ஸாத்வீகமான வாழ்க்கை பற்றிய இந்த பகுதியில் ஆன்மீக ஆராய்ச்சி வழியாக, நாம் பல வகையான பிரபலமான பானங்கள் மற்றும் மக்கள் மீது அவைகளின் ஆன்மீக விளைவு ஆகியவற்றை ஒப்பீடு செய்துள்ளோம். கீழே உள்ள இந்த சுருக்க அட்டவணையின்படி பானங்கள், ஆன்மீகத்தூய்மையற்ற நிலையிலிருந்து ஆன்மீகத்தூய்மை நிலை வரை (மேலிருந்து கீழாக) வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன, அதன்படி நாம் அத்தகைய பானங்களை உட்கொள்ளும்போது ஆன்மீகப் பரிமாணத்திலிருந்து தீயசக்திகளால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன.
| பானத்தின் வகை | ஸத்வ1 | ரஜ1 | தம1 | தீயசக்திகளின் விளைவு2 |
|---|---|---|---|---|
| சாராயம் (மது உட்பட) | 18 | 31 | 51 | அதிகம் |
| தேநீர் பால் தவிர்த்தது3 | 18 | 31 | 51 | அதிகம் |
| கோலா போன்ற குளிர்பானங்கள்4 | 21 | 46 | 33 | நடுத்தரம் |
| காபி பால் தவிர்த்தது | 18 | 51 | 31 | நடுத்தரம் |
| தேநீர் பால் சேர்த்தது | 20 | 49 | 31 | நடுத்தரம் |
| காபி பால் சேர்த்தது | 21 | 48 | 31 | நடுத்தரம் |
| மூலிகை தேநீர் | 21 | 48 | 31 | நடுத்தரம் |
| பழச்சாறு | 31 | 44 | 25 | குறைவு |
| இளநீர் | 31 | 48 | 21 | குறைவு |
| தண்ணீர்5 | 31 | 51 | 18 | குறைவு |
| மோர் | 31 | 52 | 17 | குறைவு |
| இந்திய பசுவின் பால் | 33 | 54 | 13 | குறைந்தபட்சம் |
மூலம் : 21 ஜூலை 2013 இல் எஸ்.எஸ்.ஆர்.எஃப் மூலமாக நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி
ஆன்மீகக் கண்ணோட்டத்திலிருந்து பானங்களைப் பற்றிய மேலும் விவரங்களை படிக்க முதல் நெடுவரிசையில் உள்ள மீயிணைப்பு(ஹைப்பர் லிங்க்) வாசகத்தை தயவுசெய்து அழுத்தவும்.
அட்டவணைக்கான அடிக்குறிப்புகள் :
- ஆன்மீக அறிவியலின் படி பிரபஞ்சம் முழுவதும் ஸத்வ, ரஜ, தம என்னும் மூன்று அடிப்படையான சூட்சும கூறுகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். ஸத்வ என்னும் கூறு ஆன்மீகத்தூய்மை மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது; ரஜ கூறு செயல் மற்றும் ஆசையைக் குறிக்கிறது அதே நேரத்தில் தம கூறு அறியாமை மற்றும் சோம்பலைக் குறிக்கிறது. எதிலிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் வெளிப்படுகிற சூட்சும அதிர்வலைகள் பிரதானமாக ஆதிக்கம் செலுத்துகின்ற சூட்சும அடிப்படை கூறுகளைச் சார்ந்திருக்கின்றது
- தீயசக்திகளின் தாக்கம் மற்றும் நமது ஆன்மீகப் பயிற்சியைப் பொறுத்தவரை,
- தம சூட்சும கூறு அதிகமுள்ள சாராயம் மற்றும் கருப்பு தேநீர் போன்ற பானங்களை நாம் பருகும் போது, ஆன்மீகப்பரிமாணத்திலிருந்து வரும் தீயசக்திகள் அந்த பானத்தின் மூலம் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிக்கின்றன, ஏனெனில் அது நமக்குள் ஆன்மீகத்தூய்மையின்மையை அதிகரிக்கின்றது
- அதிகளவு உட்கொண்டால் அதன் விளைவு அந்த நபரின் மீது அதிகமாக இருக்கும். இதன் விளைவாக கருப்பு தேநீர் மற்றும் சாராயத்திற்கு அடிமையானவர்கள் அதிகளவில் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
- ஆன்மீக பயிற்சி மற்றும் அதிக ஸாத்வீகமாகவோ அல்லது ஆன்மீக ரீதியாக தூய்மையாகவோ மாறுவதற்கு முயிற்சிகள் செய்கின்ற ஸாதகர்களுக்கு, தம ஆதிக்கம் செலுத்தும் பானங்களை உட்கொள்வது அவர்களின் ஆன்மீக வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும். மேலும் தங்களின் ஆன்மீக பயிற்சியை தடுக்க முயற்சிக்கும் தீயசக்திகளுக்கு ஆளாக நேரிடும்.
- ஆன்மீக நிலை 80%த்திற்கு மேல் உள்ள மகான்களுக்கு, அவர்கள் சாராயத்தை உட்கொண்டாலும் அது அவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தாது, ஏனெனில் அவர்களால் பானத்தின் அமைப்பை மாற்ற இயலும். உதாரணமாக சாராயத்தை தண்ணீராக மாற்ற முடியும்.
- இது கருப்பு தேநீரை மட்டுமே குறிக்கிறது, மூலிகைத் தேநீர் இதில் அடங்காது
- கோலாக்கள் ரஜ தம ஆதிக்கம் நிறைந்தவை மேலும் இதற்கு முக்கிய பங்களிக்கும் காரணிகளில் ஒன்று அவற்றில் உள்ள இரசாயன சேர்க்கைகள் தான். இரசாயனம் கொண்டுள்ள எந்தவொரு பானமும் அதிக தம விகிதத்தை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
- அடிப்படையில் தண்ணீர் நடுநிலைமை வாய்ந்தது, ஏனினும் அதனுடைய பண்பு என்னவென்றால் அது எளிதாக நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகளை உட்கொள்ள முடியும்.
டி.டி.எஃப்.ஏ.ஓ(DDFAO) எனப்படும் உயிரியல் பின்னூட்ட இயந்திரத்தை பயன்படுத்தி, எஸ்.எஸ்.ஆர்.எஃப் மக்களின் குண்டலினி சக்கரங்கள் மீது சாராயம் மற்றும் பழச்சாற்றின் விளைவையும் படித்தது. தீயசக்திகளால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத மக்கள் மீது நாங்கள் சாராயம்(விஸ்கி) மற்றும் பழச்சாறு(ஆரஞ்சு) ஆகிய இரண்டு வகையான பானங்களின் விளைவை பரிசோதித்து பார்த்தோம். நாங்கள் அதை ஆன்மீகப்பயிற்சி செய்கின்ற மற்றும் செய்யாதவர்களிடமும் பரிசோதித்தோம்.
டி.டி.எஃப்.ஏ.ஓ ஆராய்ச்சி மூலம் சாராயத்தின் விளைவை பற்றிய எஸ்.எஸ்.ஆர்.எஃப் காணோளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.