மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் என்ன?

ஆன்மீகத்தின்படி, நம் வாழ்க்கையில் 50% துன்பங்கள் முற்றிலும் ஆன்மீக காரணங்களாலும், 30% துன்பங்கள் ஆன்மீகம் மற்றும் உளவியல் மற்றும்/அல்லது உடல் சம்பந்தமான காரணங்களாலும் ஏற்படுகின்றன. இது நவீன விஞ்ஞானத்தால் அறியப்படாத விஷயம்.

தயவுசெய்து ‘வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் ஆன்மீக மூல காரணங்களின் பகுத்தாய்வு’ என்ற கட்டுரையை பார்க்கவும்.

ஆன்மீக மூல காரணங்களால் நம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் ஒரு அம்சம், இறந்து போன மூதாதையர்களின் சூட்சும உடலால் சந்ததியினருக்கு ஏற்படும் கஷ்டங்களாகும். இது மனிதகுலத்தில் பெரும்பாலானவர்களை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும் பொதுவான ஆன்மீக காரணங்களில் ஒன்றாகும். நம் மூதாதையர்கள் நமக்கு ஏன் கஷ்டங்களை கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன்பு, எந்த விதமான துன்பங்களை நம் மூதாதையர்களால் அனுபவிக்கிறோம் என்பதை முதலில் சற்று ஆராய்வோம்.

மூதாதையர்களின் சூட்சும உடல்களால் ஏற்படும் கஷ்டங்கள், பல விதங்களில் நம் அன்றாட வாழ்வில் உபாதைகளாக பரிணமிக்கிறது. இது நம் ஆன்மீக பயிற்சியிலும் உலக வாழ்க்கையிலும் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் இது முழு குடும்பத்தை சுற்றி கருமேகம் படர்ந்தாற் போல் இருக்கும். அவற்றை சமாளிக்க எல்லா முயற்சியும் எடுத்தும் ஒவ்வொரு குடும்பத்தினரும் பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இறந்த மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்கள் கீழே கூறியுள்ளபடி பலவிதங்களில் வெளிப்படுகின்றன.

 • திருமணம் ஆகாமல் இருப்பது

 • தாம்பத்ய வாழ்க்கையில் சண்டை சச்சரவு

 • போதைக்கு அடிமை ஆவது மூதாதையர்களின் ஆவி அவர்களின் வழிவந்தவர்களின் மூலம் போதைப் பொருளை அனுபவிப்பதால் ஏற்படுகிறது)

 • நன்றாக தயார் செய்திருந்தாலும் தேர்வில் எல்லாமே மறந்துபோவது

 • வேலை பறிபோவது

 • குழந்தைப் பேறு இல்லாமல் போவது

 • கருச்சிதைவு

 • மனநலம் குன்றிய குழந்தை பிறத்தல்

 • குழந்தைப் பருவத்தில் இறப்பது

மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களோடு தீவிர ஆன்மீக காரணங்களும் (விதிப்படி மரணம் சாத்தியமாகும் காலம்) இணைவதால், கருச்சிதைவு, குழந்தைப் பருவத்தில் இறப்பது போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன. இவை மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களால் மட்டுமே ஏற்படுவது இல்லை. மேலே கூறப்பட்ட பிரச்சனைகள் மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களின் வலுவான அறிகுறிகளாக இருந்தாலும், இப்பிரச்சனைகளின் உண்மையான மூல காரணத்தை ஒரு மகான் அல்லது ஒரு குருவால் (ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடைந்தவர்) மட்டுமே கூற முடியும்.

அறிவு சார்ந்த மட்டத்தில், கஷ்டங்கள் ஆன்மீக காரணங்களால் ஏற்படுகின்றது என்பதை கீழ்க்கண்ட குறிப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

 • எந்த வைத்திய முறையும் பலன் அளிக்காத போது. குறிப்பாக, நவீன விஞ்ஞான முறைப்படி எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய தோல் சம்பந்தமான வியாதிகள், மார்பு வலி போன்ற வியாதிகள் இதில் அடங்கும்.

 • அதிகபட்ச குடும்பத்தினர் (5 நபர்கள் உள்ள குடும்பத்தில், 4 நபர்கள்) மேற்கூறப்பட்ட உபாதைகளால் ஒரே சமயத்தில் அவதிப்படுவது. (இதன் காரணம், ஒரு குடும்பத்தை சேர்ந்த எல்லாருக்குமே அதே மூதாதையர்கள் இருப்பதுதான்.)