விபூதியிலிருந்து புனித தீர்த்தம் உருவாக்குதல்

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

1. புனித தீர்த்தம் எவ்வாறு தயாரிப்பது?

புனித தீர்த்தம் தயாரிக்க பல வழிகள் உள்ளன. அவை :

  1. திருநீற்றை(விபூதி) தண்ணீரில் கலப்பதன் மூலம் புனித தீர்த்தம் தயாரிக்கலாம்.
  2. நாமஜபத்தின் மூலம் தண்ணீரை உருவேற்றி புனித தீர்த்தம் தயாரிக்கலாம்.
  3. புனித பூமியின் மண்ணை சேர்ப்பதன் மூலம் புனித தீர்த்தம் தயாரிக்கலாம் (புனித பூமி என்பது உயர்ந்த நிலையிலுள்ள மகான்கள் வாழும் இடத்தை குறிக்கிறது).
  4. புனித தீர்த்தம் ஆன்மீக நிலை 50% க்கு மேல் உள்ள ஒருவரால் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆன்மீக நிலைக்கு கீழே இருக்கும் ஒரு நபருக்கு தெய்வீக உணர்வு அல்லது சைதன்யத்தை தண்ணீரில் அதிகரிக்கும் திறன் குறைவாக இருக்கும் அல்லது இருக்காது
  5. மகான்கள் தொடுவதால் தண்ணீர் புனித தீர்த்தமாக மாறுகிறது.

இந்த பகுதியில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து பெறப்பட்ட விபூதி மூலம் புனித தீர்த்தம் எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பற்றி விளக்கியுள்ளோம்.

2. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து புனித தீர்த்தம் தயாரிப்பது எப்படி?

எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து தயாரிக்கப்பட்ட புனித தீர்த்தம் நேர்மறை ஆற்றலைப் பெறுவதற்கும், ஆவிகளினால் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கும் வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சுய உதவி ஆன்மீக நிவாரணமாகும்.

எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து பெறப்பட்ட விபூதியை தண்ணீரில் கலப்பதன் மூலம் புனித தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. ஒரு எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியை ஒளிரூட்டி அதன் மூலம் பெறப்படும் சாம்பலைச் சேகரிப்பதன் மூலம் விபூதி கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் பார்வையிடவும்

‘புனித’ என்ற அடைமொழியை உருவாக்க, தண்ணீரில் சேர்க்கப்படும் புனித சாம்பலின் தெய்வீக உணர்வு குறைந்தது 2% இருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஒளிரூட்டப்படட்ட ஊதுபத்திகள் மூலம் கிடைக்கும் சாம்பலில் தெய்வீக சைதன்யம் தேவையான அளவு உள்ளது.

தீர்த்தம் உருவாக்க தேவைப்படுபவை :

  • எஸ்.எஸ்.ஆர்.எஃப் – இன் ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்திகளில் இருந்து கிடைக்கும் விபூதி
  • தண்ணீர்

செய்முறை

  • ‘இறைவா’ எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியில் உள்ள நறுமணத்துடன் தொடர்புடைய கடவுளின் குறிப்பிட்ட அம்சம் (தெய்வீகத் தத்துவம்) செயல்படுத்தப்படட்டும், மேலும் அது புனித தீர்த்தத்தை ஆன்மீக ரீதியில் வளப்படுத்தட்டும்” என்று பிரார்த்தனை செய்யவும்.
  • சேகரித்து வைக்கப்பட்ட விபூதியை உங்கள் வலது கையால் எடுத்து நீருடன் சேர்க்கவும்.

விபூதி நீரில் கலந்தவுடன் ஆன்மீக ரீதியாக உருவேற்றப்பட்டு புனித தீர்த்தமாகக் கருதப்படுகிறது. இதைப் பூசிக்கொண்டோ அல்லது தெளித்துக்கொண்டோ ஆன்மீக நிவாரணத்திற்காகப் பயன்படுத்தலாம்.

2.1 நீருடன் சேர்க்கப்படும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் திருநீற்றின்( விபூதி) விகிதம் என்ன?

தேவைப்படும் புனித தீர்த்தத்தின் அளவைப் பொறுத்து, அதற்குரிய விகிதாசாரத்தில் விபூதியை சேர்க்க வேண்டும்.

  • ஒரு கிளாஸ் தண்ணீருக்கு ஒரு சிட்டிகை எஸ்.எஸ்.ஆர்.எஃப் விபூதி சேர்க்கப்பட வேண்டும்.
  • ஒரு வாளி தண்ணீருக்கு கால் டீஸ்பூன் விபூதி தேவைப்படும்.

2.2 விபூதியை எடுப்பதற்கு வலது கையை மட்டும் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன?

வலது கை உடலின் ஆன்மீக சக்தி ஓட்ட அமைப்பின் சூர்யநாடியில் உள்ளதால் அதில் ஆன்மீக சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கும். இது ஆன்மீக செயல்பாடு மிகுந்த கையாகும்.

வலது கையில் சூட்சும அடிப்படையிலான ரஜ கூறுகள் அதிகமாக உள்ளதால், இதற்கு விபூதியை செயல்படுத்துவதற்குரிய சக்தி அதிக அளவில் உள்ளது.

3. புனித தீர்த்தம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான வழிமுறைகள்

(எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியிலிருந்து பெறப்படும்) திருநீற்றை(விபூதி) நீரில் கலந்தபின் புனித தீர்த்தமானது, ஆன்மீக நிவாரணமளிக்கும் சக்தியைப் பெறுகிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் குறிப்பிட்ட நறுமணம் உடைய ஊதுபத்தியின் சாம்பல் அந்த குறிப்பிட்ட தெய்வ தத்துவத்தை ஈர்த்து அந்த சைதன்ய பலனை நமக்குத் தருகிறது.

எஸ்.எஸ்.ஆர்.எஃப் விபூதி, பரிபூரண (தேஜ தத்துவம்) அக்னி தத்துவத்தின் நிலையிலிருந்து செயல்படுகிறது. இதை நாம் நீருடன் சேர்க்கும் போது, ​​​​அது நீரிலுள்ள பரிபூரண (ஆப தத்துவம்) நீர் தத்துவத்துடன் ஒன்றிணைந்து முழுமையான இந்த இரண்டு தத்துவங்களையும் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நிவாரண சக்தியை அளிக்கிறது. உண்மையில், முழுமையான நீர் தத்துவம் விபூதியிலுள்ள தெய்வீக சைதன்யத்தை மேலும் விரைவாக பரவச்செய்து எளிதில் ஈர்க்கக்கூடியதாக ஆக்குவதால் நிவாரணம் விரைவாக இருக்கும்.

3.1 எஸ்.எஸ்.ஆர்.எஃப் விபூதியை நீருடன் இணைக்கும்போது சூட்சும நிலையில் என்ன நடக்கிறது?

சூட்சும ஆறாவது அறிவு நிலையில், எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் மூலம் பெறப்பட்ட விபூதியிலிருந்து தயாரிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை பற்றிய பார்வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விபூதி கலக்காத சாதாரண நீர்

விபூதி கலந்த நீர் (விபூதி)

நேர்மறை ஆற்றலின் மஞ்சள் துகள்கள் கண்ணாடித் தம்ளருக்கு வெளியே பரவுகின்றன

3.2 எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் விபூதியிலிருந்து தயாரிக்கப்படும் புனித தீர்த்தத்தின் பயன்கள்

  • மூதாதையர்கள் மற்றும் ஆவிகளால் கஷ்டங்களை அனுபவிக்காதவர்கள் : மறைந்த மூதாதையர்கள் மற்றும் ஆவிகளால் கஷ்டங்களை அனுபவிக்காதவர்களுக்கு தீர்த்தம் நேர்மறை ஆற்றலை அளிக்கிறது. “மறைந்த என் அன்புக்குரியவர்களும் மற்ற மூதாதையர்களும் ஏன் எனக்கு வலி/கஷ்டத்தை கொடுக்க விரும்புகிறார்கள்?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
  • மூதாதையர்கள் மற்றும் ஆவிகளால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் : புனித தீர்த்தத்திலிருந்து வரும் நேர்மறை ஆற்றல், புவர்லோகம் மற்றும் நரகத்தின் முதல் பகுதி(பாதாளம்) ஆகியவற்றிலிருந்து மூதாதையர்கள் மற்றும் ஆவிகளால் கடத்தப்படும் கருப்பு சக்தியை அழிக்கிறது. தீர்த்தத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால், மறைந்த மூதாதையர்கள் அல்லது மக்களை பாதிக்கும் கீழ்நிலையிலுள்ள ஆவிகள் பாதிப்படைகின்றன. ஆறு அடிப்படைக் கொள்கைகளுடன் கூடிய ஆன்மீக பயிற்சியோடு, புனித தீர்த்தத்தின் பயன்பாடும் ஒன்றிணைந்தால் அது கீழ்நிலையிலுள்ள ஆவிகளை தடுக்க சக்திவாய்ந்த கவசத்தை ஏற்படுத்துகிறது. நாளடைவில் தீய சக்திகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுவாக, சராசரி மனிதர்கள் தங்கள் மறைந்த மூதாதையர்களாலும் மற்றும் நரகத்தின் முதல் பகுதியிலிருக்கும் பொதுவான ஆவிகளாலும் (பூதங்கள்) பாதிக்கப்படுவதால், மேற்குரிய ஆன்மீக மூல காரணங்களால் தொடர்ந்து நிவாரணம் பெறுகிறார்கள். உயர்நிலை ஆவிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் கருப்பு சக்தியும் அகற்றப்படுகிறது. கருப்பு சக்தியே ஆவிகளின் முக்கிய பலமாக இருப்பதால், மூதாதையர்கள் மற்றும் ஆவிகளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு ஏற்படும் கஷ்டம் அல்லது தலைவலி, குழப்பம், மனச்சோர்வு ஆகியவை அவர்கள் மீது புனித தீர்த்தம் தெளிப்பதன் மூலம் தணிக்கப்படுகிறது. தெய்வீக பாதுகாப்பைப் பெறவும், உயர்நிலை ஆவிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிலையான நிவாரணம் பெறவும் வழக்கமான ஆன்மீக பயிற்சியே சிறந்த வழியாகும்.

ஒருவர் புனித தீர்த்தத்தை மட்டுமே ஆன்மீக குணப்படுத்தும் தீர்வாக பயன்படுத்தும் போது ஆவிகளிடமிருந்து அடையும் கஷ்டத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெறுகிறார். எனினும் நமது தேவை மற்றும் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப தீர்த்தத்தைப் பயன்படுத்தப்படலாம்.

4. தீர்த்தத்தின் பலன்கள் எவ்வாறு அதிகரிக்கிறது

  • விபூதியின் ஆன்மீகத் தூய்மை : புனித தீர்த்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் விபூதியை, ரஜ-தம செயல்கள் மூலம் உதாரணத்திற்கு அதை தவறாக கையாளுதல், சேமித்தல்(தவறாக), மற்றும் மறைந்த மூதாதையர்கள் அல்லது ஆவிகளின் தாக்குதலால் மாசுபட்டால், அதன் வழி பெறப்படும் பலன் குறையும். ‘விபூதியை எவ்வாறு கையாள்வது’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்
  • பயனரின் நம்பிக்கை : புனித தீர்த்தத்தை ஒருவர் நம்பிக்கையுடன் பயன்படுத்தினால், ஆன்மீக நிவாரண தீர்வாக அது சிறந்த பலன்களைத் தருகின்றது.
  • பயனரின் ஆன்மீக நிலை : புனித தீர்த்தத்தை ஒரு சுய உதவி ஆன்மீக நிவாரண தீர்வாகப் பயன்படுத்தும் நபரின் ஆன்மீக நிலை உயர்ந்தால் அதன் செயல்திறன் சிறந்தது.
  • நிவாரணம் அளிப்பவரின் ஆன்மீக நிலை (அவர் அதை ஆன்மீக நிவாரண தீர்வாகப் பயன்படுத்தினால்). ஒருவரின் ஆன்மீக நிலை அதிகமாக இருப்பின் அவர் தெளிக்கும் புனித தீர்த்தத்தின் ஆன்மீக நிவாரணப்படுத்தும் விளைவு 95% இருக்கும்.

5. தீர்த்தத்தின் சக்தி /பலன் பற்றிய ஒப்பீடு

தீர்த்தத்தின் சக்தி /பலன் பற்றிய ஒப்பீடு

தீர்த்தத்தின் வகை தெய்வீக சைதன்யம் %
எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளில் கிடைக்கும் விபூதி + நீர் 2
உருவேற்றப்பட்ட நீர் (நீர்+நாமஜபம்)1 5
உருவேற்றப்பட்ட நீர் (நீர்+நாமஜபம்)+நீர்+எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளில் கிடைக்கும் விபூதி1 5.001

அடிக்குறிப்புகள் :

1. இது தெய்வீக சைதன்யம் நீரில் உருவேற்றப்படும் அதிகபட்ச அளவை குறிக்கிறது. 90% ஆன்மீக நிலையிலுள்ள மகான் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்( தொடும்)போது நீரானது 5% வரை சக்தியூட்டப்படும்.

மேலே உள்ள அட்டவணையில் இருந்து, தெய்வீக சைதன்யத்தின் மூலம் நீரை அதிகபட்சம் 5% வரை சக்தியூட்டலாம் என்று அறிந்து கொள்ளமுடிகிறது. இது ஒரு மகான் தொடுவதாலோ, பார்ப்பதாலோ, அல்லது அதைப் பற்றி அவர் நினைப்பதால் 90% வரை சக்தியூட்டப்படுகிறது. மகான் ஒருவரால் தெய்வீக சைதன்யம் பெற்று சக்தியூட்டப்பட்ட நீரில் விபூதியை கலப்பது கூடுதல் பலனைத் தருகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்களுக்கு ஆன்மீகத் திறன் இல்லாததால், விபூதியை கலந்து தெய்வீக சைதன்யத்தால் சக்தியூட்டுவதை போல, தங்களது நாமஜபத்தின் மூலமாக நீரை சக்தியூட்டமுடியாது.

6. எஸ். எஸ்.ஆர்.எஃப் ஊது பத்திகள் மூலம் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தை எவ்வாறு கையாள/உபயோகப்படுத்த வேண்டும்?

புனித தீர்த்தம் ஆன்மீக நிலையில் செயல்படுவதால், அதன் செயல்திறனானது, அதனுடைய ஸாத்வீகத்தன்மை, மரியாதை மற்றும் அதன் மேல் உள்ள நம்பிக்கையின் சரியான அளவு விகிதத்தைப் பொறுத்து அமையும். புனித தீர்த்தத்தை கையாள்வதில் சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய விளக்கத்தைப் பெற, ‘எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊது பத்திகளில் கிடைக்கப்பெற்ற விபூதியை எவ்வாறு கையாள வேண்டும்?’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்.