
இக்கட்டுரையை புரிந்துகொள்ள கீழுள்ளவற்றை முதலில் படிக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
- மனதின் அமைப்பும் செயல்பாடுகளும்
- பேய்களின் வகைகளை பற்றிய அறிமுகம்
அட்டவணை
- 1. அறிமுகம்
- 2. தீயசக்திகள் (ஆவி, பேய், அசுரர் போன்றவை) மக்கள் மனதில் ஆசை எண்ணங்களை எவ்வாறு அதிகரிக்கின்றன?
- 3. தீயசக்திகள் (ஆவி, பேய், அசுரர் போன்றவை) தன்னை, பிறரை மற்றும் ஆன்மீகத்தைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு அதிகரிக்கின்றன?
- 4. தீயசக்திகள் மக்களுக்குள் பெருமை மற்றும் அகம்பாவத்தின் எண்ணங்களை எவ்வாறு அதிகரிக்கின்றன?
- 5. தீயசக்திகள் மிகக் கொடிய வெறித்தனமான எண்ணங்களை (பொருட்களை உடைப்பது, பிறரை அடிப்பது, கொலை, கற்பழிப்பு போன்றவை) மக்களுக்கு எவ்வாறு அளிக்கின்றன?
- 6. சுருக்கம் – மனதில் தீயசக்திகளால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வழிகள்
1. அறிமுகம்
முந்தைய கட்டுரைகளில் உலக மக்கள்தொகையில் பெரும்பாலும் தீயசக்திகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர், அல்லது வரும் ஆண்டுகளில் அதன் விளைவை உணரலாம் என நாங்கள் ஆராய்ந்ததை பரிந்துரைத்தோம். ஆன்மீக நிவாரணம் மற்றும் ஆன்மீக பயிற்சி மூலம் ஒருவர் மீது தீயசக்திகளின் தாக்கத்தை எவ்வாறு அடையாளம் கண்டு அதன் விளைவை குறைப்பது என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.
நமது ஆழ்மனதின் எண்ணங்களா அல்லது தீயசக்திகள் அளித்த எண்ணங்களா என்ற வேறுபாட்டை நம்மால் புரிந்துகொள்ள இயல்வதே ஆன்மீக நிவாரணமும், பயிற்சியும் செய்வதன் மூலம் பெறப்படும் நன்மையாகும். ஆன்மீக நிவாரணம் செய்தபின் இவ்வெண்ணங்கள் மறைந்து விடுகின்றனவா அல்லது அதன் தீவிரம் குறைகிறதா என்பதை ஆராய்வதே இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள யதார்த்தமான ஒரு வழியாகும்.
இருப்பினும் ஆன்மீக பயிற்சியின் தொடக்க காலத்தில் இவ்வேறுபாட்டை அறிய கடினமாக இருக்கலாம். கூடுதலாக தீயசக்தியின் தாக்கம் வலுவாக இருந்தால், எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என அறிய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கணக்கான ஆன்மீக நிவாரணமும், பயிற்சியும் தேவைப்படலாம்.
தீயசக்திகள் அளிக்கும் பலவகை எண்ணங்கள் மற்றும் மக்கள் மீது அவற்றின் தாக்கத்தை பற்றிய உதாரணங்களை நாங்கள் இக்கட்டுரையில் பட்டியலிடுகிறோம். கடவுளை நாடும் ஸாதகர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் அவற்றின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்றும் விளக்கியுள்ளோம். ஒவ்வொரு உதாரணத்திற்கு அருகில் சில பதில்களும் நிவாரணச் செயல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
2. தீயசக்திகள் (ஆவி, பேய், அசுரர் போன்றவை) மக்கள் மனதில் ஆசை எண்ணங்களை எவ்வாறு அதிகரிக்கின்றன?
பின்வரும் செயல்முறை மூலம் தீயசக்திகள் நம் மனதிலுள்ள ஆசைகளை அதிகரித்து நம்மை பாதிக்கின்றன.
ஆசை மற்றும் உள்ளுணர்வு மையத்தை குறிவைத்து ஆழ்மனதிற்கு தீய சக்திகள் நேரடி கட்டளையை இடுகிறது. உதாரணத்திற்கு: “இப்போது மது அருந்து”, “இப்போது சாக்லேட் சாப்பிடு”, “இப்போது படம் பார்”, “இப்போது பாட்டு கேள்”, “போதைமருந்தை எடுத்துக்கொள்”, “உடலுறவில் ஈடுபடு”. இதனால் சொன்னபடி செய்ய அந்நபருக்கு ஆசை எழும், அச்செயல்களை செய்யத் தோன்றும்.
அந்நபருக்கு தெய்வீக பாதுகாப்பு இருந்தாலோ அல்லது அவர் தெய்வீக சைதன்யம் அல்லது ஆனந்தம் உணர்ந்து அந்த ஆசையை எதிர்த்தாலோ, தீயசக்தி கட்டளையின் தீவிரத்தை மேலும் உயர்த்தும். உதாரணத்திற்கு: “கிலோ கணக்கில் சாப்பிடு, வீட்டிலுள்ள அனைத்து வகையான உணவையும் உட்கொள்”, “முப்பது பெண்களுடன் உடலுறவு செய்” (கட்டளைகள் அச்சு அசலாக இதே போல் இருக்காது ஆனால், அதன் கொள்கையும் உணர்வும் அப்படி இருக்கும்).
“எனக்கு சாக்லேட் பிடிக்கும்”, “எனக்கு மது பிடிக்கும்”, “எனக்கு இறைச்சி பிடிக்கும்” போன்ற சுய ஆலோசனையின் வடிவத்தில் ஒரு எண்ணத்தை அனுப்பி நமது விருப்பு-வெறுப்பு மையத்தை தாக்குவது மற்றொரு முறை ஆகும். பிறகு அந்நபருக்கு அச்செயலை செய்யச்சொல்லி ஒரு எண்ணப்பதிவை விருப்ப மையம் அனுப்பும். ஒரு ஸாதகருக்கு இத்தகைய பொருட்களின் மீது விருப்ப மையம் அநேகமாக இருக்காது, ஆனால் ஆழ்மனதில் இந்த மையம் இருக்கிறது என்றே ஸாதகர் நினைப்பார். அவர் மனதில் ஸாத்வீகமான ஆசைகள் இருப்பதால் மேற்கூறிய ஆசைகளை அவை எதிர்க்கும், அதனால் தீயசக்திகள்(ஆவிகள், பேய்கள், பிசாசுகள் போன்றவை) இந்நிலையில் அதிகமாக முயற்சிக்கும்.
| உயர்நிலை தீயசக்திகள் அளிக்கும் ஆசைகளின் தாக்கம் | ||
|---|---|---|
| எதிர்மறையான (தம குணம் நிறைந்த) நபர் | எளிதாக பாதிக்கப்படுபவர். இத்தகைய ஆசைகளுக்கான எண்ணப்பதிவுகள் இவர்களுக்கு ஏற்கனவே இருக்கின்றன, மந்திரவாதிகளின் (உயர்நிலை தீய சக்திகள்) இந்த ஆலோசனைகளுக்கு அவர்களின் மனம் எதிரொலித்து சுமூகமாக பதிலளிக்கும். மந்திரவாதிகள் அதிகமாக எதையும் செய்ய அவசியமில்லை. | |
| சராசரி நபர் | விளைவைப் பற்றி அறியாமல் சந்தோஷமாக இவ்வாசைகளில் ஈடுபடுவார்கள். பொறுமையுடன் நுணுக்கமாக காலப்போக்கில் (சிலசமயம் ஆயுட்காலங்களிலும்) மந்திரவாதிகள் இந்த எண்ணங்களை செலுத்தி, சராசரி நபர் தீயவராக மாறிவிடுவார். | |
| ஸாதகர் | சொல்லப்பட்ட ஆசை இல்லாத ஒரு ஸாதகர் | ஒரு ஸாதகரிடம் இத்தகைய ஆசைகளுக்கான விருப்ப மையம் ஆழ்மனதில் வளராமல் இருக்கலாம் ஆனால் அது இருக்கிறது என்றே அவர் நினைப்பார். அந்த ஸாதகரின் மனதில் இருக்கும் ஸாத்வீக ஆசைகள் இத்தகைய ஆசைகளை எதிர்ப்பதால் மந்திரவாதிகள் அதிகமாக முயற்சிப்பர். |
| தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறியாத ஒரு ஸாதகர் | இத்தகைய ஆசைகள் உள்ளன என்று குற்றவுணர்ச்சியுடன் இருப்பர் மற்றும் அதை அடிக்கடி நிறைவேற்ற முனைவார், மேலும் ஆன்மீக ரீதியாக தாழ்மையாக உணருவார். | |
| தீய சக்தி அளிக்கும் எண்ணம் என அறிந்த ஒரு ஸாதகர் | இத்தகைய ஆசைகளில் குறைவாக செயல்பட்டு ஆசை எழும்போதெல்லாம் அதிகமாக ஆன்மீக நிவாரணம் செய்வார். | |
3. தீயசக்திகள் (ஆவி, பேய், அசுரர் போன்றவை) தன்னை, பிறரை மற்றும் ஆன்மீகத்தைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு அதிகரிக்கின்றன?
3.1 தன்னைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள்
முந்தைய உதாரணத்தில் இருப்பதை போல், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த தீயசக்தி அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை நம் மனதில் செலுத்தி நம்மை தாக்கும். இதுவும் அதே கொள்கைதான், ஆனால் அதன் பரிந்துரை இதில் புத்தி மற்றும் அடையாள-விளக்க மையத்தை தாக்கும்.
உதாரணத்திற்கு தன்னைப் பற்றி அனுப்பப்படும் எண்ணங்கள் இவை: “நீயொரு மோசமான பக்தன்/பக்தை. நீ அவதிப்பட வேண்டியவன்/ள். நீ எவ்வளவு தீயவன்/ள் என்றால் உனக்கு நற்கதியே கிடையாது. நீ இறப்பதே நல்லது. நீ அத்தகைய தீயவன்/ள் ஆதலால் ஆன்மீக பயிற்சியை நிறுத்திவிடு”. பிறகு அந்த ஸாதகரின் மனதில் இவ்வாறு எண்ணம் வரும்: “நானொரு மோசமான ஸாதகன். அவதிப்பட வேண்டியவன்/ள். எனக்கு நற்கதியே கிடையாது. நான் இறப்பதே நல்லது. நான் தீயவன்/ள் ஆதலால் ஆன்மீக பயிற்சியை நிறுத்திவிட வேண்டும்”.
| உயர்நிலை தீயசக்திகள் அளிக்கும் தன்னைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் | ||
|---|---|---|
| எதிர்மறையான (தம குணம் நிறைந்த) நபர் அல்லது குற்றவாளி | உயர்நிலை தீயசக்திகளிடம் (மந்திரவாதிகள்) இருந்து இத்தகைய எண்ணங்கள் கிடைக்காது. மாறாக அவரது அகம்பாவத்தை உயர்த்த மந்திரவாதிகள் இப்படிப்பட்ட எண்ணங்களை அனுப்புவர். | |
| தீயசக்தி (ஆவி, பேய் போன்றவை) பிடித்த ஒரு நபர் | இத்தகைய எண்ணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு கடைசியில் தற்கொலை செய்துகொள்வார் | |
| சராசரி நபர் | மனத்தளர்ச்சி அனுபவித்து உளவியல் ரீதியான பிரச்சனைகளை பெறுவார் | |
| ஸாதகர் | தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறியாத ஒரு ஸாதகர் | மனத்தளர்ச்சி அடைந்து உணர்ச்சிவசப்பட்டு அவரது ஆன்மீக பயிற்சி தடைப்பட்டு விடும். |
| தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறிந்த ஒரு ஸாதகர் | கடவுளிடம் சரணாகதி அடைந்து இவ்வெண்ணங்கள் வரும்போதெல்லாம் ஆன்மீக நிவாரணம் செய்வார். | |
3.2 பிறரைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள்
நம் மனதில் தீயசக்திகள் செலுத்தும் பிறரைப் பற்றிய எண்ணங்களின் வகை பின்வருமாறு: “இவன்/ள் ரொம்ப எதிர்மறையானவன்/ள்”, “இவனு/ளுக்கு ஆணவம் அதிகம்”, “இவன்/ள் இப்போது ஆணவத்துடன் பேசுகிறான்/ள்”, “இவன்/ள் நயவஞ்சகன்/ள்”, “உன்னை துன்புறுத்த நினைக்கிறான்/ள் மேலும் உன்னை வெறுக்கிறான்/ள்”. பொதுவாக இவ்வனைத்துமே பொய். இல்லாதவற்றை சுட்டிக்காட்டி, இல்லாத குறைபாடுகளும் அகம்பாவமும் இருப்பதாக நாம் உருவகப்படுத்தி கொள்கிறோம். ஆனால் தீயசக்திகள் எண்ணப்பதிவுகளை பீடிக்கப்பட்டவரின் மனதில் செலுத்துவதால் மற்றவர்களைப் பற்றி அவர் இப்படியெல்லாம் நினைப்பார். இவ்வாறு பாதிக்கப்பட்டவரின் மனதின் தெளிவு குறைகிறது.
| உயர்நிலை தீயசக்திகள் அளிக்கும் பிறரைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் | ||
|---|---|---|
| எதிர்மறையான (தம குணம் நிறைந்த) நபர் அல்லது தீயசக்தி பிடிக்கப்பட்ட ஒரு நபர் | மற்றவர் மீது ஆக்ரோஷமாக மாறி சொல்லாலோ உடல் ரீதியாலோ தாக்கலாம் | |
| சராசரி நபர் | வெளிமுகமாகச் சிந்திப்பவர், எண்ணங்கள் சரியா தவறா என்றுகூட யோசிக்காமல் மற்றவர்களை பற்றி இப்படியே சிந்தித்து இருப்பார், அதோடு பிறர் மீது பழி சுமத்துவார். நேரடியாக மோத முயற்சிக்காவிட்டாலும் வெறுப்பையும், பிறர் மீது தீய எண்ணங்களும் வைத்திருப்பார், அல்லது பின்புறமாக அவர்களைப் பற்றி பேசி வாக்குவாதத்திலும் ஈடுபடுவார். | |
| ஸாதகர் | தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறியாத ஒரு ஸாதகர் | இத்தகைய எண்ணங்கள் தவறானவை என்றுணர்ந்து ஸாதகர் உள்முகமாக யோசிப்பார். மந்திரவாதிகள் செலுத்தும் எண்ணங்கள் என்று உணராவிட்டால் அவர் தன்னை தீயவன்/ள் என நினைப்பார். பிற ஸாதகர்கள் மீது தீய உணர்வுகளை வளர்த்துக்கொண்டு அவர்களை விலக்கி தான் மேன்மையானவன்/ள் என்று நினைப்பார், இதனால் ஸாதகரின் ஆன்மீக பயிற்சி தடைபடுகிறது. |
| தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறிந்த ஒரு ஸாதகர் | ஆன்மீக நிவாரணம் செய்ய அதிகமாக முயற்சிப்பார் மேலும் தொடர்புடைய குறைபாடுகளை அகற்ற அதிகளவு ஆளுமை குறைகளை களைய முயற்சிப்பார். | |
3.3 ஆன்மீகத்தைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள்
ஆன்மீக பயிற்சி மற்றும் ஸத்சேவையை (சத்தியத்திற்கு செய்யும் சேவை, அதாவது இறைசேவை) எதிர்த்து தீயசக்திகள் கொடுக்கும் எண்ணங்கள் பின்வருமாறு. உதாரணத்திற்கு: “ஆன்மீக பயிற்சி போலியானது”, “கடவுள் இல்லை”, “கடவுள் உன்னை வெறுக்கிறார்”, “உனது குருநாதர் போலி, உன்னை ஏமாற்றுகிறார்”, “குருவுக்கு உன்னைவிட பிறரை தான் பிடிக்கும்”, “உன்னை நியாயமாக நடத்தவில்லை”, “நீ செய்யும் ஸத்சேவை உண்மையில் ஸத்சேவையே கிடையாது”, “ஆன்மீகத்தை பரப்ப இயலாது”. ஆன்மீக அறிவியலை குறைத்து புத்தி ரீதியான ஐயத்தையும் சிலசமயம் அளிக்கும், உதாரணத்திற்கு: “இரும்புச்சத்து இருப்பதால் இறைச்சி நல்லதே”, “நீ மாமிசம் சாப்பிடாவிட்டால் நோய்வாய்ப்படுவாய்”, “அறிவியல் இதை நிரூபித்துள்ளதால் ஆன்மீக அறிவியல் தவறு”.
தாமஸீகமான நடத்தையை வரவழைக்க ஆன்மீக அறிவியலை உருக்குலைக்கும் எண்ணங்களை தீயசக்திகள் அளிக்கின்றன, உதாரணத்திற்கு: “குளிக்கவில்லை, வீட்டை தூய்மையாக்கவில்லை என்றாலும் ஒன்றுமே ஆகாது”, “இவையனைத்தும் ஸ்தூல ரீதியானவை”, “சூட்சுமத்தில் இருப்பவை தான் முக்கியம், அதனால் நீ இதை செய்யவேண்டாம்”. தவறான ஆன்மீக பயிற்சி செய்யும் எண்ணமாகக் கூட இருக்கலாம், “அமர்ந்து நாமஜபம் மட்டுமே செய், ஸத்சேவை வேண்டாம் ஏனென்றால் உள்ளிலிருந்து செய்வது நாமஜபம் ஆனால் ஸத்சேவை வெளிப்புறம், ஸ்தூல மட்டத்தில் செய்வது”. “நீ அதைக் கடந்து சென்றுவிட்டதால் ஸத்சேவை செய்ய வேண்டாம்”, “நீ ஏற்கனவே ஆனந்தத்தை அனுபவிக்கிறாய்”.
ஆன்மீக அறிவியலை உருக்குலைக்கும் சில கடுமையான சூழல்களில் தீய செயல் நல்லதே என்று எண்ணங்களை அளித்து கூட தீயசக்திகள் ஒருவரை யோசிக்க வைக்கின்றன. உதாரணம்: “உன்னை நீயே வழிகாட்டிக்கொள்”, “போதைப்பொருள் ஆன்மீக அனுபவத்தை அளிப்பதால் அது வளர்ச்சிக்கான ஒரு ஆன்மீக கருவியாகும்”. மற்றவர்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றி சொல்லும்போது ஆன்மீகத்தை போதிப்பது அல்லது பரப்புவதைப் பற்றி தவறான எண்ணங்களை கூட அளிக்கின்றன. ஸத்சேவை செய்யவும் உளவியல் ரீதியாக மட்டுமே ஆன்மீகத்தை பரப்ப எண்ணங்கள் அளிக்கின்றன, இதனால் தவறுகள் நடக்கலாம். ஒரு ஆர்வாளரை தவறாக மதிப்பிடுவதை பற்றியும் எண்ணங்கள் அளிக்கின்றன (உதாரணம், ஒரு நபர் ஸாதகர் இல்லை என்றாலும் ஸாதகர் தான் என்று தகவல் அளிக்கலாம், அல்லது ஸாதகராக இருந்தும் இல்லை என்று எண்ணத்தை கொடுக்கலாம்).
| உயர்நிலை தீயசக்திகள் அளிக்கும் ஆன்மீகத்தைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் | ||
|---|---|---|
| எதிர்மறையான (தம குணம் நிறைந்த) நபர் அல்லது தீய சக்தி பிடிக்கப்பட்ட ஒரு நபர் | நாத்தீகர்கள், மதவெறியாளர்கள், முழுமையற்ற ஆன்மீகவாதிகளைப் (புதியகால வழிமுறைகளை செய்பவர்) போல் நடந்துகொள்வார்கள், ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீகத்தை போதிக்கும் கல்விகளை தாக்குவார்கள். | |
| ஸாதகர் | தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறியாத ஒரு ஸாதகர் | அவ்வப்போது ஆன்மீக பயிற்சியை நிறுத்தி பின் மீண்டும் தொடங்குவார், அல்லது தவறான ஆன்மீக பயிற்சியை செய்வார். ஐயங்கள் வருவதால் (குறைந்த ஆன்மீக உணர்வு, சரணாகதி) ஆன்மீக பயிற்சியின் தரம் குறைவானதாக இருக்கும். |
| தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறிந்த ஒரு ஸாதகர் | ஆன்மீக நிவாரணம், பிரார்த்தனை, ஸத்சேவை செய்வதற்கான உள்முகச்சிந்தனை செய்ய அதிகமாக முயற்சிப்பார், அதில் வழிகாட்டல் மற்றும் உதவியை நாடுவார். | |
4. தீயசக்திகள் மக்களுக்குள் பெருமை மற்றும் அகம்பாவத்தின் எண்ணங்களை எவ்வாறு அதிகரிக்கின்றன?
நமது பெருமையையும் அகம்பாவத்தையும் உயர்த்த தீய சக்திகள் இப்படிப்பட்ட எண்ணங்களை நமக்கு அளிக்கின்றன: “நீ இதை இவ்வளவு அருமையாக செய்தாய்”, “எல்லோரும் இதைப் பார்ப்பார்கள்”, “உன்னைப் புகழ்வார்கள்”, “உன்னை அனைவரும் பார்க்கிறார்கள்”, “நீ அழகாக இருக்கிறாய்”, “நீ அறிவுள்ளவன்/ள்”.
இவ்வெண்ணங்கள் முக்கியமில்லாத பல்வேறு விஷயங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். ஸாதகர்களுக்கு தீயசக்திகள் இன்னும் வலுவான ஆலோசனைகளை அளிக்கின்றன, உதாரணம்: “அனைவரையும் விட நீ வலுவானவன்/ள்”, “அனைவரையும் விட நீ புத்திசாலி”, “உன்னைத் தவிர இவ்வுலகில் வேறு யாரும் இதை நன்றாகச் செய்யமாட்டார்கள்”.
| உயர்நிலை தீயசக்திகள் அளிக்கும் பெருமை மற்றும் அகம்பாவம் தொடர்பான எண்ணங்களின் தாக்கம் | ||
|---|---|---|
| எதிர்மறையான (தம குணம் நிறைந்த) நபர் | அனைவரையும் விட மிகவும் மேன்மையாக உணரத் தொடங்குவார் மேலும் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்றும் நம்புவார். | |
| சராசரி நபர் | தனது தினசரி நடத்தையைப் பற்றி ஆணவத்துடன் இருப்பார், பாசாங்கு செய்தாவது ஆணவத்தை மறைப்பார் | |
| ஸாதகர் | தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறியாத ஒரு ஸாதகர் | தன்னைப் பற்றி கெடுதலாக நினைப்பார், இத்தனை முயற்சி செய்தும் அகம்பாவம் உள்ளதே என்றுணர்வதால் அதனைக் குறைப்பதற்கான முயற்சிகளை செய்ய ஊக்கமிழப்பார், இதனால் அகம்பாவத்தை களையும் முயற்சிகள் நிதானமாகும். |
| தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறிந்த ஒரு ஸாதகர் | ஆன்மீக நிவாரணம் மற்றும் அகம்பாவத்தை களையும் முயற்சிகளை அதிகம் செய்வார். | |
5. தீயசக்திகள் மிகக் கொடிய வெறித்தனமான எண்ணங்களை (பொருட்களை உடைப்பது, பிறரை அடிப்பது, கொலை, கற்பழிப்பு போன்றவை) மக்களுக்கு எவ்வாறு அளிக்கின்றன?
மக்களை வெறித்தனமான செயல்கள் செய்யவைக்க தீயசக்திகள் அந்நபரின் மனதில் ஒரு காட்சியை உருவாக்குகின்றன. தன் மனதில் அச்செயல் ஏற்கனவே நிகழ்வதை அந்நபர் காண்கிறார், இதனால் அதை செய்ய அவர் ஊக்கம் அடைகிறார்.
மனதில் ஒரு செயலை உருவாக்குவது மட்டுமல்லாமல் அச்செயலை செய்வதால் ஒருவித இன்ப உணர்ச்சியையும் தீயசக்திகள் அளிக்கின்றன, அதாவது செய்யப்போகும் செயலையே கற்பனை செய்து அந்நபரை போலியான இன்பத்தை அனுபவிக்க வைக்கின்றன.
| உயர்நிலை தீயசக்திகள் அளிக்கும் வெறித்தனமான எண்ணங்களின் தாக்கம் | ||
|---|---|---|
| எதிர்மறையான (தம குணம் நிறைந்த) நபர் | கொடூரமாக ஒருவரை தாக்குவது, கற்பழிப்பது அல்லது கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல் | |
| சராசரி நபர் | குறைந்தளவு வெறித்தனமாக இருப்பது அதாவது பொருட்களை உடைப்பது, சண்டையிடுவதோடு நிறுத்திக்கொள்வார். | |
| ஸாதகர் | தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறியாத ஒரு ஸாதகர் | ஏதாவது ஒரு வழியில் வெறித்தனமாக நடந்துகொள்ள அதிகம் வாய்ப்பு உண்டு, ஆனால் கடவுள் அருள் இருப்பதால் கட்டுப்பாடுடன் இருப்பார். |
| தீயசக்தி அளிக்கும் எண்ணம் என அறிந்த ஒரு ஸாதகர் | இத்தகைய எண்ணங்கள் வராமல் இருக்க முயற்சித்து, அதனைச் செயல்படுத்தாமலும் இருப்பார். | |
6. சுருக்கம் – மனதில் தீயசக்திகளால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வழிகள்
1993 முதல் சூட்சும உலகங்களில் தெய்வ மற்றும் அசுர சக்திகளுக்கு இடையே பெரும் போர் நிகழ்ந்து வருகிறது என்பது மனிதகுலத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும். வரலாறு முழுவதும் அவ்வப்போது இந்த அண்டத்தில் அசுர ராஜ்ஜியத்தை நிறுவ சூட்சும தீயசக்திகள் தேவையான ஆன்மீக ஆற்றலை சேமிக்கின்றனர். இந்த சூட்சும யுத்தத்தின் மூலம் மனிதகுலத்தை துன்புறுத்த ஒரு வழி எவ்வாறெனின் ஆன்மீக வளர்ச்சி பாதையிலிருந்து மக்களை விலக்கி அதர்ம நடத்தையின் எண்ணங்களை மனதில் செலுத்தி சூழலில் ரஜ-தம குணங்களை உயர்த்துதல் ஆகும்.
பெரும்பாலான மக்கள் இப்போரை பற்றி அறியாததால் தனக்குள் எழும் இவ்வெண்ணங்கள் ஆன்மீக ரீதியில் தீய சக்திகளிடம் இருந்து வருகிறது என உணரமாட்டார்கள். தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சியின் மூலமாகத் தான் இந்நிகழ்வுகளை ஒருவர் அடையாளம் கண்டு அதன் தாக்கத்திலிருந்து மீண்டுவர கற்று, பாதுகாப்பையும் பெற முடியும்.