1. ஒரு வாஸ்துவில் எதிர்மறை அதிர்வலைகள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இருப்பதன் காரணம் பற்றிய அறிமுகம்
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வீடுகளில் எதிர்மறை அதிர்வலைகள் இருப்பதாக ஆன்மீக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எதிர்மறை அதிர்வலைகள் பல காரணங்களால் ஏற்படலாம்:
- அந்த வாஸ்துவில் குடியிருப்பவர்கள்
- ஆன்மீக பயிற்சி செய்கின்றார்களா?
- அந்த ஆன்மீக பயிற்சி, ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்கியுள்ளதா?
- அங்குள்ள மனிதர்களின் மனநிலை எப்படிப்பட்டது?
- அந்த வாஸ்து எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
- வாஸ்து : கட்டுமான வகை, வீட்டின் தூய்மை, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அவற்றின் இடம் போன்றவை
- வீடு கட்டப்பட்டுள்ள நிலம்
- சுற்றியுள்ள பகுதி
மிக முக்கியமாக, இந்த எதிர்மறை அதிர்வலைகள் ஆவிகளை (பிசாசுகள், பேய்கள், தீய சக்திகள் போன்றவை) அல்லது மறைந்த மூதாதையர்களை ஈர்க்கின்றன. எதிர்மறையான அதிர்வலைகள் உள்ள வாஸ்துவில், ஆவிகள் மற்றும் மறைந்த மூதாதையர்களை ஈர்ப்பதில் பங்களிக்கும் காரணிகள் மற்றும் அவற்றின் சராசரியான சதவீதங்களை பின்வரும் விளக்கப்படம் காட்டுகிறது.

உதாரணமாக, குடியிருக்கும் மனிதர்களுக்கு கோபம், பேராசை, போதை பழக்கம் போன்ற பல ஆளுமை குறைகள் இருந்தால், அவர்கள் ஆவிகள் அல்லது மறைந்த மூதாதையர்களை ஈர்ப்பார்கள்.அந்த வாஸ்து போதைபழக்கம், தாமஸீக இசை போன்றவற்றில் ஈடுபட பயன்படுத்தப்படுகிறது என்றால், அதுவும் ஆவிகளை ஈர்க்கும். மேலும், நமது மூதாதையர்களில் 60% பேர் இறந்த பிறகும் பூலோகத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த மூதாதையர்களில் ஏறக்குறைய பாதி பேர் தங்களுக்குப் பிடித்த இடம் (மூதாதையர் வீடு) அல்லது பொருளைச் சுற்றியும், மற்ற பாதி அவர்கள் மிகவும் விரும்பும் நபர்களைச் சுற்றியும் திரிகின்றனர். பூலோகத்தில் சிக்கிக்கொண்ட மறைந்த மூதாதையர்கள் தங்கள் சந்ததியினருக்கோ அல்லது தங்கள் மூதாதையர் வீட்டில் வசிக்கும் மக்களுக்கோ பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
என் மூதாதையர் என்னை ஏன் தொந்தரவு செய்ய விரும்புகின்றனர்? என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
இருப்பினும், பெரும்பாலான மனிதர்களுக்கு தங்கள் வாஸ்துவில் உள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகளைப் பற்றி தெரிவதில்லை. ஏனெனில் அவர்களே ஆவிகளின் கஷ்டம் தரும் சக்தியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் ஆவிகள், மறைந்த மூதாதையர்களின் இருப்பு மற்றும் எதிர்மறையான அதிர்வலைகளை உணர்வதில்லை. ஆவிகளின் இருப்பு காரணமாக, பெரும்பாலான மக்களால் தங்களிடம் உள்ள சூட்சும கஷ்டங்களான,ஆறாவது அறிவின் பற்றாக்குறை மற்றும் கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணம்(படலம்)(சராசரியாக 4 செ.மீ.) ஆகியவற்றை சரியாக உணர முடிவதில்லை.

ஒரு ஒப்புவமையின் மூலம் இதை புரிந்து கொள்ள நாம் முயற்சிக்கலாம், மருத்துவமனை ஊழியர்களை(பணியாளர்களை) அங்கு உபயோகப்படுத்தும் கிருமிநாசினிகள் மற்றும் மருந்துகளின் வாசம் எப்படிப் பாதிப்பது இல்லையோ அதுபோல, தங்களைச் சுற்றி கஷ்டம் தரும் சக்தியின் (அதாவது ரஜ-தம) ஆவரணம் உள்ளவர்கள், ஒரு வாஸ்துவில் அதிகமான ரஜ-தம நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதன் மூலம் நன்றாக உணர்வார்கள். உதாரணமாக, குடிப்பழக்கம் உள்ள ஒரு பீடிக்கப்பட்ட நபர், வாஸ்துவில் அதிக மதுபானப்புழக்கம் ஏற்படும்போது மகிழ்ச்சியடைகிறார்.
2. வாஸ்துவில் உள்ள அமானுஷ்ய எதிர்மறை அதிர்வலைகளை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
ஒருவரின் சுற்றுச்சூழலை ஆன்மீக ரீதியில் சுத்தப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது:
| நிவாரணம் | % முக்கியத்துவம் |
|---|---|
| வாஸ்துவில் குடியிருப்பவர்களின் ஆன்மீக பயிற்சி | 30 |
| வாஸ்துவில் குடியிருப்பவர்களின் மனதிற்கு உகந்த ஆளுமை | 30 |
| வாஸ்துசுத்தி சடங்குகள் | 14 |
| மகான்களின் வருகை | 10 |
| கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்தல் | 2 |
| ஒரு வாஸ்துவின் சூட்சும அதிர்வலைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் குறைகளை களைவது நல்லது. | 2 |
| ஓஜா பலகை(ouija board) போன்ற தீயசக்திகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பது | 2 |
| இதர (துளசி போன்ற ஸாத்வீகமான செடிகளை வளர்ப்பது முதலியவை) | 10 |
குறிப்பு: வாஸ்துவில் உள்ள எதிர்மறைத்தன்மையை குறைக்க, பின்வரும் ஆன்மீக நிவாரண வழிமுறைகள் பயனுள்ள கருவிகளாகும்:
- எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) ஊதுபத்திகளை ஏற்றுதல்
- தீர்த்தத்தை தெளித்தல் முதலியன()
ஒருவரின் வழக்கமான ஆன்மீக பயிற்சியுடன், பக்தி மற்றும் ஆன்மீக உணர்வோடு இந்த நிவாரண வழிமுறைகளைச் செய்வது, இம்முறைகளின் ஆற்றலை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சுய்(Feng Shui) ஆகியவை அமானுஷ்யத்தை அகற்றுவதில் மட்டுப்படுத்தப்பட்ட பங்கைக் கொண்டுள்ளன. வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சுய் ஆகிய இரண்டிலும் அறிவுறுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை விட, வாஸ்துவின் ஆன்மீக சுத்திகரிப்புக்காக செய்யப்படும் பொருத்தமான சடங்குகளே அதிக பலனைத் தருகின்றன. இருப்பினும், ஆன்மீகச் சுத்திகரிப்புக்கான சடங்குகள் மூலம் மிகவும் தாழ்ந்தநிலையிலுள்ள சின்ன ஆவிகளே வெளியேறுகின்றன. ஆவிகள் உள்ளதாகக் கூறப்படும் வீட்டை ஆன்மீக ரீதியில் சுத்தப்படுத்த பேயோட்டுபவர்களின் முயற்சியின் விளைவைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
| அமானுஷ்ய நிகழ்வுகளின் வகை1 | %2 | பலன் |
|---|---|---|
| உண்மையான | 30 | 03 |
| கற்பனையான | 30 | 304 |
| இதர | 40 | 104 |
அடிக்குறிப்புகள்:
- அமானுஷ்ய நிகழ்வுகளை மூன்று வகையாக வகைப்படுத்துகிறோம்
-
- உண்மையான: இங்கே நிஜமாகவே ஆவிகள் அல்லது நம் மறைந்த மூதாதையர்கள் வசிக்கின்றனர்.
- கற்பனையான: இங்கே வீட்டில் ஆவிகள் இருப்பதாக மக்கள் கற்பனை செய்கின்றனர்.
- இதர: இதில், வீட்டின் அமைப்பு, சுற்றியுள்ள நிலம், வாஸ்துவில் குடியிருப்பவர்களின் எண்ணங்கள்
போன்றவற்றால் ஏற்படும் எதிர்மறை அதிர்வலைகளால் வீட்டில் ஆவிகள் இருப்பதாக தோன்றலாம்.
-
- இந்த நெடுவரிசை வீட்டில் ஆவிகள் உள்ளது உண்மையா, கற்பனையா அல்லது வெறும் எதிர்மறை அதிர்வுகளா என்பதன் சராசரி நிகழ்தகவை (probability) வழங்குகிறது.
- சராசரியான ஒரு பேயோட்டுபவர் / மந்திரவாதி / தந்திரவாதி / ஆன்மீக நிவாரணமளிப்பவர் / பூசாரி / மனஆற்றல் உடையவர் (psychic) ஆகியோர் ஆவியை அகற்றுவதற்கான நிகழ்தகவு குறைவாக உள்ளது.
- ஒரு வாஸ்துவில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக கற்பனை செய்தவர்களில் 30% பேர், பேயோட்டுபவர்களை கொண்டு அங்கு சுத்திகரிப்பு செய்த பிறகு பேய் அகற்றப்பட்டது என்று மனோரீதியாக எண்ணி உள்அமைதி அடைவார்கள். மேலும், 10% மக்கள் அந்த வாஸ்துவில் ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு காரணம் ஆவிகள் அல்ல, இரண்டாம்நிலை எதிர்மறை அதிர்வலைகளே என்று உணரும்போது சிறிது பலன் அடைவார்கள்.
ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்கக்கூடிய ஆன்மீக பயிற்சி மட்டுமே வாஸ்துவிலிருந்து ஒரு பேயை ஒழிக்க நிலையான வழியாகும்.
