நேர்மறை ஆன்மீக சக்தி வெளிப்பாட்டால் ஏற்படும் தன்னிச்சையான மாறுதல்கள்.

1. நேர்மறை ஆன்மீக சக்தியின் வெளிப்பாடு மற்றும் அதன் உருவாக்கம்  பற்றிய அறிமுகம்

2000 ஆம் ஆண்டு முதல், ஆன்மீக நிகழ்வுகள் காரணமாக மாறிய  பொருட்கள் அல்லது தீய சக்திகளால் தன்னிச்சையாக உருவான பல நிகழ்வுகளை பற்றி ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) ஆராய்ந்து வருகிறது. இருப்பினும், நாங்கள் 2009 ஆம் ஆண்டு முதல், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களில் குறிப்பாக அவை வெளியிடும் சூட்சும அதிர்வலைகளில் வேறுபட்ட இயல்புடைய நிகழ்வுகளை காணத் தொடங்கினோம்.  ஆன்மீக ஆராய்ச்சியை மேற்கொண்ட பிறகு, இந்த மாற்றங்கள் நேர்மறை ஆன்மீக ஆற்றலால் ஏற்படுகிறது ஏன்று புரிந்துகொண்டோம். இந்த மாற்றங்களுள் எளிதில் வெளிப்படுத்தி ஆவணப்படுத்தக்கூடியவையாக இருந்தவை, பொருட்களின் நிறத்தில் தன்னிச்சையாக உருவான மாற்றங்களாகும். இது முன்னர் ஆவணப்படுத்தப்பட்ட உயர் நிலை தீயசக்திகளால் ஏற்படுத்தப்பட்ட தன்னிச்சையான மாற்றங்களுக்கு நேர் எதிரானவையாக இருந்தது, இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்திகளை பற்றிய விபரங்களை எங்களுடைய புகைப்படத் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளோம்.

இந்தக் கட்டுரையில், நேர்மறை ஆன்மீக ஆற்றலால் ஏற்படும் தன்னிச்சையான வெளிப்பாட்டின் நிகழ்வு பற்றிய பொதுவான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். இந்த நிகழ்வுகள் நிகழக்கூடிய பல்வேறு வழிகளை நிரூபிக்கவும், அவற்றைச் சுற்றி ஆன்மீக நிகழ்வுகள் எப்போது நிகழ்கின்றன என்பதை அனைவரும் அடையாளம் காணவும் உதவும் வகையில், இந்த பொருட்களின் புகைப்படத் தொகுப்பையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

2. இயல்பான மாற்றம் அல்லது தெய்வீக மயமாக்கல் பற்றிய ஆய்வின் முக்கியத்துவம்.

ஒவ்வொரு மதத்திலும், மஹான்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது தெய்வங்களை அடையாளப்படுத்தும் பொருட்கள் வணங்கப்படுகின்றன. அவற்றில் ஏற்படும் எந்தவொரு விவரிக்க இயலாத மாற்றங்களும் எப்போதும் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கி, பெரும்பாலும் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கின்றன. இத்தகைய ஆன்மீக நிகழ்வுகளை அதிநுட்பமான ஆறாவது அறிவின் வழி அறிந்து கொள்வதன் மூலம், இந்த மாற்றங்களுக்கான காரணத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இதன் விளைவாக, உருவாகும் அல்லது வெளிப்படும் தெய்வீக குணத்தின் வகையையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இவை  நேர்மறை ஆற்றல்களின் இருப்பைப் பற்றி நம்மை நம்ப வைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் தீயசக்திகள் இருப்பதைப் போலவே, நமக்கு உதவ நேர்மறை சூட்சும ஆற்றல்களும் உள்ளன என்பதை நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

3. தீ சக்திகளால் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு  பல ஆண்டுகள் கழித்து இயல்பான நேர்மறை மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன?

தீய சக்திகளால் 2000 ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையான மாற்றங்கள் நிகழ்ந்தன என்று நாங்கள் குறிப்பிட்டோம். இருப்பினும், நேர்மறை ஆற்றலால் மாற்றங்கள் 2009 ஆம் ஆண்டு வாக்கில்தான் வெளிவரத் தொடங்கின. இது ஏன் அவ்வாறு நிகழ்ந்தது ?

நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம் மற்றும் ‘மூன்றாம் உலகப் போர் கணிப்புகள்’ என்ற எங்களது  கட்டுரையில், 1999 முதல் 2025 வரை நடைபெறும் ஒரு பெரிய சூட்சும யுத்தம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். இந்த காலகட்டத்தின் தொடக்கத்தில், தீய சக்திகளால் தொடர்ந்து கஷ்டங்கள் அதிகரித்து வந்தது. இவை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டியதால், ஸாதகர்களுக்கு உதவ நேர்மறையான சூட்சும ஆற்றல்கள் முன்வரத் தொடங்கின. இந்த நேர்மறை ஆற்றல்களின் காரணமாகவே தன்னிச்சையாக உருவான மாற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

4. நேர்மறை ஆன்மீக சக்தி ஏன் வெளிப்படுகிறது அல்லது உருவாகிறது ?

நேர்மறை ஆன்மீக சக்தி தெய்வீக மணம் மற்றும் தெய்வீக ஒலி உட்பட பல வழிகளிலிருந்து வெளிப்படும் அல்லது உருவாக்கப்படும். இருப்பினும், அதை நிறத்தின் வாயிலாக மிக எளிதாக அடையாளம் காணலாம். நேர்மறை ஆன்மீக சக்தி பொதுவாக ஆன்மீக ரீதியாக தூய்மையான இயல்புடைய பொருட்களில் வெளிப்படும் அல்லது உருவாகும்.

ஒரு மஹான், என்பவர் ஆன்மீக ரீதியாக மிகவும் தூய்மையானவர் ஆவார். அவர்களின் ஆன்மீகத் தூய்மையின்  காரணமாக, அவர்களது  தேஹம் நேர்மறை ஆன்மீக ஆற்றலை  வெளிப்படுத்தும் ஒரு சிறந்த ஊடகமாக மாறுகிறது. மஹான்களால் பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிக ஸாத்வீகமானவை, ஏனெனில் அவர்களின் ஸாத்வீகத்தன்மை அந்தப் பொருளுக்கு  மாற்றப்படுகிறது.

புகைப்படத் தொகுப்பில் காட்டப்பட்டுள்ள பொருட்களில், சில ஒரு மஹானின் தேஹத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். உதாரணமாக சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் முடி மற்றும் நகங்கள். மேலும் மற்ற பொருட்கள் ஒரு மஹானால் பயன்படுத்தப்பட்டவை, உதாரணமாக அவரது பாதணிகள். மற்றவை ஆன்மீகத்தைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட சில பொருட்களாகும். உதாரணமாக பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட சிறிய பிளாஸ்டிக் பைகள் போன்றவை.

தெய்வங்கள் மற்றும் மஹான்களின் படங்களைப் பொறுத்தவரை, தெய்வத்தையோ அல்லது கடவுளையோ வழிபடும் ஸாதகரின் ஆன்மீக உணர்வின் காரணமாக சில நேரங்களில் நேர்மறை ஆற்றலின் வெளிப்பாடு ஏற்படுகிறது.

5. பொருட்களின் நிறத்தில் ஏற்படும் தன்னிச்சையான மாற்றம் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்.

நேர்மறை ஆன்மீக ஆற்றலின் காரணமாக தன்னிச்சையான மாற்றங்கள் நிறங்களின் அடிப்படையில் ஏற்படும் போது, அவற்றில் வரையறுக்கப்பட்ட நிறங்களை கொண்ட ஒரு குறிப்பிட்ட நிறமாலை இருப்பதைக் கண்டறிந்தோம். அவை இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை அல்லது நீலம் போன்றவையாகும். அதிநுட்பமான ஆறாவது அறிவுடைய ஸாதகர்களின் உதவியுடன் இந்த நிகழ்வுகள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி அவர்களால் சரிபார்க்கப்பட்டன. ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட தெய்வீக குணத்தைக் குறிக்கிறது மற்றும் வெளிப்படுத்துகிறது என்பதை கண்டறிந்தோம். கீழே உள்ள அட்டவணையில் ஆன்மீக ஆராய்ச்சி மூலம் உணரப்பட்ட நிறங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தெய்வீக குணங்களின் பட்டியலை வழங்கியுள்ளோம்.

நிறம் தெய்வீக குணம்
இளஞ்சிவப்பு ஆன்மீக அன்பு (ப்ரீதி)
சிவப்பு வீர உணர்வின் தேஜஸ் (க்ஷாத்ரதேஜ்)
மஞ்சள் தெய்வீக சைதன்யம் (சைதன்யம்)
நீலம் ஆன்மீக உணர்வு
வெள்ளை வெளிப்படாத/உருவாக்கப்படாத (நிர்குண)

ஆன்மீக அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, ‘சொல், தொடுதல், வடிவம், சுவை, மணம் மற்றும் அதன் சக்தி ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன’ என்பதாகும். தெய்வீக தன்மை என்பது நேர்மறை ஆற்றலின் ஒரு வடிவமாகும். எனவே இங்கே நிறத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பது தெய்வீக தன்மைக்கு ஒத்த ஒரு குறிப்பிட்ட வகை நேர்மறை ஆற்றலின் வெளிப்பாடே ஆகும்.

6. நேர்மறை ஆன்மீக ஆற்றலை வெளிப்படுத்தும் பொருட்களின் நன்மைகள்

    இந்தப் பொருட்கள் (அல்லது அவற்றின் புகைப்படங்கள் கூட) நேர்மறை ஆன்மீக ஆற்றலின் சிறந்த ஆதாரமாகச் செயல்படுகின்றன. சராசரி மனிதனுக்கு, சூட்சும நிலையில் நேர்மறை ஆன்மீக ஆற்றலின் மூலம் பயனடைவது கடினம். இருப்பினும், ஸ்தூல ரீதியாக வெளிப்படும் சூட்சும ஆற்றலின் வடிவங்களிலிருந்து பயனடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. இந்தப் பொருட்கள் மற்றும் அவற்றின் புகைப்படங்கள் மூலம், ஸாதகர்கள்  நேர்மறை ஆற்றலைப் பெறுகிறார்கள், இது அவர்களின் ஆன்மீக பயிற்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் இவை தீய சக்திகளால் ஏற்பட்ட ஆன்மீக கஷ்டத்தில் இருப்பவர்களின் ஆன்மீக நிவாரணத்திற்கு உதவுகின்றன.

7. நேர்மறை ஆன்மீக ஆற்றலை நாமே உணருவது

ஆன்மீகம் என்பது அனுபவத்தின் அறிவியல் என்று சொல்வதற்கு இணங்க, நேர்மறை ஆற்றலால் மாற்றங்கள் ஏற்பட்ட பொருட்களின் புகைப்படத் தொகுப்பில் உள்ள இந்தப் பொருட்களைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு என்ன ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பதனை கவனியுங்கள். நாமே எவ்வாறு சூட்சும பரிமாணத்தை உணர்ந்து அதன் பலனை அடையவேண்டும்  என்பதற்கு “உங்கள் ஆறாவது அறிவை (மன ஆற்றல் திறன்) எவ்வாறு பரிசோதிப்பது என்ற கட்டுரையைப் படித்து பலனடைய உங்களை பரிந்துரைக்கிறோம். மேலும் உங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் இணையப்பதிவு மூலமாக சமர்ப்பிக்க  வேண்டுகிறோம்

8. கேலரியைக் காண்க