ஆன்மீக நிவாரணத்தின் பின்னணியில் உள்ள அடிப்படைக் கோட்பாடு

ஆன்மீக நிவாரணத்தின் பின்னணியில் உள்ள அடிப்படைக் கோட்பாடு

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) அறிவுறுத்துகிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரண முறையென்றாலும் சுயமாக தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1.அறிமுகம்

அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மற்றும் வெளியீடுகளிலும், ஒருவர் மற்றவர்களை மருத்துவம் சாராத முறையின் மூலம் குணப்படுத்துவதை பார்த்திருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறான வழிகளில் மக்கள் குணமடைந்துவிட்டதாகக் கூறுவதையும் கேட்கலாம். ஆன்மீக நிவாரண முறைகள்  எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் அடிப்படைக் கோட்பாடு தான் என்ன? ஆன்மீக நிவாரண முறையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி இந்த கட்டுரையில் ஆராய்வோம்.

2. ஆன்மீக நிவாரண முறையின் நோயறிதலின் பின்னணியில் உள்ள கோட்பாடுகள்

ஆன்மீகப் பரிமாணத்தில் ஒரு பிரச்சினையின் மூல காரணங்களை ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட  உணர்வுடையர்களால்  (ESP) மட்டுமே நேர்த்தியான முறையில் கண்டறிய முடியும். நோயறிதலின் நேர்த்தியானது  கணிசமாக மாறுபடுவதோடு, மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டது:

தீய சக்திகள்: ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையில் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.), தனிமனிதன் மற்றும் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகைப்பட்ட சூட்சும சக்திகளை, அதாவது பொதுவான ஆவிகள் முதல் உயர்நிலை \'மாந்த்ரிகர்கள்\' வரை கூட்டு பெயர்ச்சொல்லாக \'தீய சக்திகள்\' என்று உபயோகிக்கின்றோம். ஒரு பொதுவான ஆவியின் ஆன்மீக வலிமை 1 முதல் 10 அலகுகளுக்கு இடையில் இருந்தால், ஒரு \'மாந்த்ரிகரின்\' வலிமை ஒரு பில்லியனில் இருந்து முடிவிலிக்கு அருகில் இருக்கும்.

 

1.ஆறாவது அறிவு திறன்:  ஒருவரது ஆன்மீக நிலையுடன் இணைந்து அவரது ஆறாவது அறிவு (ESP) மற்றும் அதற்கெதிராக பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி அல்லது ஆவியின் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல் போன்றவை) வலிமை.

சராசரி மனத்திறன் உடையவர்கள், மறுமை லோகங்களில் ஒன்றான புவர்லோகத்தின் சூட்சும மண்டலத்திலிருக்கும்  ஒரு சாதாரண ஆவியை மட்டுமே உணர முடியும். மாறாக, சூட்சும நரகத்தின் (பாதாளம்) ஆழமான பகுதியிலுள்ள உயர்நிலை எதிர்மறை ஆற்றலை கொண்ட சூட்சும மந்திரவாதியை (மாந்த்ரீகர்)  சராசரி மனத்திறன்  கொண்டவர்களால்  உணர முடியாது

அமானுஷ்ய செயல்பாட்டை உணரும் நமது ஆறாவது அறிவின் திறமையின் ஆழம்” குறித்த கட்டுரையைப் பார்க்கவும்.

2. விதி: தற்போதைய வாழ்நாளில் ஒரு நபர் உட்பட்டே ஆக வேண்டிய விதி (ப்ராரப்த -கர்மா) என்பது அவர் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனையின் கால இடைவெளியையும் அதனால் ஏற்பட இருக்கும் வேதனையின் தீவிரத்தையும் தீர்மானிக்கும் சக்திவாய்ந்த காரணியாகும். ஒரு நபர் எந்தவொரு ஆன்மீக பயிற்சியையும் மேற்கொள்ளாமல் இருக்கும் போது, மேலும் அவரது விதி கடுமையாக இருக்கும் பட்சத்தில், இதுவே அவரின் விதியைக் கடக்க, சரியான ஆன்மீக உதவியைப் பெறமாட்டார் என்று உத்தரவாதம் அளிக்கிறது.

3. ஆன்மீக நிவாரணம் அளிப்பவரை வழிநடத்தும் மகானின் சங்கல்பம்: ஆன்மீக நிவாரணம் வழங்குபவர், ஓர் மகானின் (ஒரு நபரின் ஆன்மீக நிலை 70% மேல்) சங்கல்பத்தால் வழிநடத்தப்படுகிறார் என்றால், ஆன்மீக நிவாரணம் வழங்குபவரின் ஆன்மீக நிலை எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருந்தாலும் உயர்நிலை பேய்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க முடியும். இது ஏனென்றால் வழிநடத்தும் மகானின் சங்கல்ப சக்தியினாலேய நிவாரணம் பெரும்பாலும் நிகழ்கிறது.

உயர்நிலை சூட்சும நல்ல சக்திகள், நிவாரணம் வழங்குவதற்காக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கும் உறுதுணையாய் நிவாரண சக்தியை வழங்கி, நிவாரணம் வழங்குபவர்க்கு உதவி புரிகின்றன. மாறாக உயர் மட்ட தீய சக்திகள் நிவாரணம் வழங்குபவர்களுக்கு, அதற்கான ஆற்றலை வழங்கி இறுதியில் நிவாரணம் வழங்குபவரையும், அவர் தொடர்புடையவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடுகின்றன.

நிவாரணம் அளிப்பவர் உயர் மட்ட எதிர்மறை ஆற்றலைக் கொண்டிருந்தால், அவரின் நோயறிதல் மற்றும் ஆன்மீக நிவாரண சக்திகள் விரிவாக மேம்படுகிறது. அத்தகைய நபரிடமிருந்து நிவாரணமடையக் கோரும் சராசரி நபர், உண்மையில் உயர் மட்ட எதிர்மறை சக்தியுடன் நேரடியாகக் கையாளுகிறார் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது.

இந்த வகை சிகிச்சை முறையை ‘மாயாவி‘ அல்லது மாயை / ஏமாற்றம் என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும். அத்தகைய நிவாரணமுறையில் பாதிப்பை உண்டாக்குவதற்காக எதிர்மறை சக்தி சங்கல்ப சக்தியினை பயன்படுத்துகிறது. அதிக பலம் பொருந்திய தீய சக்திகள் நிவாரணம் அளிப்பவரின் மூலம் செயல்பட்டு, அவரின் திறனை கணிசமாக மேம்படுத்தும். ஆதலால் நிவாரணம் அளிப்பவர் அற்புதமான திறன் கொண்டவராக தோற்றம் அளிக்கிறார் மற்றும் சக்திவாய்ந்தவராக கருதப்படுவார். பல அற்புத நிவாரணங்கள் நிகழ்வதால் மக்கள் திரள் வெகுவாக  பின்தொடர்கின்றனர். இருப்பினும், நிவாரணம் வழங்குபவர் மூலம் செயல்படும் சக்திவாய்ந்த எதிர்மறை ஆற்றல் பின்னர் ஆன்மீக நிலையில்  மக்களை எளிதில் பிழையான பாதையில் வழி நடத்தக்கூடும்.

அவைகளின் யுக்தி பின்வருமாறு :

1.அற்புதங்களை நிகழ்த்துவதன் மூலம், மக்கள் வசப்படுத்துப்படுகிறார்கள், ஆதலால் மக்கள் தொடர்ந்து அந்த நிவாரணம் வழங்குபவரிடம் திரும்பி வருகிறார்கள்.

2.உதவி கோரும் நபர்களை, நிவாரணம் வழங்குபவரின் மூலம் தொடர்ந்து எதிர்மறை கறுப்பு சக்தியை செலுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்களை உருவாக்கி அவர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.

3.இறுதியாக எதிர்மறை சக்தி நிவாரணம் வழங்குபவரை  மட்டுமல்லாமல், ஆன்மீக நிவாரணத்திற்க்காக அவரிடம் வரும் நபர்களையும் மறைமுகமாக கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுகிறது.

3. நேர்மையான ஆன்மீக நிவாரணத்திற்கு பின்னால் உள்ள வழிமுறை

ஆன்மீகத்தின்படி இந்த பிரபஞ்சமானது  மூன்று அடிப்படையான தத்துவங்களால் அமையப் பெற்றது. அவை, ஸத்வ, ரஜ, தம என்னும் மூன்று சூட்சும கூறுகள் (த்ரிகுணங்கள்) ஆகும். தூய்மை மற்றும் ஞானத்தை சத்வ கூறும், செயல்பாடு மற்றும் ஆசையை ரஜ கூறும் அறியாமை மற்றும் சோம்பலை தாமசீக கூறும் குறிக்கிறது. எல்லாவற்றிலிருந்தும்  வெளிப்படும் சூட்சுமமான அதிர்வுகள் அதனுள் அடங்கியுள்ள மிக முதன்மையான சூட்சும அடிப்படைக் கூறுகளைப் பொறுத்துள்ளது. சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள் (த்ரிகுணங்கள்) பற்றிய கட்டுரையில் இதன் முழு கருத்துகளையும்  விரிவாக விளக்கியுள்ளோம்.

ஆன்மீக நிவாரண முறையின் வகைகளை பொருட்படுத்தாமல், மேற்கோள் காட்டிய மூன்று அடிப்படை சூட்சும கூறுகள் தான்,உலகெங்கும்  நடைமுறையில் உள்ள ஆன்மீக நிவாரண முறையின் பின்னணியில் உள்ள அடிப்படைக் கோட்பாடாகும்.

ஆன்மீக நிவாரணத்தின் பின்னணியில் உள்ள அடிப்படைக் கோட்பாடு

ஆன்மீக பரிமாணத்திலிருந்து ஒரு நபர் எதிர்மறை ஆற்றல்கள் அல்லது சக்திகளால் தாக்கப்படும்போது, அவன் அல்லது அவள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். எதிர்மறை சக்தி ஓர் நபரை தாக்கும்போது, மருத்துவம் அல்லது மனப் பிரச்சினை அல்லது ஏதேனும் சிக்கலை அந்த விஷயத்தில் உருவாக்குவதன் மூலம், அவை (ஆவிகள்) மெய்யாகவே அடிப்படை சூட்சும ரஜ-தம கூறுகளை  அதிகரிப்பதுடன் பாதிக்கப்பட்ட நபர் அல்லது பொருளைச் சுற்றியுள்ள ஸத்வ கூறுகளை குறைக்கிறது. ஆவிகள் அந்நபரைச் சுற்றி கருப்பு சக்தியால் முலாம் பூசியது போல் மூடுகின்றன அல்லது கருப்பு சக்தியை  உட்செலுத்துகின்றன. கருப்பு சக்தி என்பது தீங்கு விளைவிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆன்மீக ஆற்றலாகும்

அடிப்படையாக , ஆன்மீக நிவாரண முறைகளை  (உடல் சிகிச்சையுடன்) இணைப்பதன் மூலம் குணமாகும் ஒருவர் பின்வரும் நன்மைகளைப் பெறுகிறார்:

  • ஆவிகள் ஏற்படுத்தும் அடிப்படை சூட்சும ரஜ-தம கூறுகளைக் குறைக்கிறது
  • அடிப்படை சூட்சும ஸத்வ கூறுகளை அதிகரிக்கிறது
  • இயல்பாகவே ரஜ-தமவாக இருக்கும் கருப்பு சக்தியை அகற்ற அல்லது குறைக்க முயற்சிக்கிறது.

ஆவிகள் ஒரு நபரை எவ்வாறு வசப்படுத்தகின்றன ? (அதாவது வசப்படுத்தும் செயலுக்குப் பின்னால் உள்ள வழிமுறை) பற்றிய கட்டுரையைப் பார்க்கவும்.