11 வருடங்களாக இருந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆன்மீக பயிற்சி மூலம் கைவிடுதல் – ஆய்வுக் கட்டுரை

சுருக்கம் :

ஐக்கிய அரபு நாடான துபாயில் வசிக்கும் ஓம்பிரகாஷ் என்பவர் 11 ஆண்டுகளாக புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார், புகை பிடிப்பதை நிறுத்த எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதை கைவிட அவரால் முடியவில்லை. ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) நடத்திய பயிலரங்கில், போதைப் பழக்கத்திற்கான ஆன்மீக மூல காரணம் மற்றும் அதற்கான ஆன்மீக நிவாரண முறைகள் பற்றி அறிந்து கொண்டார். அவர் உடனடியாக ஆன்மீக நிவாரணமுறையில் ஒன்றான நாமஜபத்தை மேற்கொண்டு 7 நாட்களுக்குள் தனது புகைப்பிடிக்கும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டார். இக்கட்டுரையானது 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அவருடன் ஒரு தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட நேர்காணலை அடிப்படையாகக் கொண்டது.


பிரச்சனைகள் தொடர்பாக நமது வாசகர்களுக்கு சில வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) இந்த ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிறது. ஒரு பிரச்சனையின் மூலகாரணம் ஆன்மீக இயல்புடையதாக இருப்பின், நாங்கள் கவனித்தவரை ​​ஆன்மீக நிவாரண முறைகளையும் அதனுடன் இணைப்பது பொதுவாக நல்ல பலனைத்தரும். உடல் மற்றும் மனநோய்களுக்கான ஆன்மீக நிவாரண முறையுடன் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருத்துவ சிகிச்சையும் தொடருமாறு எஸ். எஸ். ஆர். எஃப் பரிந்துரைக்கிறது. வாசகர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி எந்த ஒரு ஆன்மீக நிவாரண முறையையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்னுரை

இந்தியாவை சேர்ந்த ஓம்பிரகாஷ் (34) துபாயில் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி வகிக்கிறார். அவர் ஒரு வெளிப்படையான மத ஈடுபாடுயுடையவர் இல்லை, ஆயினும் ஒரு உயர்ந்த தெய்வீக சக்தியின் மேல் நம்பிக்கையுடையவர். அவர் எஸ்.எஸ். ஆர். எஃப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு நாமஜபத்தையோ அல்லது சம்பிரதாயமான கடவுள் வழிபாட்டையோ செய்ததில்லை. உண்மையில் கடவுளின் எந்த விதமான சடங்கு வழிபாட்டிலும் கலந்துகொள்ளும்படி அவரது மனைவி அவரை கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. அவரது தந்தையும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.

திரு. ஓம்பிரகாஷூடன் ஒரு நேர்காணல் 

பேட்டிகாண்பவர் : வணக்கம் ஓம்பிரகாஷ், இந்த நேர்காணலை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி. நேர்காணலைத் தொடங்கும் முன், புகைப்பிடிப்பதை வெற்றிகரமாக நிறுத்தியதற்கு வாழ்த்துகள்

ஓம்பிரகாஷ் : (புன்னகை) நன்றி

பேட்டிகாண்பவர் : உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றிய சுருக்கமான வரலாற்றை எங்களுக்குத் தர முடியுமா?
ஓம்பிரகாஷ் : என்னுடைய 23 ஆம் வயதில், 1995ல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடங்கினேன். துபாய்க்கு வந்த பிறகு, ஒரு விருந்தில் பெண்கள் புகைப்பிடிப்பதைப் பார்த்தேன், இது இந்திய பாரம்பரியக் கண்ணோட்டத்தில் வளர்ந்த எனக்கு மிகவும் அசாதாரணமானது. பெண்கள் சுதந்திரமாக புகைப்பிடிக்க முடியும் என்றால் நான் ஏன் அதில் ஈடுபட தயங்கவேண்டும் என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். ஆரம்பத்தில் இது வேடிக்கைக்காக மட்டுமே இருந்தது, ஆனால் படிப்படியாக அது ஒரு கட்டாய பழக்கமாக மாறியது. இப்போது நான் புகைப்பிடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 வெண்சுருட்டு (சிகரெட்) பிடிப்பேன். பின்னர் அது ஒரு நாளைக்கு 10 முதல் 15 வெண்சுருட்டாக அதிகரித்தது.

பேட்டிகாண்பவர் : நீங்கள் எப்போதாவது உங்கள் புகைப்பிடிக்கும் (போதை) பழக்கத்தை கைவிட முயற்சித்தீர்களா?
ஓம்பிரகாஷ் : ஆம், பல முறை முயற்சித்திருக்கிறேன், ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக நாணயங்களை சட்டைப்பையில் வைத்திருப்பது மூலம் தனித் தனி வெண்சுருட்டாக,மட்டுமே வாங்குவது அல்லது முழுப் பெட்டியை வாங்காமல், குறைந்த அல்லது போதுமான எண்ணிக்கையிலான வெண்சுருட்டு மட்டுமே வாங்குவது என்பது போன்ற சில நடவடிக்கைகளை நான் எடுத்தேன்,ஆனால் இந்த வழியில் என்னால் ஒரு நாளைக்கு 6 முதல் 8 சிகரெட்டுகள் வரை மட்டுமே குறைக்க முடிந்தது. இருப்பினும் இந்த நிகழ்வு ஒரு வாரத்திற்கு மட்டுமே தொடரும்,மீண்டும் நான் ஒரு நாளைக்கு 10 முதல் 15 சிகரெட்டுகள் புகைப்பதை வழக்கமாக்குவேன்.

புகைப்பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட நினைத்தால், அதிகபட்சம் 7 நாட்கள் மட்டுமே நான் புகைப்பிடிப்பதை நிறுத்தமுடியும், அதன் பிறகு நான் மீண்டும் ஆரம்பித்துவிடுவேன்.

முன்பெல்லாம் புகை பிடிக்கும் போது நான் களைப்பாகவும் மனஅழுத்தமுடனும், சோர்வாகவும் இருப்பதை உணர்வேன். நான் புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது கடுமையான இருமல் மற்றும் சளி ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாவேன். நான் மீண்டும் தொடங்கும் போது, ​நன்றாக உணர்வேன். சில சமயங்களில், நான் ஒவ்வொரு வாரமும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தேன் ஆனால் எப்படியோ அந்த பழக்கத்திற்கு முழுவதும் அடிமையாகாமல் என்னுடைய தன்னிச்சை சக்தி மூலம் அதிலிருந்து விலகி இருக்க முடிந்தது.

பேட்டிகாண்பவர் : அப்படியானால் நீங்கள் எப்படி புகைப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்தீர்கள்?
ஓம்பிரகாஷ் : இது அனைத்தும் எஸ்.எஸ்.ஆர்.எப்பின் ஒரு விரிவுரையில் கலந்து கொண்ட பிறகே வந்தது. 2006 செப் 15 அன்று துபாயில் நடக்கவிருக்கும் ‘ஆவிகள் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி’ விரிவுரையை கோவிலில் ஒட்டியிருந்த விளம்பர சுவரொட்டியைப் பார்த்த குடும்ப நண்பர் மூலம் அறிந்தேன். பின்னர் என் நண்பர் என்னை அந்த விரிவுரையில் கலந்து கொள்ளும்படி தூண்டினார். உண்மையில் என்னைப் போன்ற ஒருவர் அந்தப் பயிலரங்கிற்கு வந்திருப்பது தெய்வீகத் தலையீடு என்று உணர்ந்தேன். விரிவுரையின் போது, போதைக்கு அடிமையாதல் ​​​​ பெரும்பாலும் ஆவிகளால் பீடிக்கப்படுவதன் காரணமாகவே இருப்பதாகவும், அதனைப் போக்க ஆன்மீக நிவாரணமுறைகளில் ஒன்றான ஒருவர் பிறந்த மதத்தின்படி கடவுளின் நாமத்தை உச்சரிப்பது என்றும் நான் அறிந்தேன். நான் உடனடியாக இதனை முயற்சி செய்ய முடிவு செய்தேன்.

பேட்டிகாண்பவர் : எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழங்கிய அறிவுரையைப் பின்பற்ற உங்களைத் தூண்டியது எது?
ஓம்பிரகாஷ் : இந்த பயிலரங்கில் நான் கலந்துகொண்டது ஒரு தெய்வீகச் செயல் என்று தெளிவாக உணர்ந்தேன். விரிவுரையில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழங்கிய அறிவியல் விளக்கங்களும் எனக்குப் பிடித்திருந்தது.எனவே எனது பிரச்சனைக்கு காரணம் ஆவிகளின் வசப்படுதலினால் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு, அதலிருந்து நிவாரணமடைவதற்கு முயற்சி செய்தேன்.

அன்று முதல் ‘ஓம் நம: சிவாய’ என்ற என் குலதெய்வத்தின் நாமஜபத்தை 2மாலைகள்(2*108 முறை) ஜபிக்க ஆரம்பித்தேன். என் விரல்களின் உதவிக் கொண்டு நாமஜபத்தை எண்ணிக் கொண்டிருந்தேன். அன்று முதல்,நான் புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு , சிகரெட்டை கையில் எடுத்தவுடன், அது பிசாசு என்று உணர்ந்து அதனை உடனே கீழே எறிந்தேன். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் தொடர்ந்தது. இப்போது கிட்டத்தட்ட 15 நாட்களாக நான் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டேன். எனக்கு புகை பிடிக்கும் ஆசை கூட வருவதில்லை.

குணமடைதலின் பின்புலத்தில் உள்ள ஆன்மீக அறிவியல் : ஆவிகளால் (பேய், பிசாசு, எதிர்மறை ஆற்றல்) போன்றவை பாதிக்கப்படுவது அல்லது பீடிக்கப்படுவது போன்ற ஆன்மீகக் காரணிகள் மட்டுமே போதைக்குக் காரணமாக இருந்தால் இதனை விரைவில் விட முடியும்.சத்வ மூலம் ஏற்படும் சூட்சும அடிப்படை நாமஜபத்தின் அதிகரிப்பு இரண்டு வழிகளில் செயல்படுகிறது :

  • ஒரு நபரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதன் மூலம்
  • ஒரு நபரைச் சுற்றி ஆவிகளால் உருவாக்கப்பட்ட கருப்பு படலத்தை அகற்றுவதன் மூலம்.

ஆவிகள் சூட்சும அடிப்படை தமக் கூறுகளில்
அதிகமாக உள்ளதால், அதனால் பீடிக்கப்பட்ட நபரின் சூட்சுமஅடிப்படை சத்வ கூறுகள் அதிகரிக்கும்போது திணறல்,அச்சுறுத்தல்(பயப்படுத்தல்) மற்றும் துன்பம் ஆகியவற்றை
உணர்கிறார்கள்.

என்ற கட்டுரையைப் பார்வையிடவும். ‘படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள்

22செப்டம்பர் 06 அன்று, (சிரார்த்த சடங்குகள்) மறைந்த மூதாதையர்களுக்கானவருடாந்திர சடங்குகளை (சிரார்த்த சடங்குகள்) செய்தோம். இறந்த என்னுடைய தந்தையும்புகைப்பிடிப்பவர். சிரார்த்த மதிய உணவை முடித்த பிறகு,அவருடைய ஆசையைப் பூர்த்தி செய்ய நான் புகைப்பிடிக்கவேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால், சிகரெட்டைக்கையில் பிடிக்கக் கூட முடியாமல், சூடான நெருப்புகரியைக்கையில் பிடித்து இருப்பது போல் உணர்ந்து அதை கீழே போட்டேன்.எனது புகைப்பிடிக்கும் பழக்கத்தை(அடிமைத்தனத்தை) அறிந்த எனதுமனைவி இதைப் பார்த்து பெரிதும் ஆச்சரியமடைந்தாள்.

பேட்டிகாண்பவர் : ஆனால் இதை எங்களிடம் 15 நாட்களுக்குப் பிறகுஏன் இவ்வளவு தாமதமாகப் பகிர்ந்தீர்கள்?
ஓம்பிரகாஷ் : ஏனென்றால், 7 நாட்களுக்குள் நான் மீண்டும் புகைப்பிடிக்கத் தொடங்கும் எனது கடந்தகால முயற்சிகள் போல் இல்லை என்று உறுதியாகச் சொல்ல விரும்பினேன். இந்தநேரத்தில் நான் அதற்கு அதிக நேரம் கொடுக்க விரும்பினேன்,எனவே எஸ். எஸ். ஆர்.எஃப் இன் ஆன்மீக அனுபவத்தை பற்றிய அடுத்த விரிவுரையின் போது இந்த ‘விதி’.

பேட்டிகாண்பவர் : புகைப்பிடிக்கும் பழக்கம் நீங்கியபிறகும், நீங்கள்தொடர்ந்து நாமஜபம் செய்கிறீர்களா?
ஓம்பிரகாஷ் : இப்போது நான் இன்னும் அதிகமாகவே நாமஜபம்செய்கிறேன். நான் கணக்கு வைப்பதில்லை ஆனால் வாகனம்ஓட்டும்போதும், நடக்கும்போதும், வேலை செய்யும் போதும்நாமஜபம் செய்கிறேன்.ஆதலால் எத்தனை முறை நாமஜபம்செய்கிறேன் என்ற எண்ணிக்கை எனக்குத் தெரியவில்லை.

பேட்டிகாண்பவர் : உங்களுக்குள் வேறு எந்த வகையிலாவதுஏதேனும் மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
ஓம்பிரகாஷ் : ஒரு வணிக மேம்பாட்டு மேலாளராக இருப்பதால்,எனது வேலை தொடர்பான மன அழுத்தத்தால் நான் தொடர்ந்துஅவதிப்பட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் இப்போதெல்லாம் நான்அதைப் பற்றி நினைப்பது இல்லை. நான் நாமஜபம் மட்டும்செய்கிறேன், அது கொஞ்சம் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. என்மனம் அமைதியுடன் இருப்பதை நான் உணர்கிறேன்.

பேட்டிகாண்பவர் : உங்களின் இந்த மாற்றங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களால் கவனிக்க முடிந்ததா?
ஓம்பிரகாஷ் : ஆம், என்னில் உண்டான மாற்றத்தை அவர்கள் அறிந்துகொண்டனர், ஆனால் நம்ப முடியாத காரணத்தினால் அதை
அவர்களால் ஏற்க இயலவில்லை.

பேட்டிகாண்பவர் : இந்த போதைப் பழக்கத்திலிருந்து நீங்கள்விடுபட்டதை உங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் (நெருங்கிய
உறுப்பினர்கள் அல்லாது), நண்பர்கள், சக பணியாளர்கள்போன்றவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்களா?
ஓம்பிரகாஷ் : ஆம் எனது அனுபவத்தை சிலருடன் பகிர்ந்துகொண்டேன். என் வாயிலிருந்து வரும் கடவுள் நாமம்வினோதமாகத் தோன்றுவதாகக் கூறி, அதனால் அவர்கள் என்னைக் கேலியும் செய்தனர்.

பேட்டிகாண்பவர் : இதைப் பற்றி வேறு எந்த புகைப்பிடிக்கும் அல்லது குடிப்பழக்கமுடையவர்களிடம் கூறினீர்களா? அதில் உங்கள்
அனுபவம் என்ன?
ஓம்பிரகாஷ் : ஆமாம், இதே பழக்கமுடைய எனது நண்பர்களுடன்நான் இதை பகிர்ந்து கொள்ள முயற்சித்தேன், ஆனால் அவர்கள்
அனைவரும் என்னை கேலி செய்கிறார்கள். நான் என்னுள் ஒருமுழுமையான மாற்றத்திற்காக காத்திருக்கிறேன், அதனைக் கண்டுஅவர்கள் மனதில் ஏற்றுக்கொண்டு பின்னர் முழுமையாக
நம்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பேட்டிகாண்பவர் : உங்கள் அனுபவத்தை எங்கள் இணையதளத்தில் வெளியிட்டால் பரவாயில்லையா?
ஓம்பிரகாஷ் : நிச்சயமாக வெளியிடலாம். நான் ஏன் கவலைப்படவேண்டும்? என்னைப் போன்று போதைக்கு அடிமையானவர்கள்இருந்தால், அவர்கள் எனது ஆய்வுக் கட்டுரையைப் படிப்பதன் மூலம்அது அவர்களுக்கு உதவ வேண்டும் என்று மட்டுமே நான்
பிரார்த்தனை செய்கிறேன்.

ஆசிரியர் குறிப்பு : இந்த நேர்காணல் எடுக்கப்பட்டதிலிருந்துஓம்பிரகாஷின் புகைப்பிடிக்கும் பழக்கம் (போதை) குறித்து அவரைதொடர்ந்து கவனித்து வருகிறோம். 2 மே 2007 இல், ஓம்பிரகாஷ் 7மாதங்களுக்கும் மேலாக சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டு அந்தஅடிமைத்தனத்திலிருந்து விடுபட்டார். அதற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு வரவில்லை. இந்தக்காலகட்டம் முழுவதும் அவர் தனது குல தெய்வத்தின் நாமத்தைஉச்சரிப்பதை உறுதியுடன் செய்து வந்தார்.