
அட்டவணை
- 1. அறிமுகம்
- 2. என் பெற்றோர்களுக்குள் இருந்த திருமணப் பிரச்சனைகள்
- 3. விடலைப் பருவம் (டீனேஜ்)
- 4. ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படுதல்
- 5. எஸ்.எஸ்.ஆர்.எஃப் -வுடன் ஆன்மீக பயிற்சியை தொடங்குதல்
- 6. ஆன்மீக கஷ்டங்களை எவ்வாறு சமாளித்து மீண்டுவருவது என்ற கற்றுதல்
- 7. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்திற்கு வருகை
- 8. 61% ஆன்மீக நிலை அடைந்தேன்
- 9. தற்போதைய நிலை
1. அறிமுகம்
எனக்கு கடவுள் நம்பிக்கை குழந்தைப் பருவத்திலேயே இருந்தது, ஆனால் அவர் மனதில் உருவமின்றி இருந்தார். எங்கள் குடும்ப பூர்வீகம் சீனா, சில பௌத்த நம்பிக்கை, சம்பிரதாயங்களை கடைப்பிடித்தாலும் அதை கண்டிப்புடன் பின்பற்றுவதில்லை.10 வயதிலிருந்து அவ்வப்போது கடவுளுடன் பேச முயற்சிப்பேன், பொதுவாக இரவில் உறங்குவதற்கு முன் எங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டதற்காக நன்றி செலுத்தி தொடர்ந்து எங்களை காப்பாற்றவும் கேட்டுக்கொள்வேன். நான் எந்தவொரு பிரச்சனையில் இருந்தாலும் அல்லது விபத்துக்கு ஆளாக நேரிட்டாலும் கடவுளை நினைப்பேன்.
2. என் பெற்றோர்களுக்குள் இருந்த திருமணப் பிரச்சனைகள்
இளம் வயதில் எனது பெற்றோர்களுக்குள் திருமணப்பந்தத்தில் இருந்த பிரச்சனைகள் காரணமாக சண்டை நிகழும் அதை அடிக்கடி வீட்டில் என் முன்பே வெளிப்படுத்துவார்கள். எனக்கு 2 சகோதரிகள் இருந்தார்கள், ஆனால் மூவரில் அம்மா என்னிடம் மட்டுமே அப்பா செய்வது, சொல்வது அனைத்தும் சொல்வார். அப்பாவைப் பற்றி அம்மா என்னிடம் சொல்லும்போது சூழ்நிலையை மாற்ற என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என நான் மனம் கலங்கி அப்பாவின் மீது கோபம் கொள்வேன்.
தொடக்கநிலை பள்ளிப் பருவங்களில் வீட்டு சூழ்நிலையை சமாளிப்பதற்கு உதவி கேட்க பள்ளி ஆலோசகரிடம் பலமுறை சென்றேன். பள்ளி ஆசிரியர்கள் என்னையும் எனது சூழலையும் பிறரைப் போல் அல்லாது நன்கு புரிந்துகொள்வதால் அவர்களிடம் நான் வசதியாக உணர்ந்து பந்தம் கொண்டேன். பள்ளியில் சிறிது உதவி கிடைத்தும் என்னுள் இருக்கும் பிரச்சனைகள் தீரவில்லை என்று தோன்றியது.
3. விடலைப் பருவம் (டீனேஜ்)
எனது 15-16 வயதில் என்னுள் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது என்று உணர்ந்தேன். எனது குடும்ப சூழ்நிலையைப் பற்றிய மன அழுத்தம் பெற்றோர்களின் மீது கோபமாக மாறியது. இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வரும் என் தந்தை மீதும், இச்சூழ்நிலையை சமாளிக்க விவாகரத்து முதலியவை ஏதும் செய்யாத என் தாய் மீதும் கோபமடைந்தேன். என் தந்தையால் என் தாய் எப்போதும் வேதனை அடைந்ததால் தனது கோபத்தை என் மீதும் என் சகோதரிகள் மீதும் காட்டுவார்.
இத்தருணத்தில் நான் கருப்பு நிறத்தில் ஆடை மற்றும் நகப்பூச்சு அதிகம் அணியத் தொடங்கினேன். எனது நீண்ட கூந்தலை முதன்முறையாக நான் வெட்ட எண்ணினேன், அதை பச்சை, நீலம் மற்றும் ஊதா நிறம் பூசினேன். அதே சமயத்தில் நான் தகாத சொற்களுடைய அதிக கன மாழை இசையை கேட்பதோடு எனது பேச்சிலும் வசைச் சொற்களை உபயோகித்தேன். பேய் படங்களை கண்டு மகிழ்ந்தேன், எவ்வளவு கொடூரமாக இருந்ததோ அவ்வளவு அதிகம் காண விரும்பினேன். புருவம், உதடுகளை துளைக்கவும், உடலில் பச்சைக் குத்தவும் எண்ணங்கள் வந்தன.
பல நேரங்களில் எக்காரணமும் இன்றி நான் அதிகக் கோபம் கொள்வேன், ஆனால் எனக்கு சுவரை அடித்து கத்தவேண்டும் போல் தோன்றும். இக்காலகட்டத்தில் எளிதாக நான் உணர்ச்சிவசப் படுவேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் குழம்பிவிடுவார்கள், ஏனென்றால் எனது ஆளுமையின் மற்றொரு முகம் திடீரென தோன்றியது போல் இருந்ததாம்.
நான் யாரென்று கண்டறிந்து உணர்வதற்கு திணறினேன், அதோடு என் ஆர்வங்களை தொடர்ந்து செல்லும்போது என்னுள்ளே கலக்கத்துடன் இருந்தேன். இதனால் என்னுள் ஓய்வற்ற நிலையை உணர்ந்தேன். வெறும் ஆன்மீகம் மட்டுமே நாம் யாரென்று உணர்த்தும் என பிறகு உணர்ந்தேன்.
4. ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படுதல்
2008-இல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவுடன் ஆன்மீகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டேன். மானிடவியலில் பல வகுப்புகளுக்கு சேர்ந்து பல நம்பிக்கைகள், மதம் மற்றும் உலகத்தின் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் ஆன்மீகத்தைப் பற்றிய ஞானத்தை அறிய ஆர்வம் கொண்டேன்.
இதே சமயத்தில் நானொரு வெளிப்புற பொழுதுபோக்கு கடையில் பணியாற்றி வந்தேன். இங்கு எனக்கு இருவர் நண்பர்கள் ஆனார்கள் (பிற்காலத்தில் அவர்கள் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர்கள் ஆனார்கள்). நாங்கள் அடிக்கடி ஆன்மீகத்தைப் பற்றி பல விஷயங்கள் பேசுவதால் இருவருடனும் மிக நெருக்கமாக பழகினேன். பணி முடிந்த பின்பு அல்லது சனி-ஞாயிறன்று ஆன்மீகத்தைப் பற்றி பேச அவர்கள் வீட்டிற்கு செல்வேன். ஆன்மீகம் மற்றும் ஆன்மீக நிவாரணத்தை தலைப்பாகக் கொண்ட பல புத்தகங்களை அவர்கள் எனக்கு காட்டுவார்கள்.
5. எஸ்.எஸ்.ஆர்.எஃப் -வுடன் ஆன்மீக பயிற்சியை தொடங்குதல்
2009-இல் எனது இரண்டு சக ஊழியர்கள் இந்தியாவின் கோவாவிற்கு பயணிக்க திட்டமிட்டு இருந்ததால் அவர்கள் இல்லாத நேரத்தில் வீட்டை பார்த்துக்கொள்ளும்படி சொன்னார்கள். இந்தியாவுக்கு வந்தவுடன் அவர்கள் எதிர்பாராது எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஆன்மீக பயிற்சியை ஆரம்பித்தார்கள்.
அவர்கள் இல்லாத அந்த சில மாதங்களில் எனது குடும்பத்து வீட்டில் ஏதோவொரு தீயசக்தியால் சில அனுபவங்களை பெற்றோம். நானும் என் அத்தையும் தங்கையும் இந்தத் தீயசக்தியை உணர முடிந்தது, எங்களை அச்சுறுத்த அடிக்கடி வீட்டில் பல செயல்களை செய்யும்.
என்ன செய்வது என்று தெரியாமல் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருந்த என் இரண்டு நண்பர்களுக்கு இங்கு நடப்பதைப் பற்றி மின்னஞ்சல் அனுப்பினேன், ஏனென்றால் அவர்கள் மட்டும் தான் என்னை புரிந்துகொண்டு உதவுவார்கள் என்ற எண்ணமிருந்தது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைதளத்தில் உள்ள கட்டுரையை எனக்கு அனுப்பி எங்களை “ஸ்ரீ குருதேவ தத்த” என்னும் நாமத்தை ஜபிக்கச் சொன்னார்கள். முதல் முறையாக வலைதளத்தில் உள்ளவற்றை படிக்கும்போது அனைத்துமே உண்மை, இதில் எழுதியிருப்பதில் ஒன்றுமே பொய்யல்ல என்றுணர்ந்தேன்.
முதல் நாளில் நான் தத்தாத்ரேயர் நாமத்தை ஜபித்தேன், அன்றிரவே எனக்கு உறக்க முடக்கமும் என் உடலை வலிக்கும் அளவு அழுத்துவது போல் தெளிவான அனுபவமும் உண்டாயின. இளம் வயதில் அடிக்கடி உறக்க முடக்கத்தை நான் அனுபவித்து இருந்தாலும் இந்த அனுபவம் மிகத் தீவிரமானதாக இருந்தது. உடனடியாக என் மனதில் தத்தாத்ரேயர் நாமஜபம் தொடங்கியது, அதோடு உறக்க முடக்கமும் அழுத்தமும் மறைந்தன. நான் தினமும் இந்த நாமஜபத்தை செய்ய ஆரம்பித்தேன், அப்போதெல்லாம் அந்தத் தீயசக்தி என்னருகில் வராமல் தொலைவிலேயே நின்றுவிட்டதை உணர்ந்தேன். இந்த நாமஜபம் என்னை பாதுகாக்கிறது என்ற நம்பிக்கை வலுவானது, என் குடும்பத்தினரையும் நான் ஜபிக்கச் சொன்னேன்.
எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த எந்தவொரு நாமஜபம் மற்றும் ஆன்மீக நிவாரணத்தையும் நடைமுறை படுத்த நான் நேர்மையாக முயற்சிப்பேன், இதனால் எனது மனம் நேர்மறையான நிலையை அடையும். பொதுவாக எதிர்மறை எண்ணங்கள் வரும் சூழ்நிலைகளில் எல்லாம் எனக்கு அமைதியை உணரமுடிந்தது.
எனது ஸாதகர் நண்பர்கள் விரைவில் இந்தியாவிலிருந்து திரும்பினார், ஆன்மீக பயிற்சியைப் பற்றி எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் கற்ற அனைத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். ஸத்சங்கத்திற்காக அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். ஒவ்வொரு தடவையும் அதிக நேர்மறைத்தன்மையை நான் அனுபவித்து மேலும் எதை கற்று நடைமுறை படுத்தலாம் என்று ஆர்வமாக இருந்தேன்.
ஒவ்வொரு வாரமும் தொலைப்பேசியில் வட அமெரிக்காவுக்கான ஸத்சங்கங்களில் நான் கலந்துகொண்டு, என் மனதில் வரும் கேள்விகளுக்கெல்லாம் ஸத்சங்கங்கம் நடத்துபவர், அல்லது வேறொரு ஸாதகர் அதே கேள்வியை கேட்பது போன்ற ஆன்மீக அனுபவங்களை பெற்றேன். ஒவ்வொரு வெள்ளி இரவும் நண்பர்களுடன் வெளியே செல்வதை நிராகரித்து ஸத்சங்கங்கத்தில் கலந்துகொள்ள உறுதியாக இருந்தேன். ஏனென்றால் ஸத்சங்கத்தில் இருந்து கிட்டும் சைதன்யம் எனது ஆன்மீக பயிற்சிக்கு உதவியது.
நாங்கள் வாழும் அதே ஊரில் எஸ்.எஸ்.ஆர்.எஃப்-வுடன் ஆன்மீக பயிற்சி செய்யும் நான்காவது ஒரு ஸாதகரை சந்தித்தோம். எல்லோரும் இணைந்து எங்கள் ஸத்சேவையாக நூலகங்களில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் அமர்வு முகாம்களை நடத்தி வந்தோம்.
6. ஆன்மீக கஷ்டங்களை எவ்வாறு சமாளித்து மீண்டுவருவது என்ற கற்றுதல்
ஆன்மீக பயிற்சியில் சில காலம் கழிந்த பிறகு தீயசக்திகளால் எனக்கு அதிக கஷ்டங்கள் உள்ளன என்று எனது வழிகாட்டும் ஸாதகர் கூறினார். நான் காலை பள்ளிக்குச் செல்வதற்கு முன் என்னிடம் இதைச் சொன்னதால் வகுப்பில் அமர்ந்தவாறு தீவிர கஷ்டம் இருப்பது என்றால் என்னை தீயசக்தி பீடித்துள்ளது என்று பொருள், என்றுணர்ந்தது நினைவுண்டு. இதை ஏற்றுக்கொள்ள காலம் கடந்தது, ஆனால் ஏற்றுக்கொண்ட உடனேயே இதன் பொருள் என்ன, மீண்டுவர என்ன செய்யவேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.
நான் செய்யும் செயல்களும் என்னுள் இரு நபர்கள் இருப்பது போலும் உணர்வதன் காரணம் என்னை பீடித்திருக்கும் தீயசக்தியால் தான் என்று விடலைப் பருவத்தில் நான் புரிந்துகொண்டேன்.
ஆன்மீக பயிற்சியையும் நிவாரணங்களையும் நான் அதிகரித்து வரும்போது என்னுள் இருக்கும் தீயசக்தி உடல் இயக்கங்கள் அல்லது முகம் மாறுவது போன்றவற்றில் வெளிப்பட தொடங்கியது. ஸத்சங்கம் அல்லது ஸாத்வீகமான சூழ்நிலையில் நான் இருக்கும்போது அதிகம் ஏற்பட்டது. கடவுளின் கருணையால் ஸாதகர்களின் சங்கத்தில் இருக்கும்போது மட்டும் இது நடக்கும், இல்லையெனில் என் நண்பர்களும் குடும்பமும் பார்த்தால் அச்சம் அடைந்து இருப்பார்கள்.
எதிர்மறை மற்றும் என்னையே துன்புறுத்த நினைக்கும் எண்ணங்களாகவும் இந்த கஷ்டம் உருவம் கொண்டது. உதாரணத்திற்கு, கார் ஓட்டும்போது ஸ்டியரிங் சக்கரத்தை வேகமாக திருப்பி காரை விபத்துக்குள்ளாக்க எண்ணம் வரும், ஓட்டும்போது என் கண்முன்னே இது நடப்பதை போல் நான் கற்பனை செய்வேன். இத்தருணங்களில் என்னை காத்து இவ்வெண்ணங்களை நிராகரிக்க வழி கேட்டு கடவுளை வேண்டுவேன். இவ்வெண்ணங்கள் வலுவாக இருந்தும் கடவுள் எனக்குக் கெடுதல் ஏற்படாதபடி வைத்தார்.
2010-இல் ஆன்மீக ஆராய்ச்சி மையத்தின் ஜனவரி மாத ஆன்மீக வகுப்புகள் உலகெங்கும் உள்ள சில ஸாதகர்களுக்கு இணையத்தில் ஒளிபரப்பினார்கள். இவ்வகுப்புகளை நான் பார்க்கும்போதெல்லாம் அதில் நடப்பவை ஏதும் புரியாத அளவிற்கு கஷ்டம் வெளிப்படுவது நினைவில் உள்ளது. அந்த வாரத்தில் தினமும் என் வயிறு கலங்கும். நான் பள்ளிக்கும் செல்லவேண்டியதால் எனது இந்த கட்டுப்பாடில்லாத உடல் அசைவுகளை மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என அஞ்சினேன். கடவுள் அருளாலேயே நான் பள்ளியில் அல்லது குடும்பத்துடன் இருக்கும்போது எனது இந்த அசைவுகள் பெருமளவு குறைந்தன. ஆனால் தனியாக இருந்தபோது வலுவடைந்தது. தேவையான நேரத்தில் இந்த அசைவுகள் குறைந்தபோது எனது புரிதலுக்கு கடந்து கடவுள் எனக்காக ஏதோ செய்தார் என்றுணர்ந்து நான் அதை ஏற்றுக்கொண்டேன்.
இந்தத் தீவிர கஷ்டங்கள் உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்று இவ்வனுபவங்களால் நான் உணர்ந்தேன். போராட்ட மனப்பான்மை, நேர்மை, ஆன்மீக நிவாரணத்தில் தன்னைச் சார்ந்து இருப்பது, சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளுதல், அதோடு முக்கியமாக கடவுள் என்னை எப்போதும் காக்கிறார் என்ற நம்பிக்கையை எனக்கு அவர் கற்றுத் தருகிறார்.
7. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்திற்கு வருகை
நான் முதல் முறையாக ஆன்மீக வகுப்புக்காக எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்திற்கு ஜூலை 2011-இல் வந்தேன். இவ்வகுப்புகள் முடிந்த பிறகு பள்ளிக்கூடத்தை நிறுத்தி முழுநேர ஆன்மீக பயிற்சி செய்ய முடிவெடுத்தேன். சான்றிதழ் பெரும் அளவு பள்ளி முடித்ததால் அந்தத் துறையில் வேலைக்காக விண்ணப்பிக்கலாம், ஆனால் மேற்படிப்பிற்க்காக திட்டமிட்டிருந்தேன். பள்ளிக்குச் செல்வது, வீட்டுப்பாடம் செய்வது போன்றவற்றில் பல நேரம் வீணாவதால் உண்மையில் ஆன்மீக பயிற்சி செய்வது உலகியல் தகுதியை விட சிறந்தது என்றுணர்ந்தேன். ஆபத்து காலங்கள் சீக்கிரமே வந்துவிடுவதால் ஆன்மீக பயிற்சி செய்ய குறைந்த நேரம் உள்ளது என்றுணர்ந்தேன்.
2011 முதல் 2014 வரையான காலத்தில் கடவுள் அருளால் பலமுறை எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆன்மீக பயிற்சி செய்ய வாய்ப்பு கிட்டியது.
ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் அமைதி மற்றும் வீடு போல் உணர்ந்தேன். மற்ற ஸாதகர்களிடம் இருந்து பலவற்றை கற்று ஆன்மீக பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக உதவியையும், வழிகாட்டலையும் பெற்றேன். அஷ்டாங்க ஸாதனையை நடைமுறையாக்க முயற்சி செய்து ஆளுமை குறைகளை களையும் முறையில் கவனம் செலுத்தினேன். மஹான்களின் சங்கத்தில் இருந்ததால் ஆன்மீக வாழ்வு மற்றும் பயிற்சியைவிட பெரிதானது வேறொன்றும் இல்லை என நம்பிக்கை வலுத்தது.
ஆன்மீக ஆராய்ச்சி மையத்திற்கு முதல் சில தடவை வந்தபோது என்னுள் இருக்கும் தீயசக்தி அடிக்கடி பயங்கரமாக வெளிப்படும். பல சூட்சும பரிசோதனைகளில் நான் கலந்துகொண்டதால் அமானுஷ்ய முறையில் தீயசக்தி வெளிப்படும். தீயசக்திகளை பற்றியும், என்னை அதிலிருந்து எவ்வாறு வேறுபாடு காண்பது என்றும் இந்தப் பரிசோதனைகள் கற்றுத் தந்தது. ஆன்மீக உணர்வு முயற்சி, நாமஜபம் மற்றும் ஆழ்ந்த பிரார்த்தனைகள் மூலமாக இவ்வெளிப்பாடுகளை சாந்தப்படுத்த முடிந்தது. இவ்வனுபவங்களால் தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை உயர்ந்தது. அதனால்தான் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மற்றொரு காரணம் என்னவென்றால் இந்த சூட்சும பரிசோதனைகள் மூலம் தீயசக்திகள் வெளிப்பட கட்டாயப்படுத்தப்பட்டு கருப்பு சக்தியை இழக்கச் செய்வதால் நமக்கு அது அளிக்கும் கஷ்டம் குறைகிறது, இதனால் ஸாதகரும் பயனடைவர்.
8. 61% ஆன்மீக நிலை அடைந்தேன்
மார்ச் 2013-இல் ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருந்த போது நான் 61% ஆன்மீக நிலை அடைந்துவிட்டேன் என அறிவித்தார்கள். கடவுளுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்தேன், அவர் அருளால் மட்டுமே ஆன்மீக கஷ்டம் இருந்தும் எனது ஆன்மீக வளர்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொரு சூழ்நிலையையும் ஆன்மீக பயிற்சி என்று ஏற்றுக்கொண்டு அனுபவிப்பதால் நாம் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார். எஸ்.எஸ்.ஆர்.எஃப்-இல் நான் தொடர்போடு இருந்த எல்லா ஸாதகர்கள் மூலமாகவும் அஷ்டாங்க ஸாதனை செய்ய மற்றும் ஆளுமை குறைகளை களைதல் மூலம் எனது குறைபாடுகளையும் அஹம்பாவத்தையும் களைய கடவுள் கற்றுத்தந்ததை நினைத்து நன்றியுணர்வோடு இருந்தேன்.
9. தற்போதைய நிலை
எஸ்.எஸ்.ஆர்.எஃப் உடன் தொடர்புகொண்டு ஆன்மீக பயிற்சி செய்யாதிருந்தால் நான் எந்த நிலையில் இருந்திருப்பேன் என்று தெரியாது. ஆன்மீக பயிற்சியின் மூலமாக மட்டும் வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்னவென்று அறிந்து துன்பங்களை விட முடிந்தது. நான் யாரென்ற குழப்பம் இனி இல்லை, ஏனென்றால் நாமனைவரும் உண்மையில் ஆத்மாதான் என்று ஆன்மீக பயிற்சி உணரவைத்தது.
எனது ஆன்மீக கஷ்டம் பெரிதளவு குறைந்து ஆன்மீக பயிற்சிக்கும் ஸத்சேவைக்கும் அதிக நேரம் அளிக்க முடிகிறது. என்னை பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும் இந்த கஷ்டத்தை எதிர்கொள்ள உதவியதற்கு கடவுளுக்கும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் -க்கும் கடமைப்பட்டுள்ளேன் ஆன்மீக பயிற்சியால் நான் அனுபவிக்கும் அமைதியை சமுதாயத்தில் உள்ள பலர் அடைய திணறுகிறார்கள் என்றுணர்ந்தேன்.
எஸ்.எஸ்.ஆர்.எஃப் வாசகர்களுடன் நான் பகிர விரும்புவது ஒன்று, இவ்வுலகில் அமைதியையும் நீங்கள் உண்மையில் யார் என்ற உணர்வையும் ஆன்மீக பயிற்சி அல்லாது வேறு எதனாலும் கொடுக்க இயலாது, அதனால் அதை தொடங்க உங்களை நான் வேண்டுகிறேன். ஆன்மீக பாதையில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கடவுளை அடைவதே இலக்கு என்ற நம்பிக்கையோடு முயற்சிக்கவும், உங்கள் பாதையில் இது அதிக பலன்களை தரும்.
-திருமதி கிறிஸ்ட்டி லியுங் (திருமணத்திற்கு பிறகு திருமதி ராதா மல்லிக்), வான்கூவர், கனடா