எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்யலாமா?

பிரார்த்தனை செய்வதன் நோக்கத்தின் அடிப்படையில் இருவித பிரார்த்தனைகள் உள்ளன.

1. உலக பலனை எதிர்பார்த்து பிரார்த்திப்பது

எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்வது என்பது பொதுவானதாகும். சாதாரணமாக இப்பிரார்த்தனை, ஒரு விருப்பம் பூர்த்தி ஆவதற்கோ அல்லது உலகரீதியான சந்தோஷமான வாழ்க்கை அமைவதற்கோ செய்யப்படுகிறது. இவ்வகை பிரார்த்தனை, வேறு ஒரு ஆன்மீக பயிற்சியுடன் சேர்த்து அல்லது சேர்க்கப்படாமல் தனித்தும் செய்யப்படலாம்.

எதிர்பார்ப்புடன் செய்யும் பிரார்த்தனைகளுக்கு சில உதாரணங்கள் பின் வருமாறு;

  • ஸ்தூல உலகத் தேவைகளான வேலை, வாழ்க்கைத்துணை, குழந்தை போன்றவை.
  • சூட்சும உலகத் தேவைகளான நோயிலிருந்து குணமாதல், மகிழ்ச்சி போன்றவை.

எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்யலாமா?

ஆன்மீக பயணத்தின் ஆரம்பத்தில் மக்கள் எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்கின்றனர். உலக நன்மை கோரி பிரார்த்தனை செய்து, அது தொடர்ந்து பலித்து வரும் நிலையில் கூட, அவர்கள் ஆன்மீக பயணத்தின் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளனர். காரணம் அடுத்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளபடி ஆன்மீக முன்னேற்றத்தின் அடுத்த நிலையில் இருப்பவர்கள் தங்களின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட மட்டுமே பிரார்த்தனை செய்வர்.

நமக்கோ அல்லது மற்றவருக்கோ உலக நன்மை கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்பவர்களுக்கு அது பலிக்கலாம். ஆனால் அதற்காக ஆன்மீக பயிற்சி செய்து சேமித்துள்ள அவர்களின் ஆன்மீக சக்தி விரயமாகிறது. இந்த ஆன்மீக சக்தி இப்பிறவியிலோ அல்லது முந்தைய பிறவிகளிலோ கிடைத்ததாக இருக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்பவர்கள் பிரார்த்தனையை ஒரு கருவியாக உபயோகித்து இறைவனிடமிருந்து ஏதாவது யாசித்து பெற வேண்டும் என நினைக்கின்றனர்; ஆன்மீக பயிற்சியை அதிகப்படுத்தி இறைவனின் தொடர்ந்த அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என நினைப்பதில்லை. எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்வதிலுள்ள முக்கியமான குறைபாடு, ஒருவர் உலக ஆசைகளிலே கட்டுண்டு இருக்க வாய்ப்புள்ளது. மாறாக, சுய இச்சைப்படி இல்லாமல் இறைவனின் இச்சைப்படி நடப்பதை முழு மனதுடன் ஏற்று சரணாகதி செய்தால்தான் இத்தடையைத் தாண்டி செல்ல முடியும்.

2. உலக பலனை எதிர்பார்க்காமல்  பிரார்த்திப்பது (ஆன்மீக முன்னேற்றத்திற்கு)

ஆன்மீக பயணத்தை முழு முனைப்புடன் மேற்கொள்ளும் ஸாதகர்களால்  இதுபோன்ற பிரார்த்தனையை செய்ய முடியும். இந்த பிரார்த்தனைகளிலும் இறைவனிடம் வேண்டுதல்கள் உள்ளன. ஆனால் எதிர்ப்பார்ப்புடன் இந்த பிரார்த்தனைகள் செய்யப்-படுவதில்லை. இதிலுள்ள ஒரே எதிர்பார்ப்பு ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட மேலும் தரம் வாய்ந்த ஆன்மீக பயிற்சியை எவ்வாறு செய்வது என்பதுதான். ஆன்மீக பயிற்சியில் ஏற்படும் தடைகள் விலகவும் அஹம்பாவம் குறையவும் கூட ஸாதகர்கள் பிரார்த்தனை செய்யலாம்.

எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்யலாமா?

உலக பலனை எதிர்பார்க்காது பிரார்த்தனை செய்பவர்களுக்கு ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுகிறது; அத்துடன் அவர்களின் உலக தேவைகளும் பூர்த்தியாகின்றன. இங்கு உலக பலனை எதிர்பார்த்து பிரார்த்தனை செய்பவரைக் காட்டிலும் பலனை எதிர்பார்க்காமல் பிரார்த்தனை செய்பவர் அதிக சரணாகதி செய்வதால் அவருக்கு இறைவனின் அருள் மேலும் அதிகம் கிடைக்கிறது. அத்துடன் சரணாகதி செய்வதால் மனம், புத்தி மற்றும் அஹம் கரைகிறது. இவ்விரு காரணங்களால் ஆன்மீக முன்னேற்றம் விரைவில் ஏற்படுகிறது.

3. இருவித பிரார்த்தனைகளுக்கும் உள்ள வேறுபாடு

உலக பலனை எதிர்பார்த்து பிரார்த்தனை

உலக பலனை எதிர்பார்க்காத பிரார்த்தனை

  • ஒருவருடைய விதி வேறு விதமாக இல்லாவிட்டால் பிரார்த்தனை பலனளிக்கலாம்.
  • பிரார்த்தனையின் தீவிரம் மற்றும் ஒருவரின் ஆன்மீக நிலையைப் பொருத்து பிரார்த்தனை அவசியம் பலனைத் தரும்
  • ஆன்மீக சக்தி வீணாகிறது
  • ஆன்மீக சக்தி வீணாவதில்லை
  • ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதில்லை
  • இறைவனின் இச்சைப்படி ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதோடு கூட உலக தேவைகளும் பூர்த்தியாகின்றன

4. ஆன்மீகத்தில் முன்னேற முன்னேற ஒரு ஸாதகரின் பிரார்த்தனைகள் எவ்வாறு மாறுகிறது

வாழ்வின் அங்கம்

உலக பலனை எதிர்பார்த்து பிரார்த்தனை

உலக பலனை எதிர்பார்க்காத  பிரார்த்தனை (ஆன்மீக முன்னேற்றத்திற்காக)

  • வேலை
இறைவா, நான் இப்பொழுது தான் நேர்காணல் முடித்தேன். எனக்கு இந்த வேலை கிடைக்கட்டும். எனக்கு இது மிகவும் தேவை. இறைவா, நான் இப்பொழுது தான் நேர்காணல் முடித்தேன். இதன் முடிவை உங்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். உங்களிச்சைப்படி எது நடந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நீங்கள் தான் அருள வேண்டும்.
  • வாழ்க்கைத் துணையைத் தேடுதல்
இறைவா, நான் இவரைக் காதலிக்கிறேன். அவரும் என்னை அதே அளவு அல்லது அதற்கு மேலும் விரும்புமாறு செய்வாயாக. இறைவா, உனக்குத் தான் தெரியும் இவர் எனக்கு உகந்தவரா என்று. என் விதிப்படிதான் எனக்கு வாழ்க்கைத் துணை அமையலாம் அல்லது அமையாமல் போகலாம். ஆனால் என் ஆன்மீக பயிற்சி தொடர்ந்து நடக்க அருள்வாயாக.
  • நோய்
இறைவா, என்னால் இந்த நோயைத் தாங்க இயலவில்லை. என்னை குணப்படுத்து. இறைவா, இந்த நோயைத் தாங்கும் சக்தியை எனக்குக் கொடு; அதன் மூலம் என் சிந்தனை சிதறாமல் நான் ஆன்மீக பயிற்சியை தொடர்ந்து செய்ய அருள்வாய்.
  • தன் குழந்தையின் நோய்
இறைவா, என் குழந்தையைக் காப்பாற்று. நான் எது வேண்டுமானாலும் செய்கிறேன். என் குழந்தை காப்பாற்றப்பட்டால் அடுத்த மாத சம்பளத்தின் பாதியை நான் அநாதை இறைவா, என் குழந்தையின் நோய் முற்றிய நிலையில் உள்ளது. எங்களின் சக்திக்கு உட்பட்டதெல்லாம் செய்து விட்டோம். என்னைக் காட்டிலும் நீயே அவனை அதிகம் நேசிக்கிறாய். அவனை உன் சரணங்களில் சமர்ப்பிக்கிறேன்.
  • வாழ்வின் வேதனை நிரம்பிய பகுதி
இறைவா, இதுவே என் வாழ்வின் அதிகபட்ச வேதனை நிரம்பிய பகுதி. இதிலிருந்து என்னைக் காப்பாற்று. இறைவா, இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடு. ஆன்மீக நிலையில் இதிலிருந்து நான் என்ன கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்க செய். என் ஆன்மீக பயிற்சி தடையில்லாமல் நடக்கட்டும்.
  • வாழ்வின் இன்பம்  நிரம்பிய பகுதி
பொதுவாக இல்லை. இறைவா, தயவுசெய்து இன்பத்திலும் உன்னை நினைத்திருக்க செய். உன்னருளால் இது எனக்கு கிடைத்துள்ளது. துன்பத்தில் எவ்வாறு உன்னை எண்ணி ஏங்குகிறேனோ அதேபோல் இன்பத்திலும் உன்னை எண்ணி இருக்கும்படி செய்.
  • ஆன்மீக பயிற்சி
பொதுவாக இல்லை. இறைவா, ஆன்மீக பயிற்சியைத் தொடர இன்னொரு நாள் கொடுத்தமைக்கு உனக்கு என் நன்றி. உன்னிச்சைப்படி நான் உனக்கு சேவை செய்ய வேண்டும். என் ஆன்மீக பயிற்சியை அதிகப்படுத்தும் திறனை எனக்கு நீ தந்தருள்வாயாக.

5. எதிர்பார்ப்புடன் மற்றும் எதிர்பார்ப்பில்லாமல் பிரார்த்தனை செய்வது பற்றி பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதல்

1..சாதாரண நபர் : உலகவாழ்க்கையில் ஏதாவது வேண்டும் என நினைப்பவர் இறைவனிடம் எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்வர். பக்தியில்லாமல் வெறும் பிரார்த்தனை மட்டும் செய்தால் இறைவன் எதையும் அருள மாட்டார் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. பலமுறை பிரார்த்தனை செய்தும் எதுவும் கிடைக்காதபோது அவருக்கு இறைவனின் மீதுள்ள நம்பிக்கை குறைகிறது.

2. பக்தியோகத்தின் மூலம் ஆன்மீகபயிற்சி செய்பவர் : பக்தியோகத்தை பின்பற்றுபவர் தவிர்த்து மற்ற யோகங்களான கர்மயோகம், ஞானயோகம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்வதில்லை.

அ. உண்மையான பக்தியும் ஆன்மீக உணர்வும் பிரார்த்தனையில் இருந்தால் ஒழிய இறைவன் செவி சாய்ப்பதில்லை என்பதை அவன் உணர்வதில்லை.

ஆ. எல்லாம் இறைவனின் இச்சைப்படி நடப்பதால் நாம் விரும்பியதை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது அவனுக்கு புரிவது இல்லை. ஒருவரின் சுய இச்சையை அழிப்பதற்கே ஆன்மீக பயிற்சி செய்யப்படுகிறது.

இ. பலருக்கு என்ன கேட்க வேண்டும் என்பதும்  தெரிவதில்லை; அதனால் அவர்கள் கேட்பது ஆன்மீக பயிற்சிக்கு பாதகமாக இருக்குமானால் இறைவன் அதைக் கொடுப்பதில்லை.

ஈ. பிரார்த்தனையின் மிக முக்கியமான பலன் நமது அஹம்பாவத்தைக் குறைப்பதுதான்.

உ. நாம் இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும் என விரும்பினால் கீழ்வரும் பிரார்த்தனை சரியானதாக இருக்கும் – ‘என் ஆன்மீக பயிற்சி நடப்பதற்கு அருள வேண்டும்’

ஊ. ஆன்மீக முன்னேற்றம் அடைந்த பிறகு, பக்தன் பகவானிடம் இருந்து எதுவும் கேட்பதில்லை; ஏனென்றால் கடவுள் எது எப்பொழுது அவனுக்குத் தேவையோ அதை அப்பொழுது தருவார் என்பது அவனுக்குத் தெரியும்.’

பராத்பர குரு டாக்டர் ஆடவலே

6. முடிவுரை

சுருக்கமாக, பிரார்த்தனை செய்யும்போது கீழ்க்கண்டவற்றை ஒரு நியமமாக மனதில் பதிய வைக்க வேண்டும் :

  • பிரார்த்தனை நம் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியை மேம்படுத்த செய்யப்பட்டால் அது உலக பலனை எதிர்பார்க்கும் பிரார்த்தனையாகும்.
  • ஆத்மாவை அனுபவிக்க செய்யப்படும் முயற்சியை அதிகப்படுத்த செய்யப்படும் பிரார்த்தனையாக இருந்தால் அது உலக பலனை எதிர்பார்க்காது செய்யப்படும் பிரார்த்தனையாகும்.