கைகளில் உள்ள அரிக்கும் தோலழற்சியை ஆன்மீக நிவாரணம் மூலம் சரிசெய்யலாம்.

உடல்ரீதியாக அல்லது மனோரீதியாக ஒரு சில பிரச்சனைகள் வெளிப்பட்டாலும், அவற்றின் மூல காரணம் ஆன்மீகப் பரிமாணத்துடன் தொடர்புடையதாக இருக்கும், நமது வாசகர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கத்துடன் எஸ்.எஸ்.ஆர்.எப் (SSRF) ஒருவரின் கையில் அரிக்கும் தோலழற்சி குறித்த இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. ஒரு பிரச்சனையின் மூல காரணம் ஆன்மீக இயல்புடையதாக இருப்பின், ஆன்மீக நிவாரண முறைகளை இணைப்பது நல்ல பலன்களை தருகிறது என்று நாங்கள் கணித்துள்ளோம். உடல் மற்றும் மனநோய்களுக்கான ஆன்மீக  நிவாரண முறையுடன் வழக்கமாக  எடுத்துக்கொள்ளும் மருத்துவ  சிகிச்சையும் தொடருமாறு  எஸ். எஸ். ஆர். எஃப் பரிந்துரைக்கிறது. வாசகர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி எந்த ஒரு ஆன்மீக நிவாரண முறையையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

சுருக்கம்

ஜான் கடந்த 23 ஆண்டுகளாக கைகளில் அரிக்கும் தோலழற்சியால் அவதிப்பட்டு வந்தார். தத்தாவின் நாமஜபத்தை உச்சரிப்பதன் மூலம், அவரது கைகளில் இருந்த அரிக்கும் தோலழற்சி உடனடியாக குறையத் தொடங்கியது. பிரபஞ்சத்தில் தத்தாவின் பொறுப்புகளில் ஒன்று, முன்னோர்களின் சூட்சும தேகத்தால் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து தணிப்பது. இரண்டு வாரங்களுக்குள் அரிக்கும் தோலழற்சி அறிகுறியே இல்லாமல் கை ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது.

ஜான் என்பது அவரது உண்மையான பெயர் அல்ல, தனியுரிமை நோக்கத்திற்கு இணங்க பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. ஜானுடைய கைகளில் உள்ள  அரிக்கும் தோலழற்சி பற்றி அவருடன் ஒரு நேர்காணல்

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : எங்களுடன் இணைந்ததற்கு நன்றி ஜான். உங்கள் கைகளில் உள்ள அரிக்கும் தோலழற்சி நோயின் வரலாற்றைப் பற்றி சுருக்கமாக கூற முடியுமா?
ஜான் : எனது 19 வயதிலிருந்தே என்னுடைய கைகளில் அரிக்கும் தோலழற்சி நோய் உள்ளது. இது எந்த விளக்கக்கூடிய காரணமும் இல்லாமல் திடீரென்று வந்தது. இது ஆணித்தரமாக இருந்ததால் எந்த மருந்துகளாலும் தீர்வு காண முடியவில்லை. ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டிலும் குறைந்தது ஆறு தோல் நிபுணர்களிடம் சென்றிருக்கிறேன். சிறிது காலம் கழித்து, நான் முயற்சிகளை கைவிட்டுவிட்டு, பிரச்சினையுடன் வாழ என்னை பழகிக் கொண்டேன். நான் கார்டிசோன் களிம்பு என்ற ஒரே ஒரு மருந்து மட்டுமே  அவ்வப்போது பயன்படுத்திவந்தேன் , இது வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படும் மேற்பூச்சு க்ரீம் (குழைமம்) ஆகும். இது அரிப்பைக் குறைக்க செய்யும்.

அரிக்கும் தோலழற்சி நோயானது எனது இடது கையில் முழுவதுமாகவும் , வலது கையில் மற்றும் இடது காலில் சிறிதாகவும் பரவி இருந்தது.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) :  ஜான் உனக்கு இப்போது என்ன வயது?
ஜான் : 42

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : அப்படியானால் நீங்கள் 23 ஆண்டுகளாக இதை எதிர்த்துப் போராடினீர்களா?
ஜான் : ஆம்

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : கைகளில் உள்ள  அரிக்கும் தோலழற்சிக்காக நீங்கள் கடைசியாக எப்போது தோல் மருத்துவ நிபுணர் அல்லது மருத்துவரைச் சந்தித்தீர்கள்?
ஜான் : 3 மாதங்களுக்கு முன்பு, அது மிகவும் மோசமாகி தொடர் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரை அணுகினேன்.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : அரிக்கும் தோலழற்சியின் உறுதிநிலை பற்றி தோல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? அது மறையாததற்கு என்ன விளக்கம் தருகிறார்கள்?

ஜான் : வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன ஆனால் அவர்களில் யாருக்கும் காரணம் தெரியவில்லை. அவர்களில் சிலர் இது மன அழுத்தத்தால் தூண்டப்பட்டதாகக் கூறியுள்ளனர். மற்றவர்கள் இது மரபணு மற்றும் எனது இனத்தின் காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். நான் அடிப்படையில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவன். மத்தியதரைக் கடலில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடிக்கடி இந்த பிரச்சனை இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். எனக்கு அவர்களின் அறிவுரைகள் குணப்படுத்துவதை விட தோல் நோயை கட்டுப்படுத்துவது பற்றியே இருந்தது.  அவர்கள் மிகவும் நடைமுறைக்கு மாறான பல்வேறு உணவு முறைகளை பரிந்துரைத்தனர்.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : இந்த 23 ஆண்டுகளில் இந்த அரிக்கும் தோலழற்சியிலிருந்து இருந்து உங்களுக்கு எப்போதாவது நிவாரணம் கிடைத்ததா?

ஜான் : ஆம், ஒருமுறை நான் 2004 இல் ஒலிம்பிக்கிற்காக மீண்டும் கிரீஸ் சென்றிருந்தபோது, ​​என் மாமா என் கையில் சிறிது புனித தீர்த்த நீரை தெளித்தார். அந்த புனித நீர் கைகளில் பட்டு அந்த இடம் நுரைக்கத் தொடங்கியது அதன்மூலம் அறிகுறிகளில் இருந்து ஓரளவு நிவாரணமும், தோலில் சிறிது தெளிவும் ஏற்பட்டது.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : உங்கள் கை இப்போது நன்றாக குணமாகியிருப்பதை நான் காண்கிறேன், இது எப்படி நடந்தது என்று எங்களிடம் கூற முடியுமா?

ஜான் : என்னுடைய சக ஊழியரான ஷான், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், ஆன்மீக பரிமாணம் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி ஒரு விரிவுரையை அளித்துக்கொண்டிருந்தார். நான் அந்த தலைப்பில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களுக்கு பல காரணிகள் பங்களிக்கக்கூடும் என்று அவர் விளக்கினார். நவீன அறிவியலால் நீங்காத நீண்டகாலப் பிரச்சனைகள் ஆன்மீகத் உலகில் அதன் காரணத்தை அறிந்து சரிசெய்யலாம் என்று கூறியது எனக்கு மிகுந்த ஆர்வத்தையளித்தது. சொற்பொழிவு முடிந்த உடனேயே, ஷானிடம் பேசி, என் கையில் இருந்த அரிக்கும் தோலழற்சியை காட்டினேன்.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : அவர் என்ன பரிந்துரைத்தார்?
ஜான் : நான் பிறந்த மதத்தின்படி கடவுளின் பெயரை உச்சரிப்பது பற்றி கூறி ஆன்மீக பயிற்சியைத் தொடங்கச் சொன்னார். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை உச்சரிக்கும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனுடன், தினமும் ஒன்றரை மணி நேரம் ‘ஶ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தையும் சொல்லச் சொன்னார்கள். மூதாதையர்களால் ஏற்படும்  பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும் கடவுளின் அம்சம் இது என்றும் கூறினார். ஆன்மீக ரீதியான காரணம் இருப்பதற்கான வலுவான வாய்ப்பு இருப்பதால், நான் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் எனது கையை புகைப்படம் எடுக்க முடியுமா என்று ஷான் கேட்டுக் கொண்டார்.  ஜூலை 11, 2006 அன்று எடுக்கப்பட்ட ஜானின் கைகளில் அரிக்கும் தோலழற்சியின் படங்கள் இவை. நான் ஸ்டீராய்டு க்ரீமைப் பயன்படுத்தியதால் அது உண்மையில் சற்று மேம்பட்ட நிலையில் உள்ளது.

பேட்டிகாண்பவர் : ஆன்மீக சிகிச்சையின் போக்கைப் பற்றி விளக்க முடியுமா?
ஜான்  : எனது கைகளின் புகைப்படம் எடுத்தவுடன் நான் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டேன். நான் இரண்டு பணியை செய்யத் தொடங்கினேன் அதாவது ஒருநாளில் அரைமணி நேரத்திற்கு ‘ஶ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தையும், இயேசுவின் நாமஜபத்தை ஒரு அரைமணி நேரத்திற்கும் செய்யத் துவங்கினேன். தத்தாவின் நாமஜபத்தை ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்திற்கு ஜபிக்கும்படி ஷான் சொன்னபோதும் என்னால் நேரம் காரணமாக செய்ய இயலவில்லை. குறைவான நேரம் ஜபித்தபோதும் என்கையில் நிவாரணம் உடனடியாக இருந்தது,மறுநாள் முதல் அதை என்னால் உணர முடிந்தது. அரிப்பு மற்றும் வலியும் மறையத் தொடங்கின. தற்செயலாக நான் நாமஜபத்தை தொடங்கியபின் ஸ்டராய்டு க்ரீம் உபயோகப்படுத்துவதை நிறுத்திவிட்டேன். தினமும் அதே நேரத்திற்கு நாமஜபத்தை தொடர்ந்து செய்து வந்ததால் எனது கை நிவாரணமடையத் தொடங்கியது, ஆறு நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : இது போன்ற ஓரளவு முன்னேற்றம் முன்பு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா?
ஜான் : இந்த அளவு முன்னேற்றம் இதற்கு முன்பு நான் கண்டதில்லை

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?

ஜான் : இல்லை,ஆனால் நாமஜபம் செய்வது மிகவும் போராட்டமாகவும் அதனால் சோர்வையும் என்னால் உணர முடிந்தது.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : நாமஜபத்தின் மூலம் அறிகுறிகள் குறைந்துவிட்டன என்பதை நீங்கள் எப்படி உறுதியாகக் கூற முடியும்?

ஜான் : உண்மையில் என் கைகளில் அரிக்கும் தோலழற்சியின் படங்கள் எடுக்கப்பட்ட பிறகு, நான் வார இறுதியில் நாமஜபம் செய்வதை  நிறுத்திவிட்டேன். அதன் பிறகு  அறிகுறிகள் உடனடியாக அதிகரித்தன. மேலும், நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்ததால்,  தத்தாவின் நாமத்தை உச்சரிப்பதில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்ததால் அதை ஒழுங்கற்ற முறையில் செய்தேன். இது மூதாதையர் பிரச்சனைகளை கடப்பதற்கான ஒரு மந்திரம் என்றும் அது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை ஜபிப்பதோடு இணைந்து செய்ய வேண்டும் என்றும் ஷான்  எனக்கு விளக்கினாலும், நான் எனது மதத்திற்கு விசுவாசமற்றவனாக இருப்பதைப் போல் உணர்ந்தேன். நான் குற்ற உணர்ச்சியால் தத்தாவின்  நாமத்தை உச்சரிப்பதை நிறுத்தியதால்   பலமுறை எனது அறிகுறிகளும் திரும்பி வந்தன. நான் பகவான் தத்தாவின் நாமத்தை, அதாவது ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்று மீண்டும் நாமஜபம் செய்ய தொடங்கும் போதெல்லாம் அறிகுறிகள் உடனடியாகக் குறையத் தொடங்கின. தத்தாவின் நாமத்தை உச்சரிப்பதற்கும் அறிகுறிகள் குறைவதற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருந்தது.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : தத்த பகவானைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஜான் :இல்லை

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லத் தேவையில்லை, அது சரியா?

ஜான் : அது சரி. உண்மையில், நான் என் மதத்திற்கு விசுவாசமற்றவன் என்று நினைத்ததால், அவருடைய நாமத்தை உச்சரிப்பதால் நான் குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன் என்று கூறுவேன்.

பேட்டிகாண்பவர் (பேட்டியாளார்) : உங்கள் நேரத்தை ஒதிக்கியதற்கு நன்றி ஜான் மற்றும் உங்கள் ஆன்மீகப் பயிற்சி அனைத்துக்கும் நல்வாழ்த்துக்கள்.
ஜான் : உங்களுக்கும்  நன்றி

2. ஜானின் கைகளில் உள்ள அரிக்கும் தோலழற்சி பற்றி ஆன்மீகக் கண்ணோட்டத்தின் சுருக்கமான கருத்துகள்

  • ஜானுக்கு நேர்ந்தது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது மறைந்த மூதாதையர்களால் ஏற்படலாம். அதை அவர்கள் ஏற்படுத்துவதற்கான காரணம், அவர்களுக்கு உதவ சந்ததியினருடன் தொடர்பு கொள்ள ஒரு முயற்சியாகக் கூட இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலோர் அதிநுட்பமானஆறாவது அறிவைக கொண்டிருக்கவில்லை மற்றும் வாழ்க்கையில் ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி அறியாதவர்களாக இருக்கின்றோம். இதன் விளைவாக, பிரச்சினையின் மூல காரணத்தை உண்மையில் ‘நம் முன்னோர்களின் உதவிக்கான அழைப்பு’ என்று நம்மால் அறியமுடிவதில்லை, அவர்களின் மறுமை பயணத்திற்கான தடைகளைக் கடக்க அவர்களுக்கு உதவ சில ஆன்மீக சடங்குகளை(சிரார்த்தம்) நாம் செய்ய வேண்டும்.
  • தத்தாவின் நாமஜபத்தை உச்சரிக்கும்படி அறிவுறுத்தப்படும் சிலர், தங்கள் மதத்திற்கு எதிராக இருப்பதை போன்ற குற்ற உணர்ச்சியாலோ அல்லது விசுவாசமற்றவர்களை போலவும் உணர்கிறார்கள். ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த உணர்வுக்கான காரணம் முற்றிலும் உளவியல் ரீதியானது மற்றும் ஆதாரமற்றது. உங்களுக்கு ஒரு மேற்கோள் காட்ட, வேறு நாட்டில் தயாரிக்கப்படும் மருந்தை உட்கொள்வதில் உள்ள குற்ற உணர்ச்சியைப் போன்றது.
  • ஜான் அனுபவித்த சோர்வு உணர்வு மிகவும் இயல்பான ஒன்றாகும். நாமஜபத்திலிருந்து வரும் நேர்மறை ஆற்றல் ஆன்மீக கஷ்டங்களுடன் சண்டையிடுவதால், அது சோம்பல், தலைவலி அல்லது சோர்வு போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • ஆன்மீக நிவாரணம் செய்வதில் நம்பிக்கை அவசியமான முன்நிபந்தனை அல்ல. இருப்பினும், நம்பிக்கை நிவாரணத்தன் செயல்திறனை துரிதப்படுத்துகிறது. ஆன்மீக நிவாரணத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தலைவலியிலிருந்து நிவாரணம் பெற ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது போல என்று கூறலாம். ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒரு ஆன்மீக நிவாரணத்தின் விஷயத்தில், குணப்படுத்தும் முறையின் செயல்முறை அதன் ஆன்மீகநிலையைப் பொறுத்து உள்ளது .
  • தீர்த்த நீர், விபூதி போன்றவற்றைப் பூசுவது, தத்தரின் நாமத்தை உச்சரிப்பதன் மூலம், சில சமயங்களில் மூதாதையர் பிரச்சனைகளால் ஏற்படும் தோல் பிரச்சனையை குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்.