ஆன்மீக ரீதியாக பாதுகாப்பளிக்கின்ற ‘ஸ்ரீ குருதேவ தத்தவின்’ நாமம் எதைக் குறிக்கின்றது?

“ஸ்ரீ குருதேவ தத்தவின்” பாதுகாப்பளிக்கின்ற நாமம், கடவுளின் ஒரு அம்சமான இறைவன் தத்தாவின் பெயரைக் குறிக்கின்றது. மூதாதையர்களின் சூட்சும தேஹத்தால் பிரபஞ்சத்தில் ஏற்படும் துன்பத்தை மட்டுப்படுத்துவதே, அவரது செயல்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.  படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று முக்கிய  தத்துவங்களின் மூலமாக, பிரபஞ்சத்தில் தனது பணியை கடவுள்  மேற்கொள்கிறார். இறைவன் தத்தாவின் திறன், கடவுளுடைய இந்த மூன்று முக்கிய  தத்துவங்களின் மூலம் பெறப்படுகிறது. அதாவது  படைத்தல் 10%, காத்தல் 80% மற்றும் அழித்தல் 10% ஆகும். தத்தாத்ரேயரின் ஆற்றலில் 10% வெளிப்பட்டதாகவும், மீதமுள்ள 90%, வெளிப்படாத தெய்வீக ஆற்றலாக விளங்குகிறது.

இறந்த நமது மூதாதையர்கள் நம் வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்து நமக்கு மிகவும் புரியாத புதிராக உள்ளது. எனினும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் இறைவன் தத்தாவின் புனிதப்பெயரான ‘ஸ்ரீ குருதேவ தத்த’  நாமஜபத்தினை மீண்டும் மீண்டும் உச்சரித்து தங்களது வாழ்வில் மகத்தான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் (பாதுகாப்பளிக்கின்ற நாமஜபத்தை கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்தவும்).

Datta chant
குறிப்பு: ஆடியோ கோப்பைப் பதிவிறக்கம் செய்ய , தயவுசெய்து படத்தின் மீது, வலது இணைப்பை அழுத்தி “இணைப்பை சேமி / இணைப்பை இவ்வாறு சேமி” என்பதை அழுத்தவும்

Datta photos