக்க முடியும் :
- அ. தெய்வத்தின் படம் அதிகபட்ச ஆன்மீக நேர்மறைத்தன்மையை ஈர்த்து வெளியிடுகிறது. இக் காலகட்டத்தில் ஒரு படத்தின் வழி ஈர்க்கக்கூடிய தெய்வ தத்துவத்தின் அதிகபட்ச சதவீகிதம் 30% ஆகும். இது மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்தில் உள்ள வரையும் திறனுள்ள ஸாதகர்களால் சாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக வணிக ரீதியாகக் கிடைக்கும் கடவுள் படத்திலுள்ள தெய்வ தத்துவத்தின் சதவீகிதம் 2-3% மட்டுமே ஆகும்.
- ஆ. ஸாத்வீகமான இடத்தில் இந்த படங்கள் வைக்கப்படுகின்றன.
- ஆன்மீக கஷ்டங்கள் அல்லாது அந்த ஸாதகர் ஆன்மீக உணர்வுடன் அந்த படங்களை வழிபடுவார்.
- மகான்கள் எழுதியிதைப் பொறுத்தும் அல்லது அவர்களால் பதிவு செய்யப்பட்ட ஒலி அமைப்பைப் (ஆடியோ) பொறுத்தும் நேர்மறைத்தன்மை 8% மேல் உயரக்கூடும். உதாரணத்திற்கு 90% ஆன்மீக நிலையில் உள்ள ஒரு மகான் ஒரு மந்திரத்தை() எழுதிய ஒரு காகிதத்துண்டுடன், (ஆன்மீகம் அல்லாத) ஒரு வாக்கியத்தை எழுதிய காகிதத்துடன் ஒப்பிடும் போது முதல் காகித்தின் நேர்மறைத்தன்மை 8% மேல் அதிகரித்து இருக்கும்.
2.2 ஆன்மீக நிவாரணத்திற்கு பயன்படும் கருவிகளின் சக்தியை பாதிக்கும் காரணிகள்
மேலே உள்ள அட்டவணையில் அடிக்குறிப்பு 1 இல், வரம்பு வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் +/-2 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஸ்படிகங்கள் 2% என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நடைமுறையில் ஸ்படிகங்களால் ஆன்மீக நிவாரணப்படுத்தும் கருவியாக உருவாக்கப்படும் ஆன்மீக நேர்மறைத்தன்மையின் அளவு 0 இல் இருந்து 4% ஆக(அதாவது 2% இல் இருந்து+/-2%) வரம்பு மாறப்படும். இந்த செயல்திறனில் உள்ள வேறுபாடு பல காரணங்களால் இருக்கலாம் :
- உபயோகிப்படும் ஸ்படிக வகை.
- அது பயன்படுத்தப்படும் நபர் மற்றும் அவரது ஆன்மீக கஷ்டங்கள். தீய கருப்பு சக்தி படலம் அதிகமாக இருந்தால் நேர்மறை சக்தி அதில் ஊடுருவ முடியாது.
- நிவாரணம் அளிப்பவரின் ஆன்மீக நிலை. ஆன்மீக ரீதியாக நேர்மறைத்தன்மையுடன் இருப்பவர்களால் நேர்மறையை அதிக அளவில் உள்வாங்க முடியும்.
- ஸ்படிகத்தை அந்த நபருக்கு கொடுத்தவர் யார் ?
- அமாவாசை அல்லது பெளர்ணமி நாட்களில் ஸ்படிகத்தை உபயோகப்படுத்தினால் அந்த காலக்கட்டத்தில் சுற்றுச்சூழலில் உள்ள பாதிப்புகள் காரணமாக அதன் நிவாரணத்திறனும் பாதிக்கப்படலாம்.
- எந்த ஒரு இடத்தில் அல்லது சூழலில் அது நிவாரணத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
இது போன்ற காரணிகளைப் பொறுத்தே நிவாரணமடையும் நேரம் சிலமணி நேரமாகவோ அல்லது சில மாதங்களாகவோ இருக்கலாம்.
ஆன்மீக நிவாரணத்திற்கு பயன்படும் கருவிகளாகக் கருதப்படும் சில பொருட்கள் தீயசக்திகளால் பாதிக்கப்படலாம். இது அதனது நிவாரண அளிக்கும் திறனை பாதிக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். களங்கமோ அல்லது கறையோ படிந்தவுடன் ஆன்மீக நிவாரண த்திற்கு பயன்படும் கருவிகள் தீயசக்திகளை வெளியிடலாம். ஒருவரது ஆறாம் அறிவின் மூலம் ஆன்மீக அதிர்வுகளை அறியும் திறன் இருந்தால் இதனை புரிந்து கொள்ளலாம்.
2.3 நிவாரணத்திற்கு பயன்படும் கருவியாக உப்பு நீர் நிவாரணம்
ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) உப்பு நீர் நிவாரணத்தை ஆன்மீக நிவாரணத்தின் தீர்வாகப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது. அப்படியிருந்தும் இதன் தீர்வு மேலே உள்ள பரிகாரங்களிலிருந்து வேறுபடுவதால் இதை மேலே உள்ள அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக மேலே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் ஆன்மீக நேர்மறை சக்தியை அதிகரிக்க உபயோகப்படுவது. இதற்கு மாறாக உப்பு நீர் நிவாரணமானது தீய சக்திகளை நீக்க பயன்படுத்தப்படுவதாகும். இது முழுமையாக பரிபூரண பிரபஞ்ச நீர் தத்துவம்(70%) மற்றும் பரிபூரண பிரபஞ்ச பூமி தத்துவம்(30%)நிலைகளில் செயல்படுவதாகும்.
3. முடிவுரை
- பொருட்களை பயன்படுத்தி செய்யும் ஆன்மீக நிவாரணம் பற்றிய எங்கள் கட்டுரையில், ஆன்மீக நிவாரணத்திற்கு பயன்படும் கருவிகள் அனைத்தையும் எங்ஙனம் பயன்படுத்துவது மற்றும் அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக விவரித்துள்ளோம்.’ஒரு நபர் நிவாரண பெறும் போது அந்த ஆன்மீக நிவாரண முறைகளின் பின்னால் உள்ள வழிமுறைகள்’ பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்வையிடவும்”
- ஆன்மீக நிவாரணத்திற்காக மேலே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும், ஆத்மார்ந்த பிரார்த்தனைகளைச் செய்வது, நமது ஆன்மீக உணர்வை அதிகரிக்க முயற்சிப்பது போன்ற செயல்கள் மூலம் நிவாரணிகளின் ஆற்றலை மேலும் அதிகரிக்கிறது.
- நமது செயல்கள், எண்ணங்கள் மற்றும் சுற்றுச்சூழலை ஸாத்வீகமாக வைத்திருப்பதுடன் தொடந்து ஆன்மீகப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஆன்மீக நிவாரணிகளின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.