1. நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம் எங்கு நடக்கிறது?

நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம் முக்கியமாக சூட்சும உலகத்தில் சூட்சும நல்ல மற்றும் தீய சக்திகளுக்கு இடையே நடக்கிறது. பூலோகத்தில் நடக்கும் யுத்தத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரியதாக இருந்தாலும் ஆறாம் அறிவு படைத்த ஒருவராலேயே இதை உணர முடிகிறது.

சூட்சும யுத்தத்தில் சூட்சும நல்ல சக்திகள் வெற்றி கொள்ள ஆரம்பிக்கும்போதே ஸ்தூலத்தில் அதாவது பூமியில் யுத்தம் நடக்க ஆரம்பிக்கிறது. ஸ்தூலத்தில் நடக்கும் யுத்தத்தால் இவ்வுலகம் முழுவதுமே பாதிப்பு அடைகிறது. ஆனால் பூமியிலிருந்து எல்லா தீய சக்திகளையும் அழித்து ஒழிக்க இது தேவைப்படுகிறது. முதலில் பூமியில் மக்களின் மனங்களில் இது வெளிப்பட ஆரம்பிக்கிறது. உலகமே பித்துப் பிடித்தாற்போல் நமக்குத் தோற்றம் அளிக்கிறது. இன்றைய உலகத்தின் நிலை இதுதான். தீய சக்திகள் (பூதங்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) மனித குலத்தைத் தாக்கி அவர்களை பீடிப்பதால் ஏற்படும் நிலை இது. இதோடு கூட இயற்கை உத்பாதங்களும் பெருகி வருகின்றன (வெள்ளம், சுனாமி, பூகம்பம், தொற்று நோய் மற்றும் பஞ்சம்). பிறகு இந்த சூட்சும யுத்தம் பெரிய அளவில் உலகில் வெளிப்பட்டு வெடிக்கிறது. இறுதியாக இது பயங்கர இயற்கை உத்பாதங்களோடு கூட மூன்றாவது உலகப் போரில் போய் முடிகிறது. இயற்கை உத்பாதங்கள் என்பது இவ்வுலகின் தம பிரதானமான தன்மைகளை அழித்து உலகை தூய்மைப்படுத்துவதற்கு இயற்கை உபயோகிக்கும் வழியாகும்.

2. நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம் எப்பொழுது தீவிரமாகிறது?

சூட்சும ஸாத்வீகத் தன்மை மிகக் குறைந்த நிலையை எட்டும்போதும் சூட்சும தமோ தன்மை அதிகபட்ச நிலையை எட்டும்போதும் இந்த யுத்தம் தீவிரமடைகிறது. உலகிலுள்ள தீயவர்களால் ஸாத்வீகத் தன்மை குறைகிறது. ஸாத்வீகத் தன்மை குறையும் அளவு காலப்படியும் யுகப்படியும் மாறுகிறது. உதாரணத்திற்கு சத்ய யுகத்தின் மிக மோசமான காலம் கலியுகத்தின் அதிகபட்ச ஸாத்வீக காலத்தைக் காட்டிலும் அதிக ஸாத்வீகத் தன்மை நிரம்பியதாக இருக்கும்.

கவனத்தில் கொள்க : முதல் மூன்று யுகங்களின் கணக்குகள் தலைமை யுகங்களை சேர்ந்தவை; அதற்குள் உள்ள குறு-யுகங்களை சேர்ந்தவை அல்ல.

வருங்காலத்தில் அடுத்து வரும் குறு-யுகங்களில் தீயவர்களின் எண்ணிக்கை 35%, 40% என்ற ரீதியில் அதிகரிக்கும்போது அடிமட்ட நிலை ஏற்படும். அவர்களின் எண்ணிக்கை 100% – தை அடையும்போது பிரபஞ்சம் அழியும்; ஏனென்றால் முழு ஜனத்தொகையும் இறைவனால் அப்பொழுது அழிக்கப்படும்.

3. நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் யார் பங்கெடுக்கின்றனர்?

  • பெரும்பான்மையான சாதகர்களுக்கு ஆறாவது அறிவு இல்லாததால் இந்த சூட்சும யுத்தத்தைப் பற்றி அவர்கள் அறிவதில்லை; அவர்களுக்கு யாரும் சொல்லவும் இல்லை. அதன் விளைவாக அசுர சக்திகளின் தாக்குதல்களை சமாளிக்க தங்களை தயார் நிலையில் வைக்க முடிவதில்லை; அத்துடன் இந்த யுத்தத்தில் பங்கேற்கவும் முடிவதில்லை. பூமியிலுள்ள பல மகான்கள், தங்களின் தனிப்பட்ட சாதனையில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கும் இந்த யுத்தத்தைப் பற்றித் தெரிவதில்லை. அவர்களின் ஆன்மீக நிலைக்கேற்ப, இறைவன் அவர்கள் மூலமாக இயங்குகிறான். அதைத்தவிர இந்த யுத்தத்தில் நல்ல சக்திகளின் பக்கத்தை அவர்களால் பலப்படுத்த முடிவதில்லை.
  • நல்லனவற்றின் பக்கம் உள்ள, 30 – 50% ஆன்மீக நிலையில் இருக்கும் மக்களும் சூட்சும தேஹங்களும் இதைப்பற்றி மன அளவிலேயே புரிந்து வைத்துள்ளனர். அவர்களிடம் ஆன்ம பலம் இல்லாததால் ஆன்மீக நிலையில் அவர்களால் சிறிதளவே பங்கேற்க முடிகிறது. இது போன்று ஸ்தூலமாக உடலளவில் பூமியில் சண்டையிடுபவர், இறந்து போகின்றனர். இருந்தாலும் கடவுளின் பக்கம் இருந்து சண்டையிட்டதால் அவர்களுக்கு அதற்குரிய புண்ணிய பலன் கிடைக்கிறது.
  • 50% ஆன்மீக நிலை கொண்டவர்களும், ஆன்மீக உணர்வு மற்றும் போராடும் தன்மை கொண்டவர்களும் இந்த யுத்தத்தில் ஆன்மீக நிலையில் பங்கேற்க முடிகிறது. ஆன்மீக நிலையில் இந்த யுத்தத்தில் பங்கேற்க குறைவான அஹம், விழிப்படைந்த ஆறாவது அறிவு மற்றும் சம்ப்ரதாயங்களை, வகுப்புகளைக் கடந்த ஆன்மீக புரிதல் அவசியம். விஸ்வ மனம் மற்றும் விஸ்வ புத்தியை, அதோடு இறைவனின் சித்தத்தை அறிந்த உன்னத நிலையிலுள்ள மகான்களின் வழிகாட்டுதலின்படி இங்கு சாதகர்கள் நடந்து கொள்கின்றனர். சாதகர்களின் காரியங்கள் இறைவனின் சித்தப்படி இருப்பதால் அவர்களுக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது; அத்துடன் அவர்களது காரியங்கள் கொடுக்கல்-வாங்கல் கணக்கை ஏற்படுத்துவதில்லை. ஒருவன் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியே இறைவனை அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரவழைக்கிறது. பகவான், பக்தனின் துயர் துடைக்க ஓடி வருவதால் பக்தனோடு சம்பந்தப்பட்டவர்களும் அவனுடைய ஸ்தாபனமும் கூட இதனால் பயனடைகிறது. ஒரு உதாரணத்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். பூகம்பத்தால் ஒரு கட்டிடத்தில் மாட்டிக் கொண்ட ஒரு பக்தன் பகவானைக் கூப்பிடும்போது, பகவான் அந்த பக்தனைக் காப்பாற்ற யாரையாவது அனுப்புவான். அப்பொழுது அந்த பக்தனுடன் கூட மாட்டிக் கொண்டவர்களும் காப்பாற்றப்படுவர்.
  • சமூக நலனிற்காக சமஷ்டி சாதனை செய்ய வழிகாட்டுதல் அளித்து ஆபத்துக் காலத்திலிருந்து தப்பித்து வெளியே வர வழிகாட்டுதல் வழங்கும் மகான்கள் வெகு சிலரே உள்ளனர். பூமியில் மறுபடியும் தர்ம சன்ஸ்தாபனம் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவர்கள் இதை செய்கின்றனர். இதனால் தர்மத்தை ஆதாரமாகக் கொண்ட இவர்கள் இறைவனோடு அதிக அளவு ஒன்றியவர்கள். சமூக நலனிற்காக செய்யப்படும் சமஷ்டி சாதனை என்பது ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை தத்துவங்களின் அடிப்படையில் மனித குலத்தை ஆன்மீக பயிற்சி புரிய உதவுவது மற்றும் தார்மீக வாழ்வு வாழ்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. அதற்கேற்ப கடவுள் அவர்களின் மூலமாக அதிகம் செயல்படுகிறார். இத்தகைய மகான்கள் சூட்சும யுத்தத்தில் பங்கேற்கின்றனர். அத்துடன் சாதகர்களுக்கு இந்த அசுர சக்திகளை, ஆன்மீக நிலையில் எவ்வாறு எதிர்ப்பது என வழிகாட்டுகின்றனர்.
  • அதிக அஹம்பாவம் மற்றும் சமூக விரோத போக்குடைய, 30% ஆன்மீக நிலைக்கு கீழே உள்ள அனைத்து நபர்களும் சூட்சும தேஹங்களும் அசுர சக்திகளின் பக்கத்தை சேர்ந்தவர்கள் என கருதப்படுவர். இது போன்றவர்கள் குற்ற செயல்கள் மற்றும் தீவிரவாதத் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராக, ஊழல், பலாத்கார செயல்கள் செய்பவராக, கடவுள் நிந்தனை செய்பவராக இருப்பர். மத அடிப்படைவாதிகள், தாங்கள் கடவுளின் பக்கம் இருப்பதாக கூறிக் கொண்டு மத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவர்களும் தீய சக்திகளின் கீழ் வருவர். சூட்சும யுத்தத்தின் ஒரு பகுதியாக உயர் நிலை தீய சக்திகளான (பூதங்கள், பிசாசுகள், தீய சக்திகள், முதலியன) மாந்த்ரீகர்கள், பலவீனமாக உள்ள மூதாதையர்களின் சூட்சும தேஹங்களை அடிமைப்படுத்தி அவர்களின் கொடுக்கல்-வாங்கல் கணக்கை உபயோகப்படுத்தி அவர்களின் நல்ல சந்ததியினருக்கு கெடுதல் விளைவிக்கின்றனர்.

இக்கட்டுரையைப் படிக்கவும் – எனக்கு நெருக்கமான, இறந்து போன உறவினர் மற்றும் என் மூதாதையர் ஏன் எனக்கு கஷ்டம் தர விரும்புகின்றனர்?

4. தற்போது நடக்கும் சூட்சும யுத்தம்

நாம் தற்போது வாழும் இந்த கலியுகம், தலைமை கலியுகத்தின் ஒரு பகுதியான கலியுகத்தின் ஒரு பகுதியான கலியுகத்தின் ஒரு பகுதியான கலியுகத்தின் ஒரு பகுதியான கலியுகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அதனால் நாம் தற்பொழுது தலைமை கலியுகத்தின் அதிகபட்ச இருள் படர்ந்த குறுயுகத்தில் உள்ளோம். இதில் உலக இன்பங்கள், ஆன்மீக பற்றாக்குறை, சுயநலம் ஆகியவை உச்சத்தை எட்டியுள்ளன. இவையெல்லாம் மனிதனின் தமோ குணம் அதிகரித்ததை சுட்டிக் காட்டுகிறது.

2006-ல் நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் உள்ள விகிதாசாரம் 70:30 என்ற நிலையில் இருந்தது. தற்பொழுது தீய சக்திகள் 30% நிலையை எட்டியுள்ளன. இந்த குறுயுகத்தில் சாத்வீகத் தன்மை அடி மட்டத்திற்கு போய் விட்டதை இது சுட்டிக் காட்டுகிறது. ஷேர் மார்க்கெட்டில் இன்டெக்ஸ் ஒரு நிலைக்கு கீழே செல்லும்போது ஷேர் மார்க்கெட் சரிந்து விட்டது என்று கூறுவதைப் போன்றது இது.

‘70 – 30 என்ற விகிதாசாரத்தில் நல்ல சக்திகள் அதிகபட்சம் இருக்கும்போது என்ன கஷ்டம் ஏற்படக்கூடும்?’ என்று சிலர் கேட்கலாம். முதல் குறிப்பின் இறுதி பத்தியில், உலகின் பெரும்பான்மையினர் இப்பொழுது தீயவர்களாக உள்ளனர் என்ற கூற்றிற்கு மாறாக இது உள்ளது. இதற்கான பதில், பெரும்பான்மையான நல்ல சக்திகள் மேலுலகங்களில் உள்ளன. மேலுலகங்களில் உள்ள இவர்கள், நடப்பன எல்லாவற்றையும் சாக்ஷி உணர்வுடன் பார்க்கும் அளவு இறைவனோடு ஒன்றிப் போனவர்கள்; எல்லாமே இறைவன் சித்தப்படி நடக்கின்றன என்று உணர்ந்தவர்கள். நல்ல சக்திகளின் இந்த குணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீய சக்திகள் உலகத்தில் தங்கள் ராஜ்யத்தை ஸ்தாபிக்க முயல்கின்றன.

இன்றைய காலகட்டத்தில், மனித இனம் ஒரு மாபெரும் மாற்றத்தைக் காணப் போகின்றது; தலைமை கலியுகத்தின் ஒரு பகுதியான குறு கலியுகம் குறு சத்ய யுகத்திற்குள் அடியெடுத்து வைக்கப் போகின்றது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த பூமண்டலம் தூய்மையாக்கப்பட்டு தமோ குணம் நிறைந்த மக்களும் பொருட்களும் அழிக்கப்படுவர்.

பெரும்பான்மையான மனித குலத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டு சூட்சும உலகங்களில் 1999 – 2012 ஆண்டுகளில் நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே ஒரு மாபெரும் சூட்சும யுத்தம் நடந்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்த சூட்சும யுத்தம் சிறிதளவு பூவுலகிலும் வெளிப்பட்டது. அந்த சமயங்களில் இயற்கை உத்பாதங்கள், யுத்தங்கள், சமூக கொந்தளிப்பு, சமூக விரோத காரியங்கள் ஆகியவை அதிகரித்ததை நாம் பார்த்தோம். இதன் மூல காரணம் தீய சக்திகளோடு சம்பந்தப்பட்ட தமோ குணம் அதிகரித்தது (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள், முதலியன) ஆகும்; அத்துடன் ஆன்மீக பயிற்சி செய்யாத, தர்ம வழியிலிருந்து பிறழிய சமூகமும் ஒரு காரணமாகும்.

5. தற்போது நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் சூட்சும யுத்தத்தின் விவரங்கள்

1999-ம் ஆண்டு துவக்கத்திலிருந்து சூட்சும உலகங்களில், நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடந்து வந்த யுத்தம் தீவிரமாயிற்று. சூட்சும உலகங்களின் மிகப் பெரிய தீய சக்திகளான மாந்த்ரீகர்களை எதிர்த்து, தெய்வங்களும் மகான்களும் போரிடுகின்றனர். இந்த யுத்தத்தை, நல்ல சக்திகள் சூட்சுமமாகவே, தங்களின் இருப்பைக் கொண்டே நடத்துகின்றன. இருப்பு என்பதன் அர்த்தத்தை சூரியன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சூரியனின் வரவால் மலர்கள் மலர்கின்றன; சூரியன் தன் வரவை தெரிவிப்பதில்லை; மலர்களை மலர சொல்வதில்லை. சூரியனின் இருப்பால் இவை தானாகவே நடக்கின்றன. அதேபோல் சர்வ ஞானம் கொண்ட, சர்வ வியாபகமான, சர்வ சக்தி படைத்த மகான்களும் தெய்வங்களும் தங்களின் இருப்பாலேயே, தொடர்ந்து அவர்களிடமிருந்து வெளிப்படும் சைதன்யத்தால் இந்த யுத்தத்தில் போரிடுகின்றனர்.

இந்த கட்டுரையைப் படிக்கவும் – பிரபஞ்ச சக்திகளின் வரிசைக்கிரமம்

சமூக நலனிற்காக சமஷ்டி சாதனை செய்யும் சாதகர்களும் இந்த யுத்தத்தில் தங்களின் சிறிதளவு சக்தியை உபயோகித்து பங்கேற்கின்றனர். அவர்கள், தங்களின் சாதனையின் ஒரு பகுதியாக சமூகத்தினரிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது தீய சக்திகளால் தாக்கப்படுகின்றனர். இந்த தாக்குதல்களை, ஆன்மீக நிவாரண வழிகள் மூலமாகவும் ஆன்மீக பயிற்சி செய்து கிடைத்த ஆன்ம பலத்தினாலும் மகான்களின் ஆசீர்வாதத்தாலும் முக்கியமாக கடவுளின் அருளாலும் சாதகர்கள், சமாளிக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்ட வரைபடத்தின்படி, சூட்சும உலகின் தீய சக்திகளும், பூமியிலுள்ள சமூக விரோத சக்திகளுக்கு சக்தியை வழங்குகின்றன. இதன் விளைவை நாம் அன்றாடம் தொலைகாட்சி செய்தி படங்களில் பார்க்கிறோம்; ஒழுக்கமின்மை, வக்கிர செயல்பாடுகள், அதிகரிக்கும் தீவிரவாதம், கலவரங்கள், யுத்தங்கள் ஆகியவற்றால் தொடர்ந்து பீடிக்கப்படும் உலகத்தை நாம் காண்கிறோம்.

தற்போதைய நிலவரத்தின் ஆன்மீக காரணங்களை, பரிமாணத்தை அறியாத பலர், தீவிரவாதத்தை எதிர்த்து யுத்தம் மேற்கொள்வதன் மூலமாக, மன அளவில் மாநாடுகள், பேரவைகள் நடத்துவதன் மூலமாக இதை சரி செய்ய முயல்கின்றனர். ஆனால் சமூக விரோத சக்திகள் அனைத்தும், சூட்சும தீய சக்திகளின் கைப்பாவையாக விளங்குவதால் இது சரியான தீர்வாக அமையாது. அதனால் தீய சக்திகளை எதிர்கொள்ளவோ வெல்லவோ, ஸ்தூலமான, மனோரீதியான வழிகள் சரி வராது. மிக மோசமான சமூக விரோத சக்திகளை பூமியிலிருந்து அழித்தாலும், உயர் நிலை தீய சக்திகள் தங்களின் ஆன்மீக பலத்தைக் கொண்டு மற்றும் சில சமூக விரோத சக்திகளை தங்களின் கைப்பாவையாக்கி கொள்வர். ஸ்தூலமான பலத்தைக் காட்டிலும் இவர்களின் இந்த சூட்சும பலம் அதிக சக்தி வாய்ந்தது.

பூவுலகின் இன்றைய நிலை மாற, சூட்சும உலக தீய சக்திகளை வெல்வதே ஒரே வழி. இதற்காகத்தான் தெய்வங்களும் மகான்களும் இந்த சூட்சும யுத்தத்தில் பங்கேற்கின்றனர்; மிகத் தாழ்ந்த, பாதாள உலகங்களிலுள்ள பலம் வாய்ந்த அசுர சக்திகளை, தங்களின் ஆன்ம பலத்தால் 1999–லிருந்து 2012–வரை எதிர்த்து யுத்தம் செய்துள்ளனர்.

2012-ல் சூட்சும யுத்தம் உச்சத்தை தொட்டது; அதை அடுத்த வருடங்களில், சூட்சும நல்ல சக்திகள் சூட்சும தீய சக்திகளை வென்றதால் யுத்தம் குறைய ஆரம்பித்தது; சூட்சும மாந்த்ரீகர்களிடமிருந்து சக்தி பெற்றுக் கொண்டிருந்த சமூக விரோத சக்திகளுக்கு இனி அந்த சக்தி கிடைக்காது. அதன் விளைவாக உலகிலுள்ள சமூக விரோத சக்திகளும் தீய சக்திகளால் பீடிக்கப்பட்டவர்களும் குறைவார்கள்.  அவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். இதற்குப் பிறகு உலகையே உலுக்கக் கூடிய கடும் யுத்தம் ஏற்படும். பூமியிலிருந்து தீய மனிதர்களையும் சமூக விரோத சக்திகளையும் வேரோடு அழிக்க ஸ்தூலத்தில் நடக்கும் இத்தகைய யுத்தம் தேவைப்படுகிறது. வரக்கூடிய காலத்தில் நடக்கப் போகும் இந்த ஸ்தூல யுத்தம் மற்றும் இயற்கை உத்பாதங்களால் உலகின் பெரும் ஜனத்தொகை குறையும். இதுவரை பார்த்திராத அளவு நடக்கப் போகும் இந்த யுத்தத்தால் மனித இனம் முழுவதும் பாதிக்கப்படும். 30% ஆன்மீக நிலைக்கு கீழே உள்ளவர்கள் இதனால் அதிக அளவு பாதிக்கப்படுவர். தீயவர்கள், தீய சக்திகளின் பக்கம் போரிடுவதால் அழிக்கப்படுவர். மதில் மேல் பூனையாக அதாவது நல்லவை பக்கம் மற்றும் தீயவை பக்கம் ஆகிய இரண்டிலும் சேராதவர் ‘மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி’ என்பதற்கேற்ப அடி வாங்குவர்.

6. தற்போதைய காலகட்டத்தின் ஆன்மீக மகத்துவம்

பிரபஞ்சத்தில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட சூட்சும அடிப்படை தன்மை மேலோங்கியிருக்கும். உதாரணத்திற்கு சத்யயுகத்தில் சத்வ தன்மை மோலோங்கியிருந்தது; இப்பொழுதுள்ள கலியுகத்தில் ரஜ-தம தன்மை மோலோங்கி இருக்கிறது.

1999 – 2025 என்ற இந்த காலகட்டம், இரு யுகங்களின் சந்திக் காலமாக கருதப்படுகிறது. தலைமை கலியுகத்தில், குறு-கலியுகத்திலிருந்து, ஆன்மீகப்படி மேம்பட்ட குறு-சத்யயுகத்திற்கு செல்லப் போகிறோம். சந்திக் காலமான இந்த 23 வருடங்களில் யார் அடிப்படை ஆன்மீக தத்துவங்களின்படி ஆன்மீக பயிற்சி செய்கின்றாரோ அவர் பெரும் பயன் அடைவார். ஏனென்றால், எதிர்ப்பு மிகுந்த காலத்தில் யார் ஆன்மீக பயிற்சி செய்கின்றாரோ அவருக்கு இறைவன் ஆன்மீக முன்னேற்றத்தை அருளுவார்.

சந்திக்காலமான இந்த 23 வருடங்களில் செய்யப்படும் ஆன்மீக பயிற்சியின் ஒவ்வொரு வருடமும் மற்ற நேரங்களில் செய்யப்படும் 50 வருட ஆன்மீக பயிற்சிக்கு நிகரானது. சராசரி மனித ஆயுள் 50 வருடங்கள் என வைத்துக் கொண்டால்; இந்த 23 வருடங்களில் செய்யப்படும் ஆன்மீக பயிற்சி 1000 வருடங்களுக்கு நிகரானது. மற்றொரு விதத்தில் பார்த்தால் இந்த ஒரு பிறவியின் ஆன்மீக பயிற்சி 20 பிறவிகளின் ஆன்மீக பயிற்சிக்கு நிகரானது.

7. நல்ல சக்தி மற்றும் தீய சக்திகளின் யுத்தத்திற்கு பின்பு உள்ள நிலை

7.1 அசுர சக்திகளுக்கு

இந்த யுத்த முடிவில் சூட்சும அசுர சக்திகள் அடக்கப்படும், அவைகள் சண்டையிடுவதை நிறுத்தி கடுமையான ஆன்மீக பயிற்சி செய்து மறுபடியும் ஆன்மீக சக்தியை வளர்த்துக் கொள்ள முயல்வார்கள்; அதன் மூலம் மறுபடியும் பிரபஞ்சத்தைக் கைக்கொள்ள முயல்வார்கள். இந்த அசுர சக்திகள் அடக்கப்பட்டு விட்டதால் பூமியிலும் புவர்லோகத்திற்கு மேலுள்ள அனைத்து லோகங்களிலும் சாத்வீக தன்மை நிறைந்த காலம் மலரும்; குறு-சத்யயுகம் எனப்படும் தெய்வீக ராஜ்யம் ஆரம்பிக்கும். இந்த யுகம் முதலில் பூமிக்கு மேலே உள்ள அனைத்து சூட்சும லோகங்களிலும் நிறுவப்பட்டு பின்பு பூமியில் நிறுவப்படும்.

7.2 மனித இனத்திற்கு

மனித குல சரித்திரத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் உள்ளோம். ஸ்தூல யுத்தத்திற்கு பிறகு புது யுகத்திற்கு ஏற்றவாறு உலகம் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள பரிசோதனைகள் நிறைந்த காலம் வரும். இந்த நேரத்தில் தெய்வீக ராஜ்யத்தை பரிபாலனம் செய்யும் தகுதி உயிர் தப்பியவர்களுக்கு ஏற்படும். 2025 வரை இது நீடிக்கும். இந்த பரிசோதனைக் காலத்திற்கு பிறகு மனிதகுலம் ஆயிரம் வருடங்களுக்கு சாந்தியை அனுபவிக்கும். இந்த புது யுகத்தில் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்டு, இதுவரை விஞ்ஞானத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆயுர்வேதம் போன்ற பழங்கலைகள் செழித்து வளரும்.

இந்த ஆயிரம் வருடங்களே பிரபஞ்சத்தின் இறுதி தெய்வீக யுகம் என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த யுகத்தில் உருவாகும் சாத்வீகத் தன்மையே, 400,000 வருடங்களுக்கு, பிரபஞ்சம் முடியும் வரை மனித குலத்திற்கு கிடைக்கும் சாத்வீகத் தன்மையாகும். இந்த ஆயிரம் வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அடிப்படை சாத்வீகத் தன்மையை உருவாக்க இயலாது. பிரபஞ்சம் சிறிது சிறிதாக தமோ தன்மையை நோக்கி சறுக்கி சென்று இறுதியில் பிரளய காலத்தில் தவிர்க்க முடியாத அழிவை எதிர்கொள்ளும்.

பிரபஞ்சத்திலுள்ள எல்லா லோகங்களைக் காட்டிலும் பூமி மட்டுமே ஆன்மீக பயிற்சி செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. துரதிஷ்டவசமாக அமைதியும் செழுமையும் நிலவும்போது மனித இனம் மெதுமெதுவாக உலக சுகங்களில் தன்னை இழந்து ஆன்மீக பயிற்சியை மறக்கின்றது. இதன் விளைவாக சாத்வீகத் தன்மை குறைய ஆரம்பிக்கின்றது. அதனால் அதர்மம் தலைதூக்கி, சாத்வீகத் தன்மை குறைந்து ரஜ-தம தன்மை அதிகரிக்கிறது. இது எல்லா லோகங்களையும் பாதிக்கிறது. இது சூட்சும லோகங்களை குறைவாகவே பாதித்தாலும் அங்குள்ள சூட்சும நல்ல தேஹங்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது. ஏனென்றால் அவர்கள் உயர்ந்த சாத்வீக நிலையிலேயே எப்பொழுதும் இருப்பவர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த கட்டுரையை படிக்கவும் – உலக மகா யுத்தம் 3 அனுமானங்கள் மற்றும் பெரும் அழிவு

8. முடிவுரை

ஆன்மீக வளர்ச்சி அடைய விரும்பும் சாதகர்களுக்கு இந்த 23 வருடங்கள் என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஒரு அரிய வாய்ப்பு. இக்காலகட்டத்தில் இறைவனை அடைய செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியும் பல மடங்காக பலனளிக்கும். உங்களுக்கு ஆன்மீக பயிற்சியை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற கேள்வி ஏற்பட்டால் பாருங்கள் எங்களின் பக்கம் – உங்களின் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்

உலகிலுள்ள தீயவர்களும் சமூக விரோத சக்திகளும் சூட்சும தீய சக்திகளின் கைப்பாவைகளாக மாறுகின்றனர். இந்த தீய சக்திகளின் பலத்தைக் குறைக்க, எல்லா சாதகர்களும் நாமஜபம் மற்றும் பக்தியுணர்வை அதிகரித்து தங்களின் ஆன்மீக பயிற்சியை மேம்படுத்த வேண்டும். அதோடு கூட அஹம்பாவத்தைக் (அஹம்பாவம்) குறைத்து நம்மிடமுள்ள குறைகளை (குறைபாடுகள்) களைவதால் விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகின்றது.

மகான்களின் (மகான்கள்) வழிகாட்டுதலின் பேரில் 60% ஆன்மீக நிலைக்கு மேம்பட்ட சாதகர்கள் தீய சக்திகளின் அழிவிற்காக நாமஜபம் மற்றும் பிரார்த்தனை செய்யலாம்.