வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கான ஆன்மீக மூல காரணங்களின் ஒரு அறிமுகம்

சுருக்கம்: ஆன்மீக பரிமாணம் நமது வாழ்க்கையின் 80% பகுதியை பகுதியை ஆட்கொள்கின்றது. முன்ஜென்மங்கள் உட்பட கடந்த கால செயல்கள், விதியின் ரூபத்தில், நம் வாழ்வின் நிகழ்வுகளில் சராசரியாக 65% மான பகுதியை நிர்ணயிக்கின்றது. விதியானது பல்வேறு விஷயங்களின் மூலம் பௌதீக மற்றும் ஆன்மீக உலகில் செயல் புரிகிறது. ஆன்மீக உலகில் உள்ள விஷயங்களில், பூதங்கள் மற்றும் மூதாதையரின் சூட்சும தேகங்கள் (ஆவிகள்) நமது விதியை பாதிக்கின்றன. ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு ஏற்ப ஆன்மீக பயிற்சி செய்யும்போது, இந்த ஆன்மீக காரணிகளின் பாதிப்பை கடந்து செல்வதற்குரிய ஆன்மீக சக்தி கிடைக்கின்றது.

இக்கட்டுரையை விளங்கிக்கொள்வதற்கு, முதலில் பின்வரும் கட்டுரைகளை வாசிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

 • ப்ராரப்த வினை (விதி) மற்றும் க்ரியமான் வினை (தன்னிச்சையான செயல்) என்பது என்ன?
 • ப்ராரப்த வினை (விதி) மற்றும் கொடுக்கல்-வாங்கல் கணக்கு

1. அறிமுகம்

இந்த பிரிவில் முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டவாறு எந்தவொரு பிரச்சனைக்கும் மூல காரணம் ஆன்மீக பரிணாமத்தில் இருக்க அதிக  வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் ஆன்மீக மூல காரணங்கள் எவை மற்றும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்குரிய நியமம் ஆகியவை பற்றி விரிவாக ஆராயலாம்.

பிரச்சனைகளுக்குரிய ஆன்மீக மூல காரணங்களை இரண்டு கோணங்களில் இங்கு விளக்குகின்றோம்:

ஆன்மீக பயிற்சியின் பாதைகள் : வேதாந்த தத்துவத்தின் படி இறைவனை உணர பல பொதுவான வழிகள் உள்ளன. ஒருவர் தனது குணாதிசயத்திற்கு ஏற்ப ஒரு வழியை தேர்ந்தெடுக்கிறார். கர்ம யோகம், பக்தி யோகம், ஹட யோகம் மற்றும் ஞான யோகம் போன்றவை இவ்வாறான வேறுபட்ட வழிகளாகும்.
 1. முதலாவது கோணம் கர்ம யோகத்திலிருந்து காண்பதாகும். இது நம் வாழ்வில் பெருவாரியாக பாதிக்கும் விதி மற்றும் தன்னிச்சையான செயல் அதனுடன்  கொடுக்கல் வாங்கல் கணக்கினையும் உள்ளடக்கும்.
 2. இரண்டாவது கோணமானது நமது விதி மற்றும் தன்னிச்சையான செயல்களை பாதிக்கும் ஆன்மீக ரீதியான விஷயங்களாகும்.

2. கர்ம யோக கண்ணோட்டத்தில் இருந்து நோக்குதல்

கர்ம யோகமானது இயல்பாகவே ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனும் கோட்பாட்டுக்கு அமைய ஆன்மீக பயிற்சி செய்வதாகும்.

வாழ்வின் இன்ப துன்பங்களை எதிர் நோக்குவது ஏன் என்று கர்ம யோகத்தின் கண்ணோட்டத்தில் நோக்கினால் எல்லா இன்ப துன்பங்கள் மற்றும் வாழ்வின் நிகழ்வுகள் அனுபவிக்கப்படுவது விதி அல்லது தன்னிச்சையான செயல்களால் என்பதையே வலியுறுத்துகிறது.

தன்னிச்சையான செயல் : சில சம்பவங்கள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் நடத்தை முற்றிலும் ஒருவர் கட்டுப்பாட்டில் உள்ளன. அதாவது மனம் (உணர்வுகள்) மற்றும் புத்தியினை (முடிவெடுக்கும் திறன்) பயன்படுத்தி செயல்படும் நடவடிக்கைகளை இது குறிக்கும். தற்காலத்தில் நம் வாழ்வில் 35% மானவை நமது சுய விருப்பத்தினாலும் சுதந்திரமான தேர்வினாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

விதிக்கப்பட செயல்கள் :  நம்முடைய வாழ்வின் எந்த பகுதி நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் முற்பிறவியின் செயல்கள் அல்லது இப்பிறவியின் செயல்களின் விளைவாக ஏற்படுகிறதோ அதுவே விதியாகும். பொதுவாக நம் வாழ்வில் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் கர்ம வினைப்படியே நடக்கின்றது. பிறப்பு, திருமணம், தீவிர விபத்துகள் மற்றும் வியாதிகள் என்பவை இதற்குள் அடங்கும். தற்காலத்தில் 65% மானவை இவற்றையே சாரும். நாம் எவ்வாறு பல்வேறு தூண்டுதல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் செயல்படுகிறோம் அல்லது எதிர் கொள்கிறோம் என்பதையும் நமது விதியே தீர்மானிக்கிறது.

நாம் பிறக்கும் போதுள்ள விதி நம்முடைய பல முற்பிறவிகளில் சேர்க்கப்பட்ட மொத்த சஞ்சித வினையின் ஒரு சிறு பகுதியாகும். விதியின் மூலம் கடந்த பிறவிகளின் செயல்கள் மற்றும் எண்ணங்களுக்கான புண்ணியங்களை அல்லது பாவங்களை அனுபவிக்கின்றோம்.

வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கான ஆன்மீக மூல காரணங்களின் ஒரு அறிமுகம்

நமது ஒவ்வொரு செயலும் கணக்கொன்றை உருவாக்கும் அல்லது பழைய கணக்கொன்றை தீர்க்கும். இரண்டும் சேர்ந்தாற்போலும் அமையலாம். அதாவது ஒரு பகுதி தீர்ப்பதாகவும் இன்னொரு பகுதி உருவாக்குவதாகவும் அமையலாம். கணக்கு நேர்மறை அல்லது எதிர்மறையாக இருக்கலாம். விதிப்படியே கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. ஆனால் புதிய கணக்கொன்றை உருவாக்குவது தன்னிச்சையான செயலினால் ஆகும்.

 • குமார் என்பவன் மாலாவை ஏமாற்றி 5 அலகுகள் வேதனையை அளித்திருந்தால் இந்நடவடிக்கையால் அவன் பழைய கணக்கொன்றை தீர்த்திருக்கலாம் அல்லது புதிதாக ஒன்றை உருவாகியிருக்கலாம் அல்லது இரண்டும் சேர்ந்தாற்போல் இருக்கலாம்.
 • இதற்கு மாறாக, குமார் மாலாவிற்கு புது கார் ஒன்றை பரிசளித்தால் இது கூட பழைய கணக்கொன்றை தீர்த்திருக்கலாம் அல்லது புதிதாக ஒன்றை உருவாகியிருக்கலாம் அல்லது இரண்டும் சேர்ந்தாற்போல் இருக்கலாம்.

மிகவும் செயல்படுத்தப்பட்டுள்ள ஆறாவது அறிவு இல்லாமல் நமது நடவடிக்கைகளில் எவை கணக்கொன்றை தீர்த்திருக்கலாம் அல்லது புதிதாக ஒன்றை உருவாகியிருக்கலாம் என்று கூற முடியாது. மகானின் ஆன்மீக நிலையினை அடைந்த ஒருவரே தன்னுடைய ஆறாவது அறிவின் மூலம் இதனை மிகச்சரியாக கூற முடியும்.

குமாரையும் மாலாவையும் பொறுத்த வரையில் ஏமாற்றிய நிகழ்வு கணக்கொன்றை தீர்ப்பதாக அமைந்தால் அது முற்பிறப்பில் அல்லது இப்பிறப்பில் மாலா அதற்கீடான துன்பத்தை குமாருக்கு அளித்திருக்கலாம். எவ்வாறு இருப்பினும் எதிர்மறை கணக்குகளை தீர்ப்பது நம் வாழ்வில் மிகவும் வேதனையை அளிப்பதாகும்.

நல்ல மனிதர்கள் கஷ்டங்களை அனுபவிப்பதை நாம் கண்டிருக்கிறோம். அதற்கு காரணம் இதுவே. நாம் பல தருணங்களில் ‘இது கடவுளின் வழி’ அல்லது ‘அது ஒரு மர்மம் தான்’ போன்ற சொற்றொடர்களை செவி மடுத்திருக்கிறோம். உண்மையில் மர்மம் என்று ஒன்றில்லை. அனைத்தும் நடைபெறுவது ஒரு காரணத்திற்காகவே. இவை, கொடுக்கல் வாங்கல் கணக்கு, விதி மற்றும் தன்னிச்சையான செயலால் ஆளப்படுகின்றன.

 • விதி மற்றும் கொடுக்கல் வாங்கல் கணக்கு பற்றிய அறியாமையே பலரையும் பாதகமான சூழ்நிலைகளில் ‘நான் என்ன பாவம் செய்தேன்?’ என விரக்தியியுடன் கூக்குரலிட வைக்கிறது.
 • சில நேரங்களில் இதனால் இறைவன் மீது குற்றம் சுமத்துகிறோம் அல்லது இறை நம்பிக்கையை அல்லது வாழ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கின்றோம்.
 • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விதியின் கோட்பாடு பற்றிய ஞானம் இல்லாததால் பலரும் தங்களுடைய முன் ஜென்ம செய்கையால் தற்போது நடக்கும் விஷயங்களை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது என அறிய மாட்டார்கள். (உபதலைப்பு இலக்கம் 4 ஐ பார்க்கவும்)
 • கொடுக்கல் வாங்கல் கணக்கு பற்றிய ஞானம் இருந்திருந்தால், எவ்வளவு முயற்சி செய்தும் பாதகமான நிகழ்வுகள் ஏற்படும்போது, குறைந்தபட்சம் தத்துவார்த்த பார்வையிலாவது அவற்றை நோக்குவார்கள்.
 • அத்துடன் மேலும் எதிர்மறை விதிகளை ஏற்படுத்தாது கவனமாக இருப்பார்கள்.

மாறாக, நேர்மறை விதி தீர்க்கப்படும்போது இன்ப அதிர்ச்சியினை தருகிறது. இதனாலேயே தகுதியில்லாத சிலர் பெரிதாக முயற்சி செய்யாத போதும் லாட்டரி ஒன்றை வெல்கின்றனர் அல்லது ஒரு நல்ல வாழ்க்கையினை அனுபவிக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானத்தை மற்றும் கோட்பாடுகளை புரிந்து கொள்தலே இவற்றை தெளிவுப்படுத்தும்.

இப்பிறப்பிற்கு முன் பல பிறவிகளை நாம் கடந்திருக்கிறோம். நம்முடைய முதலாவது பிறப்பினில் 100% வாழ்க்கை நடவடிக்கைகள் தன்னிச்சையான செயல்களால் நிர்ணயிக்கப்பட்டன. இது வெற்று காகிதத்திற்கு அல்லது தூய கரும்பலகைக்கு ஒப்பானதாகும். பின்பு காலம் கடந்து செல்ல நாம் பல ஜென்மங்களாக வாழ்ந்த முறை மற்றும் மேற்கொண்ட தேர்வுகள், கொடுக்கல் வாங்கல் கணக்கினை உருவாக்கியுள்ளது. இவற்றை தீர்ப்பதற்காக நாம் திரும்ப திரும்ப பிறவி எடுக்கின்றோம். நாம் எவ்வாறு மேலும் கணக்குகளை உருவாக்குகின்றோம் என்பதை பின்வரும் அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம். இறுதியில் இவை ஒட்டுமொத்த கணக்கில் சேர்க்கப்பட்டு விதியினை தீர்ப்பதற்காக மேலும் பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது.

வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கான ஆன்மீக மூல காரணங்களின் ஒரு அறிமுகம்
முந்தைய கட்டுரை ஒன்றில், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணங்கள் சராசரியாக பின்வரும் கூறுகளை உள்ளடக்கும் என விவரித்தோம்.
வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கான ஆன்மீக மூல காரணங்களின் ஒரு அறிமுகம்

இவ்வடிப்படை காரணங்கள் எவ்வாறு விதியினால் ஆளப்படும் வாழ்வின் பகுதி மற்றும் தன்னிச்சையான முடிவின் மூலம் ஆளப்படும் வாழ்வின் பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை பின்வரும் அட்டவணை மூலம் காணலாம்.

நடவடிக்கை நிகழ்வு மொத்தம்
உடல் ரீதியான மன ரீதியான ஆன்மீக ரீதியான
தன்னிச்சையான செயல் 10%1 10%3 15%5 35%
விதி 10%2 55%4 மற்ற இரண்டும் ஆன்மீக காரணியாகும் 65%
மொத்தம் 20% 65% 15% 100%

அடிக்குறிப்புகள் (மேலே உள்ள அட்டவணையில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள எண்களின் அடிப்படையில்):

 1. இதனை உதாரணம் ஒன்றின் மூலம் விளக்கலாம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தண்ணீர் அசுத்தமானது என்றும் அதனை குடிக்கும் முன் கொதிக்க வைக்க வேண்டும் என்றும் ஒரு நபர் எச்சரிக்கப்படுகிறார். எனினும் அவரது தேக ஆரோக்கியம் பற்றி அளவுக்கதிகமாக நம்பிக்கை கொண்டிருந்ததால், அனைத்து வகையான கிருமிகளையும் தன்னால் ஜீரணிக்க முடியும் என அவர் கூறுகிறார். அதன் பின்பு அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படின் இது சுய தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்ட முடிவாகும், ஆகவே இது தன்னிச்சையான செயலால் ஏற்பட்டதாகும்.
 2. இங்கு நபர் ஒருவருக்கு முன் ஜென்ம பாவங்களின் காரணமாக குறிப்பிட்ட அளவு துன்பத்தினை அனுபவிக்க வேண்டும் என்று விதித்திருந்தால் வயிற்றுப்போக்கு உண்டாக வேண்டும் என்பது அவரது விதியாகும். இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய புத்தி விதிக்கு ஏற்றாற்போல் செயல்படும். இயற்கையில் அந்நபர் அபாயத்தினை எதிர்நோக்க தயக்கம் உடையவராக இருந்தாலும் கூட விதி பல வழிகளில் பங்காற்றக்கூடும்.
  • திடீரென்று அவர் தன்னுடைய குணாதிசயத்திற்கு எதிராக அளவுக்கதிகமாக நம்பிக்கை கொண்டு நீரை அருந்தலாம்.
  • தண்ணீரை பற்றி அறிவுறுத்த யாரும் இல்லாததால் தெரியாமல் அசுத்தமான தண்ணீரை அவர் பருகலாம்.
 3. மற்றுமொரு உதாரணமாக, அறிவுரை வழங்கியும் வன்முறை மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றை வழக்கமாக கொண்ட ஒருவர் மீது காதல்வயப்படும் ஒருவர் இதன் விளைவாக, உடல் ரீதியாக வன்முறையினை எதிர்கொள்ளலாம்.
 4. புத்தி விதிக்கு ஏற்றாற்போல் செயல்படுவதால் தப்பான அபிப்பிராயத்தினால் இது நடைபெறலாம். இதுவே விவாகரத்து அல்லது பல வருட துன்பத்தை தம்பதிகள் எதிர் நோக்கலாம் என மற்றவர் எளிதாக காணும் போதிலும் சிலர் பொருத்தமில்லாத ஒருவரை மணமுடிக்க ஏதுவாக உள்ளது. கொடுக்கல் வாங்கல் கணக்கினுடைய நுட்பம் மற்றும் சில நேரத்தில் சில காரியங்களை நாம் ஏன் செய்கின்றோம்’ எனும் கட்டுரையினை படிக்கவும்.
 5. சிலசமயம் பேய் வாழ்கிற வீடொன்றை ஒருவர் வாங்கி அதில் வாழ முடிவெடுக்கலாம். இதற்கு முன் வாழ்ந்தவர்கள் அடைந்த துன்பத்தை பற்றி நண்பர்கள் அறிவுறுத்தியும் அவர் அவ்வீட்டினில் வாழ முன் வரலாம். இது அப்பேயினை கோவத்திற்கு உள்ளாக்கி அவரை பாதிக்கவோ அல்லது ஆட்கொள்ளவோ செய்யலாம்.

சுருக்கமாக, விதி என்பது நம் வாழ்வை  நம் வாழ்வை ஆக்கிரமிக்கும் ஒரு மேகத்தைப் போன்றது. நம் எண்ணங்கள், செயல்கள், எதிர் எண்ணங்கள் ஆகியவற்றை அது பாதிக்கின்றது.

3. ஆன்மீகப் பரிணாமத்தில் நம்மை பாதிக்கக்கூடிய விஷயங்கள்

மனித இனம் அறியாத, ஐம்புலன்கள், மனம், புத்தி என்ற புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு நுட்பமான மற்றும் அருவ உலகம் உள்ளது. இந்த உலகமானது சூட்சும உலகம், சூட்சும பரிணாமம், ஆவி உலகம், ஆன்மீக உலகம் அல்லது ஆன்மீக பரிணாமம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது தேவதூதர்கள், பேய்கள், சுவர்க்கம், பாதாளம் போன்றவைகளை உள்ளடக்கும். நம்முள் பலருக்கு பழக்கமான அறியப்பட்ட பௌதீக உலகம், அறியப்படாத அருவ உலகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியதாக உள்ளது. உண்மையில், அறியப்பட்ட உலகமும், அறியப்படாத அருவ உலகமும் ஒன்றுக்கு முடிவிலி எனும் விகிதத்தில் உள்ளது. அறியப்படாத இந்த உலகம் நம் வாழ்க்கையில் வெகுவாக பாதிக்கிறது. சூட்சும உலகத்தில் உள்ள விஷயங்களில் நம்மை பாதிப்பது, சூட்சும உடல்களை கொண்டுள்ள காலம் சென்ற நம் மூதாதையர்கள் (பொதுவாக ஆவிகள் என்று அறியப்படுகிறது) மற்றும் பேய் பிசாசுகள் போன்றவை ஆகும்.

நம் ஆன்மீக நிலை, நாமும் மற்றவர்களும் ஆன்மீக முன்னேற்றம் அடைய செய்யும் முயற்சிகள் என்பவற்றை உள்ளடக்கும் நம் ஆன்மீக சுயவிவரத்தினை பொறுத்து நம் வாழ்வின் மீது சூட்சும உலகம் ஏற்படுத்தும் பாதிப்புகள் வேறுபடலாம்.

வேறுபட்ட ஆன்மீக சுயவிவரத்தை கொண்டுள்ள இரண்டு வகையான நபர்கள் மீது சூட்சும உலகின் விஷயங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்படுகிறது.

 • ஆன்மீக சுயவிவரம் 1: ஆன்மீக பயிற்சி செய்யாத 20% ஆன்மீக நிலையினை கொண்ட நபரொருவர்
 • ஆன்மீக சுயவிவரம் 2: சமுதாயம் ஆன்மீக முன்னேற்றம் அடைய உதவும் பொருட்டு தெரிந்தோ தெரியாமலோ ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு ஏற்ப ஆன்மீக பயிற்சி செய்யும் 50% ஆன்மீக நிலையினை கொண்ட நபரொருவர்.

நம் வாழ்வில் உடல், உளவியல், நிதி, சமூக, கல்வி போன்ற அனைத்து பரிணாமங்களிலும் தாக்கம் செலுத்தும்  பல்வேறு விஷயங்களே, வாழ்வின் பிரச்சனைகளுக்கான ஆன்மீக மூல காரணங்களாகும்.

ஆன்மீக பயிற்சி செய்யாத 20% ஆன்மீக நிலையினை கொண்ட நபரொருவர் 50% ஆன்மீக நிலையினை கொண்ட ஸாதகர் (சமூகத்தின் நலன் கருதி ஆன்மீக பயிற்சி செய்பவர்)
1. ஆவிகளால் ஏற்படும் கஷ்டங்கள் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் முதலியன)1 30% 50%2

1A. கஷ்டங்களை உணரும் தன்மை

30%3 20%3

1B. சகிப்புத்தன்மை

10%3 30%3

1C. ஆவியின் ஆன்மீக ஆற்றல்

30%4 50%4
2. நேர்மறையான சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் (%)5 10% 10%
3. ஆன்மீக சக்தி தொடர்பான 30%

3A. குண்டலினி6

10%

3B. பிராண சக்தி குறைவடைதல்6

20%
4. மற்றவை7
உணவு, ஆடைகள், காலம், ஸமஷ்டி (சமூக) பாவங்கள் போன்றன
10%
மொத்த கஷ்டம் 40%8 100%8

அடிக்குறிப்புகள்:

 1. ஆவிகள் அல்லது மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களும் இதனுள் அடக்கம். ஆன்மீக பயிற்சி செய்யாத 20% ஆன்மீக நிலையில் உள்ள நபரொருவர் பெரும்பாலும் மூதாதையர்களாலே பாதிக்கப்படுகின்றார். அதிக சக்தி கொண்ட ஆவிகள் 20% ஆன்மீக நிலையில் உள்ள நபரொருவரை தமக்கு ஆன்மீக அச்சுறுத்தலாக கருதாததோடு அவர்களுக்கு முக்கியத்துவமும் அளிப்பதில்லை. மூதாதையர்கள் ஏன் நம்மை தொல்லை செய்கின்றனர்?’ எனும் கட்டுரையை தயவு செய்து வாசிக்கவும். மாறாக, தன்னுடைய வியஷ்டி (சுய) ஸாதனை மற்றும் ஸமஷ்டி ஸாதனை (சமூகத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக) புரிய முயலும் ஸாதகர்களே பெரும்பாலும் ஆவிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
 2. அதிகரித்துள்ள தாக்குதல்களுக்கு காரணம், இந்நபர் மற்றவர் ஆன்மீக ரீதியில் முன்னேற உதவுவதால் சமூகத்தில் சத்துவ குணம் அதிகரிக்க பங்களிப்பு செய்கின்றார். இங்கு முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது யாதெனில், பயனுள்ள ஆன்மீக பயிற்சியானது உணர்ந்தோ உணராமலோ ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்க செய்வது என்பதாகும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே சமூகத்தில் தூய்மை உருவாக்கப்படுகிறது. ஆவிகள், ரஜோ மற்றும் தமோ குணத்தை கொண்டிருப்பதால் சமூகத்தில் உள்ள சத்துவ குணத்தின் தூய்மையால் தொந்தரவினை எதிர் கொள்கின்றன. ‘ஆவிகளின் நோக்கம் என்ன’ எனும் கட்டுரையை தயை கூர்ந்து வாசிக்கவும்.
 3. அதிகரித்துள்ள ஆன்மீக பயிற்சியினால் 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவரிடம், தாக்குதல்களுக்கு எதிரான தாங்கு திறன் அல்லது தற்காப்பு உபாயங்கள் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக தாக்குதல்கள் ஏற்பட்டாலும் கூட அவர்களால் சமாளிக்க முடிவதோடு சிறப்பாக சகித்துக் கொள்ளவும் முடிகிறது.
 4. 30% ஆன்மீக ஆற்றல் கொண்ட குறைந்த நிலை எதிர்மறை சக்திகள், 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒரு ஸாதகரை தொட முடியாது. இதற்கு காரணம் அவர்களுக்கு கிட்டும் இறைவனின் பாதுகாப்பு ஆகும். மாறாக குறைந்த ஆன்மீக நிலையில் உள்ள மக்கள் குறைந்த ஆன்மீக ஆற்றல் கொண்ட ஆவிகளால் கூட பாதிக்கப்படுகின்றனர். ஆவிகளுக்கு எதிரான பாதுகாப்பு கவசத்தை எந்த அளவு ஆன்மீக நிலை அளிக்கின்றது?’ எனும் கட்டுரையை தயவு செய்து வாசிக்கவும்.
 5. சில நேரங்களில் நேர்மறையான சக்திகள் கூட நம் வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது ஒரு முரண்பாடாக தோன்றலாம். இதனை, கல்வி கற்கும் திறனிருந்தும் படிப்பதற்கு முயற்சி செய்யாத மாணவன் ஒருவனை அவனுடைய பெற்றோர் கடிந்து கொள்வதற்கு ஒப்பிடலாம்.  மாணவனுக்கு இது ஒரு பிரச்சனை போல் தோன்றலாம். ஆனால் இதுவே அவனை படிப்பில் மேலும் ஈடுபடுத்த உதவுகிறது. அதுபோல், சில நேரங்களில் நேர்மறை சக்திகள் நம் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது ஆன்மீக பரிணாமத்தை பற்றி ஆராயவும் நம்மை ஆன்மீக பயிற்சியில் ஈடுபடுத்தவே ஆகும்.
 6. பொதுவாக குண்டலினியில் அடைப்பு மற்றும் பிராண சக்தி குறைவடைதல் என்பவை ஆவிகளால் ஏற்படுத்தப்படுகிறது. குண்டலினி பற்றிய பிரச்சனை ஸாதகர்களுக்கே பொருத்தமாக இருக்கிறது. காரணம் 20% ஆன்மீக நிலையில் உள்ள, ஸாதகர் அல்லாத ஒருவரின் குண்டலினி உறக்க நிலையில் மூலாதார சக்கரத்தில் (முதுகெலும்பு தளத்தில் உள்ள ஆன்மீக ஆற்றல் மையம்) இருக்கும்.
 7. இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள காரணிகள் பின்வருமாறு நம்மை பாதிக்கின்றன.
  • உணவு: பழைய, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் அசைவ உணவு, அதிகளவு அடிப்படை சூட்சும ரஜ-தம குணங்களை கொண்டிருக்கும். இத்தகைய ரஜ-தம பிரதானமான உணவின் மூலம் ஒருவனை தாக்குவது ஆவிகளுக்கு சுலபமாகிவிடுகிறது.
  • ஆடைகள்: செயற்கை இழை ஆடைகள், அடிப்படை சூட்சும ரஜ-தம குணங்களில் மேலோங்கி இருக்கும். கருப்பு மற்றும்  இருண்ட வண்ண ஆடைகள் கூட, அடிப்படை சூட்சும ரஜ-தம குணங்களை தன்னுள் ஈர்த்து சூழலில் அதனை பரப்பவும் செய்கிறது. இதனால் இது போன்ற ஆடைகளை அணிபவரை பாதிப்பது பேய்களுக்கு எளிதாகிறது
  • காலம்: ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு நபருக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். உதாரணமாக, ஊழியர்கள் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், மூலதன முதலீடு ஆகியன இருந்தும் ஒரு தொழிலதிபர் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்கலாம். இக்காரணிகள் அவருக்கு சாதகமாக அமைந்து இருப்பதுடன் மூதாதையர்களால் அல்லது ஆவிகளால் எவ்வித தொந்தரவும் இல்லாத போதும் அவர் இவ்வாறு பாதிப்படைவது காலத்தின் கட்டாயமாகும்.
  • சமூக பாவங்கள்: ஒரு நாடு, சமூகம் அல்லது இனம் இன்னொன்றின் மீது அட்டூழியங்களை நிகழ்த்தியிருந்தால் சமூக பாவங்களை சம்பாதிக்கின்றன. இங்கே ஒரு குறிப்பிட்ட தனிநபர் இந்த அட்டூழியங்களில் கலந்து கொண்டாரா அல்லது வெறுமனே சாட்சியாக நின்றாரா என்பது முக்கியம் இல்லை. அமைதியாக இருப்பதும் சாட்சியாக இருப்பதை போன்றே. காலப்போக்கில், மொத்த ஜனத்தொகையும் இந்த ஜென்மத்திலோ அல்லது மறு ஜென்மத்திலோ, இவ்வட்டூழியத்திற்கு ஈடாக கூட்டாக சேர்ந்து அனுபவிக்க நேரிடும்.

  ஆவிகள், மேற்கூறிய ஏதேனும் ஒரு காரணியை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு குறிப்பிட்ட நபரை தாக்க முடியும். ஸாதகர் அல்லாத ஒருவரை ஆவிகள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதால் அவர்களை தாக்குவதும் இல்லை.

 8. ஆன்மீக பயிற்சி செய்கின்றோமோ இல்லையோ ஆவிகளால் பாதிக்கப்படுவது அனைவருக்கும் பொருந்தும். ஆரம்பத்தில், ஆன்மீக பயிற்சி  செய்வதனால் ஆவிகளால் தாக்கப்படலாம் என நினைக்கலாம்.  இது, கடத்தல்காரர்கள் பணக்காரரை மற்றும் பெரும் பணக்காரரை குறிவைப்பதற்கு ஈடாகும்.
 9. செல்வந்தர் வாழ்வில் சுகங்களை அனுபவிப்பதோடு கூட இந்த தாக்குதல்களை சமாளிக்கும் திறனும் அவர்களிடம் உள்ளது. அதே போல் ஆன்மீக பயிற்சி செய்வதால் நாம் தாக்கப்பட்டாலும் இறைவனின் உயரிய காவல் நம்மை அப்பிரச்சனைகளில் இருந்து காத்துக்கொள்ள உதவும். ஆன்மீக பயிற்சி செய்யாத நபர் குறைவான ஆன்மீக சக்தியை கொண்டிருப்பதால் எல்லா வித ஆவிகளின் தாக்குதல்களுடன் கூடிய பாதிப்புகளை எதிர்நோக்கலாம்.

இன்னுமொரு உதாரணத்தை காண்போம். சில நேரங்களில் நாம் பல ஆண்டுகள் கடுமையான உயர்கல்வியை மேற்கொள்ளும்போது இன்னுமொருவர் வெறுமனே மேற்பள்ளியில் இருந்து வெளியேறி சம்பாதிக்க தொடங்கலாம். நாம் கஷ்டப்பட்டு வீட்டிலிருந்து படிக்கும்போது அந்நபர் சினிமா பார்ப்பது போன்று வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்கலாம். இருப்பினும், நமது உயர்கல்வி முடிந்தபின் நல்ல ஒரு வேலையில் சேர்ந்து நமது தொழிற்துறையில் பல வெற்றிகளை காணலாம். இந்த வெற்றி மூலம், மற்றவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத சலுகைகளும் வசதிகளும் நம்மை சேரும். இதனுடன் சேர்த்து, சமுதாயத்தில் மக்களுக்கு உதவக்கூடிய இயலுமை இருப்பதால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பும் வருகிறது. இதே போல் ஆவிகளால் தாக்கப்பட்டாலும், நம்முடைய ஆன்மீக வளர்ச்சியால் பல நன்மைகளை அனுபவிக்கின்றோம். ஆன்மீக  பயிற்சியின் நன்மைகள் எனும் பகுதியில் இது பற்றி மேலும் விளக்கியுள்ளோம்.

4. ஆன்மீக பரிணாமத்தில் மூல காரணியை கொண்ட

பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள மற்றும் அதன் தீவிரத்தை குறைத்துக்கொள்ள ஆன்மீக ரீதியிலேயே மட்டுமே பரிகாரம் காணமுடியும்.

 1. ஒரு குறிப்பிட்ட ஆன்மீகத்தீர்வு: ஒரு குறிப்பிட்ட ஆன்மீக பிரச்சினையை எதிர்கொள்ள முதன்மையாக நடைமுறைப்படுத்தும் செயலே ஆன்மீகத்தீர்வு என்பதாகும். இது போன்ற ஆன்மீக நிவாரண யுக்திகள் இந்த வலைதளத்தில் ஆன்மீக நிவாரணம் எனும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. எனினும் அவை ஆன்மீக வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதில்லை.
 2. ஆன்மீக பயிற்சி: ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு ஏற்ப செய்யப்படும் ஆன்மீகப்பயிற்சி ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வகையான ஆன்மீகப்பயிற்சி ஆன்மீக திறன் அல்லது ஆன்மீக வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதுவே நம்மை ஆன்மீக பரிணாமத்தில் உள்ள எதிர்மறை சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

5. சுருக்கம்

இந்த கட்டுரையின் முக்கிய விஷயங்களை சுருக்கமாக கூறுவோமானால்;

 • அடுத்த முறை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு பிரச்சனையை சந்தித்தால், அதற்குரிய காரணம் உடல் ரீதியான, உளவியல் அல்லது ஆன்மீக ரீதியாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் ஆன்மீக ரீதியான காரணியே பிரதானமாக அமையலாம்.
 • அனைத்து முக்கிய பிரச்சனைகளும் பெரும்பாலும் விதியாகும். இதுவே நமது பழைய கணக்குகளை தீர்க்கும் விதி எனும் ஆன்மீக பிரச்சனையாகும். ஆன்மீகப்பயிற்சி மூலமே விதியில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
 • நம் மூதாதையர்கள் மற்றும் ஆவிகள் ஒரு குடும்பத்தில் உடல் நோய்கள், மன நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும். நாம் ஒரு குறைந்த ஆன்மீக நிலையினை கொண்டுள்ளோம் என்றால், நாம் அவர்களின் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்படுவோம்.
 • ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு ஏற்ப செய்யப்படும் தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சி ஒன்றே ஆன்மீக பரிணாமத்தில் இருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.