யாரிடம் ஆன்மீக உணர்வு விழிப்பு நிலையில் உள்ளது?

இது பற்றி நாம் முன்பே பார்த்துள்ள கட்டுரை தொடர்களின்படி ஆன்மீக உணர்வு என்பது இறைவன் எங்கும் நிறைந்துள்ளதை உணர்வதே ஆகும். இதில் தன்னுள்ளும், மற்றவருள்ளும் மற்றும் உலகம் முழுவதுமுள்ள உயிருள்ள, உயிரற்ற எல்லாப் பொருட்களிலும்  இறைவனை காண்பது என்பதும் அடங்கும். சிலருக்கு புத்தி அளவில் இதைப் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும் அனுபவத்தில் உணருவது கடினமாகவே உள்ளது. அதோடு முக்கியமாக, நமது அன்றாட வாழ்வில் நிமிடத்திற்கு நிமிடம் இந்த உணர்வில், அனுபவத்தில் நிலைத்து நிற்பது என்பது பெரும்பாலானவருக்கு இயலாத காரியமாக உள்ளது

சராசரி மனிதர்களின் ஆன்மீக நிலையின் அளவு குறைவாக இருப்பதுதான் அவர்கள் ஆன்மீக உணர்வை அனுபவிக்க இயலாததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இங்குசராசரி மனிதன்என நாம் கூறுவது ஆன்மீகத்தில் சராசரி நிலையிலுள்ள ஒரு மனிதனைக் குறிக்கும். உலக வாழ்க்கையில் அதே மனிதன் ஒரு கோடீஸ்வரனாகவோ, ஒரு மாநிலத்தின் தலைவனாகவோ அல்லது சினிமா உலகின் பிரபல கலைஞனாகவோ இருக்கலாம். தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள மக்களின் சராசரி ஆன்மீக நிலை 20% மட்டுமே, அதேபோல் மோக்ஷ நிலையை அடைந்த ஒரு மகானின் ஆன்மீக நிலை 100% ஆகும். ஒருவரது ஆன்மீக உணர்வின் காரணமாக அவரது ஆன்மீக பயிற்சி தடங்கலில்லாமல் நடக்க ஸாதகரின் ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். அதேபோல் ஆன்மீக பயிற்சியின் மூலம் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட தேவையான குறைந்தபட்ச ஆன்மீக நிலை 50% ஆகும். இந்த நிலையை அடைய ஒரு ஸாதகர், நாமஜபம், ஸத்சங்கம் மற்றும் ஸத்சேவை ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஒருவருக்கு ஆன்மீக உணர்வு விழிப்படைந்த பின்னரும் கூட அந்த நிலை நீடிப்பதற்கு அந்த ஸாதகர் தொடர்ந்து ஆன்மீக பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு உண்மையான ஸாதகர் வெறும் வெளிப்புறமாகத் தோன்றும் ஆன்மீக உணர்வில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆன்மீக உணர்வின் பலவகைப்பட்ட வெளிப்பாடுகள் யாவை? என்ற எங்களின் கட்டுரையைப் படிக்கவும். அன்றாட வாழ்க்கையில் நாம் ஆன்மீக உணர்வைக் கொண்டிருக்கிறோமா என்ற அளவுகோலின் மூலம் கண்காணிப்பது அவசியம். உதாரணத்திற்கு இறைவழிபாட்டு இடத்திற்கு செல்லும்போதோ அல்லது ஆன்மீக வழிகாட்டியாக விளங்கும் குருவின் நினைவு ஏற்படும்போதோ அல்லது ஆன்மீக அனுபவம் ஏற்படும்போதோ கண்களில் இருந்து குளிர்ச்சியான கண்ணீர் பெருகுவதை சிலர் உணர்ந்திருக்கலாம். ஒருவரது ஆன்மீக உணர்வின் உண்மையான பரீட்சை என்னவென்றால் அவர் வாழ்வின் எதிர்மறையான சூழ்நிலையிலும் இறைவனது உதவும் கரங்களை உணர்கிறாரா என்பதே ஆகும். அந்த சமயத்தில் நாம் நம்மால் இயலும் எல்லாவித முயற்சிகளையும் செய்துவிட்டு பின் இறுதியில் அந்த சூழ்நிலையை இறைவனின் திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு நிம்மதியாக இருப்போம். இன்னொரு விதமாகவும் நாம் நம்மை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள முடியும். குறிப்பாக நமக்கு எதிராக நடந்து கொள்பவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று கவனிப்பது ஆகும். அவர்களிடமும் இறை தத்துவத்தை நம்மால் உணர முடிந்தால் நாம் ஆன்மீக உணர்வு பரிசோதனையில் வெற்றி பெற்றோம் என்று அர்த்தம்.