உருவேற்றி எவ்வாறு புனித தீர்த்தத்தை உருவாக்குவது?

உருவேற்றி எவ்வாறு புனித தீர்த்தத்தை உருவாக்குவது?

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது. வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத்  தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

1. புனித தீர்த்தத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பற்றிய ஒரு முன்னுரை

புனித தீர்த்தத்தைத் தயாரிக்க பல வழிகள் உள்ளன. அவை:

  • தண்ணீரில் விபூதியை(திருநீறு) கலந்து புனித தீர்த்தம் உருவாக்குதல்
  • தண்ணீரை நாமஜபத்தின்  மூலம் உருவேற்றி புனித தீர்த்தமாக உருவாக்குதல்.
  • தண்ணீரில் புனித பூமியின் மண் சேர்த்து புனித தீர்த்தம் உருவாக்குதல். (புனித பூமி என்பது உயர்ந்த வரிசையில் உள்ள மகான்கள் வாழும் பூமியைக் குறிக்கிறது.)
  • ஆசீர்வதிக்கப்பட்ட நீர் (இது 50% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள ஒருவரால் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆன்மீக நிலைக்கு கீழே உள்ள ஒருவரால் தண்ணீரில் தெய்வீக சைதன்யத்தை அதிகரிக்கும் திறன் குறைவாக இருக்கும் அல்லது அறவே இருக்காது
  • தொடுவதன் மூலம் புனித தீர்த்தம் உருவாக்குதல்(ஒரு மகான் நீரைத் தொடுவதால் புனிதம் அடைதல்)

இப்பகுதியில், கடவுளின் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தண்ணீரை உருவேற்றி, புனித தீர்த்தத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பற்றி விளக்கியுள்ளோம். மந்திரங்களை ஓதுவதால் ஏற்படும் ஆன்மீக சக்தியாலும் தண்ணீரை உருவேற்றம் செய்யலாம், இருப்பினும் இது இந்த கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. கடவுளின் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் பெறப்படும் நேர்மறை ஆற்றலை செலுத்தி உருவாக்கிய புனித தீர்த்தத்தை பயன்படுத்துவது ஒரு எளிமையான மற்றும் பயனுள்ள ஆன்மீக நிவாரண முறையாகும்.

2. உருவேற்றி எவ்வாறு புனித தீர்த்தத்தை உருவாக்குவது?

ஒரு கண்ணாடி தம்ளரில் நீர் எடுத்துக்கொள்ளவும். கடவுளின் நாமத்தை மன ஒருமைப்பாட்டுடனும், பக்தியுடனும் பிரார்த்தனை செய்து அந்த நாமத்திலிருந்து வரும் நேர்மறை சக்தி தண்ணீரின் தெய்வீக சைதன்யத்தை வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பரிசோதனையைத் தொடங்குங்கள். உங்கள் வலது உள்ளங்கையை கண்ணாடித் தம்ளரின் விளிம்பில் வைக்கவும். இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு கடவுளின் நாமத்தை மன ஒருமைப்பாட்டுடனும், பக்தியுடனும் 3-6 நிமிடங்கள் ஜபிக்கவும். இதற்குப் பிறகு தண்ணீர் புனித தீர்த்தமாக உருவேற்றம் அடைந்து பயன்பாட்டிற்கான  தயார் நிலையை அடையும்.

குறைந்த பட்சம் 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் கடவுளின் நாமத்தை உச்சரித்து தண்ணீரை உருவேற்றம் செய்யும் போது என்ன நடக்கும் என்பதை சூட்சும ஞானம் மூலம் வரையப்பட்ட கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.

கடவுளின் நாமத்தை உச்சரித்து தண்ணீரை உருவேற்றம் செய்யும் போது நிகழும் சூட்சும செயல்முறை

கடவுளின் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் உருவாகும் தெய்வீக உணர்வு கண்ணாடியின் விளிம்பில் வைக்கப்பட்டுள்ள கையின் வழியாக கண்ணாடியில் உள்ள தண்ணீருக்குள் நுழைகிறது. தெய்வீக சைதன்யம் அலைகளாக தண்ணீரில் நுழைந்து,பிறகு ஒரு சுழலாக தண்ணீரின் அடிப்பகுதியில் உருவாகிறது. கண்ணாடியில் உள்ள நீர் ஆன்மீக சக்தியால் சூழப்பட்டு வளப்படுத்தப்படுகிறது. கண்ணாடியிலிருந்து தெய்வீக சைதன்யம் அனைத்து திசைகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த புனித தீர்த்தத்தின் பயன் எந்தளவு தெய்வீக சைதன்யம் உருவாகியுள்ளது என்பதை சார்ந்துள்ளது. ஆகையால், தீர்த்தத்தில் உள்ள ஆற்றல், (மேற்கூறிய முறையால் உருவாக்கப்பட்ட ஆன்மீக சக்தி)  முக்கியமாக உருவேற்றம் செய்யும் நபரின் ஆன்மீக நிலையை பொறுத்தே அமையும். அதாவது உருவேற்றம் செய்பவர்களின் ஆன்மீக நிலை உயரிய நிலையில் இருந்தால் தீர்த்தத்தின் ஆற்றலும் அதிகமாக இருக்கும்.

தண்ணீரை உருவேற்றம் செய்பவர் 50% ஆன்மீக நிலைக்குக் கீழே இருந்தால், நாமஜபத்தின் மூலம் பெறப்படும் புனித தீர்த்தம் போதுமான ஆன்மீக ஆற்றல் வாய்ந்ததாக இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF), ஊதுபத்தியிலிருந்து பெறப்பட்ட விபூதியை(திருநீறு) கலந்து புனித தீர்த்தம் உருவாக்குவது நன்மை பயக்கும். உலக மக்கள்தொகையில் 80% க்கும் அதிகமானோர் 50% ஆன்மீக நிலைக்குக் கீழே இருப்பதால், ஊதுபத்தியிலிருந்து பெறப்பட்ட விபூதி கலந்து புனித தீர்த்தத்தை உருவாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது.

உருவேற்ற முறை மூலம் உருவாக்கிய புனித தீர்த்தத்தின் ஆற்றலில் ஆன்மீக நிலையின் தாக்கம்

ஆன்மீக நிலை%

தண்ணீரில் உருவாகும்

தெய்வீக சைதன்யம் %

20% 0.5%
30% 1.0%
40%  2.0%**
50% 2.5%
60% 3.0%
70% 3.5%
80% 4.0%
90% 4.5%
100% 5.0%

*ஒரு உயிரற்ற பொருளில் அதிகபட்சமாக பெறக்கூடிய தெய்வீக சைதன்யம் 6% மட்டுமே( ஒரு மகானின் ஸமாதியில்,அதாவது இறைவனோடு ஒன்றிய அதீத தியான நிலை)

** 40% ஆன்மீக நிலைக்குக் கீழே உள்ள ஒருவராலும் 2% தெய்வீக சைதன்யம் புனித தீர்த்தத்தில் உருவாக்க முடியும். அவர்கள் விபூதியைப் பயன்படுத்தும்போது இது நிகழ்கிறது.

இவ்வாறு உருவேற்றம் செய்யப்பட்ட புனித தீர்த்தத்தை ஆன்மீக நிவாரணம் அளிக்கும் மருந்தாக பல்வேறு பயன்பாட்டிற்கு (அதாவது பூசுதல், தெளித்தல் மற்றும் குடிப்பதற்கு)   பயன்படுத்தலாம்.