எந்த வகையான மூதாதையர்களுக்கு(பித்ருக்களுக்கு) உதவி தேவை
பின்வருபவை ஆன்மீக நிலையின்படி உலக மக்கள்தொகையின் அதிர்வெண் இடைவெளியின் அட்டவணையாகும் (முறிவு). இது 2013 இல் விச்வமனம் மற்றும் விச்வபுத்தியிலிருந்து அணுகப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டது.
2013 ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆன்மீக நிலை
ஆன்மீக நிலை | % உலக மக்கள்தொகையின் | மக்களின் எண்ணிக்கை1 |
---|---|---|
20 – 29 % | 63 % | 4,46பில்லியன் (நூறு கோடி) |
30 – 39 % | 33 % | 2,34பில்லியன் (நூறு கோடி) |
40 – 49 % | 4 % | 283 மில்லியன்கள் |
50 – 59 % | புறக்கணிக்கத்தக்கது | 15.000 |
60 – 69 % | புறக்கணிக்கத்தக்கது | 5.000 |
70 – 79 %2 | புறக்கணிக்கத்தக்கது | 100 |
80 – 89 % | புறக்கணிக்கத்தக்கது | 20 |
90 – 100 % | புறக்கணிக்கத்தக்கது | 10 |
- 16 மே 2013 அன்று அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு உலக மக்கள்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் 7.086 பில்லியன் ((நூறு கோடி)
- 70% மற்றும் அதற்கு மேல் உள்ள ஆன்மீக நிலை, மகான் நிலையாகும்.
ஆதாரம் : ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திய ஆன்மீக ஆராய்ச்சி
என்ற கட்டுரையைப் பார்க்கவும்., ‘‘ஆன்மீக நிலை என்றால் என்ன?’
நீங்கள் பார்க்கிறபடி, இன்றைய உலகில் 50% க்கும் அதிகமான மக்கள் 20-30% ஆன்மீக நிலைகளின் பிரிவில் வருகிறார்கள். 30% ஆன்மீக நிலைக்குக் கீழே உள்ளவர்கள், எந்த ஆன்மீக பயிற்சியும் இல்லாததால் அவர்களுக்கு ஆன்மீகத் தூய்மை அல்லது ஆன்மீக பலம் மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு நபர் இறந்த பின், பிற்கால வாழ்க்கையில் முக்கியமானது அவரது ஆன்மீக நிலை அல்லது ஆன்மீகத் தூய்மை அல்லது சூட்சும உடலின் சாத்வீகத் தன்மை ஆகும். பூமியைப் (பூலோகம்) போலல்லாமல், ஸ்தூல உடல் மற்றும் பல்வேறு உலக அம்சங்களான பணம், கௌரவம், வேலை, நாம் எவ்வளவு நன்றாக இணைக்கப்பட்டுள்ளோம் போன்றவை ஆன்மீக அல்லது சூட்சும உலகத்தில் முற்றிலும் பொருந்தாது.
20-30% ஆன்மீக நிலைகளுக்கு இடையே உள்ளவர்களின் சூட்சும உடல்கள், மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள மிகக் குறைந்த வட்டத்தில் இருப்பது போல் கனமாக இருக்கும். பூமியில் உள்ள அவர்களின் வாழ்வில் ஏற்படும் பாவங்கள் பொருத்தே அதன் தீவிரத்தன்மை ஏற்படுகிறது, அபரிமிதமான உலகப் பற்றுகள் மற்றும் ஆன்மீக பயிற்சியின்மையே இதற்கு காரணம், இது ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது.
அவரவர்களின் ஆன்மீக நிலைக்கு ஏற்ப உதவி கோரும் மூதாதையர்கள் |
|
---|---|
20 – 30 % | அதிகபட்ச உதவி |
30 – 50 % | மிதமான உதவி |
50 %+ | உதவி தேவையில்லை |
இந்த ஆன்மீக கனத்தின் காரணமாக, சூட்சும உடல்கள் பிரபஞ்சத்தின் உயர் நேர்மறையான பகுதிகளுக்கு செல்ல முடியாது, எனவே புவர்லோக பகுதி (புவர்லோகம்) மற்றும் நரகம் (பாதாளம்) போன்ற சூட்சும கீழ் பகுதிகளுக்குத் தள்ளப்படுகின்றன. இங்கே அவர்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப இன்ப அல்லது துன்பங்களின் முழு அளவையும் அனுபவிக்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில்,பாவங்கள் 20-30% ஆன்மீக நிலைகளில் உள்ள மக்களின் புண்ணியங்களை விட அதிகமாக உள்ளன. எனவே அவர்கள் பெரும்பாலும் இந்த மண்டலங்களில் இன்ப மற்றும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இதனுடன், அதிக சக்திவாய்ந்த ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) அவர்களைத் தாக்கி கட்டுப்படுத்துகின்றன. இந்த மூதாதையர்களுக்கு ஆன்மீக நிலைகளில் நமது உதவி மிகவும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு என்ன ஆன்மீக உதவிகளை வழங்க முடியும் என்பதை அடுத்தடுத்த கட்டுரைகளில் வரையறுத்துள்ளோம்.
30-50% ஆன்மீக நிலைகளுக்கு இடையில் உள்ள மூதாதையர்களுக்கு நமது உதவி மிக மிகக் குறைவாக தேவைப்படுகிறது. 50% ஆன்மீக நிலைக்கு அப்பால் உள்ள மூதாதையர்களுக்குப் பிற்கால வாழ்க்கையில் அவர்களின் சந்ததியினரிடமிருந்து எந்த ஆன்மீக உதவியும் தேவையில்லை. 50% ஆன்மீக நிலையை அடைவது ஆன்மீக மைல்கல் () என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.
குறிப்பு: ஆடியோ கோப்பைப் பதிவிறக்கம் செய்ய , தயவுசெய்து படத்தின் மீது, வலது இணைப்பை அழுத்தி “இணைப்பை சேமி / இணைப்பை இவ்வாறு சேமி” என்பதை அழுத்தவும்