
அட்டவணை
1. B2 சுய ஆலோசனைக்கு ஒரு அறிமுகம்
நீங்கள் நேசிப்பவரை இழந்து, கட்டுப்படுத்த முடியாத நீண்டகாலத் துயரத்தை அனுபவித்திருக்கிறீர்களா? உங்கள் சொந்த ஊரைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் உங்கள் சொத்துகளை இழந்து, ஒரே கணத்தில் உங்கள் வாழ்க்கை நிரந்தரமாக மாறிவிட்டதா? ஒருவேளை, நியாயமற்ற மற்றும் கடினமான மேலதிகாரியுடன் பணிபுரிய வேண்டிய நிலையில் இருந்து, அந்த நேரத்தில் வேலையை மாற்றுவது சாத்தியமில்லையா? வாழ்க்கையில் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இதுபோன்ற பல சூழ்நிலைகள் ஏற்படலாம். மக்கள் எதிர்பாராத விதங்களில் செயல்படுகிறார்கள்; மேலும் அவர்கள் பெரும்பாலும் நமது சம்மதமோ ஒப்புதலோ இன்றி நம் வாழ்க்கையைப் பாதிக்கிறார்கள். நம்மால் மாற்ற முடியாத மனஅழுத்தமான சூழ்நிலைகளைச் சமாளிப்பது, நமது சக்தியை உறிஞ்சி, நம்மை சோர்வாகவும் குழப்பமாகவும் உணரச் செய்யும். இதை கவனிக்காமல் விட்டால், நீடித்த மனஅழுத்தம் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். மாற்ற முடியாத சூழ்நிலைகளைச் சமாளிக்க, ஒவ்வொருவரும் தங்களுக்கான தனிப்பட்ட சமாளிப்பு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலும், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்ற மனநிலைக்கு நாம் ஆளாகி, இத்தகைய எதிர்மறை எதிர்வினைகளைத் தவிர்க்க ஏதேனும் பயனுள்ள வழி உள்ளதா என்று சிந்திக்கிறோம். நம்மால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில், மனஅழுத்தத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்? வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொள்ளும் போது, நாம் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்?
நாம் அந்தச் சூழ்நிலையை நமக்கே உரிய வழிகளில் ஏற்றுக்கொள்ள முயன்றிருக்கலாம். இருப்பினும், ஆழ்மனதில் உள்ள (ஆளுமைக் குறைபாடுகளின்) எண்ணப் பதிவுகளின் வலிமையால், அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விடுபட நாம் சிரமப்படலாம். பெரும்பாலும், எதிர்மறை எண்ணங்கள் நம் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று, நம்மை அந்தச் சூழ்நிலைக்குள் இழுத்துச் செல்கின்றன. இது தவிர்க்க முடியாமல் இயலாமை மற்றும் விரக்தி போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, மாற்ற இயலாது என நாம் உணரும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதேனும் தீர்வு உள்ளதா?. இத்தகைய எதிர்வினைகள் அல்லது எதிர்மறை விளைவுகளைச் சமாளிப்பதற்காகவே, ஆளுமைக் குறைபாடு களையும் (PDR) செயல்முறையின் ஒரு பகுதியாக B2 சுய ஆலோசனை முறை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
2. B2 சுய ஆலோசனை முறையின் வரைவிலக்கணம்
மற்றவர்கள் செய்யும் தவறுகளால் நாம் மனஅழுத்தம் அல்லது மனவருத்தத்தை அனுபவிக்கும் போது, அவர்களுடைய ஆளுமைக் குறைபாடுகளைச் சரிசெய்யவோ அல்லது எதிர்மறையான சூழ்நிலைகளை மாற்றவோ எதுவும் செய்ய முடியாத போது B2 சுய ஆலோசனை முறை பயன்படுத்தப்படுகிறது.
நாம் மன அழுத்தம் அல்லது மன வருத்தத்தை அனுபவிக்கும்போது, பின்வரும் சூழல்களில் B2 சுய ஆலோசனை முறை பயன்படுத்தப்படுகிறது:
- நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பிறரின் ஆளுமைக் குறைபாடுகளைச் சரிசெய்ய முடியாதபோது, அல்லது
- எதிர்மறையான சூழ்நிலைகள் அல்லது சூழல்களை மாற்ற முடியாதபோது.
இந்த தவறுகளை செய்பவர்கள் பெரியவர்களாக, திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கலாம் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பது கண்டறியப்படுவதாகவோ அல்லது இயற்கை பேரழிவை எதிர்கொள்வது போன்ற தவிர்க்க முடியாத துயரமான சூழ்நிலைகளாகவும் இருக்கலாம். இது போன்ற நிகழ்வுகளை தத்துவ ஞான கண்ணோட்டத்துடன் பார்க்கப் பழகிக் கொள்வதே இதற்கான தீர்வு ஆகும். இது நாம் அமைதியாக இருக்கவும், சூழ்நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் உதவுகிறது. இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அந்தத் தவறு அல்லது சூழ்நிலை மற்றவர்களின் ஆளுமைக் குறைபாடுகளால் ஏற்பட்டாலும், B2 சுய ஆலோசனை அந்தத் தவறு/சூழ்நிலைக்குரிய நமது எதிர்வினையை பற்றியே குறிப்பிடும், ஏனெனில் ஆளுமைக் குறைபாடு நீக்கும் (PDR) செயல்பாட்டில், கவனம் எப்போதும் தன்னை மாற்றிக்கொள்வதிலேயே நிலைத்திருக்கும். இந்தச் செயல்முறையின் மூலம், மற்றவர் அல்லது சூழ்நிலை நமக்கு எதிர்மறையான எதிர்வினையைத் தூண்டியிருந்தாலும், நமது சிந்தனையையும் எதிர்வினைகளையும் மாற்றி கொள்ள நாம் முயல்கிறோம்.
2.1 B2 சுய ஆலோசனையின் வடிவமைப்பு
இதன் வடிவமைப்பு
எனவே, ஒரு சூழலுக்கான உதாரணத்தையும், அதற்கேற்ப ஒரு B2 சுய ஆலோசனையை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதையும் இப்போது பார்ப்போம்.

இந்த சுய ஆலோசனை ‘எப்பொழுதெல்லாம்’ என்று தொடங்குகிறது. அதன் பின், அந்தத் தவறிற்கான உண்மையான தூண்டுதலாக இருக்கும் நிகழ்வு (இங்கு, ஒருவரின் விலைமதிப்புள்ள பொருட்கள் திருடப்படுவது) குறிப்பிடப்படுகிறது. இதற்குப் பிறகு, ‘எது நடந்தாலும், நமது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பது தான் உண்மையான வரம்’ என்ற தத்துவார்த்தமான விளக்கம் வழங்கப்படுகிறது.
இங்கு, குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்ற உணர்வு, அனைத்தையும் இழந்துவிடவில்லை என்ற மனநிம்மதியையும், இழந்ததை மீண்டும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது. இத்தகைய B2 சுய ஆலோசனைகள் மூலம், சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், மன உறுதியுடனும் இருக்கவும் தேவையான வலிமையை ஒருவர் பெறுகிறார்.
3. B2 சுய ஆலோசனை முறையை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்துப் பகுப்பாய்வு செய்வது எப்படி?
B2 சுய ஆலோசனை முறையை எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது என்பதைத் தெளிவாகக் காட்டும் ஓட்டப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
B2 சுயஆலோசனை முறையை எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தவறு /குறைபாட்டை ஒரு நடைமுறை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

தவறு/குறைபாடு: அத்தை அலிசனுக்கு புற்றுநோய் மீண்டும் வந்துவிட்டதாகவும், அவர் இனி அதிக காலம் வாழமாட்டார் என்றும் மருத்துவர் கூறியபோது, நான் (எலன்) மிகுந்த மனவருத்தத்தில் ஆழ்ந்தேன்.
மேலே உள்ள ஓட்டப்படத்தை மேற்கோளாகக் கொண்டு, இத்தகைய சம்பவம் அல்லது குறைபாடு (இங்கு மனச்சோர்வு/விரக்தி உணர்வு) ஏற்பட்ட பிறகு, எந்த வகையான சுய ஆலோசனையைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் பின்வருமாறு உள்ளன.
கேள்வி 1: இந்தச் சூழ்நிலையில் யாருடைய ஆளுமைக் குறைபாடு மன அழுத்தத்திற்கான முதன்மை காரணம் அல்லது ஏற்பட்ட மன அழுத்தத்திற்குக் காரணம் என்ன? (குறிப்பு: இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றை நாம் கேட்கலாம்.)
பதில்: இந்த சூழ்நிலையில், எலனுக்கு ஏற்பட்ட மன அழுத்ததிற்கான முதன்மை காரணம் அவளுடைய அத்தை (அலிசன்) எதிர்கொள்ளும் நிலைமையால் ஏற்பட்டது.
கேள்வி 2: இந்த தவறானது ஒரு தவறான செயலா, சிந்தனையா அல்லது உணர்ச்சியா? அல்லது இது ஒரு தவறான எதிர்வினையா?
பதில்: இங்கு, தனது அத்தைக்கு புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டதால், எலனுக்கு ஏற்பட்ட மனச்சோர்வு/விரக்தி என்பது ஒரு உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினையாகும்.
கேள்வி 3: இந்த சூழ்நிலையை மாற்ற முடியுமா அல்லது முடியாதா?
பதில்: இங்கு, மருத்துவர்கள் அவ்வாறு கூறியிருப்பதால், சூழ்நிலை மாறுவதற்கு வாய்ப்பில்லை.
மனச்சோர்வு/விரக்தியை வெல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான இரண்டு B2 சுய ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
- எப்பொழுதெல்லாம் என் அத்தை அலிசனுக்கு எஞ்சியிருக்கும் காலம் குறைவாக உள்ளது என்று நினைத்து நான் வருந்துகிறேனோ, அப்பொழுதெல்லாம் கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையை அதிகரிக்குமாறு வேண்டிக்கொள்வேன்; மேலும், அமைதியுடன் நாமஜபம் செய்வதில் என் கவனத்தைச் செலுத்துவேன்.
- எப்பொழுதெல்லாம் என் அத்தை அலிசனுக்கு வாழ்வதற்கான காலம் குறைந்து வருகிறது என்று நினைத்து நான் வருந்துகிறேனோ, அப்பொழுதெல்லாம் அவரை கவனித்துக்கொள்வதற்கு இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்து, அவரை நன்றாகப் கவனித்துக் கொள்வேன் மேலும் அவருடன் எனக்குக் கிடைத்துள்ள மீதமுள்ள நேரத்தை மிகவும் பொக்கிஷமாக மதித்து மகிழ்வேன்.
|
நினைவில் கொள்ளுங்கள் – மற்றவர்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு நிகழ்வும், அது மாற்றக்கூடியதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்; ஏனெனில் அவை நமக்குள் எதிர்வினையையோ மன அழுத்தத்தையோ உருவாக்குகின்றன. |
உதாரணமாக, ஜான்சி உதவி கேட்டு அழைத்தபோது ஜான் மறுத்ததால், அவள் மனம் வருந்தினாள். கடந்த காலத்தில் ஜானுக்கு உதவி தேவைப்பட்டபோது, அவள் உடனடியாகச் சென்று உதவியிருந்தாள்.
- இப்போது, ஜான்சி (Janice) ஜான் (John) இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களாகவும், பணியிடத்தில் ஜான்சி ,ஜானின் மேலதிகாரியாக இருந்து, ஜான் யாருக்கும் உதவ விரும்பாத மனப்பான்மையுடன் நடந்துகொண்டால், ஜான்சி, ஜானிடம் முறையாக நடந்து கொள்ளவும், வந்து உதவுமாறும் கூற முடியும். இங்கு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நபரையோ அல்லது சூழ்நிலையையோ மாற்றுவது சாத்தியமானதால், ‘B1’ வகை சுய ஆலோசனை முறையைப் பயன்படுத்த வேண்டும்.
- ஒரு வேளை, ஜான், ஜானிசியின் தாத்தாவாக இருந்து, அவரது மனநிலை அடிக்கடி மாறுபடுபவராகவும், பொதுவாக பிறருக்கு உதவ விரும்பாதவராகவும் இருந்தால், ஜானிசி தனது தாத்தாவின் எண்ணத்தை மாற்றி அவரிடமிருந்து உதவி பெறுவது சாத்தியமற்றதாக இருக்கும். ஆகவே, இந்தச் சூழலில் ‘B2’ சுய ஆலோசனை முறையைப் பயன்படுத்த வேண்டும்.
4. B2 சுய ஆலோசனைகள் மனதை அமைதிப்படுத்துகின்றன
B2 சுய ஆலோசனைகளைப் பயன்படுத்துவதன் மூலம், துயரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது மனதை அமைதிப்படுத்த முடியும். நம்மால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உருவாகும்போது, மனச்சுமை குறைகிறது. இதனால், மனஅழுத்தமான சூழ்நிலைகளையும் மனச்சோர்வு சார்ந்த எண்ணங்களையும் சமாளிக்க இது ஒரு சக்திவாய்ந்த தீர்வாக அமைகிறது.
B2 சுய ஆலோசனைகளை பிறருடன் தொடர்புடைய அன்றாடச் சூழல்களில் பயன்படுத்தும் போது, நாம் நடுநிலைமையுடனும் பற்றற்ற நிலையுடனும் உணர்ச்சிவசப்படாமலும் இருக்க உதவுகிறது. இதன் மூலம், நாம் அன்றைய நாளை எளிதாகக் கடந்து செல்ல முடியும். முன்பு நம்மை சோர்வடையச் செய்ததும், வெறுப்பை உண்டாக்கியதும் ஆன பிறரின் தவறான முடிவுகளும் எதிர்மறையான செயல்களும் இனிமேல் நம்மை பாதிக்காது.
வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைப் பொறுத்தவரை, B2 சுய ஆலோசனை ஒரு தத்துவார்த்தமான அணுகுமுறையை வழங்குகிறது; ஏனெனில் இத்தகைய பல நிகழ்வுகள் விதியின் காரணமாகவே நடைபெறுகின்றன என்பதை நாம் உணரத் தொடங்குகிறோம். ஒருவர் இயற்கை பேரழிவில் சிக்கி தனது அனைத்து சொத்துகளையும் இழந்தாலும், உயிருடன் தப்பிப்பது உண்மையில் ஒரு பெரிய அதிர்ஷ்டமாகும். திருமணம் மற்றும் மரணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் உட்பட, நம் வாழ்க்கையில் நடைபெறும் பல விஷயங்களில் சுமார் 65% வரை விதியே காரணமாக இருக்கிறது என்பதை பலர் அறியாமல் உள்ளனர். நிகழ்வுகள் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றன என்பதற்கான ஒரு ஆன்மீக காரணத்தை விளக்குவதன் மூலம், இந்த அறிவு நம்மை வாழ்க்கையை மேலும் ஆழமான தத்துவப் பார்வையுடன் அணுக உதவுகிறது.
5. B2 வகை சுய ஆலோசனைகளுக்கான உதாரணங்கள்
இப்போது B2 சுய ஆலோசனைகளை பயன்படுத்தக்கூடிய சில சூழ்நிலைகளைப் பார்க்கலாம். கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளில், நிலைமையையோ அல்லது பிறரின் நடத்தையையோ மாற்றுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை.
6. முடிவுரை
மிகச் சிறப்பாகத் தீட்டப்பட்ட திட்டங்கள்கூட, கடுமையான நோய், வேலை இழப்பு அல்லது விவாகரத்து போன்ற எதிர்பாராத, வாழ்க்கையையே மாற்றியமைக்கும் நிகழ்வுகளால் தடம் புரளக்கூடும். வாழ்க்கை எப்போதும் நாம் எதிர்பார்த்தபடியே அமைவதில்லை. மிக மோசமான சூழ்நிலைகளுக்காக நாம் எவ்வளவு தயாராக இருந்தாலும், அதற்கான எல்லைகள் உண்டு. நம்மிடம் மிகச் சிறந்த முன்னாயத்த முறைகளும், தலைசிறந்த நிபுணத்துவமும் இருந்தபோதிலும், சில சமயங்களில் காரியங்கள் தவறாகவே நடக்கின்றன; அத்தகைய சூழலில், அந்தச் சூழ்நிலையை நாமே சமாளிக்க வேண்டியதாகிறது.
ஆகவே, நன்கு திட்டமிடப்பட்ட செயல்கள்கூட சில நேரங்களில் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். அத்தகைய சூழலில், நாம் உண்மையில் கட்டுப்படுத்தக்கூடியது நமது பதில்களும், எதிர்வினைகளும் மனப்பாங்கும் தான். இதை செயல்படுத்துவது சுலபமல்ல; குறிப்பாக சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் போது நேர்மறையான அணுகுமுறையைத் தக்கவைத்துக் கொள்ள அதிக முயற்சியும், மனஉறுதியும் தேவைப்படுகிறது. ஆனால், மனதை முறையாகப் பழக்கப்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகும். B2 சுய ஆலோசனைகள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அனைத்து சூழ்நிலைகளையையும் சமநிலையுடன் அணுக உதவும் ஒரு தீர்வாகும். இந்த சுய ஆலோசனைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, மாற்ற முடியாதவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ள மனம் பழகுகிறது. இதன் விளைவாக, ஒருவர் மனஅமைதியையும் நிலைத்தன்மையையும் அனுபவிக்க முடிகிறது.
