1. மறைந்த மூதாதையர்களுக்கான வருடாந்திர சிறப்பான நேரம் எது?

மறைந்த மூதாதையர்களுக்கான (பித்ரு பக்ஷம்/ மஹாளய பக்ஷம்) இரண்டு வார காலம் பற்றி மேலும் அறிய விரும்பினால், தயவுகூர்ந்து எங்கள் காணொளியை காணவும்.

பிரபஞ்சம் ஒரு சுழற்சி முறையில் இயங்குகிறது. உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு உத்தராயணம், ஒரு சங்கிராந்தி, வசந்த காலம், குளிர்காலம் போன்றவை உள்ளன. அதே போல் ஆன்மீக பரிமாணத்திலும் சுழற்சி நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் (வடக்கு அரைக்கோளத்தின்) மறைந்த மூதாதையர்கள், பூமி அல்லது பூலோகத்திற்கு அருகில் வரும் இரண்டு வார காலம் உள்ளது. 2023 ஆம் ஆண்டில், மறைந்த மூதாதையர்களுக்கான இரண்டு வார காலம் 29 செப்டம்பர் 2023 முதல் 14 அக்டோபர் 2023 வரை வருகிறது.

ஆன்மீக பயிற்சி பற்றாக்குறையால் பெரும்பாலான மூதாதையர்கள் மறுமையில் ஆன்மீக சக்தி இல்லாததால் சிக்கிக் கொள்கிறார்கள்.  உலக ஆசைகளில் தொடர்ந்து கட்டுண்டு இருப்பதால், தங்களுக்கு தானே உதவ முடியாத சூழ்நிலையில் அவர்கள் தொடர்ந்து அமைதியின்மையை உணர்கிறார்கள். இக்காலகட்டத்தில் அவர்கள் தங்கள் சந்ததியினருடன் இணையும் முயற்சியில் பூலோகத்தை நோக்கி வருகிறார்கள். மறுமையில் நம் மூதாதையர்களுக்கு உதவ ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்த காலம் நமக்கு வழங்குகிறது. பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு சேவை செய்வது எவ்வாறு நமது கடமையோ, அவ்விதமே அவர்கள் இறந்த பின்பும் அவர்களுக்கு செய்ய வேண்டிய  சில கடமைகள் நமக்கு உள்ளன.

இந்த கால கட்டத்தில் கோடிக்கும் அதிகமான மூதாதையர்களின் சூட்சும தேஹத்திலிருந்து வரும் சூட்சும அழுத்தம் மற்றும் அவர்களின் நிறைவேறாத ஆசைகளின் அதிர்வுகளால் சுற்று சூழல் நிரப்பப்படுகிறது. தீய சக்திகள், மூதாதையர்களின் ஆன்மீக பலவீனம் மற்றும் நிறைவேறாத ஆசைகளைப் பயன்படுத்தி, அவர்களின் சூட்சும தேஹத்தை தாக்குகின்றன. தீய சக்திகள் பெரும்பாலும் மூதாதையர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அதன் மூலம் அவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தி அவர்களை அடிமைகளாக்குகின்றன. நம்முடைய மூதாதையர்கள் நம்முடன் ஒரு கர்ம பிணைப்பைக் கொண்டிருப்பதால், தீய சக்திகள் நம் மூதாதையர்களைப் பயன்படுத்தி நம்மையும் தாக்க இயலும்.

2. மூதாதையர்களுக்கு நமது உதவி தேவை என்பதற்கான ஸ்தூல அறிகுறிகள்

மறைந்த மூதாதையர்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது ஏற்படும் சில ஸ்தூல  அறிகுறிகள் பின்வருமாறு.

 • உங்கள் குடும்பத்தினரில் சில உறுப்பினர்கள் மட்டும் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொள்வது (பெரும்பாலும் மறைந்த மூதாதையர்கள் தங்கள் சந்ததியினரை அணுகுவதற்கான ஒரு வழியாகவும், உதவிக்கான அழுகையாகவும், அவர்களின்  வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள்.  தனக்கு பிடித்த மகனையோ அல்லது ஆன்மீக பயிற்சி செய்யும் ஒரு சந்ததியினரையோ தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள், ஏனெனில் அந்த சந்ததியினரிடமிருந்து ஆன்மீக உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.)
 • பாம்புகளை உங்கள் கனவில் காண்பீர்கள்
 • உங்கள் மூதாதையர்களை கனவுகளில் அடிக்கடி காண்பீர்கள்
 • ஒரே காகம் உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருகை புரிதல் (முன்னோர்களின் சூட்சும தேஹங்கள் தற்காலிகமாக காகத்திற்குள் நுழைகின்றன.)

மேலும் படியுங்கள்: ஏன் மறைந்த மூதாதையர்கள் என்னை தொந்தரவு செய்யவிரும்புகிறார்கள்?

3. நம்முடைய மூதாதையர்களுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்?

எங்களது எஸ்.எஸ்.ஆர்.எஃப் சொற்பொழிவு சுற்றுப்பயணத்தில், பங்கேற்பாளர்கள் மறைந்த மூதாதையர்களின் ஆவிகளுக்கு தங்களால் என்ன செய்ய முடியும் என்பதிலும், மறுமையிலிருந்து தங்கள் மூதாதையர்கள் தங்கள் மீது எவ்வாறு ஆதிக்கம்  செலுத்துகிறார்கள் என்பதை அறிவதிலும் அதிக ஆர்வமாக உள்ளனர் என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மறைந்த மூதாதையர்களுக்கு அவர்களது மறுமை வாழ்வில் உதவுவதற்கும் ஒருவர் செய்யக்கூடிய சில செயல்கள் பின்வருமாறு:

3.1 “ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபம் செய்யவும்

இந்த ஆன்மீக பாதுகாப்பு நாமஜபமானது இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது இது நமக்கு (சந்ததியினருக்கு) மறைந்த நம் மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து ஆன்மீக பாதுகாப்பை வழங்குவதுடன், மறுமையில் நம் மூதாதையர்களுக்கு  கதி பெற தேவையான ஆன்மீக ஆற்றலையும் அளிக்கிறது.

 • சராசரி நபர் ஒருவர் (தொடர்ச்சியான ஆன்மீகப் பயிற்சியை செய்யாதவர்), இந்த பதினைந்து நாட்களில் தினமும் குறைந்தபட்சம் 4 மணி நேரம் இந்த நாமஜபத்தை செய்ய, எஸ்.எஸ்.ஆர்.எஃப் பரிந்துரைக்கிறது.
 • தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளும் ஸாதகர்களுக்கு அவர்களின் ஆன்மீக பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து நாமஜபத்தின் அளவு 1 மணிநேரமாகக் குறைக்கப்படலாம். உதாரணமாக, ஒரு நாளைக்கு பல மணிநேர ஆன்மீக பயிற்சியைச் செய்பவர்கள் “ஸ்ரீ குருதேவ தத்த” நாமத்தை 1 மணிநேரம் மட்டும் செய்தாலே போது மானது.

“ஸ்ரீ குருதேவ தத்த’’ நாமஜபம் செய்வதால் 50% நன்மை மட்டுமே ஒருவர் அடையமுடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மீதம்  50% நன்மை ‘சிரார்த்தம்’ செய்வதன் மூலம் கிடைக்கிறது.

3.2 சிரார்த்தம் செய்யுங்கள்

3.2.1 சிரார்த்தத்தின் வரைவிலக்கணம்

‘சிரார்த்தம்’ என்ற சொல் ‘சிரத்தை’ (நம்பிக்கை) என்பதிலிருந்து உருவானது. மறைந்த மூதாதையர்கள் நமக்காக செய்த அனைத்தையும் நம்மால் திருப்பி செலுத்த முடியாது. முழுமையான நம்பிக்கையுடன் அவர்களுக்காக செய்யப்படும் சடங்குகள் சிரார்த்தம் என்று அழைக்கப்படுகின்றன.

சிரார்த்தம் என்பது மறைந்த மூதாதையர்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்வது மட்டுமல்ல; இது செய்யப்பட வேண்டிய  ஒரு குறிப்பிட்ட சடங்காகும்.

3.2.2 சிரார்த்த சடங்கைச் செய்வதன் நன்மைகள்

ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த சிரார்த்தம் செய்வதன் மூலம், மறைந்த மூதாதையர்களின் ஆசைகள் பூர்த்தி செய்யப்படுகிறது மற்றும் அவர்கள் மறுமையிலான பயணங்களுக்கு சக்தியையும் பெறுகிறார்கள். மறைந்த மூதாதையரின் ஒரு தீவிர ஆசை, மறுமையில் அவர்களின் பயணத்தை தடுக்க போதுமானது. சிரார்த்தம் மூலம் பெறப்பட்ட சக்தி அந்த விருப்பம் நிறைவேற்ற பயன்படுத்தப்படுகிறது. எனவே, சிரார்த்தம் தவறாமல் செய்யப்படும் போது, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் , அவர்களின் ஆசைகள் குறைந்து, மறுமையில் அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களில் நற்கதி அடைகிறார்கள்.

தற்போதைய காலங்களில், பெரும்பாலான மக்கள் ஆன்மீகத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதில்லை. நம் மறைந்த மூதாதையர்கள் வாழ்ந்த போதும் இதே நிலைமை யிலேயே  இருந்துள்ளனர். இதனால் மறைந்த மூதாதையர்களின் சூட்சும தேஹத்திற்கு, மறுமையில் முன்னேறி செல்வதற்கான ஆன்மீக ஆற்றல் இருப்பதில்லை. எனவே, மறுமை வாழ்வில் முன்னேற, சிரார்த்தம் போன்ற சடங்குகள் மூலம் பெறப்படும் வெளிப்புற ஆன்மீக ஆற்றலின் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது. சடங்கின் போது மூதாதையர்களின் பெயர்களை சொல்லப்படுவதால், சடங்குகளிலிருந்து உருவாகும் அதிர்வுகள் மறைந்த மூதாதையருடன் பொருந்துகின்றன, இதனால் அவருக்கு தேவையான ஆன்மீக ஆற்றல் கிடைக்கிறது. மறுமையில் பெரும்பாலோர் சிக்கிக் கொள்ளும் ம்ருத்யு லோகத்தை தாண்டிச் செல்ல உதவுகிறது. மேலும், நாம் சிரார்த்தம் செய்வதால், ம்ருத்யு லோகம் மற்றும் புவர்லோகத்திலும்  இருக்கும் மூதாதையர்களால் நாம் மோசமாக பாதிக்கப்படுவதில்லை. “ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்துடன் ஒப்பிடுகையில் சிரார்த்தம், மறுமை வாழ்வில் மிக விரைவாக முன்னேற மூதாதையர்களுக்கு உதவுகிறது

சிரார்த்தம் செய்வதன் மற்றொரு முக்கியமான நன்மை என்னவென்றால், சடங்கு யாருக்காக நடத்தப்படுகிறத, அந்த மூதாதையரின்(கள்) மனநிலையை சாதகமாக மாற்ற உதவுகிறது. இது குறிப்பாக, நிறைய புண்ணியங்கள் /குறைவான பற்று மற்றும் ஆன்மீக ரீதியாக அதிக  நேர்மறையான மூதாதையர்களுக்கு பொருந்தும். எப்பொழுது சடங்கு ஆன்மீக உணர்வுடன் செய்யப்படுகிறத, அப்போது அது மறைந்த மூதாதையர்களுக்கும் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கும் ஆசையை  அதிகரித்து  அதனால் ஆன்மீக ரீதியாகவும் அவர்கள் வளர உதவலாம். அதன் படி, மூதாதையர்கள் பூலோகத்தில் மறுபிறவி எடுக்கும்போது, ஆன்மீக பயிற்சிக்கான வித்து அவர்களது  மனதில் விதைக்கப்பட்டு, அவர்கள்  தங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கிய  பயணத்தை தொடங்குவதற்கு உதவுகிறது.

3.2.3 எளிய முறையிலான சிரார்த்த சடங்கு

பாரம்பரிய முறையில் செய்யப்படும் சிரார்த்தம் மிகவும் விரிவானது. இதனால் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து அச்சடங்கை  செய்வது சிலருக்கு கடினம். தங்களின் மறைந்த மூதாதையர்களுக்காக, முழுமையான சிரார்த்த சடங்கிற்கு ஒருவர் ஏற்பாடு செய்ய முடியாவிட்டால், எவரும் செய்யக்கூடிய சில எளிய வழிமுறைகளை எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழங்கியுள்ளது. பாரம்பரிய சிரார்த்த சடங்கை குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் உறுப்பினர் தான்  செய்ய வேண்டும். இருப்பினும், எளிய முறை சடங்கை எந்த ஆண் அல்லது பெண் குடும்ப உறுப்பினர்களும் செய்யலாம். (குறிப்பு: பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தின் போது சடங்கை செய்யக்கூடாது, அதாவது 5 நாட்கள்.)

பொதுவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த சடங்குகளை, பித்ரு பக்ஷத்தின் பதினைந்து நாட்களும் செய்ய வேண்டும். இருப்பினும், இது சாத்தியமில்லை என்றால், இந்த இரண்டு வாரக்காலத்தில் குறைந்தபட்சம் ஒரு நாளாவது செய்ய வேண்டும். முடிந்தால் நீங்கள் சிரார்த்தம் செய்ய திட்டமிட்டுள்ள நாளில் உபவாசம் இருக்கவும்.

படி1: உணவு படைக்கும் சடங்கு 

வேகவைத்த அரிசி சோற்றுடன் சிறிது  கருப்பு எள் கலந்து ஒரு தட்டில் ஒரு குவளை தண்ணீருடன்  உங்கள்  வீட்டின் கொல்லைப்புறம் அல்லது மேல்மாடத்தில் அல்லது வீட்டிற்கு வெளியே வைக்கவும். அருமையான சைவ உணவையும்  சமைத்து படையலாக  வைக்கலாம். இதற்கான சிறப்பான நேரம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.

 

 

படி 2 : மறைந்த மூதாதையர்களிடம் பிரார்த்தனை

இந்த பிறப்பு மற்றும் முந்தைய பிறப்புகளிலிருந்தும் உங்களுடன் தொடர்புடைய மறைந்த மூதாதையர்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்து மனதளவில் அழைக்கவும். மறைந்த மூதாதையர்களின் சூட்சும தேஹங்கள் வழக்கமாக காகங்களின் வடிவத்தில் வந்து படைத்த உணவை கொத்துகின்றன. உங்கள் மூதாதையர்கள் உணவில் திருப்தி அடையும் படி  தத்தாத்ரேய தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

 

படி 3 : நீர் அளிக்கும் சடங்கு

உங்களது வீட்டில் தெற்கு திசையை  பார்த்து நிற்கவும். ஒரு நீண்ட புல்லை (பொதுவாக தர்ப்பை புல்) எடுத்து, அது ஆன்மீக தூய்மை அடைய பிரார்த்தனை செய்யுங்கள். தர்ப்பை புல் வகை பரிபூரண பிரபஞ்ச அக்னி (நெருப்பு) தத்துவத்தை ஈர்த்து வைத்து கொள்வதில் அதிக திறனை கொண்டுள்ளதால்  அதை வைத்திருப்பவரையும், சுற்றுச்சூழலையும் ஆன்மீக ரீதியாக சுத்திகரிக்கும் திறன் கொண்டுள்ளது. வலது கையின் மோதிர விரலைச் சுற்றி புல்லின் அலகினால் ஒரு மோதிரம் போன்று  கட்டுங்கள். இடது கையில் ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து மெதுவாக வலது உள்ளங்கையில் தண்ணீரை ஊற்றவும். வலது கையின் கட்டைவிரலுக்கும் வலது கையின் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் நீர் வழிந்தோடுமாறு செய்து  ஒரு தங்கம், வெள்ளி அல்லது செப்புத்  தட்டில் நீரை  விட வேண்டும்.

படி 4: படையலை அகற்றும் சடங்கு

பிற்பகல் வரை, உணவை காகம் கொத்தவில்லை என்றால், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு அவ்வுணவை அப்புறப்படுத்த வேண்டும். உணவை அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி, நீரோடை அல்லது கடல் போன்ற பாயும் நீரில் அமிழ்த்துவது. இது சாத்தியமில்லை என்றால், அதை ஒரு ஏரியில் அமிழ்த்தலாம். எஞ்சியவற்றை நிலத்தில் புதைப்பது கடைசி தெரிவு. எஞ்சியவற்றை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வர கூடாது.

 

3.2.4 சிரார்த்த சடங்கிற்கான மாற்று தெரிவு

மேலே பட்டியலிடப்பட்ட படிகளில் ஒன்றைக்கூட தவிர்க்க முடியாத சூழ்நிலை அல்லது நிதி பிரச்சினை காரணமாக செய்ய முடியவில்லை என்றால், வேறு வழியில்லாமல் கடைசி முயற்சியாக மட்டுமே சடங்கின் இந்த தெரிவை நீங்கள் செயல்படுத்தலாம்.

ஒரு வெட்ட வெளியில் தெற்கு நோக்கி நிற்கவும்.

இரு கைகளையும் மேலே உயர்த்தி (சரணடைவதைக் குறிக்கிறது ) தெய்வம் தத்தாத்ரேயரிடம் பிரார்த்தனை செய்யவும்,“நான் உதவி அற்ற நிலையில் உள்ளேன். மறைந்த எனது எல்லா மூதாதையர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். மறைந்த எனது  மூதாதையர்கள் அனைவரும் எனது பக்தியின் மூலம் திருப்தி அடையட்டும். தெய்வம் தத்தாத்ரேயரே, தயவுசெய்து மறைந்த எனது  மூதாதையர் அனைவருக்கும் நீங்கள் கதி வழங்கி, என்னை என் மூதாதையரின் கடனிலிருந்து விடுவியுங்கள்’’ என பிரார்த்தனை செய்யவும்.

மேலே உள்ள அனைத்து படிகளிலும் மிக முக்கியமான மூலப்பொருளானது தங்களின் ஆன்மீக உணர்வும் தெய்வ தத்தாத்ரேயர் மற்றும் கடவுளிடம் உங்களின் நன்றியுணர்வும் என்பதை நினைவில் கொள்க. இந்த சடங்கிலிருந்து அதிகபட்ச ஆன்மீக நன்மைகளை நீங்கள் பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

சிரார்த்ததிற்கு மாற்று தெரிவை பயன்படுத்திய போது ஸாதகர்களுக்கு கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Experiences while performing Shraddha - Mr Alvaro Garrido

 

 

 

 

 

 

 

3.2.5 மறைந்த மூதாதையர் ஆவிகளுக்கான இரண்டு வார காலத்தில் நன்கொடை அளித்தல்

 • மூதாதையர்களின் பெயரில் பித்ரு பக்ஷ காலத்தில் அளிக்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் சிரார்த்த சடங்குடன் இணைத்து அளிக்கவேண்டும். நன்கொடைகள் ஒருபோதும் சிரார்த்தம் சடங்கிற்கு மாற்றாக இருக்க கூடாது.
 • பித்ரு பக்ஷத்தின் போது செய்யப்படும் நன்கொடைகளின் ஆன்மீக நன்மைகளைப் பெறுவதற்கு அது எந்தவித  மதசார்பின்மையும் இன்றி ஆன்மீகத்தை பரப்பும் ஒரு தகுதியுள்ள ஆன்மீக அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்.
 • மறைந்த மூதாதையர்கள் தங்கள் சார்பாக நன்கொடை வழங்கப்பட வேண்டும் என்று விரும்பியிருந்தால் மட்டுமே வழங்கப்பட்ட நன்கொடைகளால்  ஆன்மீக நன்மைகளைப் பெறுவர்.
 • இருப்பினும், பித்ரு பக்ஷத்தின் போது தகுதியான ஆன்மீக அமைப்புக்கு நன்கொடை அளிக்கும் சந்ததியினர் கூடுதல் ஆன்மீக நன்மைகளைப் பெறுவார்கள்.

நீங்கள் நன்கொடை வழங்க விரும்பினால், தயவுகூர்ந்து எங்கள் நன்கொடைகள் பக்கத்தைப் பார்கவும்.

3.2.6 சிரார்த்தம் சடங்கு மற்றும் அதன் அடிப்படை ஆன்மீக அறிவியல் பற்றி மேலும் அறிதல்

சிரார்த்தம் மற்றும் அதை செய்யும் வழிமுறைகள் பற்றி மேலும் அறிய, எஸ்.எஸ்.ஆர்.எஃப் கடையில் கிடைக்கும் சிரார்த்தம் பற்றிய புத்தகத்தைப் படிக்கவும். மரணத்திற்கும் அடுத்த பிறப்பிற்கும் இடையிலான காலம் தாயின் கருவரையில் குழந்தை இருக்கும்  காலத்திற்கு ஒத்ததாகும். கருப்பையில் உள்ள கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அதிக அக்கறை எடுப்பது போல், இறந்தவர்களும் சிரார்தத்தின் வெவ்வேறு சடங்குகள் மூலம் கவனித்துக்கொள்ளப் படுகிறார்கள். சிரார்த்தத்தில் ஓதப்படும் மந்திரங்கள் மூலம் உருவாகும் அலைகள், அர்ச்சகரின் ஆசீர்வாதம், உறவினர்களின் நல்லெண்ணம், அரிசி காணிக்கை மற்றும் பிற சடங்கு வழிபாடுகள் தர்க்கரீதியாக  விளக்க முடியாத அசாதாரண பலன்களை அளிக்கின்றன.  சிரார்த்தம் மறைந்த மூதாதையரின் சூட்சும உடலைச் சுற்றி பாதுகாப்பு கவசம் ஒன்றை உருவாக்கி, நற்கதி பெற உதவுகிறது. இந்த சடங்குகள் சூட்சும பாதாள லோகத்திலும், புவர்லோகத்திலும் நன்மைகளை வழங்குகின்றன.

குறிப்பு: ஒரு தாய் பிறக்கும் வரை ஒரு குழந்தையை தன் வயிற்றில் பாதுகாப்பதைப் போலவே, மறைந்த மூதாதையர்களுக்கும் சிரார்த்த சடங்குகள் மூலம் பாதுகாப்பு கவசம் கிடைக்கிறது

சிரார்த்த சடங்கு ஒரு ஆடவரால் செய்யப்பட வேண்டும். ஒருபெண்ணின்  பெற்றோர் இறந்து விட்டார்கள் என்றால் அவளுக்கு ஆண் உடன்பிறப்புகள் இல்லாத நிலையில்  திருமணம் ஆகாத அப்பெண் தன் சார்பாக சடங்கைச் செய்ய அர்ச்சகரிடம் கேட்கலாம்.

 • ஒருவரின் ஆன்மீக பயிற்சியை அதிகரிக்க வேண்டும்: ஒருவர் தினசரி அடிப்படையில் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கும் போது ஆன்மீக பாதுகாப்பு அதிகரித்து ஆன்மீக ரீதியாக வளர்ச்சி அடைகிறார். பித்ரு பக்ஷத்தின் போது ஸ்ரீ குருதேவ் தத்த நாமத்தை ஜபம் செய்வதனால் மறைந்த மூதாதையர்களுக்கு மறுமையில் நற்கதி பெற உதவுகிறது.

குறிப்பு: ஒலி கோப்பைப் பதிவிறக்கம் செய்ய, தயவுசெய்து படத்தின் மீது, வலது இணைப்பை அழுத்தி “இணைப்பை சேமி / இணைப்பை இவ்வாறு சேமி” என்பதை அழுத்தவும்