ஆன்மீகநிவாரணத்திற்கான ஊதுபத்திகள்

ஆன்மீகநிவாரணத்திற்கான ஊதுபத்திகள்

“உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.”

1. ஆன்மீக நிவாரணத்திற்கு பயன்படும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை பற்றிய ஒரு அறிமுகம்

ஆன்மீக நிவாரணம் பற்றிய எங்களது கட்டுரையில், சில குறிப்பிட்ட வாசனைகளின் ( நறுமணங்கள்) மூலம்   எவ்வாறு ஆன்மீக நிவாரணம் பெறலாம் என்பதை விளக்கினோம். இந்த வாசனைகள் (நறுமணங்கள்) கடவுளின் குறிப்பிட்ட அம்சங்களை ஈர்த்து தெய்வீக உணர்வை (சைதன்யம்) உருவாக்குகின்றன. இந்த தெய்வீக உணர்வு ஆன்மீகத் தூய்மையை மேம்படுத்துகிறது மற்றும் தீயசக்திகளை எதிர்த்துப் போராடுகிறது.

ஆன்மீகஅறிவியல்ஆராய்ச்சி (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) அறக்கட்டளை, தனது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் குறிப்பிட்ட நறுமண வகை ஊதுபத்திகளை(SSRF ஊதுபத்திகள்) உருவாக்கியுள்ளது. அதனால் தான் எஸ். எஸ். ஆர்.எஃப் ஊதுபத்திகள்  ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நபரின் ஆன்மீக தூய்மையை அதிகரிக்கவும், தியானம் மற்றும் கடவுளின்  நாமத்தை ஜபிப்பது போன்ற ஆன்மீகபயிற்சிகளுக்கு உதவுவதற்கும், தீயசக்திகளை எதிர்த்துப்போராடுவதற்கும், ஏற்ற சிறந்த ஆன்மீக குணப்படுத்தும் கருவியாக உள்ளது.

சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சில நறுமணங்களை கீழேபட்டியலிட்டுள்ளோம். ஆன்மீக நிவாரணத்திற்கு உதவுவதற்காக இவற்றை எஸ்.எஸ்.ஆர்.எஃப் தயாரித்து உள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது தெய்வத்தின் அம்சத்தை ஈர்க்கிறது.. அவைகள் முறையே:

  • நித்யமல்லி
  • தாழம்பூ
  • சந்தனம்
  • குண்டுமல்லி
  • செண்பகம்
  • சம்பங்கி(நிலச்சம்பங்கி)
  • இயற்கை சாரம்

காலத்தின்  தேவைக்கு ஏற்ப, ஊதுபத்தியின் நறுமணத்தால் ஈர்க்கப்படும் கடவுள் அல்லது அவரது அம்சமானது காக்கும் அல்லது அழிக்கும் சக்தியை வெளிப்படுத்தும். உதாரணமாக,ஒருவர் நாமஜபம், தியானம் போன்ற ஆன்மீகப்பயிற்சிகளைச் செய்யும் போது,கஷ்டப்படுத்தம் தீயசக்திகளின்  தாக்கம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால், கடவுளின் காக்கும் சக்தி வெளிப்படும். அந்நேரத்தில் தீயசக்திகள் அவரைத் தாக்கும் போது  கடவுளின் அழிக்கும் சக்தி அவற்றை எதிர்த்துப்போராடுவதற்கு வெளிப்படும்.

கடைசியாக ஆனால் மிக முக்கியமாக, ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவிய பரம்பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களின் ஆசீர்வாதத்துடனும், ஸங்கல்பத்தினாலும் உருவானவை எஸ்.எஸ்.ஆர்.எஃப்ஊதுபத்திகள். எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளின்,இந்த சக்திவாய்ந்த சாராம்சமே,அதை ஆன்மீக நிவாரணியாக தனித்துவத்துடன் திகழச் செய்கிறது

2. எஸ்.எஸ்.ஆர்.எஃப் எவ்வாறு ஊதுபத்திகளின் ஆன்மீக நிவாரண ஆற்றலை பரிசோதிக்கிறது?

உத்தமமான ஆன்மீக நிவாரண திறன்களைக் கொண்ட குறிப்பிட்ட நறுமணங்களின் பெயர்கள் ஸாதகர்களின் அதிநுட்பமான ஆறாவது அறிவு மூலம் பெறப்படுகிறது.பின்னர் இந்த நறுமணங்கள் மற்றும் அவை ஒவ்வொன்றின் பல்வேறுவகைகளும் சோதிக்கப்படுகின்றன. எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் உயர்நிலை ஸாதகர்கள், தங்களின் அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் சூட்சுமநிலையில் இவற்றைப்பற்றி ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.  ஒவ்வொரு நறுமணத்தின் ஆன்மீக நிவாரண செயல்படுந்திறனும் (அதன் பலாபலனும்) பரிசோதிக்கப்படுகிறது.

அவர்களின் சூட்சும அனுபவங்கள் தனித்தனியாக குறிப்பெடுக்கப்பட்டு, தொகுக்கப்படுகின்றன. எல்லா நிலைகளிலும் தனிப்பட்ட  ஒவ்வோருவரின் அளவீடுகள் ஒத்துப்போகின்றன, ஆனால் அவர்களின் ஆழமான அனுபவத்தில் மட்டுமே வித்தியாசம் உள்ளது . பின்னர் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது. இவ்வாறு சரிபார்க்கப்பட்ட அளவீடுகள் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளில் உள்ள நறுமணப் பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட நறுமணத்தில் உள்ள பல்வேறு நுணுக்கங்களையும் முடிவு செய்யப்பயன்படுகின்றது.

மேலும் இதை, ஆவிகளால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் பரிசோதித்தோம். ஆவிகளால் பீடிக்கப்பட்டவரிகளிடமிருந்து, ஆவிகள் வெளிவரும்போது, ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்திகளின்  உந்துதலுக்கு உட்ப்படுத்தினோம். வெவ்வேறு வகை நறுமணங்களைக் கொண்ட பல்வேறு ஊதுபத்திகளின் தாக்கத்தையும், ஒரே நறுமணத்தின் பல்வேறு வகைகளின் செயல் திறனை கொண்டு பரிசோதித்தோம். எல்லா சந்தர்ப்பங்களிலும், சூட்சும ஞானத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நறுமணம் அல்லது குறிப்பிட்ட நறுமணத்தின் சில வகைகள் ஸாதகர்களிடமிருந்து வெளிப்படும் ஆவிகளை எதிர்த்து போராடுவதில் மிகவும் பயனுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

3. ஊதுபத்திகளின் செயல்பாட்டின் வழிமுறைகள் (செயல்வழிமுறைகள்)

ஆன்மீக நிவாரண கோட்பாடுகள் பற்றிய பகுதியைப் பார்க்கவும்.

எஸ்.எஸ்.ஆர்.எஃப்  ஊதுபத்திகள்  ஆன்மீக நிவாரணத்திற்கு  உதவும் ஒரு சுய உதவி கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.முன்பு குறிப்பிட்டது போல், இவற்றின் ஒவ்வொரு வகையில்  உள்ள குறிப்பிட்ட நறுமணம் கடவுளின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஈர்க்கிறது. குறிப்பிட்ட நறுமணத்தால் ஈர்க்கப்படும் கடவுளின் அம்சமானது அந்த தெய்வத்துடன் தொடர்புடைய தெய்வீக உணர்வுடன் இணை சேர்ந்தே இருப்பதால்,  தாமஸீக சூட்சும கூறுகள் குறைந்து  ஸாத்வீகம் அதிகரிக்கிறது.

சூட்சும ஞானத்தின் மூலம், ஒளிரூட்டப்பட்ட  எஸ். எஸ். ஆர். எஃப்  ஊதுபத்தியின் இந்த பின்வரு வரைபடமானது, ஆறாவது அறிவின்  அடிப்படையில் வரையப்பட்டுள்ளது.

சூட்சும பார்வையில், ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள்

3.1 பிரார்த்தனை மற்றும் நாமஜபத்துடன் ஒப்பிடுகையில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளின் நன்மைகள்

ஒப்பீடுஅனுகூலம் ( ஒப்பீடுநன்மை)

ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்தி, பிராத்தனைகள் மற்றும் நாமஜபத்தின் ஒப்பீடு பலன்கள் மேலே உள்ள  அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலோனோர்க்கு கடவுளின் தத்துவத்தை தூண்டுமளவுக்கு பிராத்தனைகள் மற்றும் நாமஜபம் செய்யும்திறன் (பக்குவம்) இல்லை. இதை எளிதாக்க, இடைப்பட்ட நிவாரணமாக ஊதுபத்திகள் செயல்படுகின்றன.

தங்களின் கவனத்திற்கு:

3.2 ஒரு தனி மனிதனிடம் ஏற்படும் விளைவு

தற்போதைய காலங்களில் தீயசக்திகளின் ஆற்றல்கள் அதிகரித்து,தனிமனிதன் மற்றும் மனிதகுலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘நல்லனவற்றிற்கும், தீயவற்றுக்கும் நடக்கும் போர் மற்றும் ‘மூன்றாவது உலகப்போர் கணிப்புகள்’  என்ற கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளோம்.

ஆவிகள்மற்றும்மறைந்தமுன்னோர்கள்நம்மைச்சுற்றிகருப்புபடலத்தைஎற்படுத்திநம்மைதொந்தரவுசெய்கிறார்கள்.

‘மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகள்?  என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

இந்த யுகத்தில் சராசரியாக ஒருநபர், ஆன்மீக பயிற்சியின் பற்றாக்குறையால் (ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படைக் கோட்பாடுகளின்படி, குறைந்தபட்சம் 4 சென்டிமீட்டர் அளவுக்கு கருப்புபடலம் சூழ்ந்துள்ளது. முக்கியமாக ஒரு சராசரிமனிதன், மறைந்த மூதாதையர்கள் மற்றும் புவர்லோகம் மற்றும் நரகத்தின் 1 வது பகுதியிலிருக்கும் ஆவிகளால் பாதிக்கப்புக்கு உள்ளாகிறார்.

சூட்சுமஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்ட இந்த படமானது ஒருநபர் சூட்சும (புலப்படாத) கருப்பு படலம் சூழ்ந்துள்ள போது எப்படி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இதனால், ஆவிகள் மற்றும் மறைந்த மூதாதையர்கள் நம் வாழ்வில் பல பிரச்சனைகளை உருவாக்கலாம். அவை உடல் மற்றும் உளவியல் நோய்களில் இருந்து திருமண மற்றும் நிதி பிரச்சனைகள் வரை இருக்கும்.

ஆன்மீக நிவாரண முறை மற்றும் கருப்பு படலத்தின் செயல்திறன்

4 செ.மீ அளவு உள்ள கருப்பு படலத்தை எந்த ஒரு ஆன்மீக நிவாரணத்திலிருந்து உருவாகும்  தெய்வீகஉணர்வால் ஊடுருவமுடியாது. அவற்றை குறைப்பதற்கு எஸ்.எஸ்.ஆர்.எப் ஊதுபத்திகளே சரியான கருவியாகும்.இயற்கையில் ரஜ-தம தன்மையில் இருக்கும் இந்த கருப்புப்படலம்  ஆவிகளின் கருப்புசக்தியால் உருவாக்கப்படுகிறது

எஸ்.எஸ்.ஆர்.எப்ஊதுபத்திகளை ஏற்றும்போது சுற்றுசூழல் மற்றும் பாதிக்கப்பட்ட நபரிடம் ரஜ-தமவின் அளவு 0.001% முதல் 0.5% வரைகுறையும். ரஜ-தமவின் குறைப்பினால் ,அதன் தொடர்புடைய கருப்பு படலத்தின் அளவு எவ்வாறு குறைய தொடங்கிறது என்பதை பின்வரும் விளக்கப்படம் காட்டுகிறது.

ரஜ-தமவின்அளவுகுறைதல் தொடர்புடையகருப்புபடலத்தின்அளவுகுறைதல்
0 4 செ.மீ
0.001% 3.5 செ.மீ
0.01% 3.4 செ.மீ
0.1% 3 செ.மீ
0.5% 2 செ.மீ

சூட்சும ஞானம் அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட பின்வரும் படமானது, ஓர் ஆவி ஊதுபத்தி மற்றும் அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக உணர்வால் உட்படுத்தும்போது உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஆவியின் பாதிப்புக்கு உண்டான நபரின் மீது பொருத்தமான ஊதுபத்தியின் நறுமணம் படுவதால் ஏற்படும் விளைவு

எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால்,பேய்கள் வேறு எங்காவது செல்ல விரும்பும்வரை அவைகளுக்கு தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும்.

பின்வரும் காணொளி ஆவிகளின் மீது எஸ்.எஸ்.ஆர் .எஃப் ஊதுபத்திகளின் செயல்திறனைக் காட்டுகிறது. வீடியோவில் உள்ள நபரைப் பேய் பிடித்துள்ளது. அது, எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஆன்மீகநிவாரணம் அளிப்பவர் ஒருவர் மூலம் வெளிப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளின் நேர்மறை ஆற்றல்கள் எவ்வாறு அவற்றிக்குக் கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த காணொளியில் காணலாம்.

3.3 இல்லத்தை/வசிப்பிடத்தை தூய்மைப்படுத்துதல்

ஒரு இல்லத்தில் இருக்கும் தீயசக்திகள் அங்கு குடியிருப்பவர்களைப் பாதிக்கிறது. அதிகப்படியான வாக்குவாதங்கள், முடிவெடுக்கும் திறன்குறைதல் அல்லது உடல்நலக்குறைவுக்கு இது வழிவகுக்குகிறது. நுண்ணிய ஆறாவது அறிவு கொண்டவர்கள் அத்தகைய இல்லங்களில் சூட்சுமநிலையில் உருவாகும் தீயசக்திகளின் அழுத்தத்தை உணரமுடியும். ஆவிகள்அல்லது மூதாதையர்கள் அல்லது தீயஅதிர்வலைகளால் தூண்டப்பட்ட  தீய வளிமண்டல அழுத்தம்,அங்கு வசிப்பவர்களுக்கு கணிசமான அளவு தீங்கினை ஏற்படுத்தும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து வெளிப்படும் நறுமணமானது சூட்சுமமான தீயசக்திகளின் அழுத்தத்தை எதிர்த்துப்போராடுவதற்கும், தூய்மையான அதிர்வலைகளை அங்கு கொண்டுவருவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒளிரூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியானது பரிபூரண நெருப்புதத்துவத்தின் வடிவத்தில் தெய்வீகஉணர்வை வெளிப்படுத்துகிறது. இதன் புகையில் பரிபூரணகாற்றுத்தத்துவம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு செயல்படுத்தப்பட்ட தெய்வீகஉணர்வு ஒரு நீரூற்று வடிவில் மேல் நோக்கி  வேகமாக வெளியேறியபின் அது வேகத்துடன் கீழே வந்து தரையில் மற்றும் வளிமண்டலத்தில் உள்ள சூட்சும அடிப்படை ரஜ-தமதுகள்களை சிதைத்து தீயசக்திகளை அழித்து அந்த இல்லத்தின் ஆன்மீக சுத்திகரிப்புக்கு உதவுகிறது.

3.4 ஊதுபத்திகளை பயன்படுத்துவதற்கான சில நடைமுறைகுறிப்புகள்

‘ எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை சிறப்பாக பயன்படுத்தி அதிகபட்ச பலனை அடையும் முறை’  என்ற கட்டுரையைப் பார்க்கவும்

4. சுருக்கமாக

  • ஆன்மீக பயிற்சியே ஆன்மீக நிவாரணத்திற்கான சிறந்த தீர்வாகும்.
  • ஊதுபத்திகளை ஏற்றிவைப்பது,ஆத்மார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் நாமஜபத்தை புதிதாக துவங்குபவர்களுக்கு மிக சிறந்த ஆன்மீக நிவாரணமாகும். பிரார்த்தனைகள், நாமஜபம் மற்றும் பிற ஆன்மீக நிவாரண முறைகளை நிறைவு செய்ய இது ஒரு துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்படலாம்.
  • தினமும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தி பயன்பாட்டினால் வளாகம் சுத்திகரிக்கப்படுகிறது.