புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் என்றால் என்ன?

புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் என்றால் என்ன?

1. முன்னுரை

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை புண்ணியங்கள் மற்றும் பாவங்களின் வடிவத்தில் அறுவடை செய்கிறோம். நாம் அனுபவிக்கும் இன்பம் அல்லது துன்பத்தின் அளவை நாம் செய்த புண்ணியங்கள் மற்றும் பாவங்களே தீர்மானிக்கின்றன. எனவே, பாவச் செயல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இருப்பினும் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கடுமையாகப் பாடுபட்டாலும், ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள், இறைவனோடு ஒன்றிணைதலை நோக்கிய ஆன்மீகப் பாதையில் புண்ணியங்கள் கூட  ஏன் விரும்பதகாதது(ஏற்றுக்கொள்ளமுடியாதது) என்பதை அறிய ஆர்வமாக இருப்பார்கள்.

2. புண்ணியம் மற்றும் பாவத்தின் வரைவிலக்கணம்

நற்பண்புகளின் விளைவினால் கிடைக்கும் புண்ணியத்தின் பலனாக நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். புண்ணியம் என்பது தர்மநெறி தவறாத வாழ்க்கை முறையை அர்ப்பணிப்புடன் பின்பற்றுவதன் மூலம் பெறப்படும் சிறப்பு சக்தி அல்லது திறன் ஆகும். உதாரணமாக,நண்பர்களுக்கு செய்யும் நிதியுதவி  அல்லது ஒரு தகுந்த ஆலோசனை நமக்கு புண்ணியத்தை தருகிறது. நீதி மற்றும் நேர்மையான நடத்தை பற்றிய வழிகள் பல புனித நூல்களில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நமது புண்ணியங்கள் மூலம் மற்றவர்களுக்கு நல்வாழ்வை வழங்குகிறோம். உதாரணமாக, புற்றுநோய் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குவது, அதனால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு உதவக்கூடும், இது நமக்கு புண்ணியத்தை அளிக்கிறது.

நமது கெட்ட செயலின் விளைவே பாவம் ஆகும், அது நமக்கு துன்பத்தையே தருகிறது. பிறரின் வீழ்ச்சிக்கு காரணமான செயல்களை செய்வதால் பாவங்கள் உருவாகின்றன. இயற்கை விதிகள் மற்றும் இறைவனுக்கு எதிரான செயல்கள் செய்வதன் மூலம் இது உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக சந்தையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விற்பனையாளர் பாவத்தை சம்பாதிக்கிறார். ஒருவர் தனது கடமைகளை சரிவர செய்யாதபோது பாவங்கள் உருவாகின்றன எடுத்துக்காட்டாக பெற்றோர் தங்கள் குழந்தைகளின் தேவைகளைக் கவனிக்காதபோதும், மருத்துவர் தனது நோயாளிகளைக் கவனிக்காதபோதும் பாவங்கள் உருவாகின்றன.

புண்ணியங்களையும் பாவங்களையும் இந்த பிறவியிலோ, மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கையிலோ அல்லது அடுத்து  வரும்  பிறவிகளில் ஏதேனும் ஒன்றிலோ அனுபவிக்க வேண்டியிருக்கும்.

புண்ணியங்களும், பாவங்களும் கர்மாவின் கொடுக்கல்-வாங்கல் கணக்கை விட சூட்சுமமானவை. ஏனென்றால், ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் கணக்கைப் புரிந்துகொள்வது மிகவும் எளிது, ஆனால் ஒரு அந்நியனை ஏன் அவமதித்தோம்  என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

3. புண்ணியங்கள் மற்றும் பாவங்களுக்கான காரணங்கள்

ஒருவர் புண்ணியங்களை பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பொதுவானவை:

 • நற்செயல்களை மேற்கொள்வது
 • புனித நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி நேர்மையாக தர்மநெறியைப் பின்பற்றுவது.
 • மற்றொருவரின் ஆன்மீக பயிற்சிக்காக நம்மையே தியாகம் செய்வது. உதாரணமாக, ஒரு மருமகள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்து வீட்டு வேலைகளை கவனிப்பதன் மூலம், அவருடைய மாமியார் புனிதப் பயணம் மேற்கொள்ள முடியும் என்றால் அந்த மாமியார் மேற்கொள்ளும் புனித யாத்திரை பயணத்தின் புண்ணியத்தில் பாதியை மருமகளும் பெறுகிறார். இருப்பினும் முடிந்தவரை மற்றவர்களை நம்பி ஆன்மீக பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது.

நாம் பாவம் செய்வதற்கான சில காரணங்கள் :

 • கோபம், பேராசை மற்றும் பொறாமை, சுயநலம் மற்றும் ஆசை போன்ற ஆளுமை குறைகள் ஒரு மனிதனை பாவம் செய்ய தூண்டுகிறது.
 • கொள்கையற்று அல்லது கொடூர குணத்துடன் இருப்பது
 • பிச்சைக்காரனிடம் அவமரியாதையாக பேசுவது
 • மாமிச உணவை உண்பது மற்றும் மது அருந்துவது
 • தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பது, கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பது, ‘கருப்பு பண பரிவர்த்தனை, சூதாட்டம்
 • தவறான சாட்சியம் அளித்தல், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துதல்
 • திருடுதல்
 • விபச்சாரம், தகாத உறவு, கற்பழிப்பு போன்றவை.
 • வன்முறைகள்
 • விலங்குகளை கொல்வது
 • தற்கொலை
 • கடவுள், கோவில், ஆன்மீக அமைப்பு போன்றவற்றுக்கு சொந்தமான செல்வங்களை முறையற்ற செலவு செய்தல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதல்.
 • உண்மையை பொய்யாகவும் அதற்கு நேர்மாறாகவும் முன்னிறுத்தும்போது வழக்கறிஞர்களால் பாவங்கள் ஏற்படுகின்றன
 • மனைவி பாவம் செய்யும்போது தடுக்காமல் இருந்தால், கணவன் தன் மனைவியின் பாவங்களில் பாதியைப் பெறுகிறான்
 • மனைவி தன் கணவன் அநியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பதை, பற்றி அறிந்திருந்தும் அதை எதிர்க்காமல் அந்த பணத்தை செலவளிப்பது
 • ஒரு பாவியுடன் தன்னை ஒரு வருடத்திற்கு இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களின் பாவங்களில் பங்கெடுத்துக்கொள்ளுதல்.

4. புண்ணியங்கள் மற்றும் பாவங்களினால் ஏற்படும்  விளைவுகள்

4.1 மகிழ்ச்சியின் வடிவத்தில் புண்ணியத்தின் விளைவுகள்

ஒருவர்  தான்  செய்த புண்ணியங்களின் அளவிற்கேற்ப  பூமியில் வாழும் காலத்தில்(பூலோகம்) கீழே குறிப்பட்ட வகையில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார், இறுதியாக பூமியில் வாழும் போது எதிர்பார்ப்புகளுடன் செயல்களைச் செய்வதன் மூலம் கிடைக்கும் புண்ணியத்தின் அளவிற்கேற்ப சொர்க்கத்தில் மகிழ்ச்சியைப் பெறுகிறார்:

 • ஒரு பணக்கார மற்றும் பண்பட்ட குடும்பத்தில் பிறத்தல்
 • வருமானம் அதிகரித்தல்
 • உலக இன்பங்கள்
 • ஆசைகள் நிறைவேறுதல்
 • ஆரோக்கியமான வாழ்க்கை
 • சமூகம், அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் பாராட்டு மற்றும் அங்கீகாரம்
 • ஆன்மீக முன்னேற்றம்
 • மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் மகிழ்ச்சி

மனிதனாக பிறப்பது, நல்ல குடும்பத்தில் பிறப்பது, பரம்பரை, செல்வம், நீண்ட ஆயுள், ஆரோக்கியமான உடல், நல்ல நண்பர்கள், நல்ல மகன், அன்பான மனைவி, கடவுள் பக்தி, புத்திசாலித்தனம், மரியாதை, ஆசைகளை வென்றெடுப்பது மற்றும் தகுதியானவர்களுக்கு தானம் வழங்குவதில் விருப்பம் ஆகியவை முந்தைய பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனால்  மட்டுமே சாத்தியமாகும். இவை அனைத்தும் இருக்கும் ஒருவர்​​​​, ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்ளும்போது அவற்றால் பயனடைந்து ஆன்மீகத்தில் முன்னேறுகிறார்.

சமுதாயத்தில்  மக்களின் கூட்டு புண்ணியங்களின் அளவு அதிகரிக்கும் போது, தேசம் அதன் கோட்பாடுகளிலும், நடத்தையிலும் சிறந்து விளங்கி மேலும் வளமாகிறது.

4.2 மகிழ்ச்சியற்ற வடிவத்தில் பாவத்தின் விளைவுகள்

இதைப்பற்றி மேலும் அறிய பாவத்தின் விளைவுகள் பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்குமாறு வரையுறுத்துகிறோம்.

5. பாவங்கள் மற்றும் புண்ணியங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

புண்ணியம் மற்றும் பாவம் பற்றிய கருத்துக்களைப் புரிந்து கொள்ள, எந்தவொரு செயலுக்கும் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம். பின்வரும் அட்டவணையில் அது தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பணத்தை எந்த முறையில் சம்பாதிக்கிறோம் மற்றும் அதை  எதற்காக அல்லது எப்படி செலவழிக்கிறோம் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் முன்வைத்துள்ளோம். இதன் மூலம் ஏற்படும் பாவம் மற்றும் புண்ணியத்தின் பலன்கள் ஒவ்வொரு உதாரணத்திற்கும் அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.

6. புண்ணியங்களின் வரம்புகள்

ஆன்மீக வளர்ச்சியின் கண்ணோட்டத்தில், புண்ணியத்திற்கு என்று சில வரம்புகள் உள்ளன.

6.1 புண்ணியங்களின் விளைவை அனுபவிக்க வேண்டும்

புண்ணியங்களால் நிறைந்த வாழ்க்கை ஒரு நபரின் மரணத்திற்குப் பின் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது, செய்த புண்ணியம் தீர்ந்துவிட்டால், அவர்  தனது அடுத்த பிறவியில் பூமிக்குத் திரும்ப வேண்டும். எனவே புண்ணியங்களும் ஒரு வகையான அடிமைத்தனமே. ஆன்மீகப் பயிற்சி மட்டுமே நம்மை இறுதியில் வீடுபேறுக்கு (மோட்சம்) அழைத்துச் செல்லும்.

6.2 மகிழ்ச்சியை அனுபவிப்பது இறுதியில் புண்ணியத்தை  குறைக்கிறது

ஒவ்வொரு கணமும் நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது, ​​​​நாம் சேகரித்த புண்ணியத்தின் அளவை குறைக்கிறோம், எனவே ஒருவர் புண்ணியத்தை அதிகரிக்கப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். இது புண்ணியத்தை உண்டாக்கும் செயல்கள் அல்லது ஆன்மீகப்பயிற்சி மூலமே சாத்தியமாகும். வேறுபாடு என்னவென்றால், புண்ணிய செயல்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன ஆனால் ஆன்மீகப்பயிற்சி ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கிறது, அதாவது புண்ணிய-பாவம் மற்றும் மகிழ்ச்சி-துக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஆனந்தத்தை  அளிக்கிறது. இதில் ஒரு துணை பொருளாக மட்டுமே மகிழ்ச்சி உள்ளது

7. சுருக்கம்புண்ணியங்கள் மற்றும் பாவங்கள்

புண்ணியங்களுக்கும் பாவங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதுடன், அவை நம்மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் ஆழம் மற்றும் நீளம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது நமது நடத்தை மற்றும் செயல்களை வழிநடத்த உதவுகிறது. இருப்பினும் இரண்டிலிருந்தும் விடுபட, வழக்கமான ஆன்மீகப்பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.

“இயற்கைப்படி  புண்ணியம் நம்மை காப்பதும் இல்லை, பாவம் அழிப்பதும் இல்லை, ஆன்மீக உணர்வு  ஒன்று மட்டுமே இயற்கையில் நம்மை காக்கும் தன்மையுடையது.”– பரம் பூஜ்ய காணே மஹராஜ் , நாராயண்கான், புனே, மகாராஷ்டிரா, இந்தியா